Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46793Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்9Points7054Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38770Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20019Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/11/23 in all areas
-
திரும்பும் வரலாறு!
3 pointsதிரும்பும் வரலாறு- பாகம் 8 (இறுதிப் பாகம்) (உலகின் முதல் அணுவாயுதப் பிரயோகம் பற்றி 2022 ஆகஸ்ட் மாதம் "அரங்கம்" செய்தித் தளத்தில் வெளிவந்த என் கட்டுரையின் திருத்திய வடிவம் இது) உலக வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு மாதம். 77 ஆண்டுகளுக்கு முன்னர், 1945 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் அமெரிக்கா மனித வரலாற்றில் முதன் முறையாக அணுவாயுதத்தை யுத்த முனையில் பயன்படுத்தியது. விமானத்திலிருந்து ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டினாலும் மொத்தமாக 140,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர். இறக்காமல் தப்பிய மக்கள் ஏராளமானோர் கதிர்வீச்சின் விளைவான புற்று நோய் உட்பட்ட பல ஆரோக்கியச் சவால்களை எதிர்கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வின் தொடர்ச்சியாக, உலகம் அணுவாயுதப் போட்டி உட்பட இன்றும் தொடரும் பூகோள அரசியல் விளைவுகளை எதிர்கொண்டது. அணுசக்தி - மனித வரலாற்றின் திருப்பு முனை முதன் முறையாக அணுவைப் பிளந்து உருவான சக்தி மனித அழிவிற்குப் பயன்பட்டது கசப்பான ஒரு உண்மை. இந்தக் கசப்பான உண்மையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அணுசக்தி மனித வரலாற்றின் ஒரு விஞ்ஞான மைல்கல். அல்பர்ட் ஐன்ஸ்ரைன் சடப் பொருட்களை ஆக்கும் அணுவினுள் இருக்கும் சக்தியை E=MC2 எனும் சமன்பாட்டினால் வெளிப்படுத்தினார். ஆனால், இந்த மாபெரும் சக்தியை அணுவைப் பிளப்பதால் வெளிக்கொண்டு வர முடியும் என்ற யோசனை லியோ சிலார்ட் என்ற ஹங்கேரிய பௌதீகவியல் விஞ்ஞானிக்குத் தான் முதலில் தோன்றியது. நாசி ஜேர்மனியில் இருந்து தப்பி வந்து லண்டன் நகரில் வசித்து வந்த சிலார்ட், வீதியைக் கடப்பதற்காக ஒரு தெருச்சந்தியில் காத்திருந்த போது தான் இப்படியான ஒரு யோசனை உதித்ததாகப் பதிவு செய்திருக்கிறார். இயற்கையில் இருக்கும் யுரேனியம் என்ற மூலகத்தின் 1% இற்கும் குறைவான ஒரு உபவகை யுரேனியம் 235 (U235) எனப்படுகிறது. இந்த யுரேனியம் 235 தொடர்ச்சியாக அழிவடைந்து செல்வதால் நியூட்ரோன்களை வெளிவிடும். இவ்வாறு யுரேனிய அழிவினால் வெளியாகும் நியூட்ரோன்கள் அருகிலிருக்கும் ஏனைய யுரேனியம் 235 அணுக்களைத் தாக்குவதால் ஒரு சங்கிலித் தொடர் தாக்கம் (chain reaction) நடக்கும். இத்தகைய சங்கிலித்தொடர் தாக்கம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை (Criticality) அடையும் போது பெருமளவிலான சக்தி வெப்பமாகவும், ஒளியாகவும், அணுக்கதிர் வீச்சாகவும் வெளிப்படும். அடிப்படையில், இந்த மூன்று சக்தி வெளிப்பாடுகளையும் கடிவாளமிட்டுப் பயன்படுத்திய ஆயுதம் தான் அணுகுண்டு. இயற்கையில், மிக ஐதாகப் பரவிக் காணப்படும் யுரேனியம் 235 நியூட்ரோன்களை வெளியேற்றி அழிவடைந்தாலும், போதிய யுரேனியம் 235 இல்லாமையால் அணுகுண்டுக்கு இணையான வெடிப்பை உருவாக்குவதில்லை. எனவே அணுகுண்டை முதலில் உருவாக்கிய விஞ்ஞானிகள் இரு முக்கிய சாதனைகளைச் செய்தார்கள்: முதலாவதாக - இயற்கையில் இருக்கும் 1% இற்கும் குறைவான யுரேனியம் 235 இனை 90% ஆக ஆய்வு கூடத்தில் செறிவாக்கினார்கள். இரண்டாவதாக - இந்த செறிவான யுரேனியம் 235 சுயமாக அணுசக்தி வெடிப்பை ஏற்படுத்தி விடாமல் தடுக்கும் (harnessing) தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். சாதனை என்று கருதப் படும் இந்த விஞ்ஞானப் பயணத்தில் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் பங்களித்தார்கள். இந்த விஞ்ஞானப் பயணத்தின் பெரும்பகுதி அமெரிக்க அரசின் இரகசியத் திட்டமான Manhattan Project (1942- 47) மூலம் தான் நிறைவேறியது. அமெரிக்காவுக்கு அகதிகளின் பரிசு நாசி ஜேர்மனியின் பிடியிலிருந்து தப்புவதற்காக, பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் அகதிகளாகத் தஞ்சம் தேடி வந்த பல பௌதீகவியல் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் முதல் அணுகுண்டைத் தயாரிக்கப் பங்களித்தார்கள். தனது நாச வேலைகளுக்கு ஏற்கனவே விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய நாசி ஜேர்மனி, அணுவாயுதத்தையும் தயாரித்து விடுமோ என்ற அச்சமே இந்த அகதி விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு உதவப் பிரதான காரணமாக இருந்தது. ஐன்ஸ்ரைன், சிலார்ட் போன்ற பல விஞ்ஞானிகள் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டிருந்தாலும், நாசிகளோடு ஒட்டி உறவாடிய பல ஜேர்மன் விஞ்ஞானிகள் அணுவாயுதத் தொழில்நுட்பத்தை ஜேர்மனியின் போராயுதமாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில் தான், சிலார்ட் போன்ற அகதி விஞ்ஞானிகள் சிலர், அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல பௌதீகவியலாளரான ஐன்ஸ்ரைன் மூலம் அமெரிக்க அரசை அணுகி அணுவாயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடும் படி வலியுறுத்தினார்கள். 1943 இல், நியூ மெக்சிகோ மானிலத்தின் லொஸ் அலமொஸ் நகரத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரகசிய அணுசக்தி ஆய்வுகூடத்தில் அமெரிக்க இராணுவத்தின் மேற்பார்வையில் விஞ்ஞானி றொபர்ட் ஒபன்ஹைமரின் தலைமையில் அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. ஜூலை 16, 1945 இல் முதல் அணுகுண்டு நியூ மெக்சிகோப் பாலைவனத்தில் பரீட்சிக்கப் பட்ட போது ஐரோப்பாவில் முசோலினியும் ஹிற்லரும் இறந்து நாசி ஜேர்மனியும் தோற்கடிக்கப் பட்டிருந்தது. ஆனால், பசுபிக் பிராந்தியத்தில், கிழக்காசியாவில் ஜப்பான் சரணடைவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை - எனவே இரண்டாம் உலகப் போர் இன்னும் தொடர்ந்தது. வளங்களுக்காக ஆக்கிரமிப்புப் போர் செய்த ஜப்பான் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜப்பான் பேரரசின் பேரரசர் நடைமுறையில் அந்த நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு சிறைக் கைதி. ஜப்பான் சக்கரவர்த்தி சூரியக் கடவுளின் வழி வந்தவராகத் துதிக்கப் பட்டாலும், இம்பீரியல் ஏஜென்சி (Imperial Household Agency) என்ற அமைப்பினைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலை - இது இன்றும் இருக்கும் நிலை. ஹவாய் தீவின், பேர்ள் துறைமுக அமெரிக்கப் படைத்தளத்தின் ஒரு பகுதி. 1941 டிசம்பர் 7, ஜப்பானிய இம்பீரியல் விமானப் படையின் தாக்குதலின் பின்னர். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. தனது பெரும்பாலான வளங்களையும் மூலப் பொருட்களையும் வெளியேயிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் வளங்களற்ற தீவுக்கூட்டமான ஜப்பான், அந்த நிலையை மாற்றுவதற்குத் தேர்ந்து கொண்ட வழி அண்டை நாடுகளை இராணுவம் மூலம் ஆக்கிரமித்துக் கையகப் படுத்தும் வன்முறை வழி. இத்தகைய ஆக்கிரமிப்பை ஜப்பானின் பாதுகாப்புப் படைகள் தென்கிழக்காசியாவில் மூர்க்கமாக இரண்டாம் உலகப் போரின் போது அமல்படுத்திய போது அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது ஜப்பானின் போர் இயந்திரத்தை முடக்கும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியமாக, 1941 டிசம்பரில் பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்கப் பிராந்தியமான ஹவாய் தீவுகளில், பேர்ள் துறைமுகத் தளம் மீது ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரைக் கொன்றன. இதன் பின்னர், அமெரிக்கா ஜப்பான் மீதும் போர்பிரகடனம் செய்து பசுபிக் போர் அரங்கில் ஜப்பானுக்கெதிராகக் கால் வைத்தது. மரணம் வரை போர் 1941 முதல் 1945 வரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்கத் தளங்களைப் பின் தளமாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு தீவாகக் கைப்பற்றியபடியே அமெரிக்கா உட்பட்ட நேச நாட்டுப் படைகள் ஜப்பானை நோக்கி முன்னேறின. 1945 ஆரம்பத்தில் ஜப்பானுக்கு தென் கிழக்காக இருந்த இவோ ஜிமா தீவு அமெரிக்கப் படைகளிடம் வீழந்த போது, ஜப்பானின் தோல்வி சுவரில் எழுதிய செய்தியாகி விட்டது. ஆனால், “மக்களும் படைகளும் பூரணமாக அழிந்தாலும் கூட சரணடைவதேயில்லை” என்ற ஜப்பானியப் படைத் தலைமையின் முடிவை சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ தன் மௌனத்தால் அங்கீகரித்தார். 1945 யூலையில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் கூட்டாக பொற்ஸ்டாம் பிரகடனம் மூலம் விடுத்த எச்சரிக்கையில், "சரணடையா விட்டால், ஜப்பான் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிவரும்" எனக் குறிப்பிடப் பட்டது. இந்தப் பேரழிவு அணுவாயுதப் பாவனை மூலம் ஏற்படுத்தப் படுவதற்கான முடிவை அமெரிக்கத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்ததா என்பதில் தெளிவில்லை. ஆனால், அமெரிக்கப் படைகளின் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர், ஐரோப்பாவின் நோர்மண்டியில் நிகழ்ந்த பாரிய தரையிறக்கம் போலவே, ஜப்பானின் பிரதான தீவையும் தரையிறக்கம் மூலம் கைப்பற்றும் ஒரு பாரிய திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார் என ஆவண ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரையிறக்கத்தில் 1 மில்லியன் வரையான உயிரிழப்புகள் அமெரிக்கப் படைத் தரப்பில் ஏற்படும் என்ற கணிப்பீடு இருந்த போதிலும், புகழ் விரும்பியான மக் ஆர்தர் தரையிறக்கத் தாக்குதலைத் தயார்படுத்திய படி இருந்திருக்கிறார். ஆனால், "இழக்க எதுவும் இல்லாதவன் தான் மிகவும் ஆபத்தானவன்" என்ற கருத்தைக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அணு ஆயுதத்தை ஜப்பான் மீது பயன்படுத்தும் முடிவை எடுத்தார். ஆகஸ்ட் 6, 1945 ஹிரோஷிமா - ஜப்பான் தலைநகர் ரோக்கியோவிலிருந்து 500 மைல்கள் தொலைவில் இருந்த தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். ஜப்பானின் போர் இயந்திரத்திற்கு அவசியமான பல இராணுவத் தொழிலகங்கள் அங்கே இருந்தன. சுமார் மூன்றரை இலட்சம் மக்களும் இருந்தனர். 9000 இறாத்தல்கள் நிறை கொண்ட முதல் அணுகுண்டு அமெரிக்காவின் பி- 29 விமானத்திலிருந்து பரசூட் மூலம் இந்த நகரத்தின் மீது தான் இறக்கப் பட்டது. சாதாரண குண்டுகள் போல இலக்குடன் மோதும் போது வெடிக்கும் வகையில் அணுகுண்டுகளை வடிவமைப்பதில்லை - இது விபத்துக்களின் போது அணுவெடிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்குமென்பதால் இந்த ஏற்பாடு. ஹிரோஷிமா மீது பரசூட் மூலம் மிதக்க விடப் பட்ட அணுகுண்டு தரையிலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு சிறு வெடிப்பு (trigger) மூலம் இரு யுரேனியம் 235 திணிவுகள் ஒன்றாக இணைக்கப் பட்டன. இப்படி ஒன்றாக இணைந்த யுரேனியம் 235 திணிவு சங்கிலித் தொடர்த் தாக்கத்திற்கு உரிய நிலையை (criticality) உருவாக்கியதால் பெரும் வெடிப்புடன் ஒளி- வெப்பம்-கதிர்வீச்சு என்பன வெளிப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காக அணுகுண்டுடன் சேர்த்தே வீசப் பட்ட உபகரணங்களின் கணிப்பீட்டின் படி, குறைந்தது 12,000 தொன் நிறை கொண்ட ரி.என்.ரி வெடிமருந்துக்குச் சமனான வெடிப்பு இந்த ஹிரோஷிமா அணுகுண்டினால் சில மில்லி செக்கன்களின் நிகழ்ந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரின் ஒரு தோற்றம். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. Little Boy எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் அணுகுண்டை போல் ரிப்பெற்ஸ் என்ற விமானி தனது பி- 29 விமானத்தில் காவிச் சென்று ஒரு லட்சம் வரையான ஜப்பானிய மக்களைக் கொன்றிருக்கிறார். தனது அணுகுண்டு தாங்கிய பி 29 விமானத்திற்கு அவர் இட்ட பெயர் "எனொலா கே" - இது அவரின் தாயாருடைய பெயர். ஆனால், இது பற்றி அந்த விமானிக்கு எந்தக் குற்றவுணர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர் இந்த விமானியை நேரில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த மனிதப் பேரழிவிற்கான பொறுப்பு தான் மட்டுமே என்று கூறியதாக அறியக் கிடைக்கிறது. ஆகஸ்ட் 9, 1945 முதலாவது அணுகுண்டு ஜப்பானிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்த்த துலங்கலைத் தரவில்லை - சரணடைதல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இரண்டாவது அணுகுண்டை மூன்று நாட்கள் கழித்து கொகுரா (Kokura) என்ற இன்னொரு தொழில்துறை செறிந்த ஜப்பானிய நகரம் மீது வீச அமெரிக்காவின் இன்னொரு பி 29 விமானம் அனுப்பப் படுகிறது. நகரின் ஒரு குறிப்பிட்ட நில அடையாளத்தின் மீது Fat Boy என்ற பெயர் கொண்ட (முன்னையதை விட அதிக வெடிப்பு சக்தி கொண்ட) அணுகுண்டை பரசூட் மூலம் இறக்க வேண்டுமென்பதே திட்டம். கொகுரா நகர மக்களின் அதிர்ஷ்டம், முகில் மூட்டங்கள் இலக்கினை மறைத்ததால், இந்த இரண்டாவது குண்டு நாகசாகி நகரம் மீது வீசப் படுகிறது. இந்த புழூட்டோனியம் அணுகுண்டின் சக்தி வாய்ந்த வெடிப்பினால் 40,000 பேர் வரை உடனடியாக உயிரிழந்தார்கள். அணுகுண்டு முன்னையதை விட சக்தி கூடியதாக இருந்த போதும், ஒரு பக்கத்தில் மலைகளால் சூழப்பட்டிந்ததால், நாகசாகியின் உயிர்ச் சேதம் ஹிரோஷிமாவினதை விடக் குறைவாக இருந்தது. ஜப்பான் சரணடைந்தது ஆகஸ்ட் 15 (1945) இல் ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ ஜப்பான் நிபந்தனையின்றிச் சரணடைவதாக நாட்டு மக்களுக்கு வானொலி உரை மூலம் அறிவித்தார். செப்ரெம்பர் மாதம் ஜெனரல் மக் ஆர்தரிடம் உத்தியோகபூர்வமாக ரோக்கியோவில் ஜப்பான் சரணடைந்தது. ஐரோப்பாவில் நியூரம்பேர்க் வழக்கு மூலம் நாசி ஜேர்மனியின் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டது போல, ஜப்பானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலர் ரோக்கியோ யுத்தக் குற்ற விசாரணை ஆணையத்தால் (Tokyo War Crimes Tribunal) தண்டிக்கப் பட்டார்கள். அமெரிக்கப் படைகளின் தூரகிழக்குப் படைகளின் தளபதி ஜெனரல் டக்ளஸ் மக்கார்தர், மனிலா, பிலிப்பைன்ஸ். ஜப்பான் சரணடைந்த பின்னர், சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ மீது யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளாமல் காத்தவர் மக்கார்தர். பட உதவி: நன்றியுடன், அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோவை யுத்தக் குற்ற விசாரணைகளோடு தொடர்பு படுத்த அமெரிக்கா விரும்பவோ முயற்சிக்கவோ இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜப்பானிய முடியாட்சி, ஜப்பான் ஒரு தேசமாக மீண்டும் துளிர்க்க அவசியமென அமெரிக்கத் தரப்பினர் நம்பியதே இதன் காரணம் எனக் கருதப் படுகிறது. தற்கால ஜப்பானில் கூட, இரண்டாம் உலகப் போரின் போது தென் கிழக்காசியாவில் ஜப்பானிய படைகள் செய்த போர்க்குற்றங்களை ஏற்றுக் கொள்ளாத வலது சாரிகள் அரசிலும், சமூகத்திலும் இருக்கிறார்கள். சில போர்க்குற்றவாளிகள் ஜப்பானிய மரபின் படி இன்றும் நினைவாலயங்களில் விம்பங்களாக வீற்றிருக்கிறார்கள். பூகோள மாற்றங்கள் இரண்டு உலகப் போர்களிலும் ஆரம்பத்தில் இராணுவ ரீதியில் தலையிடாமல் விலகியிருந்த அமெரிக்கா இறுதியில் அந்த இரு போர்களினதும் முடிவினைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகத் திகழ்ந்தது. இந்த இரண்டாம் உலகப் போரில் அதியுச்ச ஆயுதமான அணுவாயுதத்தைப் பயனபடுத்தியதால், அமெரிக்காவிற்கு சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைத்தன. இராணுவ மேலாண்மை மூலம் உலகப் பொலிஸ்காரனாகவும், நேட்டோ என்ற இராணுவக் கூட்டமைப்பின் பிரதான தலைமை நாடாகவும் வரக் கிடைத்தமை நன்மைகள். மறுபக்கம், இலட்சக் கணக்கான போர்வீரர்களல்லாத ஜப்பானிய மக்களை சில வினாடிகளில் கொன்று குவித்த மனிதாபிமானக் கறை, இதன் காரணமாக உலகில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் தகுதியை இழந்தமை என்பன அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தீமைகள். ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் பேரழிவைக் கடந்து சுமூகமான உறவுடன் முன்னகர்ந்து விட்டன. 1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை. - முற்றும்3 points
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
3 pointsமலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா. https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/ நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம். முற்றும்.3 points
-
திரும்பும் வரலாறு!
2 pointsநன்றி, ஓம் கவனமாக எழுத வேண்டிய இடம் யாழ். எழுத்துப் பிழை விட்டாலே தூக்கியடிக்க "பண்டிதர்கள்" உலவும் இடம்😂. நூல்களை என் சுவாரசியத்திற்காக வாசித்தேன், ஆனாலும் மீளப் போய் தரவுகளைக் கண்டு பிடித்து எழுத ஒவ்வொரு பகுதியும் 4 மணித்தியாலங்கள் வரை பிடித்தது. நன்றி! உங்களுக்கு நான் விசேட நன்றி சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியும் எழுதி முடிய உடனே கருத்துச் சொல்லும் ஒருவராக நீங்கள் தொடர்ந்திருக்கிறீர்கள். நன்றி வரவுக்கும் ஆதரவுக்கும்! யாழிலும் சரி, யாழிணைத்திற்கு வெளியேயும் சரி, திரித்த வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றாகத் திருத்திக் கொண்டிருப்பது வீண் வேலையென்று நினைத்தமையால் ஒரே இடத்தில் எழுதி வைப்பது நல்லதென நினைத்தேன்.2 points
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsநான்கு , கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம். அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின் நீங்கள் போங்கோ என்கிறேன். திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான் தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும் போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது. நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என் போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.2 points
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsஇரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.2 points
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointதிரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்1 point
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
1 point
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பெரிசு ! ஏற்கனவே பந்தா காட்ட வெளிக்கிட்டு சறுக்கி விழுந்தது தெரியாதா?1 point
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது..1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointமிக்க நன்றி @Justin தங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் சிரமமெடுத்து இவ்வாறான பெறுமதியான வரலாற்று தொடரை தந்தமைக்கு. தங்கள் துறையான மருத்துவ துறையை தாண்டி தங்களின் சமுக, பொருளாதார, வரலாற்று அறிவும் அக்கறையும் வியக்க வைக்கிறது. யாழ் இணையத்தை அறிவியல் சஞ்சிகையாக உருவாக்க இக்கட்டுரை சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointபிற்குறிப்புகள் தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் - முக்கியமாக சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு - நன்றிகள்! பயன்படுத்தப் பட்ட நூல்கள்: 1. In the Garden of Beasts (2011), Erik Larson. இது நாசிகளின் 1933 ஜேர்மனியின் நாளாந்த சம்பவங்களை விபரிக்கும் ஒரு நூல். 2. The Splendid and the Vile (2020), Erik Larson. இது 1939 முதல் 1940 வரை சேர்ச்சிலின் இங்கிலாந்து, ஹிற்லரின் நாசி ஜேர்மனி ஆகியன பற்றிய அருமையான நூல். 3. Stalingrad, The Fateful Siege:1942-1943. Antony Beevor (1998). இது 1942 இல் நிகழ்ந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை பற்றியதெனினும், அனைத்து சோவியத் முனைகள் பற்றிய முதல் நிலைத்தரவுகள் (primary source) அடிப்படையிலான வரலாற்று நூல். 4. Einstein: His Life and Universe, Walter Isaacson (2008). ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாறு, இதன் ஒரு அத்தியாயம் அணுகுண்டு தயாரிப்பு முயற்சிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. 5. Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016). பேர்ள் துறைமுகத் தாக்குதல், அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனைகள், ஜப்பான் மீதான அணுவாயுதத் தாக்குதல் என்பன பற்றிய நூல். இணையவழி ஆவணக்காப்பகங்கள்: 1. The US National Archives. 2. Imperial War Museum, UK.1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஎங்களை எல்லாம் வாசகர்களாக வைத்திருந்தால் இப்படித் தான் அடிக்கடி வந்து காமடி பண்ணுவம்..கண்டு கொள்ளாதீங்க...✍️🤭1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇப்ப யார் யாருடைய போன் மிஸ்ஸிங் அதை முதல்ல சொல்லுங்கோ.......தலை வெடிக்குது.......! 😂1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointஇப்போது கொஞ்சம் புரிவது போல் உள்ளத்...வரலாறு எப்போதும் வட்டப் பாதையில் பயணிக்கின்றது என்று...! தொடருங்கள் ஜஸ்ரின்..!1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointமூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.1 point
-
திரும்பும் வரலாறு!
1 point
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடைசி பதிவு. நாளைக் காலை கொட்டேல் விட வேண்டும்.சக்கரத்துக்கு சங்கிலி போட வேண்டும்.பனியில் சறுக்கி விளையாடி முடிந்து சுகமாக வீடு போய் சேரணும். காலையில் வேளைக்கே எழும்பினாலும் 7 மணிவரை சிற்றூண்டிச்சாலை திறக்கும் வரை காத்திருந்து மருமகனும் நானும் முதலாளாய் போய் சாப்பிட்டுவிட்டு சங்கிலி எங்கே போடலாம் என்று விசாரிக்க எண்ணெய் நிரப்பு நிலையத்துக்கு போனோம்.அங்கு சங்கிலி இருந்தது. ஆனாலும் கூட பணம் சொன்னார்கள்.இந்த நேரத்தில் பணத்தை பார்க்க முடியுமா?வாங்கி ஒரு 10 நிமிடத்திலேயே மாட்டிவிட்டோம். மிகவும் சந்தோசத்துடன் கொட்டேலுக்கும் போனோம். ஏற்கனவே பெட்டி படுக்கைகளுடன் புறப்பட தயாராக இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு தெரிவு செய்திருந்த இடத்துக்கு புறப்பட்டோம். அந்த இடத்துக்கு போறதற்கு நெடுஞ்சாலை எடுத்தே போக வேண்டும்.நெடுஞ்சாலையில் வானை ஏற்றினால் பொலிஸ் தடை போட்டு 4 சக்கர பிடிப்புள்ள வாகனம் அல்லது சக்கர சங்கிலி போட்ட வாகனம் மட்டுமே போகலாம் என்று சொன்னார்கள்.எமது வாகனத்தையும் மறித்து பார்த்துவிட்டு மெதுவாக போக சொன்னார்கள். நெடுஞ்சாலையில் இருந்து மலையடிவாரம் போகும் இடமெல்லாம் 8-10 அடி பனி.வீதிகளை துப்பரவாக்கி கரையில் ஒதுக்கிவிட்டிருந்தனர்.வீட்டுக்கு வீடு ரைக்கர் மாதிரி பெரிய பனி அள்ளிக் கொட்டும் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். மாலை தொடரும்.1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointதிரும்பும் வரலாறு- பாகம் 6 அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! பிரித்தானிய மக்களின் ஓர்மம் மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர். இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர். ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர். இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும் பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு. இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்" நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும். பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின. ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம். போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு. - தொடரும்1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointதிரும்பும் வரலாறு- பாகம் 5 டன்கர்க் 1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர். கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். சமாதானப் புறாக்கள் 1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்? ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர். சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். வளையாத கருங்கல்! "கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன. ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம். இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்: “If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" காத்திருந்த கழுகுகள் மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின. ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி. ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!). கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார். நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். கழுகின் நாள்! பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன. இரவு நேரம், நிலாக் காலம்! நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின. இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம். நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626. ஏமாற்றம், திசை மாற்றம்! 1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்! - தொடரும்1 point
-
திரும்பும் வரலாறு!
1 pointஅபாரம்…. காலத்துக்கு தேவையான எழுத்து…. பட்டுக்கோட்டை எழுதி இருப்பார்… உப்புகல்லை வைரம் என்று சொன்னால்… நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… நாம் கதறி என்ன? குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…. உங்களுக்கும் பல இடங்களில் இது பொருந்தும் 🤣. ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾.1 point