Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்16Points46798Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87992Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8910Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்9Points23925Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/17/23 in Posts
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
ஓமண்ணை, மே மாதம் வரை திருத்தவேலைகள் என முதலில் கூறினார்கள். இப்ப அடுத்த வருடம் தான் முடியுமாம். கொழும்பு யாழுக்கு அரச ஊழியர்களைத் தவிர(வரன்ற்/3 இலவச அனுமதி) ஏனையோர் சொகுசு பேரூந்துகளைப் பாவிக்கலாம்.2 points- இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsஆறு தகப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவள் சிறிது நேரத்தில் வருகிறாள். குந்தி இருக்க சரியான கஸ்டம் அம்மா. எல்லா இடமும் இப்பிடியான ரொய்லெட் தான் இருக்கா? பெரும்பாலும் இதுதான். ஆனால் கோட்டல்களில் வெஸ்டர்ன் டாய்லெட் தான். கூடுதலான வீடுகளிலும் இப்ப இருக்கு. ஆனால் சுத்தமாக வச்சிருக்கினமோ தெரியாது என்கிறேன். ரொய்லெட் சரியில்லை எண்டால் நான் மாமி வீட்டை அல்லது அம்மம்மா வீட்டிலயோ நிக்கமாட்டான் என்கிறாள். என் கணவரின் தங்கை வீட்டில் புதிதாக எல்லாம் செய்திருப்பதனால் நீர் கோட்டலில் தங்கவேண்டி இராது என்கிறேன். மீண்டும் பிரயாணம் தொடர இருபக்கமும் பரந்த நிலங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. முன்பு தலைகளற்று நின்ற பனை மரங்கள் ஒன்றையும் காணவில்லை. சிறிய பனைகள் ஆங்காங்கே தெரிகின்றன. 2003 இல் சென்றபோது எத்தனை பரபரப்பாக இருந்த வீதி இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் தெரிகின்றன. கிளிநொச்சியை நெருங்க சிறிது வாகன நெரிசல் தெரிகிறது. கணவரின் ஊர் இணுவில் என்றாலும் அவரின் தந்தை கிளிநொச்சியில் வேலை பார்த்ததால் சிறு வயதுமுதல் இருபது வயதுவரை அங்கேயே இருந்தார். கிளிநொச்சியைப் பார்த்தவுடன் சிறு பிள்ளைபோல் “இதால போனால் நாங்கள் இருந்த வீட்டுக்குப் போகலாம், இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்” என ஒவ்வொன்றையும் மகளுக்குக் காட்டி மகிழ்ந்தபடியே வந்தார். அவரின் குதூகலத்தைப் பார்த்து இதில கொஞ்ச நேரம் நிப்பாட்டட்டா அண்ணை என்றார் சாரதி. சீச்சீ நீங்கள் தொடர்ந்து ஒடுங்கோ, பிறகு இங்க வருவம்தானே என்கிறார். மக்கள் தொகை குறைந்து விட்டதையும் வாகனங்கள் அதிகரித்து விட்டதையும் மின்வெட்டு, பெற்றோல் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவவை பற்றியும் கணவரும் சாரதியும் பேசியபடி வருகின்றனர். ஆனையிறவைக் கடந்தபின் பாழடைந்த நிலையில் இரசாயானத் தொழிற்சாலை தெரிய அதன் நிலை பார்க்க மனதைப் பிசைகிறது. பழைய நினைவுகளும் எழுகின்றன. 80 களில் எமது பாடசாலையில் எம்மை அங்கு தொழிற்சாலையைப் பார்ப்பதற்காகக் கூட்டிவந்தனர். சுற்றிப் பார்த்தபின் சிறிது நேரம் எம் கடன்களைத் தீர்க்க வேலை செய்வோர் தங்கியிருந்த தங்குமிடத்தில் விட்டனர். ரொய்லெட் போய்விட்டு நாம் உடனே வெளியே வரவில்லை. அங்கிருந்த சீப்பை எடுத்து காற்றுக்குக் கலைந்து போயிருந்த தலைகளை இழுத்துச் சரிசெய்துகொண்டிருந்தபோது எங்கள் மிஸ் வந்துவிட்டார். "ஆற்றையன் பொருளை எப்படி எடுப்பீர்கள்? அது முதல் அன் கையீனிக். எல்லாரும் முதல்ல வெளியே வாங்கோ" என ஏசியது நினைவில் வந்து போக ஏதோவொரு உணர்வு என்னை ஆட்கொண்டது. இருமருங்கும் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சில வயல்கள் உழுதபடியும் சிலது அப்படியேயும் இருந்தது. வயல் விதைக்க இன்னும் நாளிருக்கு என்றார் மனிசன். மண்ணெண்ணைத் தட்டுப்பாட்டினால் பலர் இப்ப தோட்டங்களையே செய்யாமல் கை விட்டுட்டினம் என்கிறார் சாரதி. யாழ்ப்பாணத்தை நெருங்க நெருங்க கட்டட நெரிசலும் அதிகரிக்க கிட்ட வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. 2003 இல் நான் என் குடும்பத்துடன் இலங்கை சென்றபோது என் பெற்றோரும் ஒரு சகோதரியும் இரு வாரங்கள் செல்ல அங்கு வர இருந்தபடியால் எனக்கு எந்தப் பிரசனையும் என் சித்தியால் ஏற்படவில்லை. நானும் கணவரும் 2017 இல் சென்றபோது தன் வீட்டிலேயே முதலில் வந்து இறங்கவேண்டும் என என் சித்தி ஒரே ஆர்ப்பாட்டம். என் கணவரின் தாய் இருந்தபடியால் என் அம்மா வீட்டுக்குத்தான் போகவேண்டும் எனக் கணவர் கண்டிப்புடன் சொன்னது மட்டுமன்றி அதுதானே நியாயமும் கூட என நானும் சம்மதித்துவிட என் மச்சாள் வீடிலேயே போய் இறங்கியாச்சு. இரண்டு நாட்களாய் சித்தி என்னுடன் கதைக்கவே இல்லை. நான் பிறந்து வளர்ந்த “நிவேதகிரி” என்ற பெயரைத் தாங்கி இன்றுவரை நிற்கும் வீடுதான் அது என்றாலும் கணவருடன் வரும்போது அவருடன் தானே நிற்பது முறை. இத்தனைக்கு இரு வீடுகளுக்கும் இடையில் ஐந்து நிமிட நடை. அதன்பின்னர் 2019 இல் நான் தனியாக வந்தபோது என் மச்சாளிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு சித்தி இருக்கும் எங்கள் வீட்டிலேயே தங்கினேன். அதை எண்ணிப்பார்த்துவவிட்டு, முதலில் என் சூட்கேஸ்களை என் சித்தி வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மிகுதியை உங்கள் தங்கை வீட்டில் இறக்கவேண்டும் என்கிறேன். கணவரும் சரி என்று கூற என் வீட்டின் முன் வான் நிற்கிறது. என் பொதிகளை எல்லாம் இறக்கியவுடன் நீங்கள் அங்கே போய் பொதிகளை இறக்கிவிட்டு வாங்கோ என்கிறேன். சாரதியிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் நில்லுங்கோ என்றுவிட்டு என் பொதிகளை மகளும் கணவரும் உள்ளே கொண்டுவர உள்ளே இருந்து சித்தி வருகிறா. அவவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா. மூன்று பேர் எப்படி இந்த அறையில் தங்கமுடியும். அதனால் இவர்கள் இருவரும் தங்கை வீட்டில். நான் மட்டும் தான் இங்கே என்கிறேன். அதுவும் சரிதான் என்று கூற நாம் வெளியே வந்து அமர்கிறோம். இரு கதிரைகள் மட்டும் இருக்கின்றன. என்ன சித்தி. இரண்டு கதிரைகளை வாங்கிப் போடுவதற்கு என்ன என்கிறேன். முன்னர் நான் வந்தபோதும் இதே இரண்டு கதிரைகள் இருக்க நான்கு கதிரைகளை வாங்கிப் போட்டிருந்தேன். அவை எங்கே என்று கேட்க எண்ணிவிட்டு உடனே நிறுத்திவிட்டேன். ஏனெனில் உன் சித்தியிடன் காசு இல்லை என்று நீ வாங்கிப் போட்டானியோ என அப்பப்போ திட்டுவார் கணவர். அதனால் பின்னர் கேட்போம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.2 points- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று1 point- அதிசயக்குதிரை
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointகதிர்காமம் முருகன் கோவில். நூறாண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம்.1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அது உங்களின் வயது, அனுபவம். அவர்களும் எதிர்காலத்தில் இந்த அனுபவத்தினை பாடமாக வைத்து அதற்கேற்ற முடிவுகள் எடுப்பார்கள். வயது போனாக்களின் இம்சை பெரும் இம்சையா இருக்கு 🤣1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஅவருக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம், அது அவரின் கடமைதான் என்றாலும் அவரின் அன்றைய வாழ்வும் சந்தோஷமான நாட்களில் ஓன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு USD5/- பெரியவிடமில்லை நானும் போன முறை இலங்கை போனபோது ஒரு பொதி வரவில்லை, அங்கு நின்ற உதவியாளர் வந்து கடைசிவரை உதவினார், அவர் வெளியில் வந்ததும் Rs 5000/- கொடுக்க, அங்கு நின்ற சில உதவி தாய்மார்கள் வந்து உதவி கேட்க Rs 10,000/- கொடுத்து பங்கிட சொன்னேன், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் நான் திரும்பும் வரை எந்தவித தடங்களுமின்றி மகிழ்ச்சியாக விடுமுறையை யாழில் செலவழித்தேன், எனது அனுபவத்தில் ஆண்டவன் இவர்கள் உருவில் வருவார்கள்👍, தொடருங்கள், வாசிக்க ஆவலாக இருக்கு இது இயற்கையின் நியதி😁1 point- மனிதா உன்னைத்தான்!
1 pointView of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஜார்ஜியாவில் இரண்டு ஆறுகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் சந்திக்கின்றன.1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஜனாதிபதித் தேர்தல் - 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நாள் புரட்டாதி 17 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டது. 6 வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயார் ஜெயவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவ, நவ சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் மற்றும் ஜனதா விமுர்திப் பெரமுனவின் ரோகண விஜேவீர ஆகியோரே அந்த அறுவரும் ஆகும். தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது குமார் பொன்னம்பலம்மும் ஆயுத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அமிர்தலிங்கத்திற்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் குறித்த விபரங்களை குமார் பொன்னம்பலம் வெளிக்கொணர்ந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் ஆயுத அமைப்பு இரு விடயங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. முதலாவதாக, 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையான தனிநாட்டினை மீள உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை முன்னணியினர் பாவித்திருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்யாது விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. இரண்டாவதாக, இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம், தனிநாட்டிற்கான ஆதரவை வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், முன்னணி அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விமர்சனங்கள் அமிர்தலிங்கத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே, தனது இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு தமிழர்கள் அனைவரும் இத்தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் திடீரென்று கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதற்கு அவர் முன்வைத்த காரணம் மிகவும் பலவீனமானது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினைத் தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாததால், அந்த அரசியலமைப்பின்படி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வக்களிக்கக் கூடாதென்பதே அவர் முன்வைத்த காரணம். குமார் பொன்னம்பலம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமிர்தலிங்கம் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை குமார் பொன்னம்பலம் முன்வைத்தார். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணைக்கெதிராக அமிர்தலிங்கம் செயற்படுவதாக குமார் கூறினார். "அவர் என்னை மட்டும் தோற்கடிக்க முயலவில்லை, தமிழர்களின் கோரிக்கையான தனிநாட்டையும் தோற்கடிக்க முயல்கிறார்" என்று குமார் பிரச்சாரம் செய்தார். வானொலி பேச்சொன்றில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமது ஒற்றுமையையும், பலத்தையும், தமது அபிலாசைகளையும் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்ட வேண்டும் என்று குமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையினை விபரித்து புரட்டாதி 2 ஆம் திகது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சட்டர்டே ரிவியூ, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் முன்னர் அணியப்பட்ட தமிழ்த் தேசிய போர்வையினைக் களவாடி இன்று அணிந்திருக்கும் குமார் பொன்னம்பலம், முடிக்குரிய இளவரசனைப் போன்று தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் முன் தெரிகிறார், அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புவது போலத் தெரிகிறது" என்று கூறியிருந்தது. மேலும், காலம் காலமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களித்து வந்த கிராமப்புறத் விவசாயிகளான தமிழர்கள், தமது விவசாயப் பொருட்களான மிளகாய், வெங்காயம் ஆகியவற்றிற்கு நல்ல சந்தவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதால், சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து நிற்கிறார்கள் போலத் தெரிவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு ஹெக்டர் கொப்பேக்கடுவ பிரச்சாரம் செய்யச் சென்றவேளைகளில் அவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டதுடன், நல்ல வரவேற்பினையும் வழங்கினர். யாழ்க்குடாநாட்டில் 14 கூட்டங்களில் கலந்துகொண்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ, யாழ்ப்பாணத்து விவசாயிகளின் உற்பத்திப் பொருடகளுக்கான சந்தை எப்போது பாதுகாக்கப்படும் என்றும், தமிழர்களுக்கெதிராக ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தான் பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்துவிடுவதாகவும் உறுதியளித்தார். யாழ்க்குடா நாட்டிற்கு ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெயாரை மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வரவேற்றனர். ஜெயாருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் ஈழ விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் யாழ்நகரின் சுவர்களின் ஜெயாருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, "யாழ்ப்பாணத் தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுக்குப் பிடிக்காது" என்று ஒரு வாசகம் கூறியது. சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டுப்போய் இருக்கும் சிக்கலில் இருந்து அவர்களை மீட்க முயன்றார். "நீங்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு விரும்பியவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது உங்களின் பிரச்சினை. ஆனால், தவறாமல் வாக்களியுங்கள், ஏனென்றால் அது மக்களின் இறையாண்மை ஆகும்" என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். பட்டிருப்பில் மக்கள் முன் பேசிய ஜெயார், "தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் எனக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும், அமைத்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 1982 தேர்தல் வன்முறைகள், சட்ட மீறல்கள், கம்மியூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை அச்சகமும், சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அச்சிட்ட அச்சகங்களும் அரசால் மூடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நடந்தபோதும் ஐப்பசி 20 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜெயவர்த்தன மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டார். சுமார் 81 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் 65 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது, 1. ஜே ஆர் ஜெயவர்த்தன - ஐ.தே.க 3,450,811 வாக்குகள் , 52.91 % 2. எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ - சிறிலங்கா சு.க - 2,548,438 வாக்குகள், 39.07 % 3. ரோகண விஜேவீர - மக்கள் விடுதலை முன்னணி 273,934 வாக்குகள், 4.19 % 4. குமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 வாக்குகள், 2.67 % 5. கொல்வின் ஆர் டி சில்வா - லங்கா சம சமாஜக் கட்சி 57,532 வாக்குகள், 0.88 % 6. வாசுதேவ நாணயக்கார - நவ சம சமாஜக் கட்சி 17,005 வாக்குகள், 0.26 % 902,373 அதிகப்படியான வாக்குகளினால் ஜெயவர்த்தன வெற்றிபெற்றார். ஹெக்டர் கொப்பேக்கடுவவைத் தவிர மற்றைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 சிங்கள மாவட்டங்களிலும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையிலும் ஜெயார் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் கிடைத்த அதேநேரம் ஹெக்டர் கொப்பேக்கடுவவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் 77,300 வாக்குகளை அளித்திருந்தனர். ஜெயாருக்கும் 44,780 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 533,478 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 228,613 வாக்காளர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்கொள்ளும் அபாயத்தை இத்தேர்தல் அமிர்தலிங்கத்திற்கு உணர்த்தியிருந்தது. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் நின்ற குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த ஆதரவினால் உந்தப்பட்ட ஆயுத அமைப்புக்களான புளொட்டும், ஈரோஸும் 1983 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் இணைந்து, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதென்று தீர்மானித்தன. இந்த முடிவும் தனக்கும், கட்சிக்கும் சவாலாக உருவாகிவருவதாக அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஆனாலும், ஜெயாரின் அழுங்குப் பிடியிலிருந்து அமிர்தலிங்கத்தினால் வெளிவர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த தகுதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தனக்குக் கிடைத்த சுகபோகங்களுக்காகவோ அவர் இப்படி உணரவில்லை, மாறாக, ஜெயாரின் பிடியிலிருந்து விலகிவந்தால் வேறு ஆபத்துக்கள் வரலாம் என்று அவர் அஞ்சினார். ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைப்பதாலும், அசெளகரியப்படுத்துவதாலும் தான் எதிர்நோக்கவேண்டி வரும் அபாயம் குறித்து அவர் நன்கு அறிந்தே இருந்தார். "அவர் மிகவும் ஆபத்தான மனிதர். அவருடன் நாம் மிகவும் அவதானத்துடனேயே தொடர்பாட வேண்டும்" என்று என்னிடம் பலமுறை அமிர் கூறியிருக்கிறார். ஜெயவர்த்தன மீது தனக்கிருந்த அச்சம் குறித்து அமிர்தலிங்கம் 1982 ஆம் ஆண்டு ஆனியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வைகுந்தவாசனிடமும், ஆதேவருடம் ஆடி மாதம் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற உலகத் தமிழ் ஈழம் மாநாட்டிலுல் கூறியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்த முயன்றால், வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஜெயவர்த்தன மொத்தமாகத் தண்டித்துவிடுவார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் தீர்மானங்கள் இரண்டை நிறைவேற்றியிருந்தது, 1. 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளான தை மாதம் , 14 ஆம் திகதி, ஒருதலைப்பட்சமாக தமிழீழப் பிரகடணத்தை நிறைவேற்றுவது. 2. அதே நாள் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது. நியோர்க் நகரில் இடம்பெற்ற தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டபோதும் இதேவகையான அச்சத்தினை அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்தார். சுமார் 200 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், அவர்களின் நலன்களுக்கும் தானே பொறுப்பு என்று அமிர் கூறினார். "மக்கள் எவருமற்ற நிலையில் கிடைக்கப்பெறும் விடுதலையினை யார் அனுபவிக்கப் போகிறார்கள்? வங்கதேசத்தின் சுதந்திரத்தை நாம் முன்மாதிரியாகப் பின்பற்றி போராட வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். அந்தப் போரில் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவானது என்பது இவர்களுக்குத் தெரியாது" என்று அவர் வாதிட்டார். இந்த மாநாட்டினை ஒழுங்குசெய்த வைகுந்தவாசன் அமிரைப் பார்த்து, "ஜெயாரின் முகத்துக்கு நேரே பார்த்து, நரகத்திற்குப் போ என்று கூறுங்கள்" என்று கத்தினார். அதற்குப் பதிலளித்த அமிர், "நான் அப்படிச் செய்தால், நரகத்திற்குப் போவது ஜெயார் அல்ல, தமிழ் மக்களே" என்று கூறினார்.1 point- அதிசயக்குதிரை
1 pointநீ எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தபோதும் சற்று ஓய்வெடுக்க நீ உட்காரும்போதுதான் முதலாளி முன்னால் வந்து நிப்பார்........காரணம் வாழ்க்கையின் டிசைன் அப்படி.....! 😂1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointநான்கு , கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம். அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின் நீங்கள் போங்கோ என்கிறேன். திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான் தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும் போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது. நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என் போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.1 point- காலச்சுழல்
1 point- காலச்சுழல்
1 pointநல்ல கவிதை தியா. அரிதாக என்றாலும், சிறகுகள் உடைந்தாலும் மேலும் கீழுமாக என்றாலும் பறவை பறக்கிறது அல்லவா. ஆதலால் பறவை தொலையவும் இல்லை தன்னைத் தொலைக்கவும் இல்லை. நான் சொல்வது சரிதானே.. 🙂1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointவன்முறையின் விதைகள் இலங்கையின் குடியரசு தினம் தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகப் பார்க்கப்பட்டது. முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அறுத்தெறிந்த இளைஞர்கள் யாழ்க்குடாநாடு முழுவதும் மின்னிழப்பை உருவாக்கினார்கள். ஆகவே, சிங்கள அரசின் குடியரசு நிகழ்வுகள் யாழ்ப்பாணச் செயலகத்தினுள்ளும், பொலீஸ் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்களுக்குள்ளும் மட்டுமே நடைபெற்றன. குடியரசு தின நிகழ்வுகளிருந்து, சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தனர். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஆங்காங்கே வன்செயல்கள் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டதுடன், அரச கட்டிடங்கள் மீது கல்விச்சும் இடம்பெற்றது. கறுப்புக்கொடிகள் தமிழர் பிரதேசங்களில் வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் மரங்கள் என்று பரவலாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. காலைவேளையில் யாழ்நகரில் ரோந்துபுரிந்த காவல்த்துறை நகரில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளைக் கிழித்தெறிந்தது. 6 நாட்களுக்குப் பின், வைகாசி 28 ஆம் திகதி இலங்கை சம சமாஜக் கட்சியின் ஆதரவாளரான சிவசோதியின் வீட்டின்மேல் இளைஞர்கள் பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தாக்கினார்கள், ஆனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனி 1 ஆம் திகதி, சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் ஏ. விஸ்வநாதன் வீட்டின்மீது எரிகுண்டுகள் வீசப்பட்டன. சிங்களவர்களுக்குச் சார்பாகவும், தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தும் அரசியல் யாப்பினை உருவாக்கிய சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கொல்வி ஆர் டி சில்வாவிற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே அவரது கட்சி ஆதரவாளர்கள்மீது இத்தாக்குதல் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதே கொல்வின் சில காலங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான சம உரிமை கேட்டுப் வாதிட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன்பின்னர், இந்த இனவாத யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. 1972 இல் நான்கு சிறிய ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தன. தங்கத்துரை - குட்டிமணி தலைமையிலான அமைப்பு தமது இலக்காக சி அருளம்பலத்தை தெரிவுசெய்தனர். அவரது குட்டையான உடல் அமைப்பிற்காக "சின்னன்" என்றழைக்கப்பட்ட அருளம்பலம் கொழும்பிலேயே வசித்து வந்ததால், குட்டிமணி - தங்கதுரை அமைப்பினரால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகவே, அருளம்பலத்தின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராம சபைத் தலைவரும், தீவிர சுதந்திரக் கட்சி ஆதரவாளருமான வி. குமாரகுலசிங்கத்தின் மீது தாக்குவதென்று முடிவெடுத்தார்கள். இவர் இன்னொரு அரச ஆதரவு அமைச்சர் குமாரசூரியருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குமாரசூரியர், குமாரகுலசிங்கம் ஊடாகவே அருளம்பலத்தை தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி அரசுடன் சேரும்படி ஊக்குவித்து வந்தார் என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. அரசுடன் அருளம்பலம் சேர்ந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்களாலும், தமிழ் மக்களாலும் துரோகியென்று அழைக்கப்பட்டு வந்தார். அரசியலமைப்பு பிரகடணப்படுத்தப்பட்டு 13 ஆவது நாளான ஆனி 4 ஆம் திகதி கோப்பாய்ச் சந்திக்குச் சென்ற குட்டிமணி, செட்டி மற்றும் சிறி சபாரட்ணம் ஆகியோர் உலகநாதனிடம் சென்று தமக்குச் சவாரி ஒன்று தேவையாக இருப்பதாகக் கூறி, அவரை குமாரகுலசிங்கத்தின் வீட்டிற்குத் தம்மை அழைத்துச் செல்லுமாறு கோரினார்கள். கார் குமாரகுலசிங்கத்தின் வீட்டினை அடைந்ததும், தம்முடன் கொண்டுசென்ற கைத்துப்பாக்கியினால் குமாரகுலசிங்கத்தின்மீது சுட்டுவிட்டு மீண்டும் காரிற்குள் ஓடிவந்தனர். குமாரகுலசிங்கத்தின் காலில் குண்டடி பட்டிருந்தது, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. காரினை நீர்வேலி நோக்கி ஓட்டிச் சென்ற குட்டிமணி, ஆளரவம் இல்லாத பகுதியொன்றில் காரினை நிறுத்திவிட்டு உலகநாதனைச் சுட்டுக் கொன்றார்கள். அருகிலேயே உலகநாதனின் காரும் எரியூட்டப்பட்டது. குட்டிமணி குமாரகுலசிங்கத்தையே கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது சாரதி உலகநாதனையே அவர்களால் கொல்ல முடிந்தது. அதே நாள் மாலை, சுதந்திரக் கட்சி ஆதரவாளரான சுந்தரதாஸின் வீட்டின்மீதும் குண்டெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சிவகுமாரனினால் 1970 இல் சோமவீர சந்திரசிறி மீதும், 1971 இல் அல்பிரட் துரையப்பா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் குட்டிமணியினால் நடத்தப்பட்ட மூன்று குண்டெறி தாக்குதல்கள் மற்றும் உலகநாதனின் கொலை ஆகியன சமாதானத்தை விரும்பும், ஒழுக்கமான யாழ்சமூகத்தை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனால், இத்தாக்குதல்கள் இன்னும் இரு ஆயுத அமைப்புக்களை தாக்குதல்களினை மேற்கொள்ள உந்தியிருந்தது. அதில் ஒன்று பிரபாகரனுடையது மற்றையது தமிழ் மாணவர் ஒன்றியத்தினுடையது. தங்கத்துரை - குட்டிமணி அமைப்பினராலோ அல்லது சிவகுமாரனின் அமைப்பினராலோ தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் சத்தியசீலன் உடனடியாகச் செயற்பட்டு அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வட்டுக்கோட்டை தியாகராஜாவைக் கொல்வதற்கு திஸ்ஸவீரசிங்கத்தையும், ஜீவன் எனப்படும் ஜீவராஜாவையும் அனுப்பிவைத்தார். அப்போது பம்பலப்பிட்டியவில் தியாகராஜா வாழ்ந்துவந்தார். ஆனி மாதம் 7 ஆம் திகதி காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற தாக்குதல் அணியினர், அவரது வீட்டின் கதவைத் தட்ட, தியாகராஜவும் கதவைத் திறந்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருக்கும் பத்திரிக்கை ஒன்றிலிருந்து அவரைப் பேட்டியெடுக்கத் தாம் வந்திருப்பதாக திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் அவரிடம் தெரிவிக்க, "என்னை எந்தப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று குமாரசூரியர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்" என்று கூறிக்கொண்டே அவர்களை அமரச் சொன்னார் தியாகராஜா. திஸ்ஸவீரசிங்கம் அமர விரும்பவில்லை. அவர் தியாகாராஜின் அருகிலேயே நின்ருகொண்டிருந்தார். ஜீவன் கதவின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தார். தியாகராஜா காரைநகர் இந்துக் கல்லூரியின் அனுபவம் மிக்க அதிபர். தன்னிடம் வந்திருந்த இரு விருந்தாளிகளினதும் உடல்மொழி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜீவன் தனது காற்சட்டை வாரிற்குள் இருக்கமாகச் செருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை வெளியே உறுவி எடுத்தார், பதற்றத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. முன்னர் துப்பாக்கியால் சுட்டுப் பழக்கமில்லாதவர், தான் கொண்டுவந்த துப்பாக்கிச் சுடுமா என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. குறிபார்ப்பதுகூட அவ்ருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் செய்யப்பட்ட அத்துப்பாக்கியில் அவர் அதிகம் பயிற்சிகூடப் பெற்றிருக்கவில்லை. "சுடடா" என்று ஜீவனைப் பார்த்து பொறுமையிழந்து கத்தினார் திஸ்ஸவீரசிங்கம். "திஸ்ஸா" என்று கத்திய ஜீவன் அவரை அப்பால் செல்லுமாறு கூறிவிட்டு கதவை நோக்கி ஓடினார் . சுதாரித்துக்கொண்ட தியாகராஜா, சடுதியாகக் குனிந்து, தரையிலிருந்த விரிப்பை வேகமா இழுத்தார். நிலவிரிப்பில் நின்றுகொண்டு சுட எத்தனித்த ஜீவன் நிலை தடுமாறி விழ, சன்னங்கள் சுவரில் பட்டுத் தெறிக்க தியாகராஜா உயிர் தப்பினார். திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் உடனேயே அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள். அவர்களின் கொலைமுயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துவந்த பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அது ஒரு மிகத் தெளிவான செய்தியைக் கொடுத்திருந்தது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசித்தியின் எரிந்த முகம் சிங்களவர்களால் தனது சித்தியின் முகம் எரியுண்டது என்று கேள்விப்பட்டபோது பிரபாகரன் அடைந்த கோபத்திற்கு அளவேயிருக்கவில்லை. 1958 ஆம் ஆண்டின் தமிழ்ர் மேலான திட்டமிட்ட இனக்கலவரம் நடந்து முடிந்து சரியாக ஒருவருடத்திற்குப் பின்னர் சித்தி ஆலடி ஒழுங்கையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு வந்திருந்தார். அவரது முகமும் கைகளும் தீக்காயங்களால் அலோங்கோலப்பட்டுக் கிடந்ததை பிரபாகரன் கண்ணுற்றார். "உங்கள் முகமும் கைகளும் எப்படி எரிந்தது?" என்று அவர் சித்தியைப் பார்த்துக் கேட்டார். சித்தி மெளனமாக இருக்கவே, "இனக்கலவரத்தின்போது எரிந்துவிட்டது" என்று தாயார் பதிலளித்தார். பிரபாகரனும், அவரது இரு மூத்த சகோதரிகளான ஜகதீஸ்வரி மற்றும் வினோதினி ஆகியோர் சித்தியிடம் அவருக்கு நடந்த அசம்பாவிதம் குறித்துத் தங்களிடம் கூறும்படி வேண்டிக்கொண்டிருந்தனர். சித்தி பேசத் தொடங்கினார், "நானும், எனது கணவரும் பிள்ளைகளுடன் கொழும்பில் வாழ்ந்து வந்தோம். தமிழருக்கெதிரான தாக்குதல் நடந்த தினம் நாம் எமது மலசல கூடத்தில் பதுங்கியிருந்தோம். நாம் உள்ளே ஒளிந்திருப்பது தெரிந்தே எமது வீட்டிற்கும், கூடவே மலசல கூடத்திற்கும் அவர்கள் தீமூட்டினார்கள். எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து உயிர்தப்புவதற்காக நாம் தப்பியோட எத்தனித்தபோது, முன்னால் ஓடிய எனது கணவரை பொல்லுகளால் தாக்கி அவர்கள் கொன்றனர். எமக்கு நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த நானும் பிள்ளைகளும் மதிலேறி அயலவர்களின் காணிக்குள் குதித்தோம். எரிந்துகொண்டிருந்த நெருப்பினூடாகக் குதித்தபோது எனது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அயலில் இருந்த சில நல்ல உள்ளம் படைத்த சிங்களவர்கள் எம்மைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். சிங்களவர்களின் அக்கிரமங்களுக்கும், இன்னும் சில சிங்களவர்களின் நற்குணத்திற்கும் அத்தாட்சியாக எனது தழும்புகள் இருக்கின்றன" என்று அவர் கூறினார். தமிழருக்கு அன்று நடந்த அழிவுகள் பற்றி சித்தி பேசிக்கொண்டிருக்கும்போது பிரபாகரனின் சகோதரிகள் நடுங்கத் தொடங்கிவிட்டனர். பிரபாகரனோ ஆத்திரம் மிகுந்து காணப்பட்டார். ஒரு கட்டத்தில் சித்தி தன் கண்முன்னே தமிழ்க் குழந்தை ஒன்று பெற்றோரிடமிருந்து பிடுங்கப்பட்டு கொதிக்கும் தார்ப் பீப்பாயில் எறியப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை விபரிக்கும்போது சகோதரிகள் அழத் தொடங்கிவிட்டனர். பிரபாகரனோ ஆத்திரம் மீதியால் மெளனமாக சித்தி கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர், 1984 இல் அனிதா பிரத்தாப்பிடம் பேசும்போது இதுகுறித்தும் பிரபாஅகரன் பேசியிருந்தார். "தமிழருக்கெதிரான கலவரங்களின்பொழுது சிங்களவர்கள் எனது சித்தியின் வீட்டையும் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்ததுமல்லாமல் அவரது கணவரையும் அடித்தே கொன்றனர். சித்தியும் அவரது பிள்ளைகளும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர். அவரது உடலில் ஏற்பட்டிருந்த தீக்காயங்களைப் பார்த்தபோது நான் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ்க் குழந்தைகள் எரியும் தார்ப் பீப்பாய்களில் வீசப்பட்டுக் கொல்லப்பட்ட செய்திகளையும் நான் அறிந்துகொண்டேன். இவ்வாறான இழப்புக்களைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் தமிழ் மக்கள் மீது பாரிய அனுதாபமும் பாசமும் என்னை அறியாமலேயே ஏற்பட்டு விடுகிறது. இந்த அவலமான, அடக்குமுறை வாழ்விலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்துவிடவேண்டும் என்கிற அவா எனக்கு ஏற்பட்டுவிட்டது. பாதுகப்பற்ற, அப்பாவிகளான எனது மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் ஆயுத சன்னதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தையும் அது எனக்கு ஏற்படுத்தித் தந்துவிட்டது. நான் எனது சித்தியிடம் ஒரு விடயத்தைக் கூறினேன், அதாவது தமிழர்கள் திருப்பியடிப்பார்கள் என்கிற பயம் இருந்தால் சிங்களவர்கள் உங்களைத் தொட்டிருக்க முடியுமா சித்தி என்று கேட்டேன்" என்று அவர் கூறினார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரபாகரனின் வரலாறு .......... சுவற்றில் பல சைவக் கடவுள்களின் படங்களோடு ஒரு சில இந்தியர்களின் படங்களும் தொங்கும். நேருவும் காந்தியும் தவறாமல் அங்கே இருக்க சைவ சிந்தனையாளர் விவேகானந்தரின் படமும் வேலுப்பிள்ளையால் கொழுவப்பட்டிருந்தது. பிரபாகரனும் தனது பங்கிற்கு இருவரின் படங்களை அங்கே பதிவிட்டிருந்தார். அகிம்சை வழியை விடவும் ஆயுத ரீதியிலான எதிர்ப்பினால் மட்டுமே ஆங்கிலேய ஆதிக்கத்தினை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்றும் நம்பிய சுபாஸ் சந்திரபோஸினதும் பகத் சிங்கினதும் படங்களே அவை. யாழ்ப்பாண அரசர் காலத்தில் வல்வெட்டித்துறை மிகவும் சுறுசுறுப்பானதும், பிரபல்யமானதுமான துறைமுகமாக இயங்கி வந்தது. ஆனால், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் அத்துறைமுகத்தின் பயன்பாடும் முக்கியத்துவமும் குறைவடையத் தொடங்கியதுடன், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாகச் செயலிழந்துபோனது. ஆனாலும், கப்பலோட்டுவதுவதில் மிகவும் தீரர்களான வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறையினையும் மீறி கப்பலோட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததனால் ஆங்கிலேயர்களால் "கடத்தல்க்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலேயக் காவலர்களுடனும், பிற்காலத்தில் ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதிகளினால் இறக்கிவிடப்பட்ட காவல்த்துறை மற்றும் ராணுவத்தினருடனும் அவ்வப்போது வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 10,000 பேர்கொண்ட வல்வெட்டித்துறைத் தமிழர்கள் மிகவும் நெருக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். கடத்தல்க் காரர்களைத் தேடுகிறோம் என்கிற போர்வையில் சிங்கள காவல்த்துறையும் ராணுவமும் வல்வெட்டித்துறை மக்களை ஆரம்பத்திலிருந்தே துன்புறுத்தி வந்ததனால், அம்மக்கள் ராணுவத்தின்மீதும் காவல்த்துறை மீதும் கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தனர். வல்வெட்டித்துறையை கடத்தல்க்காரர்களின் சொர்க்கபுரி என்று சிலர் ஒரு காலத்தில் அழைத்ததுண்டு. சோசலிச இலங்கைக் குடியரசில் கிடைக்காத பல பொருட்கள் வல்வெட்டித்துறையில் தாராளமாகக் கிடைத்ததே இதற்குக் காரணம் என்றால் மிகையில்லை. கப்பலோட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய வல்வையின் மைந்தர்கள் பல கடற்கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு மியன்மார், தாய்லாந்து, இந்தியா என்று பல நாடுகளுக்குச் சென்று பல பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்ததுடன், செல்வத்துடனும் விளங்கினர். தமது கடுமையான கடற்பயணங்களின்போது அவ்வப்போது கரையோரக் காவல்த்துஇறையுடன் சமர்புரியும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைந்திருந்தன.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointவைகாசி 1958 இல் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் பரவலாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டவை. இலங்கையின் பொருளாதாரத்தின்மீது தமிழ் வர்த்தகர்கள் கொண்டிருந்த செல்வாக்கினை அழிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மொத்த தமிழ்ச் சமூகமுமே இத்தாக்குதலிற்குள் அகப்பட்டுப் போனது. மாகாண நகரங்களில் இயங்கிவந்த தமிழரின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டதுடன், எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட பூர்வீக தமிழ்த் தாயகத்தில் உடனடியாகவே சிங்களவர்கள் அரசினால் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே அகதி முகாம்களில் தஞ்சமடைந்த பெருமளவு தமிழர்களை ராணுவப் பாதுகாப்புடன் தமிழரின் பூர்வீக வாழிடமான வடக்குக் கிழக்கிற்கு "இதுதான் உங்களுக்குப் பாதுகாப்பான பகுதி" என்று அரசு அனுப்பி வைத்தது. இத்தாக்குதல்கள் தாம் பாதுகாப்பற்றவர்கள், ஆகவே எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், கெளரவமாக வாழவும் எமக்கான தனியான தேசம் வேண்டும் என்கிற சிந்தனையினை தமிழர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விட்டிருந்தது. மாவட்ட காணி அதிகாரியாக இருந்த வேலுப்பிள்ளை அவர்கள் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் அழிப்புப் பற்றியும், தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள தொடர்பாகவும் மாலை வேளைகளில் தனது வீட்டில் கூடும் நண்பர்களுடன் கலந்துரையாடி வருவார். "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் தந்தை செல்வாவின் சுலோகம் அடிக்கடி வேலுப்பிள்ளையின் நாவில் தவழ்ந்துகொண்டிருக்கும். தமிழரின் தாயகம் பாதுகாப்பட்டால் ஒழிய தமிழ் இனத்தின் தனித்துவத்தினைக் காப்பாற்ற முடியாது என்பதே அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் அரசியல் பிரவேசம் இங்கிருந்தே ஆரம்பமாகியது. தனது வீட்டில் குழுமியிருந்து பெரியவர்கள் பேசும் விடயங்களை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். ஆனால், அந்த பேச்சுக்களில் அவர் ஒருபோதும் பங்குகொண்டது கிடையாது. இந்த சிறப்பியல்பு அவரை சிறந்த செவிமடுப்பாளனாக உருவாக்கியதுடன், நாளடைவில் அவரது குணாதிசயங்களில் மிக முக்கியமானதாகவும் மாறிப்போனது. தமிழ்ப் பூசகரை உயிருடன் தீக்கிரையாக்கிய விடயம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அவரை கடுமையான சீற்றத்திற்குள்ளும் அது தள்ளியிருந்தது. "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தப் பூசகரும் தமிழர்களும் திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்தும் அவர்களுடன் விவாதம் செய்துகொண்டிருந்தார். அப்பூசகரால் திருப்பி அடிக்க முடியவில்லை. அன்று கால கொழும்பின் பல பகுதிகளில் சிங்களவர்கள் கூடுவதை அவர் அறிந்துகொண்டார். அக்கூட்டம் மாலையாகியதுடன் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியது. தமிழர்களின் கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அவற்றிற்கு சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது. நகரின் பலவிடங்களில் தமிழர்களின் வீடுகளும் குறிவைத்து தக்கப்பட்டு, கொள்ளையிட்டபின்னர் எரியூட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல், அரச அலுவலகங்களில் வேலைபார்த்துவந்த தமிழர்கள் அவ்விடங்களிலேயே அச்சத்தில் ஒளிந்திருந்த வேளை அவர்களை வீதிகளுக்கு இழுத்துவந்த சிங்களவர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாணந்துரை சந்தியில் கூடிய காடையர் கூட்டம் தனது கோயில் நோக்கி வருவதை அவதானித்த பூசகர் மிகவும் பதட்டமடைந்தார். உடனடியாக தனது அறைக்குள் ஓடிய பூசகர், தனது கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டார். தாம் தேடிவந்த பூசகரை அறையினுள் கண்டுபிடித்த காடையர் கூட்டம் அவரை தலை முடியில் பிடித்து வெளியே இழுத்து வந்தது. பக்கத்தில் இருந்த எரிபொருள விற்பனை நிலையத்திலிருந்து தாம் எடுத்துவந்த பெற்றோலினை அவர்மீது ஊற்றிய அச்சிங்களக் காடையர்கள் அவர்மீது தீவைத்தனர். தனது உயிருக்காகக் கதறிக்கொண்டு பூசர் எரிந்துகொண்டிருக்க சுற்றியிருந்த சிங்களக் காடையர்கள் "பறத் தமிழனுக்கு பாடம் புகட்டிவிட்டோம், இனிமேல் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்தும் , தமிழருக்கு உரிமையும் கேட்கட்டும் பார்க்கலாம்" என்று எக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டு போனது. தமது மதகுரு ஒருவரை உயிருடன் எரித்தது தமிழ்ச் சைவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. மிகுந்த இறைபக்தி உள்ள குடும்பத்தில் வளர்ந்துவந்த சிறுவன் பிரபாகரனை இது அதிகம் வேதனைப்பட வைத்திருந்தது. அவரது பெற்றோர்கள் ஊரில் கோவில்களைக் கட்டி வாழ்ந்த பரம்பரையினைச் சேர்ந்தவர்கள். வல்வெட்டித்துரையில் இருக்கும் மிகப்பெரும் கோயிலான வல்வை சிவன் கோவிலின் பிரதம நிர்வாகியாக வேலுப்பிள்ளை இருந்துவந்தார். பிரபாகரனின் மூதாதையர்களில் ஒருவரான திருமேனியார் வெங்கடாச்சலம் என்பவரால் அக்கோயில் கட்டப்பட்டது. அக்கோயில் மட்டுமல்லாமல் இன்னும் இரு கோயில்களான நெடியகாடு பிள்ளையார் கோயில், வல்லை முத்துமாரியம்மண் கோயில் ஆகியனவற்றின் கட்டுமானத்தில் பிரபாகரனின் குடும்பம் பாரிய உதவியினை வழங்கியிருந்தது. பிரபாகரனின் தாயரான வல்லிபுரம் பார்வதியம்மாளும் ஊரில் கோயில் கட்டும் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். இன்னொரு வடபகுதி துறைமுக நகரான பருத்தித்துறை மெத்தை வீட்டு நாகலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மிகுந்த இறைபக்தி கொண்ட அவர், தொடர்ச்சியான விரதங்களையும் மேற்கொண்டு வந்தவர். தந்தை பிரதான ஆலய நிர்வாகியாகவும், தாயார் மத அனுஷ்ட்டானங்களில் பயபக்தியுடன் ஈடுபட்டுவருபவராகவும் இருக்க சிறுவன் பிரபாகரன் இவ்வாறான மதச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவந்தார். அவரது வீட்டின் பூஜை அறையில் சிவனுக்கான பெரிய உருவப் படமும் முருகன் பிள்ளையாருக்கென்று சிறு படங்களும் எப்போதுமே வைக்கபட்டிருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் நாளாந்தம் மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தேவாரங்களையும் பாடிவந்தனர். தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் முருகனை பிரபாகரன் தனது பிரதான கடவுளாக வழிபட்டு வந்தார்.1 point - காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.