Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8910
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15791
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7055
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/18/23 in Posts

  1. எட்டு வீட்டுக்குப் போகும்போது ஒரு லட்ச ரூபாய்களை எடுத்துச் சென்று எல்லோரும் நிற்கும்போது தங்கையின் கைகளில் கொடுக்கும்படி கணவரிடம் சொல்ல மறு பேச்சுப் பேசாமல் எடுத்துச் சென்று கொடுக்கிறார். அதன் பின்தான் என்னால் நிம்மதியாக உண்ண முடிகிறது. ஆனாலும் என்ன, அது முடிய மாறிமாறி அந்தக் கோவில் இந்தக் கோவில் விரதம் என்று ஒரு மாதமாக ஒரே மரக்கறிதான் என்பது வேறுகதை. ஆனால் நாங்கள் அங்கு தொடர்ந்து நிற்கவில்லை என்பது எம்மைக் காப்பாற்றிவிட்டது. அடுத்தநாள் கிளிநொச்சி செல்வதற்குக் கிளம்பி காலை 9.30 இக்கு இணுவிலுக்கு வரும் தொடருந்தில் ஏறி அமர்ந்தாச்சு. இரண்டாம் வகுப்பு டிக்கட் ஒருவருக்கு 350 ரூபாய்கள். மூன்றாம் வகுப்பில் எக்கச்சக்கமான சனம். ஓரளவு புதிய தொடருந்து. சுத்தமாகவும் இருக்க பாராக்குப் பார்ப்பதும் கதைப்பதுமாகப் பொழுதுபோக யாழ் ப்பாணத்தில் இரு சிறுவர்களுடன் ஒரு குடும்பம் ஏறி எமக்கு அடுத்த பக்கத்து இருக்கைகளில் அமர்கின்றனர். மனைவி நல்ல நகைநட்டுகள் போட்டு அழகான ஆடையும் அணிந்திருக்க கணவனும் பிள்ளைகளும் கூட நல்ல ஆடையுடன் பார்க்க நல்ல குடும்பம் போல் இருக்கிறது. தொடருந்து புறப்பட்டவுடன் இருக்கைகளில் இருக்காமல் இரு பையன்களும் சாண்டில்சுடன் இருக்கைகளின் மேல் தாவுவதும் குதிப்பதும் தாயை ஏதோ கரைசல் குடுப்பதும் இந்தத் தொங்கலில் இருந்து அந்தத் தொங்கல் வரை ஓடுவதுமாக ஒரே அட்டகாசம். கணவனும் மனைவியும் பிள்ளைகள் ஏதோ சாகசம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு எரிச்சல் வருகிறது. என் முகத்தைப் பார்த்தே நான் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எண்ணி என் கணவர் நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடிப்படு என்கிறார். நானும் சரியென தலையை ஒருபக்கம் சாய்த்து கண்களை மூட தூக்கம் நன்றாக வருகிறது. எவ்வளவுநேரம் தூக்கினேனோ தெரியாது என் கன்னத்தில் எதுவோ விழுந்ததுபோல் இருக்கத் திடுக்கிட்டு விழித்து அங்கும் இங்கும் பார்க்கிறேன். கணவர் ஒரு பிஸ்கட் பக்கற்றை என் காலடியில் இருந்து மெதுவாக எடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடவே என்னை எழுபின்நீங்கள் என்று கேட்க மகள் சிரிக்கிறாள். உதில சிரிக்க என்ன இருக்கு என்று கேட்க, மனிசன் பிஸ்கட்டை எடுத்து அந்தப் பக்கம் உள்ளவர்களிடம் நீட்ட அந்தப் பையன் வெடுக்கென கணவனின் கைகளிலிருந்து அதைப் பிடுங்குகிறான். அவன் எறிந்த பக்கட்தான் என் கன்னத்தில் விழுந்திருக்கு என எனக்குப் புரிகிறது. பிஸ்கற் பக்கற்றை கண்டபடி பிரித்து உடைத்து எடுத்து உண்கிறான் அவன். மற்றப் பையனும் ஓடிவந்து தானும் பறித்து உண்கிறது. காலின் கீழே பிஸ்கட் தூள்கள் கொட்டுண்டு கிடக்கின்றன. தாயும் தகப்பனும் எதுவித சுரணையுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க நீங்கள் ஒழுங்கக்காகப் பிய்த்துக் கொடுங்கோ என்று சொல்ல வாயெடுக்க, மகள் வேண்டாம் அம்மா என கண்களால் சைகை காட்ட நான் மறுபுறம் திரும்பிக் கொள்கிறேன்.கணவர் மகளுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்லியவண்ணம் வர நான் என் பண்ணை பற்றியே எண்ணியபடி வருகிறேன். ஒன்றரை மாணித்தியாலத்தில் கிளிநொச்சியை சென்றடைகிறோம். முன்னரே ஹோட்டல் ஒன்றை தொலைபேசியில் தொடர்புகொண்டு புக் செய்து வைத்ததனால் ஓட்டோ ஒன்றை கூப்பிடுகிறோம். கடும் வெயிலாக இருக்கிறது. ஹோட்டலின் பெயரைக் குறிப்பிடுகிறார் கணவர். 1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான். சரி என ஏறி அமர்ந்தால் ஒரு மூன்று கிலோமீற்றர் போக கோட்டல் தெரிகிறது. கீழே கடைகள் இருக்க முப்பது படிகள் நடந்து மேலே ஏறிப் போகக் கோட்டல். உள்ளே சுத்தமாக இருக்கிறது. ஆனால் யாரையும் காணவில்லை. தொலைபேசியில் அந்த இலக்கத்துக்கு அழைத்து யாரும் இல்லையா என்று கேட்க, நான் போன் செய்யிறன் உடனே வருவார்கள் என்கிறார் ஒருவர். நாம் சோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடங்கள் காத்திருக்க ஒரு பெண் வருகிறார். எங்களைக் கடந்து சென்றவர் எம்மை திரும்பியும் பார்க்காமல் சென்று வரவேற்பு மேசையில் எதையோ தேடுகிறார். நான் எழுந்து சென்று நீங்கள் இங்கு வேலை செய்பவரோ என்று கேட்கிறேன். ஓம் பொறுங்கோ வாறன் என்றுவிட்டு லாச்சியை இழுத்தும் பார்க்கிறா. பின் வேறு ஒன்றைத் திறந்து திறப்பையும் ஒரு கொப்பியையும் எடுக்கிறா. வெளிநாடா? உங்கட பாஸ்போட்டுகளைத் தாங்கோ என்கிறா. நான் கணவரின் பாஸ்போட்டை மட்டும் கொண்டுவந்து கொடுக்க, மற்றதுகள் என்கிறா. என்ன மற்றதுகள் என்கிறேன் நான். பாஸ்போட் என்கிறா. நாங்கள் குடும்பம் ஒரு பாஸ்போட் காணும் என்கிறேன். அவர் வேறொன்றும் பேசாமல் பெயரை எழுதிவிட்டு பாஸ்போட்டைத் தந்துவிட்டு வாங்கோ என்றபடி முன்னால் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு அறையைத் திறக்கிறா. வெளியே யன்னல் இல்லாத அந்த அறை சிறிதாகவும் இருட்டாகவும் இருக்க நாம் இரு கட்டில்களுடன் மூன்றுபேர் தங்குவதற்குரிய அறைகள் தானே கேட்டோம். இது சிறிதாக இருக்கிறது. வேறு அறை காட்டுங்கள் என்கிறேன். அப்ப மேலேதான் போகவேண்டும் என்றபடி மேலே செல்ல நாமும் பின்தொடர்கிறோம். அந்த அறை பெரிதாக இருக்கிறது. AC, Fan எல்லாம் இருக்கிறது. Toilet ஐ எட்டிப் பார்க்க சுத்தமாக இருக்கிறது. மகள் உடனே கட்டிலின் மேலே ஏறிச் சாய்ந்தபடி TV பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சூட்கேசை வைத்துவிட்டு நானும் ஏறி அமர்கிறேன். கணவர் ஏசியை போட நன்றாக இருக்கிறது. இப்ப மதிய உணவுக்குச் செல்வோமா என்கிறார் கணவர். ஒரு மணித்தியாலம் செல்லச் செல்வோமென்று மகள் கூற சரி என்று கூறிவிட்டு நானும் கணவரும் AC குளிரில் கட்டிலில் சாய்கிறோம். உடனே கதவு தட்டும் சத்தம் கேட்க என்னடாய்து என்று எழுந்து சென்று நான் கதவைத் திறந்தால் ஒரு றேயில் கோப்பிக் கோப்பைகளை நீட்டுகிறார். நாம் கேட்கவில்லையே என்கிறேன். இது ஃப்ரீ தான் என்கிறார். நன்றி சொல்லிவிட்டு வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்கிறேன். நன்றாகச் சீனி போட்டு nescafe வாசனையுடன் இருக்கிறது. குடித்து முடிய மீண்டும் நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுக்க எத்தனை சுகம் என எண்ணியபடி நன்றாகத் தூங்கிவிட மீண்டுமெழுந்தபோது ஒரு மணிமுப்பது நிமிடம் என தொலைபேசி சொல்கிறது. கீழே இறங்கிச் சென்றால் பக்கங்களில் இரண்டு மூன்று சிறு உணவகங்கள். ஒரு கடையில் நுழைகிறோம். அங்கும் இங்கும் வேலையாட்கள் செல்கிறார்கள். ஒருவர் கூட எம்மை வாருங்கள் என்று கூப்பிடவில்லை. ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு வாங்கோ வேறு கடைக்குப் போவோம் என்று கூறி வெளியே வந்து போவோர் சிலரை இங்கு எது நல்ல உணவகம் என்று கேட்க சிலர் தெரியாது என்கின்றனர். சிலர் இன்னும் சில கடைகளைக் காட்டுகின்றனர். ஓட்டோ காரரிடம் கேட்டால் காட்டுவார்கள் என எண்ணி அவற்றை மறித்தால் அவை ஆட்களோடு செல்வதால் நிறுத்தவில்லை. வீட்டில் இருந்து வரும்போது தொப்பியையும் கொண்டுவரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிறுத்தியிருக்கும் ஓட்டோவையும் காணவில்லை. ஓட்டோவைப் பிடியுங்கள் என்றுவிட்டு நானும் மகளும் ஒரு கடையுள் நுழைந்து குடை இருக்கா என்று கேட்கிறோம். மகள் தொப்பிகளைப் பார்த்து ஒன்றை எடுக்க நான் குடை என்ன விலை என்று கேட்க 2500 ரூபாய்கள் என்கிறார் கடைக்காரர். நான் ஒரு கூடையைத் தெரிவுசெய்து எடுக்க அதில் 1200 என்று விலை தொங்குகிறது. இதில் 1200 என்று போட்டிருக்க நீங்கள் இரு மடங்கக்காகச் சொல்கிறீர்களே என்கிறேன். அது பழைய விலை தங்கச்சி. இப்ப விலை கூடீற்றுது. அதை கிழிக்க மறந்துபோனன் என்கிறார். தொப்பிக்கும் அதற்கும் சேர்த்து 3000 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளியே வர கணவர் ஓட்டோவை மறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நல்ல உணவகம் என்றால் மூன்று மைல் செல்லவேண்டுமாம் அம்மாச்சி பக்கத்தில் இருக்காம் என்கிறார். மகளும் ஒன்லைனில் பார்த்துவிட்டு இரண்டு மூன்று உணவகங்கள் தூர இருக்கு என்கிறாள். எதற்கும் அம்மாச்சிக்கே இப்ப போவோம். மாலை உணவுக்கு அங்கே போகலாம் என்கிறேன். அங்கு சென்று பார்த்தால் நிறையப்பேர் இருக்கிறார்கள். 2017 இல் வந்தபோது இருந்த அம்மாச்சி உணவகம் சுத்தமாக இருந்தது. தொங்கலில் வெறுமையாக இருந்த மேசையில் சென்று அமர்கிறோம். மேசையில் ஆங்காங்கே உணவுப் பருக்கைகள் கிடக்கின்றன. உண்ட தட்டுக்களும் யாரும் எடுப்பாரற்றுக் கிடக்க கணவர் அங்கு வேலை செய்த பெண்ணை கூப்பிட்டு துடைக்கும்படி கூற அவர் தண்ணீருடன் ஒரு துண்டைக் கொண்டுவந்து துடைத்துவிட்டுப் போகிறார். நல்ல காலம் நான் டிசு கொண்டுசென்றதால் அதை எடுத்து நன்றாக மேசையைத் துடைத்துவிட்டு உணவை எடுக்கச் செல்கிறேன். மகளும் பின்னே வர அவளையும் கேட்டு விருப்பமானவற்றை வாங்கி வருகிறோம். அப்பம், இடியப்பம் எல்லாம் ஆறிபோய் இருக்கு. நான் வழமைபோல தோசை, வடை. மகள் எடுத்த இட்லியும் ஆறிப்போய் இருந்தாலும் சாம்பார் சூடாக இருக்கிறது. நான் தேநீர் எடுக்க தகப்பனும் மகளும் பிரெஸ் பழச்சாறுகளை எடுக்கின்றனர். நான் எழுந்து சென்று ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறேன். ஏன் முன்புபோல் சுத்தமாக இல்லை என்று கேட்க இப்பதான் லஞ்ச் டைம் முடிந்து பழையவர்கள் போக நாங்கள் வந்துள்ளோம். அதுதான் இப்படி என்று சமாளிக்கிறார். பொரித்த மோதகமும் பார்க்க நன்றாக இருக்க அதில்ஒரு ஆறை பார்சல் செய்துகொண்டு வெளியே வர உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்கிறார் கணவர்.
  2. பாராளுமன்றத்தை நீட்டிக்க ஜெயார் தீட்டிய சதி அடுத்தபடியாக, தனது திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளவைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் ஜெயார். அரச ஊடகங்களான லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியன ஜெயாரின் இத் திட்டத்திற்காக செயலில் இறக்கப்பட்டன. கார்த்திகை 2 ஆம் திகதி அவற்றிற்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தலின்படி மறுநாள் அரசால் வெளியிடப்படவிருக்கும் அறிவிப்புக்களுக்கு இவ்வூடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டது. கூறப்பட்டதன்படி, கார்த்திகை 3 ஆம் திகதி இந்த ஊடகங்களில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியானது. அந்த அறிவித்தல் ஜனாதிபதி ஜெயாரின் கையொப்பத்தோடு வெளிவந்திருந்தது. "1982 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி எனக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை தாங்கியவர்களும், அக்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுமான சிலர் என்னையும், அமைச்சர்கள் சிலரையும் மற்றும் திரு அநுர பண்டாரநாயக்க, பாதுகாப்புப் படைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளைப் படுகொலை செய்யவும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, இவர்களின் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் ஏற்படுத்தி, தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவாறு அரசியலமைப்பை முற்றாக நிராகரித்துவிடவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்". "இந்தக் கயவர்களின் முயற்சி கைகூடுவதனை அனுமதிப்பதா அல்லது எனக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஜனாதிபதி எனும் அதிகாரத்துடன், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்று, மக்களுக்கான நற்திட்டங்களை தொடர்வதற்கான மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதா என்பதுபற்றி தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இக்கயவர்களை நான் பாராளுமன்றத்தில் நுழைய அனுமதித்தால், நடைமுறையில் இருக்கும் ஜனநாயக விழுமியங்களை இவர்கள் அழித்துவிட முயல்வதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நக்சலைட்டுக்கள் பாணியிலான அரசாங்கத்தையும் இவர்கள் உருவாக்கி விடுவார்கள்". "மேலும், ஜனநாயக வழிகளில் தொழிற்பட விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்குள் தமது அதிகாரத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்" "ஆனால், நான் இன்று பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமிடத்து, கடந்த ஐப்பசி 20 ஆம் திகதி நிலவரப்படி எனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 196 ஆசனங்களில் 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி 68 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயகவிரோத, வன்முறையினை விரும்பும் நக்சலைட் அமைப்பாக இருப்பதை நான்விரும்பவில்லை. ஆனால், ஐப்பசி 29 இல் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அவ்வாறான வன்முறைவிரும்பும் ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்தது. ஆகவேதான், பொதுதேர்தல் ஒன்றினை நடத்தி, வன்முறையாளர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதைக் காட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தைத் தொடரலாம் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்" என்று ஜெயாரின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ 1982 குற்றவியல் விசாரணைத் திணைக்களம் இந்த நக்சலைட் சதிபற்றி விசாரிக்க அழைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவும் இன்னும் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவவும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டார். விஜய குமாரதுங்க "கிழட்டு நரியொன்று தன்னையும் தனது கொலைகாரக் கூட்டத்தையும் தனது அரசியல் எதிரிகள் கொல்லத் திட்டமிடுவதாக தானே ஒரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றி வந்ததாம்" என்கிற வகையில் ஜெயாரின் பித்தலாட்டங்கள் குறித்து வதந்திகளும், நகைச்சுவைக் கதைகளும் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தன. தனது சதிக் கோட்பாட்டை உண்மையென்று நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியின் தலைமைப்பீடத்தின் சில பெயர்களையும் ஜெயார் வெளியிட்டார். மேலும், எதிர்கட்சியை வழிநடத்திய மேன்மைதங்கிய பெண்மணியும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். தான் திட்டமிட்டபடியே சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பது உறுதிப்படுத்தப்படும்வரை எதிர்க்கட்சி மீதான கைதுகளையும், விசாரணைகளையும் ஜெயார் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். கொழும்பு அரசியலின் நகைச்சுவைகளுக்கு அப்பால், விஜய குமாரதுங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயாரின் சூழ்ச்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆகவே அவரையும், அவர் சார்ந்தவர்களையும் கைதுசெய்து அடைத்துவைக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலகம் கடுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த மாவட்ட மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இவர்களும் கொலைச்சதி பற்றிக் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தேர்தல் நாள் கடந்து சென்றவுடன், இவர்கள் அனைவர் மீதிருந்த விசாரணைகளையும் பொலீஸார் நிபந்தனையின்றி கைவிட்டுச் சென்றனர்.
  3. Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை. சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும். என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது.
  4. நிறுத்திவிடும் எண்ணமில்லை வசி. எனக்கிருக்கும் கவலை இத்தொடரினை சபாரட்ணம் அவர்கள் முழுமையாக எழுதமுன்னரே அவரும் இறையடி சேர்ந்ததும், எமது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டதும்தான். அதற்காக, நடந்தவற்றை பதிவிடாமல் இருக்கமுடியுமா? ஆகவே, நிச்சயம் அவர் எழுதிச் சென்றதை இங்கு பதிவேன். நேரம் ஒரு பிரச்சினைதான், ஆனால் செய்யாமலும் இருக்க முடியவில்லை. மீண்டும் எனது நன்றி வசி!
  5. ஒரே மூச்சில் வாசித்து முடிச்சாச்சு. எமக்கும் பனியுக்குள் வாழ்க்கை என்பதால் பல விடயங்கள் என் அனுபவம் போன்றே இருந்தன. சாதாரண சப்பாத்துடன் போய் பனிகொட்டும் போது வெளியே இறங்க ஒரு தைரியம் வேண்டும். நான் இதுக்கென்றே இரண்டு சோடி சப்பாத்துகள் வைத்துள்ளேன். இங்கு இப்படி சக்கரத்துக்கு சங்கிலி கட்டும் வழக்கம் இல்லை. அனேகமானோர் Winter Tire போட்டு இருப்பார்கள். நான் இதுவரைக்கும் அப்படி Winter Tire போடவில்லை.
  6. உண்மை சிறியண்ணா..கடந்த 30ஆம் திகதி எனது பிறந்த நாளும் வந்து போனது யாழில் ஒரு குருவி கூட யாயினியைும் நினைக்க இல்ல..அடிக்கடி திருத்த வேலை செய்வதால் யாரோ என்னமோ செய்து போட்டீனம் அது தான் ஒன்றையும் காட்ட வில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு போய்ட்டேன்...இனிமேல் ஒண்ணும் சொல்லக் கூடா நன்றி....🖐️
  7. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. பிறந்தநாள் வாழ்த்துகள் நிலாமதி
  9. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிலாக்கா..😀🖐️
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....! 💐
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
  12. முதன் முதலில் பொலிஸ் அதிரடிப்படையும் நடத்தியவனும் இவன் தான் என்று எண்ணுகின்றேன். இன்னும் நிறைய பேர் உங்கள் வாசகவட்டத்தில் இருக்கிறார்கள் ரஞ்சித் தொடர்ந்து எழுதுங்கள்.
  13. பழிவாங்கும் குணம் கொண்ட கிழட்டு நரி ஜெயார் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகி பல வருடங்களுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரொஷான் பீரீசுடன் பேசும்போது ஜெயார், "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது" என்பதைக் காட்டவே விஜய குமாரதுங்க கைதுசெய்யப்பட்டதாகக் கூறினார். "எனது மகனை சிறிமாவோ பண்டாரநாயக்கா கைதுசெய்து, சிறையில் அடைத்து வைத்ததுபற்றி நான் ஒருபோதும் பேசியது கிடையாது" என்று கூறினார். அவரது மகன் ரவி ஜெயவர்த்தன மக்கள் விடுதலை முன்னணியினரின் 1971 ஆம் ஆண்டுக் கலகத்தின்போது சிறிமாவினால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன ஆனால், ஜெயார் தனது மகனின் கைதுபற்றி அவ்வப்போது பேசியே வந்திருக்கிறார். சிறிமாவின் சிவில் உரிமைகளைப் பறித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை ஜெயார் அழித்திருந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அமரபுர நிக்காய பீடத்தின் பெளத்த பிக்குகளின் தலைவரான கொஸ்கொட தர்மவன்சவிடமும் இன்னும் சில பெளத்த பிக்குகளிடமும் பேசிய ஜெயவர்த்தன தனது ஒரே மகனை 1971 ஆம் ஆண்டு கைதுசெய்து சிறையிலடைத்த சிறிமா, தகரக் கோப்பையில் உணவு போட்டார் என்று வன்மத்துடன் கூறியிருந்தார். அப்படியானால், உங்களின் மகனின் கைதுக்காகவா நீங்கள் இன்று சிறிமாவைப் பழிவாங்குகிறீர்கள் என்று பிக்குகள் அவரிடம் வினவியபோது, ஜெயார் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், சிறிமாவின் மீதான கடும்போக்கைக் கைவிடுமாறு பிக்குகள் முன்வைத்த வேண்டுகோளினையும் ஜெயார் முற்றாக நிராகரித்து விட்டார். விஜய குமாரதுங்கவின் கைது கூட தனது மகனின் கைதிற்கான பழிவாங்கலாகவே ஜெயாரினால் செய்யப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்காக கார்த்திகை 2 ஆம் திகதி அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட நான்காவது திருத்தத்தினை பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கவும், சி வி விவேகானந்தனும் உச்ச நீதிமன்றத்தில் அதன் நியாயத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். அரச தலைமை வழக்கறிஞர் இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு, 4 இற்கு 3 என்கிற ரீதியில் புதிய திருத்தம்பற்றியோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புப் பற்றியோ தீர்ப்பளிப்பதற்கு ஏதுமில்லை என்று கைவிரித்து விட்டது. வி என் நவரட்ணம் 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 4 ஆம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்ப்பதென்று முடிவெடுத்தது. சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி. என். நவரட்ணம் தலைமையிலான உறுப்பினர்கள் இந்த முடிவில் தீர்க்கமாக நின்றனர். தனது தொகுதி வாக்களர்களின் ஆதரவின் மூலம் பதவிக்கு வந்த தான், தனது 6 வருட பதவிக் காலம் முடிவுற்றதும் தனது பதவியினை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். "தொடர்ந்தும் கதிரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்" என்று அவர் கூறினார். அக்குழுவில் இருந்த சிலர், முன்னணி, எதிர்க்கட்சியுடன் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து ஏற்கனவே ஒரு இணக்கப்பட்டிற்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெயாருக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஆகவே, முன்னணியினரின் பாராளுமன்றக் குழு ஒரு சமரசத்திற்கு வந்தது. அதாவது, சர்வஜன வாக்கெடுப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியுடன் சேர்வதில்லை என்பதே அது. மேலும், 1983 ஆம் ஆண்டு ஆவணியில் முடிவிற்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து தாம் இராஜினாமாச் செய்வதாகவும் தீர்மானித்தார்கள். மேலும், தமது முடிவினை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்து முன்னணி உறுப்பினர்களும் தமது இராஜினாமாக் கடிதங்களை அமிர்தலிங்கத்திடம் கையளித்திருந்தனர். அதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பிற்க்நெதிராக முன்னணி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாது எனும் உறுதியையும் அமிர்தலிங்கத்திடமிருந்து ஜெயார் பெற்றுக்கொண்டார். ஜெயாருக்கு தான் வழங்கிய வாக்குறுதியின்படி அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் நடந்துகொண்டனர். அதன் மூலம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களின் ஆதரவு ஜெயாருக்குக் கிடைக்க ஏதுவாகியது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம், அதற்கெதிரான தமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு மட்டுமே மக்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 வருடங்களுக்குப் பதவியில் நீடிப்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். மேலும், தமது பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முதலாவது ஆயுட்காலம் முடிவடையும்போது ராஜினாமாச் செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது அவரும், அவரது கட்சியினரும் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தை நீட்டிக்கும் பிரேரணை 142 வாக்குகளுக்கு 4 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தால் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 5 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயக்க, ஆனந்த திசாநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் சரத் முத்துவெட்டுவே கம ஆகியோர் பிரேரணைக்கெதிராக வாக்களித்திருந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதி மார்கழி 22 ஆம் நாளுக்குத் தீர்மானிக்கப்பட்டது. வாக்களர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளாவன : நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தை இன்னும் ஆறுவருடங்களுக்கு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதிவரை நீட்டிக்கவும், அத்திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடவும் அனுமதி தருகிறீர்களா? சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதுகுறித்து வாக்காளர்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க விரும்புவோர் விளக்குச் சின்னத்திற்கும், விரும்பாதோர் பானை சின்னத்திற்கும் புள்ளடியிடுமாறு கோரப்பட்டனர். விளக்குச் சின்னத்திற்கு ஆதரவாக ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்த அதேவேளை, சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சியினர் பானைச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை கார்த்திகை மூன்றாம் வாரம் கொழும்பு, கொச்சிக்கடையில் ஆரம்பித்த ஜெயவர்த்தன, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், இது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிமாவோ மக்களின் விருப்பினை அறிந்துகொள்ளாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை நிட்டித்தது போல அல்லாமல், தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை நீட்டிக்க விரும்புவதாக ஜெயார் கூறினார். தனது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தற்போதிருக்கும் பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பேண தான் விரும்புவதாக அவர் கூறினார். சிறிமா அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதால், அந்த வேட்பாளர்கள் தமது தகமையினை இழப்பார்கள் என்கிற தடை இருந்தபோதும், சிறிமாவோ இப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சியின் பிரதம பிரச்சாரகராகப் பங்கெடுத்தார். ஏனென்றால், இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் என்று எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பேசிய சிறிமா, "உங்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமிருந்தால், நீங்கள் பானைச் சின்னத்திற்கே உங்களின் வாக்கினை வழங்க வேண்டும். எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காக நீங்கள் பானைச் சின்னத்திற்கே வக்களிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 1931 ஆம் ஆண்டிலிருந்து நாம் பேணிவரும் நடைமுறையினை இதன் மூலம் மட்டுமே நாம் பேணைக்காக்க முடியும்" என்று கூறினார். "பானைக்கு வாக்களிப்பதென்பது எந்தவொரு அரசியற் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லத் எதிராகவோ வாக்களிப்பது என்று அர்த்தமாகிவிடாது. பானைக்கு வக்களிப்பதன் மூலம் 1931 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் நடைமுறையான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் உரிமையினை காப்பாற்றிக்கொள்வதாகும்" என்றும் அவர் கூறினார். சர்வஜன வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரவாளர்களைக் கவரும் விதமான வதந்தியொன்று கொழும்பில் வேண்டுமென்றே அரசால் பரப்பப்பட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் முகமாக, அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவினால் அமர்த்தப்படப் போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. நான் அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்து நேரடியாகக் கேட்டேன், "குப்பை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த அமிர், அதனை முற்றாகவும் மறுக்க விரும்பவில்லை. "ஒரு வதந்தியை நான் எப்படி இல்லையென்று மறுக்க முடியும்?" என்று அவர் என்னைப்பார்த்துக் கேட்டார். நாடுபூராகவும் 5,768,662 வாக்காளர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். பதிவுசெய்யப்பட்ட 8,145,015 வாக்களர்களில் இது 70.82 வீதமாகும். மொத்தமாக 3,141,223 வாக்குகள், 54.45 வீதத்தினர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்கள். 2,605,983 வாக்காளர்கள், 45.17 வீதத்தினர், பாராளுமன்ற ஆயுட்கால நீட்டிப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் மீதான குண்டர்களின் வன்முறைகள், அச்சுருத்தல்கள் என்பவற்றுடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜெயவர்த்தன 535,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, நாடு தழுவிய ரீதியில் வக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைந்து காணப்பட்டது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் காட்டிய விருப்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த 228,613 தமிழர் வாக்களர்களுடன் ஒப்பிடும்பொழுது, சர்வஜன வாக்கெடுப்பில் 290,849 தமிழ் வாக்களர்கள் யாழ்ப்பாணத்தில் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 260,534 வாக்களர்கள் பாராளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராகவே வாக்களித்தனர். 25,312 வாக்களர்கள் பாராளுமன்றம் நீட்டிக்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாக வாக்களித்த 44,780 தமிழர்களில் 19,000 தமிழர்கள் அவருக்கெதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். இவ்வாறே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் பெரும்பாலான தமிழர்கள் பாராளுமன்றத்தை நீட்டிக்கும் ஜெயவர்த்தனவின் விருப்பிற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டத்தில் 48,968 வாக்களர்கள் இல்லையென்றும், 25986 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 51,909 வாக்களர்கள் இல்லையென்றும், 39,429 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 72,971 வாக்களர்கள் இல்லை என்றும், 47,482 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 91,129 வாக்களர்கள் ஆம் என்றும், 62,836 வாக்களர்கள் இல்லையென்றும் வாக்களித்திருந்தனர். தனது விருப்பிற்கெதிராக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, இயல்பாகவே பழிவாங்கும் குணம் கொண்ட ஜெயார் தமிழர்களுக்கொரு பாடத்தைப் புகட்ட வேணடும் என்று தருணம் ஒன்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.
  14. தொடருங்கள் ரகு முழுமையாக வாசிக்காவிட்டாலும் தொடர்ந்து உங்களை ஊக்குவிக்காவிட்டாலும் நெஞ்சில் என்றும் உங்களை நிறுத்தி இருக்கிறது இத்தொடரும் அதற்கு நீங்கள் தரும் நேரமும் வாழ்க நலமுடன்
  15. சர்வஜன வாக்கெடுப்பு ஜெயாருடன் அமைச்சர்களும், ரோகண விஜேவீரவும் குட்டிமணியை தனது கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு தாம் எடுத்த முயற்சி கடுமையான கணடங்களையும், பின்னடைவையும் சந்தித்திருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்தில் இன்னுமொரு நடவடிக்கையினையும் ஜெயவர்த்தனா செய்தார். அதுதான் 1983 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருந்த பாராளுமன்றத் தேரெதல்களுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தப்போவதாக அவர் விடுத்த அறிவிப்பு. தனது இரண்டாவது ஜனாதிபதிக் காலத்திற்கான பதவியேற்பினை மாசி மாதம் 4 ஆம் திகதிவரை தாமதப்படுத்தியதன் மூலம், ஜெயார் மேலும் மூன்றரை மாதங்கள் தனது முதலாவது ஜனாதிபதிக் காலத்தை நீட்டித்துக்கொண்டார். தனக்கு பாராளுமன்றத்தில் அன்றிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை தனது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் முழுவதற்கும் அனுபவிக்க அவர் விரும்பினார். அநுராதபுரத்தில் ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஜெயவர்த்தன, தனது திட்டம்பற்றி முதன்முதலாக சில தகவல்களை வெளியிட்டார். "இனிவரும் பத்தாண்டுகளுக்கான இலங்கையின் வாக்காளர் வரைபடத்தினை நான் வெளியிட விரும்புகிறேன்" என்று ஜெயார் கூறியபோது பலருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ஆனால், இப்படிக் கூறியதன் மூலம் தான் அனுபவித்துவந்த பாராளுமன்றம் ஊடான பலத்தினை அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க விரும்பியிருந்தார் என்பதை அவருடன் இருந்த வெகு சிலரே உணர்ந்திருந்தனர். தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் தனது திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார் ஜெயார். வழமைபோல தனக்கு விசுவாசமான அமைச்சர்களில் ஒருவரைக் கொண்டு இதனை அவர் ஆரம்பித்து வைத்தார். இம்முறை அவர் அனுப்பிய ஆள், பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஆவார். ஜெயாரின் கட்டளைப்படி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான ஆதரவு தமக்கு வேண்டும் என்பதால், நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு மக்கள் ஆணையொன்று கேட்கப்படும் என்றும் பிரேமதாசா அறிவித்தார். பிரேமதாசவின் ஆலோசனைகளை அன்று பின்னேரமே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமனதாக ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரேமதாசாவின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்டு தமது திகதியிடப்படாத இராஜினாமக் கடிதங்களை கையளிக்க ஒத்துக்கொண்டதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தினை மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிப்பதையும் ஏற்றுக்கொண்டனர். பாராளுமன்றக் குழுவினருடன் பேசிய ஜெயார், திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் தேவையேற்படும்போது பின்னொரு காலத்தில் பாவிக்கப்படும் என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத கடிதங்கள் பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதுடன், இவற்றின்மூலம் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் , அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தையும் ஜெயார் நிலைநாட்டிக்கொண்டார்.
  16. இன்றைய ஸ்பெஷல்: குரங்கு ஏற்றுமதி கருத்தோவியம்.
  17. ரகு, Silent reader ஆக நானும் இருக்கின்றேன். நேரப் பிரச்சினைகளால் பல வாரங்கள் வாசிக்காமல் ஒரே நாளில் வாசித்து விருப்பும் தெரிவித்துவிட்டு சென்று விடுவேன். இன்னும் மிக முக்கியமான ஒரு விடயம் யாழை பூட்டாமல் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களின் இந்தப் தொடர் மற்றும் உங்கள் பதிவுகளும். நன்னியின் பதிவுகளும் மிக முக்கிய காரணங்கள். நன்றி
  18. முதலில் உங்களின் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வசி, நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம். சட்டர்டே ரிவியூ எனது தந்தையார் அடிக்கடி அலுவலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரு பத்திரிக்கை. ஆங்கிலம் என்கிறபடியினால், அது அரசு சார்புப் பத்திரிக்கையாக இருக்கும் என்றே எண்ணிவந்தேன். மேலும், போராட்ட இயக்கங்களுக்கெதிரான, அரசுக்குச் சார்பான எனது தந்தையாரின் மனோநிலையும் நான் இந்த முடிவிற்கு வர இன்னுமொரு காரணம். நீங்கள் கூறியபடி விக்டர் ஐவன் ஒரு சிங்கள இடதுசாரிப் பத்திரிக்கையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலைக் கொண்டவர். இந்த ஆவணம் எப்படியிருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தலைவர் பற்றி எழுதப்படுவதால் எதையுமே யோசிக்காது ஆரம்பித்து விட்டேன். ஆனால், தொடர்ந்தும் எழுதும்போதே, இது தலைவர் பற்றி மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய அரசியல்த் தலைவர்கள், அன்றிருந்த சூழ்நிலைகள் , அரச அடக்குமுறை பற்றியும் பேசுகிறது. ஆகவே, தொடர்ந்தும் எழுதுகிறேன். உங்களின் அரசியல் ஆர்வமும், பொருளியல்த்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அறிவும் அற்புதமானது. தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம். மீண்டும் உங்களின் ஊக்கம்தரும் கருத்திற்கு நன்றி !
  19. அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம் அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம் கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம் கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம் காவல் காக்கும் அம்மாளுக்கு நன்றி கூறுவோம் அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம் அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
  20. ஒரு கடை திறந்து எம்மவர்களை வைத்து வேலை வாங்கி அதை வெற்றிகரமாக நடாத்துவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதென்பதை விபரமாக கதையில் எழுதியுள்ளீர்கள் சுவி அண்ணா. நான் பிரேமா ஒரு இள வயது பெண் என்று நினைத்து இருந்தேன்... அவருக்கு பேரப் பிள்ளைகளும் இருக்குது என்பதை இறுதியில் தான் புரிந்தது. பிரேமாவைப் பிடித்து பொலிசுக்கு கொடுத்து இருக்க வேண்டும், களவாக துணியை எடுத்துக் கொண்டு வந்து தைத்தமைக்கு. மிருதுளா வின் பாத்திரப் படைப்பு சிறப்பு. வெறுமனே செக்ஸ் வைத்தமைக்காக ஒருவனை கட்டாயம் கட்டி அழக் கூடாது, அவனது மிச்ச இயல்புகளும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்த்தி உள்ளீர்கள்.
  21. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திய அமிர்தலிங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த அரசாங்கம் மற்றும் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடணம் என்பவற்றை காரணங்களாகக் காட்டி சிங்கள மக்களிடையே இன வன்மத்தையும், தமிழர்களுக்கெதிரான பகைமையினையும் ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சர்களும் வளர்க்கத் தொடங்கினர். லண்டனில் நிறைவேற்றப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் தீர்மானங்களுக்கு ஆதரவாக புலிகள் உட்பட எந்த ஆயுத அமைப்பும் வடக்குக் கிழக்கில் நடவடிக்கைகளில் ஈடுபடுமிடத்து, அவற்றின்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஜெயார் அறிவித்ததுடன், அவசர காலச் சட்டத்தினையும் மேலும் நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார். ஜெயாரின் இந்த அறிவித்தலின் உள்நோக்கம் குறித்து நன்கு உணர்ந்துகொண்ட கொழும்பு வாழ் தமிழர்கள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினர். கொழும்பு வாழ் தமிழர்கள் பலர் அமிர்தலிங்கத்தைச் சந்தித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்துவரும் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து, வைகுந்தவாசனின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கடுமையான கண்டனங்களுடன் ஒரு அறிக்கையினை வெளியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, எழுந்துவந்த சிங்கள இனவன்மத்தை தற்காலிகமாகப் பிற்போடுவதில் ஓரளவிற்கு வெற்றி கண்டது. அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரால் ஒருங்கிணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பைத்தியரக்காரத்தனமானதும், தாந்தோன்றித்தனமானதுமான தீர்மானங்களை நிறைவேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நிறைவேற்றப்பட்டிருக்கும் இத்தீர்மானங்கள் மிகத் தவறானவை என்பதையும், இதன்மூலம் தமிழரின் இலட்சியத்தின் எள்ளளவும் கிடைக்கப்பெறாது என்பதையும் முழுமையாக நம்புகிறோம்" என்று கூறப்பட்டிருந்தது. சிங்கள இனவாதத்தின் தூண்கள் என்று அறியப்பட்ட சண் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையும், அதன சிங்கள மொழிப்பத்திரிக்கையான தவசவும் முன்னணியினரின் இந்த அறிவிப்பை வரவேற்றதுடன், அப்போதைக்கு தமிழர்கள் இன்னொரு தடவை சிங்களவர்களால் கொல்லப்படுவதையும் தவிர்ப்பதற்கு உதவிபுரிந்திருந்தன. குட்டிமணி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, ஜெயவர்த்தனவின் தாளத்திற்கு ஆடுபவர் மற்றும் பாராளுமன்ற பகிஷ்க்கரிப்பை மீளப்பெற்றுக்கொண்டவர் ஆகிய அவப்பெயர்களை பெற்றிருந்த அமிர்தலிங்கம், அதனை மாற்றுவதற்கு அதிரடியாக சில முடிவுகளை எடுத்தார். ஆகவே, வட்டுக்கோட்டை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர் திருநாவுக்கரசு, 1982 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி மரணித்த நிகழ்வை தனது பெயரைத் திருத்தும் நடவடிக்கைக்காகப் பாவித்தார் அமிர்தலிங்கம். திருநாவுக்கரசின் மரணம் நிகழ்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றம், 1980 ஆம் ஆண்டு சித்திரை 5 ஆம் திகதி மணற்காட்டில் பொலீசாரால் பிடிக்கப்பட்டுக், கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து வந்த குட்டிமணி, ஜெகன் ஆகிய டெலோ தலைவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பை வழங்கியது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முதலாவது மரணதண்டனைத் தீர்ப்பு இதுவே என்றால் அது மிகையில்லை. 1979 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசனைக் கொன்றதற்காக குட்டிமணிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. தனது தீர்ப்பிற்கெதிராக குட்டிமணி மேன்முறையீடு செய்திருந்தார். குட்டிமணியும் ஜெகனும் - நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டும் வேளை திருநாவுக்கரசின் மரணத்தையடுத்து, அவ்வெற்றிடத்தினை நிரப்புவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி குட்டிமணியின் பெயரை சிபாரிசு செய்திருந்தது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம், ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மரணிக்கும்போதோ அல்லது பதவி விலகும்போதோ அல்லது அவர் கட்சியினால் நீக்கப்படும்போதோ அப்பதவிக்கு இன்னொருவரை அக்கட்சியின் செயலாளர் சிபாரிசி செய்யமுடியும் என்கிற நிலை இருந்தது. ஆகவே, குட்டிமணியை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் முன்னணியின் கோரிக்கையினை தேர்தல்கள் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன், பாராளுமன்றத்திற்கும் இதுபற்றி அறியத் தந்தது. இதனையடுத்து மிகக்கடுமையான கண்டனங்களும், விமர்சனங்களும் சிங்களவர் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பின. சிங்களப் பத்திரிக்கைகள் குட்டிமணியின் நியமனத்திற்கெதிராகப் பாரிய பிரச்சாரம் ஒன்றினை முடுக்கிவிட்டிருந்தன. தமிழர்களில் ஒரு பிரிவினரும் அமிர்தலிங்கத்தின் இந்த முடிவினை விமர்சித்திருந்தனர். அமிர்தலிங்கம் தனது முடிவிற்கான நியாயத்தை பின்வறுமாறு கூறியிருந்தார், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டுவரும் கொடூரமான விசாரணைகளைப்பற்றிய உண்மைகளை வெளிக்கொணரவே குட்டிமணியின் பெயரை வெற்றிடமான பதவிக்கு சிபாரிசு செய்தோம். பொலீசாரின் சித்திரவதைகள் ஊடாகவும், அழுத்தங்கள் ஊடாகவும் பெறப்படும் பொய்யான வாக்குமூலங்கள் தொடர்பாக மக்களிடையே விளிப்புணர்வினை ஏற்படுத்துவதும் இதன் இன்னொரு நோக்கமாகும்" என்றும் அவர் கூறியிருந்தார். தனது பெயரை முன்னணியின் உறுப்பினராக பிரஸ்த்தாபித்ததை ஏற்றுக்கொண்ட குட்டிமணியும், மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் பதிந்த வழக்கில், நீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட்டு, தன்னை விடுதலையாக்கி, பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், அரசாங்கத்தின் பிரதான சட்டவாளர் குட்டிமணியின் இக்கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், குட்டிமணியின் வேண்டுகோளை நிறைவேற்றும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்குக் கிடையாது என்றும் வாதிட்டார். அவரது வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. நீலன் திருச்செல்வம் அரசியல் யாப்பின்படி தேர்தல் நடந்த அல்லது உறுப்பினர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவர் நியமிக்கப்படவேண்டும் என்கிற சரத்து இருந்தும், குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுப்பதை நீதிமன்றம் தடுத்துவிட்டது. அந்த மூன்று மாதக காலம் முடிவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பதாக, 1983 ஆம் ஆண்டு, தை மாதம் 24 ஆம் திகதி குட்டிமணி தனது பதவியை இராஜினாமாச் செய்தார். பின்னர் இவ்வெற்றிடத்திற்கு சட்டத்தரணி நீலன் திருச்செல்வத்தின் பெயரை முன்னணி சிபாரிசு செய்தது. நீலன் பங்குனி 8 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
  22. ஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.
  23. சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி
  24. சிந்திடு வெண் தண்மதியம் பட்டம் தாங்க செம்பருதி திருக்கரத்தில் குடையும் ஏந்த இந்திரனும் மெய்ம்மறந்து சவரி வீச ஈடில்லா துண்புருவும் சுருதி புட்ட செந்தமிழ்த்தாய் சரஸ்வதியும் வீணை மீட்ட
  25. ஜனாதிபதித் தேர்தல் - 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நாள் புரட்டாதி 17 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டது. 6 வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயார் ஜெயவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவ, நவ சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் மற்றும் ஜனதா விமுர்திப் பெரமுனவின் ரோகண விஜேவீர ஆகியோரே அந்த அறுவரும் ஆகும். தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது குமார் பொன்னம்பலம்மும் ஆயுத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அமிர்தலிங்கத்திற்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் குறித்த விபரங்களை குமார் பொன்னம்பலம் வெளிக்கொணர்ந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் ஆயுத அமைப்பு இரு விடயங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. முதலாவதாக, 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையான தனிநாட்டினை மீள உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை முன்னணியினர் பாவித்திருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்யாது விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. இரண்டாவதாக, இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம், தனிநாட்டிற்கான ஆதரவை வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், முன்னணி அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விமர்சனங்கள் அமிர்தலிங்கத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே, தனது இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு தமிழர்கள் அனைவரும் இத்தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் திடீரென்று கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதற்கு அவர் முன்வைத்த காரணம் மிகவும் பலவீனமானது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினைத் தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாததால், அந்த அரசியலமைப்பின்படி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வக்களிக்கக் கூடாதென்பதே அவர் முன்வைத்த காரணம். குமார் பொன்னம்பலம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமிர்தலிங்கம் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை குமார் பொன்னம்பலம் முன்வைத்தார். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணைக்கெதிராக அமிர்தலிங்கம் செயற்படுவதாக குமார் கூறினார். "அவர் என்னை மட்டும் தோற்கடிக்க முயலவில்லை, தமிழர்களின் கோரிக்கையான தனிநாட்டையும் தோற்கடிக்க முயல்கிறார்" என்று குமார் பிரச்சாரம் செய்தார். வானொலி பேச்சொன்றில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமது ஒற்றுமையையும், பலத்தையும், தமது அபிலாசைகளையும் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்ட வேண்டும் என்று குமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையினை விபரித்து புரட்டாதி 2 ஆம் திகது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சட்டர்டே ரிவியூ, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் முன்னர் அணியப்பட்ட தமிழ்த் தேசிய போர்வையினைக் களவாடி இன்று அணிந்திருக்கும் குமார் பொன்னம்பலம், முடிக்குரிய இளவரசனைப் போன்று தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் முன் தெரிகிறார், அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புவது போலத் தெரிகிறது" என்று கூறியிருந்தது. மேலும், காலம் காலமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களித்து வந்த கிராமப்புறத் விவசாயிகளான தமிழர்கள், தமது விவசாயப் பொருட்களான மிளகாய், வெங்காயம் ஆகியவற்றிற்கு நல்ல சந்தவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதால், சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து நிற்கிறார்கள் போலத் தெரிவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு ஹெக்டர் கொப்பேக்கடுவ பிரச்சாரம் செய்யச் சென்றவேளைகளில் அவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டதுடன், நல்ல வரவேற்பினையும் வழங்கினர். யாழ்க்குடாநாட்டில் 14 கூட்டங்களில் கலந்துகொண்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ, யாழ்ப்பாணத்து விவசாயிகளின் உற்பத்திப் பொருடகளுக்கான சந்தை எப்போது பாதுகாக்கப்படும் என்றும், தமிழர்களுக்கெதிராக ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தான் பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்துவிடுவதாகவும் உறுதியளித்தார். யாழ்க்குடா நாட்டிற்கு ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெயாரை மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வரவேற்றனர். ஜெயாருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் ஈழ விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் யாழ்நகரின் சுவர்களின் ஜெயாருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, "யாழ்ப்பாணத் தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுக்குப் பிடிக்காது" என்று ஒரு வாசகம் கூறியது. சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டுப்போய் இருக்கும் சிக்கலில் இருந்து அவர்களை மீட்க முயன்றார். "நீங்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு விரும்பியவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது உங்களின் பிரச்சினை. ஆனால், தவறாமல் வாக்களியுங்கள், ஏனென்றால் அது மக்களின் இறையாண்மை ஆகும்" என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். பட்டிருப்பில் மக்கள் முன் பேசிய ஜெயார், "தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் எனக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும், அமைத்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 1982 தேர்தல் வன்முறைகள், சட்ட மீறல்கள், கம்மியூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை அச்சகமும், சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அச்சிட்ட அச்சகங்களும் அரசால் மூடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நடந்தபோதும் ஐப்பசி 20 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜெயவர்த்தன மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டார். சுமார் 81 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் 65 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது, 1. ஜே ஆர் ஜெயவர்த்தன - ஐ.தே.க 3,450,811 வாக்குகள் , 52.91 % 2. எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ - சிறிலங்கா சு.க - 2,548,438 வாக்குகள், 39.07 % 3. ரோகண விஜேவீர - மக்கள் விடுதலை முன்னணி 273,934 வாக்குகள், 4.19 % 4. குமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 வாக்குகள், 2.67 % 5. கொல்வின் ஆர் டி சில்வா - லங்கா சம சமாஜக் கட்சி 57,532 வாக்குகள், 0.88 % 6. வாசுதேவ நாணயக்கார - நவ சம சமாஜக் கட்சி 17,005 வாக்குகள், 0.26 % 902,373 அதிகப்படியான வாக்குகளினால் ஜெயவர்த்தன வெற்றிபெற்றார். ஹெக்டர் கொப்பேக்கடுவவைத் தவிர மற்றைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 சிங்கள மாவட்டங்களிலும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையிலும் ஜெயார் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் கிடைத்த அதேநேரம் ஹெக்டர் கொப்பேக்கடுவவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் 77,300 வாக்குகளை அளித்திருந்தனர். ஜெயாருக்கும் 44,780 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 533,478 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 228,613 வாக்காளர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்கொள்ளும் அபாயத்தை இத்தேர்தல் அமிர்தலிங்கத்திற்கு உணர்த்தியிருந்தது. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் நின்ற குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த ஆதரவினால் உந்தப்பட்ட ஆயுத அமைப்புக்களான புளொட்டும், ஈரோஸும் 1983 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் இணைந்து, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதென்று தீர்மானித்தன. இந்த முடிவும் தனக்கும், கட்சிக்கும் சவாலாக உருவாகிவருவதாக அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஆனாலும், ஜெயாரின் அழுங்குப் பிடியிலிருந்து அமிர்தலிங்கத்தினால் வெளிவர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த தகுதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தனக்குக் கிடைத்த சுகபோகங்களுக்காகவோ அவர் இப்படி உணரவில்லை, மாறாக, ஜெயாரின் பிடியிலிருந்து விலகிவந்தால் வேறு ஆபத்துக்கள் வரலாம் என்று அவர் அஞ்சினார். ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைப்பதாலும், அசெளகரியப்படுத்துவதாலும் தான் எதிர்நோக்கவேண்டி வரும் அபாயம் குறித்து அவர் நன்கு அறிந்தே இருந்தார். "அவர் மிகவும் ஆபத்தான மனிதர். அவருடன் நாம் மிகவும் அவதானத்துடனேயே தொடர்பாட வேண்டும்" என்று என்னிடம் பலமுறை அமிர் கூறியிருக்கிறார். ஜெயவர்த்தன மீது தனக்கிருந்த அச்சம் குறித்து அமிர்தலிங்கம் 1982 ஆம் ஆண்டு ஆனியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வைகுந்தவாசனிடமும், ஆதேவருடம் ஆடி மாதம் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற உலகத் தமிழ் ஈழம் மாநாட்டிலுல் கூறியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்த முயன்றால், வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஜெயவர்த்தன மொத்தமாகத் தண்டித்துவிடுவார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் தீர்மானங்கள் இரண்டை நிறைவேற்றியிருந்தது, 1. 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளான தை மாதம் , 14 ஆம் திகதி, ஒருதலைப்பட்சமாக தமிழீழப் பிரகடணத்தை நிறைவேற்றுவது. 2. அதே நாள் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது. நியோர்க் நகரில் இடம்பெற்ற தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டபோதும் இதேவகையான அச்சத்தினை அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்தார். சுமார் 200 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், அவர்களின் நலன்களுக்கும் தானே பொறுப்பு என்று அமிர் கூறினார். "மக்கள் எவருமற்ற நிலையில் கிடைக்கப்பெறும் விடுதலையினை யார் அனுபவிக்கப் போகிறார்கள்? வங்கதேசத்தின் சுதந்திரத்தை நாம் முன்மாதிரியாகப் பின்பற்றி போராட வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். அந்தப் போரில் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவானது என்பது இவர்களுக்குத் தெரியாது" என்று அவர் வாதிட்டார். இந்த மாநாட்டினை ஒழுங்குசெய்த வைகுந்தவாசன் அமிரைப் பார்த்து, "ஜெயாரின் முகத்துக்கு நேரே பார்த்து, நரகத்திற்குப் போ என்று கூறுங்கள்" என்று கத்தினார். அதற்குப் பதிலளித்த அமிர், "நான் அப்படிச் செய்தால், நரகத்திற்குப் போவது ஜெயார் அல்ல, தமிழ் மக்களே" என்று கூறினார்.
  26. ஆடி அசையுது சித்திர தேரு அதில் ஆலமுண்ட ஈசனுடன் அம்மையப்பாரு கூடி மக்கள் இழுத்திடவே குலம் காத்திடும்.....
  27. யாழ்ப்பாணத்தில் தேர்தலில் பங்கேற்பதென்று தீர்மானித்த ஐ.தே.க ரணசிங்க பிரேமதாசா தனது செயற்பாடுகளை நுணுக்கமாகவும், சூட்சுமத்துடனும், சமயோசிதத்துடனும் ஜெயவர்த்தன எப்போதும் திட்டமிட்டு வந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அவரது திட்டமும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும், தமிழர்களையும் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதன் மூலம் சிங்களவர்கள் மத்தியிலும், சர்வதேசத்திலும் தனது அதிகாரத்தினை நிலைப்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆகவே, அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும், தமிழர்களையும் பலவீனப்படுத்தும் தனது நோக்கத்தை அவர் இரு முனைகளில் செயற்படுத்தினார். முதலாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தனது சதி வலைக்குள் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை விழ வைப்பதன் மூலம், ஏற்கனவே அவர்களுக்கும் அரசுக்கெதிரான இராணுவப் புரட்சியில் இறங்கியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வந்த பிளவினை இன்னும் பெரிதாக்குவது. அவர் எதிர்பார்த்ததுபோலவே அதுவும் நடந்தது. இரண்டாவது, வடகிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வென்றுவிட்டால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பேரம் பேசும் பலத்தைச் சிதைப்பதுடன், தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்கிருக்கும் ஆதரவினையும் குலைப்பது. இதன்மூலம், தமிழர்கள் உட்பட இலங்கை நாடெங்கிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று காட்டுவது. ஆகவே, இதனை சாத்தியப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூடிக் கலந்தாலோசித்து, சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதிபூண்டார்கள். அதன்படி வடக்கிற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து தமக்குச் சாதகமான சூழ்நிலையினை அங்கு உருவாக்குவதே அவர்கள்து திட்டம். இதன் பிரகாரம் பிரதமரான ரணசிங்க பிரேமதாசா முதலாவதாக யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார். யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த 4 நாட்களிலும் செய்தியாளன் என்கிற வகையில் நானும் அவருடன் கூடப் பயணித்தேன். அவருக்குக் கூட்டப்பட்ட கூட்டங்கள் எல்லாவற்றிலும் மக்கள் அதிகளவில் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பிரேமதாசவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் அளித்த வரவேற்பினைப்பார்த்து உற்சாகமடைந்த ஜெயார் லலித் அத்துலத் முதலி, காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ ஆகிய அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த அமைச்சர்களின் பயணங்களையும் நான் பதிவுசெய்திருந்தேன். இதே காலப்பகுதியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே தேர்தல்களினூடாக உறவுப்பாலமொன்றினை அமைப்பதுபற்றி ஜெயார் பேச ஆரம்பித்திருந்தார். வேட்பாளர்களைப் பதிவுசெய்யும் நாளுக்கு அண்மையாக யாழ்ப்பாணத்தில் நிலவும் சூநிலையினை அறிந்துவர சில அதிகாரிகளை ஜெயார் அனுப்பிவைத்தார். இந்த அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் பயணில்லை என்று அவரிடம் கூறினர். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்த அனேகமானோர் சுயநலவாதிகளாக இருந்ததுடன், அவர்களுக்கு மக்கள் மத்தியில் கடுகளவும் செல்வாக்கில்லை என்பதை அவர்கள் ஜெயாரிடன் கூறியிருந்தார். இதேவகையான கருத்தையே தொண்டைமானும் ஜெயரட்ணம் வில்சனும் ஜெயாரிடம் தெரிவித்தனர். ஆனால், இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அவசரகாலச் சட்ட விதிகளைப் பாவித்து யாழ்ப்பாணத்தில் தேர்தலை ஜெயார் நடத்தியதுடன் தனது கட்சியையும் அதில் போட்டியிட வைத்தார். இது மிகத் தவறான கணிப்பீடு என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல சவால்களை எதிர்கொண்டது. பல சிரமங்களுக்கு மத்தியிலேயே தனது வேட்பாளர் பட்டியலை அதனால் பூர்த்தி செய்ய முடிந்தது. 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்திருந்த ஏ.தியாகராஜாவே ஐ.தே.க வின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்தார். அக்காலத்தில், காரைநகர் இந்துக் கல்லூரியின் புகழ்மிக்க அதிபராகத் திகழ்ந்தவர் தியாகராஜா. காரைநகர் வணிகர் சமூகத்திலும் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால், 1970 ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் பலரையும் ஏமாற்றியிருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினூடாகப் பாராளுமன்றம் சென்ற தியாகராஜா, பாராளுமன்றத்தில் கட்சி மாறி, சிறிமாவின் கட்சியில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களால் "அடிமைச் சாசனம்" என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட சிறிமாவின் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பிற்கும் தனது ஆதரவினை வழங்கினார். ஏ.தியாகராஜா பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக புளொட் எனும் அமைப்பை உருவாக்கியிருந்த உமா மகேஸ்வரன், ஐ.தே. க சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக தேர்தலிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையினை தியாகராஜா முற்றாகப் புறக்கணித்திருந்தார். வைகாசி 24 ஆம் திகதி, தனது ஜீப் வண்டியில் தியாகராஜா ஏற முற்படும்போது அவர் அருகில் சைக்கிளில் வந்த இரு புளொட் உறுப்பினர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தியாகராஜ உயிரிழந்தார். பின்னர், ஐ.தே.க வின் யாழ் ஒருங்கிணைப்பாளரான நடராஜாவும் புளொட் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.