பத்து
ஓட்டோவில் போகும்போதே ஒரு பெரிய குளம் தெரிகிறது. அதன் பெயர் ஓட்டோக்காரருக்கே தெரியவில்லை என்கிறார். பெரிதாக சன நடமாட்டமே இல்லாத பகுதியாக இருக்கிறது. அக்கராயன் குளமாக இருக்கலாம் என்கிறார் இவர். நீர் நிறைந்துபோய் காணப்படுகிறது. அதில் இறங்கிக் காலை நனைத்துவிட்டு மேலேவந்து மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம். இரணைமடுக் குளத்தையும் பார்க்கப் போவோம் என்று கணவர் கூற அங்கே பெரிதாகத்தண்ணீர் இப்ப இல்லை என்கிறார் ஒட்டுனர். பரவாயில்லை போவோம் என்கிறார். போகும் வழிகளில் எல்லாம் காய்ந்துபோய் நிலம் வரண்டுபோய் இருக்கு. வெப்பமும் அதிகமாக இருக்கு. கிட்டப் போக ஏமாற்றமாகவே இருக்கு. அந்த வெயிலில் இறங்கிக் குடை பிடித்துக்கொண்டு ஏற காவலுக்கு இருப்பவர் இப்ப போக ஏலாது என்கிறார். நாம் போக முடியாதவாறு கயிறு கட்டப்பட்டிருக்கு. எரிச்சலுடன் 2003 வந்தபோது வான் கதவுகள் இருக்கும் இடம்வரை சென்றோமே என்கிறேன். இப்ப போக விடுவதில்லை என்கிறார் மீண்டும். மழை பெய்து வான்பாயும்போது தான் திறந்து விடுவார்கள் பார்க்க என்கிறார். எங்கு பார்த்தாலும் வெயிலின் உக்கிரம்.
ஒரு ஐந்து ஏக்கர் காணி வாங்கி ஒரு நல்ல பண்ணையை உருவாக்கிக் காட்டவேண்டும் என்கிறேன். இந்த வெயிலைத் தாங்க ஏலாமல் துடிக்கிறாய். அதில திரும்பவும் பண்ணைக் கதையோ என்று சிரிக்கிறார் மனிசன். அம்மா நீங்க ள் இந்த வெயிலுக்குள்ள இருக்க மாட்டியள் என்று மகள் வேறு சிரிக்கிறாள். ஐந்து சதம் காசும் உனக்குத் தரமாட்டேன் என்கிறார். இப்ப எதுவும் கதைக்கக் கூடாது என்று வாயை மூடிக் கொள்கிறேன். ஓட்டோக்காரரிடம் கேட்க தான் ஒரு நல்ல உணவகத்தைக் காட்டுவதாகக் கூறி கொண்டுசென்று விடுகிறார். மரங்கள் நிறைந்திருக்க ஓலையால் வேய்ந்த ஒரு இடமும் வீடுமாய் பார்க்க வெயிலுக்கு இதமாய் இருக்க நன்றி கூறி அவருக்கு எவ்வளவு ஓட்டோவுக்கு என்கிறோம். பிரபா தான் தருவதாகக் கூறினார் என்கிறார். இல்லை நான் பிரபாவிடம் சொல்கிறேன் என்று அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர வாருங்கள் என்று சிரிதபடியே இருவர் நிற்கின்றனர். நாம் சென்று ஓரிடத்தில் அமர்கிறோம்.
இளையவர்கள் சேர்ந்து அந்த உணவகத்தை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார் ஓட்டோக்காரர். சிறிது நேரத்தில் மெனு காட்டைக் கொண்டு வருகிறார் ஒரு 20, 22 மதிக்கத்தக்க பொடியன். மகள் துருவித் துருவி உணவுகள் பற்றிக் கேட்டுவிட நாம் ஓடர் செய்கிறோம். முதலில் பிரெஸ் யூஸ் கொண்டுவரும்படி கூற ஒரு பத்து நிமிடத்தில் அழகிய கண்ணாடிக் குவளைகளில் யூஸ் வருகிறது.சிறிது நேரத்தில் வெறும் தட்டுகளைத் நீருடன் கொண்டுவந்து வைக்க தம்பி ரிசு கொண்டுவாங்கோ என்கிறேன். அம்மா பெடியனை ஏன் பயப்படுத்துகிறீர்கள் என்று சிரிக்கிறாள் மகள். பெடி ரிசு கொண்டுவந்து நீட்ட வாங்கியபடி “தட்டுகளைக் கொண்டுவந்து வைக்கும்போது துடைத்துவிட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்” என்று சிரித்தபடி கூற ஓம் என்று தலையாட்டிவிட்டு போகிறார். சீ பூட் பிரைட் ரைஸ், மீன் குழம்பு, இறால்ப் பொரியல், மட்டன் புரியாணி என்று எடுத்து கலந்து உண்கிறோம். மிகச் சுவையாகவே இருக்கிறது. வயிறும் மனதும் நிறைந்துபோய் இருக்கிறது. 4400 பில் வர ஐயாயிரம் ரூபாய்களை வைத்துவிட்டு மிகுதியை டிப்சாக வைத்துவிட்டு வருகிறோம். ஆனால் எமக்கு உணவு பரிமாறிய பையனுக்குப் பதிலாக வேறொருவர் வந்து அதை எடுத்துப் போகிறார்.
தன்னுடன் வளர்ந்தவர்கள் தெரிந்தவர்கள் வீடுகள் இன்னும் இருக்கின்றன. அங்கு சென்றுவிட்டு நாளை செல்வோம் என்கிறார். நீங்கள் தனியாக வந்து உங்களுக்குத் தெரிந்தவர் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாங்கள் இந்த வெயிலில் வீடுவீடாக வர முடியாது என்று நானும் மகளும் மறுத்துவிட 3.30 ரெயினுக்கு யாழ்ப்பாணம் போகலாம் என முடிவெடுக்கிறோம்.
நாம் ரெயினை விட்டு இறங்கும்போதே மாலையில் எத்தனைக்கு றெயின் என்று பார்த்துவிட்டு வந்ததனால் அருகில் இருக்கும் தமிழ்க்கவி அக்கா வீட்டிற்குச் சென்றால் அங்கே அவரில்லை. மீண்டும் கோட்டலுக்குச் சென்று ஆடிப்பாடிப் பொதிகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தால் அந்தப் பெண் வரவேற்பறையில் இருக்கிறார். நாங்கள் போகிறோம் என்றதும் 6000 ரூபாய்கள் என்கிறார். நாங்கள் போன் செய்தபோது 5000 ரூபாய்கள் என்றுதானே சொன்னார் கதைத்தவர் என்றபடி அவருக்குப் போன் செய்ய, அவர் போனை அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படிகூறுகிறார். அந்தப் பெண்ணும் கதைத்துவிட்டு 5000 என்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து டிக்கட் எடுப்பதற்கு கவுன்டரில் போய் நின்றால் அவர் உள்ளே உண்டுகொண்டிருக்கிறார். எம்மை திரும்பிப் பார்க்கவுமில்லை. எதுவும் சொல்லவுமில்லை. நான் திரும்பி வந்து இருக்கையில் அமர்கிறேன். மீண்டும் ஒரு பதினைந்து நிமிடம் செல்ல சென்று பார்த்தால் அவரைக் காணவில்லை. இரண்டே முக்கால் ஆகிவிட மீண்டும் போனால் அவர் கண்டும் காணாததுபோல் இருக்க excuse me என்று சொல்லத் திரும்பிப் பார்க்கிறார்.
டிக்கட் எடுக்க வேண்டும் என்கிறேன். இன்னும் நேரம் இருக்கு என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்கிறார். கோபத்துடன் நான் திரும்ப வந்து டிக்கற்றைத் தந்தால் நாங்கள் நின்மதியாய் இருப்பமே என்றபடி அமர்கிறேன். பேமென்டில் இரண்டுமூன்று இளஞர்கள் கதிரையிலும் மேசையிலுமிருந்து சிங்களத்தில் கதைத்துச் சிரித்தபடி இருக்கின்றனர். அவர்கள் அங்கு வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும். தமிழ்ப் பகுதியில் தமிழர்கள் அல்லாதவர் வேலை செய்வது கொடுமையாக இருக்கிறது. நான் கணவரிடம் இதுபற்றிக் கதைத்துக்கொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்த ஒருவர் எங்கடை தமிழ்ப் பெடியள் இப்பிடியான வேலையளுக்கு வாறதை விரும்பிறதில்லை. அவங்கள்ளையும் பிழை சொல்ல ஏலாது என்றார். றெயின் வார 15 நிமிடம் இருக்க டிக்கட் வாங்க மீண்டும் போனால் றெயின் ஒன்றரை மணி நேரம் லேட். பரவாயில்லை டிக்கற்றைத் தாருங்கள் என்று கூறி வாங்கிக் கொண்டுவந்து அமர்கிறோம். அதன்பின்தான் அறிவிக்கிறார்கள் பிந்தி றெயின் வரும் என்பதை.
குறிப்பு
நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
இவர் இதுக்கு சரிவர மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம்.
முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும்.
ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும்.
3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும்.
பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை
இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி
பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி
இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே ....
நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், தாளையடி முகாம் மீதிருந்து வரக்கூடிய எதிரியின் தாக்குதல்களை எதிர்நோக்கியவாறு, குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் கடல்வழியாகப் பயணித்தனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.
சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்கு முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டியடித்து மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.
மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள்.
வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று, குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக் கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணிகள் ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்க வேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 இற்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது.
தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன.
முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு விநியோகப் படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர்.
அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் பிரிகேடியர் பால்ராச் அவர்கள் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத் தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் இரணைமடு குளத்தில் குளிக்கும் போது நீரில் முழ்கி சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு, தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில், தற்கொலைக்கு ஒப்பானதுதான்.
வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு விநியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை எதிரி அறிந்தபோது முதலில் திகைத்தாலும், ஆனால் அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதிரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான்.
புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த் தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே கடல்வழியான தொடர்ச்சியான விநியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக விநியோகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.
இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு விநியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன.
இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக் கொண்டனர் புலிகள். அதுவரை சரியான விநியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
அணிகள் சீராக்கப்பட்டு (மீளொழுங்கு படுத்தப்பட்டு), தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினான். கவசவாகனங்கள், ஆட்லெறிகள், கனரகப் படைக்கலங்கள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.
கவசப்படைக்குரிய பல கவசவாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச் சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவாகனங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒரு தென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத் தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு (34) நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராச்சின் தலைமையிலான புலியணியினர்.
(வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமுனைத் தரையிரக்கத்தில் நீருக்குள்ளால் 120 மி.மீ. கனரகப் பீரங்கியை இழுத்துச்சென்றனர் பெண்புலிகள்)
தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டபோது, அது தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிக இலகுவாக, மிகக் குறைந்த இழப்புடன் ஆனையிறவுப் பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது.
ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி, அனைவரும் தங்கள் தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப் பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.
சிங்களப்படை அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய கனவிலும் முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால், புலிகள் மிக வெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக எதிரியின் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு, இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்டிலெறிகள்
பளை ஆட்டிலெறித் தளத்தைத் தகர்ப்பதற்கு 26.03.2000 அன்று இரவு விடுதலைப் புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது, ஆனையிறவுத் தளம் எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்டிலெறித் தளத்தை அழிப்பதுதான்.
பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்டிலெறித் தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்த நேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொரு பேர் இருந்தார்கள்.
குறிப்பிட்ட ஆட்டிலெறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் அந்த அணியை வழிநடத்திய வர்மனும் ஏற்கனவே வேவுபார்க்கச் சென்றவர்களுள் ஒருவனாவான். எனவே, அந்த அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த அவனால் முடிந்தது.
ஆட்டிலெறித் தளத்தின் சுற்றுக் காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழைய வேண்டியதுதான். இந்த நிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான்.
தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாயினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்தாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத் தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்டிலெறித் தளத்தைப் பாதுகாத்து நின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறு நிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். ஆட்டிலெறித் தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.
ஆட்டிலெறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்டிலெறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும், போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக் கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து, பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்டிலெறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்டிலெறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்டிலெறிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது.
அவ் ஆட்டிலெறிகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதன்மூலம், தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.
பளை ஆட்டிலெறித் தள அழிப்பு, ஆனையிறவு மீட்புப் போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு, உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கத்துக்கானது
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள்.
குடாரப்புத் தரையிறக்க மோதல்
குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
கண்டி வீதியில் நிலை கொள்ளல்
குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக் கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பளை ஆட்டிலெறித் தள உள்நுழைவு
கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்டிலெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி அணியினர் அங்கு அமைத்திருந்த 11 ஆட்டிலெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.
தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு
வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
பால்ராச் உயிருடன் பிடிபட்ட செய்தி
இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
உடுத்துறை வழியான தரைவழி விநியோகம்
வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத் தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். இத்தாவிலில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க எட்டிற்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கை இராணுவத்தினரால் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்ட புலிகள் அணியினரை முறியடிக்க முடியாத நிலைக்கு இலங்கைப் படையினர் தள்ளப்பட்டனர். இதனால், ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை
இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.
-இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவால் தொகுக்கப்பட்ட பதிவு ஆகும்
பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னையில் கைதுசெய்யப்பட்டதையடுத்து பிரச்சினை முடிந்துவிட்டதாக எண்ணிக் குதூகலித்த சிங்கள தேசம்
தேசிய பாதுகாப்புச் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடவேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ், தினமின மற்றும் தினகரன் ஆகிய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் பிரபாகரனும், உமாவும் கைதுசெய்யப்பட்ட செய்தியை மிகவும் பரபரப்பான முறையில் தலையங்கம் இட்டு வெளிப்படுத்தின. மேலும், பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலீஸ் அதிகாரி, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இக்கைதுகள் இரண்டும் மிகவும் முக்கியமானவை, அண்மைய வருடங்களில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு இது" என்று கூறியதாக டெயிலி நியூஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது.
போராளித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தியினை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் டெயிலி நியூஸ் பத்திரிக்கைக் காரியாலயத்திற்கு தொலைபேசி மூலம் அறியத் தந்தபோது நான் அங்கிருந்தேன். செய்திப்பிரிவில் இருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பின்னர் இந்த மகிழ்ச்சி ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஒட்டுமொத்த லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் பற்றிக்கொண்டது. நிறுவனத்தின் ஏனைய பகுதிகளில் வேலைசெய்வோர் இச்செய்திபற்றி மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு செய்திச் சேவைக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தனர். நிறுவனத்தின் வாகன ஓட்டுநர்களின் ஒருவரான ஆரியரட்ண பெருமுச்சுடன், "எல்லாப் பிரச்சினையும் முடிந்தது" என்று கூறினார்.
இக்கைதுபற்றிய செய்திகளைத் தொடர்ச்சியாகப் பிரசுரிக்குமாறு டெயிலி நியூஸ் கேட்கப்பட்டதுடன், கைதுசெய்யப்பட்ட மூன்று போராளிகளையும் நாடுகடத்துவதன் விபரங்களைத் தொடர்ச்சியாக மக்களுக்கு விளங்கப்படுத்துமாறும் கோரப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்குத் தேவையான தலையங்கத்தை பாதுகாப்பு அமைச்சே தந்தது. "பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது குற்றங்களுக்காக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தேடப்படும் குற்றவாளிகள்" என்பதே அந்தத் தலைப்பு. பிரபாகரன் 18 கொலைகளுக்காகவும், இரண்டு வங்கிக் கொள்ளைகளுக்காகவும் தேடப்பட்டு வந்த அதேவேளை உமா மகேஸ்வரன் 9 கொலைகளுக்காகவும் ஒரு வங்கிக்கொள்ளகைக்காகவும் இலங்கையில் தேடப்பட்டு வந்தார். இரு போராளித் தலைவர்களையும் கைதுசெய்தமைக்காக தமிழ்நாடு பொலீஸாருக்கு பத்து லட்சம் சன்மாணமாக வழங்கப்படுவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கை அரசால் தமிழ்நாட்டு பொலீஸாருக்கு சன்மானம் வழங்கப்படுவதாக வந்த அறிவிப்பினையடுத்து மூன்று இந்திய ஊடகங்கள் அதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இது தொடர்பாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தமிழ்நாட்டு பொலீஸ் மா திபரான கே.மோகந்தாஸை தன்னை வந்து பார்க்கும்படி கட்டளையிட்ட எம்.ஜி.ஆர், பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பொலீஸார் கண்ணியமாக நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பணித்தார். "பைய்யங்க விஷயத்துல கொஞ்சம் பாத்துப் போப்பா" என்று மோகந்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறினார். அதற்குப் பதிலளித்த மோகந்தாஸ், தாம் இலங்கையரசு தருவதாக அறிவித்த சன்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். "நாங்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே கவலை கொள்கிறோம். சென்னையும் இன்னொரு சிக்காக்கோவைப்போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் செயற்படுகிறோம்" என்றும் அவர் எம்.ஜி. ஆர் ஐப் பார்த்துக் கூறினார்.
டெயிலி நியூஸ் பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இந்தியா உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்கிற தொனியில் அரசியல்த் தலையங்கங்களைத் தீட்டி செய்தி வெளியிட்டு வந்தது. இந்தியா எனும் பெரியண்ணன், எப்படி சிறிலங்கா எனும் சிறிய அயல்நாடு தொடர்பாக செயற்பட வேண்டும் என்று உபதேசம் செய்யும் வகையில் இச்செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. 1973 ஆம் ஆண்டு கடத்தலுக்காகக் கைதுசெய்யப்பட்ட குட்டிமணியை அப்போது முதலமைச்சராக இருந்த கருநாநிதி எப்படி இலங்கைக்கு நாடுகடத்தில் இலங்கையரசிற்கு உதவியிருந்தாரோ அதே போன்று எம்.ஜி.ஆர் உம் செயற்படவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தது டெயிலி நியூஸ். 1973 ஆம் ஆண்டு கருநாநிதியின் ஒப்புதலுடன் நாடுகடத்தப்பட்ட குட்டிமணியை இலங்கையிலிருந்து சென்ற பொலீஸார் கையில் விலங்கிட்டு இலங்கைக்கு இழுத்து வந்திருந்தனர்.
ருத்ரா ராஜசிங்கம்
இலங்கை அரசாங்கம் ருத்ரா ராஜசிங்கம் தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கும் இந்தியத் தலைநகர் தில்லிக்கும் அனுப்பி பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியிருந்தது. அவர் சென்னையில் தங்கி மோகந்தாஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு போராளித் தலைவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ருத்ரா ராஜசிங்கத்தின் கோரிக்கைக்கு மோகந்தாஸும் உடன்பட்டார். அதன்படி, கொழும்பிலிருந்து வந்திருந்த பொலீஸ் தூதுக்குழுவினரை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் அடைத்துவைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் மோகந்தாஸ். ருத்ரா கொழும்பு திரும்பி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சாதாரண கிரிமினல்களைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், இலங்கையின் பொலீஸ் மா அதிபர் அறிந்திராத அல்லது பார்க்கத் தவறிய ஒரு விடயம் தான் இரு போராளித் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பொலீஸாரால் கண்ணியமாகவும் கெளரவத்துடனும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது.
தலைவர் பிரபாகரன், அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி, மனைவி மதிவதனி மற்றும் மகன் சார்ள்ஸ் அன்டனி
பிரபாகரன் கைதுசெய்யப்பட்டு விட்டார் என்கிற செய்தி யாழ்ப்பாணத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனின் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணியும், தந்தை செல்வாவின் மகனுமான சந்திரகாசனை அமர்த்தினார் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. இதனையடுத்து உடனடியாக தமிழ்நாடு சென்ற சந்திரகாசன் அன்று ஆட்சியில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதியைச் சந்தித்தார். ஆனால், கருநாநிதி இந்திரா காங்கிரஸுடனான தேர்தல் கூட்டணியில் தொடர்ந்து நிலைத்திருந்தார். ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்த தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்திராகாந்திக்கு செய்தியொன்றினை அனுப்பினார் கருநாநிதி. போராளிகள் இலங்கையரசாங்கத்திடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என்பதே அந்தச் செய்தி. "அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள்" என்று இந்திரா காந்தியை அவர் எச்சரித்திருந்தார்.
சந்திரகாசன்
கிட்டு, பொன்னமான், புலேந்திரன் ஆகியோர் பிரபாகரனின் கைது குறித்து அறிந்துகொண்டதுடன் தாம் தங்கியிருந்த மதுரை முகாமிலிருந்து சென்னைக்கு விரைந்தார்கள். சென்னையில் அப்போது தங்கியிருந்த பண்டிதர் மற்றும் ஏனையோருடன் அவர்கள் இரகசிய கூட்டமொன்றினை நடத்தினார்கள். பிரபாகரன் பொலீஸாரால் விடுவிக்கப்படாது விட்டால், சென்னையில் மிகவும் உயரமான எல்.ஐ.சி கட்டிடத்தின் கூரையில் ஏறிக் குதித்துவிடப்போவதாக எச்சரிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
எல்.ஐ.சி கட்டிடம் - சென்னை
அங்கிருந்த போராளிகளில் வயதில் கூடியவரும், ஓரளவிற்கு உலக விடயங்களை அறிந்திருந்தவருமான பேபி சுப்பிரமணியம் அவர்களின் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த ஆத்திரத்துடன் அவர்களை நோக்கிக் கத்தினார். "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நான் எப்படியாவது வெளியில் எடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். தான் சிறுகச் சிறுக சேர்த்துவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களின் வலையமைப்பை இதற்குப் பாவிக்கலாம் என்று அவர் முடிவெடுத்தார். மிகவும் அடக்கமானவராகத் தெரியும் பேபி சுப்பிரமணியம் பொதுமக்கள் தொடர்பாடலில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் பல அரசியல்வாதிகள், கல்விமான்கள், தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், முன்னணி வணிகர்கள், பரோபகாரர்கள் என்று பலரையும் சந்தித்து இலங்கையில் தமிழர்களின் அவல நிலை பற்றியும், அவர்களது போராட்டம் பற்றியும் தெளிவுபடுத்தி வந்ததோடு, ஈழத்தமிழரின் போராட்டத்தின்பால் கரிசணையினை ஏற்படுத்தியிருந்தார். இவர்களுள் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழ நெடுமாறன் அவர்கள். மெலிந்த, உயரமான நெடுமாறன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு, அக்கட்சி இரண்டாக உடைந்தபோது இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டவர். பின்னர், காமராஜர் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கியவர். ஆகவே, நெடுமாறனைச் சந்தித்த பேபி சுப்பிரமணியம், பிரபாகரனை விடுதலை செய்ய அவர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அருமையான பயணக் கட்டுரை சுமே. ஊர் போய்ப் பார்த்து வந்த மாதிரியே இருக்குது. நான் இலங்கை போனால் அங்க இங்க போவதற்கு பொதுப் போக்குவரத்துத் தான் பயன்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர் போல அல்லாமல் மக்கள் ஜோதியோடு இரண்டறக் கலந்து விடுவது இலங்கையில் நல்லது! ஆனால் குடும்பமாகப் போனால் அது சாத்தியமில்லை என்பது உண்மை.
சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..
உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை எண்டது பழசு. இப்ப ஒரு மைல்.
எனது உறவினர் நல்லூரில காணி வீடு. இவர் வெளில வர, தகப்பன் சாக, மர வேலை செய்ய வார ஒருவரை வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டு முன்புறம் இருந்த பூட்டக்கிடந்த கடையினுள் அவர் குடியேறி, கலியாணமும் செய்து பல வருடங்களின் பின் பொம்பிளைப்பிள்ளை ஒன்றைப் பெத்துப் போட்டார். இவர் வீட்ட திருத்துவம் எண்டு போக, அவர் அங்க பிறந்த மகளுக்கு ஒரு பரப்பு தரட்டுமாம்.
சொந்தமும் இல்லை, கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.
மயிரை கட்டி, மலையை இழுத்தால், வந்தா மலை, வராட்டி மயிர் தான் இழப்பு என்ற ரீதியில் கேட்கிறார்கள்.
இப்படி கோரிக்கைகள் வரும் என பதிலை தயாராக்கிக் கொண்டு போங்கோ என்கிறார்.
பிரபாகரனைச் சந்தித்த இந்திய உளவுத்துறை, ரோ
பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டை
தன் கையில் கிடைக்கப்பெற்றிருந்த அபரிதமான அதிகார பலத்தினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று ஜெயார் கங்கணம் கட்டியிருந்தார். ஆனால், இதைச் செய்த்வதற்கு அவர் பாவித்த கருவிகளான அரச பயங்கரவாதமும், மிதவாதிகளை ஓரங்கட்டும் செயற்பாடுகளும் அவரது நோக்கத்தை அடைவதில் தடைகளாக மாறியிருந்தன. பொலீஸாரும் ராணுவத்தினரும் தமிழர்மேல் மேற்கொண்டு வந்த அட்டூழியங்கள் அவர்களை அச்சப்படுத்துவதற்குப் பதிலாக தமிழர்களிடையே தைரியத்தையும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மனோவலிமையினையும் ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் செயற்பாடுகள் தமிழர்களை போராளி அமைப்புக்களை நோக்கித் தள்ளத் தொடங்கின. ஆரம்பத்தில் சிறிய உதவிகளைத் தமது போராளி அமைப்புக்களுக்குச் செய்வதில் ஆரம்பித்து, ஈற்றில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதுகாவலர்கள் எனும் நிலைக்கு தமிழ் மக்கள் உயர்ந்தனர்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டத்தின்படி வழங்கவேண்டிய அதிகாரங்களையும், நிதியையும் வழங்க மறுத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்த ஜெயவர்தன எடுத்த முடிவும் தமிழ் மக்கள் போராளிகளை நோக்கிச் செல்வதை மேலும் ஊக்குவித்திருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் செயற்பாடுகளினூடாக தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, அச்சபைகளின் செயற்பாட்டுத் தோல்வி பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததுடன், மக்களின் முன்னால் அவர்களின் நம்பகத்தன்மையினையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தது. அரசியலில் தமிழ் மக்கள் சார்பாக தாம் சாதித்தது எதுவுமே இல்லை எனும் கையறு நிலைக்கு முன்னணியை இச்சபைகளின் தோல்வி தள்ளிவிட்டிருந்தது.
பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அழுத்தங்கள் புளொட் அமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது உண்மையே. அவ்வமைப்பின் மரியநாயகம், கணேசலிங்கம், ரொபேர்ட், ஞானசேகரம், அரங்கநாயகம், அரபாத் ஆகிய உறுப்பினர்கள் பொலீஸாரினால் அந்நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அன்று, புளொட் அமைப்பினைக் காட்டிலும் சிறிய அமைப்பாக விளங்கிய புலிகள், பெரும்பாலும் தமது போராளிகளைத் தக்கவைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தலைவருடன், யோகரத்திணம் யோகி மற்றும் பின்னாட்களில் இந்திய உளவாளியாக மாறிய மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமி
தமிழ் மக்களின் கலாசாரப் பொக்கிஷமான யாழ் நூலகம் சிங்கள அரசால் எரிக்கப்பட்ட துயர நிகழ்வை, கலாசாரப் படுகொலையை கண்ணுற்று, மிகுந்த வேதனையும், கூடவே வன்மமும் கொண்டு அங்கிருந்து இன்னும் 10 தோழர்களுடன் 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி தமிழ்நாடு நோக்கிப் பயணமானார் பிரபாகரன். தான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் யாழ்க்குடா நாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமியை பிரபாகரன் அமர்த்திவிட்டுச் சென்றிருந்தார்.
தனது வவுனியா முகாமில் தங்கியிருந்த உமா மகேஸ்வரன், கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் 20 தங்க நகைகள் கொண்ட பைகளையும் எடுத்துக்கொண்டு, இன்னும் நான்கு தோழர்களுடன் 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் தங்கிக்கொண்ட அவர் தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களூடாக தனக்கான வலையமைப்பொன்றினையும் ஏற்படுத்திக்கொண்டார்.
தனது நெருங்கிய சகாக்களில் பலர் தன்னை விட்டுப் பிரிந்து உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இணைந்துகொண்டதால், பிரபாகரன் அன்று டெலோ அமைப்பினரோடு சேர்ந்தே இயங்கிவந்தார். 16 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன், தனது வாழ்க்கையை முழுமையாகவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு அனீதா பிரதாப்புடனுனான அவரது செவ்வியில் தன்னை விட்டு விலகிச் செல்ல பலர் எடுத்த முடிவினை "துரோகம்" என்று அவர் வர்ணித்திருந்தார்.
கேள்வி : உங்கள் வாழ்க்கையில், உங்களை அதிகம் ஏமாற்றியிருந்த விடயம் எது?
பிரபாகரன் : "அப்படியொரு தனியான விடயத்தை என்னால் துல்லியமாகக் கூறமுடியாது. ஆனால், மிகுந்த ஏமாற்றமளித்த விடயங்களில் ஒன்று, நான் நம்பியிருந்த, எனது இலட்சியத்தின்பால் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட, எனது நெருங்கிய தோழர்களில் சிலர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது. ஆனால், அவர்கள் ஈற்றில் சுயநலம் மிக்க சந்தர்ப்பவாதிகள் என்று தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்கள்".
மதுரைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். சென்னையின் மேற்குப்புறப் பகுதியான வளசரவாக்கத்தில் வீடொன்றினை வாடகைக்கு ஒழுங்குசெய்யுமாறு கிட்டுவையும் பொன்னம்மானையும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டிலேயே அவர்கள் தங்கிக்கொண்டனர். அடேலும் பாலசிங்கமும் இதே பகுதியில்த்தான் தாம் இரண்டாவது முறை தமிழ்நாட்டிற்கு 1981 ஆம் ஆண்டு வந்தபோது தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. "விடுதலை வேட்கை" எனும் தனது நூலில் எழுதும் அடேல் பாலசிங்கம், கிட்டுவின் இளமைத்தனமான குறும்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். "ஒருமுறை கிட்டு பிராமணரைப் போன்று வெண்ணிற மேலாடையும் கூடவே பூணுலும் அணிந்துகொண்டார். அதே ஆடையுடன் அசைவ உணவகம் ஒன்றிற்குச் சென்ற கிட்டு, அங்கே ஆட்டுக்கறியையும், பொறித்த கோழியையும் பலரும் பார்த்திருக்க ருசித்து உண்டார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த உணவக ஊழியர்களினதும், உரிமையாளரினதும் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தன" என்று எழுதுகிறார்.
புலிகளின் புகழ்பூத்த யாழ்மாவட்டத் தளபதி - கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார்
புலிகளின் வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த போராளிகள் பற்றிய பல சுவாரசியமான விடயங்களை அடேல் எழுதியிருந்தார். 1976 ஆம் ஆண்டு, பிரபாகரன் புலிகள் அமைப்பை உருவாக்கிய காலத்தில் அவருடன் இணைந்துகொண்டவர், இன்று வன்னியில் கல்விக்குப் பொறுப்பாக இருக்கும் பேபி சுப்பிரமணியம். மிகவும் மென்மையானவராகவும், மற்றையவர்களைப் பற்றி புரணி கூறும் தன்மையற்றவராகவும், அதிகாரப் போட்டியில் நாட்டமில்லாதவருமாக விளங்கிய பேபி சுப்பிரமணியம், மிகுந்த அறிவாற்றலைக் கொண்டிருந்தார். புலிகளின் விடுதலைப் போராட்டம் பற்றியும் ஏனைய போராட்டங்கள் பற்றியும் பல தகவல்களை தன்னிடம் கொண்டிருந்த அவரை நடமாடும் தகவற் களஞ்சியம் என்றே எல்லோரும் அழைத்து வந்தனர்.ஒரு பழைய துணிப்பையினை தன்னோடு எப்போதும் காவித்திரியும் அவர், அதற்குள் பத்திரிக்கைகள் புத்தகங்கள் என்று போராட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு திரிந்தார். சைவ உணவுகளை மட்டுமே உண்டுவந்த அவர், சிலவேளைகளில் சோற்றுடன் ஐந்து அல்லது ஆறு மோர் மிளகாய்களைக் கடித்துக்கொண்டே தனது உணவை முடித்துக்கொள்வார் என்று அடேல் எழுதுகிறார்.
பிரபாகரனின் மிகவும் நெருக்கத்திற்குரியவராக இருந்த இன்னொருவர் நேசன் எனப்படும் ரவீந்திரன் ரவிதாஸ். தனது மருத்துவக் கல்வியைக் கைவிட்டு விட்டு பிரபாகரனுடன் இணைந்துகொண்டவர் அவர். ஆனால், பிற்காலத்தில் இயக்கத்திலிருந்து விலகிச் சென்று தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகிறார். திடகாத்திரமான உடலைக் கொண்ட அவர், தினமும் உடற்பயிற்சிக்காக அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு நாள் காலையுலும் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
பிரபாகரனின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருந்த ரகுவிற்கு ஷங்கர் உதவிவந்தார். ரகுவே பிரபாகரனின் தலைமை மெய்ப்பாதுகாப்பாளராக பல்லாண்டுகள் செயலாற்றி வந்தார். ஆனால், இயக்க விதிகளை மீறியதற்காக பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த புலிகளின் உறுப்பினர்களில் பண்டிதரும் ஒருவர். கடுமையான ஆஸ்த்த்மா நோயினால் பாதிக்கப்பட்டபோதிலும், தனது அரசியல் நடவடிக்கைகளில் அவரது உடல்நிலை தாக்கம் செலுத்துவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புலிகளின் அச்சுவேலி முகாமை இராணுவம் 1985 ஆம் ஆண்டு தை மாதம் சுற்றிவளைத்தபோது, இராணுவத்துடனான மோதலில் பண்டிதர் வீரச்சாவடைந்தார்.
பின்னாட்களில் டெலோ இயக்கத்தின் தலைவராக வந்த சிறி சபாரட்ணமும் இதே வளசரவாக்கம் வீட்டிலேயே தங்கியிருந்தார். புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையே அன்று ஏற்பட்டிருந்த இணக்கப்பட்டிற்கு அமைய சிறி அங்கு தங்கினார்.
இவ்வீட்டிற்கு பிரபாகரன் அடிக்கடி வந்துசெல்வார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்கிற அரசியற் கட்சியின் தலைவரான நெடுமாறனின் இரு சட்டசபை உறுப்பினர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட விடுதிகளில் ஒன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்தார்.
ரகு,
Silent reader ஆக நானும் இருக்கின்றேன்.
நேரப் பிரச்சினைகளால் பல வாரங்கள் வாசிக்காமல் ஒரே நாளில் வாசித்து விருப்பும் தெரிவித்துவிட்டு சென்று விடுவேன்.
இன்னும் மிக முக்கியமான ஒரு விடயம்
யாழை பூட்டாமல் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களின் இந்தப் தொடர் மற்றும் உங்கள் பதிவுகளும். நன்னியின் பதிவுகளும் மிக முக்கிய காரணங்கள்.
நன்றி