Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7051
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/11/23 in all areas

  1. பிக்குகளை சந்திக்கும் அளவுக்கு தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்பவர்களை மதிக்காதது கண்டனத்துக்கு உரியது.
  2. //ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?// ஓம் அல்லது இல்லையெனப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இது ஒற்றைத் தீர்மானம் அல்ல, பல தீர்மானங்கள், இலக்குகளின் தொகுப்பு - எனவே எல்லாம் நடை முறையாகாது என உறுதியாகச் சொல்ல முடியும்😎. பொருளாதாரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஏற்கனவே உள்ளூர் தமிழ் தலைமைகளாலும், புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளாலும் முன் மொழியப் பட்ட மாற்றங்கள் தான் - எனவே இதில் யாரும் எதிர்க்க, அதிர்ச்சி கொள்ள எதுவும் புதிதாக இல்லை! திட்டமிடல் பாசையில் இது போன்ற பிரகடனத்தை blue print அல்லது high-level summary என்று சொல்வார்கள். ஒவ்வொரு இலக்கினுள்ளும் பல செயல்கள் (action items) உள்ளடங்கியிருக்கும். அந்த செயல்கள் நடை பெறுமா என்பதைப் பொறுத்தே இலக்கு தப்பும் அல்லது தாழும்! (இந்த இலக்குகளை செயல் பட்டியலாக வகைப்படுத்தும் முயற்சியைத் தான் கோசான் "ஈழத்தமிழர் அபிலாசைகள்" என்ற திரியில் செய்ய முயன்றார் என நினைக்கிறேன். பின்னர் அதை யார் பொறுப்பெடுத்தார்கள் என அறியேன்!) அழுத்தம்? இலங்கை அரச தரப்பு வெளி அழுத்தங்களால் பணியவைக்கப் பட முடியாத சில தகைமைகளைக் கொண்டிருக்கிறது. எனவே, moderate optimism!
  3. தீர்மாங்களை சட்டவாக்கம் செய்வதிலேயே இலஙகை அரசியல் அமப்பில் சிக்கல் இருக்கிறது, அதனையும் தாண்டி அந்த சட்டம் அமுலாக்கம் செய்வதிலும் சிக்கல் உண்டு, அதற்கேற்ப வகையிலேயே இலங்கையின் அரசியல் முறை (விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளடங்கலாக) உள்ளது. உங்களது கருத்து மிக சாதாரணமான கேள்வி போன்று இருந்தாலும் மிகவும் ஆழமான நடைமுறை சாத்தியமற்ற (இலங்கையின் அரசியலில்) ஒரு மற்றுமோர் நடவடிக்கையாகவே இந்த இமயமலை பிரகடனமும் இந்த தரப்பின் சந்திப்பும் இருக்கும் என்பதனையே எதிர்வு கூறியுள்ளது. ஆனால் முயற்சிப்பதில் தவறில்லைதானே? ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா? எவ்வாறான அழுத்தம் மூலம் இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம்? உங்கள் கருத்து என்ன?
  4. வேறெங்கும் தமிழில் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன் - 6 அம்சப் பிரகடனம்: 1. நாட்டின் பன்முகத்தன்மையை, எந்த ஒரு சமூகமும் தன் கௌரவத்தை இழக்காத வகையில் காக்கவும், முன்னேற்றவும் வேண்டும். 2. பொருளாதாரப் பிரச்சினையைப் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி மூலம் தீர்க்க வேண்டும் - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புலம்பெயர்ந்த இலங்கையரின் முதலீடு,நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர் திசையில் வைத்திருத்தல், நாட்டை ஒரு மத்திய தர வருமானமுள்ள நாடாக மாற்றுதல். 3. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் - அந்த அரசியலமைப்பு தனி மனித, சமூக உரிமைகளை முன்னேற்றி, சமத்துவம், சம பிரஜாவுரிமை என்பவற்றை மக்களிடையே பேண வேண்டும். நிர்வாக அமைப்புகளின் பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படியொரு அரசியலமைப்பு வரும் வரை, தற்போதிருக்கும் அரசியமைப்பின் படி இதய சுத்தியோடு அதிகாரப் பகிர்வின் அலகுகளை அமல் படுத்த வேண்டும். 4. பிரிக்கப் படாத, ஐக்கியமான ஒரு நாட்டின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். மத, இன, கலாச்சார மற்றும் வேறு அடையாளங்களை ஏற்றுக் கொண்டு, மதித்து இன மதக் குழுக்களிடையேயானா புரிந்துணர்வை உருவாக்க வேண்டும். 5. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புக் கூறி, சமாதானமாகி, எதிர்காலத்தில் இத்தகைய துன்பங்கள் மீள நிகழாமல் உறுதி செய்யும் ஒரு இலங்கையை இலக்கில் நிறுத்த வேண்டும். 6. இரு தரப்பு மற்றும் பல் தரப்பு சர்வ தேச ஒப்பந்தங்களை மதித்து சுதந்திரமான, செயலூக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து, உலகின் சமாதானம் நிலவும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை இணைய வேண்டும்.
  5. இங்கு லண்டனில் பல கமராக்கள் எரிந்து போவதுண்டு உங்க நாட்டில் கீழே வைத்து இருங்காங்கள் .நம்ம இடம் என்றால் சொக்கப்பானையே கொண்டாடுவார்கள் காரணம் வேணுமில்லா
  6. இடது பக்கமிருந்து மூன்றாவதாக நிறபவர் வட கரோலினாவில் இருக்கும் ஜெயராசா என்வபர் நீண்டகால நட்புடையவர். மகனும் இங்கு இடம்மாறி வாழ்வதால் அடிக்கடி சந்திப்பதுண்டு. அனேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை நத்தார் பாட்டியில் சந்திப்போம் என எண்ணுகிறேன். கடந்த வருட நத்தார் பாட்டியிலும் சந்தித்தேன்.
  7. எனக்கு நீச்சல் தெரியாது..! நான் வரவில்லை நீச்சல் தெரியவில்லை என்றால் என்ன முதலை சவாரி செய்யலாம்
  8. ஆனால் இந்த இமயமலைப் பிரகடனத்தை யாரும் சிலாகித்துப் பேசியதாகத் தெரியவில்லை. துவாரகாவின் மாவீரர் உரை அளவுக்குக் கூட தமிழ் ஆய்வாளர்களோ அல்லது பத்திரிகையாளர்கனோ அது பற்றிப் பேசவில்லை. நாட்டுநடப்புகளை நீண்டகாலமாக அவதானித்து வரும் எனக்கு உலகத்தமிழ்ப் பேரவை சரேன் சிறிலங்காவுக்குச் சென்ற பின்னர்தான் இந்த இமயமலைப் பிரகடனம் தெரிய வந்தது. திம்புப் பிரகடனம் இந்தோ சிறிலங்கா பிரகடனம்>ஒஸ்லோப்பிரகடனம் எல்லாம் உடனே தெரிய வந்த மாதிரி என் இந்தப் பிரகடனம் தெரியவில்லை. இந்த இமயமலைப்பிரகடனம் ஏதாவது தமிழ்ப்பத்திரிகையிலோ அல்லது தமிழ் இணையத்தளத்திலோ வந்திருப்பதாக நான் அறியவில்லை.வேறுயாராவது அறிந்திருக்கிறீர்களா?.
  9. வெறும் கையுடன். போய் சந்திக்க முடியுமா ?? அப்படியென்றால் போய் கோப்பி தேனீர் மற்றும் சிற்றுண்டிகள். வயிறுயாற. அருந்தி கதைக்கலாம் 😂😂...தமிழனை வெட்டுவோம். என்பதையும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் இந்தியாவுக்கு ஒடுங்கள் இது சிங்களவர் நாடு என்பதையும் மிக இலகுவாக மறந்து விட்டீர்கள் 🙏
  10. புத்தபிக்குகள். அது தான் மொட்டைகள். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிறார்களா ?? 😂😂
  11. https://www.tamilguardian.com/sites/default/files/Image/pictures/2023/Sri Lanka/231208 GTF Ranil/FINALHimalaya Declaration - English with signatories and titles with the date.pdf 👆இமயமலைப் பிரகடனத்தை 2023 ஏப்ரல் மாதமே தமிழ் கார்டியன் திறந்து காட்டி விட்டது. பொது மக்கள் அறியாமல் இருப்பது பரவாயில்லை. "பரிஸ்ரர்" பொன்னம்பலமும், ரெலோவின் பேச்சாளரும் உள்ளடக்கம் அறியாமல் இருக்கிறார்கள் பாருங்கள்? அங்கே தான் நிக்கீனம் எங்கள் "தமிழ் தேசிய கிச்சு கிச்சு மூட்டித்" தலைவர்கள்😂!
  12. நிராஜ் டேவிட் அவர்களின் இந்த மூன்று நிகழ்படங்களுக்கும் வந்துள்ள கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது (எல்லாம் இந்த நிகழ்படங்களில் பேசுபவர்களை குறிவைத்து) இந்த துவாரகா திட்டம் என்பது ஒரு பாரிய நாசகார திட்டம் ஒன்றை பின்வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்திட்டமானது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் முற்றாக தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பல போலிக் கணக்குகளில் வந்து பேச்சாளர்களை நோக்கித் தூசணங்களையும் பல்வேறு அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளையும் ஏவல்செய்கின்றனர், இந்த மோசடிக் கும்பலின் ஆட்கள்... எனவே, இச்சதியை முறியடிக்காமல் விட்டிருந்தால் இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்களை எண்ணிப் பாருங்கள். குறிப்பாக இந்தியாவிற்கான ஏதோ ஒரு வகையான நன்மையும் இந்தத் திட்ட வெற்றியின் பெறுபேறுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை இந்த மித்துஜா வெளிவர முன்னர் இந்திய அரசியல் யூரியூப்பர்கள் தலைவர் மாமாவின் குடும்பம் தொடர்பில் பரப்பிய கதைகளை கவனிக்கும் போது புலப்படுகிறது.
  13. பௌத்த பேரினவாதத்தின் முதுகெலும்பாக விளங்கும் பிக்குகளை யாழ்ப்பாணம் அழைத்து, அவர்களோடு சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொண்ட எமது விடுதலை இயக்கம் சமாதான நல்லெண்ணத்துக்கு சிறிலங்கா அரசை வற்புறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.
  14. எண்களில் சங்கமித்த தமிழ் .........! 🙏
  15. வெள்ளையடிப்பு செய்த உலக தமிழர் பேரவை : கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு! சிங்கள பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றில் கையொப்பமிட்டதை அடுத்து உலக தமிழ் பேரவையுடனான சந்திப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது. மாவீரர் நினைவேந்தலின் போது அரசாங்கம் மக்கள் மீது மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கட்டவிழ்த்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். இந்த பின்னணியில், அரசாங்கத்திடம் பிரகடனத்தை கையளித்தமையானது வெள்ளையடிப்பு செயற்பாடு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக தாயகத்தில் உலக தமிழ் பேரவை எவருடனும் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவை உறுப்பினர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1362684
  16. சரி சந்திக்கட்டும். இனி நடக்கப்போறதையும் சொல்லட்டும். எங்கடை பனங்கொட்டை காவியள் மாதிரி அறிக்கை விட்டு இருக்கிற கொஞ்ச நஞ்ச சனத்தையும் கொல்லாமல் விட்டால் சரி.
  17. பாவியள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்....😂 கவலைய விடு தல
  18. சண்டையடி சண்டை... விடிஞ்சால் பொழுது பட்டால் சண்டை சண்டை🌟 காலமை விடிய வெள்ளன கிளீனிங் வேலைக்கு போனால் கக்கூஸ் கிளீன் இல்லை எண்டு சண்டை பிடிக்கிறான் ஓகே எண்டு போட்டு அவசர அவசரமாய் கழுவித்துடைச்சு போட்டு அடுத்த வேலைக்கு அதர பதர ஓடிப்போனால் குறுக்காலை வந்த கார்க்காரன் உனக்கு கண்ணில்லையோ எண்டு சண்டை பிடிக்கிறான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அடுத்த வேலைக்கு போனால் அடிக்கடி அஞ்சு நிமிசம் பிந்தி வாறாய் சம்பளத்திலை பிடிக்கப்போறன் எண்டு அடுத்த முதலாளி சண்டை பிடிக்கிறான் சரி பொடாங் எண்டு மனசுக்குள் திட்டிப்போட்டு வீட்டுக்கு வந்தால் பாண் வாங்கிக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னனானெல்லே எண்டு மனிசி சண்டை அவசரப்பட்டு பேக்கரிக்கு போய் பாண் வாங்க நான் இஞ்சை வரிசையிலை நிக்கிறன் நீ என்னெண்டு முன்னுக்கு போய் வாங்கினனீ எண்டு அடுத்த சண்டை சொறி சொல்லிப்போட்டு வீடு வந்து....ஒரு காகக் குளியல் போட்டு அமைதியாக சோபாவில் அமர்ந்து தொல்லைக்காட்சி ரிமோட் பட்டனை அமத்தினேன் பள்ளி மாணவன் சக மாணவனுக்கு கத்தியால் குத்தினான் என பிரேக்கிங் நியூஸ் அடுத்தது நல்ல செய்தியாக இருக்கும் என காத்திருந்த என் கண்களுக்கு.... பாலியல் கொலை என அடுத்த செய்திவர மனமுடைந்து அடுத்த தொலைக்காட்சிக்கு மாறினேன்... சண்டையில் உக்ரேன் முன்னேறுவதாக அறிவிப்பாளர் புழகாங்கிதம் அடைய அடுத்த சனலுக்கு தட்ட... அவனோ ஹமாஸ் இஸ்ரேல் என அலறினான் சரி போகட்டும் என பேசாமல் தமிழ் தொலைக்காட்சிகளை நாடினேன் ஆகம சனனில் இராவண இராம சண்டைகளை அமைதியாக விளக்கிக்கொண்டிருந்தார் மஞ்சள் நிற ஆன்மீகவாதி வேண்டாமென அடுத்த தொலைக்காட்சிக்கு மாற மாமியார் மருமகளுக்கு நஞ்சு வைத்து கொல்லும் காட்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது. ஒன்றுமே வேண்டாம் என நினைத்து இயற்கை விவரண காணொளிகளை பார்க்க அடுத்த தொலைக்கட்சிகளை தேடினேன் காற்று மாசுபட்டுவிட்டது என்கிறார்கள் உலகம் வெப்பமாகின்றது என்கிறார்கள் சூறாவளி என்கிறார்கள் நில நடுக்கம் என்கிறார்கள். எரிமலை வெடிக்கின்றது என்கிறார்கள் தண்ணீர் பஞ்சம் என்கிறார்கள்..... அப்படியே அடுத்த சனலுக்கு நகர ஒநாய்கள் சிறு மான்குட்டியை வேட்டையாடும் காட்சியை தத்துவரூபமாக காட்டிக்கொண்டிருக்கின்றோம் என ஒருவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார் என் கஷ்ரம் கவலை சொல்லவே மூச்சு வாங்குதடி தலையை மூடிக்கொண்டு படுக்கிறேன் எதுவுமே தெரிய வேண்டாமென........
  19. ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள் சூரியன் குறித்து அளிக்கக்கூடிய முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,ISRO ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது? ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT எனப்படும் தொலைநோக்கி உலகிலேயே முதல் முறையாக இந்தப் புகைப்படங்களை சூரியனுக்கு 200 முதல் 400 நேனோமீட்டர் அலைநீள அளவிற்கு அருகே சென்று படம் பிடித்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் மூலம் சூரியனின் ஒளிமண்டலம் (Photosphere), புற வளிமண்டலம் (Chromosphere) ஆகிய மேற்பரப்புகள் பற்றி நுண்ணிய தகவல்களைப் பெற முடியும். ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாகக் கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் சூரிய புற ஊதா தோற்றுருவாக்கல் தொலைநோக்கி (Solar Ultra Violet Imaging Telescope) படம் பிடித்துள்ளது. பட மூலாதாரம்,ISRO இந்தப் புகைப்படங்கள் மூலம் இரண்டு சிக்கலான ஆய்வுகளுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஒன்று, சூரியனின் மேற்பரப்பு நாம் அணுப்பக்கூடிய விண்கலம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்வது. இரண்டாவது, சூரியக் கதிர்கள் பூமியின் காலநிலை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்துவது. முழு வட்ட புகைப்படங்கள் என்றால் என்ன? புற ஊதா கதிர்களில் இயங்கக்கூடிய இந்த வகை தொலைநோக்கிளைப் பயன்படுத்தி இரண்டு விதமாக சூரியனை படம் பிடிக்க முடியும் என்று கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். சூரியனில் குறிப்பிட்ட ஓர் இடத்தை ஆழமாகப் படம் பிடிப்பது அதில் ஒருவகை. மற்றொன்று, பல்வேறு வடிகட்டிகள் மூலம் சூரியனை படம் பிடிப்பது என்று அவர் விளக்கினார். "தற்போது சூரியனின் ஒளிமண்டலம், புற வளிமண்டலம் ஆகிய அடுக்குகளை இந்தத் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த அடுக்குகளில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியும்.” அவர் மேலும் கூறுகையில், “இந்த அடுக்குகளின் புகைப்படங்களை ஆராய்வதன் மூலம் சூரியனின் இந்த அடுக்குகளில் எங்கே கருப்புப் புள்ளிகள் உள்ளன, எங்கே தீப்பிழம்புகள் உள்ளன, எந்த இடங்கள் அமைதியாக உள்ளன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்,” எனத் தெரிவித்தார். இந்த தொலைநோக்கி மூலம் பதினொரு வகையான ஃபில்டர் (Filter) என்றழைக்கப்படும் வடிகட்டிகளை பயன்படுத்தி சூரியனை படமெடுத்துள்ளதாக த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SUIT தொலைநோக்கி பட மூலாதாரம்,ISRO சூரியனின் இந்த முழுவட்ட புகைப்படங்களை படம் பிடித்துள்ள SUIT தொலைநோக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது இதில் சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது மகாராஷ்ட்டிரா மாநிலம் பூனேவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விண்வெளி நிறுவனத்தின் தலைமையில் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட கருவியாகும். இந்தக் கூட்டு முயற்சியில், இஸ்ரோ, மணிபால் உயர்கல்வி நிறுவனம் (MAHE), கொல்கத்தாவை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CESSI), பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் நிறுவனம் மற்றும் உதய்ப்பூர் சூரிய கண்கானிப்பகம் (USO-PRL) மற்றும் அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இந்தத் தொலைநோக்கி குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “இந்தியாவின் சொந்த தயாரிப்பான இந்த SUIT தொலைநோக்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு இந்த தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் புகைப்படங்களே சாட்சி,” என்றார். ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம்,ISRO சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 2ஆம் தேதி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி SUIT தொலைநோக்கி சூரியனின் ஒளிப்படத்தை வெளியிட்டது. இந்தத் தொலைநோக்கி கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார். “இந்த விண்கலத்தின் நோக்கமே சூரியனை ஆராய்வதுதான். தற்போது இந்தப் புகைப்படங்கள் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும். தற்போது கிடைத்துள்ள இந்தப் புகைப்படங்களை வைத்து சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரியனின் வளிமண்டலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,ISRO ஆனால், தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மட்டுமே அதற்குப் போதாது என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த புகைப்படங்களை வைத்து நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இதுபோல இன்னும் பல புகைப்படங்கள் நமக்குத் தேவை. அதை வைத்துதான் சூரியனுடைய இயக்கத்தைப் பற்றி ஆழமாகப் தெரிந்துகொள்ள முடியும்,” எனத் தெரிவித்தார். "இந்த SUIT தொலைநோக்கியைப் போல ஆதித்யா எல்1-இல் இருக்கக்கூடிய மற்ற கருவிகள் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும். அடுத்ததாக Plasma Analyser Package for Aditya (PAPA) எனப்படும் கருவி நிலைநின்ற பிறகு ஜனவரி 7 முதல் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும். அந்தக் கருவியில் இருந்தும் நமக்கு அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும்." https://www.bbc.com/tamil/articles/cn0pw18e9wxo
  20. இப்பவும் மகிந்த அரசு தான். ஆள்தான் வேற.
  21. கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லிக் கொடுத்தும் கடையில் நின்று போன் அடித்து கேட்பவரை என்ன செய்யலாம் ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.