Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்10Points19134Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46797Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/27/23 in Posts
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை விட்டு இந்த சங்கத்தின் சார்பில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் அரசியல் தலைமைகள் விடுக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவதும் இலங்கை அரசுக்கும் யுத்தக் குற்றவாளிகளுக்கும் சாதகமாகவே அமையவதோடு அவர்களது அடிப்படை கோரிக்கையையே நீர்த்தது போக வைக்கும் என்ற அரசியல் பாலபாடம் கூட இவர்களுக்கு தெரியவில்லை. இதை அவர்களுக்கு எடுத்துரைக்க தாயக/ மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழ் தேசியம் பேசி தமது வாழ்வை வளப்படுத்தி வரும் எந்த அமைப்புகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தேவை வாக்கு மற்றும் பதவி அரசியல். புலம்பெயர் நாடுகளில் புலிகளை வைத்து அரசியல் செய்து தமது வாழ்வை ஓட்டுபவர்களுக்கு தேவை தமது வியாபாரம், அதற்கு தேவையான மூலதனமான அடிமுட்டாள்க் கூட்டம். இதைச் சுற்றியே தமிழர் அரசியல் இன்று உள்ளது.6 points
-
மனதும் இடம்பெயரும்
4 pointsஎனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்4 points
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
2 points
-
யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
விஜயனும் இப்பிடித்தான் வந்து இறங்கியிருப்பார் போல......2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இதை தான் அறியாமை என்று சொல்வது சிலர் பேசுவது எழுதுவது கதைப்பது மூலமாக தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்தி விடுவார்கள் ஆனால் வேதனை என்னவென்றால் அது அவர்களுக்கு தெரிவதில்லை புரிவதுமில்லை இங்கே சுரேன் சுரேந்திரன். இலங்கையில் எதிர்கட்சிதலைவர சதீஷ் பிரேமதாச உடன் பேசியதைப்பார்த்தால் ...அவர் ஐனதிபதி ஆகும் போது தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பேன். என்று எந்தவொரு உறுதி மொழியையும் குறைந்த பட்ச முன்மொழிவுகளையும். வழங்கவில்லை இந்த சுரேன் அவரிடம் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை ஆனால் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது புலம்பெயர் இலங்கையார். என்று சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் தமிழன். தன்னை தமிழன் என்று சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை??? தமிழன் என்று சொல்வதை கைவிட்டால் தமிழர்கள் பிரச்சனை பற்றி எப்படி பேச முடியும் ?? ஒரு புலம்பெயர் சிங்கள அமைப்பிடம் இப்படி கோரி இருப்பார்களா?? இல்லை இல்லை இல்லாவே இல்லை இந்த சுரேன் 1983 ஆனி ஆடி ஆவணி மாதங்களில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு [தமிழர்கள் ] நீதி வழங்கமாறு கேட்டுக்கொண்டாரா ?? குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஏன் கேட்கவில்லை?? 2009 இல் இலட்சக்கணக்கான இலங்கையார். கொல்லப்பட்டதை ஏன் நினைவு ஊட்டவில்லை ?? 30 ஆண்டுகளாக கொல்லப்பட்டார்கள் அவர்கள் இலங்கையார் தானா??? இது போன்ற கேள்விகள் கேட்க முடியாத சுரேனுக்கு பேச்சுவார்த்தை செய்ய என்ன தகுதிகளுண்டு?? புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
யாராவது அல்ல. இனத்தின் நலனில் இதயசுத்தியான அக்கறை உள்ளவர்கள். அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள். ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல. மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. முதலாவது - இல்லை என்ற சந்தேகம், வர வர வலுக்கிறது. 1. அவர்களின் proxy யான சுரேனை வைத்து கொண்டு, இவர்களிருவரையும் தவிர்க்க முடியுமா? 2. தாயகத்தில் மிகபெரும் அரசியல் கட்சியின் தலைமைகளான இவர்களை தவிர்க்க கோரும் நீங்கள், எந்த legitimacy அடிப்படையில் சுரேனை எமக்கான பிரதிநிதி என தீர்மானிக்கிறீர்கள்?2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது. இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது. யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. உதாரணமாக மேலோட்டமாக அதிகாரபரவலாக்கம் என்கிறது பிரகடனம். மாநகரசபையின் குப்பை அள்ளும் அதிகாரம் கூட ஒருவகையில் அதிகார பரவல், பகிர்வுதான். ஆனால் நாம் கோரும் அதிகாரப்பகிர்வு அதுவா? இல்லை. குறைந்தபட்சம் இப்போ இலங்கையின் சட்டத்தில் இருக்கும், காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை (அல்லது வடகிழக்கு தமிழர் பெரும்பான்மை பிரதேசம் இணைக்கப்பட்ட அலகு). இதுதான் எமது ஆக குறைந்த அபிலாசை. இது ஏலவே இலங்கையின் அதி உயர் சட்டமாகிய அரசியல் சட்டத்தில் உள்ளது. இதை தர எந்த பிக்கு ஒப்புகொண்டுள்ளார்? பிக்குகளோடு கதைப்பதால் மட்டுமே தீர்வு வராது. என்ன கதைக்கிறோம்? அவர்கள் எதை தர ஒப்புகொள்கிறார்கள் என்பது முக்கியம். லைக்கா சுபாசும் போய் பிக்குக்கள் காலில் உருண்டார் இல்லையா? சுரேன் காலில் உருளவில்லை - அது மட்டுமே ஒரே வேறுபாடு. முதலில் அழுத்தம் திருத்தமாக பிக்குகள் வடகிழக்கு தமிழர் பகுதிகள் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு தரலாம் என்பதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை சொன்னால் - அதன் பின் பேசுவதால் பயன் உண்டா இல்லையா என தேடலாம். இப்போ சட்டத்தில் உள்ள இதை கூட அவர்களால் தரமுடியாது என்றால்…பேசுவதால் தமிழருக்கு ஒரு பயனும் இல்லை.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
2 points- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில் இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான். காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம். எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இதை இலங்கை தமிழரில் பலர் முற்றாய் உணர்ந்து தெளிந்ததாக தெரியவில்லை. தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் இந்தியா தான்,அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து நாம் ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது? சரி பிரிக்க முடியாத நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும். ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும். இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். இந்த நிலையில் இலங்கை அரசோடு ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன். அந்த வகையில் உலகத் தமிழர் பேரவை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள். இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு. கடும் பசியிலும் தாகத்திலும் வாடும் ஒருவர் பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நலிந்து சாக வேண்டி வருலாம் .மாறாக கிடைக்கும் சோற்றையும் நீரையும் பருகி உயிர் தப்பினால் பின்னோரு காலத்தில் பிரியாணிக் கடைக்கே ஓனர் ஆகலாம்.2 points- மூட்டழற்சி நோய்-ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ்-(osteoarthritis )
இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் 65 வயதிற்கும் குறைவானவர்கள்.இந்த நோய் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா யூரோப் நாடுகளையே படுத்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.அமெரிக்கா மட்டுமே வருடாவருடம் இந்த நோய்க்காக 6400 கோடி அமேரிக்கன் டாலர்களை செலவழிக்கின்றது. மூட்டழற்சி நோய் இன்று நேற்று தோன்றிய நோய் அல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதனை தொல்லைபடுத்திவந்துள்ளது.எகிப்திய மம்மிக்கள் சிலவற்றில் கூட இவ் வீங்கியமூட்டுக்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள்.அதோடு உலகப்பிரபலமான ஆய்வுப்பயணியாக கிரிஸ்டோபர் கொலம்பஸும் இன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான். வீங்கிய மூட்டு என்றபதம் கிரேக்க வார்த்தையில் இருந்துதான் தோற்றம்பெற்றுள்ளது. மூட்டு என்றால் என்ன? மூட்டின் உடற்கூற்றியலைப்பார்த்தோமேயானால் இது இரு எலும்புகள் சந்திக்குமிடமாகும்.மூட்டு ஒரு நாருறையினால் மூடப்பட்டிருக்கும்,இவ் உறை அம்மூட்டினை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.இத் தொகுதியை எலும்பிடைச்சவ்வு மூடியிருக்கும். இச்சவ்வு எண்ணைத்தன்மையான ஒரு பதார்த்தத்தை சுரக்கும்,இந்த பதார்த்தம் உராய்வில் இருந்து அதாவது மூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று தேயாமல் பாதுகாக்க உதவுகின்றது.அதோடு என்பு முடியும் முனையை குருத்தெலும்பு என்று அழைப்பார்கள் இது சற்று பஞ்சுத்தன்மையுடையதாக காணப்படும்.இது நீங்கள் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ வாகனங்களில் உள்ள Shock absorber போன்று தொழிற்பட்டு மூட்டைப்பாதுகாக்கும். இவ் மூட்டழற்சியை ஒத்த வேறு ஒரு நோய் காணப்படுகின்றது.இதை முடக்குவாதம் (Rheumatoid arthritis) என்று அழைப்பார்கள்.இது மூட்டழற்சியைப்போல் அல்லாது சரமாரியாக உடலின் அத்தனை மூட்டுக்களையும் ஒரே நேரத்தில் தாக்கும் வல்லமைவாய்ந்தது.ஒரு மூட்டில் இருந்து வேறு ஒரு மூட்டிற்கு இன் நோய் பரவும்.ஆனால் மூட்டழற்சி (osteoarthritis) நோய் ஒரு மூட்டில் இருந்து வேறு ஒன்றிற்கு பரவுவதில்லை. எலும்பின் அடிப்படைக்கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது எலும்பின் பகுதிகளான மூட்டுக்குருத்தெலும்பு(articular cartilage)மற்றும் அடிக்குருத்தெலும்பு (subchondral bone) என்பன சிதைவடைதலே இன் நோயின் முக்கிய குணங்களாகும். சாதாரணமாக எமது உடலின் பாரத்தைத்தாங்கும் மூட்டுக்களான இடுப்பு என்பு மூட்டு மற்றும் முழங்கால் என்பவையோடு முதுகெலும்பு, கைகள் ,கைவிரல்கள் என்பனவும் இன் நோயால் பாதிப்படையும்.இந்நோயால் ஆண், பெண் இருபாலரும் பாதிப்படைந்தாலும் ஆண்களை விட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகின்றார்கள்.அதிலும் முக்கியமாக மாதவிடாய் நிறுத்தமடையும் காலப்பகுதியை கடக்கும் பெண்கள் இந்நோயால் பாதிப்படைதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. X- Ray மூலம் மூட்டுக்களை அவதானிக்குபோது இவற்றை இலகுவாக கண்டறியலாம். நோய்க்காரணிகள் நோயாளி உடற்பருமனுடன் கூடிய மூட்டழற்சி நோயாளியாக இருத்தல் மூட்டில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருத்தல் விவசாயியாக இருத்தல் பரம்பரை பரம்பரையாக் இன் நோய் குடும்பத்தில் இருத்தல் முதுமையடைதல் மூட்டு பிரழ்தலுக்கு சரியான சிகிச்சை எடுக்காமை இன் நோயை 3 வகையாகப்பிரிக்கலாம் 1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்.(Nodal Generalised OA ) 2) என்பு மூட்டுகளுக்கிடையில் கல்சியம் குறைவு ஏற்படுவதனால் இது ஏற்படும்.(Crystal Associated OA) 3)இளவயதினரிடம் ஏற்படும் மூட்டழற்சி நோய்.(OA of Premature Onset ) 1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய் இன் நோயின்போது கைவிரல்,கால்களின் மூட்டுக்கள் சடுதியாக வீக்கமடைந்து வலி ஏற்படும் இது 2,3 வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.இது பார்ப்பதற்கு முடிச்சுக்கள் போன்றிருப்பதால் Nodal Generalised என்று அழைக்கப்படுகின்றது. இதில் 2 வகையான முடிச்சுக்கள் இருக்கின்றன Heberden’s nodes Bouchard’s nodes முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோயின் ஏனைய வகைகள் CMC of thumb பெருவிரலும் மணிக்கட்டும் இணையும் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகின்றது.இன் நோய்நிலையின்போது பெருவிரலைப்பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும்.பெருவிரலைப்பயன்படுத்தும்போது அதிகவலி ஏற்படும். Hallux கால்பெருவிரலில் வீக்கம் ஏற்படுவதோடு பெருவிரலை அசைக்கமுடியாத நிலை ஏற்படும். Valgus/rigidus நின்ற நிலையில் கால்களைச்சேர்த்துவைத்திருக்கும்போது முழங்கால்மூட்டுக்கள் அருகருகாமையில் ஒன்றாகவும் பாதமூட்டுக்கள் தூரமாகவும் இருக்கும். Knees & hips இடுப்பு எலும்பில் ஏற்படும்பாதிப்பால் இன் நிலை ஏற்படுகின்றது.தொடர்ச்சியான இடுப்புவலியாக இல்லாமல் இடையிடையே இடுப்புவலி வந்து செல்லும்.ஆண்களில் விதையில் வலி ஏற்படும்.முக்கியமாக காலைவேளைகளில் மூட்டுக்களை அசைப்பது இருத்தல் எழும்புதல் கடினமாக இருக்கும். Apophyseal joints முதுகெலும்பின் என்புகள் இணையும் பகுதியைத்தான் என்று கூறுவார்கள்.இதில் கல்சியம் படிவடைந்து இவ் இடைவெளி நிரப்பப்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் ankylosing spondylitis என்ற நோய் நிலை ஏற்படும்.இதன்போது முதுகில் கூன் ஏற்படும். மூட்டழற்சி நோய் நோயியல் நோய் அறிகுறிகள்:- ஆரம்பத்தில் தொடர்ச்சியானவலியாக இருக்காமல் இடையிடையே ஏற்படும் வலியாக இருந்து நாளடைவில் தீவிர நிலைக்கு வலி மாற்றமடையும். முக்கியமாக மூட்டில் அழுத்தம் அதிகரிக்கும்போது அதாவது எழுந்து நிற்கும்போது வலி அதிகமாக இருக்கும். ஓய்வெடுக்கும்போது வலி குறைவாக இருந்தாலும் இடையிடையே ஏற்படும் வலியினால் நித்திரைகுழப்பமடையும். சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கால் கைகள் இறுக்கமடையும் அதோடு கை கால்களை அசைக்கும்போது எலும்புகள் தேய்வடையும் சத்தத்தை நோயாளியினால் உணரமுடியும். மூட்டு நீர்க்கட்டு (joint effusion) கை கால் மெலிவடைதல்,மூட்டுக்களை அசைக்கும்போது சத்தம் ஏற்படுதல் நோயை கண்டறியும் சோதனைகள் இரத்தப்பரிசோதனைகள் மூலம் இந்நோயை உறுதிப்படுத்தமுடியாது. X Ray, MRI மூலமே இன் நோயை உறுதிப்படுத்தலாம். சிகிச்சைமுறைகள் உடற்பயிற்சியும் வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுமே இன் நோய்க்கான முக்கிய சிகிச்சை முறைகளாகும்.இயன் மருத்துவர்/உடற்பயிற்சி மருத்துவரின் உதவியே இன் நோய்ச்சிகிச்சையில் பெரிதும் உதவுகின்றது.இவரின் உதவியுடன் isometric exercise, aerobic exercise, isotonic exercise உடற்பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும்.உடற்பயிற்சியின் மூலமாக மூட்டுவலி,மூட்டுவீக்கம்,களைப்பு,உடற்சோர்வு,மனச்சோர்வு போன்றவற்றைக்குறைக்கமுடியும்.வெப்ப,குளிர் சிகிச்சைகள் ஸ்ரெச்சிங்க் உடற்பயிற்சிகளால் மூட்டழற்சிக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும். எடைகுறைப்பு இன் நோய்க்கான முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.உடற்பாரத்தின் அழுத்தம் மூட்டுக்களில் தாக்கப்படுவதனாலேயே மூட்டுக்களில் மிகுந்தவலி ஏற்படுகின்றது,எனவே உணவுக்கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பாரத்தைக்குறைப்பதன்மூலமும் இவற்றைக்கட்டுப்படுத்தலாம்.கால்சியம் அதிகம் உள்ள உணவுவகைகள்,காய்கறிகள் யோகட்,பால்,சீஸ்,கடலுணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள்,ஜங்க் பூட்ஸ்,கொத்து,பிறைட் ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மூட்டழற்சியால்பாதிக்கப்பட்டவர்கள் ரீதியான ஆதரவு மிகவும் அவசியம்.உளவியல் ரீதியாக இவர்கள் மிகவும் பாதிப்படைந்துவிடுவார்கள்.அன்றாட அடிப்படைவேலைகளைக்கூட இவர்களால் தனியே செய்யமுடியாதுபோகும்.ஒரு கைபேசியையோ,டிவி ரிமோட்டைகூட தூக்கும்போது கைவலி ஏற்படலாம்.நடக்கமுடியாமல் தள்ளுவண்டியை பயன்படுத்துபவராக மாற நேரிடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குடும்பத்தவரின் ஒத்துளைப்பு நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அக நோக்கு சிகிச்சையின் மூலம்(endoscopy)மூட்டழற்சியின் பாதிப்புக்களில் இருந்துவிடுபடமுடியும்.இதன் மூலம் மருத்துவர் மூட்டிற்குள்ளே கருவிகளை செலுத்தி தீங்குவிளைவிக்கும் பாதிப்படைந்த இழையத்தை அகற்றுவார். ஜாயின்ட் ரீபிளேஸ்மன்ற் surgery (joint replacement surgery)-இதன்மூலம் பாதிக்கப்பட்ட மூட்டு முழுவதுமாக அகற்றப்பட்டு செயற்கைமூட்டு பொருத்தப்படும் இதன்மூலம் அடுத்த 10-15 வருடங்களுக்கு எந்த வலியும் இல்லாமல் வாழமுடியும். ஹாயோலூரோனிக் அசிட்டை நேரடியாக மூட்டுக்குள் செலுத்துவதன் மூலமாக வீக்கம் மற்றும் வலியை குறைந்தது 6 மாதத்திற்காவது தள்ளிவைக்கமுடியும்.மூட்டழற்சி நோயை பூரணமாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன்மூலமும் சரியான உடற்பயிற்சி மற்றும் உடல் எடைகுறைத்தல் வழக்காமான வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதம் மூலமும் வலியையும் பாதிப்புக்களையும் வெகுவாக குறைக்கமுடியும். வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள் Analgesics, Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs), Corticosteroids https://www.manithanfacts.com/2023/12/osteoarthritis .html1 point- மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்
காங்கிரஸ் கட்சியில் திமுகா இருக்கும்மட்டும் வெற்றி வாய்ப்பே இல்லை கூட்டணி உறுதி ஆனவுடன் மாறன் சொன்ன கருத்தும் தயாநிதி சொன்ன கருத்தும் சூப்பார்ஆக இருந்தது .அந்த இரண்டுகருத்துக்கும் அமைதியாக நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலும் பார்த்தால் எதிர்காலத்தில் திமுகா என்ற கட்சியே இருக்காது போல் உள்ளது .1 point- ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
1 point- யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
இது மாரி வாடை காத்து நேரம் பர்மா அல்லது தாய்லாந்து அல்லது மியான்மர் பக்கம் இருந்து தமிழ்நாடு இலங்கை வடகிழக்கு பக்கம் வழக்கம்போல் ஒதுங்குவது உண்டு .1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இல்லை,..ஆனால் குறைந்த பட்ச தீர்வுகள் வைக்க முடியாது,...அதிகூடிய ஒற்றை ஆட்சிகுள் ஆட்சியை மத்திய அரசு கலைக்க முடியாத தேர்தல்கள் நடந்த முடியாத அதிகாரம்கள் மிக்க ஆட்சி நாங்களே’ எங்கள் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி நாடு போல் ஆனால் இலங்கை என்ற நாட்டுகுள் ஆட்சி செய்வோம் நாங்கள் இப்போது தந்தை செல்வநாயகம். காலத்தில் வாழவில்லை இலங்கை தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள் அந்தந்த நாடுகளில் நாட்டுக்குள் நடக்கும் மாநிலங்கள் ஆட்சி,.மாநிலத்தில் நடக்கும் மாநகராட்சி மாநகரில் நடக்கும் நகராட்சி நகரில் நடக்கும் கிராமங்களின் ஆட்சி இவற்றை எல்லாம் கண்டு களிக்கிறோம். மட்டுமல்ல அவற்றின் உறுப்பினர்கள் பதவியில் இருந்து வெள்ளையர்களை ஆட்சி செய்கிறோம். இந்நிலையில் அதிகாரம் கொடுந்தால் நாடு பிளவுகள் படடுவிடும் என்ற நொண்டி சாட்டை. பூச்சாண்டியை ஒரு சிறுதுளி கூட நம்ப தயாரில்லை மேலும் உங்கள் மேலான கவனத்திற்கு கூடிய பட்ச தீர்வுக்குள் குறைந்த பட்ச தீர்வுகள் உண்டு” அதனை தரலாம். ஏற்பதற்க்கு என்றும் தயார்,.....ஆனால் குறைந்த பட்ச தீர்வுக்குள். கூடிய பட்ச தீர்வுகள் இல்லை இன்றைய நிலையில் முற்போக்கான சிங்கள தலைவர்கள் இது என்ன ஒரு கிராமசபைக்கு கூட போதிய தீர்வுகள் இல்லை கூட கேளுங்கள் என்று கோரலாம் இல்லையா ?? எனவே தான் குறைந்த பட்ச தீர்வுகள் தர முடியாது கோர முடியாது 🤣😂🤣1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது.1 point- ஜனாதிபதி தேர்தலை முற்றாகப் பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னர் இப்படித்தான் மாகாண சபை மற்றும் உள்ளூராட்டசி சபைகள் பகிஷ்கரிப்பு என்று தொங்கிக் கொண்டு நின்றவர்.1 point- யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
அதையும் போட்டுக் கொடுக்க எங்கட ஆட்கள் இருக்கினம்.1 point- பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
1 pointதமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதினைந்தாம் வட்டாரத்து மாநகரசபை உறுப்பினர் இவர் யாழ் அம்மன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பியூட்டி பார்லர் நடாத்தி அங்கு தென்னிலங்கை யுவதிகளைக் கொண்டுவந்து விபச்சாரம் செய்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்பு அவர் மறுப்பு அறிக்கை விட்டவர். அவர் அண்மையில் சி வி கே சிவஞானம் அவர்களது தலைமையில் நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் உள்ள மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் கிளை நிர்வாகக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் சிவிகே சிவஞானம் அவர்கள் முன்னர் அல்பிரட் துரையப்பா காலத்தில் மாநகரசபைக் ஆணையாளராகக் கடமையாற்றியவர் இவரது திருமணை தற்போது நல்லூரடியில் உள்ள யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்தது. அப்போது அது கலியான மண்டபம். இப்படியான திருகுதாளக்காரர்களை கூட்டமைப்பின் சிவஞானத்தார் உடன் கொண்டு திரிகிறார். ஆனால் சிவஞானத்தார் ஒரு மாவீரரின் தந்தையார் ஆவார். ஐலண்ட் யுத்தகாலத்தில் எல்லாம் சீரளிஞ்சு போச்சுது எனச்சொல்லுறியள் யுத்தம் முடிந்து இப்போ பதின்நாஙு வருடத்தை அண்மிக்கிறது அங்கு சிறிலங்கா ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச்சட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான அரசியல் சட்டங்களின்படி மாநகரசபை நிர்வாகம் நடைபெறவேண்டும் அதில் வரி அறவீடுகள் மற்றும் மராமத்துப்பணிகள் தவிர எதிர்காலத்தில் ஏற்படும் குடிசனக்கொள்ளளவுக்கு ஏற்றதுபோல ஒரு திட்டமிடல் அறிக்கை ஆகியவற்றைத் திறணாளர்கள்மூலம் தயாரித்து அதனை உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பவேண்டும் சும்மா மணிவண்ணன் சுமந்திரன் கஜேந்திரகுமார் என அலப்பறை செய்யவேண்டாம் இது சாதாரணமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிர்வாகம் இதனுடன் கொண்டுவந்துதமிழ் தேசியத்தை உள்நுளைக்கவேண்டாம். கடந்தமுறை நான் யாழ் சென்றபோது ஒரு காணொளியை எனது யூ ரியூப் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன் அதில் கோட்டை முனியப்பர் கோவிலை அண்டியுள்ள முற்றவெளிப்பகுதியும் யாழ் வீரசிங்கம் மணடபத்துக்கு முன்னால் உள்ள தமிழாராச்சி நினைவிடமும் எப்படிக்கோரமாகக் காட்சியளிக்குது என காட்டியிருந்தேன் அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்பு மணிவண்ணனும் அவரது பரிவாரங்களும் ஒப்புக்குச் சப்பாணியாக சிறிது துப்பரவு வேலை செய்துவிட்டு அப்படியே போட்டது போட்டபடி விட்டாச்சு. ஒரு மாநகரத்தைப் பராமரிப்பது என்பது இன்று கூட்டிக்கழுவிவிட்டு அடுத்த ஆறு மாதத்துக்கு மறப்பது இல்லை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செப்பனிடவேண்டும். யாழ் மாநகரசபையின் "கோல்டன் எரா" என்பது அல்பிரட் துரையப்பா காலமாகும் அவர் தமிழின விரோதியாகட்டும் இல்லை வேறு எதுவாகவும் இருக்கட்டும் அந்த வேளையில் யாழ்ப்பாண நகர்ப்பகுதிக்கு அவர் செய்த சேவை என்பது சொல்லி மாளாது அவரது காலத்திலேயே பல இடங்களில் ஆயுர்வேதச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டது.இப்போது யாழ் வைத்திய சாலை சுற்றுச்சுவருக்கு அண்மித்த நடைபாதை மேடை அப்போதுதான் அமைக்கப்பட்டது. அப்போது இருந்ததைவிட இப்போது வாகனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது ஆனால் அப்போதே பாட்டா சந்திக்கு அண்மிதத கஸ்தூரியார் வீதி வின்ஸர் தெயேட்டர் வரைக்கும் ஒற்றைவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் இப்போது அப்படியான ஒழுங்குபடுத்தல் எதுவுமே இல்லை உதாரணமாக யாழ் வைத்தியசாலை வீதி மற்றும் மின்சார நிலையவீதி ஆகியவை கட்டாயமாக ஒருவழிப்பாதையாக மாற்றமடையவேண்டும் யாழ் சிற்றூர்தி நிலையம் புகையிரத நிலையத்துக்குப்பின்னால் உள்ள ஸ்ரான்லிவீதிப்பக்கத்தில் இருக்கும் இரயில்வே காணிக்குள் அமைய வேண்டும் தவிர தற்போதைய பேரூர்து நிலையம் வாகனம் தரித்து நிற்காது உடனடியாகவே புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு குறுகிய நேர நிறுத்தத்துக்குப் பின்பான புறப்படுகயை மேற்கொள்ளவேண்டும். தவிர அங்கு காணப்படும் கழிவுநீர் வடிகால்கள் யாவும் மூள் ஒழுங்கமைக்கப்படல்வேண்டும். இப்படியாக பல வேண்டும்களை உள்ளடக்கி யாழ் மாநகரசைப் பிரதேசம் காத்துக்கிடகுது. இதில் தமிழ் தேசியம் தமிழர் உரிமை யுத்தம் இவைகளைப் பற்றிப்பேச என்ன கிடக்குது. தேவை தமிழர்கள் தலைநிமிர ஒரு சிறந்த நிர்வாகம். ஆனால் எமது பிரதிநிதிகள் அனைவரும் குறுகிய மனம் படைத்த சிறு குள்ளர்கள்.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இதுதான் தாங்கள் முன்வைக்கும் யோசனையா ? 🤣 ஆரம்பத்தில் கேட்ட கேள்விதான். திரும்பவும் நினைவூட்டுகிறேன். "சுரேன் தகுதியானவர் இல்லையென்றால், தாங்கள் யாரை பிரேரிப்பீர்கள?1 point- யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
கடலுக்கை அந்த இடத்தில் விகாரை முளைக்கும்...சுற்றீவர ..300 குடும்பம் குடியேறும்...1 point- மனதும் இடம்பெயரும்
1 pointநான்தான் தூக்கச் சொன்னேன். நான் போடமுதல் நீங்கள் பக்கத்து வீட்டில் ஒட்டினால் 😀வருகைக்கு நன்றி. கனடாவில் எதுக்கு வெளியீடு??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா1 point- ”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”- சீ.வீ. விக்னேஸ்வரன்
அஞ்சா நெஞ்சன், உழவர் மகன் சுமந்திரன் அவர்கள் ஜனாதிபதி போட்டிக்கு தகுதியானவர்.🌟 பழசை எடுங்க புதிசை போடுங்க.....🤣1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அண்ணை, யாழ்களத்தில் மிக அரிதாக நான் காணும் ஒரு விடயம் சிந்தனைத் தெளிவு. Clarity of thought. உங்களிடம் அது மிதமிஞ்சியே உள்ளது.1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
என்ன சொல்லுறீங்கள் எராளன் ......துன்பம் போன்ற இன்பமான அந்தப் படும் பாட்டைப் படுவதற்குத்தானே கல்யாணம் செய்யிறது......என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.....வாழ்க்கை சீராகப் போகும்......இல்ல நான் அரிச்சந்திரனின் மறு அவதாரம் என்று வாழ நினைத்தால் "வெரிசொறி" கடைசியில தகனமேடையில்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.....! 😂1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் திருவெம்பாவை படித்தீர்கள் .....சரி ......அத்தோடு திருப்பாவையும் படித்திருந்தால் ஒரு பாவையும் வந்திருப்பாள்........! 😂1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறுவயதில் ஊர் இளைஞர்களுடனும் தந்தையுடனும் சேர்ந்து அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் பாடித்திரிந்திருக்கிறோம்.1 point- பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
1 pointதிரு. மணிவண்ணன் செய்தவற்றை ஏன் தற்போதுள்ள நகரமுதல்வரது நிர்வாகம் பராமரிக்காதுள்ளது.இதிலும் அரசியல் பேதம் பார்க்கப்படுகிறது. நிகழ்கால முதல்வரான திரு.ஆர்னோல்டிற்கு கண் இல்லையா? அல்லது யாரோ ஒருவரது பதவிக்காலத்தில் செய்ததை அப்படியே அழியவிடும் நோக்கமாக இருக்காதா?இதற்கும் கயே குழுவுக்கும் தற்போது என்ன இழுபறி. நன்றி1 point- இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
கே.எல் ராகுல் போராட்டத்தால் தப்பித்த இந்தியா, வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதிலும், கே.எல்.ராகுலின் தீர்மானமான போராட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஓரளவு கவுரமான ஸ்கோருடன் தப்பித்துள்ளது. செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், 59 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும், சிராஜும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் நடுவரிசையில் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 2021ம் ஆண்டில் இதே செஞ்சூரியன் ஆடுகளத்தில் இந்திய அணி 113 ரன்களில் வென்றபோது ராகுல் சதம் அடித்திருந்தார். அதேபோன்ற ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார். ஆனால், கே.எல்.ராகுல் களத்தில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, 80 சதவீதம் மிகுந்த கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் அடிக்கப்பட்ட ஷாட்கள், பாரம்பரிய கிரிக்கெட் முறையை பின்பற்றியவிதம் ஆகியவைதான் அவரை களத்தில் நங்கூரமிடச் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்தியா 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஆடுகளம் காலையில் ஈரப்பதத்துடன் இருக்கும். களத்தில் டெய்லெண்டரான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே உள்ளனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் பந்துவீச்சையும், காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும் ஆடுகளத்தில் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ட்ரைக்கே ராகுல் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்பட்சத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்கலாம். இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிடலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் கே.எல்.ராகுல் வரலாறு படைக்குமா இந்தியா இந்திய அணி கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. 2010-11ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரை மட்டும் கங்குலி கேப்டன்ஷியில் தொடரை சமன் செய்தது. மற்றவகையில் இதுவரை எந்த தொடரையும வென்றதில்லை. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 2006, 2010, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் நடந்த 15 டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, 17 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது, 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதிலும் முதல் டெஸ்ட் நடந்துவரும் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் இந்திய அணிக்கு கத்தியின் மீது நடப்பது போல்இருக்கிறது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்து போட்டியை எதிர்கொண்டு வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க அணி வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தென்ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர், கேட்சுகளையும் பீல்டர்கள் கோட்டைவிட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, யான்செனைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 3 பந்துகளை தவறான லென்த்தில்தான் பந்துவீசினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் பந்துவீசியிருந்து, பீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால், இந்திய அணியை 150 ரன்களில் சுருட்டியிருக்கலாம். முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா கை ஓங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் தவறவிட்டனர். திசைமாறிய ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராத் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா செஞ்சூரியன் ஆடுகளம் கடினமானது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது. இந்த ஆடுகளத்தில் காலை நேரத்தில் நிலவும் ஈரப்பதம், கடினத்தன்மையைப் பயன்படுத்தி, இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவருக்கும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டபோது, ஆட்டம் திசைமாறியது. ரபாடா கூட தொடக்கத்தில் சிறிது லைன் லென்த்தை கண்டுபிடித்து பந்துவீச சிரமப்பட்டார். ஆனால், சரியான இடத்தைக் கண்டறிந்து அதில் பந்துவீசத் தொடங்கியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 14-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷர்துல் தாக்கூர் தவறான ஷாட்கள் இந்திய அணி டெஸ்ட் அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியது. முதல் 11 ஓவர்களில் 17 முறை தவறான ஷாட்களை ஆடி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது தெரிந்ததே, அதைத் தெரிந்து கொண்டு பேட்டை நீட்டி விளையாடுவது இதுபோன்ற நிலைக்குத் தள்ளிவிடும். அதிலும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட ரபாடா ஷார்ட் பந்துவீச, சொல்லிவைத்தார்போல் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் சென்ற பந்தை தேவையின்றி தொட்டு 17 ரன்னில் பர்கரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்லிப் பீல்டர்களை நிறுத்திவைத்து பந்துவீசும்போது, அவுட்சைட் ஆஃப்திசையில் செல்லும் பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், இக்கட்டான நேரத்தில் இதுபோன்று விக்கெட்டுகளை இழக்கநேரிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே கில் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பர்கர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே தவறான ஷாட்களை ஆடியதால், இழக்க நேர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட கோலி, ஸ்ரேயாஸ் அடுத்துவந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமாக ஆடி மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இருவரும் 4 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சை தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் கோட்டைவிட்டனர். ஆனால், அந்த வாய்ப்பைக் கூட கோலியும், ஸ்ரேயாஸும் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே செய்த தவறுக்குத்தான் 3 விக்கெட்டுகளை இந்திய அணிஇழந்திருந்த நிலையில், கோலிக்கும், ஸ்ரேயாஸுக்கும் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தக்கவைக்க இருவருமே தவறவிட்டனர். ரபாடா வீசிய துல்லியமான பந்தை டிபென்ட் செய்து பேக்ஃபுட்டில் ஆட ஸ்ரேயாஸ் முயன்றபோது க்ளீன் போல்டாகியது. 31 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்த சிறிது நேரத்தில் ரபாடாவின் மின்னல் வேக ஸ்விங் பந்துவீச்சுக்கு விராட் கோலி இரையாகினார். ரபாடா 142 கி.மீ வேகத்தில் வீசிய அவுட் ஸ்விங்கில், கோலியின் பேட்டில் பட்டு பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. விராட் கோலி 38 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிவிலிருந்து மீட்ட ராகுல் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தபோது இந்திய அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அடுத்துவந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேறினார். 92 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 28 ரன்களுக்குள், மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபின், தொடர்ந்து நெருக்கடி கொடுக்க தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப்பின் லைன் லென்த்தை தவறவிட்டு, தவறான லென்த்தில் பந்துவீசியதால், கே.எல்.ராகுல் ஷாட்களை அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். கே.எல்.ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் எந்த தவறான ஷாட்களையும் பெரும்பாலும் அடிக்காமல் 80 சதவீத ஷாட்களை கட்டுக்கோப்பாகவே ஆடினார். அதனால்தான் இதுபோன்ற ஆடுகளத்தில் அரைசதம்அடித்தநிலையிலும் களத்தில் நங்கூரமுடிந்தது. கே.எல்.ராகுல் தான் சந்தித்த ஒவ்வொரு 9 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி அடித்தால்தான் உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்காமல் முழுக்க டிபென்ஸ் ப்ளே ஆடுவதற்கு ஏதுவாக இல்லை. இருப்பினும், ராகுலின் நேர்த்தியான பேட்டிங், பொறுமை, தவறான பந்துகளை மட்டுமே ஷாட்களாக மாற்றுவது என பாரம்பரிய கிரிக்கெட்டை மறக்காமல் பேட் செய்தார். கடந்த 2021ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வென்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாகஅமைந்தது. அதுபோல் இந்த ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் சதமும், இந்திய அணியின் வெற்றியும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cjrge27jzeyo1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointரஸ்ஸியாவுக்குக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேயளவு இழப்புக்கள் உக்ரேன் பக்கத்திலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வீணான போரின்மூலம் ரஸ்ஸிய வல்லரசின் ராணுவ பலம் பலவீனப்பட்டிருக்கும் அதேவேளை உக்ரேனின் பல கட்டுமானங்கள் நிரந்தரமாகவே ரஸ்ஸியாவால் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நீண்டு முடிவின்றிச் செல்கிறது. ரஸ்ஸியா தானாகவே விரும்பி நிறுத்தினால் ஒழிய இப்போர் நிற்கப்போவதில்லை. உக்ரேனினால் ரஸ்ஸியாவை தனது நாட்டிலிருந்து விரட்டும் பலம் எப்போதுமே இருக்கப்போவதில்லை. மேற்குலகின் உதவிகள் வற்றத் தொடங்கியிருக்கும் இவ்வேளை, தனது எதிர்த்தாக்குதல் இன்னமும் வீரியம் இழக்கவில்லை என்பதைக் காட்ட செலென்ஸ்கி படாத பாடு படுவது தெரிகிறது. தேவையற்ற அநியாய யுத்தம். நிறுத்தப்பட வேண்டும். ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும்.1 point- தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
சம்பந்தன் ஐயாவே , தெரியாமல் தான் கேட்கிறேன் , நீங்கள் யார் முதலில் , உங்களுக்கு நினைவு உள்ளதா ? 10 வருடத்துக்கு முன்னரே சிங்கள கொடி பிடித்து , மஹிந்தவை தேசிய தலைவர் என்று கூறி வரலாற்று தவறை செய்த உங்களை .... வேண்டாம் நிம்மதியாக செத்து போங்கள் . உடம்பு பலத்துக்கு சூப் வைத்து குடியுங்கள் . இதுவரை செய்த நாறல் வேலைகள் போதும். சரியாக சொன்னீர்கள். இவரை சுமா கும்பல் எப்பவோ கழற்றி விட்டார்கள் , இந்தால் இப்பவும் தான் இருக்கிறன் என்று சொல்கிறாராம்1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கை அரசியல்வாதிகளை விட பிக்குகளை இந்த பேச்சுக்குள் இழுப்பது நல்ல விடயம் . யார் என்ன தீர்வுக்கு வந்தாலும் அதனை இலகுவாக உடைக்க கூடியவர்கள் இந்த பிக்குகள் . இந்தியா என்பது வைகோர் பட்டைடை நாய்க்கு சமம் . எந்த விமோசனமும் தமிழருக்கு இல்லை. வடக்கு கிழக்கு இரண்டையும் இணைத்து குறைந்த பட்சம் தீர்வு திடடத்தை எடுத்து , அதனை வலுப்படுத்தி கொண்டு எமது முற்று முழுதான சமஷ்டி தீர்வுக்கு போக வேண்டும் . இந்த வகையில் யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும் . இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போய் மாணவர்கள் மற்றும் எல்லா தமிழ் சமூக அமைப்பினருடனும் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை முதலில் வரையறை செய்யவேண்டும் . அதன் பின்னர் சிங்கள மற்றும் அரசாங்கத்துடன் பேச போக வேண்டும் . தமிழ் மக்கள் இப்போதைக்கு என்ன வேண்டும் என்பதை இறுக்கமாக பேசவேண்டும் . சம்பந்தன் மற்றும் சுமாவை , தவிர்க்க வேண்டும்.1 point- வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!
கீல்மிசா 28ம் திகதி பலாலி விமானநிலையம் வருவதாகவும், பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் ஒரு யூரியூப் காணொளி பார்த்தேன். பலரது மனதை கில்மிசா வெகுவாக கவர்ந்துள்ளார்.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
யாரை பார்த்து நந்தி என்கிறீர்கள்...தமிழருக்கு நீதியான தீர்வு கிடைக்கக்கூடாது என்றகூட்டத்துடன் நின்று குழைக்கடிக்கும் உங்களையா சொல்கிறீர்கள்...சூடு சொரணையில்லாமல் உப்புச் சப்பற்ற..இல்லாதஒன்றிற்கு வற்புறுத்தும் உங்களையா சொல்கிறீர்கள்...இதற் கு தமிழரை இணங்கவைத்துவிட்டல் இலட்சாதிபதி கனவுடன் இருக்கும் உங்களையா சொல்கிறீர்கள்....றோட்டிலை போறவன் வாறவன் எல்லோரையும் சிங்களவன்கூப்பிட்டு அப்பமும் ..சாராயமும் கொடுத்து பார்ட்டி வைத்து அறிக்கையு ம் விட்டவுடன் ...ஆலவட்டம் சாமரை வீசும் உங்களையா சொல்கிறீர்கள்....இன்னமும் எடுத்துவிடவா....இதிலை எந்த முயற்சி கிடக்கிறது குறுக்கே வந்து படுப்பதற்கு...தயவு செய்து தமிழினத்தை வாழவிடுங்கள்...உங்கள் சுயலாபத்திற்காக..மற்றவரை காட்டிக்கொடுக்க வேண்டாம்...கோடரியில் இருந்து காம்பை கழட்டிவிடவும் ..அதன்பின்பு கோடரி என்ன செய்கிறது என்பது பார்ப்போம்1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointஎங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகிவருவதைக் காண்கிறோம். உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும்.1 point- தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
ஓஓஓ அப்ப சிங்களமக்கள் பக்கம் நின்று 2015 இல் செய்தது போல இம்முறையும் செய்யும் எண்ணம் ஐயாவுக்கு இருக்கிறதா? ஐயாவைக் கேட்டு என்ன பிரயோசனம்? வருங்கால தலைவர் சுமந்திரனைக் கேட்டால்த் தான் எதிர்கால முடிவுகள் தெரியும்.1 point- அறிவித்தல்: யாழ் இணையத்தில் இருந்து 'திண்ணை' நீக்கம்
வணக்கம், யாழ் களம் புதிய வழங்கிக்கு மாற்றப்பட்ட பின்னர், இணைப்புக்கள் சற்று மந்தமான வேகத்தில் இயங்குவதும், இதற்கு திண்ணை மென்பொருள் காரணமாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதால், திண்ணை வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. யாழ் இணையத்தின் இணைப்புக்களை திறப்பதற்கான வேகத்தை அவதானித்து, உரிய மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். நன்றி1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நான் உள்பட எவர் சொல்வதும் நடக்க போவதில்லை நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை அப்படி இருக்க ஏன். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கூறவேண்டும்??1 point- பக்கத்து வீடு
1 pointஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும். கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன் சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின் ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)1 point- பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
1 pointஐலண்ட் அவர்களே, நாம் பின்னோக்கிப்போகவில்லை தற்போதைய தொழில்நுட்பங்களை எங்கள் சமுதாயம் உள்வாங்கப்பழகவில்லை அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் எமக்குக்கிடைக்கவில்லை அல்லது அப்படியான சந்தர்பங்கள் கிடைப்பதற்கு பல்வேறு தடைகளை யாரோ எங்கள் முன்பு ஏற்படுத்தியுள்ளார்கள். ஒரு குளத்தை நாம் வெறும் சாதாரண குளமாக நினைத்து ஒதுக்கிவிட்டுப்போகமுடியாது, அந்தப்பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கூடிய அளவு கடல்நீர் சேராமல் பாதுகாக்கும் பொறிமுறெளக்கான ஒரு அலகு என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். யாழ் ந்நகர்ப்பகுதியில் காணாமல் போன குளங்கள் பல அதில் வண்ணான் குளம் இறுதியாகக் காணாமல் போனது நரியஙுண்டுக்குளம் முலவைவைச்சந்திக்குளம் தாராக்குளம் இவைகள் முன்னமேயே காணாமல்போய்விட்டன. பொம்மை வெளி காக்கைதீவு ஆகிய இடங்கள் பெருமுதலாளிகளது வணிக நிறுவனங்களின் பண்டகசாலையாக மாறிவிட்டது யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் சேரும் குப்பகளில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொம்மைவெளி தொடங்கி நவாலி நோக்கி காற்றில் பயணப்பட்டு அந்த இடத்தின் சூழலே மாற்றமடைந்துவிட்டது இதற்கு யார் பொறுப்பு? வேலிகளாக இருந்த குடியிருப்புக்காணிகளின் எல்லைகள் அனைத்தும் யாழ் மாநகர எல்லைக்குள் மதில்களாக மாறி வெள்ளம் வழிந்தோடாது பெரும் சீரளிவு இதை யார் திருத்தவேண்டும் யாழ் மாநகரசபைதானே? யாழ் குடாநாட்டின் அனைத்துப்பகுதியும் இப்போது சன நெரிசலாம் அல்லாடுகிறது அங்கு காணப்படும் மலசலக்குழிகள் அடுத்தவீட்டின் கிணற்றுக்கு அண்மையாகக் கைகோர்த்து நிற்கிறது அப்போ கிணற்று நீரின் தரம் பற்றிய கேள்வி எழுகிறது? கோடைகாலத்தில் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீர மரிகாலத்தில் நிலத்துக்கு ரீசார்ச் செய்யக்கூடிய இலகுவான தொழில் நுட்பத்தை ஏன மாநகரசபை குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை? எங்கே ஆரியகுளப்பிரதேசத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாநகரசபை ஊழியர்கள் சரியாக எட்டு மணி நேரம் தமது கடமையைச் செய்கிறார்களா? அல்லது மாநகர சபை நிர்வாகம் ஆரியகுளத்தை வருடம்தோறும் எப்படிப்பராமரிப்பது என்பதற்கான ஒரு வரைபுக்கோப்பை வைத்திருக்கிறார்களா? நல்லூர் திருவிழாகாலத்தில் தற்காலிக சந்தைக்கடைகளுக்காக அறவிடப்படும் பணம் எந்தக்கணக்கில் வருகிறது? யாழ் மாநகரசபையில் இப்போது பணிபுரியும் துறைசார் வல்லுனர்களது பட்டியல் இருக்குதா? மராமத்துக்கான பொறியாளர்களது தராதரம் என்ன? சோலைவரி எனச்சொல்லப்படும் சொத்துவரியை மாநகரசபை சரியாக அறவிடுகிறதா? அப்படி அறவிடப்பட்டாலும் அவை புதிய கணக்கீடுகளுக்கு உட்பட்டதா?1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointஇவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும் https://eelamhouse.com/?p=27011 point- இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
ஆம், பதிலுக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன், வளையியின் திசை முதலீட்டாளர்களின் (pessimism/optimism) சிந்தனையைக் காட்டும் அளவீடு என்கிறார்கள். ஒரு கை ஓசை என்ற உங்கள் குறிப்பிற்கு: உங்கள் மன நிலையே என்னுடயதும். துறை சார்/தரவு பகிரும் எழுத்துக்களுக்கு அதிக நேரம், உழைப்பு செலவாகும். அவற்றிற்கு பெரியளவு வரவேற்பு இல்லாமல் இருப்பது கூட ஒரு குறையில்லை, ஆனால் நக்கல் செய்வோரின் இலக்காகவும் அவை யாழில் மாறி வருகின்றமையை அவதானிக்கிறேன். டேஜா வோ (Deja Vu) 😂!1 point- சிரிக்கலாம் வாங்க
1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointஇது போன்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வார்த்தைகளும் வலுவிழந்து போய்விடுகின்றன......!1 point- போராளியின் இறுதி வெடி !
1 pointசாதாரண ஒரு பொதுமகனாலேயே இந்த தோல்வியை இத்தனை வருடம் கடந்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் எப்படி தாங்குகிறார்களோ? இது எப்போதும் எனக்குள் இருக்கும் கேள்வி. இணைப்புக்கு நன்றி நுணா.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சில நம்பிக்கைகள்…. எவ்வளவு உண்மையானவை என நிரூபித்த காணொளி. குதிரை எழுந்து ஓடியவுடன்…. அந்த மக்கள், அந்தப் பெண்ணை தூக்கி கொண்டாடிய காட்சி கண்கலங்க வைத்தது. 🥰1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலம் வாய்ந்த சிங்கங்கள் கூட- வேடனின் பொறியில் அகப்படும்- ஆனால் நரிகள் அகப்படுவதில்லை- சாதுர்யமாக வாழுங்கள்- இவ்வுலகில் பொறிகளே அதிகமாக உள்ளது.1 point - உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.