Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3034
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20356
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5556
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/13/24 in all areas

  1. முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
  2. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ......! --- என் கண்மணி ---
  3. திருப்பித் தாக்குதலின் ஆரம்பம் தம்மீதான தாக்குதல்களுக்குத் தமிழர்கள் பதிலளிக்க ஆரம்பித்தது 1984 ஆம் ஆண்டின் வைகாசியில் நடந்தது. பொலீஸ் புலநாய்வாளர்கள் சிலரைக் கொல்வதுடன் இது ஆரம்பமாகியது. வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் புலநாய்வாளர் சார்ஜண்ட் நவரட்ணம் இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் புலநாய்வு செய்துவந்தார். இரு நாட்களுக்குப் பின்னர் பொலீஸ் கொன்ஸ்டபிள் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். சீலனின் மறைவிடம் குறித்த தகவல்களை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இவரே. பிரபாகரனின் துணைத் தளபதியாக சீலன் செயற்பட்டுவந்தார். இராணுவத்தினரிடம் அகப்படப் போகும் நிலையில் தன்னைச் சுடும்படி தனது தோழர்களிடம் வற்புறுத்தி மரணமுற்றிருந்தார். சீலனின் துணிவை பிரபாகரன் மெச்சினார், அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிட்டார். "திருப்பித் தாக்கும்" நடவடிக்கைகள் ஆனியில் இன்னும் வேகம் பெற்றன. இராணுவம் மற்றும் பொலீஸார் மீதான தாக்குதல்கள், சமூக விரோதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள், உளவாளிகளை களையெடுத்தல், ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றுதல் ஆகிய வடிவங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்த மாதத்திலேயே இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு, லலித் அதுலத் முதலி மீது காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டடத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முயற்சி என்பன இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவங்களை முக்கியமானவையாகக் கருதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சின் செயலாளரான டக்கிளஸ் லியனகேயயை உடனடியாக விசேட பத்திரிக்கை மாநாடொன்றினைக் கூட்டுமாறு கோரியது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் இயங்கிவந்த இலங்கை வங்கிக் கிளையின் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வைகாசி 31 ஆம் திகதி டொயோடா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆயுதம் தரித்த நான்கு இளைஞர்கள் சீமேந்துப் பைகளைக் கொள்வனவு செய்யப்போவதாக பாசாங்குசெய்துகொண்டே காசாளரின் அறைக்குள் நுழைந்தனர். காசோலையொன்றினைக் காசாக்குவது போல அவர் அருகில் சென்று அவரது நெஞ்சுப் பகுதியில், ஆயுதத்தை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனம் அவ்விடத்திற்கருகில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதே நாள் இரவு, உடுவிலைச் சேர்ந்த ராமலிங்கம் பாலசிங்கம் என்பவர் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் கிடந்த காகிதத் துண்டொன்றில் "இவர் ஒரு சமூக விரோதி" என்று எழுதப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த‌ செய்தியொன்றினை வெளியிட்ட டெயிலி நியூஸ் பத்திரிக்கை 4 இலிருந்து 5 வாரங்களில் நிகழ்த்தப்பட்ட 30 ஆவது மின்கம்பத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மறுநாளான ஆனி 1 ஆம் திகதி கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சென்ற இரு ஆயுதம் தரித்த இளைஞர்கள் அங்கிருந்த 75,000 ரூபாய்கள் பணம் மற்றும் பருவகாலச் சீட்டுக்களை எடுத்துச் சென்றனர். ஆனி 2 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குச் சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த 25,000 ரூபாய்கள் பணத்தினை எடுத்துச் சென்றனர். இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு மற்றையவர்கள் இவ்வாறான சிறிய கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதனூடாக ஜெயவர்த்தனவுக்கும் அவரது இராணுவத்திற்கும் தலையிடியினை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை தனது நன்றிக்கடன் ஒன்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் அவர் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலையினை இரண்டாவது முறை உடைத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நிர்மலா நித்தியானந்தனை மீட்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டு, புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சிறையுடைப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பெண்கைதிகளின் கட்டடத்தில் தடுத்து வைக்கப்படிருந்தார். தந்தை செல்வாவின் சாரதியான வாமதேவனிடம் நிர்மலாவை பத்திரமாக வெளியே அழைத்துவரும் பணி அன்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாமதேவனோ அவசரத்தில் அதனை மறந்துவிட்டு, தனியாகத் தப்பி வந்திருந்தார். நிர்மலாவின் கணவரான நித்தியானந்தன் முதலாவது சிறையுடைப்பில் தப்பி வெளியேறி, சென்னைக்கு வந்து புலிகளுடன் இணைந்திருந்தார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையான "விடுதலைப் புலிகள்" இற்கு ஆசிரியராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பல்க்லைக்கழகத்தில் பொருளியற்றுரை விரிவுரையாளராக இணைந்துகொள்வதற்கு முன்னர் அவர் தினகரன் தமிழ்ப் பத்திரிக்கையின் நிருபராகச் செயற்பட்டு வந்தார். நித்தியானந்தன் தம்பதிகளை மீள ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். நிர்மலாவுக்கு அவர் மிகவும் கடமைப்பட்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு உதவியது, அடைக்கலம் கொடுத்தது, ஊக்கம் அளித்தது, தகவல்களை மறைத்தது உட்பட பல குற்றங்களுக்காக நிர்மலா நித்தியானந்தன் 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக இராணுவ அதிகாரி சரத் முனசிங்கவினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டுப் படுகாயமடைந்தவரும், பிரபாகரனின் நெருங்கிய தோழருமான சீலனுக்கு தனது இல்லத்தில் வைத்து சிகிச்சையளித்தமையே அவர் செய்த குற்றமாகும். ஆகவே, இதற்கான பிரதியுபகாரமாக எப்படுபட்டவாது நிர்மலாவை சிறையிலிருந்து மீட்பதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனியின் மூன்றாவது வாரத்திற்குள் நிர்மலாவை மீட்கவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்தது. நிர்மலாவுக்கெதிரான வழக்கு ஆனி மாத்தத்தின் மூன்றாம் வாரத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை கொழும்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஆகவே, முதலாவது சிறையுடைப்பில் செயற்பட்ட பரமதேவை இம்முறையும் தன்னுடன் செயற்படுமாறு பிரபாகரன் பணித்தார். முதலாவது சிறையுடப்பு நிகழ்ந்தபோது பரமதேவா புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனாலும், முதலாவது சிறையுடைப்பில் தப்பிச் சென்ற புலிகளுக்கு ஆதரவானவர்களான நித்தியானந்தன், மதகுரு சிங்கராயர், மதகுரு சின்னராசா, ஜயகுலராஜா மற்றும் ஜயதிலகராஜா ஆகிய அணியினருடன் இவரும் ஒன்றாகவே தப்பிச் சென்றிருந்தார். சென்னைக்குச் சென்றவுடன் அவரும் புலிகளுடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ராமலிங்கம் பரமதேவாவும் ஒருவர். 1975 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவிருந்த குடியரசு தினத்திற்கான கொடியேற்றலினைப் பகிஷ்கரித்து, அந்நாளினை கரிநாளாகவும், இரங்கல் நாளாகவும் கடைப்பிடிக்குமாறு தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி கோரியபோது பரமதேவா ஒரு மாணவனாக இருந்தார். ஆகவே, தான் கல்விகற்ற பாடசாலையில் கொடியேற்றல் நிகழ்வைப் பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதற்காக பாடசாலையிலிருந்து அவர் நிர்வாகத்தினரால் விலக்கப்பட்டார். வன்முறையற்ற, ஜனநாயகவழிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட எத்தனித்த பரமதேவாவை அதிகாரம் வெளியே தள்ளியபோது, அவர் வன்முறையுடன் கூடிய பகிஷ்கரிப்பினைச் செய்யத் திட்டமிட்டார். இருவருடங்களுக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு அவர் குண்டுத் தாக்குதல் ஒன்றினை முன்னின்று நடத்தினார். இதனையடுத்து அவரை பொலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தலைமறைவான பரமதேவா மட்டக்களப்பின் முதலாவது ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலை நாகங்கள் என்றும் பின்னாட்களில் நாகங்கள் என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டார்கள். இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கியது. நாகங்கள், குண்டெறிதல், கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டு பரமதேவாவும் அவரது தோழர்களும் செங்கலடியில் அமைந்திருந்த மக்கள் வங்கிக் கிளையினைக் கொள்ளையிட்டார்கள். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பரமதேவாவைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பொதுவீதியில் கட்டிப் புரண்டனர். இரண்டாவது பொலீஸ்காரர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் அவரது வலதுகரத்தைத் துளைத்துச் சென்றன. கைதுசெய்யப்பட்ட பரமதேவா 1981 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய பரமதேவா மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே அவர் தப்பிச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிர்மலாவை சிறையிலிருந்து மீட்டுவரும் பிரபாகரனின் திட்டத்திற்கு பரமதேவா பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி பரமதேவாவும் அவரது சகாக்களும் இரு வாகனங்களில் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்களுள் இருவர் சிறைக்காவலர்கள் அணியும் சீருடையில் இருந்தனர். இன்னுமொருவர் கைதிகள் அணியும் ஆடையினை அணிந்திருந்தார். மீதிப்பேர் இராணுவச் சீருடையில் இருந்தனர். மாலை 7:15 மணியளவில் அவர்கள் சிறைச்சாலையினை அடைந்தார்கள். சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலில் காவலாளிகளின் சீருடையில் இருந்தவர்கள் தட்டினர். கொழும்பிலிருந்து கைதியொருவரைத் தாம் கொண்டுவந்திருப்பதாகவும், அவரை உள்வாங்கிக்கொள்வதற்காக கதவினைத் திறக்குமாறும் கோரினர். இதனையடுத்து உள்ளிருந்த காவலாளிகள் கதவினைத் திறக்க, சீருடையில் இருந்த புலிகளும், கைதிபோன்று காட்சியளித்த உறுப்பினரும் உள்ளே நுழைந்தனர். நடப்பதுபற்றிச் சந்தேகம் கொண்ட சிறைக் காவலாளி ஒருவர் உடனேயே வாயிற்கதவினைப் பூட்டினார். ஆனால், புலிகள் உள்ளேயிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டனர். சிறையறைகளின் திறப்புக்களை வைத்திருக்கும் காவலாளியைப் புலிகள் தேடியபோது, அவர் ஓடி ஒளித்துக்கொண்டார். ஆகவே உள்ளிருந்த இரண்டாவது கதவினை உடைத்துக்கொண்டு பெண்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி புலிகள் ஓடிச் சென்றனர். இவர்களுக்காகக் காத்திருந்த நிர்மலாவும், இவர்கள் ஓடிவருவதைக் கண்டதும், "நான் இங்கிருக்கிறேன்" என்று கூச்சலிட்டார். அவரது சிறைக்கதவினை உடைத்த புலிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அரசாங்கம் அதிர்ந்துபோனது. ஆறு மாதங்களில் ஒரே சிறைச்சாலை இருமுறை போராளிகளால் உடைக்கப்பட்டிருந்தது. மறுநாள் மாலை, 1984 ஆம் ஆண்டு ஆனி 11 ஆம் திகதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்கிளஸ் லியனகே பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். தப்பிச் சென்றவர்களை மீளக் கைதுசெய்வதற்காக முப்படைகளும் இணைந்த பாரிய தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் தரை மற்றும் கடல்வழி மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் சல்லடை போட்டுத் தேடிவருவதாகவும் கூறினார். ஆனால் அவர்களின் தேடுதல்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இரு வெளியக இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று அதிவிரைவாக நிர்மலாவை தமிழ்நாட்டிற்குக் காவிச் சென்றது. தமது முதலாவது பத்திரிக்கையளர் நிகழ்வில் புலிகள் தாம் பாதுகாப்பாக விடுவித்துக் கொண்டுவந்த நிர்மலாவை பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னையில் காண்பித்தனர். தான் தப்பிவந்த விபரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விபரித்த நிர்மலா, திகில் நிறைந்த கடல்வழிப் பயணம் குறித்தும் பேசத் தவறவில்லை.
  4. When a man loves a woman by Michael Bolton.
  5. நன்றி உங்கள் கதைக்கு @ஈழப்பிரியன்அண்ணா. இங்கு லண்டனில் வின்ரர் டயர் சங்கிலி எல்லாம் தெரியாது அடிக்கடி யுரோ பயணம் காரில் செல்வதால் வின்ரர் டயர் என்னிடமும் உண்டு ஆனால் பெரிய புதிர் என்னவென்றால் நீங்கள் குறிப்பிடும் டொராண்டோ நியுயோர்க் எல்லாத்தையும் விட இங்கிலாந்து வட மத்திய ரேகைக்கு கிட்டவாக உள்ளது ஆனாலும் வின்ரர் காலத்தில் ஒரு நாள் இரு நாள் சிலநேரம் பணியே காணாத வின்ரர் என்று கடந்து விடுகிறோம் ?
  6. ஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர். தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, த‌னியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன். செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது. தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும் கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன. என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார். சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும். தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும் தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர் இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும். ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும் 1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன. அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர். போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன. "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார். பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார். மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர். உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது. ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.
  7. காலத்திற்கேற்ப பாட்டை மாற்றியமைத்துள்ளார்கள். நன்றாகத் தான் உள்ளது.
  8. வணக்கம் வாத்தியார்......! ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே… எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே.. இவளைக்கண்டு பெண் : ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா ஆண் : என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே குழு : ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான் ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா.......! --- ஏ வாடா வாடாப் பையா ---
  9. ஈழப்பிரியன், இப்போதுதான்... முழுப் பதிவையும் வாசித்து முடித்தேன். ஆபத்தில் சிக்கி இருந்தாலும்.. அதில் இருந்து மீண்டு மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வித்தையையும் தெரிந்து, நடந்து கொண்ட விதம் உங்களை ஒரு பக்குவப் பட்ட மனிதராக காட்டியது. நல்ல ஒரு அனுபவ பகிர்வு. 👍 🙂
  10. மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா. https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/ நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம். முற்றும்.
  11. (5) இரவு சாப்பாட்டுக்கு வெளியே போகவும் முடியாது கொண்டுவந்தும் தர மாட்டார்களாம்.சரி இருங்கோ வாறன் என்று சிற்றூண்டிசாலைப் பக்கம் போனால் பூட்டிக்கிடக்கறது. மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள். கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி. பகல் முழுவதும் படுத்தபடியால் இரவு எல்லோருக்கும் நித்திரைக்குப் பிரச்சனை.சரி இப்படியே இருக்க முடியாது சூடாக்கப்பட்ட நீச்சல்தடாகத்தில் குளிக்கப் போகிறேன் யார்யாருக்கு வர விருப்பம் என்றால்.ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நான் துவாயும் எடுத்துக் கொண்டு போய்விட்டேன். எமது அறையில் இருந்து பார்க்க நீச்சல்தடாகம் தெரிந்தது. நான் தைரியத்துடன் போனாலும் வெளியில் இருந்து அறையில் உடுப்புகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் பனிக்குள் நடக்க வேண்டுமே என்பதை எண்ண நடுக்கமாகவே இருந்தது.இனி என்ன சொல்லிப் போட்டு வேற வந்துவிட்டேன் திரும்பவும் போகவா முடியும்.திடுதிடென்று போய் தண்ணீரில் இறங்கிவிட்டேன்.யன்னலால் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.என்ன எண்ணினார்களோ எல்லோரும் வந்துவிட்டனர். ஒருமணி நேரத்துக்கு மேலாக நல்ல சூடான தண்ணீர் குளிக்க நல்ல சுகமாக இருந்தது.வெளியே போகவே மனம் வரவில்லை.முக்கியமாக பிள்ளைகள்.ஒரு மாதிரியாக எல்லோரும் அறைக்குப் போய் நன்றாகவே தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை 11 மணிக்கிடையில் கொட்டேலை விடவேண்டும்.பனியில் சறுக்கி விளையாடாமல் வீடு போகமாட்டோம் என்று மகளும் மருமகனும் வேற அடம்பிடிக்கிறார்கள்.சரி முட்டை முடிச்சுக்களுடன் கிளம்புவோம் அதற்கிடையில் பக்கத்தில் ஏதாவதொரு இடத்தில் சக்கரத்துக்கு சங்கிலியை வாங்கி மாட்டுவோம் என்று முன்னரே பேசிக் கொண்டோம். பனிப் பொழியும்.
  12. செல்லம்! உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.