Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7138
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3034
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46977
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33372
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/17/24 in all areas

  1. நாங்கள் கூடுதலாக ஜேர்மன் கடைகளில் விற்கும் மரக்கறிகளையே சமைத்து சாப்பிடுவோம். சுவையாக சமைத்தால் மேற்கத்திய மரக்கறிகள் நன்றாகத்தான் இருக்கும். ஈழத்தில் நமது பிரதேசங்களில் வேலியில் படரும் செடி கொடியும் உணவுதான். அதனால் தான் எம் பிரதேசங்கள் எவ்வளவு அனர்த்தங்களை சந்தித்தும் பட்டினி சாவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.
  2. இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இராணுவ அடக்குமுறைமீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்களின் மனோநிலையினை தமக்குச் சார்பாக பயன்படுத்த போராளிகள் முற்பட்டனர், முக்கியமாக புலிகள் இச்செயற்பாட்டில் முன்னிலை வகித்தனர். இராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமது தாக்குதல்களை அவர்கள் தீவிரப்படுத்தினர். மேலும், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கிவிட கண்ணிவெடித் தாக்குதல்களையும் கைக்கொள்ளத் தொடங்கினர். மன்னார் மாவட்டத்தில், பூநகரிப் பாதையில் அமைந்திருந்த தள்ளாடி இராணுவ முகாமின் இரவு நேர ரோந்தை எதிர்பார்த்து விக்டர் தலைமையிலான புலிகளின் குழுவொன்று காத்திருந்தது. ஆவணி 11 ஆம் திகதி அதிகாலை 4:30 மணிக்கு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் ரோந்துவந்த இராணுவத்தினரின் அணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 13 இராணுவத்தினரில் 6 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், இன்னுமொருவர் காயப்பட்டார். வழமைபோல தம்மீதான தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மீது தனது பழிவாங்கல்த் தாக்குதல்களை இராணுவம் ஆரம்பித்தது. சிவில் உடையில் மன்னார் நகரத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழருக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் எரிக்கத் தொடங்கினர். அடம்பன் பகுதியில் பொதுமக்களைத் தாக்கியதோடு வீடுகளையும் எரித்தனர். சிலவிடங்களில் முஸ்லீம் மக்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இந்த நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இருபது. கொல்லப்பட்டவர்களில் ஆறு இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தவர். பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் குறித்து மன்னார் ஆயர் ஜெயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார். "ஆக்கிரமிப்பில் ஈடுபடும் இராணுவத்தினர் போன்று அவர்கள் தமது வழியில் அகப்பட்டவை எல்லாவற்றையும் அழித்து நாசம்செய்தபடி செல்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவினை மதிப்பிட அமைச்சர் எச்.எம்.மொகம்மட் அங்கு சென்றிருந்தார். ஜெயாருக்கு அவர் வழங்கிய அறிக்கையில் மன்னாரில் எரிக்கப்பட்ட பெரும்பான்மையான கடைகளும் வீடுகளும் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மொகம்மட்டிடம் பேசுகையில், தள்ளாட்டி இராணுவ முகாமில் தங்கியிருந்த இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் அதிகாரிகளே முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும், வைகாசியில் கொழும்பில் இயங்கிவரும் மொசாட்டின் அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லீம்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பழிவாங்கவே இது நடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட மன்னாரில் ஏற்படுத்தப்பட்ட அழிவினைப் பார்வையிடச் சென்றிருந்தனர். அப்போது கொழும்பில் நடந்துகொண்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் தான் கண்டவற்றை அமிர்தலிங்கம் அறிக்கை வடிவில் வெளியிட்டார். இராணுவத்தினரைப் பாவித்து அரசாங்கம் தமிழரை அழித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழருக்கான அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசுவது பயனற்றது என்று அவர் குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் இராணுவத்தினரால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகையில் நாம் இங்கே அமர்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்துகொண்டு இருக்க முடியாது" என்றும் அவர் கூறினார். இந்திரா காந்தியிடம் கோரிக்கையொன்றினை அன்று விடுத்த அமிர், "பல லட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலை ஒன்றினைச் சந்திக்கும் முன்னர் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இலங்கையில் தமிழர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையடுத்து தமிழ்நாடு, சென்னையில் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழர்களைக் காப்பாற்ற இலங்கையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகளை அவர்கள் நடத்தினர். சென்னையில் அமைந்திருந்த இலங்கையின் துணைத் தூதுவராலயத்திற்கு பேரணியாகச் சென்ற மாணவர்களை பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைக்கவேண்டியதாயிற்று. சென்னையில் மேலும் இவ்வகையான போராட்டங்கள் நடைபெறலாம் என்று அஞ்சிய அன்றைய தமிழ்நாடு அரசு பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒருவார விடுமுறை அளிப்பதாக அறிவித்தது (அன்று எம்.ஜி.ஆர் செய்ததையே 2009 இல் கருநாநிதியும் செய்தார்). இத்தாக்குதல்களையடுத்து கொழும்பு மீது இந்திரா கடுமையான அதிருப்தி கொண்டார். அன்று புது தில்லியின் மனோநிலை குறித்து இந்துவின் செய்தியாளர் ஜி.கே.ரெட்டி பின்வருமாறு எழுதுகிறார், " தமிழர்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறைகளால் இந்திரா காந்தி தனது பொறுமையினை இழந்துவருகிறார்" என்று எழுதினார். ஆவணி 15 ஆம் திகதி செங்கோட்டையில் இருந்து இந்திய மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் இலங்கையரசை அவர் கடுமையாக எச்சரித்தார். கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றுவந்தால், இந்தியா வாளாவிருக்க முடியாது என்று அவர் கூறினார். இராணுவத்தினரினதும், பொலீசாரினதும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் போராளிகளின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களும் செயற்பாட்டில் இறங்கலாயின. புலிகள் நடத்திவரும் தாக்குதல்களின் பிரமாண்டத்தைக் காட்டிலும் தாம் அதிகமாகச் செய்துவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் நகர்வுகள், அவர்களின் சிறிய முகாம்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்குவதையே அன்று புலிகள் செய்துவந்தனர். அவர்களின் இந்த முயற்சி பலனளித்திருந்தது.பல பகுதிகள் இதன்மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அப்பகுதிகளில் தமது நிர்வாகக் கட்டமைப்புக்களையும் புலிகள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து செயற்படுத்த ஆரம்பித்திருந்தனர். ஆவணி 11 முதல் ஆவணி 14 வரையான நான்கு நாட்களில் மட்டும் புலிகள் இரு பொலீஸ் நிலையங்களைத் தாக்கியதோடு கண்ணிவெடித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஆவணி 11, சனிக்கிழமை காலை இராணுவத்தினரின் சீருடையில் வந்த சுமார் 50 புலிகள் ஊர்காவற்றுரையில் இயங்கிவந்த பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறுகையில் பொலீஸாரும் போராளிகளும் காலை 3:30 மணியில் இருந்து நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், முடிவில் போராளிகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார். சண் மற்றும் பிற்காலத்தில் டெயிலி மிறர் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் ஊர்காவற்றுறை தாக்குதலை பின்வருமாறு விபரித்தார், "ஊர்காவற்றுறை பொலீஸ் நிலையத்தின்மீதும் தபால் அலுவலகத்தின்மீதும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. காலை 3:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற நேரத் துப்பாக்கிச் சமரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்". ஆவணி 14 ஆம் திகதி, செவ்வாயன்று வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள். காலை 4:30 மணிக்கு பொலீஸ் நிலையத்திலிருந்த பாதுகாப்பு வெளிச்சம் மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கப் பண்ணியதன் பின்னர் இருட்டில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொலீஸ் நிலையத்தின் முற்பகுதியை மட்டும் விட்டு விட்டு ஏனைய மூன்று பகுதிகளில் இருந்தும் பொலீஸ் நிலையத்தின் மீது கிர்னேட்டுக்களையும், பெற்றொல்க் குண்டுகளையும் எறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளிருந்து நான்குதிசைகளிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலில் சுமார் 50 பொலீஸார் கொல்லப்பட்டதுடன் கட்டடமும் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. ஆனாலும், பொலீஸார் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேநாள் இரவு, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம் காரைநகரில் அமைந்திருந்த பாரிய கடற்படை முகாம் தொகுதி மீது துணிகரமான, பாரிய தாக்குதல் ஒன்றினை ஆரம்பித்தது. இன்று ஈ.பி.டி.பி யின் தலைவராக இருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவே அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவர் சென்னையில் தங்கியிருந்தார். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினரும், தற்போதைய தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார். தோல்வியில் முடிவடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதல் மக்கள் விடுதலை இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதியான ரொபேர்ட் என்று அறியப்பட்ட சுபத்திரனினாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரனினாலும் காரைநகர் முகாம் மீதான தாக்குதலினை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. தாம் அண்மையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த இரு புதிய வழிமுறைகளைப் பாவித்து இத்தாக்குதலினை நடத்தலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தமிழ்நாடு கும்பகோணம் முகாமில் பயிற்றப்பட்டவரும், லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவருமான திருகோணமலையைச் சேர்ந்த சின்னவன் என்பவர் மோட்டார் உந்துகணை தொடர்பான பயிற்சியினைக் கொண்டிருந்தார். தனது இயக்கத்திற்காக மோட்டார்க் குண்டுகளையும் அவரே உள்ளூரில் தயாரித்துமிருந்தார். இதனைவிடவும், இயக்கத்தின் இன்னொரு உறுப்பினரான சுதன் எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட உள்ளூர்க் கவச வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நினைத்தது. மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை. மேலும், அவர்களின் கவச வாகனமும் முகாமின் வாயிலிற்பகுதியில் செயலிழந்து நின்றுவிட்டது. ஆரம்பத்தில் முகாமின் பிற்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றிருந்த கடற்படையினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தாக்குதல் பிசுபிசுத்துப் போனதையடுத்து முகாமின் முற்பகுதி நோக்கி முன்னேறி கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். கடற்படையினரின் பலத்த எதிர்த்தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட, கொல்லப்பட்ட தமது சகாக்களையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு மீதிப்பேர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமது முதலாவது பெண்போராளியை இழந்திருந்தனர். தனது 15 வயதில் மக்கள் விடுதலை இராணுவத்தில் ஷோபா என்கின்ற அந்தப் பெண்போராளி இணைந்திருந்தார்.
  3. 👆 சிலவேளை இதுவாக இருக்குமோ Glacier கூகிள் பண்ணிப் பார்த்த போது இப்படி வருகிறது. பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலங்கள் விலை ஏறியபடியால்த் தான் இப்படி விலை ஏறி உள்ளது. 70 களின் ஆரம்பத்தில் சிறிமா கொண்டுவந்த இறக்குமதி தடையால் பல வீடுகளிலும் இருந்த பூக்கன்றுகளை எல்லாம் வெட்டி அவரவர் தேவைக்கு தோட்டம் செய்தனர். இனிமேலும் இப்படி தொடங்கலாம்.
  4. சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.
  5. எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா?
  6. என்னையும் கொஞ்சம் அடக்குங்களேன் பிளீஸ்..
  7. கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞
  8. புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும் நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார். அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர். புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற‌ கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர். அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார். மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார். ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
  9. திருப்பித் தாக்குதலின் ஆரம்பம் தம்மீதான தாக்குதல்களுக்குத் தமிழர்கள் பதிலளிக்க ஆரம்பித்தது 1984 ஆம் ஆண்டின் வைகாசியில் நடந்தது. பொலீஸ் புலநாய்வாளர்கள் சிலரைக் கொல்வதுடன் இது ஆரம்பமாகியது. வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் புலநாய்வாளர் சார்ஜண்ட் நவரட்ணம் இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் புலநாய்வு செய்துவந்தார். இரு நாட்களுக்குப் பின்னர் பொலீஸ் கொன்ஸ்டபிள் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். சீலனின் மறைவிடம் குறித்த தகவல்களை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இவரே. பிரபாகரனின் துணைத் தளபதியாக சீலன் செயற்பட்டுவந்தார். இராணுவத்தினரிடம் அகப்படப் போகும் நிலையில் தன்னைச் சுடும்படி தனது தோழர்களிடம் வற்புறுத்தி மரணமுற்றிருந்தார். சீலனின் துணிவை பிரபாகரன் மெச்சினார், அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிட்டார். "திருப்பித் தாக்கும்" நடவடிக்கைகள் ஆனியில் இன்னும் வேகம் பெற்றன. இராணுவம் மற்றும் பொலீஸார் மீதான தாக்குதல்கள், சமூக விரோதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள், உளவாளிகளை களையெடுத்தல், ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றுதல் ஆகிய வடிவங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்த மாதத்திலேயே இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு, லலித் அதுலத் முதலி மீது காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டடத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முயற்சி என்பன இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவங்களை முக்கியமானவையாகக் கருதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சின் செயலாளரான டக்கிளஸ் லியனகேயயை உடனடியாக விசேட பத்திரிக்கை மாநாடொன்றினைக் கூட்டுமாறு கோரியது. இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் இயங்கிவந்த இலங்கை வங்கிக் கிளையின் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வைகாசி 31 ஆம் திகதி டொயோடா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆயுதம் தரித்த நான்கு இளைஞர்கள் சீமேந்துப் பைகளைக் கொள்வனவு செய்யப்போவதாக பாசாங்குசெய்துகொண்டே காசாளரின் அறைக்குள் நுழைந்தனர். காசோலையொன்றினைக் காசாக்குவது போல அவர் அருகில் சென்று அவரது நெஞ்சுப் பகுதியில், ஆயுதத்தை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனம் அவ்விடத்திற்கருகில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதே நாள் இரவு, உடுவிலைச் சேர்ந்த ராமலிங்கம் பாலசிங்கம் என்பவர் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் கிடந்த காகிதத் துண்டொன்றில் "இவர் ஒரு சமூக விரோதி" என்று எழுதப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த‌ செய்தியொன்றினை வெளியிட்ட டெயிலி நியூஸ் பத்திரிக்கை 4 இலிருந்து 5 வாரங்களில் நிகழ்த்தப்பட்ட 30 ஆவது மின்கம்பத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மறுநாளான ஆனி 1 ஆம் திகதி கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சென்ற இரு ஆயுதம் தரித்த இளைஞர்கள் அங்கிருந்த 75,000 ரூபாய்கள் பணம் மற்றும் பருவகாலச் சீட்டுக்களை எடுத்துச் சென்றனர். ஆனி 2 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குச் சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த 25,000 ரூபாய்கள் பணத்தினை எடுத்துச் சென்றனர். இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு மற்றையவர்கள் இவ்வாறான சிறிய கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதனூடாக ஜெயவர்த்தனவுக்கும் அவரது இராணுவத்திற்கும் தலையிடியினை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை தனது நன்றிக்கடன் ஒன்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் அவர் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலையினை இரண்டாவது முறை உடைத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நிர்மலா நித்தியானந்தனை மீட்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டு, புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சிறையுடைப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பெண்கைதிகளின் கட்டடத்தில் தடுத்து வைக்கப்படிருந்தார். தந்தை செல்வாவின் சாரதியான வாமதேவனிடம் நிர்மலாவை பத்திரமாக வெளியே அழைத்துவரும் பணி அன்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாமதேவனோ அவசரத்தில் அதனை மறந்துவிட்டு, தனியாகத் தப்பி வந்திருந்தார். நிர்மலாவின் கணவரான நித்தியானந்தன் முதலாவது சிறையுடைப்பில் தப்பி வெளியேறி, சென்னைக்கு வந்து புலிகளுடன் இணைந்திருந்தார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையான "விடுதலைப் புலிகள்" இற்கு ஆசிரியராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பல்க்லைக்கழகத்தில் பொருளியற்றுரை விரிவுரையாளராக இணைந்துகொள்வதற்கு முன்னர் அவர் தினகரன் தமிழ்ப் பத்திரிக்கையின் நிருபராகச் செயற்பட்டு வந்தார். நித்தியானந்தன் தம்பதிகளை மீள ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். நிர்மலாவுக்கு அவர் மிகவும் கடமைப்பட்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு உதவியது, அடைக்கலம் கொடுத்தது, ஊக்கம் அளித்தது, தகவல்களை மறைத்தது உட்பட பல குற்றங்களுக்காக நிர்மலா நித்தியானந்தன் 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக இராணுவ அதிகாரி சரத் முனசிங்கவினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டுப் படுகாயமடைந்தவரும், பிரபாகரனின் நெருங்கிய தோழருமான சீலனுக்கு தனது இல்லத்தில் வைத்து சிகிச்சையளித்தமையே அவர் செய்த குற்றமாகும். ஆகவே, இதற்கான பிரதியுபகாரமாக எப்படுபட்டவாது நிர்மலாவை சிறையிலிருந்து மீட்பதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனியின் மூன்றாவது வாரத்திற்குள் நிர்மலாவை மீட்கவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்தது. நிர்மலாவுக்கெதிரான வழக்கு ஆனி மாத்தத்தின் மூன்றாம் வாரத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை கொழும்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஆகவே, முதலாவது சிறையுடைப்பில் செயற்பட்ட பரமதேவை இம்முறையும் தன்னுடன் செயற்படுமாறு பிரபாகரன் பணித்தார். முதலாவது சிறையுடப்பு நிகழ்ந்தபோது பரமதேவா புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனாலும், முதலாவது சிறையுடைப்பில் தப்பிச் சென்ற புலிகளுக்கு ஆதரவானவர்களான நித்தியானந்தன், மதகுரு சிங்கராயர், மதகுரு சின்னராசா, ஜயகுலராஜா மற்றும் ஜயதிலகராஜா ஆகிய அணியினருடன் இவரும் ஒன்றாகவே தப்பிச் சென்றிருந்தார். சென்னைக்குச் சென்றவுடன் அவரும் புலிகளுடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ராமலிங்கம் பரமதேவாவும் ஒருவர். 1975 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவிருந்த குடியரசு தினத்திற்கான கொடியேற்றலினைப் பகிஷ்கரித்து, அந்நாளினை கரிநாளாகவும், இரங்கல் நாளாகவும் கடைப்பிடிக்குமாறு தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி கோரியபோது பரமதேவா ஒரு மாணவனாக இருந்தார். ஆகவே, தான் கல்விகற்ற பாடசாலையில் கொடியேற்றல் நிகழ்வைப் பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதற்காக பாடசாலையிலிருந்து அவர் நிர்வாகத்தினரால் விலக்கப்பட்டார். வன்முறையற்ற, ஜனநாயகவழிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட எத்தனித்த பரமதேவாவை அதிகாரம் வெளியே தள்ளியபோது, அவர் வன்முறையுடன் கூடிய பகிஷ்கரிப்பினைச் செய்யத் திட்டமிட்டார். இருவருடங்களுக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு அவர் குண்டுத் தாக்குதல் ஒன்றினை முன்னின்று நடத்தினார். இதனையடுத்து அவரை பொலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தலைமறைவான பரமதேவா மட்டக்களப்பின் முதலாவது ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலை நாகங்கள் என்றும் பின்னாட்களில் நாகங்கள் என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டார்கள். இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கியது. நாகங்கள், குண்டெறிதல், கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டு பரமதேவாவும் அவரது தோழர்களும் செங்கலடியில் அமைந்திருந்த மக்கள் வங்கிக் கிளையினைக் கொள்ளையிட்டார்கள். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பரமதேவாவைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பொதுவீதியில் கட்டிப் புரண்டனர். இரண்டாவது பொலீஸ்காரர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் அவரது வலதுகரத்தைத் துளைத்துச் சென்றன. கைதுசெய்யப்பட்ட பரமதேவா 1981 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய பரமதேவா மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே அவர் தப்பிச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிர்மலாவை சிறையிலிருந்து மீட்டுவரும் பிரபாகரனின் திட்டத்திற்கு பரமதேவா பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி பரமதேவாவும் அவரது சகாக்களும் இரு வாகனங்களில் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்களுள் இருவர் சிறைக்காவலர்கள் அணியும் சீருடையில் இருந்தனர். இன்னுமொருவர் கைதிகள் அணியும் ஆடையினை அணிந்திருந்தார். மீதிப்பேர் இராணுவச் சீருடையில் இருந்தனர். மாலை 7:15 மணியளவில் அவர்கள் சிறைச்சாலையினை அடைந்தார்கள். சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலில் காவலாளிகளின் சீருடையில் இருந்தவர்கள் தட்டினர். கொழும்பிலிருந்து கைதியொருவரைத் தாம் கொண்டுவந்திருப்பதாகவும், அவரை உள்வாங்கிக்கொள்வதற்காக கதவினைத் திறக்குமாறும் கோரினர். இதனையடுத்து உள்ளிருந்த காவலாளிகள் கதவினைத் திறக்க, சீருடையில் இருந்த புலிகளும், கைதிபோன்று காட்சியளித்த உறுப்பினரும் உள்ளே நுழைந்தனர். நடப்பதுபற்றிச் சந்தேகம் கொண்ட சிறைக் காவலாளி ஒருவர் உடனேயே வாயிற்கதவினைப் பூட்டினார். ஆனால், புலிகள் உள்ளேயிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டனர். சிறையறைகளின் திறப்புக்களை வைத்திருக்கும் காவலாளியைப் புலிகள் தேடியபோது, அவர் ஓடி ஒளித்துக்கொண்டார். ஆகவே உள்ளிருந்த இரண்டாவது கதவினை உடைத்துக்கொண்டு பெண்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி புலிகள் ஓடிச் சென்றனர். இவர்களுக்காகக் காத்திருந்த நிர்மலாவும், இவர்கள் ஓடிவருவதைக் கண்டதும், "நான் இங்கிருக்கிறேன்" என்று கூச்சலிட்டார். அவரது சிறைக்கதவினை உடைத்த புலிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அரசாங்கம் அதிர்ந்துபோனது. ஆறு மாதங்களில் ஒரே சிறைச்சாலை இருமுறை போராளிகளால் உடைக்கப்பட்டிருந்தது. மறுநாள் மாலை, 1984 ஆம் ஆண்டு ஆனி 11 ஆம் திகதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்கிளஸ் லியனகே பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். தப்பிச் சென்றவர்களை மீளக் கைதுசெய்வதற்காக முப்படைகளும் இணைந்த பாரிய தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் தரை மற்றும் கடல்வழி மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் சல்லடை போட்டுத் தேடிவருவதாகவும் கூறினார். ஆனால் அவர்களின் தேடுதல்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இரு வெளியக இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று அதிவிரைவாக நிர்மலாவை தமிழ்நாட்டிற்குக் காவிச் சென்றது. தமது முதலாவது பத்திரிக்கையளர் நிகழ்வில் புலிகள் தாம் பாதுகாப்பாக விடுவித்துக் கொண்டுவந்த நிர்மலாவை பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னையில் காண்பித்தனர். தான் தப்பிவந்த விபரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விபரித்த நிர்மலா, திகில் நிறைந்த கடல்வழிப் பயணம் குறித்தும் பேசத் தவறவில்லை.
  10. ஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர். தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, த‌னியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன். செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது. தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும் கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன. என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார். சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும். தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும் தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர் இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும். ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும் 1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன. அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர். போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன. "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார். பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார். மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர். உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது. ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.
  11. நான் இளமையில் ஓடி ஓடி உழைத்து பணம் பொருள் தேடி ஓய்ந்த பிறகுதான் தெரிகிறது தவற விட்ட ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம் என......
  12. உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்! வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்… காரட் 1 கிலோகிராம் 1,450 ரூபாய் ப்ரோக்கோலி 1 கிலோகிராம் 3,600 ரூபாய் முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாய் முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாய் கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாய் நோகோல் 1 கிலோகிராம் 270 ரூபாய் குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாய் குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாய் துளசி 1 கிலோகிராம் 2600 ரூபாய் சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300ரூபாய் சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200ரூபாய் செலரி 1 கிலோகிராம் 700 ரூபாய் கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450ரூபாய் பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய் சாலட் 1 கிலோகிராம் 1600ரூபாய் சிவப்பு சாலட் 1 கிலோகிராம் 1800ரூபாய் மிஞ்சி 1 கிலோகிராம் 900ரூபாய் இதேவேளை, தம்புள்ளை மொத்த விற்பனை நிலையத்தில் பழங்களின் மொத்த விலைகள் வருமாறு… சர்க்கரை வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய் புளி வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய் கார் 1 கிலோகிராம்290 ரூபாய் அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய் கொய்யா 1 கிலோகிராம் 280 ரூபாய் தர்பூசணி 1 கிலோகிராம் 140 ரூபாய் அன்னாசிப்பழம் 1 கிலோகிராம் 400 ரூபாய் அல்போன்சா 1 கிலோகிராம் 1700 ரூபாய் அவகேடோ 1 கிலோகிராம் 290 ரூபாய் ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. http://www.samakalam.com/உச்சம்-தொட்ட-மரக்கறி-வில/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.