Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    2957
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    7596
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/18/24 in all areas

  1. முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன், முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி, வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள். முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்தது. அதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை. முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள். டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான். பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம் “சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணு” என்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை. முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார். “டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது. “தொடையில் சுட்டால்…” “எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு” கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள். முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின. துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்” அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது. பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.
  2. ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran
  3. இப்ப வெளிநாட்டுக்காசை எடுத்து செலவழிச்சு வாழுற புத்தி வந்திட்டுது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத சனங்கள்தான் உழைத்து சீவிக்குது. எத்தனை காணிகள் சும்மா கிடக்குது. தோட்ட வேலைக்கு ஆள் தேவை என்றால் ஒருத்தரும் வருகிறரா;கள் இல்லையாம். தோட்டக்காரர்கள் தாங்கள் மட்டும் கஸ்ரப்பட்டு உழைக்கறதால அளவாகச் செய்வதால் உற்பத்தி குறைகிறது. 30 -35 வருடங்களுக்கு முன்னால் வெங்காயம் வெட் வருபவர்கள் கோழிக்கால் வெங்காயத்தைக் கொண்டு போய் சமைப்பார்கள்.(விளையாத வெங்காயம்.). அத மட்டுமல்ல வெங்காய அறுவடை முடிந்த பின்னர் அங் கே சிதறிக்கிடக்கும் வெங்காயங்களைச் இலவலசமாக எடுத்துச் செல்வார்கள். பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் கிணறுகசை; சுற்சி மிளகாய் நடுவார்கள் அவற்றில் வரும் காய்கள் அவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தம். எமது முன்னோர்கள் படிக்கா விட்டாலும் எவ்வளவு மனிதாபிமானத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ். ஒவ்வொருவரும் தங்கள் வீட்ஐடச் சுற்றி வீட்டுத் தோட்டம் லவத்தாலே அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிடைக்கும். நெல் அறுவடை முடிந்த பின்னர் எலிப் பொந்தில் சேகரித்து வைக்கப்பட் நெல்மணிகளை எத்தனை பேர் சேகரித்திருக்கிறார்கள். இப்பொழுது உலகுக்கு உணவு தரும் விவசாயத்தைக் கேவலமான தொழிலாகப் பார்த்ததால் வந்த வினை. உழுதுண்டு வாழ்வானனே வாழ்வான்- மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.
  4. கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.
  5. எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள், மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது
  6. வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் எம் வாழ்வு சிறக்கத் தந்தாய். இத்தனையும் தந்த உன்னை மறக்கலாமோ? இடையில் வந்த பணத்தின்பின் ஓடலாமோ? செத்தபின்பும் செயற்கை என்றும் வருவதில்லை சிறந்த இந்த இயற்கை எம்மைப் பிரிவதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி. 17.01.2024
  7. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன
  8. நிழலி, செறிந்த அல்கஹோலைக் குறைத்திருப்பது நல்ல விடயம். ஒரு சாதாரண பிராண்ட் வைன் ஒரு serving இல் (இது 5 அவுன்ஸ்) 1 முதல் 2 கிராம் சீனி இருக்கும் (ஒப்பீட்டிற்கு அண்ணளவாக அரைத்தேக்கரண்டிக்கும் குறைவான சீனி). இதுவே sweet wine என்ற வகையானால் இந்த சீனியின் அளவு 4 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், நீங்கள் sweet wine அருந்த மாட்டீர்களென ஊகிக்கிறேன். நீரிழிவு இருக்கும் என் நண்பர்கள் சிலர் "வொட்காவில் சீனி இல்லை, எனவே பருகலாம்" என புல் கட்டுக் கட்டுவர். உண்மையில், அல்கஹோலில் நேரடியாக சீனி இல்லா விட்டாலும், இரத்தத்தில் அல்ககோல் அதிகரித்தால், இரத்த குழூக்கோஸ் எரிக்கப் படாமல் சும்மா இரத்தத்தில் சுற்றித் திரியும். எனவே, குறைந்த அல்கஹோல் செறிவுடைய பானங்கள் பாதுகாப்பானவை என்று விளக்க முயல்வேன். "இவனோட கதைச்சால் வெறி இறங்கிடும்" என்று விலகி ஓடி விடுவர்😂.
  9. ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள். ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள் Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன. என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.
  10. இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம்.
  11. என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்சைகளைக் குழந்தைகளில் செய்கிறார்கள் என இணையக் குப்பையில் இருந்து ஆதாரமில்லாத தகவலை இங்கே பதிந்திருக்கிறீர்கள். ஓநாய் வீடியோ தேடும் நேரத்தின் பத்திலொரு பங்கு நேரம் போதும் - AAP இன் பால் மாற்ற சிகிச்சை விதிகள் எவையென்று தேடிப்பார்க்க. இப்படியான தவறான தகவல்களை எழுதி விட்டு சவாலுக்குட்படுத்துபவனை அடக்கு முறையாளன், சூடு சொரணையற்றவன் என்று சம்பந்தமேயில்லாமல் திட்டல் வேற. 2. திரியோடு ஒட்டிய கருத்து: ஈராக், ஈரான், மேற்கு பற்றிய திரியில் ஒரு பாலின உறவு , பால் மாற்றம் பற்றிய பொய் தரவுகளை யார் கொண்டு வந்தது? வாசகர்களே தேடிப் பார்க்கட்டும். 3. சீண்டல்: உங்கள் மருந்தே உங்களுக்கு ஏன் கசக்கிறது? நேரே பதில் சொல்லும் துணிவோ, நேர்மையோ இல்லாமல் உங்கள் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை எப்படி நீங்கள் விளித்திருக்கிறீர்கள் இது வரை? எனவே உங்கள் பாணியிலேயே ஈரானைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் புரிந்திருப்பது திருப்தி. பி.கு: இணையத்தில் கலாச்சார யுத்தம் நடத்தும் தீவிர வலது சாரிகள், தங்கள் மருத்துவ/அறிவியல் அடிப்படையற்ற குப்பைகளைப் பரப்ப உங்கள் போன்ற ஆட்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் தகவல்களை சரி பார்க்காமல் யாழுக்கு எடுத்து வருகிறீர்கள் - உங்களுடைய இந்த அறிவடிமைத் தனம் பற்றி ஒரு கரிசனைகூட இல்லாமல், சரியான தகவலைத் தர முயல்பவனை நோக்கி பாட்ஷா பாணி மிரட்டல் விட்டிருக்கிறீர்கள், அச்சம் வரவில்லை, புன்னகையே வருகிறது.
  12. உங்கள் எண்ணம் தவறு. எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன. நான் நினைக்கிறேன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களை அல்லது இன்னமும் புலிகளின் பயணம் இருக்கு என்றபடியாலோ என்னவோ யாருமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.
  13. 👆 சிலவேளை இதுவாக இருக்குமோ Glacier கூகிள் பண்ணிப் பார்த்த போது இப்படி வருகிறது. பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலங்கள் விலை ஏறியபடியால்த் தான் இப்படி விலை ஏறி உள்ளது. 70 களின் ஆரம்பத்தில் சிறிமா கொண்டுவந்த இறக்குமதி தடையால் பல வீடுகளிலும் இருந்த பூக்கன்றுகளை எல்லாம் வெட்டி அவரவர் தேவைக்கு தோட்டம் செய்தனர். இனிமேலும் இப்படி தொடங்கலாம்.
  14. இனிமேல் கோலம் போடுவியா. 😂
  15. மனதைக் கவர்ந்த ஒரு அனுபவப் பகிர்வு...! தொடர்ந்து எழுதுங்கள், கவி அருணாசலம்...!
  16. ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும். இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.
  17. வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியானாவர்கள். இலங்கையில் இருந்து அரசியல் செய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா ?? பாதுகாப்பு வழங்கும?? இல்லையே ! எனக்கு தெரிந்த பத்து பேர் வரை 2009. ஆறாம் மாதத்தின் பின் ஆயுதம் ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுளளார்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள்
  18. உங்களை மாதிரியே கவியரும் தொடர் கதை மூலம் ஒரு கொக்கியைப் போட்டு எல்லாரையும் இங்கேயே சுத்தி வர வைச்சிருக்கிறார்😂. சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!
  19. விசுகரது எழுத்தில் போராட்டம் மக்களுக்கானது என்பது மறைந்து, போராட்டம் போராடியவர்களுக்கானது அத்துடன் அது தொடர்பாக வேறு எவரும் கதைக்க முடியாது எனும் ஒற்றைச் சிந்தனை தொக்கு நிற்கிறது. அதனால்தான் கொஞ்சம் கடினமாக கருத்துரைக்கப்பட்டது. 😏
  20. கந்தையா, தமிழீழம் மலரும் நிலை என்பது, “அரசியல் ரீதியில் எமக்கு சாதகமான நிலை உலகில் ஏற்பட்டு உலக நாடுகள் பலவற்றால், குறைந்தது சக்திவாய்த நாடுகளான மேற்கு நாடுகளாலாவது தமிழீழம் என்ற நாடு அங்கீகரிக்கப்படும் நிலை” ஆகும். அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கான சமிஜ்கைகளாவது இருந்திருக்க வேண்டும். ஒரு நாட்டை உருவாக்குவதென்றால் அந்த அங்கீகாரமே இன்றியமையாதது. அந்த வகையில் தமிழர் போராட்டத்தில் தமிழீழம் மலரும் நிலை என்று எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பல வெற்றிகளைப் பெற்று இராணுவநிலையில் பலமாக இருந்த காலப்பகுதியில் கூட தமிழீழம் மலரும் என்ற நிலை உலகில் இருக்கவில்லை என்பதே நிதர்சனம். இராணுவ பலம் உச்சதில் இருந்த காலப்பகுதியில் கூட அரசியல்/ ராஜதந்திரப் பலம் தமிழரிடம் இருக்க வில்லை.
  21. காலநிலை நல்லா இல்லாட்டிக் கூட, வீட்டுக்குள் நன்கு நடக்கலாம். அதைத் தான் நான் செய்கின்றேன் இந்த குளிர் காலத்தில் Basement இல் அல்லாவிடின் Hall லுக்குள் நடக்கின்றேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 கிலோ மீற்றர். @Justin Hard liquor இனை கைவிட்டு இப்ப white wine இனை அருந்துகின்றேன். White wine இல் சீனி அதிகமா? (எனக்கு ரெட் வைன் ஒத்துக் கொள்வதில்லை... 'பின்விளைவுகள்' கடுமையாக இருக்கும்)
  22. புலவர் ஒரு பகுதி இந்த எலிகளை பிடிப்பதற்கு மண்வெட்டி தடி பொல்லுகளுடன் நிற்பார்கள். அவர்களுடன் வந்த பெண்களை புத்துக்குள் உள்ள நெல்லை அள்ள ஆண்கள் எலிகளை அடித்து பிடித்து கொண்டு போய் சமைப்பார்கள். எலி என்றவுடன் வீடுகளில் ஓடித் திரியும் எலிகளைத் தான் இப்போதைய ஆட்களுக்கு தெரியும். புத்தெலிகளை கண்டறிந்திருக்க மாட்டார்கள். தைப்பொங்கலுக்கு அரிசி வாங்கிப் பொங்குவதில்லை. புதிர் எடுத்து குத்தி வந்த அரிசியில்த் தான் பொங்குவார்கள்.
  23. போராட்டம் போரடிய. முறை. பிழை என்று சொல்ல வேண்டாம் அது சரியானதாகும் தமிழ் ஈழம் அரசையும் பகுதியளவில். நிறுவிக்கொண்டு போரடினார்கள். இந்த உங்களுக்குகான. தீர்வு என்று ஒரு தீர்வு முன் வைக்கும் தீர்வை தரக்கூடிய தகுதியை கொண்டிருக்கும் தரப்புடன் பேசலாம் குந்தியிருக்காது முஸ்லிம்கள் போல் நாலு திருமணம் செய்து இருபது பிள்ளைகள் பெறுங்கள் தமிழன் பெரும்பான்மையாக முடியும் இலங்கையை ஆளவும் முடியும் 😂
  24. அது கருணாவே கூறியது. ஒவ்வொரு தரப்பும் தமது தமது நடவடிக்கைகளை முடிவுகளை நியாயப்படுத்த ஏதோ ஒரு காரணத்தை கூறும். அதிலொன்றுதான் இதுவும். எமக்கு உள்ள சொந்த அறிவை பயன்படுத்தி இவ்வாறாக தம்மை நியாயப்படுத்த ஒவ்வொரு தரப்புகள் கூறும் காரணங்களை காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து பார்பபதே உண்மையை அறியும் வழி. சமஸ்டி உடன்பாடு ஏற்பட்டடது 2002 டிசம்பர். கருணா பிரிந்தது 2004 மார்ச் . ஆகவே சமஸ்டி உடன் பாட்டுக்கும் கருணா பிரிவுக்கும. தொடர்பு இருப்பதாக நான் நம்பவில்லை.
  25. மேற்கத்திய BBC,CNN போன்ற ஊடகங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்கள் விசுகர்! இதே ஊடகங்கள் தான் ஈராக்கில் கெமிக்கல் ஆயுதங்கள் உள்ளது என தார் பீப்பாக்களை காட்டி உலகில் உள்ள எல்லா ஊடகங்களையும் எல்லாம் மக்களையும் நம்ப வைத்தவர்கள். இதே மேற்கத்தைய ஊடகங்கள் தான் ஈழத்தில் நடந்த பேரழிவுகள் அனைத்தையும் மறைத்தவர்கள். மேற்கத்தையவர்களே இப்போது தங்கள் முக்கிய ஊடக செய்திகளை நம்புவதை குறைத்துக்கொண்டு வருகின்றார்கள். அதற்காக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் நம்பகரமானவை என நான் சொல்ல வரவில்லை.
  26. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் .......! 😁
  27. பட மூலாதாரம்,REUTERS 17 ஜனவரி 2024, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது. இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு பாகிஸ்தான். பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. செவ்வாய்க்கிழமை தாக்குதல் இரு நாடுகளின் எல்லையான பலுசிஸ்தானின் பரந்த தென்மேற்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தாக்கியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “இரான் தனது வான்வெளியில் தூண்டுதலின்றி அத்துமீறி நுழைந்ததை” கடுமையாகக் கண்டித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சம்பவத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியது. “பாகிஸ்தானுக்கும் இரானுக்கு இடையே பல தகவல்தொடர்பு சேனல்கள் இருந்தபோதிலும் இந்த சட்டவிரோத செயல் நடந்துள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்குவதாகவும்” கூறியுள்ளது. இரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மை மீதான இந்த அப்பட்டமான மீறல் மற்றும் அதன் விளைவுகளுக்கு இரானே பொறுப்பு,” என்றும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரான் திங்கட்கிழமை இரவு, வடக்கு இராக்கில் உள்ள நகரமான இர்பிலில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. காஸா நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்றா பாலத்தீனிய குழுவான ஹமாஸ் இடையே அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரானின் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோதல்களை பெரிதாக்குவதில் ஈடுபட விரும்பவில்லை என்று இரான் அறிவித்திருந்தாலும், அதன் "எதிர்ப்பு அச்சு" என்று அழைக்கப்படும் குழுக்கள் பாலத்தீனியர்களுடன் ஒற்றுமை காட்ட இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலிய படைகளுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, ஷியா போராளிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கியுள்ளனர். ஹமாஸ் தலைவரை லெபனானில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல். புரட்சிகர காவலர் தளபதி சிரியாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இராக் மீதான விமானத் தாக்குதலில் இராக் போராளிகள் தலைவரை அமெரிக்கா கொன்றுள்ளது. மேலும், ஏமனில் ஹூத்தி இலக்குகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பல காலமாகவே, பாகிஸ்தானும் இரானும், ஜெய்ஷ்-அல்-அத்ல் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை எதிர்த்து, மக்கள் தொகை குறைவான இந்த எல்லைப் பகுதியில் போராடி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 900 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு என்பது இரு அரசுகளுக்கும் நீண்ட காலமாக கவலையாகவே இருந்து வருகிறது. கடந்த மாதம் எல்லைக்கு அருகே நடந்த தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-அல்-அத்ல் குழுவை காரணமாக இரான் கூறுகிறது. இந்த தாக்குதல்களில் பல இரானிய காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர். அப்போது, இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹீடி, இந்த தாக்குதல்களுக்கு காரணமான போராளிகள் பாகிஸ்தானில் இருந்துதான் தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார். அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்தின் தகவலின்படி, ஜெய்ஷ்-அல்-அத்ல் சிஸ்தான்-பலுசிஸ்தானில் இயங்கும் "மிகவும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க" சுன்னி போராளி குழு ஆகும். https://www.bbc.com/tamil/articles/c3gy513p9xwo
  28. இந்த தாக்குதலை முன்னரே அறிந்திருந்த புலிகள் தாக்குதல் தோல்வியிலிருந்த ஈபிஆர் போராளிகளை பத்திரமாக மீட்டதாக கதை வந்தது. இதில் உண்மை பொய் தெரியவில்லை.
  29. ஓம் ...அதற்காக எவ்வளவு காலத்திற்கு எல்லாத்தையும் மூடி மறைத்து கொண்டு தாங்கள் விட்ட பிழைகளை கதைக்காமல் மற்றவரை மற்றும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்
  30. நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே, என்று சொன்னான், என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு, அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, L+T+T+E தமிழ் டைகர், பிர+பா+கரன் பேசுற மொழிதானே தமிழ் .? அதைதான் நீங்களும் பேசுறிங்களா? என்று கேட்டான் .நான் ஆச்சரியத்துடன் ஆம்! என்றேன். அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி, என் குரலை பதிவு செய்தார்கள். பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள், அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்.. நான் வெளியே வந்து யோசித்தேன் என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழர் இருக்கிறோம், எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு? அந்தமாதிரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான், நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று, அப்பத்தான் எனக்கு புரிந்தது நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன்? நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிர+பாக+ரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன்.. பிர+பாக+ரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை.. நன்றி . கவிப்பேரரசு வைரமுத்து முகநூலில் இருந்து
  31. உங்களை சந்திக்க வேண்டும் ....என்னுடைய படத்தையும் உங்களை கொண்டு வரைய வேண்டும் என்பது என் ஆசை
  32. கட்டட வேலை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி போலவே இருக்கிறது.
  33. ஆஹா ....ஏராளமான பதிவுகள்.........நன்றி ஏராளன்........! 😂
  34. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, 1938 இல் செக்கோஸ்லோவாக்கியாவை விட்டு வெளியேற வின்டன் 669 குழந்தைகளுக்கு உதவினார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் படையினர் செக்கோஸ்லோவாக்கியாவின் வடக்குப் பகுதியான சூடேட்டென்லாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியதைக் கண்டு, ஆயிரக்கணக்கான யூத குடும்பங்கள், தலைநகரான ப்ராக் நோக்கி பயத்தில் வெளியேறினர். அவர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். குறைந்தபட்சம் அவர்கள் இன்னும் சில வாரங்களே உயிர்வாழ முடியும். இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் திட்டத்தினால் பல குடும்பங்களுக்கு விடிவு காலம் கிடைத்தது. 1938 ஆம் ஆண்டில், வின்டன் ஒருங்கிணைத்த திட்டத்தால் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து 669 யூத குழந்தைகளை இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு முகாம்களில் சேர்க்க முடிந்தது. இவரின் இந்த செயல், போரின்போது குறைந்தது 1,200 யூதர்களை போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் பணியமர்த்தி உயிரைக் காப்பாற்றிய ஜெர்மன் குடிமகன் ஆஸ்கர் ஷிண்ட்லரின் செயல்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஷிண்ட்லரின் கதையைப் போலல்லாமல், வின்டன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மறக்கப்பட்டிருந்தார். 1988-இல் அவரது மனைவி கிரேட், ஹோலோகாஸ்ட் ஆராய்ச்சியாளர் ஒருவருடன் இணைந்து, அரை நூற்றாண்டுக்கு முன்பு தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை பகிர்ந்தபோதுதான், இவர் கதை வெளிச்சத்துக்கு வந்தது. விண்டனின் வீரச் செயல் பற்றிய கதை, ஆண்டனி ஹாப்கின்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் '‘ஒன் லைப்" என்ற படத்தின் மூலம் திரையில் வெளியாக இருக்கிறது. படக்குறிப்பு, அந்தோனி ஹாப்கின்ஸ் "எ லைஃப்" படத்தில் வின்டனாக நடிக்கிறார். பனிச்சறுக்கு பயணமில்லை நிகோலஸ் வின்டன், 1909 ஆம் ஆண்டு யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவர்கள் தங்கள் குடும்பப்பெயரை வெர்டைமரில் இருந்து வின்டன் என மாற்றி, ஆங்கிலிகன் தேவாலயத்தில் நிக்கோலஸிற்கு ஞானஸ்நானம் செய்தனர். ஐரோப்பாவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் அவரது உறவினர்களிடமிருந்து நிக்கோலஸிற்கு, ஐரோப்பாவில் யூத மக்களின் மீது நாஜிக்களின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி ஒரு தனி கண்ணோட்டம் கிடைத்தது. அதனால்தான் 1938-இல் அவர் தனது நண்பரான மார்ட்டின் பிளேக்கிடமிருந்து பெற்ற கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக திட்டமிட்டிருந்த அவரது பனிச்சறுக்கு (Skiing) பயணத்தை ரத்து செய்தார். "என்னிடம் மிகவும் சுவாரஸ்யமான வேலை இருக்கிறது. எனக்கு உங்கள் உதவி தேவை. ஸ்கீயிங் பொருட்களை கொண்டு வருவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று பிராகிலிருந்து பிளேக் எழுதினார். அங்கு அவர் செக்கோஸ்லோவாக்கியாவின் இங்கிலாந்து அகதிகள் குழுவில் பணியாற்றினார். இந்த அழைப்பு இதற்கு முன்னெப்போதுமில்லாத மனிதாபிமான நெருக்கடி குறித்து விண்டனை ஆராயச் செய்யும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செக்கோஸ்லோவாக்கியாவின் சூடேட்டென்லாண்ட் பகுதியில் உள்ள ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஹிட்லரை இரு கரம் நீட்டி வரவேற்றனர். செயல்படுத்தப்பட்ட திட்டம் என்ன? வின்டன் ப்ராக் வந்தபோது, கடும் பனிக்காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான அகதிகள் முகாம் நிரம்பியிருப்பதைக் கண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வரும் சூழ்நிலைகளை கண்டதே அவரை ஒரு திட்டத்தை வகுக்க நேரிட்டது. வின்டன் செல்வாக்கு மிகுந்த இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால், இளைய அகதிகளை ஐக்கிய ராஜ்யத்திற்கு (United Kingdom) அனுப்பிவைக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். விண்டனும் அவரது சக பணியாளர்களுமான மார்ட்டின் பிளேக் மற்றும் டோரீன் வாரினரும் ப்ராக் நகரில் ஒரு ஹோட்டலை தங்கள் செயல்பாட்டு மையமாக மாற்றி, தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப விரும்பும் குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். லண்டனில், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசாங்கம் விதித்திருந்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, அக்குழந்தைகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் நூற்றுக்கணக்கான ஆவணங்களை நிர்வகிப்பது விண்டனின் பணியாக இருந்தது. ஐக்கிய ராஜ்யத்தில் உறவினர்கள் இல்லாத ஒவ்வொரு அகதிகளுக்கும் மாற்றுக் குடும்பங்களைக் கூட விண்டன் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் 2015 இல் தனது 106 வயதில் இறந்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வின்டன் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டியிருந்தது. மேலும் இங்கிலாந்து குழந்தைகளை நகர்ப்புற மையங்களில் இருந்து இடமாற்றம் செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டங்களிலிருந்தும் அவருக்கு உதவி கிடைத்தது. 1939 ஆம் ஆண்டில், வின்டன் ப்ராக் நகரிலிருந்து எட்டு ரயில்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து, 669 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். இதை அப்போரில் இருந்து தப்பித்து 2020 ஆம் ஆண்டு இறந்த, ரூத் ஹலோ 2015 இல் பிபிசியுடன் பேசுகையில் தெரிவித்தார். "ஒரு ஸ்டீம் என்ஜின் இருந்தது. பழைய பெட்டிகள் மரப் பலகைகளால் செய்யப்பட்டு இருந்தன". "எங்கள் அனைவரிடமும் எண் குறியீடுகளுடன் இருக்கும் ஒரு அட்டைப் பலகை கயிற்றில் தொங்கவிடப்பட்ட பின்னரே அவர்கள் எங்களை வண்டிகளில் ஏற்றினார்கள்" என்று ஹலோவா பிபிசியிடம் கூறினார். அந்தப் பயணத்தை ஒரு "சாகசமாக" பார்த்ததால் "உற்சாகமாக" இருந்ததாகவும், ஆனால் ரயில் நிலையத்தில் "ஜன்னல்களுக்கு எதிராக அழுத்தப்பட்ட பெற்றோர்களின் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருக்கும் முகங்களை அவர்கள் மறக்கவேயில்லை" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ராக்கிலிருந்து லண்டனுக்குப் புறப்படும் 8 ரயில்களுக்கான தளவாடங்களை வின்டன் ஒருங்கிணைத்தார். போரின் போது ஹலோவா, செக் மொழி பேசாத ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் வாழ வேண்டியிருந்தது. “ஆனால் அவர்களுக்கு தான் நன்றியுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களால்தான் போருக்குப் பிறகு எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முடிந்தது. தாயுடன் மீண்டும் இணைந்தது என் பிரார்த்தனைகளுக்குக் கிடைத்த பதில்," என்று அவர் விவரித்தார். ப்ராக் நகரிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்ட ஒன்பதாவது ரயில், போர் தொடங்கியதால் அதன் இலக்கை அடையவில்லை. அதில் பயணிக்கவிருந்த 250 குழந்தைகள் கைதிகள் முகாம்களில் இறந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது 669 யூத குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் கதை சுமார் 50 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ராக் ரயில் நிலையத்தில் வின்டனின் நினைவாக ஒரு சிலை உள்ளது. வின்டன் இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாக வதந்திகள் வந்தாலும், அவரே இக்கதையை தனது மனைவியிடம் சந்தர்ப்பங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கூறியதாகவும் இங்கிலாந்து செய்தித்தாளான தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வின்டன் 1988 இல் பிபிசியின் "தட்ஸ் லைப்" (That's life) என்ற நிகழ்ச்சியினால், தனது முயற்சிக்கான பலனைக் காண முடிந்தது. தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர் பட்டியலை ஆராய்ச்சியாளர் எலிசபெத் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து வெளியிட்ட விண்டனின் மனைவிக்கு நன்றிகள். செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வின்டன் ஏற்பாடு செய்த எட்டு ரயில்களில் தப்பி ஓடிய குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்ப் பட்டியலை பழைய புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொது திடீரென்று பார்க்க நேரிட்ட தொகுப்பாளர் எஸ்தர் ரான்ட்சனிற்கு கூட நன்றிகள். படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் பிபிசி நிகழ்ச்சியின் போது அவர் காப்பாற்றிய பல குழந்தைகளை சந்திக்க முடிந்தது. சுமார் 7 வயது சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்து, "இது வேரா கிஸ்ஸிங்," என்று ரான்ட்சன் கூறினார். “அவளது பெயரை (வின்டனின்) பட்டியலில் கண்டோம். வேரா கிஸ்சிங் இன்றிரவு எங்களுடன் இருக்கிறார். அவள் நிகோலஸ் விண்டனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்". வின்டன் தனக்கு அடுத்திருந்த பெண்ணை உணர்ச்சியுடன் பார்த்து அவரிடமிருந்து இதமான அணைப்பைப் பெற்றார். மேலும் அந்த நபர் தான் அணிந்திருந்த கண்ணாடிக்கு பின்னால் வடியும் கண்ணீரைத் துடைத்தார். உடனே, ஏராளமான பார்வையாளர்கள் எழுந்து நின்றனர், எல்லோரும் இவரால் மீட்கப்பட்ட குழந்தைகள் என்று ரான்ட்சன் அடையாளம் காட்டினார். பார்வையாளர்கள் கரகோஷத்தை எழுப்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணி எலிசபெத் II -ஐ வின்டன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசினார். வின்டன் 2003 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் II ஆல் கௌரவிக்கப்பட்டார். மேலும் அவரது மகள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இப்போது இந்த புதிய திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் அங்கீகாரம் இருந்தபோதிலும், நண்பர்களால் நிக்கி என்றழைக்கப்படும் வின்டன், அவர் செய்தது வீரச் செயல் இல்லை என்று உறுதியாக நம்பினார். 2015 இல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் நிக், "என்னுடைய தந்தை கூறியது என்னவென்றால், ஏதாவது நடக்கும் அல்லது யாரவது செய்வார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக ஒரு மாற்றத்தை உருவாக்க மக்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறியதாகத் தெரிவித்தார். "அதைத்தான் அவர் தனது எல்லா உரைகள் மற்றும் எனது சகோதரி எழுதிய புத்தகத்தின் மூலமாகவும் மக்களுக்குச் சொல்ல முயன்றார்." என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cd1kvynj133o
  35. 👆 சிலவேளை இதுவாக இருக்குமோ.... 👆
  36. இன்னும் இரண்டு சிங்களப் பெயராக்கும் என்று விட்டுவிட்டேன்! கார் 1 கிலோகிராம்290 ரூபாய் அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய்
  37. சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. மாறாக இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366268
  38. மிகவும் தவறான கருத்து. இது பற்றி எழுத எதுவும் இல்லை. உங்கள் பிள்ளை உங்களுக்கு இதற்கான விளக்கத்தை அல்லது படிப்பினையை தரும். அது வரை நன்றி தம்பி.
  39. இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை
  40. பன்னிரெண்டாம் அறிவோடு வாசித்து அடுத்தவனை எப்படி சொறியலாம் என்று சிந்தித்தால் அப்படிதான் விளங்கும் நாங்கள் சாதாரண மனிதர்கள் சாதாரண மனிதர்களுக்குத்தான் இங்கு கருத்து எழுதுகிறோம். ஹோமோசெஸுவாலிட்டி இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் அது அவர்கள் சொந்த பிரச்சனைஆனால் மேற்கு இப்போது ஊக்கிவிப்பது அதுவல்ல பச்சிளம் குழந்தைகளை கூட மூளை சலவை செய்து ஹார்மோன்களை ஊசிகள் மூலம் ஏற்றி ஆணை பெண்ணாக்குவது பெண்ணை ஓநாய் ஆக்குவது தவளை ஆக்குவது உகாண்டா எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கி இருந்தது ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை ஓரளவு என்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. இதை நான் பன்னிரெண்டாம் அறிவுடையவர்களுக்கு எழுதவில்லை இங்கிருக்கும் மற்றவர்கள் எழுந்தமாத்திரத்தில் சில முடிவுகளை கொள்ளாது ஒரு விடயத்தின் ஆரம்பம் அழிவு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவர்கள் சொந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் சில விடயங்களை முடிந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கவும் எழுதுகிறேன் இங்கு வேண்டும் என்றே சீண்டல் கருத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது. தலைப்புக்கும் சம்மந்தம் இன்றி கருத்துக்கும் சம்மந்தம் இன்றி ஒரு பெரிய பந்தியே தனிமனித தாக்குதலை மட்டுமே முதன்மைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது நான் வசித்தபின்பும் கோமாளிகளுடன் என் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் என்றே கடந்து சென்றேன். சாதிவெறி மதவெறி ஆதிக்கவெறி இனவெறிகளில் ஊறியவர்கள் திருந்தினால்தான் அதிசயம் அடுத்தவர்கள் கை ஓங்கும்போதும் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்கவும் அதி கல்விமான்கள் போல வேடமிட்டு கோட் சூட் போட்டுகொண்டு பொய் வேஷமிடுவார்கள் தவிர இவர்கள் ஒருபோதும் திருந்தியதில்லை இப்போது தென் ஆப்ரிக்க இஸ்திரேலுக்கு எதிராக கொண்டுவந்த இனஅழிப்பு வழக்கில் கூட மேற்கு நாடுகள் காமாஸ் மீது நடத்திய தாக்குதலில்தான் 23 ஆயிரம் அப்பாவிகள் இறந்ததாகவும் அத்தனை மசூதிகளும் மருத்துவமனைகளும் அழிந்ததாக சுத்த பொய்யை இந்த உலகமே பார்த்துக்கொண்டிருந்தை எந்த வெட்கமும் இன்றி சொல்கிறார்கள் தந்தை பெரியார் சொன்னது போல ஆயிரம் அறிவுள்ளவர்களுடன் வாதிடலாம் ஆனால் மானம் சூடு சுரணை வெட்கம் இல்லாதவர்களுடன் வாதிட முடியாது என்பதுபோல. இந்த ஆதிக்க வெறி பிடித்த மேற்கு நாடுகளிடம் இருந்து ஒரு நியாத்தை எதிர்பார்க்கும் ஈழத்தமிழர்கள் காஸ்மீரிகள் மியன்மார் முஸ்லிம்கள் குர்திஸ்கள் பாலஸ்தீனியர்கள்தான் மூடர்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பது எந்த வடிவில் இருந்தாலும் நான் அதற்கு எதிரிதான் நான் கடவுளை கூட நல்லவனாக எண்ணியதில்லை. இல்லது இருக்கவேண்டும் அல்லது சுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்
  41. நீங்கள் அடிப்படை வாதத்தை ஆதரீக்கின்றீர்கள். சிங்கள அடிப்படைவாதமும் இருந்தே ஆகவேண்டும் என்று கூறுகின்றீர்கள். சகோதரத்துவம் சுரணை கெட்டது என்று அதைச் சாடுகின்றீர்கள். அடிப்படை வாதம் என்பது ஏன் ஆபத்தானது என்று உலகில் கூறப்படுகின்றது என்றால், அது சகிப்புத்தன்மையற்றது . அடிப்படைவாதம் என்பது பலமடையும் போது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களை அழித்து விடும். இலங்கையில் சிங்கள அடிப்படைவாதம் பலமடைந்து அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதை நீங்கள் தர்ககரீதியில் ஆதரிக்கின்றீர்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் அடிப்படைவாதம் சிங்களவருக்கும் தேவை என்று நீங்கள் அதை ஆதரித்திருப்பதால். பின்லாந்தில் வலதுசாரி அரசு இன்று இருந்தாலும், பின்லாந்து அடிப்படை வாத நாடு அல்ல. வலது சாரிக்கும் அடிப்படைவாதத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மொத்த சனத்தொகையில் 5 வீதமே உள்ள சுவிடிஷ் மக்களுக்காக அவர்களது மொழியை அரச கரும மொழியாக அரசியலமைப்பில் சேர்ததுள்ள நாடு எப்படி அடிப்படைவாத நாடாக இருக்க முடியும். சகோதரத்துவம் உள்ள நாடுதான். நீங்கள் அடிப்படைவாதியாக இருப்பதில் இருப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. அப்படியே இருந்துவிட்டு போங்கள். ஆனால் அடிப்படை வாதக்கருத்தை நீங்கள் பொதுவெளியில் வைக்கும் போது அதை தவறு என்று சொல்லும் உரிமை எமக்கு உண்டு.
  42. யாழ் உறவுகளுக்கு பொங்கல் வாழ்தது
  43. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடிய பொங்கல்.
  44. யாழ் கள உறவுகள் யாவருக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.
  45. அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  46. இந்த விசயம் அமெரிக்க மருந்து கொம்பனியளுக்கு தெரியுமோ? ஏனெண்டால் இயற்கை வைத்தியம் எண்டால் ஆங்கில மருந்து மாத்திரைகள் விக்கிறவங்களுக்கு வயித்தை கலக்கிற விசயமெல்லோ... 🤣
  47. சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கட்டுரையாளர் கோவைக்காய் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகிறாரே தவிர எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.
  48. போதமும் காணாத போதம் – 13 தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்புவது சாதாரணமானது அல்ல. அடர்ந்து காட்டிற்குள் திசையறியாது சுற்றிச் சுற்றிச் உணவற்று மாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தாயம் கடலில் கலக்கும் நதியைப் போல, தடம் பிசகாமல் வீடு வருகிறான். எந்தச் சவாலுக்கும் ஈடுகொடுக்கும் உடல் வலிமை. எதற்கும் அஞ்சாத உளம். நிராயுதபாணியாக தப்பும் தன்னை, உங்கள் ஆயுதங்களாலும் தேடிக் கண்டுபிடியுங்கள் எனும் சவால். தாயம் புலிகளுக்கு பெரிய தலையிடியாக இருந்தான். பன்னிரெண்டு அடியளவில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு வேலி, கண்காணிப்புக்காய் நிற்கும் போராளிகளின் விழிப்பு. இவற்றையெல்லாம் உச்சிவிட்டு எப்படி தப்புகிறானோவென்று தெரியாத குழப்பம் இயக்கத்திற்கு வந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் குறிப்பிட்ட நாட்களிலேயே தாயம் வெளியேறிவிடுகிறான் என்று கண்டடைந்தனர். முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவென எந்தப் பயிற்சி முகாமிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிவதை எங்களாலும் நம்பமுடியாமலிருந்தது. ஒரு நாளிரவு இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவினர் வீட்டைச் சுற்றிவளைத்தனர். தாயம் தப்பித்தோட வாய்ப்பிருப்பதாக எண்ணியிருந்தார்கள். அவன் மாட்டிறைச்சி குழம்போடு இரண்டு றாத்தல் ரோஸ்ட் பாணைச் சாப்பிட்டு முடித்து அவர்களோடு போனான். ஊரிலுள்ளவர்கள் வியக்குமாறு தாயம் சாகசக்காரனாய் போராளிகளுக்கு நடுவில் நடந்தான். அமளிச் சத்தம் கேட்டு உறக்கமழிந்த தாயத்தின் தங்கச்சி சாதனா ஆயுதமேந்திய போராளிகளை விலக்கியபடி ஓடிப்போனாள். பொத்திய தனது கைக்குள்ளிருந்து இரண்டு தேமாப் பூக்களை தாயத்திடம் கொடுத்தாள். சாதனாவை முத்தமிட்டு “ அண்ணா, வெள்ளனவா வந்திடுவன். நீ குழப்படி செய்யாமல் அம்மாவோட இருக்கவேணும். போய் நித்திரை கொள்ளு” என்றான். வாகனம் புறப்பட்டது. சாதனா வீட்டின் முன்பாக நிற்கும் தேமா மரத்தடிக்கு லாம்போடு ஓடிச்சென்றாள். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த தெய்வ உருக்களின் முன்பு நின்று கண்ணீர் கசிந்து “கடவுளே அண்ணா, திரும்பி வந்திடவேணும். வந்தால் உனக்கு அவல் தருவேன்” என்றாள். வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவனை கிளிநொச்சியிலுள்ள முகாமொன்றில் தங்கவைத்தனர். அவனுடைய தப்பித்தல் அனுபவங்கள் குறித்து போராளியொருவர் விசாரணை செய்து அறிக்கை தயாரித்தார். தாயத்தின் சொந்தக்காரர்கள் யார் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது வரை விசாரணை ஆழம் பாய்ந்து முடிந்தது. அதன்பிறகு நிலக்கீழ் அறைக்குள் தாயம் இறக்கப்பட்டான். “பூமியின் தடங்கள் மறக்கும் வரைக்கும் உள்ளேயே இருப்பீர்கள்” என்பது உத்தரவு. “இங்கிருந்து தப்ப இயலாது” என்பது எள்ளலாக வீசியெறியப்பட்டது. தாயம் பூமியின் கீழே விழிபிதுங்கி அமர்ந்தான். மூச்சுத்திணறியது. இருட்குகையில் மோதுண்டு அழியும் காற்றுப் போல கைகளை விரித்து சுவர்களை அறிந்தான். எத்தனை நாட்கள் இருள் தோயவேண்டும். இப்படியொருவன் மூச்சுத்திணற வைக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்படவேண்டுமா? தாயம் உள்ளேயே சப்பாணிகட்டி அமர்ந்து கொண்டான். தன்னுடைய இறுக்கமான உள்ளாடையை கழட்டி எறிந்து நிர்வாணமானான். சாதனா கொடுத்த தேமா மலர்களை கைகளில் ஏந்தி இருளின் திரட்சியை அழிக்கும் வாசனையை முகர்ந்தான். வீட்டின் முன்பாக தங்கையோடு பூசை செய்து விளையாடும் பொழுதுகள் புலனில் உதித்தன. பூமியின் கீழே பாதைகள் இல்லை. ஆனாலும் தாயம் கண்ணீர் சிந்தவில்லை. அச்சப்படவில்லை. மெல்ல மெல்ல ஆசுவாசத்துக்கு திரும்பினான். போராளிகள் எதிர்பார்த்ததைப் போல கதறியழுது என்னை மீட்டுவிடுங்கள் என்ற இறைஞ்சுதல்கள் எதுவும் நிகழவேயில்லை. உள்ளேயே தாயக்கோட்டினைக் கீறி மண்ணை உருண்டைகளாக்கி தாயம் விளையாடத் தொடங்கினான். மூன்று நாட்கள் கழித்து பூமியின் மேல் இழுத்து வரப்பட்ட தாயம் ஒளியைக் கண்டு கூசினான். வெளிச்சம் பொல்லாத சாத்தானைப் போல அவனைத் தண்டித்தது. அவனது உடலில் எந்தச் சோர்வும் இருக்கவில்லை. சாதனா தருவித்த இரண்டு தேமா மலர்களும் வாடாமலிருந்தன. “எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்” என்கிற ஓலமான குரலைப் பொருட்படுத்த அங்கு எவருமில்லை. பொறுப்பாளர் கீரன் உணவளிக்குமாறு உத்தரவிட்டார். நெத்தலித் தீயலும், குத்தரிசிச் சோறும் கொடுத்தார்கள். ஒரு சட்டித் தீயலை தின்றுமுடித்து, சோற்றுப்பானையைக் காட்டி கொஞ்சமிருக்கு ஏதேனும் பழைய குழம்பு இருக்கிறதா என்று கேட்டான். பருப்புக் குழம்பை கொடுத்தார்கள். இதுவரைக்கும் தப்பித்த பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எப்படித் தப்பினான் என்பதை விசாரணை செய்ய குழுவொன்று தயாராகவிருந்தது. தாயம் சரியென்று தலையசைத்தான். முத்தையன்கட்டிலுள்ள முகாமில் அதனைச் செய்து காட்டினான். அடிக்கணக்காக உயர்ந்து நிற்கும் முட்கம்பி வேலியில் ஏறி, கீழே குதித்து ஓடுவதை ஒன்றும் விடாமல் செய்து காட்டினான். மீண்டும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து தாயத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தனர். “நான், ஏன் போகவேண்டும். எனக்கு வயிறு கொதிக்கிறது சாப்பாடு தாருங்கள்” குரல் உயர்த்தினான். “நீதானே பயிற்சி முகாமிலயிருந்து ஓடிப்போகிறாய். இப்ப நாங்களே உன்னை விடுகிறம். நீ போ” என்றனர். தாயத்தினால் இப்படியொரு பரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அண்ணே, என்னை நீங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி தந்தால் ஓடிப்போவன். இப்பிடி நீங்கள் போகச்சொல்லுறது எனக்கு அவமானம். இப்ப நான் போகமாட்டன்” “சரி, அப்ப நீ இஞ்சயே இரு. உனக்கு எப்ப போகவேணுமெண்டு இருக்கோ. அப்ப வெளிக்கிடு” தாயம் எதிர்பாராததை இயக்கம் வழங்கியது. அவனால் முகாமை விட்டு வெளியே போகமுடியவில்லை. அங்கிருக்கும் சில வேலைகளைச் செய்து வந்தான். பொறுப்பாளர் கீரனோடு வெளியே சென்று வரத்தொடங்கினான். தாயனைப் பார்த்த ஊரவர்கள் சிலர், “என்னடா இயக்கமாகிட்டுயோ” என்று கேட்டார்கள். எதுவும் பதிலளிக்காமல் தாயம் குமைந்தான். அரசியல் போராளிகளோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணமானான். இயக்கத்திற்கென இழுத்து வரப்பட்டவர்கள் குவிக்கப்பட்டிருக்கும் முகாமொன்றிற்கு சென்ற தாயம் திடுக்குற்று பொறுப்பாளர் கீரனிடம் “ அண்ணை, இப்பிடி பிடிச்சுக் கொண்டு போய், சண்டை செய்துதான் நாட்டை மீட்கவேணுமே” கேட்டான். இதுக்கு நான் பதில் சொன்னால் இயக்கத்துக்கு துரோகியாகிவிடுவன். என்னை நீ பூமிக்கு கீழ வைக்கப் பார்க்கிறாய்” என்றார் கீரன். “உங்களுக்கு இதில உடன்பாடு இல்லைத்தானே, பிறகு ஏன் செய்கிறீர்கள். கட்டாய ஆட்சேர்ப்பின் தீவினை குறித்து தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்” என்றான். “எல்லாம் கைமீறிப் போய்ட்டுது. உன்னைப் போல எத்தனயோ பிள்ளைகள் பயந்து நடுங்கியிருக்கிறாங்கள். அது தெரியாமல் யாரும் இல்லை” கீரன் சொன்னார். தாயம் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் நோக்கி செல்லும் அணியில் கலந்தான். ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடி முடித்து தாயம் கரையேறி ஈரந்துடையாமல் வீதிக்கு வந்தான். மாடுகளை சாய்த்தபடி எதிர்திசையில் வந்த பீதாம்பரம் “ எடேய் பெடியா, இயக்க வாழ்க்கை என்ன சொல்லுது” என்று கேட்டார். “இவ்வளவு நாளும் பயிற்சி அண்ணை, இனிமேல் தான் சண்டைக்கு போகவேணும்” என்றான். “அப்ப நீ இன்னும் ஒரு சண்டைக்கும் போகேல்லையோடா, அங்க போயும் சும்மா தான் இருக்கிறாய் என்ன” என்றார் பீதாம்பரம். ஊரியிலான வீதியைக் குறுக்கறுத்து திடுமென அசையாது நின்ற சாரைப்பாம்பில் வன்னி வெயில் ஊர்ந்தது. பீதாம்பரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விலகி நடந்து, வீதியோரத்தில் அடர்ந்திருந்த பற்றைகளில் நாயுண்ணிப் பழங்களை பிடுங்கி உண்டான். காலையிலேயே கழுத்து வெட்டி சாவல் குழம்போடு இருபது இடியப்பத்தை தீர்த்த பிறகும் வயிறு கொதித்தது. சாப்பாட்டு இடிஅமீன், இந்தப் பட்டப்பெயரைத் தாயத்துக்கு சூட்டியது மாஸ்டர் கனல் குன்றன். பயிற்சி முகாமில் வழங்கப்படும் அளவுச் சாப்பாடுகள் போதாதுவென தாயம் உண்ணா நோன்பிருந்தான். எருமை மாட்டிறைச்சி குழம்பில் மூவருக்கு வழங்கப்படும் அளவிலான துண்டங்களை இவனுக்கு வழங்குமாறு மாஸ்டர் உத்தரவளித்தார். தாயத்திற்கு வழங்கப்பட்ட விடுப்பு நாளையுடன் முடிவடைகிறது. குளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் புதிய ஆடைகளை அணிந்து, திருநீற்றை அள்ளி பூசினான். சாதனா தேமா மரத்திற்கு அவனை அழைத்துச் சென்று மந்திரங்கள் ஓதுமாறு சொன்னாள். தாயம் “கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “ என்று பாடினான். சாதனா திருநீறள்ளி பூசிவிட்டாள். சுடச்சுட வேர்க்கொம்பு போட்ட தண்ணியை ஆக்கி கொடுத்தாள் தாய். அவனுக்கு வயிறு கொதித்தது. “இடியப்பம் இருக்கே” என்று கேட்டான். “முடிஞ்சுது, சோறு வடிச்சிடுவன். கொஞ்சம் பொறு” என்றாள் தாய். வீட்டின் முன்பாகவிருந்த பூவரசமரத்தின் கீழே அமர்ந்திருந்து வேர்க்கொம்புத் தண்ணியை உறிஞ்சிக் குடித்தான். சாதனா அவனிடம் கேட்டாள். “அண்ணா, சண்டைக்கு போக உனக்குப் பயமா இல்லையோ” “பயமில்லையோ. சரியான பயமாய் இருக்கு” “பயப்பிடு. மாமாவைப் போல பயமில்லாமல் சண்டை செய்து சாகாத.” “சாதனா, நான் செத்துப்போனால் நீ எத்தனை நாள் அழுவாய்” “இப்பிடி பயந்தால் சாகமாட்டாய். எனக்கு அழுகிற வேலை இல்லை” “எடியே, எனக்கு பயமே இல்லை. நான் செத்துப்போடுவனெண்டு சும்மா வைச்சுக் கொள்ளன். எத்தனை நாள் அழுவாய்” “அண்ணா, நீ சாகவே மாட்டாய். பயப்பிடாதவன் சாவுக்குப் பிறகானதை பற்றி கதைக்க மாட்டான்” என்று சொல்லிச் சிரித்தாள். “சரி நீ செத்துப்போனால் நான் எத்தன நாளைக்கு அழ வேண்டும் சொல்” “நீ அழவே கூடாது சாதனா” “சரி, நான் தேமாவுக்கு பூசை செய்து, உன்ர பெயரை நூற்றி எட்டுத் தடவை சொல்லுறன். காணுமே” “நான் என்ன கடவுளே” “செத்தால் எல்லாரும் கடவுள் தான்” “சரி அலட்டாத. காணும்” என்றான். சாதனா தன்னுடைய கைக்குள்ளிருந்த இரண்டு தேமா மலர்களை அவனுக்கு கொடுத்து எப்பவுமே உன்னோட வைச்சிரு என்றாள். தாயம் அவளைக் கொஞ்சி தலையில் குட்டினான். ஒரு வருடத்திற்கு முன்பான மாலை வேளையொன்றில் தாயம் இயக்கத்தில் சேர்ந்தான். அவன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் “அம்மா, நான் இயக்கத்துக்கு போகிறேன். நீ கவலைப்படாமல் சாப்பிடு. சதனாவை, தேமா மரத்தை பார்த்துக் கொள். நான் போயிட்டு வாறன்” என்று எழுதப்பட்டிருந்தது. லட்சியத்தை நோக்கிய தாயத்தின் புறப்பாடு ஊரையே அதிர்ச்சியாக்கியது. “இவனையெல்லாம் படையில சேர்த்தால் மற்ற இயக்கப் பிள்ளையளுக்கு சோறும் மிஞ்சாது. சொதியும் மிஞ்சாது. இவன்ர வயிறு ஊரெழுக் கிணறு மாதிரி. அடிதெரியாமல் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் கொய்யாத்தோட்டம் பூசாரி. கோவில் அன்னதானங்களில் தாயம் உக்கிரம் காண்பான். அள்ளியெறிய ஏந்திக் கொள்ளும் பாதாளமாய் அவனது வயிறு திறந்துவிடும். எங்கிருந்து பொங்கிவரும் பசி இவனுள்ளே ஓடிநிரம்புகிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். “இவன் வயித்தில இருக்கேக்க, கடுமையான யுத்தம். ஆசைக்குத் தின்னக்கூட சோட்டைத்தீன் இல்லை. அரசாங்கம் ஒண்டையும் உள்ள விடேல்ல. என்ன கிடைச்சுதோ அதைத் திண்டு பசி போக்கினேன். முனுசு தோட்டத்தில விழுந்த குரும்பட்டியையும் எடுத்துக் காந்துவன்” என்றாள் தாயத்தின் தாயார். எனக்கும் தாயத்துக்கும் இடையே சிநேகிதம் உண்டாகிய தொடக்கத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அவனுக்கு ஒடியல் புட்டும், மீன் குழம்பும் பிடித்தமானது. பீங்கான் தட்டில் உணவைப் பரிமாறி அளிப்பேன். குழைத்து உண்ண வசதி இல்லையென, வாழை இலை கேட்பான். மான் இறைச்சியோடு கீரைப்புட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தட்டில் உணவைக் கண்டாலே பதற்றமுற்று குழைத்து உள்ளே தள்ளுகிறான். விக்கல் எடுத்தாளும் நீரருந்தேன் என்கிற சத்தியமாயிருக்கும். கறித்துண்டுகளை, எலும்புகளையும் அரைத்து விழுங்கினான். ஏனென்று தெரியாத கடலின் மூர்க்கம் போல உடல் முழுதும் வெக்கை கொள்கிறது. வழியும் உடலின் ஈரத்தில் ஒருவர் தாகம் தீருமளவு வியர்வை. அன்றுதான் தாயம் இயக்கத்தில் இணையவிருப்பதாக என்னிடம் சொன்னான். அப்போது நானும் நம்பவில்லை. ஆனால் இன்று தாயம் ஒரு விடுதலைப் போராளி. அதனை நம்பாமல் இருக்கமுடியவில்லை. தாயம் விடுப்பு முடிந்து வட போர்முனைக் களத்திற்கு புறப்பட்டான். கிளிநொச்சி வரைக்கும் அவனை உந்துருளியில் அழைத்துச் சென்று இயக்க வாகனத்தில் ஏற்றினேன். “சரி மச்சான், அடுத்தமுறை வந்தால் சந்திப்பம்” என்றான். “வராமல் எங்கையடா போகப்போறாய், உதில இருக்கிற முகமாலை தானே. விடுப்பு கிடைக்காட்டி ஓடி வா” என்றேன். தாயம் பதில் எதுவும் கதையாமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். வாகனம் முன்நகர்ந்தது. சில மாதங்களுக்கு பின்னர் தாயத்தின் வீரச்சாவு செய்தி வந்தடைந்தது. வீட்டின் தேமா மரத்திற்கு பூசை செய்து கொண்டிருந்த சாதனாவுக்கு தெரியவேண்டாமென அவளை வட்டக்கச்சிக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய வித்துடல் கிடைக்கவில்லை. வெறும் புகைப்படமாக மட்டுமே வந்தடைந்தான் “வீரவேங்கை நளன்.” எல்லாவிதமான நிகழ்வுகளும் முடிவடைந்து ஆறாவது நாள், சாதனாவை வீட்டுக்கு கூட்டி வந்தோம். ஓடிச்சென்று தேமா மரத்தின் கீழேயிருந்து மந்திரங்கள் ஓதி, பதிகம் பாடி அமைந்தாள். பூக்களை ஏந்தி வந்து வீட்டினுள்ளே புலிச்சீருடையில் புகைப்படமாய் இருக்கும் தாயத்தின் முன்பு படைத்து “ அண்ணா, நீ வெள்ளனவா ஓடி வா, பூசை செய்து விளையாட வேண்டும்” என்றாள். வீரச்சாவு அடைவதற்கு இரண்டு வாரம் முந்தி தாயம் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “அன்பின் மச்சான்! வாழ ஆசையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிர்ப்பந்தம், கெடுபிடி, போர், பேரழிவு இல்லாமல் இந்தப் பிறவியில் வாழ முடியாது என்றே தோன்றுகிறது. நீ அடிக்கடி சொல்வதைப் போல, இந்த வாழ்க்கையில் எத்தனை நாணயங்களை சுழற்றினாலும் பூவோ, தலையோ எமக்கில்லை. தாயம் வீரச்சாவு அடைந்தான் என்றால் அதில் பெருமை கொள்ளாதே. நான் வீரன் இல்லை. வாழ ஆசைப்படும் அற்பன். இந்தக் குருதியூற்றில் தேமா மலர்களோடு அமர்ந்திருந்து பதிகம் இசைக்க எண்ணும் சாதாரணப் பிறவி. என்னை நீ வீரனாக எழுதாதே. உன் கவிதைகளில் என்னைப் பாடாதே. இத்தனை பேர் உயிரைத் தியாகம் செய்யும் இக்களத்தில் நடுநடுங்கும் என்னை ஒரு சொல்லாலும் புகழாதே. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் ஒவ்வொரு நாளும் முன்னேறத் துடிக்கிறான். போராளிகள் களமாடுகிறார்கள். என்னுடைய துவக்கை இயக்குவதற்கு கூட துணிச்சல் இல்லாமல் ஒடுங்கியுள்ளேன். சாதனா என்னிடம் சொன்னதைப் போலவே பயந்தவன் சாவதில்லையென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கு வீரர்கள், கோழைகள், எதிரிகள், எல்லோரும் சாகிறார்கள். நான் வீரனுமில்லை எதிரியுமில்லை. செத்தால் எல்லாரும் கடவுள் என்ற சாதனாவுக்கு நான் கடவுளாக தெரியக்கூடாது. அண்ணனாகவே இருக்க விருப்பம். அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள். அம்மா தவித்துவிடுவாள். அதற்காக தாயகத்திற்காக தாயம் தன்னுயிரை ஈகம் செய்தானென்று மட்டும் அவளிடம் ஆறுதல் சொல்லாதே. தாய்மார்கள் அழட்டும். அவர்களின் கண்ணீராலேனும் மண்ணின் பாவங்கள் கரைந்து மூழ்கட்டும். சாதனாவுக்கு தேமா மரத்தில் பூசை செய்து விளையாட ஆளில்லை. எப்போதாவது நேரம் வாய்த்தால் அவளது பூசையில் பங்கெடு. ஆக்கினைகள் எல்லாமும் உதிரட்டும். பூக்கள் மலரட்டும். அவள் தந்தனுப்பிய இரண்டு தேமா மலர்களை என்னுடைய ஆயுத அங்கியில் வைத்திருக்கிறேன். இத்தனை ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு பூக்களோடு அமர்ந்திருக்கிறேன். எதிரியானவன் எப்போது வந்தாலும் தேமா மலர்களை நீட்டி, வணக்கம் சொல்வேன். அவனிடமிருக்கும் துவக்கு என்னிடமுமிருக்கிறது. அவனிடமும் மலர்கள் இருந்திருந்தால் என்னிடம் இயக்கம் துவக்கை தந்திருக்காது அல்லவா! இப்படிக்கு நளன் ( தாயம்) ராதா வான்காப்பு படையணி முகமாலை, வடபோர் முனை. https://akaramuthalvan.com/?p=1529

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.