Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11531
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    1
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/05/25 in all areas

  1. சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂
  2. நீரோடும் வைகையிலே ....... ! 😍
  3. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  4. இதென்ன கடை போட வாங்கிக்கொண்டு வந்தது போல கிடக்கு... 🤣
  5. நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்! நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.
  6. அவரின் உள்ளாடைக்குள் இருந்தது... உண்மையான பாம்பு தானா என்று வடிவாக பாருங்க ஆபீசர். வேறு எதுவாகாகவும் இருந்திடப் போகுது.
  7. இப்போ வீரகேசரி தமிழ் யுரியுப்பர்களிடம் இருந்து ரியுசன் எடுத்து கொண்டு வருகின்றது. அதனால் தோணவில்லை போலும்
  8. பரிமளம் அண்ணிக்கு சீலை வாங்க வேண்டும் என்றால்....? 😜
  9. நம்ப முடிய வில்லை. மரத்தில் ஒடடப்படட மாங்கனியா ? ஒரு இலை கூடவா இருக்கவில்லை
  10. ஆண்களுக்கு, இப்படி ஒரு பொறாமையா.... 😂
  11. தலை தடைகள் எல்லாம் தாண்டி அரசியலில் தொடர்ந்து நிலைப்பார் என்றே தோன்றுகின்றது.
  12. ஒரேஒரு தடவை ஸ்ரார்லிங் சேவையை கவாய் தீவுகளுக்கு போகும்போது கவாய் விமான சேவையில் இலவசமாக தந்த சேவையை பயன்படுத்தினேன். இதுவரை இப்படி ஒரு துரிதமான சேவையை காணவில்லை. வீட்டில் உள்ள சேவைகளைவிட இது மிகவும் திறமாக வேலை செய்தது. பிள்ளைகள் மருமகனும் இதையே கூறினார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட சேவை எப்படியோ தெரியவில்லை. இந்தியாவுக்கு இதனால் வருமானம் குறையலாம்.
  13. கணக்குபோடுவோம். நீயும் நானும் கணக்குபோடுவோம் வாழ்க்கையை இப்படி வாழனும் அப்படி வாழணும் என்று ஆனால் வாழ்க்கை அது பாட்டுக்கு ஒரு கணக்கைப்போட்டு நம்கையில் கொடுக்கும் பாருங்க அப்போது தான் புரியும் இயற்கையையும் கடவுளையும் யாரும் ஏமாற்ற முடியாது. என்று
  14. "துரியோதனனை " போல நண்பனைத்தேடு உலகிற்கு தீயவனாக இருந்தாலும் உனக்காக கடைசி வரை போராடுவான். " கர்ணனை "போல நண்பனைத்தேடு ஆண்டவனே எதிர்த்தாலும் நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக உயிரையே தருவான் படித்ததும் பகிர்ந்ததும்
  15. அட ........ குடைக்கம்பியில் பல உபயோகம் உண்டு ......... கொண்டையில் பூ சொருகலாம் ....... அவசரத்துக்கு பூட்டுகளைக் கூட திறக்கலாம் ........ இங்கால எடுத்து அங்கால வைக்கிறதைவிட வீட்டில கொண்டுபோய் வைத்திருந்தால் தொடர்ந்து உபயோகப்படும் ........ பாவம் . ..... ஜப்பானியர்களுக்குத் தெரியாது போல ........ ! 😂
  16. திரும்பவில்லை "அவர்கள் திரும்பி வருவார்கள்..." அந்த நம்பிக்கையில் தான் — தாய்கள் தூங்காமல் வாழ்ந்தனர், சகோதரிகள் கண்கள் சோர்ந்தது எதிர்பார்ப்பில், பிள்ளைகள் கதவுகள் ஓரம் கண்பார்த்து வளர்ந்தனர். ஒரு நாள் – ஒரு குரல் கேட்கும், ஒரு நிழல் திரும்பும், ஒரு நினைவாய் கதவு தட்டும்… என நம்பினோம். ஆனால் வந்தது அவர் இல்லை வந்தது ஒரு செய்தி. செம்மணியில் — அவர் பெயரற்ற எலும்பாக மண்ணடியில் கிடப்பதாக. அந்தக் குழியில் புதைந்தது — ஒரு உடலல்ல, ஒரு உறவின் கனவு, ஒரு இனத்தின் நம்பிக்கை. அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். மண் இன்னும் உதிரும் உண்மை சொல்கிறது — "அவர்கள் திரும்பவில்லை… ஏனெனில் நீதி அவர்களுடன் இந்த நிலத்துக்குள் புதைக்கப்பட்டது." 🕯️ நாம் அவர்களை திரும்ப பெற முடியாது… ஆனால், நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியாதா? "அவர்கள் திரும்பி வருவார்கள்…" அந்த நம்பிக்கையோடுதான் ஒரு இனத்தின் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் தினமும் வாழ்ந்தனர். ஒரு நாளாவது – அவர் மீண்டும் வருவார், ஒரு குரல் கேட்கும், ஒரு நினைவாய் கதவை தட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது அவர் அல்ல வந்தது ஒரு தகவல். செம்மணியில்—அவர் பெயர் தெரியாத எலும்பாகக் கிடப்பதாக. அந்தக் குழியில்தான் புதைந்தது, அவர் மட்டும் அல்ல... ஒரு உறவின் எதிர்பார்ப்பு, ஒரு இனத்தின் நம்பிக்கையும். அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். அந்த மண் இன்னும் சொல்கிறது – “அவர்கள் திரும்பவில்லை, ஏனெனில் அவர்களுடன் நீதி ஒரு நாட்டின் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது.” 🕯️ நாம் அவர்களை திரும்பப் பெற முடியாது. ஆனால் அவர்களுக்கான நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியுமா? (முகநூலில் படித்த கவிதை.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.