Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20010
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    5416
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/26/25 in all areas

  1. சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣
  2. ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால் அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜோஷ் எல்ஜின் பிபிசி செய்திகள் 26 ஜூலை 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது. 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது. மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங். 10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது. ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் - 25% குறைவு புற்றுநோய் - 6% குறைவு டிமென்ஷியா - 38% குறைவு மன அழுத்தம் - 22% குறைவு ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் . "நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார். ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார். லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார். "அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo
  4. நாய் வாலை, நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். சிலதுக்கு... கல்லெறி பட்டும் புத்தி வராது. 😂
  5. ஆபிரிக்கர்கள் இலங்கை விசாவுக்கு காசு கட்டித்தான் வரவேண்டும். 😂 அப்படி வந்தாலும்…. 🤣
  6. அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே? இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.
  7. நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடும் பாரத் அணி 86 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்துள்ளது! இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்சை விட 225 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இருப்பது 4 செஸன்கள் அதாவது கிட்டத்தட்ட 120 ஓவர்கள். இந்த 225 ஓட்டங்களை ஓவருக்கு 4 ஓட்டங்கள் படி அடித்தாலும் 2 செஸன்கள் தேவை நாளை மதியம் வரை ஆடவேண்டும். மீதம் இருக்கும் இரண்டு செஸன்களில் ஒரு செஸன் ஆடி ஒரு 100 ஓட்டங்கள் லீட் எடுத்தாலும் பாரத் வெல்ல முடியாது. 30 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தின் 10 விக்கட்டுகளையும் வீழ்த்த முடியாது!
  8. சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் அரசியல் ஞான சூனியங்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂
  9. இன்றுமுதல் சிறையில் வைக்கப்படுவோரை நிர்வாணமாகவே வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரைஞான் கொடியும் அறுத்தெறியப்படும். இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையைக் கூட்டி விரைவில் பெறப்படும்.
  10. நான் உந்த குகைக்குள் பல தடவைகள் படுத்து எழும்பி வந்திருக்கிறன்.அரணா கொடி தொடக்கம் காப்புக்கயிறு வரைக்கும் உருவி எடுத்துப்போட்டுத்தான் அந்த அறைப்பக்கமே விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்புக்குள் ஏதாவது உலோகங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என கேட்டு உறுதி செய்த பின்னரே அறையினுள் செல்ல அனுமதிப்பார்கள். கட்டுப்பல்லுக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். உடம்புக்குள் அதாவது கால்பகுதி,மண்டைப்பகுதியில் உலோகங்கள் பொருத்தப்பட்டிருந்தால் விமான நிலையங்களிலும் ஒரு சில பிரச்சனை இருக்கும் என கேள்விப்பட்ட ஞாபகம்.
  11. பறவைக் காதல் ...... ! ❤️
  12. உன்னைப்போல யார் இருக்கா அப்பா .......... ! ❤️
  13. இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
  14. வவுண‌தீவில் கொல்லப்பட்ட இரு பொலீஸாரும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட டி 56 ரகத் துப்பாக்கி 1990 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலீஸ் நிலையத்திலிருந்து முஸ்லீம் ஊர்காவற்படையினன் ஒருவனால் அன்று எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அத்துப்பாக்கியே 28 வருடங்களுக்குப் பின்னர் வவுணதீவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவியான கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய ராசநாயகம் சர்வானந்தமே இக்கொலைகளைச் செய்ததாக பொலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருந்தார். சஹ்ரான் குழுவினரே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் அப்பாவியான தமிழர்மீது கொலைப்பழியைச் சுமத்தி, விசாரணைகளைத் திசைதிருப்பிய வவுணதீவு ஒ ஐ சி யே இன்று கந்தளாயிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் வேதனை என்னவென்றால், சஹ்ரான் குழுவினருடன் தொடர்பில் இருந்துகொண்டு, இக்கொலைகளை அவர்களே செய்தார்கள் என்பதை அறிந்திருந்த கிழக்கின் மீட்பரான முரளிதரன் கூட இத்தாக்குதலை "புலிகளின் மீள் எழுச்சி" என்று வர்ணித்ததுதான். 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவையில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதல் மற்றும், வெலிக்கந்தை சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதல்கள், நுகேகொடை பஸ் மீதான தாக்குதல் என்று அனைத்தையும் புலிகள் மீது மகிந்தவின் அரசு போட்டிருந்தது. நான் இதுபற்றி இங்கு எழுதியபோது சிலர் வந்து புலிகளுக்கு நான் வெள்ளையடிக்கிறேன் என்று எள்ளி ந‌கையாடினார்கள். ஆனால் இன்று அவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுகுறித்து ஒரு திரியை ஆரம்பிக்க விருப்பம். நேரமிருந்தால் பார்க்கலாம்.
  15. இந்த சம்பவத்துக்கு புல்லாதான் முதல் காரணி...முழு தமிழின் எதிர்ப்பை காட்டியவர்...ரணிலின் தயவால் பறித்த கம்ம்பசையும் கைப்பற்ரி...கக்கிமின் உதவியால் எம் பியும் ஆகி வெள்ளை வேட்டி கள்வன்...இன்று பார்லிமென்டில்...முழு ஊழல்வாதி ..இப்ப அனுரவின் வீட்டில் சுகபோகம் ..
  16. ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம். பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.
  17. அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்
  18. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.