Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7044
    Posts
  4. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    2137
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/30/25 in all areas

  1. வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக நிலையம் (ஏறாவூர்) பெற்றுக்கொள்ளலாம். இலங்கைக்கு புத்த பொதி சென்றடைய சிறிது காலமெடுக்கும் என்பதால் மேலே குறிப்பிட்ட நபர்களோடு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி.
  2. பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.
  3. 😂 "மக்கள் ஒருவரைத் தெரிவு செய்தால் அவர் செய்வது மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கும்" என்ற மூட நம்பிக்கையை ட்ரம்ப், பிறேசிலின் பொல்சனாரோ, ஹங்கேரியின் ஓர்பான் இவர்களைக் கண்ட பின்னும் நாம் வைத்திருக்கிறோம் என்பது அதிசயம். மக்களின் தெரிவு வெறுப்புணர்வு, கடைந்தெடுத்த சுய நலம் என்பன சார்ந்ததாகவும் இருக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஜேர்மனியின் கிழக்குப் பாதி பெருவாரியாக நவநாசிகளான AfD இற்கு வாக்களித்தமை. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று firewall மூலமாக அந்த மக்கள் முடிவை நிராகரித்தமை தான் ஜேர்மனியில் மீண்டும் நாசிகள் கையோங்காமல் தடுத்தது!
  4. இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
  5. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை. இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?
  6. இதை சேமிப்பு வங்கியில் போட்டு அதில்வரும் வட்டியில் பம்பஸ் வாங்கலாம்.
  7. இதுவொரு அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்.வாழ்க்கை எனும் தத்துவத்தை மனிதம் மறந்ததினால் தான் உலகில் இன்றைய கலவரங்கள் என நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு. நான் பல காணொளிகளை இணைத்தும் நேரடியாக வேலை செய்யவில்லை☹.நான் இணைத்த அதே இணைய காணொளி முகவரியை நீங்கள் இணைத்ததும் நேரடியாக வேலை செய்கின்றது. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.🤣 உங்கள் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி சிறித்தம்பி...🙏 ஐயனே! நீங்கள் நினைப்பது உண்மைதான். தலைப்பிற்கும் அதன் கீழ் ஊர்ந்து செல்லும் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லைத்தான். இருந்தாலும் மனித வாழ்க்கை எப்படிப்பட்டது அதில் உள்ள ஆசா பாசங்கள், திட்டமிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்கள் அதன் முன்னேற்பாடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்து விட்டு எனது மரணச்சடங்கு எப்படியிருக்க வேண்டும் என சொல்ல நினைக்கின்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் சரியானது.இருப்பினும் நாம் இறந்த பின் எமது மரணச்சடங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை உயிர் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள்.எனவே அந்த தீர்மானத்தை எம் உயிர் உள்ள போதே நாம் நிர்வகித்து உயில் எழுதி விடவேண்டும். நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன். எனது உயில் பாகங்களில் இதுவும் ஒன்று.இதை நான் ஏற்கனவே செய்து விட்டேன்.
  8. நாங்கள் செத்த பிறகு பறைமேளத்தை அடித்தால் என்ன, தவில் நாதசுவரம் வாசித்தால் என்ன எங்களுக்கு கேட்கவா போகின்றது. உயில் என எழுதினால் செத்தவீட்டுக்கு வருபவர்கள் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என எழுதி வைத்தால், அத்துடன் எமது நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என கூறிச்சென்றால் கடைசி நேரத்திலும், செத்த பிறகும் ஒரு திருப்தியை ஏற்படுத்தலாம்.
  9. லலித் மற்றும் குகன் : காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் 2011 டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியங்களை வழங்குவதற்காக, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றமும் அவ்வாறான அறிவிப்பினை விடுத்திருந்தது. ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இதன் விளைவாக, அவர் ஜனாதிபதி என்ற தகுதியில் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை. இப்போது அவர் ஜனாதிபதியாக இல்லை என்று, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல்களை பரிசீலித்ததோடு, 2024 டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்கள். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து, பின்னர் முன்னணி சோசலிச கட்சி என்று அறியப்பட்ட ஒரு பிரிவுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு இளைஞர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இறுதியாக காணப்பட்டனர். போரினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக லலித் நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார். டிசம்பர் 9ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து இருவரும் கடைசியாக வெளியேறியதாக ஊடகவியலாளர் ஷாலிகா விமலசேன குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குகனின் மனைவி டிசம்பர் 14 அன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் காணப்பட்டதை கண்டுள்ளார். எனினும், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். டிசம்பர் 13ஆம் திகதி கோப்பாய் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குகனின் மனைவிக்கு பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9ஆம் திகதி அதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கு அருகில் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குழுவொன்று லலித் மற்றும் குகன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலதிக விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஒருவேளை குற்றவாளிகளை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் அவர்களை குறிப்பிடுவதற்கு பயந்து முன்வராமல் இருந்திருக்கலாம். அவிசாவளையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த லலித், நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். அவருடன் காணாமல் போன குகன் முருகானந்தனும் அரசியல் செயற்பாட்டாளரும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். குகன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார். ஆனால் 1999 ஆம் ஆண்டில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹாவில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாக உள்ள வருண தீப்தி ராஜபக்ஷ, டிசம்பர் 9, 2021 அன்று பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டபோது இந்த காணாமல் போன விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார் – “லலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை குறித்து நான் பாரிய நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். அது என் மனதை கனக்கச் செய்தது. அந்த நேரத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர் நண்பர்கள், தலைமறைவாக இருந்து, உதுல் பிரேமரத்னவுக்கும் (வழக்கறிஞரும் ஆர்வலருமான) எனக்கும், லலித் மற்றும் குகன் எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவ்வப்போது தகவல் அளித்தனர். அந்தத் தகவல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், லலித் மற்றும் குகன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உதுலையும் என்னையும் எங்களுக்குத் தெரிந்த பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொள்ளத் தூண்டியது. ஆளுநராகவும், பின்னர் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்த ராஜித் கீர்த்தி தென்னகோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.” 2009 டிசம்பர் 15 அன்று, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்: “லலித்குமாரும் குகன் முருகானந்தனும் காணாமல் போகவில்லை; அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. அவர்கள் விரைவில் பொலிஸ் அல்லது இராணுவத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். எனினும் உறுதியளித்தபடி மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடத்தியது. ஆனால், அவர்களை அங்கு காணவில்லை. லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 15 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என பல செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். லலித் குமார் வீரராஜ், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://puja.lk/ta/story/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/
  10. எதுக்கும் பழைய புளொட் இயக்க ஆட்களை விசாரிக்க வேண்டும். நாமலுடன் போய், மாலைதீவை பிடிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயச் சென்றவர்களா என அறிய.😁
  11. இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔
  12. அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ........ ! 😀
  13. சும்மா விடுங்க . ......... காதலுக்கு கண் இல்லை எனும்போது பொன் எல்லாம் துச்சம் ........... ! 😀
  14. என்னைய்யா வர்த்தக விமானி என்பது காற்றாடி இயந்திரத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை என கூறினீர்கள். எனக்கு அதை வாசிக்க வெள்ளை ஆடை அணிந்துகொண்டு நுளம்பு புகை அடிப்பவர்தான் நினைவில் வந்தார். இதற்கு மேல் விமானத்துறை பற்றி சிறப்பாக யாராவது விபரிக்க முடியுமா? எதிர்கால சந்ததியிடம் யாராவது விமானி ஆக விருப்பமா என்று கேட்டால் பய பிள்ளைகள் பின்னங்கால்கள் பிடரியில அடிக்க திரும்பி பார்க்காமல் ஓட்டம் தான் எடுப்பாங்கள் போல.
  15. மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள். மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.
  16. ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம். பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.
  17. தேசிய பாடசாலை ஒன்றில் பணிபுரிகின்றீர்கள் போல் உள்ளது.
  18. பொதுவாக பெண்ணின் அண்ணன்மார், அப்பா, மாமாமார் போன்றோர்தான் காதலனை வெட்டுவார்கள் கொலை செய்வார்கள் என இந்திய செய்திகள் வரும். இங்கே பெண்ணின் தம்பிக்கு உரு ஏறிவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.