இந்த உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்தின் அடிப்படை நேட்டோ விரிவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவினது நிலைதான், 2014 நடுநிலையான உக்கிரேன் ஆட்சியினை இரஸ்சிய சார்பு ஆட்சி என கூறி தீவிர வலது சாரிகளின் ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டு அதன் பின்னர் ஒரு நீண்டகால அடிப்படையில் இரஸ்சியாவிற்கு எதிராக உக்கிரேனில் ஒரு களம் அமைப்பதற்காக போர் பயிற்சி ஆயுத தளபாட வசதி என போரிற்காக உக்கிரேன் தயார்படுத்தப்பட்டது. அமெரிக்கா முன்னர் 20% உலக வர்த்தகம், உலக சர்வதேச நாணயம், என அனைத்து பொருளாதார ரீதியில் உலகு தங்கியிருக்கும் நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் 800 மேற்பட்ட இராணுவ தளங்களுடன் ஒரு பெரிய சாம்ராஜம் நடத்தும் அமெரிக்காவிற்கு எதிராக இரஸ்சியாவினால் எதுவும் செய்து விட முடியாது எனும் உறுதி நிலையில் ஒரு நம்பிக்கையுடன் போரிற்கான முஸ்தீபுகளின் மூலம் இரஸ்சியாவினை போரிற்குள் தள்ளி அதனை உடைத்துவிடலாம் என நம்பியிருந்தது. நடைமுறையில் இரஸ்சியர்கள் இவ்வகையாக அமெரிக்க எதிர்ப்பிற்கு அமைதியாக அடிபணிந்துவிடுவார்கள் என தவறாக மதிப்பிட்டிருக்கலாம். இந்த போரினை ஐரோப்பா மூலம் அமெரிக்கா தொடர்ந்தும் நடத்தும் எனவே நம்புகிறேன், ஆனால் அமெரிக்காவின் அமைதி முயற்சி என்பது ஒரு நாடகம் என கருதுகிறேன். அமெரிக்காவிற்கு இந்த போரிற்கான தேவை தொடர்ந்தும் உள்ளது, அது பொருளாதார இராணுவ ரீதியான தேவைகளாக உள்ளது, தற்போது பேசப்படுவது போல நிரந்தர போர் முடிவிற்கு வராது ஆனால் உக்கிரேன் பலப்படுத்த ஒரு தற்காலிக ஓய்வு தேவை. இந்த போர் முடிய வேண்டுமாயின் ஒன்று போரில் இரஸ்சியா தோற்கடிக்கப்பட்டு மேற்கின் கைகளுக்கு செல்லவேண்டும் அல்லது உக்கிரேன் தோற்க வேண்டும். தற்போதய முயற்சிகள் உக்கிரேனை தோல்வியிலிருந்து காக்க முயற்சிக்கும் நடவடிக்கைகள். ஆனால் நீண்ட போரை தொடர்ந்து நடத்தக்கூடிய வகையில் இந்த வளர்ந்த 7 நாடுகளும் இல்லை என கூறுகிறார்கள், அமெரிக்க நாணயம் தரமிறக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்க நாணயங்களையும் பணமுறிகளையும் அதிகளவில் சேமிப்பில் வைத்திருக்கும் ஜப்பானது கடன் 252% அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எட்டும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்காவின் கடன் 134% அதே 5 வருடங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது (ஐ எம் எப் இன் தரவுகளின்படி 2029 இல் debt to GDP UK 110%, ITALY 145%, FRANCE 115%, இதில் ஜேர்மனியும் கனடாவும் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன). Currency Devaluation முன்பு சில நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள் 1950 இல் பிரான்ஸ் மற்றும் 1990 இல் இத்தாலியிலும் நடந்த நாடுகளாகும். நிலமை இப்படி மோசமாக மாறுவதனால் போரினை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் போரினை சமாதானமாக முடிக்க முயற்சித்தால் அது இரஸ்சியாவின் விருப்பமான உக்கிரேன் நடு நிலையான நாடு எனும் கொள்கையினை ஏற்கவேண்டும் அதற்கு மேற்கு தயாராக இருக்காது என கருதுகிறேன்.