Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    3311
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/21/25 in all areas

  1. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  2. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443995
  3. இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.
  4. 21 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார். அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை பற்றி பேசினார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப் பணிகளுக்குரிய தொழில்நுட்பம் சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்து விதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனித உரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மை மிக்க பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரிய சபையினைக் கோருகின்றேன். குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப் பணியாக 9 நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 06.08.2025 அன்று 32ஆவது நாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த வகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தம் 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இந்த அகழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள் என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது. மேலும் இதுவரை இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவை என கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாகவே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகிறது. வாக்குமூலம் வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களை அளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன். படுகொலைகளோடு தொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகிய நால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210 பக்கங்களைக் கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரண தண்டனை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இவ்வாறு சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன். இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப் பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம் பற்றிய விபரங்கள், மணியம் தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட தரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன். அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஒரே மார்க்கமாக அமையும். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள் பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கும் பன்னாட்டு நீதி விசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/223022
  5. இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️
  6. கல்முனையில்.... பூட்டிய கடைகளுடன் இணையத்தில் வந்த படத்தை நான் பார்த்து, சிலவேளை சாணக்கியன் சொன்ன படியால்... வியாபாரிகள் ஹர்த்தாலை முழுமையாக கடைப் பிடிக்கின்றார்கள் என நினைத்தேன். நீங்கள் கூறியதை பார்த்த பின்புதான் தெரிந்தது காலி ஏழு மணிக்கு எடுத்த சுத்துமாத்து படங்கள் அவை என்று. சுமந்திரன் எப்பவும் சுத்துமாத்து செய்து கொண்டே இருந்தால்... மக்களும் பொறுமையின் எல்லை தாண்டி, செமையாக வாங்கிக் கட்டுவார் என்பது நிச்சயம். இதைவிட இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை ஹர்த்தால் என்று அறிவித்திருக்லாம்.
  7. 📌👉சனங்களை திரட்டுவதில் யாழ்ப்பாணத்தில் நல்லூரான்தான் அரசன். ❤️🙏🙏🙏🌹🙏🙏🙏❤️
  8. எனக்கொரு காதலி இருக்கின்றாள் ....... ! 😍
  9. நல்லூரானின் தேருக்கு அகவை 61 நல்லூர்க் கந்தசுவாமியார் இன்று ஏறிவந்த தேரின் வரலாறு! நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் புதிய தேர் ஒன்று செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவல் காலஞ்சென்ற அறங் காவலர் அவர்கள் மனதிற் குடிகொண்டது. புதிய தேர் உருவத்திலும் அமைப்பிலும் பழையதேரை ஒத்ததாயிருக்க வேண்டும் என்பது அறங்காவலரின் ஆசையாகும். இத்தகைய சித்திரத் தேரை அமைத்தற்குப் பல்லாற்றானும் திறமை வாய்ந்த சிற்பாச்சாரி திருவிடை மருதூர், இரா.கோவிந்தராஜா ஆச்சாரியரே என உணர்ந்த அறங்காவலர் அவர்கள் அதனை உருவாக்கும் பொறுப்பினை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தேர்த் திருப்பணியும் நன்னாளில் ஆரம்ப மாயிற்று. திரு.இரா.கோவிந்தராஜா ஆச்சாரியவர்கள் தமக்கு உதவி புரிய நான்கு உதவியாளரை இந்தியாவிலிருந்தே கூட்டிக் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உள்ளூர்த் தொழிலாளர்களும் உதவி புரிந்தனர். ஒரு வருடத்துக்குள் புதிய தேர் உருவாயிற்று. புதிய சித்திரத் தேரினை ஒரு வருடத்துக்குள் உருவாக்கி வெள்ளோட்டத்தையும் நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்து மாக இருந்தார் அறங்காவலர் குகஸ்ரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவருக்குப் பின்னணியில் நின்று தேரின் உறுப்புக்கள் உருவாக்கப்படும்போதும் வர்ணங்கள் பூசப்படும் போதும் ஆலோசனை கூறி நேரடியாகக் கண்காணித்து வந்தவர் அறங்காவலரின் அருமைச் சகோதரர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். புதிய தேர் உருவாகுவதற்குத் தேவையான மரங்களை வவுனியாக் காட்டிலிருந்து தெரிந்தெடுத்து நல்லூருக்குக் கொண்டு வருவதில் வவுனியா முன்னால் உருவாகுவதற்குத் எம்.பி.திரு.செ. சுந்தரலிங்கம் அவர்கள் பேருதவி புரிந்தார்கள். அறங்காவலர் விடுத்த வேண்டுகோட் கிணங்கி முருக பக்தர்கள் மனமுவந்து தாராளமாகப் பண உதவி புரிந்தார்கள். ஆகவே அறங்காவலர், சிற்பாச்சாரியர், அன்பர் யாவரும் பக்தியுடன் இத்திருப்பணியில் ஈடுபட்டதன் பயனாகப் புதிய தேர் உருவாயிற்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆந் திகதி புதிய தேரின் வெள்ளோட்டம் வெற்றியாக நிறைவேறியதைக் கண்டு அறங்காவலர் அவர்கள் அளப்பரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நல்லூர்க் கந்தனின் திருப்பணி அவன் அருளால் நிறைவேறியது கண்டு அவன் பொன்னார் திருவடிகளைத் திரிகரண சுத்தியுடன் தொழுதார்கள். தமது உள்ளத்தில் மேலிட்டு நின்ற ஆசை நிறைவேறியது கண்டு முருகனைத் தொழுது அதனை உருவாக்கிய சிற்பாச்சாரியருக்கும் உதவியாளருக்கும் சன்மானம் வழங்கி நிதி உதவிபுரிந்த அன்பர்களுக்கும் தம் நன்றியைச் செலுத்தினார்கள். இத்தேர் உருவாகுவதற்கு ஏறக்குறைய ஒன்றேகால் லட்சம் ரூபா பிடித்திருக்கும் எனக் கூறலாம். 1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் தேர்த்திருவிழாவிலன்று நல்லூர்க் கந்தன், இப்புதிய சித்திரத் தேரில் ஆரோகணித்துப் பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளினார். ஆதாரம் - இலங்கையின் புராதன சைவாலயங்கள் நல்லூர் கந்தசுவாமி குல. சபாநாதன் குமரன் புத்தக இல்லம். Babu Babugi
  10. ஆரம்பத்தில் பிறிக்ஸ் பொது நாணய உருவாக்கத்தில் முட்டுக்கட்டை போட்ட இந்தியா, சீனாவின் வகிபாகம் அதிகரிக்கும் என கருதினார்கள், அதே சமயம் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்குபெருமளவில் முதலீடுகளை செய்தார்கள், மறுபுறம் மலிவு விலை எரிபொருளை இரஸ்சியாவிடம் வாங்கிய வண்ணம், ஆனால் அமெரிக்கா பாகிஸ்தான் சார்பு நிலையினை தெளிவாக எடுத்த பின் தற்போது சீனாவுடன் நல்லுறவினை ஏற்படுத்த முனைகிறார்கள். பிறிக்ஸ் நாணய உருவாக்கத்தில் பின்னடிப்பு செய்யாமல் விட்டிருந்தால் தற்போது இடம்பெறப்போகும் பொருளாதார தடையினை எதிர்கொள்வதில் ஓரளவு சிரமம் இல்லாமல் இருந்திருக்கலாம். எவ்வாறு இரஸ்சியா இந்த பொருளாதார தடையினை எதிர்கொள்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் முயற்சியில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வியாக கருதப்படுகிறது. இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்க செய்கிறார்கள் எனும் அமெரிக்க குற்றசாட்டிற்கு இந்திய எதிர்கட்சி வலுச்சேர்க்கிறது. பொருளாதார தடை சாமானிய மக்களின் மேலே போடப்படு ஒரு அழுத்தம், இந்த உத்தியினை போரை ஏவும் சக்திகள் பயன்படுத்தி வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் ஆட்சி பீடத்திற்கு ஏற்படுத்தும் அழுத்தம் அதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியாக மட்டுமே. இது இந்திய ஆளும் கட்சிக்கும் தெரியும், அமெரிக்கா இந்திய ஆளும் கட்சிக்கெதிரான ஆட்சி மாற்றத்திற்கு தாயாராகி வருகிறது போல தெரிகிறது, தற்போதய அமெரிக்க இந்திய வேறுபாடு ஏதோ ஒரு வகையில் இலங்கையிலும், இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் தீர்விலும் ஆதிக்கம் செலுத்தலாம் என கருதுகிறேன்.
  11. ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும்தானா பேயாட்டம் ஆடுது. ஏறமுன்னம் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம்தான். 😁
  12. "மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்டுக் குருவி, தாவிப் போகுது அன்ன நடையில், தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்! ஆவி பொருள் உடல் அனைத்தும், தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................... 'ஒரு மழைகால இரவு' ஒரு மழைகால இரவு இருளுதே பருவ ஆசை மனதில் தூறுதே இரு கைகள் ஏங்கித் தேடுதே கரு விழியாளே கருணை காட்டாயோ? ஆறு பாயும் பேராதனை வளாகத்தில் ஆறுதல் கொடுக்கும் அழகு மலரே இறுமாப்பு உனக்கு இன்னும் வேண்டுமா வெறுப்பு அகற்றி அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் https://www.facebook.com/share/p/1CZWhQNpBP/?mibextid=wwXIfr
  13. இதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கின் முரண்நகைக்கிடமான முயற்சி, ஒரு புறம் போருக்கு மஸ்தியஸ்தம் செய்யும் நடுநிலை என காட்டிக்கொண்டு, மறு புறம் ஒரு தரப்பிற்கெதிராக பாதகமான முறையில் பக்கசார்பாக இயங்குவது. ஒரு தரப்புக்கு ஆயுத உளவு தகவல்களை வழங்கிக்கொண்டு மறுப்புறத்திற்கு பொருளாதார தடை விதிக்கும் நடுநிலை இது. ஐரோப்பிய நாடுகள் இரஸ்சியாவின் ஆக்கிரமிப்பு தவறு என்பதனை எதிர்ப்பதற்காக போரிடுவதாக காட்டிக்கொள்ளும் நாடுகள் இரஸ்சியா 2021 பிற்பகுதியில் இருந்து 2022 உக்கிரேன் மீது அதன் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் வரையில் நேட்டோவிடமிருந்து தமக்கு பாதுகாப்ப்பு உறுதி வேண்டும் என கேட்ட போது அதனை மறுத்தவர்களின் உள்நோக்கம் இரஸ்சியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்வதே எனும் நிலைப்பாடாகும். இந்த நிலை இருக்கும் வரை இரஸ்சியாவின் அழிவு உறுதிப்படுத்தப்படும் வரை போர் தொடரும். இவ்வளவு அழிவின் பின்னராவது ஐரோப்பிய தலைவர்கள் நேட்டோவின் பிரசன்னம் ஏதோ ஒரு வகையில் இரஸ்சிய எல்லைக்கு நீடிக்க வேண்டும் எனும் முயற்சியில் உலகினை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லாமல் இருக்க முயற்சிக்கவேண்டும். இந்த போருக்கும் அழிவிற்கும் காரணம் மேற்கும்தான்.
  14. வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443954
  15. ரம்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பெருவெற்றி கிடைத்துள்ளது....அடுத்து பழப்புளி விலை 5 ரூபாவால் குறைக்க முயற்சி எடுக்கப்படும்
  16. ஜெர்மனியில் நடந்த மக்கள் சந்திப்பில் இது வலியுறுத்தப் பட்டதாம் ...இனி ஜெர்மன்காரர் என் .பி.பி பக்கம் ...சிறியர் ..சாமியர் நீங்கள் என்ன சொல்லுறியள்🙃
  17. நண்பா மோதி விடாதே மொத்தமும் கடன்...
  18. ஏராளன்… ஏற்கெனவே, சருமத்திற்கு பூசுகின்ற கிறீம் வகைகள் சிலவற்றை தலைமுடியில் இருந்துதான் தயாரிக்கின்றார்களாம். திருப்பதி, பழனி போன்ற கோவில்களில்… பக்தர்கள் மொட்டை அடிக்கும் முடிகள் எல்லாம் தொன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சில சொக்லேட்டுக்களில் கூட முடி கலந்துதான் தயாரிப்பு வேலை நடக்கின்றதாம்.
  19. ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது. வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும். கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன. இதற்குப் பிரதான காரணங்கள் 1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும். 2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. 3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது. 4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்? 1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது. இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும். முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும். ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும். 2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும். A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும், B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும், C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும் (ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும். 3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது) வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம். வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்” வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்! தொகுப்பு – சுயாந்தன் https://oruvan.com/accidents-on-the-omanthai-a9-road-are-increasing-a-study/
  20. காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு! காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது. இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும். https://athavannews.com/2025/1443887

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.