Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/23/25 in all areas

  1. இதுதான் சார் நேற்று எனக்கும் நடந்தது . .......... ! இருவர்ணத்தில் இனிய பாடல்கள் பகுதியில் " பொன்னை விரும்பும் பூமியிலே " பதிந்திருந்தேன் அது "பொண்ணை " என்று ஆட்டொ ஸ்பெல்லிங்கில வந்துட்டுது . ........ நான் கவனிக்கவில்லை ......... அதை சகோதரி நிலாமதி கண்டுபிடிச்சு பொன் என்றால் தங்கம் , பொண் என்றால் பெண் என்று விளக்கம் குடுக்க பிரியன் ஓடிவந்து லைக் குடுக்க ஒரே பேஜாராய் போயிட்டுது சிறியர் . .......! 😂 சும்மா பகிடிக்கு , நீங்கள் தப்பா எடுத்துக்க வேண்டாம் ........! 😀
  2. பொன்னை (தங்கம் ) விரும்பும் பூமியிலே என்னை விரும்புமோருருயிரே
  3. அவசியம் தெரிய வேண்டிய விடயம். உணவு துகள் மூச்சு குழாயில் சிக்கி திணறல் யாருக்கும் ஏற்படலாம். அவசியம் அனைவரும் அறியவேண்டிய முதலுதவி சிகிச்சை இவை. இணைப்பிற்கு நன்றி @ஏராளன்
  4. கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.
  5. தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் சிறுவனுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அன்று இரவு அந்த மாத்திரைகளை மகனுக்கு வழங்கியதாக பெற்றோர் கூறுகின்றனர். அதை விழுங்கும்போது, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கும் இதுபோல நடக்க வாய்ப்புள்ளதா? குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுக்கலாமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே' "5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அவர்கள் கைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். அவை தொண்டையில் சிக்கி காற்றுப்பாதையை அடைக்கும்போது, நுரையீரல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கலாம். மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கும்போது, அது மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்." என 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' தெரிவிக்கிறது. ஆனால், "மாத்திரைகளை முழுங்குவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, (சில) பெரியவர்களுக்கும் கூட எளிதானது அல்ல. மாத்திரைகளை முழுங்குவது, மூன்றில் ஒருவருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது." என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி தெரிவிக்கிறது. இதுகுறித்துப் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பொதுவாகவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படியே கொடுப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் பொடித்துக் கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே" என்கிறார். படக்குறிப்பு, சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார். பொதுவாக வாயில் சிறிதளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, பின்னர் மாத்திரையை வாயில்போட்டு விழுங்குவது சிறந்தது எனக் கூறும் அவர், "ஆனால், குழந்தைகளை அவ்வாறு செய்யவைப்பது சுலபமல்ல என்பதால், பொடித்துக்கொடுப்பது நல்லது." என்கிறார். சில மருந்துகள் மாத்திரை வடிவங்களில் மட்டுமே இருக்கும், சிரப் வடிவில் கூட கிடைக்காது என்பதால், சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார். "குழந்தைகளுக்கு அதைக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்குவர். ஆனால் இறுதியாக, பெற்றோர் தான் குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுப்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்." என்றும் அவர் கூறுகிறார். குழந்தைகளில் மூச்சுத் திணறல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்க, மாத்திரைகளை நசுக்கி தண்ணீருடன் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கிறது. பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டுமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மாத்திரைகளை அப்படியே விழுங்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார். 'மாத்திரைகளை விழுங்குவது என்பது பெரியவர்களுக்கு குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிகவும் கடினமானது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், மாத்திரைகளை விழுங்குவது மூலம் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்' என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை தெரிவிக்கிறது. குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால், அவர்கள் ஒருகட்டத்தில் மாத்திரைகளை உட்கொள்வதையே தவிர்ப்பதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாக மாறுகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும் என்றும், உதாரணத்திற்கு 19.5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுத்துக்கொள்ளப்படும் நீரிழிவு நோய்க்கான மிகவும் பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் போன்றவை அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு முக்கியப் பிரச்னை என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. "முதியோர்களுக்கு மாத்திரை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும் நீரில் கரைத்துக் கொடுப்பது நல்லது. மாத்திரையை விழுங்கியே ஆக வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. கேப்சியூல் வடிவில் இருந்தாலும் பிரித்து, நீரில் கரைத்துக் கொடுக்கலாம்." என்கிறார் மருத்துவர் அருண்குமார். தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. "குழந்தைகள், பெரியவர்கள் என தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார். பொதுவாக ஒருவருக்கு தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனே முதுகில் தட்டுவது என்பது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அது பெரிதாக பலனளிக்கக்கூடிய ஒரு முறை அல்ல என்பது மட்டுமல்லாமல், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் மேலும் கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த ஹெய்ம்லிச் மனேவர் (Heimlich maneuver) முறை பரிந்துரைக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக, 1960களில் அமெரிக்காவில், உணவு, பொம்மைகள் மற்றும் பிற பொருட்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது தற்செயலான மரணங்களுக்கு ஆறாவது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுத்திணறலால் சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும். மூச்சுத்திணறல் அல்லது தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தொண்டையில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, பேச, இரும அல்லது மூச்சுவிட முடியாத நிலையில் ஒருவர் இருந்தால், உடனடியாக இந்த ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும். "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார். ஒருவயதிற்குட்பட்ட குழந்தை என்றால், தங்களது தொடையின் மீது வயிறு இருப்பது போல குழந்தையை படுக்க வைத்து முதுகில் தட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். "பல பள்ளிக்கூடங்களில் இந்த முதலுதவி முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு எளிய முறை தான்." என்கிறார் அருண்குமார். 'மாத்திரைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்கவே கூடாது' படக்குறிப்பு, மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுவது ஆபத்தானது என்கிறார் ரேவதி. "பொடித்து கொடுக்கிறோமோ அல்லது உடைத்துக் கொடுக்கிறோமோ, ஆனால் ஒருபோதும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகள் பீதியடைவார்கள், அது மூச்சுத்திணறலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்" என்கிறார் மருத்துவர் ரேவதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் மூத்த ஆலோசகராக உள்ளார். குழந்தைகளை ஆசுவாசப்படுத்தி கொடுக்க வேண்டும், அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அவர், "சிலர் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுகிறார்கள். அது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது." என்கிறார். சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய் அமைப்பு மிகவும் குறுகலாக இருப்பதால் மாத்திரைகள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறுகிறார். "6 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால் நிச்சயமாக தண்ணீரில் கரைத்துக் கொடுங்கள். 6 முதல் 10 வயது என்றால், உடைத்தோ அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் கொடுக்கலாம் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை (Chewable tablet) பரிந்துரைப்பது சிறந்தது. 10 வயதிற்கு மேல் மாத்திரைகளை அப்படியே விழுங்கச் சொல்லலாம், ஆனாலும் கவனம் தேவை" என்கிறார் மருத்துவர் ரேவதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2x4z4e74vo
  6. எனக்கு பிடித்த சில வரிகள். 1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது . இந்த சோகங்கள் துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே மாறிவிடாது. 2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில் . அதன் பிறகு அவள் ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது . 3. குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன. 4 வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை 5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது எல்லார் தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும் காதலும் 6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது . 7.பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 8.சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள் எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை அவளின் சத்தம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./
  7. உங்கள் ஆவல் புரிந்து கொள்ள முடிகிறது...😝
  8. ஊழலை ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ரணிலைவிடப் பெரும் ஊழல்வாதிகள் சுனாமி நிதியிலிருந்து போர்விமானக் கொள்வனவு என்று இதனைச் சுட்டிய ஊடகவியலாளர் ல.விக்ரமதுங்க போன்றவர்களையே கொலைசெய்தவர்களெனப் பலர் வெளியே. தையிட்டி முதல் மட்டக்களப்பு மேய்சல்தரை வரையான பல்கிப்பெருகியதும் அவசரமாகத் தீர்வுகாண வேண்டிய விடயங்கள் குறித்து அனுர அரசுக்கு அக்கறையில்லை. ரணிலின் கைதுசெய்து அதனை ஒரு பேசுபொருளாக்கி உலகிடம் தானொரு உழலற்ற அரசை நடாத்துவதாகப் படம் காட்டும் அடையாள நடவடிக்கைகள். அனுர அரசிடம் நேர்மையிருந்தால் செம்மணியை அனைத்துலக நிபுணர்களை அழைத்து விசாரணை செய்துகாட்ட முடியுமா? எனவே, சிங்கள அரசியல்வதிகள் தமக்கிடையே குத்துப்பட்டாலும் இனமென்று வந்தால் ஒன்றாகி நிற்பவர்கள். தமிழினத்தை அழிப்பதில் மாற்றுக்கருத்தற்றோர். இந்தக் கைதால் தமிழருக்கு எந்த நன்மையாவது உண்டா? இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருவன் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. ஒருவாய் மீனுக்கு ஒரு பறவை உட்க்கார்த்திருப்பதைப் பாருங்கள் . .........! 😂
  10. ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும். ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.
  11. நாங்களும் ஏதாவது செய்தோம் என்று அனுராவுக்கும் ஒரு பதிவு தேவை அல்லவா??
  12. ரணிலின் புண்ணியத்தினால் பார் லைசன்ஸ் எடுத்து பினாமிகளை வைத்து பார் நடாத்தி செல்வந்தராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றில் ரணிலின் சிறப்புரிமை மீறல் குறித்து குரல்கொடுக்க வேண்டும். மக்களின் வயிற்றில் அடித்ததுதான் போகட்டும், கடைசி செஞ்சோற்றுக்கடன் செய்த புண்ணியமாவது கிடைக்கும்! 😁
  13. நம்ம சுமா...கூட்டாளிக்காக ஒரு கர்த்தால் போடப்போறார்...
  14. ஜெயவே வா....ஜெயவே வா எனும் கோஷம் முழங்க அண்ணல் உள்ளே சென்றார்..
  15. சிலர் சாப்பிட்டுக்கொண்டே குனிந்து நிலத்தில் வீழ்ந்ததை எடுக்க முயல்வார்கள். அது இன்னும் ஆபத்தானது.அதை விட சாப்பிடும் போது தும்மல் வந்தால் வாயை திறந்து தும்ம வேண்டுமாம்.வாயை மூடிக்கொண்டு தும்மினால் வாய்குள் இருக்கும் சாப்பாடு சிரசுக்குள் அடித்து மரணம் கூட நிகழலாமாம்.
  16. அட இதுக்காக கொழும்பு போக ரெடியாகின்னான் ..பிழைச்சுப் போச்சு..
  17. பொண்ணை விரும்பும் பூமியிலே ....... ! 😍
  18. ஆடடிச்சு அழகாகக் கழுவியெடுத்து அரிஞ்சு வைப்போம் ஓரமாக ஆறாகப் பாய்ந்த ஆட்டின் இரத்தத்திலே அருமையாகச் சுண்டிவைப்போம் ஆட்டுத்தலை பிளந்து அற்புதமாகப் பிரட்டியெடுப்போம் ஆட்டுக்கறி சமைத்து அயல் அண்டையார் சூழ ஆகா! ஓகோவெனப் புகழ்ந்து அகம் நிறைய உண்ணுவோம் 😂 Sinnarajah Shanmuganathan ############################ ######################### ஆட்டுக்கறியும்... ஆட்டக்காரியும் குழைச்சு வெளுக்க குடுத்து வைக்கவேணும் 😂 Sinnarajah Shanmuganathan
  19. தாயைத் தேடும் நெஞ்சங்கள் ....... ! 😀
  20. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
  21. பாகம் பதினாறு எனக்கு அன்றைக்கு மனம் நிறைய மகிழ்ச்சியாக இருந்தது. என்னை ஒரு முக்கியமான பயிற்சிக்கு அழைத்திருந்தது தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அது எவ்வளவு கடினமான பயிற்சி என்று எனக்கு தெரிந்திருந்தும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்தி, காட்டுக்குள் அடுத்த கட்ட போராளிகளை நகர்த்துவதற்கான திட்டம் தீட்டபட்டிருந்தது. அதற்கான விசுவாசமான போராளிகளின் அணியில் என்னையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தளபதி அன்பு மாஸ்டர் தலைமையில் எங்களுக்கு பயிற்சி வழங்கபட்டது. காட்டுக்குள் சென்று, அடுத்தகட்ட போராட்டத்துக்கு தேவையான ஆயத்தங்களை தொடங்குவதற்கான ஏற்பாடுகளுக்கான பயிற்சி.அந்த கால அவகாசத்துக்கு தேவையான பொருட்களையும் முதுகிலே சுமந்து செல்வதற்கான பயிற்சி. கிட்டதட்ட அறுபது கிலோமீட்டர், முதுகிலே ஐம்பது கிலோ பையுடன் நடைபயிற்சி. உறவுகளே ....என்ன நீங்கள் வியப்பில் வாயை பிளந்து நிற்பது எனக்கு தெரிகிறது.காரணம் நிச்சயமாக பயிற்சி கடினம் சம்பந்தபட்டதாக இருக்காது. இராணுவம் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பிடிச்சு இரட்டைவாய்காலில் வந்து நிற்கிறான், இவர்களிடம் எங்கே அறுபது கிலோமீற்றர் நடக்கிறதுக்கு இடம் இருக்கு என்பது தானே அந்த வியப்புக்கு காரணம். உண்மைதான் உறவுகளே, எங்களிடம் வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மட்டும் தான் இருந்தது, நீளமாக பார்த்தால் கூட எங்களிடம் ஒரு ஆறு கிலோமீற்றர் தான் வரும்.ஆனாலும் நாங்கள் நடந்தோம். ஆமாம் ஒரு மூன்று கிலோமீற்றர் கடற்கரை பகுதியில் இருபது முறை நடந்தோம். கடற்கரை மணலில் கால் புதைய, புதைய , சிங்களவனின் கொடிய பல் குழல் எறிகணைகளுக்கும், கடலில் இருந்து ஏவும் பிரங்கிகள், நீண்ட தூர சன்னங்களுக்கும் மத்தியிலும், குனிந்த படி கூட நடந்தோம். எங்கள் முதுகில் இருந்தது ஐம்பது கிலோ பாரம் மட்டும் இல்லை எங்கள் மக்களின் விடிவு என்று நினைத்து சுமந்தோம். சொல்லுங்கள் உறவுகளே. அன்றைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் கூட.. உங்களிடம், எங்கள் மக்களின் அடுத்த கட்ட போராட்டம், எங்கள் மக்களின் விடிவு, ஒப்படைக்க பட்டிருந்தால் ஐம்பது கிலோ என்ன.. ஐநூறு கிலோ என்றாலும் தூக்கும் மனநிலை உங்களுக்கு வராதா..?? ஆனால் என்ன, நல்ல சாப்பாடே கிடைப்பது கடினம், நல்ல சாப்பாடு என்ன.. சாப்பாடே இரண்டு நாளுக்கு ஒரு முறை தான். இதில் நடைபயிற்சியின் போது தண்ணீர் கூட அருந்த தடை. ஒரு போத்தல் தண்ணீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் முடிக்க வேண்டும். காட்டிலே தண்ணீர் கிடைக்காது என்று காரணம் வேறு சொல்லுவார்கள். நடந்து முடிய, கடின ஆயுத பயிற்சி. அந்த தன்னியக்க கடின ஆயுதங்களை தூக்கவே உடம்பில் தெம்பிருக்காது, ஆனால் மனசில் இருக்கும் தெம்பால் தூக்குவோம். சுடும்போது வரும் பின்னுதைப்பை தாங்க நெஞ்சிலே பலம் இல்லைவிட்டாலும், உறுதி இருந்தது. நிச்சயம் வெல்லுவோம் உறவுகளே. கடந்த இரண்டு நாள் பயிற்சியின் போதும் எதுவுமே சாப்பிடவில்லை. அது கட்டாயம் இல்லை.. ஆனால் உண்மையில் சாப்பாடு இல்லை. இரண்டு நாளைக்கு பிறகு இன்றைக்கு பின்னேரம் தான், எங்களின் முகங்களில் ஒரு சிறு புன்னகை. ஆமாம் எங்களுக்கு சாப்பாட்டு பொதி ஒன்றை தந்திருந்தார்கள்.மூன்று பேருக்கு ஒரு பொதி. அது தான் எங்களின் புன்னகைக்கான காரணம். அடுத்த நாட்களை பயிற்சியுடன் தாக்குப்பிடிக்க அந்த உணவு கட்டாயம் தேவை. எங்கே பயிற்சியில் ஏலாமல் விழுந்துவிட்டோம் என்றால் எங்களை அணியில் சேர்க்கமாடார்களோ என்ற பயம் வேற. எங்கள் மக்களுக்காக, அவர்கள் விடிவு பெறும் வரை போராட வேண்டும். கடவுளே அதற்கான மனத்துணிவு என்னிடம் இருக்கு உடல் பலத்தை மட்டும் கொடு என்று ஒவ்வொரு நாளும் நான் வேண்டாத தெய்வமில்லை. அதன் பலன் தானோ என்னவோ இன்றைய சாப்பாட்டு பொதி. அதற்குள் என்ன இருக்கு என்று அவிழ்த்து பார்க்கும் ஆசை எல்லாருக்கும் இருந்தாலும், குளித்து விட்டு வந்து ஆறுதலாக ரசித்து சாப்பிடுவோம் என்று அந்த எண்ணத்தை கைவிட்டோம். என்ன உறவுகளே..என்னடா இவன் ஒரு சாப்பாட்டு பொதிக்கு இவ்வளவு அலைகிறானே என்று யோசிக்காதீங்கள். அந்த நேரத்தில் அதன் பெறுமதி உங்களுக்கு என்ன என்று புரியாது... குளித்துவிட்டு வந்து, மூவரும் சுற்றிவர அமர்ந்து அந்த பொதியை பிரித்தோம். பயறும், பருப்பும் கலந்த சோறு. காலையிலையே சுட சுட கட்டியிருப்பார்கள் போலும், கொஞ்சம் குழைந்து போய் இருந்தது. ஒரு ஆறு சிறங்கை தான் வரும்.ஆளுக்கு இரண்டு சிறங்கை என்று பங்கு போட்டு கொண்டோம். ஒரு சிறங்கை சோற்றை கையிலே எடுத்து வாயிலே வைக்க போகும் போது.. தம்பீ .. என்று ஒரு குரல். எங்களை கட்டி போட்டது. அந்த கடற்கரை பொட்டல் வெளியில், சோற்றை வாயிலே வைக்கவிடாமல் எங்களை, அந்த குரல் நோக்கி திரும்ப வைத்தது. அங்கே ஒரு நடுத்தர வயது அம்மா, கையிலே ஒரு குழந்தையுடன்..அந்த அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி இன்னொரு குழந்தை. எலும்புகளால் மட்டுமேயான குழந்தைகள். அவர்களின் உடம்பில் தோல் எங்கே இருக்கு என்று ஒரு ஆராச்சியே நடத்தலாம். அந்த அளவுக்கு ஒடுங்கி போய் இருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. தலை ஒடுங்கி இருந்தது.வாய், மூக்கு, கண்கள் எல்லாம் இலையான்கள் மொய்த்துகொண்டிருந்தன. கண்களில் ஒரு பசி ஏக்கம் அப்படியே தெரிந்தன. வறுமையான ஆபிரிக்க நாட்டு குழந்தைகளை படங்களாக பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம். இன்று எந்த மக்களுக்காக நாங்கள் போராடுகிறமோ அந்த மக்களே..அந்த மக்களின் குழந்தைகளே , ஒரு தமிழ் குழந்தை எங்கள் கண்முன்னாலே.. நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் படும் வேதனை கொஞ்சமாவது உங்களுக்கு புரிகிறதா உறவுகளே.. சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தை தன்னாலான மட்டும் கைகளால் தன்னில் மொய்த்து கொண்டிருந்த இலையான்களை கலைத்து கொண்டிருந்தான். அந்த அம்மாவின் கைகளில் இருந்த குழந்தையோ எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தது. தம்பீ..மீண்டும் அதே குரல் எங்களை சுய நினைவுக்கு கொண்டுவந்தது. தம்பி சாப்பிட்டு ஆறு நாளாச்சு. எனக்கு வேண்டாம் தம்பி.. இந்த குழந்தைக்காவது கொஞ்ச சோறு தருவீங்களா.? தம்பி மாட்டேன் என்று மட்டும் சொல்லிபோடாதேங்கோ..உங்கட காலிலே விழுந்து வேணும் என்றாலும் பிச்சையாக கேட்கிறேன்.. கொஞ்ச சோறு தாறீங்களா..? சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்களை கேட்டால் அந்த மனசின் வலி ஜென்மத்துக்கும் ஆறுமா ..? எந்த நெஞ்சையும் உருக்கும் அந்த பிச்சை குரலுக்கு உருகாமல் இருக்க நாங்கள் ஒன்று கல் ஜென்மங்கள் இல்லை தானே.. எங்கள் கைகளில் இருந்த உணவு எங்களை அறியாமலே, யாரையும் கேட்காமலே அந்த அம்மாவின் கைகளுக்கு மாறியது. அவசரமாக கைகளில் இருந்த குழந்தையை அப்பாலே கிடத்திவிட்டு, சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தைக்கு, கைகளால் சோற்றை குழைத்து தீத்த தொடங்கினாள் அந்த அம்மா.. தீத்தியபடியே..தம்பி நீங்கள் நல்லா இருக்கணும் தம்பி. எனக்கு தெரியும் நீங்கள் இந்த வெய்யிலில் முதுகில் பாரங்களுடன் ஓடி திரிந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு பசிக்கும் என்று நல்லா தெரியும். உடம்பிலே தெம்பிருந்தால் தான் நாளைக்கு சண்டைக்கு போகலாம் என்றும் எனக்கு தெரியும். என்ன செய்கிறது தம்பி. பசி...... அது எங்களையும் மீறி உங்களை கேட்கவைத்துவிட்டது. தம்பி. நீங்கள் வென்று தருவீங்கள் என்று தான் நாச்சிகுடாவில் இருந்து உங்கள் பின்னால் வந்தோம். இப்படி தான் எங்கட வாழ்க்கை முடியபோகுது என்றால் நாங்கள் குடும்பமாகவே பூச்சி மருந்தை சாப்பிட்டு அங்கேயே செத்திருக்கலாம் தம்பி. இப்படி புருசனையும் பறிகொடுத்திட்டு, ஒரு பிடி சோத்துக்காக பிச்சை எடுகிறதை விட அது எவ்வளவோ மேல் தம்பி. உண்மையான வசனங்கள்.. நெஞ்சை சுட்டன..உங்களுக்கு சுடவில்லையா உறவுகளே.. "அம்மா..நீயும் கொஞ்சம் சாப்பிடன்..." அந்த பிஞ்சு குழந்தை கைகளிலே கொஞ்ச சோற்றை எடுத்து அம்மாவின் வாய்க்கு கிட்டே நீட்டியது. நெஞ்சையே கசக்கி பிழிந்தது. அந்த பசியிலும் அந்த பிள்ளையின் தாய் பாசம் உலகத்திலே எதுக்கும் ஈடு இணை இல்லை. நாங்கள் அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம். எங்களை அறியாமலே எங்கள் கண்கள் குளமாகின. போராளிகள் அழ கூடாது என்று எங்கள் தளபதி அடிக்கடி சொல்லுவார். இதை பார்த்தும் நாங்கள் அழவில்லை என்றால் நாங்கள் மனுஷரே இல்லை.. "அம்மா .." எங்களின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்தார் அந்த அம்மா.. என்ன தம்பி உங்களுக்கு கொஞ்சம் வேணுமா..மிச்சம் வைக்கட்டுமா ..தாய்மையின் பாசம் கொப்பளிக்க கேட்டார்... "இல்லை அம்மா அந்த மற்ற குழந்தைக்கும் கொஞ்சம் கொடுக்கலாமே .." நா தழதழக்க கேட்டோம். அவர் சொன்ன பதில் எங்களை ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. எங்கள் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வர நாங்கள் என்ன செய்தோம். எங்கள் மக்கள் எங்கள் மேல் இவ்வளவு பாசம் வைக்க நாங்கள் என்ன செய்தோம். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த மக்களுக்கு மத்தியில் பிறந்தது இந்த மக்களுக்காகேவே போராடணும் என்று தோணிச்சு. உங்களுக்கும் தோணும் உறவுகளே ..ஏன் என்றால் நீங்களும் மனுசர் தான் உறவுகளே.. அந்த அம்மா சொன்ன பதில் .. நான் அந்த பிள்ளையை காட்டி பிச்சை எடுக்கவில்லை தம்பி. ஏன் என்றால் அது நான் அந்த பிள்ளைக்கு செய்கிற துரோகம். காரணம் இன்றைக்கு காலையில் தான் அந்த பிள்ளை பசி தாங்காமல் செத்து போச்சு தம்பி.. (தொடரும்) பாகம் பதினேழு இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.