Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10206
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/24/25 in all areas

  1. தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை .......... ! 😍
  2. When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை. பாடல் வரிகள் பா.எண் - 161 படம் – ஆரவல்லி 1957 இசை – G. ராமநாதன் பாடியவர் – ஜிக்கி , A.M ராஜா இயற்றியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - சின்னப்பெண்ணான போதிலே சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கன்னியென்னாசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கண் ஜாடை பேசும் எந்நிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மை தனை சொல் நிலவே நீ என்றேன். வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த பாடல் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டுவருகிறது ..எதிர்காலத்தில் பேரன் பேத்திகளுக்கும் பயன்படவேண்டும். ஆங்கில பாடலின் மூலத்திலிருந்து வந்தது . முடிந்தால் உங்கள் மகன் , மகளுக்கு சொல்லி பேரன் பேத்திகளை மனனம் செய்து இந்தப்பாடலைஉயிர் போடு வைத்திருங்கள். காலத்தால் அழியாத பாடல் .
  3. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
  4. உதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். To read the newspapers: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88
  5. https://youtu.be/_s7Z9mIMViQ?si=UhMyXWSZNm-XaDaa நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
  6. வீடியொ ஒன்றில்...கெழவி ஒருவருடன் சுத்தி சுத்தி டான்ஸ் ஆடினாரே..அதுவெல்லாம் பொய்யா குமாரு...😆
  7. அனுரவின் ஆட்சிக்கால நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் கைது இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பாதுகாக்கும் திட்டமே இருக்கும்.மகிந்தவின் கைது தமது எதிர்காலத் தோல்விக்கானதாக அமையலாம் என்ற பயமும் இருக்கும். ஒருவேளை இரண்டாவது பதவிக்காலம் கிடைத்தால் அப்போது மகிந்தவை நோக்கித் திரும்பலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு: இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢) இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர். அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார். இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே. ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை. இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய மிதக்கும் பொருளொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  9. இதுவரை காலமும் ரணில்... நல்லவர் என நினைத்திருந்தேன். 😜 இந்தக் கெட்ட பழக்கமும் இருக்குது என்று இப்பதான் தெரியும். 😂 🤣 எந்தப் புத்துக்குள்ளை, என்ன பாம்பு இருக்குது என்று, தெரியாமல் கிடக்குது.
  10. அவருக்கு முன்னால் ஒரு குழு குழு சிறுவனை விட்டு விட்டு பாருங்கள். அத்தனை வருத்தங்களும் பறந்து எழும்பி ஆட தொடங்கிவிடும். அதுவும் காந்தி வழியாம்.
  11. @பிரபா , எல்லாம் விளங்கியது என்று சொல்லமுடியாது. டேவிட் கள்ளப் பேரில் அசைலம் கேட்ட இராணுவ வீரன் என்று இறுதியில் தெரிந்தது. ஆனால் அவர் சிறுமிகளைச் சீரழித்தாரா என்று தெரியாது! ஷோபாசக்தி சொற்களைக் கொண்டு கதைகளைச் செதுக்குபவர் என்பதால் கவனமாகப் படிக்கவேண்டும்.
  12. அவர் பற்றி இன்னமும் அறியாத தகவல்கள்... கொழும்பு CRFC மைதானத்துக்கு அவ்வப்போது வரும் அவர் , அந்த மைதானத்தின் Pavilion மாடியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையில் அமர்ந்து மது அருந்தியபடி அங்கே ரக்பி விளையாடிக்கொண்டிருக்கும் பதின்ம வயது மற்றும் இருபதின் ஆரம்ப இளைஞர்களை கவனித்துக்கொண்டிருப்பார். அதில் பிருஷ்டம் பெரிதான சிறார்களை/இளையோரை குறிவைத்து கீழே இறங்கி, " வீட்டுக்கு வருகிறாயா? இலங்கை அணியில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் " என்பார். இவ்வாறாக அவர் இலங்கையை " தூக்கி நிறுத்தினார் " ithuvum facebook prathithaan மிஸ்டர் கிளீன் பற்றி எப்படியெல்லாம் எழுதுறாங்க..
  13. இலங்கை போலிசார் பிணை வழங்க மறுப்பது வழமையாக நடைபெறும் விடயம்தான். சாதாரண குடிமக்களுக்கும் இதுதான் இலங்கையில் வழமையான நடைமுறை. இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதற்காக இங்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கையில் சாதாரண பொதுமக்கள் முறைகேடாக தண்டிக்கப்படுவதை ஏற்கலாமா? சாதாரண பொதுமக்களுக்கும் இவ்விடயத்தில் விலக்கு அளிக்கலாமே!
  14. கொழும்புக் காத்தை சுவாசித்தவர்களுக்கு புரிவது புதிதல்லவே...😄
  15. நானும் தாமசுக்கு தான் நம்ம பண்டிதர் சுவி அண்ணருக்கு தெரியாத தமிழ் புலமையா ? 😄
  16. உங்கள் ஆவல் புரிந்து கொள்ள முடிகிறது...😝
  17. விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார். அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444334
  18. மகிந்த,கோத்தாவில் நினைத்தபடி கை வைக்க மாட்டார்கள் என நினக்கின்றேன்.ஏனென்றால் பெரிய அரச பதவிகளிலும் இராணுவ,போலிஸ் துறைகளிலும் மகிந்த,கோத்தா ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நிறையவே இருக்கின்றார்கள். அப்படி அவர்களை கைது செய்தால் ஆட்சி கவிழ்ப்புக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.
  19. பொண்ணை விரும்பும் பூமியிலே ....... ! 😍
  20. •யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂 மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல. மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே. இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது. தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்? இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂 அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். தோழர் பாலன்
  21. காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம் விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன். ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம். விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள். காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம். அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார். மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை. ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன. செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார். விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள். இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தோழர் பாலன்
  22. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1444328
  23. ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂
  24. ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது. குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே 76 வயதான முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மக்கள் எழுச்சியைத் தூண்டிய வேளையில் அவரது முன்னோடி கோத்தபய ராஜபக்ஷ தப்பி ஓடி, பதவி விலகி தொடர்ந்து 2022 முதல் 2024 வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பணியாற்றினார். வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியதற்காக அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார். 1990 ஆம் ஆண்டு முதல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் பிரதமராகப் பணியாற்றினார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவு 600 மில்லியன் ரூபாவுக்கும் ($2 மில்லியன்; £1.4 மில்லியன்) அதிகம் என மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது, 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர். எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2025/1444228
  25. “இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும் August 22, 2025 5:09 am -அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை. செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்ற கட்டமைப்பின் இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில், தமிழ் இன அழிப்பு என்ற விவகாரம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் நோக்கில் வெறுமனெ பேச்சு மாத்திரம் தான் விஞ்சியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதனை செப்பனிடும் அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலரும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்த இடத்திலேதான் சில புரிதல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும். –இன அழிப்பு என்றால் என்ன?– இன அழிப்பு (Genocide) என்பது ஓர் இனத்தையும் அந்த இனத்தின் மரபுரிமைகள் – வரலாறுகள் போன்றவற்றை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்தலைக் குறிக்கும். குறித்த இன மக்களை திட்டமிட்டு கொலை செய்வது மாத்திரம் இன அழிப்பு என்று வரையறை செய்ய முடியாது. குறிப்பாக, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இன அழிப்பு என்று பொருள் கொள்ள முடியும். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கம் இன அழிப்பு என்ற விவகாரத்தையும் மனித உரிமை மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதையும் உரிய முறையில் வகுக்கத் தவறிய பின்னணியில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது, இந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச சங்கத்துக்குப் பதிலாகவே இது உருவானது. The German army marches into Poland, September 1939. இந்த ஐ.நா சபை இன அழிப்பு என்பதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றவியல் குற்றம் என வரையறை செய்து அறிவித்தது. இதன்படி ஓர் இன மக்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொலை செய்ய நினைப்பது அல்லது இனம் இல்லாமல் செய்வது, இன அழிப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பிரதானமாக இன வேறுபாட்டை மையப்படுத்தி குழந்தைப் பிறப்பை தடுத்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் வேறு எவ்வகையிலேனும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இன அழிப்பு குற்றங்களாக நோக்கப்படும். இது சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச் செயலாகும். —சட்டத்தரணியின் விளக்கம்— பெலரஸ் (Belarus) நாட்டவரான சட்டத்தரணி ரபேல் லேம்கின்(Raphael Lemkin) 1944 ஆம் ஆண்டு எழுதிய “Axis Rule in Occupied Europe” என்ற தனது புத்தகத்தில் இன அழிப்பு என்பதை பயன்படுத்தியுள்ளார். 1933 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது சர்வதேச தண்டனைச் சட்ட ஒருங்கிணைப்பு நாடுகள் மாநாட்டில் (League of Nations) அவர் ஆற்றிய உரையில், இன, மத மற்றும் இன குழுக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் முன் மொழிந்திருந்தார். காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ரபேல் லேம்கின் ஆரம்பத்தில் எழுதியிருந்தார். இக் கருத்து பின்னர் இன அழிப்பு என பெயரிடப்பட்டு சர்வதேசத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. இப் பின்புலத்தோடுதான் ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என்பதை ஏற்று அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. இந்த இடத்தில் அரச பயங்கரவாதம் என ஒன்றும் வரையறை செய்யப்படுகிறது. அரச பயங்கரவாதம் (State terrorism) என்பது ஒரு அரசாங்கம் தமது நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மீது கட்டவிழ்த்து விடும் ஆக்கிரமிப்புகள் – இராணுவ தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிக்கும். தமது சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் செயல்களையும் அரச பயங்கரவாதம் என்ற சொல் குறித்து நிற்கும். ஐ.நா சட்ட விதிகள் – ஒழுங்குகளை கடைப்பிடிக்கத் தவறும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் அரச பயங்கரவாதம் என பொருள் கொள்ள முடியும். அதாவது, ஒரு அரசாங்கம் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது அரச பயங்கரவாதம் என வகை செய்ய முடியும். குறிப்பாக போர் குற்றம், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் வன்முறை, சித்திரவதை, நியாமற்ற கைதும் தடுப்பும், பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுதல், தடுத்து வைத்தல் · சட்டத்துக்கு மாறான கொலைகள், அடிமைத்தனம், சாதி சமய பாகுபாடு, மாற்று இன பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட குடியேற்றம், இன கருவறுப்பு, பண்பாட்டுச் சீரழிவுகள் போன்றவை அரச பயங்கரவாதமாகும். இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்கப்படுகின்ற இனத்தின் இளைஞர்கள், தமது இனத்தின் ”அரசியல் விடுதலை” என்பதை மாத்திரம் முன்நிறுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை பயங்கரவாத செயற்பாடாக பார்க்க முடியாது. உலகில் விடுதலை இயக்கங்கள் – பயங்கரவாத அமைப்புகள் என இரண்டு வகை உண்டு. விடுதலை இயக்கங்கள் தாம் வாழ்கின்ற நாட்டின் இராணுவத்திற்கு எதிராக அதாவது முப்படைகளையும் இயக்கும் அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும். அந்தப் போராட்டத்தை பயங்கரவாதம் என வரையறை செய்ய முடியாது. ஆனால், இலங்கை போன்ற நாடுகள் அப் போராட்டங்களை பயங்கரவாதமாக சர்வதேச அரங்கில் சித்தரித்து வருகின்றன. –சர்வதே சட்டங்கள் சொல்வதென்ன?— ஆனால், 2012 இல் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களின் இரண்டாம் பதிப்பு (Hand books of international law) உள்ளடக்கங்கள், எது பயங்கரவாதம் என்பதை பொருள் கோடல் செய்கின்றன. குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை ஓர் அரசு மீறும் பட்சத்தில் அது பயங்கரவாதம் என்ற தொனியை சர்வதேச சட்டங்கள் வியாக்கியானம் செய்கின்றன. லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் (Cambridge University Press) 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப் பதிப்பை செய்திருக்கிறது. பொதுவாக சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் என்பதில் வேறுபாடுகள் இருக்காது. ஐ.நா நியமங்களைக் கூட ஓர் அரசு மீறினால் அது பயங்கரவாதமாகவே நோக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி சட்ட அறிஞர்கள் பலரும் பல்வேறு விதமாக கற்பிதம் செய்கிறார்கள். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. சர்வதேச சட்டத்தின் இயல்புகளை விவாதிக்க முற்பட்டால், முதலில் எதிர்கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம் உண்மையில் ஒரு சட்டமா? என்பதாகவே எழும். இலங்கை போன்று உள்நாட்டு இன மோதல் இடம்பெறும் நாடுகள் குறிப்பாக அரசுகள்,. உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் (Domestic legal system) பிரகாரம் அந்த இன மோதலுக்குரிய அரசியல் தீர்வை கொண்டு வர முற்படும். உள்நாட்டு நீதிமன்றங்கள் ஊடாகவே அனைத்துக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் நடத்த விரும்பும். ஈழத்தமிழர்கள் போன்று பாதிக்கப்பட்ட அரசு அற்ற இனம் ஒன்று சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகள் அதற்கு இடம் கொடுக்காது. குறிப்பாக சர்வதேச நீதி என்பது புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களின் பிரகாரமே அமைந்துள்ளது எனலாம். இந்த இடத்திலேதான், ஐ.நா வின் சில நியமங்கள் தொடர்பாகவும் அதன் கீழ் செயல்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றியும் கேள்விகள் சந்தேகங்கள் எழுகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு (United Nations Commission on Human Rights) என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஜெனீவாவில் இயங்கிய அந்த ஆணைக்குழு ஒழுங்கு முறையில் செயற்படவில்லை. இதன் காரணத்தால், 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜெனிவா மனித உரிமை சபையை (The United Nations Human Rights Council) ஐ.நா உருவாக்கியது. —பேராயர் டெஸ்மன்ட் —- ஜெனிவாவில் இயங்கும் இந்த மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கக் கூடாது என்று தென் ஆபிரிக்க பேராயர் அமரர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் இன அழிப்பு நடவடிக்கைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதால் புதிதாக உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வழங்க வேண்டாம் என்று ஐ.நா.வுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தார். ஆனாலும், இலங்கை உறுப்பு நாடாக இணைந்து கொண்டது. இருந்தாலும், ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) எனப்படும் பிரதான நியமம் ஒன்றை இலங்கை சட்டமாக்க வேண்டும் என ஐ.நா வற்புறுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சமவாயத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 56 ஆம் இலக்க சாதாரண சட்டமாக அமுல்படுத்தினார். –ஐசிசிபிஆர் சமவாயம்—— ஆனால் அந்தச் சமவாயத்தில் உள்ள பிரதான நியமங்கள் இலங்கைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் பொருள்கோடல் செய்தார். இதன் காரணமாக ஐசிசிபிஆா் என்ற சமவாயத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இலங்கைச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியிருந்தார். பேராசிரியரின் அந்த விளக்கம் ஒரு வகையில் நியாயமானது. ஏனெனில், ஐநா சமவாயத்தில் ஒரு நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்ற கற்பிதம் ஐசிசிபிஆர் என்ற அந்த சமவாயத்தின் சரம் 1 என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. இது குழப்பமானது தான். இதன் ஆங்கில வடிவம் வருமாறு- (Article 1 All peoples have the right of self-determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development.) ஆகவே, ஐ.நாவின் இந்தத் தவறை தமக்குச் சாதமாகக்கியே ஐசிசிபிஆா் எனப்படும் சமவாயத்தை இலங்கை சட்டம் ஆக்கியிருக்கிறது. இது பற்றி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் உரையின் போது கேள்வி தொடுத்திருந்தார். ஆகவே, புவிசார் அரசியல் – பொருளாதார இலாப நோக்கில் ஐ.நா நியமங்களும் சர்வதேச் சட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், அரசு அற்ற ஓர் இனம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எந்த வகையான அணுகு முறைகளை பின்பற்ற முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒழுங்காக செயற்படவில்லை என்பதால், 2006 இல் மனித உரிமைச் சபை உருவாக்கப்பட்டு இன்று 47 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுவது ஏன்? மனித உரிமைச் சபையின் ஆணையாளர் வோல்க்கர் டர்க் (Volker Türk) கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்தபோது, யாழ் செம்மணிக்கும் சென்று போர்க்கால மனித புதைகுழிகளை பார்வையிட்டிருந்தார். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ள முன்னோடி அறிக்கையில் அது பற்றி பிரஸ்தாபித்திருந்தாரா? இன அழிப்பு நடந்தாக குறிப்பிட்டு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதம் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை அந்த அறிக்கையில் இருந்ததா? கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தீர்மானங்களில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்டிருந்த கடுமையான நிலைப்பாடுகள் பற்றியேனும் ஆணையாளரின் அந்த முன்னோடி அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தா? ஆகவே, இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அதன் ஊடான அரசியல் – பொருளாதார லாபங்களை கணக்கிட்டு ஆணையாளர் முன்னோடி அறிக்கையை தயாரித்திருக்கிறார் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாகத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னணியில், மீண்டும் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஆணையாளர் பரிந்துரைத்தமை எந்த அடிப்படையில்? —தீர்மானங்களை நிராகரித்த பின்னணிகள்— ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார். அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனீவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை. கடந்த ஆண்டுகளில் வெறுமனே போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மதிப்பட்டிருந்த அந்த விடயங்களை கூட உரிய முறையில் கவனத்தில் எடுக்காமல் வெறுமனே உள்ளக விசாரணை எனவும், இலங்கை மீது நம்பிக்கை வைப்பதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது பற்றிய பின்னணி என்ன? ஆகவே, தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது? எதற்காக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது? 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு. ஆனால் அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை கவனத்தில் எடுக்கவில்லை? 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, தமது அறிக்கையில், சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த விவகாரங்கள் பற்றி ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை? ஆகவே, அமெரிக்க – இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை மையப்படுத்தி ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன என்பதும், அதற்கு ஐ.நா கட்டமைப்பு ஒத்துழைக்கிறது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் முறைமைகளுக்குள் முடங்கி இருக்கின்றமையும் இதற்குப் பிரதான காரண – காரியமாகும். –பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலகம்—– ஆனாலும்,ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்காது என்றில்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் அனைத்தும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை இலங்கை எவ்வாறு தமக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகிறதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையில், அரசு அற்ற இனமாக வேறு நாடுகளுடன் தமிழ்த்தரப்பு உறவை பேண வேண்டும். பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் சிறிய நாடு ஒன்றுடன் அல்லது சீனா போன்ற வல்லரசுகளுடன் ஏதோ வழியில் உறவை பேணக்கூடிய வழி வகைகள் இல்லாமலில்லை. அவ்வாறு அணுகும்போது இலங்கை ஒரு சிறிய அதுவும் பொருளாதார பலவீனம் உள்ள நாடு என்ற அடிப்படையில் நிச்சயமாக ஈழத்தமிழர் விவகாரங்களில் விரும்பியோ விரும்பாமலோ கீழ் இறங்கி வர வேண்டிய கட்டாயச் சூழல் எழும். இலங்கையை தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க – இந்திய அரசுகள் கூட படி இறங்க வேண்டிய பின்னணி உருவாகும். ஆனால்,இந்த இராஜதந்திரம் என்பது ஈழத்தமிழ்த் தரப்பிடம் இன்று வரையும் இருப்பதாக இல்லை. சிங்களத் தலைவர்கள் காலத்துக்கு காலம் அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குறிப்பாக போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகள் தம்மை நோக்கி படி இறங்கி வரக்கூடிய அணுகுமுறைகள் – விட்டுக் கொடுப்புகள் போன்ற இராஜதந்திரங்களை பல சந்தர்ப்பங்களில் பேணியிருந்தனர். விமர்சனங்கள் – குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் 1983 இல் அமிர்தலிங்கம் அவ்வாறான அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் எந்த ஒரு தமிழ்த் தலைவர்களும் அவ்வாறு அணுகவில்லை. அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகள் அவ்வாறான அணுகுமுறைகளை ஜனநாயக வழியில் கையாளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இன அழிப்பை ஆதாரப்படுத்தும் ஆவணங்களைக் கூட ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், தேர்தல் வியூகங்கள் மாத்திரமே தமிழ் தேசிய கட்சிகளினால் வகுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் இலக்குகளும் விஞ்சியுள்ளன. இப் பலவீனங்களை சாதகமாக்கி விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குச் சாதகமான அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலா் மீண்டும் சர்ச்சையை கிளப்புகின்றனர். “இீன அழிப்புக்கான சர்வதேச நீதி என்பது மேலெழந்து விடக்கூடாது என்பதை பிரதானப்படுத்தியே அவ்வாறான விமர்சனங்கள் மீண்டும் எழுகின்றன. குறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரத்துக்குப் பின்னரான சூழலில் புலிகள் பற்றிய இவ்வாறான விமர்சனங்கள் சிங்களத் தரப்பில் எழுவதை அவதானிக்க முடிகிறது. பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன Sri Lanka. Sri Lanka Military Academy Journal என்ற சஞ்சிகையில் எழுதி வருகிறார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் எழுதியுள்ளார். ஆகவே,தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும், போராட்டங்கள் பற்றிய சம்பவங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுடன் நியாயப்படுத்தல் போன்ற செயல் முறைகளிலும் தமிழ்த்தரப்பு ஈடுபட வேண்டும். குறிப்பாக முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போது ஏற்பட்ட விளைவுகள் மாத்திரமல்ல, ஆயுதப் போராட்டதுக்கு முந்திய அதாவது, 1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா குடியேற்றத் திட்டம் மற்றும் அதற்கு எதிராக 1956 இல் நடந்த போராட்டத்தின் போது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலைகள் போன்றவற்றில் இருந்து இன்றைய செம்மணி புதைகுழி வரையும் ஆவணப்படுத்தல் அவசியமாகிறது. அதேநேரம்,2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என அழைக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் சிங்கள பௌத்த வரலாறுகள் – சிங்கள மொழித் திணிப்புகள் தமிழ் வரலாற்று பாடநூல்களில் புகுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா யுனெஸ்கோ கல்வி நியமங்கள் அடிப்படையில், பாடநூல்கள் குறிப்பாக ஓர் இனத்தின் வரலாற்றை திரிபுபடுத்தி மொழிபெயர்ப்பு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஆகவே, இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் – இன அழிப்பு பற்றிய ஆதாரங்கள் நியாயப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற பிரதான நோக்கில் விடுதலைப் புலிகளை பாசிசம் – பயங்கரவாதம் என்று சித்தரிப்பதும் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பபாணத்தில் சாதி ஒடுக்குமுறை இருப்பதாகவும் மிகைப்படுத்தி “அரசியல் விடுலை“ பற்றிய சிந்தனை இளைஞர்கள் மத்தியில் இருந்து மடைமாற்றம் செய்யப்படுகிறது. இக் கட்டுரையில் பயங்கரவாதம் – பயங்கரவாத செயற்பாடுகள் என்பது அரசு என்ற கட்டமைப்பை நோக்கியதாகவே இருக்கும் என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பாசிசம் என்பதும் அவ்வாறுதான் –பாசிசம் பற்றிய புரிதல்—- “பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார். இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தன. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை. ஆகவே, ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் படுகொலைகள் – “மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுக்கும் தன்மை இருப்பதால் மாத்திரம், அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார். இத்தாலியில் இருந்த பாசிசத்தில் கோர்ப்பரேட்டிசம் (Cooperativism) எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் இவர் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார். ஓர் அரசானது அரசற்ற இனம் ஒன்றின் அரசியல் விடுதலை பற்றிய நியாயங்களை திட்டமிட்டு ஒதுக்குவது, கொலை செய்வது, அந்த இனத்தின் கருத்துக்களை முடக்குவது அவர்களிடையே பிரிவினைகளை திட்டமிட்டு உருவாக்குவதும் பாசிசம் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும் என்றும் கெவின் பாஸ்மோர் கற்பிதம் செய்கிறார். ஆகவே,2009 இற்குப் பின்னரும் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் புலிகளை பாசிட்டுகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் திட்டமிட்டு பரப்புரை செய்வதன் பின்னணி என்பது, இன அழிப்புக்கான சர்வதேச நீதி மேலெழுந்து விடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டுள்ளது எனலாம். மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் ஒருவர். “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஓர் ஆய்வு நூலை 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த ஆய்வு நூல் அரசு என்ற கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஓர் அரசாங்கம் மற்றும் விடுதலை இயக்கங்கள் எவ்வாறு செயற்படும் என்ற வியாக்கியானத்தை தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே,2009 இற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை கோருவதற்கு உரித்துடைய தமிழ்த் தரப்பு, முதலில் “ஆவணப்படுத்தல்“ – “நியாயப்படுத்தல்” என்ற இரண்டு பிரதான காரியங்களிலும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழல் நிலைமைகளுக்குள் விழுந்துவிடாமல், ஐ.நா நியமங்கள் – சர்வதேச சட்டங்கள் என்ற இரண்டு வழிமுறைகள் ஊடாக பயணிக்க வேண்டியதும், பாதிக்கப்பட்ட தரப்பாக தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியதும் பிரதான கடமை ஆகும். https://oruvan.com/ethnic-liberation-international-laws-and-un-standards/
  26. வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..! 24 AUG, 2025 | 09:19 AM தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9), அஸ்பியா 9ம் வகுப்பும், சபிக்கா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று சனிக்கிழமை (23) பாடசாலை விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மரத்தடியில் நின்ற அக்கா, தங்கை மீது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினர். தகவல் அறிந்த சத்திரக்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு ராமநாதபுரம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் உயிர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவம், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/223223
  27. நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை! adminAugust 24, 2025 எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன. அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில், ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது. 5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது. இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது. அங்கு உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும். இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும். கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/219563/
  28. இளந்தளிர்கள் முளைத்து வருகையில் கருகி விட்டது ..........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.