Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87986
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20008
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3311
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/27/25 in all areas

  1. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  2. நன்றி! என்றும் பெற்றோரால் தமது குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளமுடிவதில்லை, ஒரு முறை இதே போல ஒரு சம்பவம் 3 வயது குழந்தையிடம் அதன் பெற்றோர் இது கூடவா விளங்கவில்லை என கடிந்து கொண்டார்! குழந்தையின் பெற்றோருக்கு 30 வயது அவர் 3 வயதில் அந்த குழந்தையின் புரிதல் கூட இல்லாமல் இருந்திருக்ககூடும். இதே மாதிரியான நிலை வேலைகளிலும் காணப்படும், புதிதாக வேலைக்கு வருபவருக்கு பயிற்றுவிப்பர் வெறுப்பாக இது கூடவா விளங்கவில்லை என கூறுவார் (குறிப்பாக ஆசிய பின்புலத்தவர்கள்), அதே நபர் வேலையினை ஆரம்பிக்கும் போது அதனை விட மோசமாக இருந்திருப்பார், ஒரு புதிய விடயங்களை முதன் முதலில் அணுகும் போது உள்ள நிலைக்கும் அதே ஒரு கைவந்த கலையாக வந்தபின்னராக இருக்கும் போது மன நிலை வேறுபடும். இதனை சம்பந்தப்பட்டவர்களிடம் அவர்கள் அதனை தப்பாக எடுக்காதவாறு கூறுவது மிகவும் கடினமாக இருக்கும், அவர்கள் ஆலோசனைகளை தமது கருத்து தவறானது என நிறுவ முனைவதாக நினைத்து, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவார்கள் இதற்கு காரணம் கல்வியாக இருக்குமோ என நினைப்பதுண்டு, அதிக பட்ச புள்ளிகளை பெறுவது ஒரு சரியான விடயமாக நீண்டகாலமாக உருவகித்து அதில் ஏற்படும் ஒவ்வொரு புள்ளி இழப்பு தவறும் ஒரு கொலைக்குற்றமாக உருவகித்து கொண்டிருப்பவர்களிடம் அவர்கள் பார்க்காத பக்கத்தினை பற்றி பேசும் போது தம்மை தவறானவர்களாக சித்தரிப்பதாக நினைத்து அதற்கெதிராக போராடுவார்கள். Perception எனும் புரிதல் எமது சூழலும் அதனூடான அனுபவவுமாக இருக்கிறது, பெரும்பாலான வாழ்க்கையில் இறுதிவரை எம்மை பற்றிய சரியான புரிதலே எமக்கு கிடைப்பதில்லை, இதில் மற்றவர்களை புரிந்து கொள்வதென்பது மிகவும் சவாலாகவே இருக்கும்.
  3. நாலு பம்பாய் சியர்ஸ் கேர்ல்ஸ், இரண்டு சினிமா நட்சத்திரங்களை இறக்கினால் காணும் எங்கடையதுகள் ஊருடன் படையெடுத்து பனை உயரத்துக்கு ஏறி ஆதரவு கொடுக்குங்கள்.
  4. பிறீயா விட்டால்...பாகிஸ்தானின் அனுசரணையுடான் பென்னாம் பெரிய அல்லா கோவில்கட்டி...இசுலாமிய கோட்டலும் ...நலன்புரி ..மண்டபமும் கட்ட..பெரிய பிளான் போட்டவை உங்களுக்கு எதுவேணும் பிரியன் சார்...(முன்னாள்...கொ.விதானையார்)>..மைதானமா ...அல்லா கோவிலா....கொட்டடியில் இருந்தாலே...அல்லாமுழக்கம் பீக்கரில் கேட்குமாம்
  5. https://youtu.be/S0SGB6pzxsM?si=JOhwr5WZxtfrpASH அழகான பிள்ளையார் சதுர்த்தி நடனம்.
  6. 🤣............... 15 அல்லது 20 வருடங்களிற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு அடிக்கடி வந்து போயிருக்கின்றோம். அப்பொழுது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். என் மனைவியின் குடும்பத்தவர்கள் அதிகமானோர் அங்கேயே இருக்கின்றார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் ஆஸ்திரேலியா போய் வருவது குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் பல வகையான அனுபவங்கள் ஏற்பட்டன என்று தான் சொல்லவேண்டும். இந்திய மாணவர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும் ஏதோ தகராறாகி, பின்னர் அதுவே சில தாக்குதல்கள் ஆகவும் ஆகியிருந்த ஒரு காலம். தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் மைத்துனன் ஒருவர் தாக்கப்பட்டும் இருந்தார். ஒரே குத்து, ஆள் மயங்கிப் போனார் என்று நண்பன் சொல்லியிருந்தான். அந்த நாட்களில் நாங்கள் அங்கே தனியே நடந்து போகக் கூடாது என்று சொல்வார்கள். அங்கே வீட்டின் அருகே இருந்த வாசிகசாலை ஒன்றுக்கும், அதன் அருகே இருந்த நகரக் கடைகளுக்கும் நடந்தே போய் வந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். குறைந்தது இரண்டு குத்துகளுக்காவது தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...................🤣. அந்த வாசிகசாலை பற்றி எழுதவேண்டும். நான் அப்படி ஒரு வாசிகசாலையை அந்த சிறிய ஊரில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அதே போலவே அந்த ஊரில் இருந்த ஒரு பேக்கரி. அது இப்பொழுதும் அங்கே இருக்கும் என்று நம்புகின்றேன். அதை நடத்தியவர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதிகள். பாண் என்ற சொல்லே பிரெஞ்ச் மொழி என்று அவர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன வரலாறும் புதியதே. தலைக்கு மேலே பறந்து திரியும் விதம் விதமான பறவைகள் ஆஸ்திரேலியாவின் சிறப்பும், வியப்பும். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
  7. கறுப்பு எம்ஜிஆர்.
  8. ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது அது உருக்கு மற்றும் நிலக்கரி வர்த்தகத்தினை பேணும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், காலப்போக்கில் அதற்கென ஓரு சட்டம் உருவாக்கி தற்போது அந்த சட்டம் அதில் அங்கத்துவ நாடுகளிலும் அந்த சட்டம் தாக்கத்தினை உருவாக்குகிறது, இந்த ஐரோப்பிய ஆணையம் தனக்கு தேவையான ஆட்சியினை தீர்மானிக்கு சக்தியாகவும் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரஸ்சியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள் என கவலைப்படும் அதே நேரம் இன்னொரு புறம் தேர்தல் அற்ற தான் தோன்றித்தனமான ஆட்சி நடத்தும் செலன்ஸ்கியினை ஆதரிக்கிறார்கள். செலன்ஸ்கியின் ஆட்சியின் மூலம் தமக்கு வேண்டிய விடயங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து கலகம் செய்யும் கங்கேரி, ஸ்லோவாக்கியா மீது அதன் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தின் பின்னணியாக இரஸ்சியாவிலிருந்து வரும் எரிபொருள் வழங்கி மீதான தாக்குதலில் செலன்ஸ்கியின் ஆணவமான பதில்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுடனேயே இது நடத்தப்பட்டிருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது, ஐரோப்பிய ஒன்றைய நாட்டினது எரிபொருள் வழங்கள் மீதான தாக்குதலை மன்னிக்க முடியாத அதற்கான பிரதிபலனை செய்தவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என நோர்ட்ஸ்ரிம் 2 தாக்குதலை இரஸ்சியா மேற்கொண்டது எனும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்தது, தற்போது நேரடியாகவே செலன்ஸ்கி இந்த தாக்குதலை தாமே நிகழ்த்தியதாக கூறியிருந்தும் இது தொடர்பில் எந்த வித கருத்து தெரிவிக்காமல் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசீர்வாதத்தினனுடனேயே இது நிகழ்ந்திருக்கலாமோ என தோன்றுகிறது,. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு சவாலாக இருக்கும் விடயங்களை முளையிலேயே களையநினைக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஆதரவு கொண்ட தேசிய எண்ணம் கொண்ட கட்சிகளுக்கெதிராக அந்தந்த நாடுகளின் சட்டத்தினை பயன்படுத்தி இல்லாமல் செய்து தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள். ஆனால் அதே செலன்ஸ்கியின் மீது தமது பிடியினை இறுக்குவதற்கு அதே சமயம் வேறு வழி வகைகளையும் கைக்கொள்ளுகிறார்கள், அவரது பலவீனமான ஊழலலே அது. அண்மையில் தன்னிச்சையாக இயங்கிய ஊழல் ஒழிப்பு துறையினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிற்கெதிராக உடனடியாக நடத்தப்பட்ட எதிர்ப்பார்பாட்டமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனத்திற்கு பின் செலன்ஸ்கி அந்த சட்டத்தினை கொண்டு வந்த கையோடே அதனை குப்பையில் மிக வேகமாக போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எப்போதும் உக்கிரேன் விடுமுறை பயணம் போவது போல போகும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்கிரேனிய ஊழல் ஒழிப்புத்துறையினை பிரசெல்ஸிற்கு அழைத்து சந்தித்துள்ளது செலன்ஸ்கின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதனை காட்டுகிறது. இதனிடையே சிறப்பாக களத்தில் செயற்பட்ட உக்கிரேனிய முன்னாள் தளபதியினை செலன்ஸ்கி அவரது பதவியினை பறித்து இங்கிலாந்து தூதுவராக நியமித்த சலூஸ்னியினை கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் சந்தித்த செலன்ஸ்கியின் ஆலோசகர் வேண்டுகோளான எதிர்காலத்தில் நிகழும் தேர்தலில் செலன்ஸ்கியிற்கு ஆதரவாக இருக்குமாறு கோரிய கோரிக்க்கையினை மறூத்த செய்தியினை தற்போது மேற்கு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. எப்படி ஒரு பிராண்ட்டினை வர்த்தகத்தில் உருவாக்குவார்களோ அதே போல உருவாக்கிய ஒருவரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போனால் அதனை விட மோசமான தேசத்துரோகியாக்கி மக்களை கொண்டு அடித்து விரட்டுவார்கள். இந்த போரில் சிக்குண்டுள்ள இரஸ்சியாவும் உக்கிரேனும் மிக நீண்டகாலத்திற்கு பொருளாதார ரீதியாக பாதிப்புள்ளாகப்போகிறார்கள், அதே வேளை இந்த போரை அனையவிடாமல் காக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். பலவீனமான கூட்டணி ஆட்சிகளை உருவாக்கி தமது அதிகாரத்தினை பேணுகிறார்கள், இல்லாவிட்டால் ஆட்சிகளை கவிழ்க்கிறார்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் ஒரு அழிவுப்பாதையினை நோக்கி நகர்கிறது.
  9. நந்தன் அவர்களுக்கும், இன்றுவரை வாழ்த்தத் தவறிய உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐
  10. முன்னெச்சரிக்கை! அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல இங்குள்ள எம்மவர்களும் கிட்டதட்ட அவுஸ்ரேலியர்கள் போலவே நடந்து கொள்வார்கள், ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும், சிலருக்கு பழகிவிடும், சிலருக்கு சரிப்பட்டு வராது அப்படியானவர்கள் கொஞ்சம் அவர்களுடன் இடைவெளியுடன் இருந்தால் சேதம் இருக்காது🤣.
  11. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ........ ! 😍
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் . .......... ! 🌻
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.
  14. உங்கள் அளவுக்கு எனக்கு பொறியியல் அறிவு எல்லாம் இல்லை. ஆனால் அடியேனின் சிறிய சந்தேகம் என்ன என்றால் இந்திய கார்களின் சக்கரங்கள் தரையில் முட்டாமல் பறக்க பார்க்கின்றன என்றால் இவற்றை பறக்கும் கார்கள் என்று சொல்லி விற்பனை செய்யலாமா?
  15. 😂 விளங்கியது. இன்று இவரின் காணொளி ஒன்று அனுப்பினார்கள். விஜய் தனது மாகாநாட்டில் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை என்பது அது. விஜய் அப்படி பேசுவார் என்று இவர் எப்படி எதிர்பார்த்தார்! காணொளியை அப்படியே நீக்கிவிட்டேன்.
  16. நான் இந்த படத்தை ரசித்ததை விட இயற்கையின் அற்புதத்தை வியந்து இரசித்தேன். பனம் குருத்து பனை ஓலையாகி காவோலையாக விழும் மட்டும் தான் தூக்கணாங்குருவியின் வாழ்காலம். இவ்வளவு நுண்ணியமாக கூடு கட்டி தன் சந்ததியை பெருக்கி விட்டு காவோலை விழ அதன் வாழ்க்கையும் அஃதே.
  17. அமெரிக்காவை மீறி எதையும் செய்ய வலிமை உள்ள ஐரோப்பாவிற்கே தைரியம் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் நல்ல சாட்சி. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ந்த அரபுநாடுகள் எப்படி மேற்குலகின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் அஜாரகங்களை எதிர்ப்பார்கள்?எண்ணைக் குழாய்களில் அடைப்பு வந்தால் கூட அந்த அடைப்பை எடுக்க அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே தேவை. நிலமை இப்படி இருக்க....? ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.
  19. படம்: சித்ராங்கி பாடியோர் T.M.சௌந்தர்ராஜன், சுசீலா இசை : வேதா
  20. நேட்டோவில் இல்லாத நாடுகளும் உதவுகின்றன. உதாரணமாக ஆஜண்டீனா போர் விமானங்களை வழங்கியிருந்தது. அவுஸ்திரேலியா ஆயுதங்களை வழங்கியிருந்தது. பலஸ்தீனுக்கு இஸ்லாமிய நாடுகள் இராணுவ உதவிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மனிதாபிமான உதவிகள் செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் அகதிகளையாவது உள்வாங்கியிருகலாம் அல்லவா ?
  21. உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது. இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)
  22. உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎 ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை. ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன். ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇 ☹ படத்திற்கு நன்றி யுனிசெப்.
  23. 🤣.................... டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்...... இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு............... ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.
  24. ஆரம்பத்திலயே கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல் பட்ட நல்ல பெற்றோர். நன்றி..ஏன் ஏனில் இவ்வாறு புரியாதவற்றை பேசும் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டு போய் காட்டும் பட்சத்தில் அவர்கள் வேறு ஓரு கோணத்தில் தான் சிந்திப்பார்கள்.சில வேகைளில் பிள்ளைகளை வாழ் நாள் வருத்தக்காரர்களாக்கியும் விடும்.
  25. வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது. குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்). எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை. அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.
  26. பாகம் ஒன்று சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல். "தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது. யார் அவர்கள்..?? காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது.. "தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய். அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள். இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம். ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை. காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும். அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான். "தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக. வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??" அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள். அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப.. (தொடரும்) பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்
  27. பாகம் நான்கு "ஐயா! இந்த கத்தரிக்காய் என்ன விலை.?" "கால் கிலோ நாற்பத்தைந்து ரூபாய் அம்மா.." என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு தக்காளிபழம் நிறுத்து கொண்டிருந்தார் அந்த மரக்கறி வர்த்தகர். "ஒரு கால் கிலோ போடுங்கையா.." அவர் அதை நிறுத்துகொண்டே "வேற ஏதாவது.." என்று கேட்டபோது தான் ராணியம்மா அவர்களை பார்த்தார். "ஓம் அவர்களே தான்.." என்று மனசுக்குள்ளே சொல்லிகொண்டு "ஐயா இந்த மரக்கறி கூடையை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் நான் இப்பவே வந்திடுவன் " என்று சொல்லிவிட்டு ஐயாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவர்களை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார். "தம்பி நீங்க தானே அண்டைக்கு வீட்டுக்கு வந்து நேசனை கூட்டி கொண்டு போனீர்கள்..." சிறு ஐயத்துடன் தான் ராணியம்மா கேட்டார். "ஓம் அம்மா.. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உங்கட பெயரை தான் தனக்கும் வைச்சிருக்கிறார். ராணிமைந்தன் என்று" ராணியம்மாவுக்கு கண்கள் கலங்கின. ஒருகையால் துடைத்துக்கொண்டே "தம்பி கேட்கிறேன் என்று குறை நினைக்காதீங்க..மற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்துக்கு போய் ஒன்று இரண்டு மாதங்களிலேயே பெற்றோருக்கு காட்டினார்கள். நேசன் போய் ஐந்து மாதங்கள் ஒரு நாள் கூட அவனை காட்டலை. என் மகனுக்கு ஏதாவது காயம்.. கீயம்..." மனசிலே இருந்த வலிகள் வார்த்தைகளாக.. "அப்படி ஒன்றும் இல்லையம்மா. அவர் சண்டைக்கே போகவில்லை. ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் அதை விட்டு வரமுடியாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் உங்களை வந்து பார்ப்பார்". "எப்போ தம்பி .?" இந்த கேள்விக்கு அவர்களுக்கு என்ன. அந்த ஆண்டவனுக்கே பதில் தெரியாது. "கூடிய சீக்கிரம் அம்மா. அந்த வேலை முடிஞ்சதும் வருவார்". "சரி தம்பி. நீங்கள் அவனை கண்டால் அம்மா ரொம்பவும் விசாரித்ததாக சொல்லுங்க. கிழமைக்கு ஒருக்கா எண்ணெய் தேச்சு குளிக்க சொல்லுங்க. நல்லா சாப்பிட சொல்லுங்க. கவனமாக இருக்க சொல்லுங்க. தங்களை பற்றி கவலை படவேண்டாம் என்று சொல்லுங்க.. தங்கச்சிமார் நல்லா படிக்கினம் என்று சொல்லுங்க ... " என்று அடுக்கி கொண்டே போனார். "ஓம் அம்மா.. நிச்சயமாக சொல்லுறம்" என்று அவர்கள் புறப்படும் போது.. "தம்பிமார் ..எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. நாளைக்கு மதியம் போல ஒருக்கா வீட்டுக்கு வருவீங்களா" "அம்மா நாளைக்கு பெரும்பாலும் இஞ்சாலை பக்கம் தான் வேலை. நிச்சயமாக வருவோம்" என்று சொல்லிட்டு போய்விட்டார்கள். வீட்டுக்கு வந்த ராணியம்மவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நேசனின் சிறுவயசு படத்தை கொஞ்சியபடியே சொன்னாள் "என் பிள்ளை என் பிள்ளை தான்" என்று கண்களில் நீர்வர ஆனந்தமாக சொன்னாள். தங்கைகள் சுபாவுக்கு மதிக்கும் என்னவென்றே புரியவில்லை. "அம்மா.. என்னம்மா நடந்தது அண்ணாவை பார்த்தியா" "இல்லையடி.. அண்ணாவை கூட்டி கொண்டு போனவர்களை பார்த்தேன். அவன் என் பெயரைத்தான் தனக்கு வைச்சிருக்கிறான். என் பிள்ளை என்னை மறக்கவே இல்லை." "சரி மச மச என்று நிக்காமல் அண்ணாவுக்கு கடிதம் எழுதுங்கோ.. நாளைக்கு அவர்கள் வருவார்கள் அவர்களிடம் கொடுத்துவிடலாம்" என்று பிள்ளைகளை துரத்தினாள். தானும் கடிதம் எழுத தொடங்கினாள். அன்புள்ள தம்பி, நாங்கள் நலம். தம்பி.. வட்டக்கச்சி முருகன் துணையால் நீயும் நலமாக இருப்பாய். தம்பி உன்னை கூட்டி சென்றவர்களை இன்று சந்தையில் பார்த்தேன். அவர்களிடம் கொடுக்க தான் இந்த கடிதம் எழுதுகிறேன். தம்பி..ஒவ்வொரு நாளும் உன் நினைப்பு தான். எந்த நாளும் நான் சாப்பிட ஒரு வாயை வைக்கும்போது... நீ சாப்பிடியா..உனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சுதா என்ற எண்ணமே என்னை சாப்பிட விடாது தம்பி. எங்க வீட்டு நாய் கூட நீ இல்லாமல் சாப்பிடுது இல்லை..நாங்க மட்டும் எப்படி தம்பி...?? நீ எத்தனை நாள் என்னிடம் கேட்டிருப்பாய் எனக்கு ஊட்டிவிடம்மா என்று. நானும் நீ வளர்ந்திட்டாய் என்று தட்டிகழிப்பேன் .. இப்போ தோணுதையா..உன்னை பக்கத்தில் வைச்சு ஊட்டிவிடணும் போல..எப்போ அப்பா இந்த அம்மாவை பார்க்க வருவாய். தம்பி..தங்கச்சிகள் எல்லாம் நல்ல படிக்குதுகள். தங்களுக்காக தான் அண்ணன் இயக்கத்துக்கு போனான் என்று உணர்ந்து படிக்குதுகள். அப்பா வயலுக்கு போய்ட்டார். வந்ததும் சொல்லுறன். அவரும் உனக்கு கடிதம் எழுதணும் என்று சொன்னவர். தம்பி..உனக்கு நிறைய எழுதணும் என்று யோசிச்சு வைச்சேன். இப்போ கண்ணீர் மட்டும் தான் வருகுது எழுத்து வருகுதில்ல. குறை நினைக்காதே இந்த அம்மா உன்னை எண்டைக்கும் நினைச்சு கொண்டுதான் இருப்பா. கவனமாக இருந்து கொள். பதில் போடு. பொறுப்பாளரிடம் கேட்டு வீட்டுக்கு ஒருக்கா வந்திட்டு போ. அன்புடன், அம்மா. குறிப்பு : தம்பி இந்த கடிதத்துடன் உனக்கு பிடிச்ச பத்து கோழிக்கறி சாப்பாடு பொதிகள் கொடுத்துவிடுறேன்.. நீயும் சாப்பிட்டு மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடு. "பாவம் அவர்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளோ. அவங்கள் அம்மாவும் என்னை போல தானே கவலைபடுவாங்க. ஒரு அம்மாவின் வலி இன்னொரு அம்மாவுக்கு தானே தெரியும் " என்று மனசிலே சொல்லிக்கொண்டு ராணியம்மா நாளைக்கு சமைபதற்கான ஆயத்தங்களில் ஈடுபட தொடங்கினார். மறுநாள் காலையிலையே எழும்பி தன் மகனுக்காகவும், மகன்களுக்காவும் தன் பாசம் எல்லாம் கொட்டி சமைக்க தொடங்கினாள். மதியமளவில் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டி, குடும்பத்தின் கடிதங்களுடன் வாசலில் காத்திருந்தாள் ராணியம்மா... அவர்களுக்காக. அந்த விழிகளில் இருந்த தேடலும் ஏக்கமும் வார்த்தைகளால் வடிக்க கூடியவை அல்ல. ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள். உங்களுக்கு புரிகிறதா அந்த ஏக்கம்.. ராணியம்மா காத்திருக்கிறாள்.........................! அவர்கள் வரவில்லை.. வரவேயில்லை.. இனி வரபோவதும் இல்லை.. ஆம்..நேற்று மாலை ஒரு பணிக்காக மல்லாவி போய்வந்தபோது, ஆழ ஊடுருவும் படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவு என்று, ராணியம்மாவுக்கு உங்களில் யாராவது சொல்லிவிடுவீங்களா..? (காத்திருப்பு தொடரும்) பாகம் ஐந்து இங்கே அழுத்துங்கள்
  28. பாகம் மூன்று நேசனை அழைத்து சென்ற அந்த போராளிகள், அவனை தங்கள் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். "அண்ணே, இந்த தம்பியின் அம்மாவே போராடத்தில் இணைய அனுப்பி வைத்தவ.." என்று சொல்ல "சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னார்" பொறுப்பாளர் சேகர். சேகர் , இயக்கத்தின் தொலைதொடர்புக்கு பொறுப்பானவர். இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். ஜெயசுக்குறு காலத்தில் அவருடன் பணியாற்றி வீரச்சாவடைந்த தளபதியின் பேரையே தனது ஒரே மகனுக்கு வைத்த ஒரு ஆழமான போராளி. இவை எல்லாவருக்கும் மேலாக ஒவ்வொருநாளும் காலையில் அவரது அறையில் இருக்கும் அனைத்து மாவீரர்களின் படங்களுக்கும் பூ வைக்காமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை.வெள்ளிகிழமை தோறும் துயிலும் இல்லம் போய், மாவீரரை வணங்கி, விரதமிருந்து தான் கடமையாற்றும் ஒரு உன்னத போராளி. என்றுமே சிரித்த முகமும், மிடுக்கான பார்வையும் அவரை ஒரு ஆளுமை மிக்க போராளியாக, தளபதியாக நேசனுக்கு காட்டியது. "தம்பி உங்கட பெயர் என்ன ? " அன்பாக கேட்டார் தளபதி சேகர். "நேசன்.." அடக்கமாக பதில் சொன்னான். "உமக்கு இயக்கத்தில் என்ன செய்ய விருப்பம்.?" "அண்ணே.. ஏதாவது தொழில்நுட்ப துறையில் சாதிக்கணும் என்று ஆசை " "சரி நான் இப்பொது ஒரு முக்கிய சந்திப்புக்காக போறேன். அங்கே எனக்கு பொறுப்பானவரை சந்திப்பேன். அவருடன் பேசி முடிவெடுத்துவிட்டு உமக்கு சொல்லுறேன். அது மட்டும் உந்த இருக்கையில் இரும்" என்று சொல்லிவிட்டு உந்துருளியில் வெளியில் சென்றுவிட்டார் தளபதி சேகர். அவரது அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில், பாலா அண்ணா எழுதிய "விடுதலை வேட்கையை" எடுத்து புரட்ட தொடங்கினான் நேசன். மனசிலே அம்மா, தங்கைகளின் எண்ணங்கள் வாட்ட தொடங்கின. நேரம் போனது தெரியவில்லை. உந்துருளியின் சத்தம் கேட்டு நிமிர்ந்த போது, சிரித்தபடியே வந்தார் தளபதி சேகர். "தம்பி உம்மை எங்கட பிரிவிலையே இணைக்க சொல்லிவிட்டார். நீர் எங்களுடனே பணி செய்யமுடியும். உமக்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லைதானே" என்ற போது மகிழ்வுடன் தலையாட்டினான் நேசன். "தம்பி. இந்த பிரிவு மிகவும் ரகசியமானது. இங்கு நடக்கும் எந்த வேலை திட்டமும் வெளியிலே யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது. இந்த ரகசியங்கள் நாங்கள் சாகும்போது எங்களுடன் சாக வேண்டியவை புரிந்ததா..??. எங்கட இயக்கம் இண்டைக்கு இந்தளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு இரகசிய காப்பு தான் முக்கியம் என்றதை எப்பவும் மனசிலே வைச்சிருக்க வேணும். சரியா " "ஓம் அண்ணே". "சரி தம்பி. உமக்கு ஒரு இயக்க பெயர் தமிழில் வைக்க வேண்டும். உமக்கு ஏதாவது பெயர் விருப்பமா ?" "ராணி மைந்தன்" என்றான் நேசன். "ஏன் தம்பி இந்த பெயரில் ஆரும் உங்கட உறவினர்கள் வீரச்சாவா ?" "இல்லை அண்ணா. எங்கள் அம்மாவின் பெயர் ராணி". ராணி மைந்தனுக்கு அந்த வேலை மிகவும் பழகிபோனது. தன்னுடைய அறிவுத்திறமையை வைத்து மேலும் மேலும் அந்த தொடர்பாடல் துறையை விருத்தி செய்தான். தளபதி சேகருக்கும், ராணி மைந்தனை மிகவும் பிடித்து போனது. சில சந்தர்ப்பங்களில் அனைவராலும் கைவிடபட்ட உபகரணங்களை கூட ராணி மைந்தன் தன்னுடைய திறமையால் திருத்திஅமைத்தான். அந்த வன்னி நிலபரப்பில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் ராணி மைந்தனின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ராணி மைந்தனின் தேவையை உணர்ந்து அவனது அடிப்படை பயிற்சி தள்ளி போய்கொண்டிருந்தது. ஏனையவர்கள் அடிப்படை பயிற்சியை முடித்து பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், ராணி மைந்தனுக்கு அவனது வேலை ரகசியம் காரணமாக பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தான். ஒவ்வொரு நாளும் தனது நாட்குறிப்பில் அம்மா, அப்பா, தங்கைகளை பற்றி தான் என்ன நினைச்சேன் என்று எழுதிவருவான். சந்திக்கும் நாளில் கூட பேச நிறைய நேரம் கிடைக்காது என்பதால், இந்த நாட்குறிப்பை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிறையவே எழுதுவான். அன்று அவனுக்கு தெரியாது. இந்த நாட்குறிப்பை என்றைக்குமே அவர்கள் பார்க்க போவதில்லை என்று. (தொடரும்) பாகம் நான்கு இங்கே அழுத்துங்கள்
  29. பாகம் இரண்டு வணக்கம்.. நான்தாங்க நேசன் பேசுறேன்.. என்ன அப்படி பார்க்கிறீங்கள்.. சென்ற பாக கதையின் நாயகன் தாங்க.. சரி இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வாறன். என்னை கூட்டி கொண்டு போகும் இந்த இரண்டு அண்ணைமாரையும் எனக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் தெரியும். எப்படியும் பொறியியல் கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்று உறுதியோட, வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் வகுப்புக்காக வரும்போது கோவிந்தன் கடை சந்தியடியில் மறித்து .."தம்பி உங்களோட கொஞ்ச நேரம் பேசவேணும் நேரம் இருக்குமா" என்று கேட்ட போது தான் நான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். என்ன.. என்னை விட நாலு அல்லது ஐந்து வயசுதான் கூட இருக்கும். சிரித்தபடி தான் கேட்டார்கள். எனக்கும் வகுப்புக்கு கொஞ்சம் நேரம் இருந்ததால் அவர்களுடன் பேச ஒத்துக்கொண்டேன். "தம்பி உங்களுக்கு தெரியாதது ஒண்டும் இல்லை. இராணுவம் மன்னார் பக்கத்தால உடைச்சு கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டருக்கு மேல முன்னணி காவலரண்கள்..ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண், காவலரணுக்கு மூன்று பேர், மூன்று கடமை நேரம் என்று பார்த்தாலும் தம்பி..எத்தனை பேர் வேணும் என்று நீங்களே கணக்கு பண்ணி பாருங்க தம்பி." அந்த அண்ணா சொல்லி கொண்டே போனார். "அண்ணே நீங்கள் சொல்லுறது விளங்குது அண்ணே ..வீட்டிலேயே இரண்டு தங்கச்சி, ஏலாத அப்பா அம்மா, எல்லாரையும் நான் தான் அண்ணே பார்க்க வேணும். நான் படிச்சு பொறியிலாலராக வந்தால் தான் எதுவுமே செய்யமுடியும் அண்ணா. நான் வேணும் என்றால் படிச்சு முடிச்ச பிறகு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா" என்று கேட்டேன். "தம்பி நீங்கள் படிச்சால் எங்கட நாட்டுக்கு தான் பெருமை தம்பி.. ஆனால் போற போக்கை பார்த்தால் நீங்கள் படிச்சு சோதனை எழுத முதலே உங்கட வீட்டு வாசலில் வந்து இராணுவம் நிப்பான் தம்பி. நானும் பொறியியாலனாக வரவேண்டும் என்று தான் படிச்சேன். இன்றைய நிலைமை அப்படி தம்பி... இல்லை என்றால் உங்களை படிக்க விட்டு நாங்களே சண்டை பிடிச்சிருப்போம்." "தம்பி உங்களுக்கே தெரியும். ஜெயசுக்குறு காலத்திலும் சரி, யாழ்பாண சண்டையிலும் சரி, மாணவர்களை சுழற்சி முறையில் தான் களபணிக்கு கேட்டோமே தவிர முழுமையாக கேட்கவில்லை. இன்றைய நிலைமையை உணர்ந்து தான் உங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்" என்று நியாயம் சொன்னார் அந்த அண்ணா. அவர்கள் சொல்லுவது நியாமாகபட்டாலும் வீட்டு நிலைமையை யோசித்து, இவர்களை வெட்டிவிட வேண்டும் என்று மனசிலே நினைத்து, " அண்ணே வகுப்பு நேரமாச்சு..நான் போகவேணும். வீட்டை போய் யோசிச்சு பார்கிறேன். விரும்பினால் எங்கே வந்து சேரவேண்டும்" என்று நயமாக கேட்டு அவர்களின் முகாம் முகவரியை தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர்கள் சொன்னது தான் காதில் ஓடி கொண்டிருந்தது. நான் படிக்க வேண்டும் என்றதுக்காக யாரோ அண்ணாமார் அக்காமார் இரவிரவாக கண்விழித்து காவலரணில் கடமை இருப்பது எனக்கு என்னவோ செய்தது. அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கும் தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..அன்று என்னை தூங்கவே விடவில்லை. நான் தூங்கும் போது விடிந்திருந்தது வானம் மட்டும் இல்லை என் மனசும் தான். காலையில் ஒரு முடிவோட அம்மாவிடம் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அவர்களின் முகாமுக்கு போனேன். நேற்று என்னுடன் பேசிய அண்ணா முகாமின் முற்றத்தை கூட்டி கொண்டிருந்தார். என்னை கண்டது அருகில் வந்து "என்ன தம்பி ..முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது" என்று மனசை அறிந்து பேசினார். "அண்ணா ..யோசிச்சு பார்த்தேன் உங்களுடன் சேருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். என்னால் என் அம்மாவிடம் நேரடியாக கேட்கவும் முடியாது. அவ தாங்கமாட்டா..சொல்லாமல் ஓடி வரவும் எனக்கு பிடிக்கவில்லை ..நீங்க தான் வந்து அம்மாவிடம் பேசவேண்டும்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பி எதுவுமே நடக்காதது மாதிரி புத்தகத்தை எடுத்து வழமைக்கு மாறாக படிப்பது போல பாசாங்கு காட்ட தொடங்கினேன். நான் கஷ்டபட்டு படிக்கிறேன் என்று நினைத்து ,அம்மா விரததோடையும் தேநீர் ஊற்றிவந்து கொடுத்துவிட்டு ,தலையை தடவி நல்லா படியடா என்று சொல்லிவிட்டு போகும்போது எனக்கு உள்ளுக்குள்ளே அழுகை தான் வந்தது. எனக்கென்ன.. என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கும் தானே.?? அன்று மாலையே அவர்கள் வந்தார்கள். அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே. நான் செய்தது நியாயம் தானே உறவுகளே..?? இப்போ அந்த அண்ணைமாருடன் உங்கள் விடிவுக்காக போகிறேன்.நாளை நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையுடன் போகிறேன். எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக மனசுக்குள்ளே பிரார்த்திப்பீர்கள் என்று..ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடிவு பெற்று தருவோம். என்ன.. என்ர அம்மா மாதிரி அழுது கொண்டிருகிறீங்கள்.. அழாதீங்க.. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக. போய்வரட்டுமா என் உடன்பிறப்புகளே..! பாகம் மூன்று இங்கே அழுத்துங்கள் (விடியல் தொடரும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.