Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87986
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16468
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10206
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31947
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/31/25 in all areas

  1. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 31 ஆகஸ்ட் 2025, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன. இறந்து போன நாகப் பாம்பு, கட்டு விரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி? முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம்பின் தலை அவரது வலது கை பெருவிரலில் கடித்துவிட்டது. அந்த நபருக்கு பெருவிரல் கறுத்துவிட்டது. நஞ்சு தோள்பட்டை வரை ஏறிவிட்டது. அருகிலுள்ள மருத்துவமனை சென்ற பிறகு அவருக்கு நஞ்சுமுறி மருந்து வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டது. இறுதியில் அவர் முழுமையாக குணமடைந்தார். இரண்டாவது சம்பவம்: டிராக்டரின் கீழே நசுங்கிய பிறகும் கடித்த நாகம் அசாமின் அதே பகுதியில், வயலில் ஓடிக் கொண்டிருந்த டிராக்டரின் சக்கரத்தில் ஒரு நாகப் பாம்பு நசுங்கி இறந்தது. ஆனால், காலை 7:30 மணியளவில் வேலை முடிந்து டிராக்டரில் இருந்து கீழே இறங்கிய விவசாயி அதனிடம் கடிபட்டார். பாம்பு நசுங்கி இறந்து சில மணிநேரம் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 குப்பிகள் நஞ்சுமுறி மருந்து, ஆன்டிபாடி மருந்துகள் என 25 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அசாமில் இறந்த பிறகும் இருவரை கடித்த Monocled cobra என்ற வகையைச் சேர்ந்த நாகப் பாம்பு. இதன் தலையின் பின்புறம் வட்ட வடிவ பட்டை இருக்கும். மூன்றாவது சம்பவம்: இறந்து 3 மணிநேரம் கழித்து கடித்த கட்டு வரியன் மூன்றாவது சம்பவம், அசாம் மாவட்டத்தின் கம்ரூப் மாவட்டத்தில் நடந்தது. மாலை சுமார் 6:30 மணியளவில் ஒரு கரும்பட்டை கட்டு வரியனை கொன்ற சிலர், அதைத் தங்கள் வீட்டுப் பின்புறத்தில் வீசினார்கள். அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர், இரவு 9:30 மணியளவில் ஆர்வத்தில் இறந்த பாம்பைக் காண அங்கு திரும்பிச் சென்றார். அப்போது இறந்துபோன பாம்பு என்று கருதி, எச்சரிக்கையின்றி அதைக் கையில் எடுத்து, தலையைப் பிடித்துப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், அவரது வலது கை சுண்டு விரலில் அந்த நச்சுப் பாம்பு கடித்துவிட்டது. குடும்பத்தினர், கடித்த இடத்தில் வலியோ, வீக்கமோ ஏதும் ஏற்படாததாலும் அது இறந்த பாம்பு என்பதாலும் ஆரம்பத்தில் கவனிக்காமல் தவிர்த்துவிட்டனர். ஆனால், நள்ளிரவு 2 மணியளவில் கடிபட்ட நபர் பதற்றத்துடன், தூக்கமின்றி, உடல் வலியுடன் அவதிப்பட்டுள்ளார். பிறகு படிப்படியாக நஞ்சின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அவருக்கு நஞ்சுமுறி மருந்துகளுடன் 43 மணிநேரம் சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நபர் உயிர் பிழைத்து, குணமடைய 6 நாட்கள் ஆனதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் கட்டு வரியன். அசாமில் இறந்த பிறகும் ஒருவரைக் கடித்தது கரும்பட்டை கட்டு வரியன் வகையைச் சேர்ந்தது. பாம்பு இறந்த பிறகும் கடித்தது எப்படி? இந்த மூன்று சம்பவங்களையும் கேட்கும்போது நம்புவதற்குச் சற்று கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உண்மையில் இருப்பதை வல்லுநர்கள் உறுதி செய்கின்றனர். இந்த மூன்று சம்பவங்களுமே அசாமில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இவற்றின் பின்னணி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்த ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், இறந்த பிறகு அல்லது தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட பாம்பு கடிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. முன்கோரைப் பற்களைக் கொண்ட பாம்பு வகைகளிடையே இத்தகைய அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ். "பாம்புகளின் நஞ்சு என்பது மனிதர்களின் எச்சிலை போன்றதுதான். அந்த நஞ்சு சுரப்பதற்கான சுரப்பி கோரைப் பற்களில் ஒரு சிரிஞ்ச் ஊசியைப் போன்ற வடிவமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பற்கள் மூலமாக நஞ்சை கடிபடும் உயிரினத்தின் உடலில் அவற்றால் செலுத்த முடியும்" என்று ஆய்வறிக்கை விளக்கியுள்ளது. அதோடு, "அசாமில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையைக் கையாளும்போது, அதன் நஞ்சு சுரப்பி மீது தற்செயலாக அழுத்தம் ஏற்பட்டு, கவனக் குறைவாக நஞ்சு செலுத்தப்பட்டிருக்கலாம்," என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. படக்குறிப்பு, யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ் அதேவேளையில், இத்தகைய சம்பவங்கள் இறந்த பாம்புகளில் நடப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கும் மனோஜ், இதன் அறிவியல் பின்னணி குறித்து விளக்கினார். "மனிதர்கள் தூங்கும்போது கொசு கடித்தால் அதைத் தன்னிச்சையாகவே அடிப்போம். ஆனால், அது நமக்கு விழித்தெழும் போது நினைவில் இருக்காது. மனிதன் இறந்தாலும் அவரது உள்ளுறுப்புகள் முழுமையாக இயக்கத்தை நிறுத்த சிறிது நேரமாகும். அதுபோலவே, பாம்புகளிலும் அது இறந்த பின்னரும் அதன் உள்ளுறுப்புகள் படிப்படியாகவே இயக்கத்தை நிறுத்தும்." என்று அவர் கூறினார். அப்படித்தான், பாம்புகளில் அவை இறந்த பிறகுகூட, தண்டுவடம் கடிப்பது போன்ற இத்தகைய செயல்முறைகளை அரிதான சமயங்களில் திடீரெனச் செயல்படுத்திவிடக் கூடும் என்கிறார் அவர். அதுமட்டுமின்றி, வழக்கமாக பாம்புகள் மேற்கொள்ளும் பொய்க்கடி மீதும் ஆய்வறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. அதாவது, பாம்புகள் தனது எதிரிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, பொய்க்கடி எனப்படும், நஞ்சை செலுத்தாமல் வெற்றுக் கடி மூலம் எச்சரிக்கும். ஆனால், "அந்தச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மூளைதான். இறந்த பாம்பின் உடலில் இந்தப் பண்பு சிறிதும் இருக்காது. ஆகையால், இறந்த பாம்பு ஒருவித உடலியல் இயக்க அடிப்படையிலான தூண்டுதலில் கடிக்கும்போது, கடிபடும் நபரின் உடலில் நஞ்சு இறங்குவதைத் தவிர்க்க முடியாது. பாம்பால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், நஞ்சு சுரப்பியில் இருக்கக்கூடிய மொத்த நஞ்சும் கடிபடுபவர் உடலில் செலுத்தப்பட்டுவிடும். இது தவிர்க்க முடியாத ஒன்று," என ஆய்வறிக்கை விளக்கம் அளித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறந்த பாம்பை கையில் எடுப்பதுகூட ஆபத்தில் முடியலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். (சித்தரிப்புப் படம்) எந்தெந்த பாம்புகள் இறந்த பிறகும் கடிக்க வாய்ப்புள்ளது? அமெரிக்காவில் அதிகம் காணப்படும், மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை உடைய ரேட்டில்ஸ்நேக் எனப்படும் பாம்பு வகையில், இத்தகைய நடத்தைகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் முனைவர் மனோஜ். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரவுன் ஸ்நேக், சீனாவில் நாகப்பாம்பு போன்றவற்றில் இப்படி நடந்ததாக செய்திகள் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார் கர்நாடகாவின் ஆகும்பேவில் உள்ள களிங்கா ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.கணேஷ். இந்தியாவில் காணப்படும் பாம்புகள் பற்றிப் பேசிய முனைவர் மனோஜ், "கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மூங்கில் குழிவிரியன், மலபார் குழிவிரியன் உள்பட விரியன் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள், பவளப் பாம்புகள், கட்டு வரியன் வகைப் பாம்புகள் ஆகியவற்றில் இந்த அபாயம் அதிகளவில் இருக்கிறது" என்று தெரிவித்தார். அதேநேரம், "பார்ப்பதற்கு ஆபத்தற்றதாக தென்படக்கூடிய தண்ணீரில் வாழக்கூடிய கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற நீர்பாம்பு வகைகள்கூட இப்படிச் செய்வதுண்டு" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'பச்சைப் பாம்பின் உடலை உருவிவிட்டால் சமையல் நன்றாக வரும்' என்ற மூடநம்பிக்கை, இதுபோன்ற ஆபத்துகளுக்கு மக்கள் ஆளாவதை அதிகரிக்கும். அவரது கூற்றுப்படி, பாம்பு என்றாலே, இறந்துவிட்டாலும்கூட அதை எச்சரிக்கையின்றிக் கையாள்வது மிகவும் தவறான உதாரணம். "பலரும் இறந்த பாம்பு என்றால் அதை எடுத்துப் பார்ப்பது, கையாள்வது என்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இது ஆபத்தானது. 'ஒரு மனிதன் இறந்துவிட்டான்' என்பதற்கு மருத்துவ ரீதியாக சில வரையறைகள் இருப்பதைப் போல, பாம்புகள் போன்ற ஊர்வனவற்றுக்கு எந்தவொரு வரையறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அடிபட்ட அல்லது தலை வெட்டப்பட்ட பாம்பு அசைவற்று நீண்ட நேரம் கிடந்தாலே அது இறந்துவிட்டதாக நாம் கருதிவிடுகிறோம். பாம்புகளை உயிருடனோ அல்லது உயிரிழந்த நிலையிலோ எப்படிப் பார்த்தாலும், அதற்குரிய நிபுணர்களுக்குத் தெரியப்படுத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வு," என்று விளக்குகிறார் அவர். மேலும், "தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இறந்துவிட்ட பச்சைப் பாம்பின் உடலை உருவிவிட்டால் சமையல் நன்றாக வரும்" என்ற மூடநம்பிக்கையால், அத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதுகுறித்துப் பேசிய முனைவர் மனோஜ், "பச்சைப் பாம்பு உள்பட நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளில் பல வகைகள், எளிதில் சீற்றம் கொண்டு கடிக்கும் நடத்தையைக் கொண்டவையாக உள்ளன. அவற்றின் உடல் அமைப்பே அதற்கு ஏற்ற வகையில்தான் இருக்கும் என்பதால், அவை இறந்த பிறகும் கடிக்கும் அபாயம் அதிகமுள்ளது. எனவே மூடநம்பிக்கை அடிப்படையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்," என்று எச்சரித்தார். மறுபுறம், ஒரு பாம்பு இறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்கு அதன் நஞ்சு வீரியம் மிக்கதாக இருக்கும், அது கடிக்கக்கூடிய ஆபத்து எவ்வளவு நேரத்திற்கு உள்ளது என்பது தொடர்பாக விரிவான ஆய்வுகள் இல்லை என்று கூறுகிறார் முனைவர் கணேஷ். அவரது கூற்றை ஆமோதிக்கும் மனோஜ், "இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டங்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், ஒரு பாம்பின் உயிரைப் பறித்து, அதனிடம் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது. அதனால்தான், அசாமில் அரிதாக நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனவே, அதில் கிடைக்கக்கூடிய தகவல்களும் ஓர் அளவுக்குத்தான் இருக்கும். ஆனால், உலகின் வேறு சில நாடுகளில் இது ஏற்படுத்தும் தாக்கம், விரிவான ஆய்வுகளுக்கு உந்துதலாக இருக்கலாம்" என்று தெரிவித்தார். அசாமில் கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள், பாம்புக்கடி குறித்தான விழிப்புணர்வில் இன்னும் எந்த அளவுக்கு ஆழமான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்துகின்றன. அதோடு, பாம்புகளை கவனமின்றி, பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வின்றிக் கையாளும் நபர்களுக்கு இந்தச் சம்பவங்களும் அவை குறித்தான ஆய்வின் முடிவுகளும் ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyjlp8lv0ko
  2. திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் .. அன்புள்ள ஆண்களே.., இது எல்லா ஆண்களுக்கும் அல்ல... பெரும்பாலான ஆண்களுக்கானது... நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது. திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். இதை உடைப்போம்: 1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார். அவருடைய அனைத்து ஆண்டுகால வேலை, மற்றும் வீடு கட்டுதல் ஆகியவை அவரது வயதான காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் வெற்று அறைகளையும் தனிமையான இரவுகளையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். 2. அவரது மனைவிக்கு வயது 62. தங்கள் குழந்தைகளுடன் வாழ்க்கையை செலவிடுகிறார். ஏன்? ஏனென்றால், சமூகம் பெண்களுக்குக் கணவர்களை விடக் குழந்தைகளை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார், எவ்வளவு தியாகம் செய்தார் என்பது முக்கியமல்ல - குழந்தைகள் வளர்ந்தவுடன், கணவர் பெரும்பாலும் மனைவியின் வாழ்க்கையில் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே மாறுகிறார். 3. அவரது குழந்தைகள் அரிதாகவே அவரிடம் பேசுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அங்கு அவர்களை அனுப்ப தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்ட மனிதனை மறந்துவிடுகிறார்கள். அவரது தியாகங்கள் இப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 4. அவர் இப்போது மீண்டும் ஒரு பிரம்மச்சாரி - 72 வயதில். ஒரு குடும்பத்தைக் கட்டி பராமரித்த இந்த மனிதர், இப்போது தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நோய்கள், தனிமை மற்றும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் தனது பணத்தை, தனது உடல் பலத்தை கொடுத்ததை உணர்ந்து போராடுகிறார். திருமணத்தில் ஆண்களுக்கான கடுமையான யதார்த்தம் உண்மை என்னவென்றால், ஆண்கள் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் அடைபடுகிறார்கள். இந்த அமைப்பு உங்களிடமிருந்து பறித்து உங்களை காலியாக விடுவதற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சனையில்லை. அவர்களின் குழந்தைகள், சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு ஆண்? கொடுக்கும் திறன் இல்லாதபோது அவரது பயன்பாடு முடிகிறது. சமூகம் உங்களை "ஒரு ஆணாக இருங்கள்", "உங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யுங்கள்" என்று சொல்கிறது, ஆனால் உங்களுக்காக யார் தியாகம் செய்கிறார்கள்? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் மன அமைதியை யார் உறுதி செய்கிறார்கள்? யாரும் இல்லை. கொடுப்பவராக உங்கள் பங்கு முடிந்ததும், நேற்றைய செய்தித்தாளை போல நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 1. முதலில் உங்களை நேசியுங்கள்: காலியான கோப்பையிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. உங்கள் உடல்நலம், உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் முதலீடு செய்யுங்கள். ஒரு கணவன் அல்லது தந்தையாக இருப்பதை மட்டுமே சார்ந்து இல்லாத, உங்களுக்கான ஒரு நேரத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குங்கள். 2. உங்கள் ஓய்வு நேரத்தைத் திட்டமிடுங்கள்: நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வயதாகும் வரை காத்திருக்காதீர்கள். செயலற்ற வருமான வழிகளை (PASSIVE INCOME) உருவாக்கத் தொடங்குங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், மேலும் உங்களை நம்பியிருக்கக்கூடிய எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். 3. எல்லைகளை முன்கூட்டியே அமைக்கவும்: உங்கள் முழு அடையாளத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதில் நேரம் செலவிடாதீர்கள். நீங்கள் ஒரு மனிதன், ஒரு இயந்திரம் அல்ல என்பதை உங்கள் மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும். 4. உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்குங்கள்: வயதான காலத்தில் உங்கள் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும் நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 5. திருமணத்தைப் பற்றி யதார்த்தமாக இருங்கள்: உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்து திருமணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்க படாமல் போகலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஒரு சூதாட்டம், வாய்ப்புகள் அரிதாகவே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இறுதி வரிகள்: ஆண்களே, சமூகம் உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் தள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு பணப்பையோ அல்லது வேலைக்கார குதிரையோ அல்ல. திருமணம், இன்றைய நிலையில், ஆண்களுக்கு, குறிப்பாக முதுமையில் சிறிய வெகுமதியை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், ஆனால் முதலில் உங்களை நேசிக்க மறக்காதீர்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே. புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..
  3. முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: "எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்" நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: "சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. உனக்கு நல்ல நாட்கள் வரப்போகின்றன.. கழுதையும் சென்றது..... கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது: நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது..... அதற்கு நரி சொன்னது: சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம். கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது.. கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது. நரி சொன்னது: நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம். நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா. நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: மூளை எங்கே? நரி பதிலளித்தது: அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா? மகிழா
  4. முதன் முறையாக ஒரே தரத்தில் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு செல்வ சந்நதி ஆலயத்தில் திருமணம் முடித்து வைப்பது புதிய விடயம் இல்லை. இப்படியான திருமண வைபவம் செல்வ சந்நிதி ஆலயத்தில் நீண்டகாலம் நடைபெற்று வருகின்றது. இந்த தடவை சமூக ஊடகத்தின் கவனத்தை பெற்றுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், முன்பு கொடையாளி எவராவது அனைத்து திருமண தம்பதியினருக்குமான திருமண செலவை ஏற்றுள்ளார்களா என தெரியவில்லை. இப்படியொரு தானம் கிடைப்பதும், கொடுப்பதும் மிகப்பெரியதொரு ஆசீர்வாதம்!
  5. நாங்கள், மீன் தலையில் சொதி வைப்பது மாதிரி…. அவங்கள் பாம்புத் தலையில் சொதி வைப்பார்கள் போலுள்ளது. 😂
  6. மகளிர் கூந்தல் அலப்பறைகள்.. 810K views · 12K reactions | பரிதாபங்களோட அடுத்த அல்டிமேட...பரிதாபங்களோட அடுத்த அல்டிமேட்..🤣🤣. எவ்ளோ முடி வெச்சிக்கிட்டு அலம்பல் பண்றா பாரு... 😂🤣 சிரிச்சிட்டு இருக்கேன்.
  7. ஊரில் உள்ள கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று…. “யூ ரியூப்” நடத்தி, புலம் பெயர் தேசம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி தனக்கு புது மாடி வீடும், சொந்தமாக காரும், உடல் முழுக்க நகையும் போட்ட அந்த புளிச்சல் ஏவறை விடும் யூ ரியூப்காரனை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😂
  8. மல்லாகம் நீதி மன்றம்தானே...பிணைகிடைச்சு ...யூரோப் டூர் போய் வந்து ...கட்டினவீட்டையும் கலகலப்பாய்...வீட்டுவேலை முடிக்கலாம் ...காசு மீண்டும் சேர்க்கலாம் ...அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...
  9. சுவராசியமானதும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதுமான நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி @ஏராளன் . பல வருடங்களுக்கு முன் பத்திரிகைகளிலும், “யூ ரியூப்” காணொளிகளாகவும் இது சம்பந்தமாக வந்த செய்தியையும் பகிர்ந்து கொள்கின்றேன். ⬇️ அது ஒரு கிழக்கு ஆசிய பிரபல உணவகம். அங்கு உயிருடன் உள்ள பாம்புகளை கண்ணாடி பெட்டிகளில் காட்சிப் பொருளாக வைத்து உணவு உண்ண வரும் வாடிக்கையாளர் காட்டும் பாம்பை பிடித்துக் கொன்று, உடனேயே அங்கு சுடச்சுட சமைத்துக் கொடுப்பார்கள் என்பதால் சனம் அலை மோதும். வழமை போல் வாடிக்கையாளர் காட்டிய பாம்பை… சமையற்காரர் பிடித்துக் கொண்டுபோய், சமையலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு விட்டு…. சமையலுக்கு வேண்டிய மசாலா போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து சமைக்க ஆரம்பிக்கலாம் என்று…. வெட்டி வைத்த துண்டுப் பாம்பு உள்ள சட்டியை தூக்க முற்பட்ட போது…. அதற்குள் இருந்த வெட்டிய பாம்பின் தலைப்பகுதி சமையற்க்காரரின் கையில் கொத்தி விட்டதை காணொளியாக போட்டு இருந்தார்கள். அக்காலத்தில் இந்தச் சம்பவம் செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. நானும் அந்தக் காணொளியை பார்த்தேன். அந்த சமையற்காரர் பின்பு இறந்து விட்டதாக அறிந்தேன். உலகில் எமக்குத் தெரியாமல் எத்தனையோ வினோதமான விடயங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
  10. உஸ் ......... மேலே பார்க்காதே . .........மரத்தில நரி ஒன்று நின்று எங்களைப் பார்க்குது ....... உனக்கு மரம் ஏறத் தெரியாது என்று அந்த நரி நினைத்துக் கொண்டிருக்கு . ........ எங்களுக்கு இன்றிரவு டின்னரே அதுதான் என்று அதுக்குத் தெரியாது .......... ஹா .......ஹா ......... ! 😂
  11. யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://akkinikkunchu.com/?p=339064
  12. முன்பு சொல்லியிருந்தேன் தொடக்கத்தில் ரஷ்யா எல்லா ராணுவ பலிதேர்ச்சிகளில் முன்னேறாமல் இருந்தது. அத்ததுடன் உக்கிரைன் இன் மேற்கால் வந்த வினைத்திறன், தொழில்நுட்ப முன்னேற்றத்தை சரியாக உளவு அறியாமல் குறைவாக எடை போடும் இருந்தது. அனால், அப்போதும் சொல்லி இருந்தேன் காலம் செல்ல ருசியா அதன் குறைபாடுகளை தீர்க்கும் எல்லா தகமை. வளங்களை கொண்டு இருப்பதாக. இதுவே இப்பொது நடப்பது. நேட்டோ வின் பல இரகசியங்களை ருஷ்யா கண்டறிந்து உள்ளது, முக்கியமாக ஆயுதங்கள், இலத்திரனியல் யுத்தம், ராணுவ செய்மதி தகவல் தொடரு போன்றவற்றில் உக்கிரேனுக்கு, துருக்கி பங்காளராக உக்கிரேனின் அமைக்கப்பட்ட ஆளில்லா தாக்குதல் உற்பத்தி தொழிற்றசலை பரீட்ச்சாத்த உற்பத்தியை தொடங்கும் தருவாயில் கடந்த 2 நாட்களில் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறத்து. 2022 சித்திரை வாய்ப்பு உக்கிரேனுக்கு மிகவும் பொன்னான வாய்க்கு - ருசியஸ் அடித்து முடக்கப்பட்ட நேரம் - அப்போது ருசியா எல்லா இடத்திலும் இருந்து பின்வாங்க வைத்து இருக்க முடியாவிட்டாலும், படிப்படியாக வ விளதும் ஒப்பந்தத்துக்கு கீழ் இறங்கி வந்தது. (கிரிமியாவை மட்டும் விட்டு கொடுக்க முடியாது என்றது. அனல் கிரிமியா உக்கிரைன் சொந்த பகுதி அல்ல, அது கஹத்தீவு போல 1954 இல், செவ்வியத் யூனியனால் கொடுக்கப்பட்டது. எனவே அதில் உகிரைன் நேட்டோ நீர்மூழ்கியை கொண்டுவந்து நிலை நிறுத்த வெளிக்கிட்டதிலேயே, கிரிமியாவை 2014 ருசியா மீள எடுத்து கொண்டது, இது உக்கிரனால் வந்த வினை) இப்பொது நிலை, ரஸ்சியவை யுத்த நிறுத்தத்துக்கு இணங்குமாறு, தாகத்துக்கு தண்ணீர் கேட்பது போல நேட்டோ, eu வாலுகள் கேட்கின்றன. அனால் அந்த அடித்த முடக்கத்தில் கூட ருசியா யுத்தநிறுத்ததை கேட்கவில்லை. இது அநேகமாக சண்டை காலத்தில் முடிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.முன்பு சொல்லியிருந்தேன் தொடக்கத்தில் ரஷ்யா எல்லா ராணுவ பலிதேர்ச்சிகளில் முன்னேறாமல் இருந்தது. அத்ததுடன் உக்கிரைன் இன் மேற்கால் வந்த வினைத்திறன், தொழில்நுட்ப முன்னேற்றத்தை சரியாக உளவு அறியாமல் குறைவாக எடை போடும் இருந்தது. அனால், அப்போதும் சொல்லி இருந்தேன் காலம் செல்ல ருசியா அதன் குறைபாடுகளை தீர்க்கும் எல்லா தகமை. வளங்களை கொண்டு இருப்பதாக. இதுவே இப்பொது நடப்பது. நேட்டோ வின் பல இரகசியங்களை ருஷ்யா கண்டறிந்து உள்ளது, முக்கியமாக ஆயுதங்கள், இலத்திரனியல் யுத்தம், ராணுவ செய்மதி தகவல் தொடரு போன்றவற்றில் உக்கிரேனுக்கு, துருக்கி பங்காளராக உக்கிரேனின் அமைக்கப்பட்ட ஆளில்லா தாக்குதல் உற்பத்தி தொழிற்றசலை பரீட்ச்சாத்த உற்பத்தியை தொடங்கும் தருவாயில் கடந்த 2 நாட்களில் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறத்து. 2022 சித்திரை வாய்ப்பு உக்கிரேனுக்கு மிகவும் பொன்னான வாய்க்கு - ருசியஸ் அடித்து முடக்கப்பட்ட நேரம் - அப்போது ருசியா எல்லா இடத்திலும் இருந்து பின்வாங்க வைத்து இருக்க முடியாவிட்டாலும், படிப்படியாக விளதும் ஒப்பந்தத்துக்கு கீழ் இறங்கி வந்தது. (கிரிமியாவை மட்டும் விட்டு கொடுக்க முடியாது என்றது. அனல் கிரிமியா உக்கிரைன் சொந்த பகுதி அல்ல, அது கஹத்தீவு போல 1954 இல், செவ்வியத் யூனியனால் கொடுக்கப்பட்டது. எனவே அதில் உகிரைன் நேட்டோ நீர்மூழ்கியை, குறிப்பாக பிரித்தானிய வாலின் நீர்மூழ்கியை கொண்டுவந்து நிலை நிறுத்த வெளிக்கிட்டதிலேயே, கிரிமியாவை 2014 ருசியா மீள எடுத்து கொண்டது, இது உக்கிரனால் வந்த வினை, கிரிமியா வின் வரலாறு உக்கிரேனுக்கு தெரிந்து இருந்தும் - 1853 - 56 இல் ரஷ்யாவை எதிர்த்து ஓட்டோமான் பேரரசு , பிரித்தானியா,பிரான்ஸ், அந்த நேர சார்டினிய அரசு யுத்தம், பலஸ்தீன் இல் இருந்த கத்தோலிக்க மற்றும் பழமை கிறிஸ்தவர்களின் உரிமை தொடக்க பிரச்சனையாக இருந்தது.) இப்பொது நிலை, ரஸ்சியவை யுத்த நிறுத்தத்துக்கு இணங்குமாறு, தாகத்துக்கு தண்ணீர் கேட்பது போல நேட்டோ, eu வாலுகள் கேட்கின்றன. அனால் அந்த அடித்த முடக்கத்தில் கூட ருசியா யுத்தநிறுத்ததை கேட்கவில்லை. இது அநேகமாக சண்டை காலத்தில் முடிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
  13. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·rdoeopsStn072c81a558u406ai89ghuahg1h3a6617 i76f3guumaggg4628 · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’. சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’. சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’. ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’. ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’. ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’. ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’. ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும். #நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்......!
  14. உண்மை அதி உத்தம தலைவன் best and honest அநுரகுமார திசாநாயக்க ஊழல் செய்த தமிழ் அரசியல் தலைவர்களை எல்லாம் தண்டிக்க போகின்றார் யாழ்பாணம் வருகின்றார் வருகின்றார்.செம்மணிக்க சென்று கவுரவபடுத்த போகிறார் என்று தமிழர்களின் பிரசாரங்கள் மோசமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன
  15. இந்த உலகில் ஒரு விசித்திர அரசியல்வாதி என்றால் அது நடிகர் விஜய் தான்.நான் சில நேரம் இவரை ஒன்லைன் அரசியல்வாதி என நினைப்பதுண்டு. சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து முதலமைச்சராக நினைக்கின்றார். இவர் மட்டுமல்ல அவர் சகாக்களும்.அவர் சகாக்களுக்கு தமிழே ஒழுங்காக வராது.இந்த நிலையில் அவர் சகாக்களுக்கு நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் கனவு வேறு. பொது ஊடகங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.