Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20010
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31956
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/04/25 in all areas

  1. அப்பாடா கச்சதீவு பிரச்சனையால தமிழருக்கு ஒரு நாடு கிடைத்தால் மகிழ்ச்சி!!! தமிழ்நாட்டின் கடல் வளத்தை சூறையாடி முடித்த பெருமுதலாளிகள் வடக்கு மீன்வளத்தை சூறையாட முயன்றுகொண்டு, ஏதோ கச்சதீவுக்குள் தான் தமிழ்நாட்டு மீன்கள் ஒழித்திருப்பது போலவும் அதனையே பிடிக்க முயல்வது போலவும் ஏமாற்றலாமா?! எந்த ஒரு அரசியல்வாதியாவது தடைசெய்யப்பட்ட கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைகளை கைவிடச் சொல்லி பெருமுதலாளிகளுக்கும் மீனவர்களுக்கும் அழுத்திக் கூறுவார்களா?!
  2. எனக்கே விசர் பிடிக்குது ராசா. எத்தனை ஏழை எளிய மக்களின் உறுப்புகளை இந்த அரக்க அரசியல்வாதிகள் புடுங்க போகிறார்களோ????
  3. அது தானே! எல்லா மரண புதைகுழிகளையும் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் தண்டித்து, சர்வதேச விசாரணைகளை அனுமதித்து அவற்றின் தீர்ப்பும் வந்த பிறகுதானே தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்? அதுவரைக்கும் ஊர்ச் சனம் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காய்ந்து கருவாடாகத்தானே போகத்தான் வேண்டும்...!
  4. தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி கச்சத்தீவு செல்லவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ 04 Sep, 2025 | 05:13 PM (எம்.மனோசித்ரா) தென்னிந்நிய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல. தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து , அப்பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும். அவ்வாறு செல்லும் போது மக்களுடன் கலந்துரையாடி, அப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும். நாம் அறிந்த வகையில் இதுவரையில் அரச தலைவரொருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மிக முக்கியத்துவமுடையதாகும் என்றார். https://www.virakesari.lk/article/224207
  5. இது உண்மை தகவல்தானா என தேடல் செய்து பார்த்தேன். இந்த செய்தி தமிழ் தளங்களில் பரவலாக வந்துள்ளது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இது. இதுபற்றிய விரிவான விளக்கங்களை விசயம் தெரிந்தவர்கள் விபரியுங்கள் பார்க்கலாம்.
  6. Posted inBook Review பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம் Posted byBookday02/09/20252Posted inBook Review எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்.. தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த எழுத்தாளர் கையாண்ட கோலாக இப்புத்தகம் எரியும் பனிக்காடு.. ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பூர்வமான வரிகளோடு துவங்குகிறது இந்நவீனம், *ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுறமாயிடப்பட்டவை எமது உயிர்கள் நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருப்பது எமது உதிரம்* என்னும் மனதை கசக்கும் வரிகள், *தோட்டியின் மகன், தூப்புக்காரி* போன்ற சமூக அவலங்களை முன்னிலைப்படுத்திய நாவல்களை என் கண்முன் நிறுத்தியது.. இந் நவீனம் முழுவதும் திருநெல்வேலியில் மயிலோடை என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களான கருப்பன் , வள்ளி என்னும் தம்பதியினரின் வறுமையின் பிடி, அவல நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடந்து பிழைக்க வந்த அவர்களை அங்கேயே சாகடித்த நூற்றுக்கணக்கான மக்களின் வலிநிறைந்த குரல்கள் நம் கண்களில் பிரதிபலிக்கும் நீரூற்றாய் இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுதே… ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் எழுத்தாளர் பி எச் டேனியல் அவர்கள்.. 1920 முதல் 1930 வரை அப்பகுதியில் வேலை பார்த்த மக்களின் கொடூரமான அவல நிலையையும் மிருகங்களை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட பரிதாப சூழ்நிலைகளையும் இந்நவீனத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.. பிழைப்பிற்காகவும், ஒருவேளை சாப்பாட்டிற்காகவும் மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் வேறு சில கதாபாத்திரங்களின் அடக்குமுறையும், உயிரியல் ரீதியாக பார்த்தால் *விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்* என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்நாவலின் மொத்த சாரமும்.. “கூரையாக வேயப்பட்டிருந்த பனையோலைகள் ஏறக்குறைய இறுதி மூச்சு விடும் நிலையில் இருந்தன” “மூலையில் கிழிந்த நாராக கிடந்த அம்மாவின் உருவம்” போன்ற ஆசிரியரின் மொழி நடை நாவலின் கூக்குரலுக்கு மெருகூட்டுகிறது… மேஸ்திரி சங்கரபாண்டியின் ஆலோசனைக்கிணங்க கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு கருப்பனும், வள்ளியும் ரயிலில் பயணிக்க அவர்களுடன் வாசகியாக நானும் பயணிக்க ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிய, வேலை ஆரம்பிக்க, கருப்பன் விறகு வெட்ட, வள்ளி தேயிலை கிள்ள, தீப்பெட்டி அளவே உள்ள தகர வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள, வேலை பார்க்கும் இடத்தில் கண்காணிப்பாளர்களின் பாலியல் தொந்தரவுக்கு இடம் கொடுக்காது வரும் பிரச்சனைகளினால் மனம் துவள, ஆளுக்கொரு போர்வையென மழையில் நனைந்துவிட்டால் அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ள, மாற்று போர்வை கிடைக்காது என்று மேஸ்திரி எச்சரிக்க, பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம். கழிப்பறை கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய், என வெள்ளை துரைகளுக்கும் மேஸ்திரிகளுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க எழுத்தாளரின் எழுத்தாணி வால்பாறையின் பனிக்காட்டில் எரியும் மக்களின் குமுறல்களை படமிட்டு காட்ட, நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னால் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் சுவைக்குப் பின் கசப்பின் நியதியை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.. மக்கள் மலைக்கு போவதற்கான கட்டாயம் என்ன? அங்கே சென்றாலும் அவர்களுடைய கனவுகள் பலித்ததா? அவர்களது சொல்லொன்னா அடிமைத்தன வாழ்வு எப்படியாய் இருந்தது? என்ன அடக்குமுறைகளுக்கெல்லாம் உள்ளானார்கள்? அடிமைத்தன வாழ்க்கை முறையின் அனுபவங்கள் என்னென்ன? சாதிவெறி யின் தாக்கங்கள் என்னென்ன? கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சியை நம்மால் கட்டுப்படுத்தவே இயலாது அவ்வளவு துயரமிக்க காட்சிகளை நம் மனக்கண் முன் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.. இந்நூலை வாசிக்க வாசிக்க Shakespeare’s *Merchant of Venice* ல் வரும் *எவ்வளவு அழகான முகமூடி பூண்டி இருக்கிறது இந்த நரகம்* என்னும் வரிகள் நம் எண்ண ஓட்டத்தில் வந்தே தீரும்.. குறிப்பாக ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ஆசிரியர் கொடுத்திருக்கும் மேற்கோள்களின் ஒப்பீடு மிக அருமை.. வால்பாறை மண்ணையும், மக்களையும் அறிமுகப்படுத்திய இந்நூலில் இடம் பெறும் உரையாடல்கள் முழுக்க முழுக்க நம் திருநெல்வேலியின் மண்வாசம் வீசுவது கூடுதல் சிறப்பு.. புத்தக பிரியர்கள் தினமன்று புத்தகப் புழுவாகிய எனது நண்பரின் அன்பளிப்பாக பெற்றேன் இப்புத்தகத்தை பெற்ற நாள் முதற்கொண்டு வாசிக்க வாசிக்க கண்களில் நீர் கோர்க்காத நாளில்லை அப்பேர்ப்பட்ட மன வலிகள் மிகுந்த நவீனம் தான் *எரியும் பனிக்காடு*.. *சமூக அவலங்களை அறிந்ததோடு நில்லாது அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் எழுத்தாளருடன் இணைவோமா??* நூலின் விவரங்கள்: நூல் :எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) ஆசிரியர்: பி.எச்.டேனியல் (P.H.Daniel) | தமிழில்: இரா. முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ரூ. 250 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ எழுதியவர் : ✍🏻 சுகிர்தா அ, நெல்லை. https://bookday.in/eriyum-panikadu-book-reviewed-by-sugirtha-gunaseeli/
  7. பழைய திருமணவீட்டு நிகழ்ச்சிகளில் பொண்ணு மாப்பிளை வீடு வரும்போது இந்த பாட்டைப் போடுவார்கள். எனது திருமண காணொளியிலும் இந்த பாட்டு இருந்த ஞாபகம்.
  8. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002
  9. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் . ......... ரவிசந்திரன் & பாரதி ......... ! 😍
  10. இந்தியா.... ஈழத்தமிழருக்கு எதிராகவும், சிங்களவருக்கு ஆதரவாகவும் தானே இது வரை நடந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். ஈழத்தமிழர்களை கருவறுத்த இந்தியா என்ற நாடு சுக்கு நூறாக உடைந்து நாசமாகப் போகவேண்டும். அப்போதான்... ஈழத்தமிழனுக்கு விடிவு கிடைக்கும்.
  11. எங்களுடைய வீட்டிலும் பெண் நாய் குட்டியாக பிறந்து வளர்ந்து நிற்கிறது. தெருவில் இருந்த தாய் நாய் எங்கள் வீட்டு குப்பையை பாதுப்பென எண்ணி குட்டிகளை போட்டுவிட்டது. பின்பு ஆண்நாய்க் குட்டிகளை விரும்பி எல்லோரும் பிடிக்க இந்த பெண்நாய்க்குட்டியை யாரும் விரும்பாததால் எனது விருப்பின்படி அம்மாவே உணவிட்டு வளர்த்தார். அந்த பெண்நாய்க்குட்டி வளர்ந்து 3 - 4 தடவைகள் குட்டிகள் போட அம்மா என்னைப் பேச நான் என்ன செய்ய என விழிபிதுங்க, யாரோ ஒரு புண்ணியவான் வீதியில் வைத்து மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்து உதவினார்கள். இன்று அறிவித்தல் செய்கிறார்கள், வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட அழைத்துவரச் சொல்லி, ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமாம். வீடுவீடாக சென்று ஒரு நாய்க்கு 500ரூபா வாங்கி ஊசி போட்டால் அரசுக்கும் வருமானம், எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி போட்டதை உறுதி செய்யவும் முடியும்.
  12. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002
  13. அண்ணை, சோழியன் அண்ணாவின் பெயர் இராஜன் முருகவேல். இந்ந எழுத்தாளர் விபரம் கீழே இரா. முருகவேள் ஒரு தேர்ந்த தமிழ் எழுத்தாளர், இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆவார். அவர் கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார், மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதுகிறார். 'மிளிர்கல்', 'முகிலினி', 'செம்புலம்', 'எரியும் பனிக்காடு', 'நீலத்தங்கம்' போன்ற அவரது படைப்புகள் பல கவனத்தைப் பெற்றுள்ளன. பணிகள் வழக்கறிஞர்: கோவையில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். எழுத்தாளர்: நாவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுகிறார். சமூக செயல்பாட்டாளர்: இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த எழுத்தாளர்: சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். இணையத்தில் அவரது படைப்புகளைப் பெறுதல் Panuval.com மற்றும் CommonFolks.in போன்ற இணையதளங்களில் அவரது நூல்களை வாங்கலாம். Amazon.in போன்ற தளங்களிலும் அவரது நூல்கள் கிடைக்கின்றன. Goodreads தளத்தில் அவரது நூல்களின் வாசகர் விமர்சனங்களையும் காணலாம்.
  14. முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்துக்காக மதத்தை முஸ்லிம் இனம் என்றே சொல்லி கொண்டு முருங்கை மரத்தில் ஏறிநிற்பவர்கள் தான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்ற இலங்கை தமிழர்கள்.
  15. அப்படியே அவைக்காக தான் அவர் வரவில்லை என்றாலுமே பரவாயில்லை. எனது முன்னுரிமை விருப்பம் தமிழ் பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் தொழிற்குறை முன்னேற்றங்களும் பேச்சளவில் நின்றுவிடாது ஒரளவுக்காகவது நிறைவேற்றப்பட வேண்டும் முன்னேற்றங்கள் காணப்படல் வேண்டும் என்பதே. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே. இதில் எவரது ஆட்சி என்பதில் கூட எனக்கு அக்கறை இல்லை. துறைசார் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலை வாய்பபுக்காக ஏங்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யாழ்பாணத்தில் உள்ளனர். இவ்வாறான விடயங்கள் இனியும் ஏதும் பின்னடைவுகளை காணக்கூடாது.
  16. அருமையான தத்துவங்கள். உங்கள் உவமைகள் புல்லரிக்க வைக்கிறது.
  17. வாராயோ தோழி வாராயோ ........ ! 😍
  18. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!
  19. கால் நடைகளின் உரிமைகளை யாரிடமிருந்து, எப்போது, எப்படி பாதுகாத்தார்கள்? சொந்த நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தெரியாதவர்கள், பகிர்ந்து வாழ முடியாதவர்கள், அவர்களின் உரிமைகளையும் நிலங்களையும் பறித்தவர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவர்கள் குற்றம் புரியவில்லையென்றால் ஏன் துடிக்கிறார்கள்? இராணுவத்தை காட்டி பிச்சை எடுத்து அரசியல், சமயம் செய்பவர்கள்.
  20. எப்போதும் யாரும் இப்படியான தனி நபர்கள் ஊடாக யாருக்கும் உதவும் நோக்கத்துடன் நிதி உதவிகளை வழங்க வேண்டாம் நீங்களோ அல்லது உங்களால் முடியாவிட்டால் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஊடாக( ஊர் மன்றங்கள் , கிராம அலுவலககர்கள். உறவினர்கள்கள்) என அந்த உறவிற்கு நேரடியாக செய்வது நல்லது. ஒருமுறை உதவி செய்தால் அடுத்தமுறை உதவி செய்யும் முன்னர் ஏற்கனவே செய்த உதவி கிடைத்ததா என உறுதி செய்துகொள்ளுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.