Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16468
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/05/25 in all areas

  1. "ஆடவாங்க அண்ணாச்சி..." "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில் ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா. எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது. பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.
  2. வயித்தெரிச்சலை கிளப்புவதற்காக இது திட்டமிட்டு கசிய விட்டிருப்பார்களோ🤣, இதற்கான கதை வசனத்தினை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒத்திகையும் பார்த்திருப்பார்கள் 🤣, சீனாவின் சுப்பர் கியூமன் பற்றிய வதந்திகள் ஏற்கனவே உள்ளது, இரஸ்சியா தனது குடிமக்களுக்கு இலவச புற்றுநோயிற்கு mRNA தடுப்பூசி இலவசமாக கொடுக்கின்றது என்பதற்கே பல சர்ச்சைகளாக உள்ளது இதற்கிடையில் இதனை வேறு கிளப்பிவிட்டுள்ளார்கள்😁. விளங்கநினைப்பவன் இந்த பொறியில் மாட்டிவிடாதீர்கள்😂.
  3. நான் ஏறக்குறைய 20 வருசமா Yarl வாசகாராக இருந்து இன்று இணைத்துள்ளேன்.
  4. நமக்கு தூக்கம் வருவதை எப்படி அறிந்து கொள்வது ?
  5. https://youtu.be/P3J3_qoMRN4?si=A4_xwabhfWr8ha5a இப்படி ஓர் தாலாட்டு பாடவா
  6. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், கடினமானதுமான ஒன்று. இந்த செய்தியை பார்த்துவிட்டு அங்கு அகதி முகாமில் வாழும் ஒருவருடன் உரையாடினேன். அவர்கள் 1990 காலங்களில் இலங்கை இராணுவம் புலிகள் இடையிலான போர் மீண்டும் தொடங்கியதும் படகில் சென்றவர்கள். தம்முடன் அடிக்கடி வழக்கறிஞர்கள் வந்து உரையாடுவதாகவும், தமக்கு வதிவுடமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் வழக்கு சம்மந்தமான தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும் என கூறினார். எனக்கு விளங்கிய அளவில் வழக்கில் கிடைக்கக்கூடிய சாதகமான முடிவு அவர் தமக்கு இந்திய குடியுரிமைக்கு நிகரான வதிவுடமை கிடைக்கும் என கூறுகின்றார். அதேசமயம், இந்திய குடியுரிமை இலகுவாக பெறப்படக்கூடிய ஒன்று அல்ல என இவ்விடயம் பற்றி சிலருடன் உரையாடியபோது கூறினார்கள். இந்தியாவில் பிறந்த அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது. காரணம் இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
  7. திருத்திக் கொள்ளுங்கள் ஏராளன் . ............. பணமுள்ள என்று வரவேண்டும் . ....... வீரம் , நீதி , நேர்மை எல்லாம் கலாவதியாகி கனகாலம் ஆயிற்று . ......... ! உபயம் : தினசரி செய்திகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , அன்றாட வாழ்வில் காண்பவை கேட்பவை .........! 😇
  8. ஆரோக்கியமான சந்ததிக்காக என்று நினைக்கிறேன்! அண்ணை, முன்னர் மனிதர்களிடமும் இருந்ததே! ஏறுதழுவல், வட்டக்கல் தூக்கல், ராமர் வில்லை உடைச்சுத் தானே சீதாவை மணமுடித்தார். இப்பவும் பெண் பிள்ளைகள் வீரமுள்ள ஆண்களை காதலிக்கிறார்களே!
  9. அத விடுங்கோ , மகாபாரதத்திலேயே மகனின் ஆயுளை வாங்கி மங்கையரின் உறவை அனுபவித்த மன்னனின் கதை உண்டு . ....... முதல்ல ஷி ஜின்பிங்கும் புடினும் எத்தனை வயதுவரை வாழுகின்றார்கள் என்று பார்த்து விட்டு இது பற்றி கலந்துரையாடலாமே விசுகர் . .......அதுவரை இதை சீரியஸாய் எடுக்கவேண்டாம் . ....... இரவுத் தூக்கம் முக்கியம் . ......! 😀
  10. வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்படும் என மறைமுகமாக வெருட்டி ஊசி போட வைக்கத்தான் அண்ணை!
  11. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002
  12. பாசிப்பருப்பு சாம்பாருடன் சைட்டாக இப்படியும் செய்து சேர்த்து சாப்பிட சும்மா அள்ளும் .......! 😀
  13. என் சேலைத் தலைப்பு எப்படி ............! 😀
  14. தங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும். நன்றி அண்ணா
  15. நமக்கு பிடித்தவர்கள் " நீ பேசுவதை நிறுத்து .".என சொல்லும்போது ,நாம் பேச நினைக்கும் வார்த்தைகளை தடுக்கும் போது , நம்மை பேச விடாமல் குரலை நசுக்கும் போது, நம்மிடம் பேச என்ன இருக்கு என எண்ணும் போது, ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம் குரல் வெறுக்க பட்டு விட்டது.இனி அன்பாக பேசினால் பிடிக்காது என்ன பேசினாலும் தப்பா தெரியும். எந்த சூழலிலும் யாரையும் நம்பாதீர்கள் . என்றால் இப்போது மனிதர்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் துரோகம் செய்யக் கற்றுக் கொண்டு விட்டார்கள் வீட்டில் தாய் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பணக்காரன் இந்த பூமியில் இன்னும் பிறக்கவில்லை . இறந்துபோன மீன்கள்தான் தண்ணீர் வழியாக போகும் . ஆனால் உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்து தான் செல்லும் அதனால் உங்கள் பிரச்சினைகள் போராடி வெல்லுங்கள். மூன்றாவது வகுப்பு படிக்காதவன் , மூன்று ஜி யு வலேரி கடை வைத்து நடத்துகிறான் . மூன்று டிகிரி முடித்தவர் ...பெட்டிக் கடை போடலாம் என யோசிக்கிறான். தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என் வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றி தான். சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த உலகை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான் ஒரு நாளுனுக்கு பிடித்து போல உன் வாழ்க்கையும் மாறும் . அது நாளையாக கூட இருக்கலாம்
  16. அண்ணை, எனக்கு மனதில் படுவது ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் தனது இறுதி முடிவை உணர்ந்து அமர்ந்து தியானம் செய்ய உயிரோடு சமாதி புதைத்துவிட்டார்கள்.! மரணித்த ஒருவரின் கால்களை இவ்வாறு மடக்கி உட்கார வைக்க முடியாது என நினைக்கிறேன்.
  17. கீழே உள்ள செய்தியையும் பாருங்கள் ஈழப்பிரியன். எவ்வளவு அநியாயம் எல்லாம் செய்திருக்கிறார்கள். ☹️ செம்மணியில் 2 எலும்புக்கூட்டுக்கு குறுக்காக மற்றொரு எலும்புக்கூடு!! மொத்த என்புக்கூடுகளின் எண்ணிக்கை 231!! Newtamils.com
  18. இருக்கவிட்டு உயிரோடு புதைத்திருப்பார்களோ? நான் இந்த செய்திகளை இப்போது அதிகம் பார்ப்பதில்லை.
  19. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. Babu Babugi
  20. இலங்கை: 1000 அடி பள்ளத்தில் உருண்ட பேருந்து - கடைசி நொடிகளில் நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (04) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளடங்களாக முப்பதிற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அத்துடன், காயமடைந்தவர்களின் 6 ஆண்களும், 5 பெண்களும், 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர். விபத்து எவ்வாறு நேர்ந்தது? எல்ல - வெல்லவாய பிரதான சாலையின் 23வது மற்றும் 24வது மைல் கல் பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. "வெல்லவாய திசையை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, எதிர் திசையில் வருகைத் தந்த ஜீப் ரக வாகனமொன்றில் மோதுண்டதை அடுத்து, சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைவு இருந்த பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், பஸ் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம், G.KRISHANTHAN படக்குறிப்பு, இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக தொடர்ந்த மீட்பு பணி விபத்து இடம்பெற்ற தருணம் முதல் பிரதேச மக்கள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகைத் தந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினரும் மீட்பு பணிகளுக்காக வரழைக்கப்பட்டிருந்தனர். பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். இரவோடு இரவாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இயங்கி வரும் மலை ஏறும் குழுவினரும் மீட்பு பணிகளுக்காக வருகைத் தந்திருந்தார்கள் என பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் கோரப்பட்ட மீட்பு உதவிகள் பட மூலாதாரம், G.KRISHANTHAN படக்குறிப்பு, விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். பஸ் விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேஸ்புக் ஊடாக பல்வேறு தரப்பினர் மீட்பு பணிகளுக்கான உதவிகளை கோரியுள்ளனர். ''எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்காக பாரிய பிரயத்தனம் முன்னெடுக்கப்படுகின்றது. அருகிலுள்ளவர்கள் உதவி செய்யுங்கள்.'' என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் பகிரப்பட்டன. இவ்வாறு வெளியிடப்பட்ட சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து, அதற்கான உதவியை பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர். இதன்படி, கயிறுகள், மின்விளக்குகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு விபத்து நேர்ந்த இடத்திற்கு பிரதேச மக்கள் வருகைத் தந்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் அனுபவம் பட மூலாதாரம், G.KRISHANTHAN மலை தொடர்களில் ஏறும் குழுவினரின் ஒத்துழைப்பு இதன்போது கிடைக்கப் பெற்றதாக பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். பஸ் விபத்துக்குள்ளான பள்ளத்தில் காணப்படும் பாரிய கற் பாறைகளின் ஊடாக கயிறுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் செயற்பாட்டை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டோர் பிபிசி சிங்கள சேவைக்கு தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ''அது தொடர்பில் கூற வேண்டும் என்றால், எமக்கு தகவலொன்று கிடைத்தது. நாங்கள் முதலாவது செயற்பாட்டாளர்களாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றோம். நாங்கள் பிளை ராவணா குழு என பிரதிநிதித்துப்படுத்துகின்றோம்'' ''இந்த தகவலை அறிந்து பலர் வருகைத் தந்திருந்தார்கள். நாங்கள் கீழே சென்று பார்த்த போது காயமடைந்தவர்களை போன்று உயிரிழந்தவர்களையும் காணக்கூடியதாக இருந்தது.'' ''பள்ளத்தில் சிக்குண்ட நிலையில், நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஏனைய மூவரும் காயமடைந்திருந்தனர். அவர்கள் மூவரையும் பிரதேச மக்கள் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் நான் கீழே கொண்டு வந்தேன்'' ''இந்த பள்ளத்தில் 80 - 100 அடி வரையான கற்களிலான பள்ளமொன்று உள்ளது. பஸ் அதிலிருந்தும் கீழே வீழ்ந்திருந்தது.'' ''முதலில் மீட்பு பணிகளை ஆரம்பிக்கும் தருணத்தில் எந்தவொரு உபகரணங்களும் இருக்கவில்லை. அதன்பின்னர் கயிறு போன்றவற்றை எடுத்துக்கொண்டு குழுவொன்று வருகைத் தந்தது'' ''விரைவாக உபகரணங்களை தயார் செய்து, கீழே இறங்கினோம். மிகவும் கவலையாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. எங்களால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்தோம்'' ''நாங்கள் எமது வாழ்க்கையை கூட நினைத்து பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு உதவி செய்தோம். நான் நினைக்கின்றேன். இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நினைக்கின்றேன்.'' மீட்பு பணிகளின் ஈடுபட்ட குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் தனது அனுபத்தை இவ்வாறு பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டிருந்தார். பிரேக் பிடிக்காததால் விபத்து? விபத்துக்குள்ளான பஸ்ஸில் பிரேக் இருக்கவில்லை என பஸ்ஸின் சாரதி கூறியதாக பஸ் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''எல்ல பகுதிக்கு அருகில் வைத்து பஸ்ஸில் பிரேக் இல்லை என சாரதி சொன்னார். நான் அவர்களுடன் பஸ்ஸின் முன்புறத்தில் அமர்ந்து அவர்களுடன் கதைத்துக்கொண்டு வந்தேன். சாரதி சொன்னார். பஸ்ஸின் நடந்துநர் சிரித்தார். பஸ்ஸில் ஏனையோரும் இருந்தார்கள். பொய் சொல்ல வேண்டாம் என சொல்லி சிரித்தார்கள். இரண்டாவது வளைவில் வைத்து மீண்டும் சொன்னார் பிரேக் இல்லை என் சொன்னார். திடீரென பஸ்ஸை திருப்பி செலுத்தினார். அதன்பின்னரே பஸ்ஸில் பிரேக் உண்மையிலேயே இல்லை என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டோம். முன்புறமாக வாகனமொன்று வந்தது. அதில் மோதுண்டே பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன். சில மணிநேரம் நினைவு வரவில்லை. சிறியவர் ஒருவர் கூச்சலிடும் சத்தத்திலேயே நான் எழுந்தேன். சிறுவனை அங்கிருந்து எடுக்க முயற்சித்தேன். என்னால் எழ முடியவில்லை. கூச்சலிட்டேன். அப்போது விசேட அதிரடி படையினர் வருகைத் தந்தார்கள்.' என அந்த பயணி பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம், G.KRISHANTHAN ராணுவ மீட்பு குழு பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சுமார் 100 பேரை கொண்ட ராணுவ குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்தார். ''விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, எமது குழுவொன்று பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது'' ''விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை மீட்டு, அவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த குழு சென்றுள்ளது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிலுள்ள எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், வீரவில விமானப் படை முகாமிலுள்ள பெல் 412 ஹெலிகொப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது. அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் நோயாளர்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு அல்லது ஏனைய மீட்பு பணிகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது. மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலைமை இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும் காயமடைந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்களில் சிலரது கைகள் மற்றும் கால்கள் உடைந்துள்ளதாக பதுளை மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான பஸ்ஸிற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற பின்னணியில் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பில் எல்ல போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c708zeqz4y5o
  21. முன்பு ஓட்டமாவடி ஒரு வட்டத்திற்குள் இருந்தது. இன்று அது பருத்து விரிந்து வாழைச்சேனையில் இருந்து புனானை வரையில் விரிந்து பரந்துவிட்டது. விரைவில் அங்குள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையும் முற்றாக அழிந்து அது ஒரு முசுலீம் கிராமமாக மாறிவிடும் சாத்தியங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
  22. செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது! adminJuly 16, 2025 செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி , மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து , தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார் நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217901/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.