Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2951
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/06/25 in all areas

  1. என்னை வரவேற்றதற்கு மீண்டும் நன்றிகள். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன். பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினேன். நான் yarl.com வாசிப்பதற்க்கு காரணம், yarl.com ஊடக பல ஆக்கங்கள், தகவல்கள் மற்றும் செய்திகளை கிடைக்க பெறுகிறது. பலர் சிறந்த ஆக்கங்கள் எழுதுகின்றனர், மேலும் பல்வேறு மாறுபடட கருத்துக்களையும் எழுதுகிறார்கள். பலவற்றை நான் விரும்பாமல் போகலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக yarl.com சிறந்த ஒரு ஊடகம் என்றே சொல்லுவேன். முன்பாக, நான் சேராமல் இருந்ததற்குக் காரணம், நான் விவாதிப்பதில் அடிமையாகிவிடுவேனோ என்ற பயம். ஆனால் இப்போது சேருவதற்கு கரணம் பலர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு எழுதுகிறார்கள் / பங்களிக்கிறார்கள். எனவே, நான் குறைந்தபட்சம் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்றகாக. மேலும், எனக்கு சில துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளதாக்க நம்புகிறேன் ஆகவே நானும் பங்களிக்க முடியும்.
  2. அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
  3. யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா இன்று 06.09.2025
  4. சிரியாவைச் சேர்ந்த பலர் நான் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அதில் குர்திஸ் இனத்தவர்களும் உள்ளனர். ஒருவர் புதிதாக வந்தபோது அவரும் சிரிய குர்திஸ்ஸாக இருக்கலாம் என்று கேட்போது அவர் 'அரபா' என்றார். அப்போ சிரியா இல்லையா என்று கேட்டதற்கு.. சிரியாதான் ஆனால் நான் 'அரபா' என்றார். இவர்கள் மதத்தாலும், நிலத்தாலும் ஒன்றானபோதும் ஒரு இனமாக இல்லை. ஆனால் இலங்கைச் சோனகரே தம்மை மதத்தால் இனமாக அடையாளம் கொள்கின்றனர். மதங்களால் வேறானாலும் மொழியால் ஒன்றாகி அவரவர் பண்பாடுகளைத் தனித்துவமாகப் பேணும் அலகுகளை அணியமாக்கி வாழ்தவதே தமிழ்பேசும் தரப்புக்குப் பாதுகாப்பானது என்ற புரிதல் சோனகருக்குத் தலைமை தாங்கிய முன்னைய தலைவர்களுக்கு இருந்தது. சில கசப்பான சூழல்களையும் பேசித்தீர்த்துக் இணைந்து செல்லும் முயற்சி சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதை நினைவு கொள்ளல் வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ரெஹான் ஃபாசல் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார். அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை. பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார். ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் அவரை ஓர் இளம் பிரெஞ்சு அறிவுஜீவி என்று தவறாக நினைத்திருப்பார்கள். அவர் உயரத்தில் குள்ளமாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தார். அவரது கறுப்பு முடியும் கருப்பு கண்களும் மக்களை கவர்ந்தன. " என்று எழுதுகிறார். மேலும் "அவர் மோண்ட்மார்ட்ரே பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒரு அழுக்கு பிடித்த அறையில் வசித்து வந்தார். பழைய புகைப்படங்களை பழுது பார்த்து பெரிதாக்குவது அவரது தொழில். அவர் கையில் எப்போதும் ஷேக்ஸ்பியர் அல்லது எமிலி ஜோலாவின் புத்தகம் இருக்கும். அவர் ஒரு அமைதியான மனிதர், ஆனால் பயந்த மனிதர் அல்ல. நாடகம், இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டங்களில் சரளமாக பிரெஞ்சு மொழியில் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார். அவர் மேற்கின் செல்வாக்கை உள்வாங்கியிருந்தார், ஆனால் அதன் ஆதிக்கத்திற்கு தயாராக இல்லை." என்றும் குறிப்பிடுகிறார். ஹோ சி மின் கொல்கத்தா வருகை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஜூலை 4-ம் தேதி அப்போதைய வியட்நாம் பிரதமர் நுயென் தான் ஜங் மற்றும் அவரது மனைவி த்ரான் தான் கீம் ஆகியோர், கொல்கத்தாவில் உள்ள மறைந்த வியட்நாம் அதிபர் ஹோசிமின் சிலைக்கு அருகில் நிற்கின்றனர். 1941-ம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திடீரென அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக கட்சி அலுவலகத்தை அடைய வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின என்பது ஒரு பிரபலமான கதை. கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட், தி ஜர்னி ஆஃப் அன் இந்தியன் கம்யூனிஸ்ட்' (பயணியும், பாதையும் : ஒரு இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கைப் பயணம்) புத்தகத்தில், "நாங்கள் அலுவலகத்தை அடைந்தபோது, சிரித்த கண்களும் மெல்லிய தாடியும் கொண்ட ஒரு ஒல்லியான தோற்றம் கொண்ட மனிதர் எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பின்னர் அணியத் தொடங்கிய ஆடைகளை அவர் அப்போதே அணிந்திருந்தார். அவர் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவர் பெயர் ஹோ சி மின். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச பாரிஸ் செல்வதாகக் கூறினார். கிரேட்-ஈஸ்டர்ன் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள ஒரு பணியாளரின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடைந்தார்." என்று எழுதுகிறார். வியட்நாமுக்கு சுதந்திரம் பெற்று தந்தார் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1965-ல் வியட்நாம் பிரதமர் பாம் வான் டோங்குடன் ஹோ சி மின் ஹோ சி மின்னை குறிப்பிடும் போதெல்லாம், எதிர்ப்பு, புரட்சிகர உணர்வு போன்ற சொற்கள் தானாகவே நினைவுக்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒருபுறம் மதிக்கப்பட்ட ஒரு நபராகவும், மறுபுறம் எதிரிகளால் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தார். நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த தனது நாட்டிற்கு அவர் சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜாக்சன் ஹார்டி தனது 'ஹோ சி மின் ஃப்ரம் எ ஹம்பிள் வில்லேஜ் டு லீடிங் எ நேஷன்ஸ் ஃபை ஃபார் ஃப்ரீடம்' (ஹோசிமின் - சாதாரண கிராமத்தில் இருந்து, விடுதலைப் போராட்டத்தின்‌ தலைமை வரை) என்ற புத்தகத்தில், "மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக உருமாறிய அவரது பயணம், போராட்டம் மற்றும் தைரியத்தின் கதை மட்டுமல்ல, உலகின் வலிமையான சக்திகளால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நபரின் கதையும் கூட. அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அவர்களை ஆதரித்த வல்லரசான அமெரிக்காவையும் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்." என்று எழுதுகிறார். ஆரம்பத்தில் புறக்கணித்த அமெரிக்கா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அமெரிக்க துருப்புகள் பயன்படுத்தின. ஆகஸ்ட் 29, 1945 அன்று, வியட்நாமின் சுதந்திரத்திற்காக போராடிய வியட் மின் எனும் குழு ஹனோயை ஜப்பானிடமிருந்து விடுவித்தது. செப்டம்பர் 2-ம் தேதி வியட்நாம் என்ற சுதந்திர நாடு நிறுவப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா பங்கேற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் வியட்நாமை மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கவில்லை. வியட்நாமை ஐ.நா. பாதுகாப்பின் கீழ் அல்லது தற்காலிகமாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க அவர் தயாராக இருந்தார். ஆகஸ்டின் போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின்படி, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பனிப்போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் பார்வையில், ஹோ சி மின் ஒரு தேசியவாத தேசபக்தர் அல்ல, ஒரு உறுதியான கம்யூனிஸ்டாகவும், 'மாஸ்கோவின் முகவராகவும்' இருந்தார். வி.கே.சிங் தனது 'ஹோ சி மின் அண்ட் ஹிஸ் வியட்நாம்' (ஹோ சி மின் மற்றும் அவரது வியட்நாம்) என்ற புத்தகத்தில், "மார்ச் 27, 1947 ட்ரூமன் கோட்பாடு, உள்நாட்டு கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது கம்யூனிச ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்கா எந்த வகையிலும் உதவும் என்றது. மே 8, 1950 அன்று, அமெரிக்கா வியட்நாமில் பிரான்சுடன் ஒரு மூலோபாய உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செப்டம்பர் 1953 -ல், அமெரிக்க நாடாளுமன்றம் 900 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அங்கீகரித்தது. 1954 வாக்கில், வியட்நாமில் பிரான்சின் போருக்கான செலவில் 80 சதவீதத்தை அமெரிக்கா ஏற்கத் தொடங்கியது." என்று எழுதுகிறார். 1954 -ல், பிரான்ஸ் தியென் பியென் ஃபூவில் (வியட்நாமில் உள்ள ஒரு நகரம்) தோல்வியை சந்தித்தது. 7500 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டனர், 10,000 பேர் போர்க் கைதிகளாக பிடிபட்டனர். ஜூலை 19, 1954 -ல், பிரான்ஸ்-வியட்நாம் போர் ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது. தன்னை விட பல மடங்கு பெரிய சக்திகளுக்கு எதிராக போர்களை நடத்தி வெல்ல முடியும் என்பதை வியட்நாம் கற்றுக்கொண்டது. அமெரிக்கா தனது முழு பலத்தையும் பிரயோகித்தது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் (கோப்புப் படம்) ஜெனீவா ஒப்பந்தங்களைத் தொடர்ந்து வியட்நாமை ஒன்றிணைப்பதற்கான பாதையைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது வெளியுறவுச் செயலர் ஜான் போஸ்டர் டல்லெஸும் பிராந்தியத்தில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தெற்கு வியட்நாமை ஒரு தனி நாடாக உருவாக்க முடிவு செய்தனர். வியட்நாமில் நேரடியாக அமெரிக்கத் தலையீட்டைத் தொடங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஐசனோவர் ஆவார். அதைத் தொடர்ந்து, கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தது. ஜனவரி 27, 1965 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் கெவர்ஸ் பண்டி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக் நமரா இருவரும் அதிபர் ஜான்சனிடம் வியட்நாமில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவத் தலையீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினர். இப்போது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அது இந்தப் போரில் முழுமையாகக் குதிக்க வேண்டும் அல்லது அங்கிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். பிப்ரவரி 6, 1965 அன்று, ஜான்சன் 'ஆபரேஷன் ஃபிளேமிங் டார்ட்' க்கு ஒப்புதல் அளித்தார். அமெரிக்கப் படைகள் பலமாக இருந்தபோதிலும், வடக்கு வியட்நாமின் ராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டது. ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் லேன் பாம் , "ஹோ சி மின்னின் மூலோபாய தலைமையும் வடக்கு வியட்நாமின் கம்யூனிச ஆட்சியும் வியட்காங்கிற்கு (ஆயுதக் குழு) சண்டையைத் தொடர தேவையான வளங்களையும் கருத்தியல் ஆதரவையும் வழங்கின. அமெரிக்கர்கள் விரைவிலேயே தாங்கள் ஒரு ராணுவப் படையை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மக்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்ந்தனர். இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு புதைகுழியானது, அங்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்க ராணுவம் வியட்நாமில் ஹோ சி மின்னின் துருப்புகளிடம் இருந்து எதிர்ப்பை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை, மாறாக போரின் அறநெறி மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அவர்களது சொந்த நாட்டிலேயே ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் வேகம் பெற்று வந்தது." என்று குறிப்பிடுகிறார். கொரில்லா போர் முறைக்கு முக்கியத்துவம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் வியட்நாம் பெண்கள் (கோப்புப் படம்) போர்க்காலம் முழுவதும், ஹோ சி மின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கும் அசாதாரண திறனை வெளிப்படுத்தினார். வில்லியம் ஜே.டைக் தனது 'ஹோ சி மின் எ லைஃப்' (ஹோ சி மின் : ஒரு வாழ்க்கை ) என்ற நூலில், "போரின் போது வடக்கு வியட்நாமின் உறுதியைப் பேணுவதிலும், தேசியவாதம் மற்றும் சோசலிசம் என்ற பதாகையின் கீழ் வியட்நாம் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஹோவின் தலைமை முக்கிய பங்கு வகித்தது. மோதல் குறித்த அவரது புரிதல் மற்றும் கடினமான காலங்களில் அவரது உறுதியான தலைமை ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன." என்று எழுதுகிறார். ஹோ சி மின்னின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் கொரில்லாப் போருக்கு அளித்த முக்கியத்துவமாகும். வியட்நாம் போன்ற காடுகள் சூழ்ந்த நாட்டில் வழக்கமான போர் நடத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். கிராம மக்களுடன் வியட்காங் வீரர்கள் கலந்து அமெரிக்க வீரர்களை திடீரென தாக்கி காடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் மறைந்து விடுவது என்பதே அவரது உத்தியாக இருந்தது. அமெரிக்க வீரர்களுக்கு இந்த வகை போருக்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சோவியத் தலைவர்களுடன் ஹோ சி மின் ஹோ சி மின்னின் வெற்றிக்கு மற்றொரு காரணம் சோவியத் யூனியனும் சீனாவும் வழங்கிய முழு ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாகும். 1957 -ல், ஹோ சி மின் சீனா சென்றார். முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்ற நூலில் , "ஹோ பெய்ஜிங் சென்ற போது, மா சே துங் முதல் சூ என் லாய் மற்றும் லியு ஷாவோ சி வரை சீனாவின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றனர். செருப்பு அணிந்து கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார். அவர் வெளியில் இருந்து மிகவும் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அவரது எலும்புகள் இரும்பைப் போல வலுவாக இருந்தன. 1953 -ல் ஸ்டாலின் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாஸ்கோவில் அவரை ஹோ சி மின் சந்தித்தார்" என்று குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, ஹோவிடம் கேட்டார், இந்த நாற்காலிகளில் ஒன்று தேசியவாதிகளுக்கும் மற்றொன்று சர்வதேசியவாதிகளுக்கும் சொந்தமானது. இவற்றில் எதில் நீங்கள் அமர விரும்புகிறீர்கள்? 'தோழர் ஸ்டாலின், நான் இரண்டு நாற்காலிகளிலும் அமர விரும்புகிறேன்' என்று ஹோ பதிலளித்தார். ஹோவின் புத்திசாலித்தனத்தை ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். ஹோ சி மின் மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வழியாக ரயிலில் ஹனோய்க்குத் திரும்புகையில், தன்னுடன் வந்த மா சே துங் மற்றும் சூ என் லாய் ஆகியோரிடம் இந்த சம்பவத்தை விவரித்தபோது, ஸ்டாலினிடமிருந்து எதையோ பெறுவது சிங்கத்தின் வாயிலிருந்து இறைச்சியைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்." என்று வில்லியம் டைக் எழுதுகிறார். 79 வயதில் மரணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1958-ல் ஹோசிமின் இந்தியா வந்த போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் காட்சி ஹோ சி மின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் அபிமானி. நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை ஹோவை சந்தித்தார். 1954-ல் ஹனோயில் ஒரு முறையும், 1958-ல் டெல்லியில் ஒரு முறையும், ஹோ சி மின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்தபோது சந்தித்தார். அதே பயணத்தின் போது, ஹோ சி மின்னை இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சந்தித்தார். தனது சுயசரிதையான ராசிடி டிக்கெட்டில் அவர், "ஹோ சி மின் என் நெற்றியில் முத்தமிட்டு, 'நாம் இருவரும் வீரர்கள். நீங்கள் பேனாவால் சண்டையிடுகிறீர்கள். நான் வாளால் போரிடுகிறேன்" என்று கூறியதாக குறிப்பிடுகிறார். 1969-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நோய் தீவிரமடைந்தது, செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர். அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். வியட்நாமுக்கு 121 நாடுகள் இரங்கல் செய்திகளை அனுப்பின. அமெரிக்கா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நாள் வியட்நாம் மீது குண்டு வீசுவதை நிறுத்தியது. அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1975- ல் அமெரிக்கா அவரது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgj14l5jqqqo
  6. மனைவியின் விளம்பரப்படத்துக்கே முத்தம் இதில் காமம் கிஞ்சித்தும் கிடையாது உள்ளதெல்லாம் ஒன்றுதான் காதலும் பாசமும் நேசமும் .......! 😍
  7. மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும். அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.
  8. ஓம் .......அதேதான் .........!
  9. தங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது உண்மை தான். நாங்களும் ஆரம்பத்தில் தொட்டுச் சென்றாலும் நாளடைவில் இதற்குள்ளேயே பாயைப் போட்டு படுத்து விட்டோம். இதனால் இங்கு எழுதுபவர்கள் மனைவிமாருடன் அடிக்கடி கடிபட வேண்டி இருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாச்சே. என்ன துறையில் இருக்கிறீர்கள்? இங்கு பல துறைப்பட்டவர்களும் இருக்கிறார்கள். என்னைப் போல சிலர் இளைப்பாறிவிட்டு பேரப்பிள்ளைகளோடு இருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்? உங்கள் துறை சார்ந்த விடயங்களை விபரமாக எழுதுங்கள்.
  10. ஸ்ரீலங்காவின் பின் புலத்தில்... கஞ்சா இலை போட்ட உங்கள் குசும்பு நல்லாய் இருக்கு. 😂 போராட்டம் நடந்த விடுதலைப் புலிகள் காலத்தில் கூட... சிங்களப் பகுதிகளில் இவ்வளவு துப்பாக்கி சூடுகள் நடக்கவில்லை. தமிழீழ தேசியத் தலைவர் காலத்தில் சிங்களப் பகுதி பெரும்பாலான காலங்களில் அமைதிப் பூங்காவாகவே இருந்தது. சிறுபான்மை இனத்தின் உரிமைகளை அடக்கப் போய்... சிங்களம் தனக்குத்தானே ஆப்பை செருகிக் கொண்டது.
  11. இப்ப எனக்கு உங்கள் மேல்தான் சந்தேகமாய் இருக்கு ....... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் சொல்கிறீர்கள் . ...... முன் அனுபவமோ .........! 😂
  12. கருணாநிதி பேரூந்து நிலையம் என்று வைத்துக் கொண்டு… பஸ்சுக்கு ரிக்கற் எடுக்கச் சொன்னால், வடக்கனுக்கு கோபம் வரும் தானே. கருணாநிதி ரயிலுக்கே ரிக்கற் எடுக்காமல் கக்கூசில் ஒளித்து பயணம் செய்யும் ஓசி பிரயாணி. அதே வழியை… வடக்கன்சும் பின்பற்றுவதில் தவறு இல்லையே. 😂
  13. நடத்துனர் : ரிக்கற் எடுப்பா..? வட மாநில இளைஞர் : கியா ( அப்படின்னா ? ) 563K views · 3.7K reactions | திருப்பூர் கலைஞர் கருணாநிதி...திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளகவுண்டம்பாளையம் பகுதிக்கு செல்லும் அரசு நகர பேருந்தில் கந்தசாமி என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல...எங்க பரம்பரையிலேயே ரிக்கற் எடுத்தது கிடையாது
  14. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது. என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம். ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும். இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது. காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள். இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள். ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது. தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர். அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள். தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள். மன்மதன் : நான் அலரி மலர் கணைதொடுப்பனடி – என் ரதியே மானே ரதியே தேனே சிவன் தவசை நான் அழிப்பனடி. ரதி : அலரி மலர் கணை தொடுத்து மன்னா மன்னா சிவன் தபசை நீயழிக்க வேணா வேணா.. ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார். பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும். இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை. சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் . இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது. பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது. கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது. இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது. காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை. காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது. இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை Global Tamil Newsமலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டி...மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப்…
  15. சேதமடைந்த ட்ருஷ்பா குழாய் வழியாக ஜெர்மனிக்கு எண்ணெய் பாய்ந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதாக ரோஸ்நெஃப்ட் ஜெர்மனி கூறுகிறது. ராய்ட்டர்ஸ் மூலம் செப்டம்பர் 4, 2025 இரவு 10:05 GMT+10 செப்டம்பர் 4, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 1, 2022 அன்று ஜெர்மனியின் ஸ்வெட்டில் உள்ள PCK எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் பதப்படுத்தும் வசதிகளை ஒரு காட்சி காட்டுகிறது. REUTERS/Annegret Hilse/ கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் Neftyanaya Kompaniya Rosneft' PAO பெர்லின், செப்டம்பர் 4 (ராய்ட்டர்ஸ்) - சேதங்கள் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் PCK சுத்திகரிப்பு நிலையத்திற்கு ட்ருஷ்பா குழாய் வழியாக எண்ணெய் ஓட்டம் இந்த வார இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுத்திகரிப்பு நிலையத்தின் மிகப்பெரிய பங்குதாரரான ரோஸ்நெஃப்ட் ஜெர்மனி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தம்போவ் பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்தை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியதால், கடந்த மாதம் ட்ருஷ்பா குழாய் வழியாக விநியோகம் தடைபட்டது. ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . வடகிழக்கு நகரமான ஷ்வெட்டில் உள்ள ஜெர்மனியின் PCK சுத்திகரிப்பு நிலையம், மாஸ்கோ உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்ட பின்னர், குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் கசாக் கச்சா எண்ணெய் மூலம் ஓரளவு வழங்கப்படுகிறது. ரோஸ்நெஃப்ட் ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் பர்கார்ட் வோல்கி கூறுகையில், நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கஜகஸ்தானில் இருந்து 120,000 டன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது, மேலும் 2025 க்கு அப்பால் எண்ணெய் இறக்குமதியை விரிவுபடுத்துவது மற்றும் நீட்டிப்பது தொடர்பாக கஜகஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறினார். ஜெர்மன் செய்தி நிறுவனமான DPA, முதலில் நீர்வரத்து திரும்பியதாக அறிவித்தது. எழுத்து: ரேச்சல் மோர், எடிட்டிங்: ஃப்ரீடெரிக் ஹெய்ன் மற்றும் லுட்விக் பர்கர். https://www.reuters.com/business/energy/oil-flows-germany-via-damaged-druzhba-pipeline-normalise-rosneft-germany-says-2025-09-04/
  16. ஹே அம்மாடியோ கையை எடு .. படம்: ஒரே தந்தை (1976) இசை : சங்கர் கணேஷ் பாடியோர் : வரிகள் கண்ணதாசன் அந்த கால கிளுகிளுப்பான பாடல் போல கிடக்கு
  17. வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  18. நன்றி 🙏 முயற்சிக்கிறேன்
  19. வணக்கம் வாருங்கள்
  20. @Newbalance உங்கள் இணைப்புகளை ஏன் நேரடியாக இணைக்க முடியவில்லை? கணனியில் காணொளியை ஓடவிட்டு மேலே வரும் முகவரியை வெட்டி ஒட்டுவது தான் எல்லோரும் செய்யும் முறை. அடுத்த முறை ;- காணொளியை ஓடவிட்டு Share என்று உள்ளதை அழுத்தி அங்கே காட்டும் சுட்டியை வெட்டி ஒட்டுங்கள்.
  21. 1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அரச ஊழியர்களிடம் கேள்விக்கொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற்றதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள், மதகுருமார்களுடன் கலந்துரையாடியும் தகவல்களைப் பெற்றனர். இவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக: சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டமை. சட்ட நிர்வாக சபை அறிமுகம் செய்யப்பட்டமை. மாகாணங்கள் ஐந்தாகக் குறைக்கப்பட்டமை. ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை. இராஜகாரியமுறை நீக்கப்பட்டமை. கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டமை. இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டமை. தேசாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை. அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை. கிராமசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை. என்பவற்றைக் குறிப்பிடலாம். தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள், வரலாறு வழியாக கட்டங்கட்டமாகத் தூக்கிவீசப்பட்ட ஒரு செயற்பாடு நடைமுறையில் நிகழ்ந்திருக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமே தமிழர்களின் விடுதலைப் போராட்டம். இலங்கையில் பிரித்தானியர்களின் கைகளில் இருந்த ஆட்சி அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகவே இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு அறிமுகத்துடன் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து, இலங்கையர்களின் அரசியல் யாப்பு வரலாறு என்பது தமிழ் மக்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கிவீசிய வரலாறாக இருக்கின்றது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் அரைப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புடன் முழுப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புடன் பேரளவு அதிகாரங்களைக்கூட கைவிடுவதாகவும் அமைந்திருந்தது. முதலாவது காலகட்டத்தில் தமிழர்கள் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயரின் கைகளில் இருந்தமையினால் ஒடுக்குமுறைகளைத் தொட்டுணரக்கூடிய சூழலும் இருக்கவில்லை. இதனால் முதலாவது காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத்தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் பேணுவதாக இருந்தது. அன்று தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்களும், தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை, முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். குறிப்பாக அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முதலாவது நபர் சேர். முத்துக்குமாரசாமி. இவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன் ஆவர். இவர்தான் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறியவர். இவரிடம் ஆசிய தேசியவாதம் காணப்பட்டது. இவருடைய மகன்தான் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி. அவர் பண்பாட்டுத்தளத்தில் ஆசிய அடையாளத்தை நிலைநிறுத்திய ஒருவராக விளங்கினார். இரண்டாமவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன். மூன்றாமவர் சேர். பொன் அருணாசலம். இவர் சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரனாவார். கோல்புறூக் சட்டசபை கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்மூலம் இலங்கையில் முதன்முதலாக சட்டசபை உருவாக்கப்பட்டது. இதில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும், 6 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அந்தந்த உத்தியோகங்களை வகிப்பதன் ஊடாக சட்டசபையில் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர். ஐரோப்பியர் – 3 சிங்களவர் – 1 தமிழர் – 1 பறங்கியர் – 1 என்றவகையில் இப்பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. தமிழர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆவார். இவர் சேர். பொன் இராமநாதனின் தாயின் தந்தை ஆவார். தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக இருந்த இவரை இராஜினாமாச் செய்யவைத்த தேசாதிபதி, மக்கள் பிரதிநிதியாக நியமித்தார். உத்தியோகப்பற்ற அங்கத்தவர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார். கோல்புறூக் குழுவினர் இலங்கையின் பன்முகச் சமூகத்தன்மையை அடையாளம் கண்டனர். இதனாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமான வகையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனவாரிப்பிரதிநிதித்துவ முறையை முன்வைத்தனர் எனலாம். உண்மையில் இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும். அந்த அடுத்த கட்டம் என்பது மரபுரீதியாக தனித்தன்மைவாய்ந்த இனங்கள் அதிகாரக் கட்டமைப்பில் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் பங்குபெறுவதாக இருந்திருக்க வேண்டும். 1889 வரை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தமிழ்ப்பிரதிநிதியே பிரதிநிதித்துவப்படுத்தினார். தங்களை தமிழ்ப்பிரதிநிதி பிரதிநிதித்துவப்படுத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1889 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு என தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் ‘காசிம் அப்துல் ரகுமான்’ தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆ. குமாரசுவாமி பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கெருடாவில் கிராமத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்புக்கு அவர் வந்தபோது இவரது பண்புமிக்க நடத்தை, திறமை, வியாபார நுண்ணறிவு என்பனவற்றினால் நகரத்தின் முன்னணித் தமிழர்களின் நன்மதிப்பை விரைவில் சம்பாதித்துக்கொண்டார். 1808 இல், முதலில் இவர் தேசாதிபதி தோமஸ் மெயிட்லண்ட்க்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 1810 இல் ஒரு தமிழரினால் வகிக்கப்படக்கூடிய அதி உயர்ந்த பதவியாகிய தேசாதிபதியின் ‘பிரதம தமிழ் மொழிபெயர்ப்பாளர்’ பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார். குருமக்கலம் அரசியல் திருத்தம் – 1912 1912 ஆம் ஆண்டு குருமக்கலம் அரசியல் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு நான்கு பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். ஐரோப்பியர் இரண்டு, பறங்கியர் ஒன்று, படித்த இலங்கையர் ஒன்று எனத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தலில் கல்வியறிவு உடையோரும், சொத்துடையோரும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் இடம்பெற்றபோது முழு இலங்கையிலும் படித்த இலங்கையர் சார்பில் சேர். பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஓய்விற்காக தமிழ்நாடு, கொடைக்கானல் விடுதியில் தங்கியிருந்த இராமநாதனை வேட்பாளராக நிறுத்த, சிங்கள அரசியல் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்தை ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கே சென்று, அவரைச் சம்மதிக்க வைத்து, அங்கேயே வேட்புமனு விண்ணப்பத்தின் மீது கையொப்பமும் வாங்கிவந்தார் எனக் கூறப்படுகின்றது. இத்தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோ என்கின்ற சிங்கள மருத்துவரோடு போட்டியிட்டு, இராமநாதன் வெற்றிபெற்றார். மார்க்கஸ் பெர்னாண்டோ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கரவா சாதியினராக இருந்தமையினால், சிங்கள உயர் சாதியினர் இராமநாதனையே ஆதரித்தனர். தொடர்ந்து 1916 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் டி.எஸ். ஜெயவர்த்தனா என்பவரோடு போட்டியிட்டு இராமநாதனே வெற்றிபெற்றார். இக்காலத்தின் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை இராமநாதன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் எனக் கூறமுடியாது. அவர் இலங்கை மக்களுக்காக, குறிப்பாகச் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கினார். வெசாக்தினத்தை விடுமுறை தினமாக்கியதில் இவரது பங்கு அதிகமாக இருந்தது. சிங்களமொழியைப் போதனா மொழியாக்குவதற்கு இவர் கடுமையாகக் குரல் கொடுத்தார். சிங்கள – முஸ்லிம் கலவரம் (1915) 1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. கலவரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறுகிய காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவியது. இது, முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இடம்பெற்றமையினால், ஜேர்மனியின் உளவாளிகள் சிங்கள மக்களிடையே இருந்து செயற்படுகின்றார்கள் என ஆங்கிலேயர்கள் கருதினர். ஆகவே இதனை மிகமோசமாக நசுக்கத் தொடங்கினர். குறிப்பாக மது ஒழிப்பு இயக்கத்தில் பங்குபற்றிய பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவும் ஒருவராவார். பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது விடயத்தில் ஆட்சியாளர்களின் மிக மோசமான அடக்குமுறையைக் கண்டித்து சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நீண்ட நேரம் உரையாற்றியது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முதலாம் உலக மகா யுத்த நெருக்கடிக் காலத்தினையும் கவனத்தில் கொள்ளாது, கப்பல்மூலம் லண்டன் சென்று அங்கு பிரதமர், குடியேற்ற நாட்டுச் செயலாளர் என்பவர்களுடன் பேசி, கலவரத்தை உடனே நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார். லண்டனிலிருந்து கப்பலில் இராமநாதன் நாடு திரும்பியதும், துறைமுகத்தில் இறங்கி தனது குதிரை வண்டியில் வீடு செல்லத் தயாரானபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் குதிரையைக் கழற்றி தாங்களே அவரை வீடுவரை இழுத்துச் சென்றனர். சேர். பொன் அருணாசலத்தின் வகிபங்கு 1. சேரிப்புற மக்கள் மத்தியில் பணிபுரிதல் சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரன் ஆவார். பதிவாளர் நாயகமாக இருந்த இவர், 1913 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்று நேரடியாக அரசியலுக்கு வந்தார். அரசியலில் அவர் முதல் தெரிவுசெய்த மக்கள் கூட்டம், கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் அடிநிலை மக்கள்தான். இம்மக்களின் நலன்களைப் பேண தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தை உருவாக்கினார். சேரிப்புற மக்களின் நலன்களை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் சென்ற அவர், லண்டன் மாநகரசபை எவ்வாறு சேரிப்புற மக்களின் நலன்களைப் பேணுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அதனை இங்கு நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். 2. மலையக மக்கள் மீதான அக்கறை சேர். பொன் அருணாசலம் சேரிப்புற மக்களுக்கு அடுத்ததாக, அக்காலத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளான மலையக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டார். மலையக வம்சாவளியினரான பெரிசுந்தரத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் நலன்புரி அமைப்பை உருவாக்கினார். இவ் அமைப்பின் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரிசுந்தரமும் விளங்கினார்கள். மலையகத்தில் நிலவிய மோசமான ஒடுக்குமுறையான துண்டுமுறையை இல்லாது ஒழிப்பதில் இவரது பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. துண்டுமுறை என்பது ‘ஒருவர் தோட்டத்திலிருந்து திருமணம் காரணமாகவோ அல்லது வேறு விடயங்களின் காரணமாகவோ இன்னொரு தோட்டத்திற்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், முன்னர் கடமையாற்றிய தோட்ட நிர்வாகம் குறித்த நபர் நன்னடத்தை உடையவர் என்றும், இவருக்கு கடன் எதுவும் இல்லை என்றும், ஒரு கடிதத்தை எழுத்தில் வழங்க வேண்டும்.’ கடிதம் இருந்தால் மட்டுமே மற்றைய தோட்டம் குறித்த நபரை ஏற்றுக்கொள்ளும். இலங்கையில் வாழும் அடிநிலை மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட காரணத்தினாலேயே இவரை ‘இலங்கையின் சமூக மாற்ற அரசியலின் தந்தை’ என அழைக்கின்றனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்க தலைவர்கள் இவரது கருத்தியலினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தனர். ஏ.ஈ. குணசிங்க தன்னுடைய அரசியல் குரு அருணாசலம்தான் என்பதைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. 3. இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் – (1919 டிசம்பர் 11) சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்று இன்னொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும், இலங்கை மக்களுக்கு உள்ளூர் நிர்வாக சுயாட்சி அதிகாரத்தைக் கோருவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் சேர். பொன் அருணாசலம் முதன்மையாகச் செயற்பட்டமையினால், இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தின்போது இலங்கையில் உள்ள பல்வேறு இனங்களையும் ஐக்கியபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களிடையே சேர். பொன் அருணாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. சிங்கள மக்கள்சார்பாக இலங்கை தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தைச் சேர்ந்த ஈ.ஜே. சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள்சார்பாக யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்தோர்; அம்பலவாணர் கனகசபை தலைமையில் கலந்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்போது, தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு என ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்தது. இரு கோரிக்கைகளையும் ஏற்று, சிங்களத் தலைவர்கள் உத்தரவாதத்தை வழங்கினர். இதுவே தமிழ்த்தரப்பிற்கு சிங்களத்தரப்பு வழங்கிய முதலாவது எழுத்து மூல உத்தரவாதமாகும். மனிங் அரசியல் சீர்திருத்தம் – 1921 1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இது முதன்முதலாக இலங்கையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், மேல் மாகாணம் தவிர, ஏனைய மாகாணங்களுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்ததால் 3 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த மூன்று பிரதிநிதித்துவத்தினுள் ஒரு பிரதிநிதித்துவம், முன்னரே உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இதைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இலங்கை தேசிய காங்கிரஸே பொறுப்பாகாது எனக் கூறப்பட்டது. ஏ.ஈ. குணசிங்க போன்ற சில தலைவர்கள் இதில் சமரசத்தில் ஈடுபட்டு, தமிழ்த்தரப்பிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உடன்பாட்டைக் கொண்டுவந்தனர். இதை நம்பி சேர். பொன்னம்பலம் அருணாசலம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரசாங்கச் செயலகத்திற்கு சென்றார். அவர் செல்ல முன்னரே, மூன்று வேட்பு மனுத்தாக்கல்களும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அருணாசலம் மிகவும் அதிருப்தி அடைந்தார். “பிரமாணம் பிரமாணமாக இருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் அதை மீறிவிட்டனர். எனவே இவர்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாது” எனக்கூறிவிட்டு, இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இந்த வெளியேற்றத்துடன் தமிழரசியல் வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்துவிட்டது எனலாம். https://www.ezhunaonline.com/the-period-from-1833-to-1921-tamil-leaders-and-the-ceylon-national-congress/
  22. https://youtu.be/P3J3_qoMRN4?si=A4_xwabhfWr8ha5a இப்படி ஓர் தாலாட்டு பாடவா
  23. இது அதிசயமல்லவே? ஒரு நாட்டில் பிறந்த குழந்தையை பிரஜையாக ஏற்றுக் கொள்வதா என்ற விடயத்தில், இரு வகையான சட்ட முறைமைகள் இருக்கின்றன. ஒன்று: "jus soli (right of soil)" எனப்படும் பிறந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட பிறப்புரிமை (birthright citizenship). மற்றையது, பெற்றோரின் பிரஜாவுரிமையை அடிப்படையாகக் கொண்ட "jus sanguinis (right of blood)" என்ற முறை. இதில் இந்தியா பின்பற்றும் முறை அனேகமாக பெற்றோரின் பிரஜாவுரிமையைக் கொண்டு குழந்தையின் பிரஜாவுரிமையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியர்களுக்கு நிகரான உரிமையை எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கோணத்தில், இதை உங்கள் போன்றோர் எதிர்பார்ப்பது இன்னும் அதிசயம்! "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே" என்று முழங்கும் MAGA ட்ரம்ப் விசிறியாக இருக்கிறீர்கள். அதே ட்ரம்ப், அமெரிக்காவில் இருக்கும் jus soli முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறார். இதில், இங்கே பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளே இரண்டாம் தரப் பிரஜைகளாக மாறும் ஆபத்து இருக்கிறது. இதையெல்லாம் கடந்து ட்ரம்ப் ஐயாவை மோகித்த படி, இந்தியா இலங்கைத் தமிழர்களை பிரஜைகளுக்கு சமமாக நடத்த வேண்டுமென்று எப்படிக் கேட்கிறீர்கள்😂?
  24. வணக்கம் ரதன், வாங்கோ. 🙏 உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. 🙂
  25. மிகவும் அருமையான பகிர்வு ......... ! எனது குடும்பம் இங்கு வந்த புதிதில் பிள்ளைகள் சிறுவர்கள் . ......மகள் (8) மகன் (4) அவர்களை பாடசாலையில் சேர்த்திருந்தோம் .....ஒருநாள் அவர்களின் ஆசிரியை சொன்னார் இவர்களுக்கு சிறுவர்களுக்கான கார்டடூன் கதைகள் உள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி தன்னிடமிருந்த ஓரிரு புத்தகங்களையும் தந்திருந்தார் . ...... நானும் ஜம்பமாய் நகரில் இருந்த ஒரு பெரிய புத்தகக் கடையில் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் சில புத்தகங்களை வாங்கினேன், அவர்களும் எமது பெயர் விலாசங்களையும் எழுதிக்கொண்டு அனுப்பி வைத்தனர் . ..... பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....பின்பு எமது சோசியல் பெண்மணியுடன் சென்று சொல்லி அதை நிறுத்தி வைத்தேன் . .....! 😀
  26. கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்
  27. யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.