Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31956
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3049
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/23/25 in all areas

  1. 6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
  2. டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் - பிமல் ரத்நாயக்க 23 Sep, 2025 | 03:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) காதர் மஸ்தான் எம்.பி. 27 2இன் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான வசதிகள்செய்துகொடுக்கப்படும். அதேபோன்று பாடசாலை வாகனங்கள், காரியாலய வாகனங்கள், பஸ் வண்டிகளை பரிசோதனை செய்யுமாறு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பரிசோதகருக்கு ஆலாேசனை வழங்க இருக்கிறோம். எல்லையில் இடம்பெற்ற மோசமான பஸ் விபத்தின் விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறோம். அதனை யாருக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மலையக பகுதிகளில் வளைவு பாதைகளில் அங்கு பாதுகாப்பு வெலி அமைப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறோம். அதேபோன்று அனைத்து புகையிரத நிலையங்களிலும் விசேட தேவையுடையவர்கள் பயணிப்பதற்கு வசதி செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுதொடர்பில் நாங்கள் எமது கொள்கையை நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம். அதன் பிரகாரம் புகையிரத நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட தேவையுடைவர்கள் பயணிக்க முடியுமான வசதிகளை மேற்கொள்வோம். அதேவேளை, 2020 ஆம் ஆண்டும் 5.2 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பபடடுள்ளன. அதன் மூலம் மொத்த வருமானம் 3.0 பில்லியன் ரூபாவாகும். 2021இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மொத்த வருமானம் 3.2 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று 2022இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அதன் மொத்த வருமானம் 3.3 பில்லியன் ரூபாவாகும். 2023இல் 5.7 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற மாெத்த வருமானம் 4.3 பில்லியன் ரூபா. 2024இல் 5.799 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் 4.8 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. அத்துடன் வாகன புகை வெளியேற்ற பரிசோதனைகளின்போது அரச வாகனம் தனியார் வாகனம் என பிரித்து கணக்கிடப்படுவதில்லை, பொதுவாக வாகனங்களின் எண்ணிக்கையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024இல் 4565 இராணுவ வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225860
  3. ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன் இடையிடை வந்து பார்க்கிறேன் சீமான் திரியை பார்க்க வேணும் போல இருந்தது எல்லோரும் கோஷசானுடன். இணைந்து சீமானை கழுவி ஊத்துகிறார்கள் .....உங்கள் ஐனதிபதி எப்படி ?????? 😂
  4. தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............
  5. திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்! திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448085
  6. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள். மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள். அறிவியல் என்ன சொல்கிறது? எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும் இது மட்டும் இல்லை. நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன. வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது. "இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன். குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன். தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார். இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும். முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும் "மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன். "ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்." இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. தூக்கத்தின் நன்மைகள் இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது. இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை. அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன? ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம். ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது. "நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன். உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது. "நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05918r470do
  7. சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் September 21, 2025 11:26 am 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்… அ.நிக்ஸன்- வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்ற கடும் தொனியையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தினார். சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர். சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸ்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது. சுவிஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிஸ்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர். சிங்கள தமிழ் பிரதிநிதிகளின் நியாயமான நீண்ட விளக்கங்களை செவிமடுத்ததாக இக் கட்டுரையாளருக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார். சுவிஸ்லாந்து அரசியல் நிர்வாக முறைமை பற்றிய விளக்கங்களின் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுஸே் பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர். கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர். ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர். இக் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால், அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார். ஆனால், இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர். அதேநேரம், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார். அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது, அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார். அதேநேரம் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார். சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர். ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர். அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார். இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார். அதேவேளை மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார். சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார். 2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளியிப்படுத்தியிருந்தார் எனவும், ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார். இக் கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார். எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது. அதேநேரம் இக் கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://oruvan.com/switzerland-seminar-what-happened/
  8. கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே
  9. அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!
  10. எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂
  11. அநாவசியமாக காடுகளை அழிக்கக்கூடாதாம் அண்ணை!
  12. படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮 அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂
  13. நான் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் குளிப்பேன்.சொன்னால் நம்பவா போகின்றீர்கள்.
  14. அததெரண கருத்துப் படங்கள்.
  15. 10) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம்(சுழிபுரம் கிழக்கு, ஏழாலை வடக்கு) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸமா றுக்மன் குடும்பம் 40000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 23/09/2025 இன்று வரை மொத்தமாக 360070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.
  16. அதை விட திரள்நிதி சேர்தது அனுப்பினால் வாற கொமிசன் உபரி கூட வரும். 😂
  17. அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁 அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
  18. இதன் அடுத்த கட்டமாக இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர்பானம், சிற்றுண்டி எல்லாம் வழங்கப்படுமோ?
  19. வணக்கம் ரதன். உங்களை மிக்க மகிழ்வுடன் வரவேற்கின்றேன். தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் எழுதுங்கள்.............❤️.
  20. கருணாநிதி,எம்ஜிஆர் தொடக்கம் இதர சிறு அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழர் அரசியல் செய்தவர்கள் தான். சினிமாக்காரர்கள் ,தொலைக்காட்சிகள் கூட ஒரு சில லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையில் எடுக்கின்றார்கள். எடுக்கிறார்கள். அது பற்றி யாருமே கொதிப்பதில்லை. அது ஈழத்தமிழர் பிரச்சனை உலகிற்கு தெரியப்படுத்துகின்றோம் என வாதிட ஒரு குழு இருக்கின்றது. இருப்பினும் சீமான் அரசியலில் மட்டும் மூன்று முடிச்சு போட்டு குத்தி முறியும் ஒரு சில புலம்பெயர் ரமிலர்கள் ஏன் எப்படி எதற்கு என புரியவில்லை?
  21. இது ஒரு சுமையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகின்றது. இந்த மாதிரியான அச்சொட்டான ஞாபகசக்தி இல்லாமல், ஒருவருக்கு இருக்க வேண்டிய சாதாரண ஞாபகசக்தியை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலே சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. சில வருடங்களின் முன், 30 வருடங்களின் பின் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அவன் கடைசியாக ஊரில் இருந்த போது அவனிடம் ஒரு சிறிய கீபோர்ட் இருந்தது. மேற்கு நாடுகளில் எங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கிக் கொடுக்கும் பொம்மை, பிளாஸ்டிக் கீபோர்ட் போன்றது அது. அதில் சில அடிப்படை இசைத் துணுக்குகளை உருவாக்கலாம். அப்பொழுது அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து 'ராஜா................. ராஜாதி ராஜா இந்த ராஜா.......................' பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. நண்பன் அதைப் போன்ற ஒன்றை அவனிடம் இருந்த கீபோர்ட்டில் உருவாக்கி, ஒரு நாள் எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தான். நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான். அவனிடம் அப்படி ஒரு கீபோர்ட் இருக்கவும் இல்லை என்றும் சொன்னான். ஆனால் அந்த ஞாபகம் இன்றும் அப்படியே என்னிடம் இருக்கின்றது. கடல், மிகச் சிறிய திறந்த கடற்கரை, அதையொட்டி பிரதான வீதி, வீதியின் இந்தப் பக்கமாக அவனின் வீடு. முன்பக்கம் தலைவாசலும், சுற்றுச் சுவரும் உள்ளது அவன் வீடு. முற்றம் தாண்டிச் சென்றால், வீட்டின் வலக்கை பக்கம் இருக்கும் சிறிய அறையிலேயே நாங்கள் அன்று இந்தப் பாடலை கேட்டோம். பின்னர் சுனாமியில் அந்த அறை உடைந்து போயிருந்தது.
  22. இது ஒரு நல்ல விடயம். ஆனால் இஸ்ரேல் இதைக் கடுமையாக எதிர்க்கும்.இன அழிப்புக்கு எதிராகப் போராடும் தேசங்களுக்கு இது முன்மாதிரியாக அமையும்.பிரித்தானியா அங்கீகரித்தாலும் பிரித்தானிய ஊடகங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாக இருப்பதாக அறிக்கையிட்டுள்ளன. அவர்கள் எப்போதும் அப்படித்தான்.அமெரிக்கா விரும்பாத விடயத்தை ஊக்குவிக்க மாட்டார்கள். இதனைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தாம்சார்ந்த நாடுகளிடம் எமது சமஸ்டி தொடர்பிலான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  23. 🤣................ ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣. 👍.......... சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது. தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.
  24. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் ........! 😍
  25. புலர் அறக்கட்டளையின் வருடாந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 18/09/2025 எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த வருடத்தில்(2024) இருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை நடத்துகின்றோம். 10/10/2025 எமது புலர் அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு நிறைவுநாளில் செய்ய இருந்த நிகழ்வை மழைக்கு முன்பே வழங்கினால் மரக்கன்றுகள் வேரூன்றி வளர உதவியாக இருக்கும் என்ற மரக்கன்று உற்பத்தியாளரான நியூ லங்கா பாம் உரிமையாளர் திரு செல்வராஜா ஐயாவினுடைய ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் வழங்கி இருந்தோம். இன்று வரை எமக்கு தொடர்ச்சியாக உதவி வரும் 134 நன்கொடையாளர்கள் மற்றும் தனியாக(மலசல கூடம் கட்டியது 2024, வீட்டுத்திட்டம் பூரணப்படுத்தல் 2025) பல உதவிகளைச் செய்த நன்கொடையாளர்கள் அத்துடன் CHULIPURAM GREENLAND FOUNDATION, சைவ அறப்பணி நிதியம், I3 SOFTWARE SOLUTIONS (pvt) ltd Colombo, பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள், வட்டுக்கோட்டை அரிமாக்கழகம், CHULIPURAM BOOLOGADEVI TRUST தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இவர்களின் தொடரும் ஆதரவினால் எமது புலர் அறக்கட்டளையானது சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்கள் சிரம் தாழ்த்தி எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இயற்கைப் பண்ணையாளர் திரு சிவசுப்ரமணியம் ரவிசங்கர் அண்ணாவும் அவருடைய பாரியார் திருமதி ரவிசங்கர் இருவரும் எமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருக்கிறார்கள். 24000 ரூபா பெறுமதியான 60 தேசிக்கன்றுகளை வழங்கி உதவியுள்ளார்கள். இருவருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இலவசமாக கடந்த வருடமும்(50 தென்னங்கன்றுகள்) இந்த வருடமும் தென்னங்கன்றுகளை(60 கன்றுகள்) பெற்று தந்த எமது நிர்வாகியும் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள். அத்துடன் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பத்தினர் மற்றும் செயலாளர் திரு மோகனறூபன், திரு இராமலிங்கம், திரு சிறீதரன் ஆகியோருக்கு எமது நன்றிகள். ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
  26. நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான் அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும் வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில் அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும் பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும் பாவம்.. பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம் "கால் வலிக்குதுப்பா" கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில் பிள்ளை சொன்னபோதெல்லாம் தூக்கிக்கொண்டிருக்கலாம் என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே அன்போடு ஒரு வேளை சமைத்து பரிமாறியிருக்கலாம் ஏதோ ஒரு சண்டையில் வார்த்தைகள் முற்றிய தருணத்தில் கையிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம் காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் அக்கறையோடிருந்திருக்கலாம் பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம் சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம் அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்.. அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய் வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம் ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின் சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ? புரண்டு படுக்கும் போதெல்லாம் உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும் மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள் நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும் ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர் உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ? நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.