Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12678
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1223
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11881
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/02/25 in all areas

  1. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பாய் - இந்தியா 341/5 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39, 41, 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 81).
  2. 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாப்பிரிக்கா வீரர் (Laura) சரியாக பதில் அளித்தவர் - ஈழப்பிரியன் 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் 2) ஏராளன் - 61 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 61 புள்ளிகள் 4) ரசோதரன் - 59 புள்ளிகள் 5) சுவி - 57 புள்ளிகள் 6) கிருபன் - 57 புள்ளிகள் 7) புலவர் - 57 புள்ளிகள் 8) வீரப்பையன் - 56 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 55 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 11) வாதவூரான் - 53 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 13) வசி - 51 புள்ளிகள் 14) கறுப்பி - 50 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 77).
  3. தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃 ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃 அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃 அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪 கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂
  4. இன்னும் 6 கேள்விகளுக்கு புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 15) வழங்கவேண்டும். போட்டிகள் ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு நான் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரம் போட்டியினை பார்க்க கூடியதாகவும் இருந்தது. உடனுக்குடன் புள்ளிகள் வழங்க கூடியதாகவும் இருந்தது. மீண்டும் சிட்னிக்கு வந்து விட்டேன். வேலைக்கு செல்ல புகையிரதத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதிகாலை 9.16. மிகுதி புள்ளிகளையும் இன்று இரவுக்குள் வழங்குவேன்
  5. இந்தியா இனி தோற்கேலாது!😎
  6. 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 341/5 10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) புலவர் - 59 புள்ளிகள் 6) ரசோதரன் - 59 புள்ளிகள் 7) வீரப்பையன் - 58 புள்ளிகள் 8) கிருபன் - 57 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 57 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 56 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 13) கறுப்பி - 52 புள்ளிகள் 14) வசி - 51 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 39, 41, 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 79).
  7. அன்று, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்; கிழக்கின் நிலைமைதான் வடக்கிலும் நிகழ்ந்திருக்கும். கோவில்களில் மீன் சந்தையும், கருவூலங்களில் மாட்டிறைச்சிக்கடையும் அமைந்து, பல முஸ்லீம் கிராமங்கள் தோன்றி, பலர் முஸ்லிம்களாக மாறியிருப்பர். அப்போ பெரிய சந்தோசம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள், மீண்டும் மன்னிப்பு கோரி மீள குடியேற அழைத்தார்கள். இவர்கள் அப்படியா? பிச்சைக்காரனின் புண்போல அப்பப்போ பிரிச்சுக்காட்டி, வெவ்வேறு புனைகதைகளை புனைந்து, எந்தக்காலத்திலும் நல்லிணக்கம் ஏற்படாமல் பாத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதே அவர்கள் தம் இருப்பையும் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இப்போ அதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது என்றே நான் நினைக்கிறன். சரி, புலிகள் இல்லாத காலத்தில் ஏன் இவற்றை ஆண்டுதோறும் புதுப்புதுக் கதைகள் புனைகிறார்கள்? அவர்கள் உயிரோடு இல்லாதபடியால் தாம் நினைத்தபடி கதை எழுதலாமென்றா? "உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்."
  8. இவ்வளவு நாள் விடுமுறையில்தானே இருந்தேன். யாழில் இணைந்தது 2005 இல். 2006 இல் இருந்து 2012 வரை இருந்த ஊர் புதினம் பகுதி பார்த்தீர்கள் என்றால் ஒரு நாளுக்கு குறைந்தது 20, 30 கருத்துக்கள் என்று வேலை செய்கிற இடத்தில் இருந்து எழுதியிருப்பேன். நாளுக்கு 50 க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதிய காலமும் இருந்தது.
  9. ஒரு நாள் லீவு போட்டால் என்னவாம். @கிருபன் அலுவலக நேரத்திலேயே யாழில் அதிக வேலை செய்வார். அவரைப் பார்த்து பழகுங்க.
  10. 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? தென்னாப்பிரிக்கா 69 ஒட்டங்கள். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 83).
  11. அந்த உத்வேகம்தானே விளையாட்டு தரும் போதை. இப்பிடி எத்தினை போட்டியைப் பார்த்திருக்கிறம். அலாரம் வைச்சு எழும்பி, வீட்டில திட்டுவாங்கி, ஒரு வேலை சொன்னா செய்யேலாது, விளையாட்டு பாக்கமட்டும் எழும்பிறது என்று எல்லாம் சொல்லக் கேட்டு கேட்டு......
  12. இவ்வளவு காலமாக, அவுஸ்ரேலிய மகளிரின் ஆதிக்கத்தைப் பார்த்து பார்த்து, ஒரு பொறாமையே வரும். எப்படி இந்தப் பெண்கள் இப்பிடி விளையாடுகிறார்கள். நம் பெண்கள் அந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் யோசித்திருக்கிறேன். அதுவும் எங்கள் நாடுகள் போன்று பெண்களை சமமாக நடத்தாத இடங்களில், அவர்களுக்குத் தகுந்த வசதிகளை குடுக்காத இடத்தில் இருந்து எல்லாவற்றையும் தகர்த்து, இந்தியப் பெண்கள் சாதித்தது ஒரு பெரும் பாய்ச்சல். அவர்களும் நன்றாக விளையாடத்தொடங்கி கன காலம் ஆகிவிட்டது. ஆனாலும் அவுஸ்ரேலியாவை முந்த முடியவில்லு. 2025ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றி விட்டது.
  13. என‌க்கு ஆர்வ‌ம் அந்த‌க் கால‌ம் தொட்டு க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு தான் நாங்க‌ள் ந‌ன்றி சொல்ல‌னும் போட்டிய‌ திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்தின‌துக்கு அதிக‌ குப்பையை இதுக்கை கொட்டின‌ பெருமை எங்க‌ இர‌ண்டு பேருக்கும் தான்😁😁😁😁😁😁😁😁😁😁😁.............................
  14. கனபேர் போட்டியைப் பார்த்திருக்கிறீர்கள். மகளிர் கிரிக்கட்டுக்கு இவ்வளவு ஆர்வம் உள்ளது. மகிழ்ச்சி.
  15. தொட‌ர்ந்து இர‌ண்டு முறை அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் பின‌லுக்கு வ‌ராம‌ வெளியில் போன‌து ம‌கிழ்ச்சி...................... தொட‌ர்ந்து இவை வெல்வ‌தை பார்த்து ச‌லித்து விட்ட‌து இங்லாந்தில் ந‌ட‌க்க‌ இருக்கும் அடுத்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு இந்தியா இப்ப‌வே த‌யார் ஆக‌னும் அந்த‌ கோப்பையும் வென்றால் 20ஓவ‌ர் கோப்பையும் வென்ற‌ அணி என்ர‌ பெருமையும் இந்தியாவுக்கே🙏🥰........................................... @ரசோதரன் ஜ‌க்க‌ம்மா ஜ‌க்க‌ம்மா தான் லொள்😁.....................
  16. எங்கள் பொட்டு வைச்ச தங்கம் தீப்தி
  17. India Women 298/7 South Africa Women (28/50 ov, T:299) 141/4 SA Women need 158 runs from 22 overs. Current RR: 5.03 • Required RR: 7.18 • Last 5 ov (RR): 17/0 (3.40) அண்ணை, உங்காளு 72 தொடர்கிறாவே!
  18. பையா கோட்டு சூட்டு போட்டு கப் வாங்க சிரித்துக் கொண்டு வரவும்.
  19. ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
  20. நல்ல தொடக்கம் இந்தியாவுக்கு. நேர் கோட்டில பந்து வருது. கொஞ்சம் வேகமாப் போட்டால், பந்து அப்பிடியே உள்ள திரும்பும். 4 பரிமாற்றங்களில் 12 ஓட்டங்கள். இப்போ ஒரு விக்கட் லிழுந்தா நல்லாயிருக்குமே.
  21. பிட்ச் ரிப்போட்(கூகிள் மொழிபெயர்ப்பு): நல்ல காற்று வீசுகிறது, அது மேகங்களைத் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், 79 சதவீத ஈரப்பதத்துடன், இன்னும் மிகவும் ஈரமானதாக இருக்கிறது. மைதானம் சதுக்கத்தின் மையத்தில் உள்ளது. 66 மீட்டர் நேராக அடிக்க, 56 மீட்டர் மற்றும் 57 மீட்டர் சதுர பவுண்டரிகள். மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், மூடியின் கீழ் இருக்கும் இந்த மைதானம், கப் மற்றும் ரேணுகா போன்ற ஸ்விங் பவுலர்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என்று மெல் ஜோன்ஸ் நினைக்கிறார். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியைக் கண்டதைப் போன்றது, இருப்பினும் இந்த ஸ்ட்ரிப் கடைசியாக இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மைதானத்தில் பந்தை சுழற்றச் செய்த சில சுழற்பந்து வீச்சாளர்களில் சரணியும் ஒருவர், மேலும் அவர் எவ்வளவு விக்கெட்டுகளை பெறுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
  22. 298 உடன் முடித்துக் கொண்டார்கள். தென்னாபிரிக்கா துரத்த முடிவெடுத்தவை. என்ன செய்யப் போகிறார்கள். லோராவும் நாடீனும் போட்டியை மாற்றக் கூடியவர்கள். இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்கள் வேலையைக் காட்டவேண்டியதுதான்.
  23. @ரசோதரன் அண்ணா நான் சொன்ன‌து இல‌ங்கை அணியில் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ம‌க‌ளிர் சிற‌ப்பாக‌ விளையாடுகின‌ம் அவை அடுத்த‌ வ‌ருட‌ம் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடுவின‌ம் , இல‌ங்கை கிரிக்கேட்டில் அர‌சிய‌ல் சாய‌ம் இல்லாட்டி , இப்ப‌ இருக்கும் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ விட‌ ப‌ல‌மான‌ இல‌ங்கை அணிய‌ உருவாக்க‌லாம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்................... இந்தியாவில் திற‌மையான‌ ம‌க‌ளிர் அதிக‌ம்............... ஆனால் 15பேரை தான் உல‌க‌ கோப்பைக்கும் ச‌ரி ம‌ற்ற‌ தொட‌ருக்கும் தெரிவு செய்ய‌லாம்.............................
  24. யாரங்கே ! அந்த சர்க்கரை டப்பாவை கொண்டு வா பையனின் வாயிலே கொட்டனும் ........!
  25. இந்தியா கோப்பை வெல்லுது ஜ‌க்க‌ம்மா முன் கூட்டியே சொல்லி விட்டா................... ந‌ம்ம‌ அண்ண‌ன் ர‌சோத‌ர‌னை நினைக்க‌ தான் சிரிப்பாய் இருக்கு😁😁😁😁😁😁😁........................... @ரசோதரன்
  26. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .........நடிப்பு நாகேஷ் ......! 😍
  27. அப்போது என்ஜினியராக உதயகுமார் இருந்தவர்.....அவர் உயரமானவர் . .....இப்போ வேறு நாட்டில் இருக்கிறார் என நினைக்கிறேன் . ...... அநேகமாய் அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை என்று அதைச்சுற்றியுள்ள ஆட்கள்தான் வேலை செய்தவை ........அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!
  28. வாத்தியார் நீங்கள் அந்தப்பக்கமா . ........ நான் காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக இருந்தவர் , அதேநேரத்தில் இன்னொரு தியாகராஜ பார்லிமென்ட் எம் . பி என்று நினைக்கிறேன் இருந்தவர் )வேலை செய்தனான் .......! கோஷன் - சே அவர்களே அது ஐந்துகண் உள்ள மதகுதான் ........அதற்கு முதலே வழுக்கியாறு இருந்திருக்கு . .....அதற்குத்தான் மதகு கட்டியது . ..... ஆணைக்கோட்டை எண்ணை உருட்டுற சில குடும்பங்கள் என் நண்பர்கள் + சீனியர்கள் . ..... அவர்களுடன் நான் சக மெக்கானிக்காக இருந்திருக்கிறேன் . .........அவர்கள் வழி வழியாக வரும் கதை சொல்லித்தான் எனக்குத் தெரியும் ........அவ்வளவுதான் . .......! 784..... கல்லுண்டாய் வெளியால் செல்வது . .....! 786 .....ஆணைக்கோட்டை நவாலியால் செல்வது . ......! 782..... மானிப்பாய், சங்கானை, சுழிபுரம் , மூளாய் வழியாக செல்வது ......!
  29. டாக்டர்: சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...? நோயாளி: கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்... ம்... அப்புறம்...? அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா உட்க்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர்... அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே...? ஆமா டாக்டர்...! அப்புறம்... லேசா தல சுத்திருக்குமே..? இல்ல... கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்... ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி உட்க்கார்ந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே...? அய்யோ... ஆமா டாக்டர்.... அப்புறம்... அதே சோபால சாய்ஞ்சாப்பல படுத்து தூங்கணும்னு தோனிருக்குமே...? ஆமா டாக்டர்... ஆமா டாக்டர்.... அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றீங்களே.... அப்புறம்... சோபால சரிஞ்சி படுத்தப் பிறகு நெஞ்சில யாரோ ஏறி மிதிச்சா மாதிரி இருந்திருக்கும்... பயந்து போய் என்ன பார்க்க வந்துட்டீங்க ரைட்டா...? டாக்டர்ர்ர்.... நீங்க ஜீனியஸ் டாக்டர்... எப்படி டாக்டர் அப்படியே சொல்றீங்க...? இந்த சிம்டெம்ஸ்லாம் எனக்கும் இருக்கு... ஐய்யோ டாக்டர் நீங்களும் கிரகணம் பிடிச்சிருந்த டைம்ல சாப்புட்டுட்டீங்களா...? இல்ல... உங்க வீட்டு 'பொங்கலை' முன்ன ஒரு தடவ நானும் சாப்ட்டிருக்கேன்...! Pulsar Thiyagu 😂 🤣
  30. எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. அதாவது -- இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது. ஏனெனில் -- ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர். பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான் காரணம்... இப் பின்னணியில் --- மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது. ஆனால் -- சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் - ஊழல்கள் தெரியும். இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது. இந்த நிலையில் -- பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன. ஆனாலும் --- இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும். இப்பின்னணியில் -- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை. புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது. அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது. ஆனால் -- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர். இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர். அதேநேரம் -- தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். குறிப்பாக - தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் -- கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது. ஆனாலும் -- சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர். இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது. ஆனாலும் -- மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது 'ஏக்கிய இராச்சிய' என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு. புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் -- வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார். தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது. சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான். அதாவது -- இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  31. ஒரே கேள்வியை எத்தினை வழமா வளைச்சு வளைச்சுக் கேட்டாலும் ஒரே பதில்தான் 🤣
  32. எங்கள் ஊரில் இருந்து இ போ சவில் எந்தப்பாதையால் யாழ் நோக்கிச் சென்றாலும் நாங்கள் இங்கே வழுக்கித்தான் 😂செல்ல முடியும் 782 784 785 786
  33. Isai Sangamam · Nandha Kumar · 🌹" சாண்டோ சின்னப்பா தேவர்.., எம்ஜிஆர்.., டி.எம்.எஸ்.., எம்.எஸ்.வி ஆகிய திரை ஜாம்பவான்களின் அழகிய புகைப்படம் 📷" Voir la traduction .........!
  34. கோப்பையை தூக்கும் அணி என்பதிலிருந்து அதிக ஓட்டம், விக்கெட், இத்யாதி கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவுசை மட்டுமே தெரிவு செய்திருக்கின்றேன் இந்தியாவை அரையிறுதியிலேயே கழட்டி விட்டுட்டேன் அவுசை நம்பி மவுசு போனாலும் பரவாயில்லை 😂 முதலுக்கே மோசம் போயிட்டது😇
  35. ரகசியப்பொலிஸ் .........! 😂
  36. கடைசி வரையும் உங்கள் அனுபவத்தைச் சொல்லேலையே. 😁
  37. குறித்த ஒரு மதத்தின் பெயரால் நான் கூட அவரை ஒரு குழுமமாக பார்த்துள்ளேன், இது எமது பார்வை தவறு, ஒரு இரண்டு வார காலத்திற்கு முன்னர் எனது வங்கிக்கு சென்றிருந்தேன், வங்கியில் எனது கணக்கின் பெயர் மாற்றத்திற்காக. அங்கு புதிதாக ஒரு இளைஞ்சருக்கு அந்த செயற்பாட்டை கொடுத்திருந்தனர், அவருக்கு பயிற்சியாளர் என்பதால் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் ஒரு தாடி வைத்த இந்திய தோற்றம் உள்ள 🤣 ஒருவரை அணுகினார், அவருக்கு அந்த நடைமுறை பற்றிய புரிதல் இல்லாமல்; வர்த்தக ஒருங்கிணைப்பு அமைப்பிடம் பேசினீர்களா என கேட்டார் (அந்த அமைப்பினால் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டாயிற்று, ஆனால் வங்கிக்கணக்கில் மாற்றப்படவில்லை) அதனை கூறிய போது அது புரியாமல் அந்த இளைஞ்சரிடம் கூறினார் " இந்த மனிதர்களை நம்பாதே, பின்னர் நீதான் சிக்கலில் மாட்டிவிடுவாய் என்றார்", அவர் கூறியது என்னை பாதித்தது பின்னர் வேறு வங்கியில் கணக்கினை ஆரம்பித்துள்ளேன்.
  38. என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.
  39. இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன். இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை: "தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது" முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர் இது நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம். சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:
  40. கணவன் யாரென்று மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தெரியும்... மனைவி யாரென்று கணவன் பணமில்லாமல் இருக்கும் போது தெரியும்... பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் முதுமை அடைந்த பின் தெரியும்... அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாரென்று பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இல்லாத போது தெரியும்... நண்பர்கள் யாரென்று இடர்,கடினம் வரும் போது தெரியும்... உற்றார்,உறவினர்கள் யாரென்று நீ கடன் கேட்கும் போது தெரியும்... எல்லா உறவுகளினதும் உண்மை எப்போது தெரிய வருமென்றால்.....அவர்களுக்கு உன்னால் எந்த லாபமும் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் வரும்.
  41. AI....... பொய்களை உண்மையாக்காத வரைக்கும் அருமை. சில மாதங்களுக்கு முன் ஒரு AI காணொளி பார்த்தேன். அதுவும் அருமையாக இருந்தது. கவிதை இணைப்பிற்கு நன்றி உடையார்.
  42. இலங்கையில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் என்பது 1977 முன்பு பாரியளவில், அதாவது நாடு தழுவிய ரீதியில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் சில தகராறுகள் இருந்தன. அவை அவ்வப்போது கிளம்பும் போது இரு பகுதியினரிலும் சிவில் சமூகத்தினர் பேசி அதை முடிவுக்கு கொண்டுவருவர். இது கிட்டத்தட்ட யாழ்பாணத்தில் அதே காலப்ப்பகுதியில் அவ்வப்போது கிளம்பும் சாதி சண்டைகள் போன்றதாக இருக்கும். ஆனால் இது இருபகுதி மக்களிடையே பாரிய விரிசலாக, ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டதாக மாறியது ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றிய பின்னரே. வடக்கு மகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவம் இரு பகுதி மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதோடு தமிழர்களின் போராட்டதிற்கும் இதனால் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது. பிள்ளையார் பிடிக்க போக அது குரங்காக மாறிய கதையாக ஆயுத போராட்ட தேவைக்காக முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களது சொத்துகளை அபகரித்த செயல் அதே விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக பலத்த அடியை கொடுத்தது என்பதை உலகளாவிய அரசியல் பார்வையற்ற புலிகளால் அன்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசுக்கு தமிழர் போராட்டத்துக்கு எதிரான பரப்புரை செய்ய உதவியையே அன்று புலிகள் செய்தனர். ஆனால் இன்று கூட இதை புரிந்து கொள்ளாதவர்களாகவே தமிழ் அரசியலில் பலர் உள்ளார்கள். முஸ்லீம்களை வெளியேற்றியது மாத்தயாவின் தவறான அரசியல் தீர்மானத்தால் என்றும், கிழக்கில் அனைத்துக்கும் கருணா தான் காரணம் என்றும், பிரபாகரன் ஒன்றுமே அறியாத அப்பாவி என்றும் இக்கட்டுரை கூறி இருந்தால் இங்கு கருதெழுதிய பலர் இதனை ஆதரித்திருப்பார்கள். கட்டுரை எழுதிய இக்பாலுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கும் இவர்கள் பிரபாகரனின் வக்கீல்களாக இங்கு ஆஜராகினார்களே தவிர நாட்டின் இனப்பிரச்சளைக்கு தீர்வு காணவேண்டும் என்றோ எதிர்கால தமிழ் சந்ததி இலங்கையில் மகிழ்சியாக இனப்பாகுபாடற்ற ஒரு தேசத்தில் வாழவேண்டும் என்ற அக்கறையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியல் போக்கே என்பிபியை நோக்கி மக்கள் வாக்குகள் திரும்பக் காரணம். யுத்தம் காரணமாக பாரிய வீழ்சசியடைந்தி ருந்த தமிழர் சனத்தொகை மெதுவாக வளர்சசியடைய தொடங்கியுள்ளது . இது ஒரு நல்ல அறிகுறி. நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை என்ற நாட்டிற்குள் தான் தமிழ் மக்கள் வாழ்வு . நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் புரிந்துணர்வின் அடிபடையிலேயே ஒரு தீர்வு அமையப்பெறலாம். அதற்கேற்ப நல்லுறவை கட்டியெழுப்புவதும் சிறுபான்மையான இனங்கள் இரண்டும் புரிந்துணர்வின் அடிபடையில் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதும் காலத்தின் தேவை. ஆகவே, இது ஒரு இயக்கத்தின் தவறு மட்டுமே தவிர ஒட்டுமொத்த தமிழர்களின் தவறல்ல என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக இவ்வாறான ஒரு சிலரின் சீண்டல்களை புறந்தள்ளி எமது சமுதாயத்தை வட கிழக்கில் கல்வி, தொழில்நுட்ப, வர்த்தக பொருளாதார அரசியல் ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே இரண்டு தலைமுறையை நாசப்படுத்திய வழியில் சிந்திகாது புதிய தலைமுறையாவது அறிவார்ந்த அரசியலை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை நோக்கி நகருவதற்கான ஆரம்ப வழியையாவது சமைத்து கொடுக்க வேண்டும். அண்மையில் தாயகம் சென்ற போது அவதானித்த விடயம் 2000 ம் ஆண்டுகளில் பிறந்த ஆற்றலுள்ள பல திறமை சாலியான இளைஞர்கள்/ யுவதிகள் பலர் பல கற்கை நெறிகளில் பயின்று தமிழர் அரசியலில் ஆர்வம் அற்று தமிழர் அரசியலில் ஈடுபடுவோர் எல்லாம் படிபறிவற்ற காடையர்கள் என்ற கணக்கில் அந்தப் பக்கம் திரும்பி பார்கதவர்களாக உள்ளனர். நல்வாய்பாக இன மத வெறுப்புக்கு ஆட்படாதவர்களாக அவர்கள் இருப்பது சிறந்த பாராட்டப்படவேண்டிய விடயம் என்றாலும் அவர்கள் அரசியலில் அக்கறையற்று இருப்பது தமிழர் அரசியலுக்கு உணமையில் நல்லதல்ல. ஆனால், அவ்வாறு அவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வெறுப்பு அரசியலைப் பரப்பும் புலம் பெயர்/ தாயக தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.