Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    12678
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    16477
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/03/25 in Posts

  1. 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma) சரியான பதில் தந்தவர்கள் - ஆல்வாயன், கிருபன், செம்பாட்டன். 1) அகஸ்தியன் - 75 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 72 புள்ளிகள் 3) செம்பாட்டன் - 72 புள்ளிகள் 4) ஏராளன் - 70 புள்ளிகள் 5) சுவி - 70 புள்ளிகள் 6) கிருபன் - 66 புள்ளிகள் 7) வாதவூரான் - 66 புள்ளிகள் 8) வீரப்பையன் - 65 புள்ளிகள் 9) புலவர் - 61 புள்ளிகள் 10) ரசோதரன் - 61 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் முதல் 5 இடத்தை பிடித்த அகஸ்தியன், ஆல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவிக்கு பாராட்டுகள். எல்லா போட்டியாளர்களும் 100 க்கு 50 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்று சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
  2. மிக்க நன்றி @கந்தப்பு அண்ணா. போட்டியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 1) @Ahasthiyan அண்ணா, 2) @alvayan அண்ணா, 3) @செம்பாட்டான் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  3. இது என்னை ம‌ன‌சில் வைச்சு எழுதின‌ மாதிரி தெரியுது லொள்😁...................
  4. ❤️.................... களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏. போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள். போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.
  5. 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? இந்தியா 8 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 75 புள்ளிகள் 2) ஏராளன் - 70 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 70 புள்ளிகள் 4) சுவி - 70 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 70 புள்ளிகள் 6) வாதவூரான் - 66 புள்ளிகள் 7) வீரப்பையன் - 65 புள்ளிகள் 8) கிருபன் - 64 புள்ளிகள் 9) புலவர் - 61 புள்ளிகள் 10) ரசோதரன் - 61 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 98).
  6. 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?தென்னாபிரிக்கா அணி 69 ஒட்டங்களை எடுத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - ஏராளன், ஆல்வாயன், வாத்தியார், சுவி, வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 63 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 61 புள்ளிகள் 6) கிருபன் - 59 புள்ளிகள் 7) புலவர் - 59 புள்ளிகள் 8) வாதவூரான் - 59 புள்ளிகள் 9) ரசோதரன் - 59 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 11) வீரப்பையன் - 58 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 50 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 89).
  7. அமெரிக்கன் கட்டதுரைக்கு கொழுப்பு ஜாஸ்தி. வரட்டியில் போட்டி வாட்டி எடுக்கோணும்😂
  8. ஒரு நாள் லீவு போட்டால் என்னவாம். @கிருபன் அலுவலக நேரத்திலேயே யாழில் அதிக வேலை செய்வார். அவரைப் பார்த்து பழகுங்க.
  9. 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாப்பிரிக்கா வீரங்கனை Laura 169 ஓட்டங்களை பெற்றார். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 85).
  10. Swag Sports Tamil · கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂
  11. Swag Sports Tamil · அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃
  12. பழைய நினைவுகளை மீண்டும் கிரகித்து பார்க்கின்றேன். இராணுவத்திற்கு விடுதலை புலிகள் அமைப்பு, நடமாட்டங்கள் பற்றிய உள்ளூர் தகவல்களை வழங்குகின்றார்கள், காட்டி கொடுக்கின்றார்கள் எனும் காரணத்தாலேயே முஸ்லீம் மக்கள் அப்போது வெளியேற்றப்பட்டார்கள் என ஊருக்குள் கதைத்தார்கள். முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது விடுதலை புலிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தின. நிர்வாக ஒழுங்குகளுடன் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடைவதை இந்த வெளியேற்றம் இலகுவாக்கியது என்றே கூறவேண்டும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்து நிலைகொண்ட நிலை காணப்பட்டால் போராட்டம் எந்த பாதையில், எப்படி பயணித்து இருக்கும் எனவும் சிந்தித்து பார்க்கலாம். 1990 இல் வெளியேற்றம் ஏற்பட்டது. 1995 இல் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவம் வசமாகியது. கிட்டத்தட்ட இந்த ஐந்து வருட கால இடைவெளியில் முஸ்லீம் மக்களை வெளியேற்றதன் மூலம் விடுதலை புலிகளுக்கு கிடைத்த பலன்கள் எவை, பாதகங்கள் எவை எனவும் நோக்கப்படலாம்.
  13. பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  14. பார்த்தது காணாது போல 😁. அவ மட்டும்தான் எப்போதும் பொட்டுடன். பொட்டு வைத்த எங்கள் தங்கம். நேற்றுப் போட்டு உருட்டிவிட்டாவே
  15. பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.
  16. முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.
  17. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார். செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
  18. ............ https://youtube.com/shorts/-QqUdHPgUcg?si=N1dCfHj1kL2mnfTw
  19. அந்த ஐந்து வருடங்கள் நீங்கள் அந்தப்பக்கம் வேலை செய்த பொது😅 நாங்கள் உங்கள் வீட்டுப்பக்கமாக யாழ் இந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம் 😂
  20. போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂
  21. கொஞ்சம் தூரம் என்றாலும் பரவாயில்லை என்று நவாலி சங்கரத்தைப் பாதையைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு நல்ல சுவாசத்தைக் கொடுக்கும் சில வேளைகளில் பிரதான வீதியே குப்பையால் நிறைந்திருக்கும் அந்தளவுக்கு மாநகரசபை ஊழியர்கள் கவனமாக வேலை செய்வார்கள்🤨 தலைவர் 🙏 80 களுக்கு முன்னர் அங்கு வேலை செய்திருக்கலாம் என நினைக்கிறேன் சேர்மன் ஊரில் CTB தியாகராஜா என்று அழைக்கப்படடுவார் எங்கள் உறவினர் தான்.
  22. போட்டிய‌ திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும் க‌ந்த‌ப்பு அண்ணா..............................
  23. 2017 உல‌க‌ கிண்ண‌ பின‌லை பாருங்கோ ந‌ண்பா இந்தியா ம‌க‌ளிர் வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோத்த‌வை 2021ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையிலும் பின‌லில் வ‌ந்து தோத்த‌வை இப்ப‌ இருக்கும் இந்தியா அணியில் சிறு மாற்ற‌ம் செய்ய‌ இருக்கு இர‌ண்டு பேரை நீக்கி விட்டு அவைக்கு ப‌தில் இர‌ண்டு திற‌மையான‌ ம‌க‌ளிர‌ அணியில் சேர்த்தால் இந்தியா மிக‌வும் ப‌ல‌மான‌ அணியாக‌ வ‌ந்து விடும்🙏🥰..............................
  24. பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும் உடனைக்குடனே சுடச்சுட புள்ளிகள் போடும் நண்பர் கந்தப்புவுக்கு மிகவும் நன்றிகள் .........! 🙂
  25. கட்டதுரைக்கு வாத்தியார் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற தவிப்புத்தான்! 😂🤣
  26. ப‌ழைய‌ இந்திய‌ ம‌க‌ளிர் க‌ப்ட‌னும் ப‌ழைய‌ இந்திய‌ அணியின் வேக‌ப் ப‌ந்து வீச்சு ம‌க‌ளிரும் இப்ப‌ இருக்கும் இந்திய‌ ம‌க‌ளிர் அணி கோப்பை வென்ற‌ ச‌ந்தோச‌த்தில் அவ‌ர்க‌ளும் கோப்பைய‌ தூக்கும் போது பார்க்க‌ மிக‌வும் ச‌ந்தோச‌மாக‌ இருக்கு.............. இந்த‌ இந்த‌ ம‌க‌ளிருக‌ளுக்கு எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இது.................................
  27. @suvy என்ர‌ த‌லைவ‌ர் என்னை விட‌ முன் நிலையில் நிப்ப‌த‌ பார்க்க‌ ம‌கிழ்ச்சியாக‌ இருக்கு.............................
  28. பெரிய‌ப்பு ஊ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கோ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை நான் க‌வ‌னிச்சு அனுப்பிறேன் லொள் அதுக்கு பிற‌க்கு இப்ப‌டி எல்லாம் எழுத‌ மாட்டார்😁..........................
  29. அததெரண கருத்துப் படம்.
  30. 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா ( Alana King - 7 விக்கெட்டுகள்) 8 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 65 புள்ளிகள் 6) புலவர் - 61 புள்ளிகள் 7) வாதவூரான் - 61 புள்ளிகள் 8) ரசோதரன் - 61 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 10)வீரப்பையன் - 60 புள்ளிகள் 11) கிருபன் - 59 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 93).
  31. 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma - 22 விக்கேற்றுகள்) சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, செம்பாட்டன், வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 63 புள்ளிகள் 6) வாதவூரான் - 61 புள்ளிகள் 7) கிருபன் - 59 புள்ளிகள் 8) புலவர் - 59 புள்ளிகள் 9) ரசோதரன் - 59 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 11) வீரப்பையன் - 58 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 50 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44, 46, 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 91).
  32. கட்டணங்களின் விபரங்களையும் இணையுங்கள் பார்ப்போம். ஓரிரு தடவைகள் ரோயலுக்கு சென்றுள்ளேன். டெல்மன் இதை விட கொஞ்சம் பரவாயில்லையோ என்று சொல்ல தோன்றுகின்றது.
  33. 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்?கௌகாத்தி மைதானத்தில் தென்னாபிரிக்கா அணி 69 ஒட்டங்களை எடுத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, செம்பாட்டன், வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 61 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 61 புள்ளிகள் 6) கிருபன் - 59 புள்ளிகள் 7) புலவர் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 57 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 37, 39 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 87).
  34. எதாவது கொடுக்கல் வாங்கலில பிரச்சனையாயிருக்கும், விடுங்கோ. உவர் தொடங்குற கட்சி கருணாவுக்கு எதிரானதே ஒழிய மக்களுக்கானது அல்ல. ஆகவே தமிழர்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதுசரி 2024 வரை கருணா நல்லவராக இருந்தவரா, இப்ப இவர் பிரிஞ்சு வாறதுக்கு?
  35. வீட்டுக்கு வீடு வாசல்படிதான் போல..
  36. இவ்வளவு நாள் விடுமுறையில்தானே இருந்தேன். யாழில் இணைந்தது 2005 இல். 2006 இல் இருந்து 2012 வரை இருந்த ஊர் புதினம் பகுதி பார்த்தீர்கள் என்றால் ஒரு நாளுக்கு குறைந்தது 20, 30 கருத்துக்கள் என்று வேலை செய்கிற இடத்தில் இருந்து எழுதியிருப்பேன். நாளுக்கு 50 க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதிய காலமும் இருந்தது.
  37. 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? தென்னாப்பிரிக்கா 69 ஒட்டங்கள். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 83).
  38. @Eppothum Thamizhan கொஞ்ச‌மாடா பேசினா ந‌ண்பா இந்தியா கோப்பை வெல்லாது அது இது என‌ இந்தியா ஆர‌ம்ப‌ சுற்று போட்டில் மூன்று போட்டியில் தொட‌ர்ந்து தோத்த‌து அப்ப‌வும் இந்தியா ம‌க‌ளிர் மேல் ந‌ம்பிக்கை இருந்த‌து இந்தியா ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சால் தான் அந்த‌ இர‌ண்டு மைச் தோத்த‌வை இங்லாந்துக்கு எதிரா வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ மைச்சை கோட்டை விட்ட‌வை😁..................................
  39. ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள் பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன். கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.அந்தச் சந்திப்பில் அரசுசார்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து உண்மை காணப்பட வேண்டும் என்ற பொருள்படப் பேசியுள்ளார்.அப்பொழுது அங்கு அவரோடு வந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய ஒரு தமிழர் சொன்னாராம்,பழைய காயங்களை திரும்பத்திரும்ப கிண்டிக் கொண்டிருக்கக்கூடாது. அப்படிக் கிண்டினால் அவை ஆறாது என்ற பொருள்பட. அவர் தேசிய மக்கள் சக்திக்குள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்தான் இணைந்தவர்.அக்கட்சியின் சிங்களப் பிரதிநிதி உண்மையை விசாரிக்க வேண்டும் என்று கூற அவரோ,பழைய காயங்களைக் கிண்டக் கூடாது என்று கூறுகிறார். அதன்மூலம் கட்சிக்குத் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அரசாங்கமே ஒரு தமிழ்ப் பிரதிநிதியூடாக அதைச் சொல்ல வைத்திருக்கலாம். இவ்வாறு தமது பழைய காயங்களை நினைவுகூர வேண்டும்;அவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பதைப் போலவே முஸ்லிம் மக்களும் தங்களுடைய பழைய காயங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதில் தவறு ஏதும் உண்டா ? கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வலிந்து அகற்றப்பட்டதை நினைவு கூரும் ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டது.தந்தை செல்வா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் என்ற பொருள்பட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.அந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பு இந்த வார்த்தைக் குழப்பம் காரணமாக அங்கு வரவில்லை. அதேசமயம் நிகழ்வின் தொடக்கத்தில் உரை நிகழ்த்திய அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய தந்தை செல்வா அறக்கட்டளையின் தலைவராகிய இளங்கோவன்-இவர் செல்வாவின் பேரன்-அவ்வாறு பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு தான் பயப்பட்டார் என்ற பொருள்பட பேசினார்.அந்த நிகழ்வை ஒரு விவகாரமாக மாற்றி அதனாலேயே சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் கூர்மையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அந்த நிகழ்வில் பேசிய யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதி, முஸ்லிம்கள் அவ்வாறு அகற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு என்று கூறினார். அந்த வார்த்தையைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் சுமந்திரன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார். அதேசமயம் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் தமிழ் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது. மேலும் அங்கு பேசிய மௌலவி சுபியான் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்படுகையில் கிட்டத்தட்ட 650 கடைகள் முஸ்லிம்களிடம் இருந்தது என்றும், நகரப் பகுதியில் வணிகம் பெருமளவுக்கு முஸ்லிம்களின் கையில் தான் இருந்தது என்றும் கூறினார்.ஆனால் தாங்கள் மீளக்குடியமர்ந்த பொழுது தாங்கள் முன்பு குடியிருந்த கடைகள் பல கிடைக்கவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்.முன்பு முஸ்லிம்கள் வாடகைக்கு வைத்திருந்த கடைகளில் பல கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமானவை.மீளக் குடியமர்ந்தபின் மீண்டும் அதே கடைகளை தாங்கள் கேட்டபோது அவை தங்களுக்குத் தரப்படவில்லை என்றும் அவர் குறைபட்டுக் கொண்டார். மேற்சொன்ன இருவருடைய கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்தால்,கடந்த 16 ஆண்டுகளிலும் பௌதிகரீதியாக மீளக் குடியமற்றப்பட்டாலும்கூட மனோ ரீதியாக முஸ்லிம்கள் மீளக் குடியமரவில்லை என்பது தெரிந்தது. அதுபோலவே முகநூலில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பகுதியினருடைய வாதப் பிரதிவாதங்களைப் பார்க்கும்போதும் இரண்டு சமூகங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தெரிகிறது. வடக்கில்,குறிப்பாக யாழ்ப்பாணத்தில்,முஸ்லிம்கள் தமது வாழிடங்களில் இருந்து அகற்றப்பட்டமை என்பது கடந்த ஐந்து நூற்றாண்டு காலப் பகுதிக்குள் மூன்று தடவைகள் இடம்பெற்றிருக்கிறது. முதலாவது தருணம் போத்துக்கீசர் காலம். 1614ஆம் ஆண்டு. போர்த்துக்கீசர்கள் இப்பொழுது யாழ்ப்பாண கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைக்க முற்பட்டார்கள். அந்தத் தேவாலயத்துக்கு முதலில் வெற்றி மாதா தேவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது.பின்னர் அது புதுமை மாதா தேர்வாலயம் என்று அழைக்கப்பட்டது.அந்தத் தேவாலயத்தை அங்கே அமைக்க முற்பட்ட பொழுது அங்கு ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை போத்துக்கீசர்கள் அங்கிருந்து கட்டாயமாக அகற்றினார்கள். அடுத்த வெளியேற்றம் நல்லூரில் நிகழ்ந்தது. “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் அது தொடர்பான விபரங்கள் உண்டு. அந்த நூலின் 91ஆம் பக்கத்தில் அது கூறப்பட்டுள்ளது.நல்லூர் பகுதியில் வசித்து வந்த முஸ்லிம்களை அங்கிருந்து போகுமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.காணிகளை தங்களுக்கு விற்குமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.முஸ்லிம்கள் அசையவில்லை.இந்துக்கள் முஸ்லிம்களுடைய கிணறுகளில் பன்றி மாமிசத்தை போட்டார்கள். முஸ்லிம்கள் அந்த இடத்திலிருந்து வெளிக்கிட்டு நாவந்துறைக்கு அப்பால் சென்று குடியேறியதாக யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது. அதை ஒரு வரலாற்று நூலாக எடுத்துக் கொண்டு இந்த தகவலை நம்பலாமா என்ற கேள்வி உண்டு.ஆனால் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக இப்போது இருக்கும் நல்லூர் கோவில் வளாகத்துக்குள் ஒரு முஸ்லிம் ஞானியின் சமாதி உண்டு. மூன்றாவது சந்தர்ப்பம்,ஈழப் போராட்டத்தில் நிகழ்ந்தது.1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்30ஆம் திகதி,முஸ்லிம்கள் வடக்கிலிருந்து அகற்றப்பட்டார்கள். அந்தத் துயரத்தைத்தான் இப்பொழுது அவர்கள் நினைவு கூர்கிறார்கள். இங்கு கூறப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் முதலாவதாக போத்துக்கீசர்கள் முஸ்லிம்களை அகற்றினார்கள்.அதில் தமிழர்களுக்குப் பொறுப்பில்லை. இரண்டாவதாக இந்துக்கள் அகற்றினார்கள். மூன்றாவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அகற்றியது. இதில் முதலிரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் இடமாறி வேறு இடத்தில் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே குடியேறினார்கள்.ஆனால் மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர்கள் வேரை அறுத்துக்கொண்டு வடக்குக்கு வெளியே சிதறிப் போனார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த முடிவைப் பின்னர் மறு பரிசீலனை செய்து முஸ்லிம்களை வடக்குக்குள் வர அனுமதித்தது.அப்பொழுது முஸ்லிம்களின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்த ரவுப் ஹக்கீமோடு விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொண்டது. அந்த உடன்படிக்கைக்குப் பின் ஈழப் போர் பரப்பிற்குள் தமிழ் தரப்பினால் முஸ்லிம்கள் அநேகமாகக் கொல்லப்படவில்லை. தமிழ் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சிங்கள அரசியல் சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கின்றார்கள். முஸ்லிம்களும் அவ்வாறு தமிழ் மக்களிடம் கேட்பதில் தவறில்லை. முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய அமைப்பு அந்த முடிவை மீளப் பரிசீலித்து மாற்றிக் கொண்டது.ஒருவிதத்தில் அங்கிருந்து பொறுப்புக்கூறல் தொடங்குகின்றது. இப்பொழுது உள்ள தமிழ் அரசியல் சமூகம் அந்தப் பொறுப்புக் கூறலை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்ல வேண்டும். வடக்கில் முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை என்பது வெற்றிடத்தில் நிகழவில்லை. அது கிழக்கில் நடந்தவைகளின் விளைவு. தந்தை செல்வா கலையரங்கில் 31 ஆம் திகதி நடந்த நிகழ்வில் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.அந்த ஒளிப்படங்கள் ஈழப் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவங்களைச் சித்தரிப்பவை. ஆனால் கிழக்கில் போய்க் கேட்டால்,தமிழ் மக்களும் அதுபோல ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை காட்சிக்கு வைப்பார்கள். இங்கே உற்றுக்கவனிக்க வேண்டிய வேறுபாடு ஒன்று உண்டு.தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை வடக்கின் களயதார்த்தம் வேறு.கிழகின் களயதார்த்தம் வேறு.ஆனால் கிழக்கில் நடப்பவற்றின் விளைவுகள்தான் வடக்கைப் பாதிக்கின்றன.கிழக்கில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் துணைப் படைகளின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் மக்களிடம் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் உண்டு. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது வடக்கிலிருந்து அல்ல,கிழக்கிலிருந்து தான் கட்டியெழுப்பப்பட வேண்டும்.வடக்கில் மட்டும் அதனைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ்மக்கள் தமது தாயகம் என்று கருதும் நிலப்பரப்பிற்குள் தமிழ் முஸ்லிம் உறவுகள் என்று வரும்பொழுது ஒப்பீட்டளவில் வடக்கை விடவும் கிழக்கில்தான் சவால்கள் அதிகம்.கிழக்கில்தான் இடைவெளிகள் அதிகம். இப்பொழுதும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் வடக்கிற்கு எதிராகவும் கிழக்குமைய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் கணிசமான தொகை முஸ்லிம் எதிர்ப்பு வாக்குகள் உண்டு. எனவே தமிழ்-முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது கிழக்கில் எப்பொழுதும் சவால்கள் மிகுந்ததுதான். கடந்த 31 ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த நிகழ்வில் கருத்துரைகளுக்கு பின் நடந்த கலந்துரையாடலுக்கு வசதிப்படுத்தினராகச் செயற்பட்ட, கிழக்கிலிருந்து வந்த ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் அதைச் சுட்டிக்காட்டினார். எனவே தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை இரண்டு தரப்புமே கடந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.குறிப்பாக, அனைத்துலக சமூகத்தையும் சிங்கள சமூகத்தையும் தமக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்மக்கள்,தமது தாயகப் பரப்பிற்குள் வாழும் எண்ணிக்கையால் சிறிய சமூகத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் இனத்தின் அரசியல் நீதி எது என்பதை தமிழ் மக்கள் முதலில் காட்டவேண்டிய இடம் அது. https://athavannews.com/2025/1451821
  40. அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.
  41. இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
  42. In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?
  43. கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார். ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
  44. சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? https://www.vikatan.com/சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.