Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20010
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19109
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/16/25 in all areas

  1. செய்தி: வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு... தனது ஆண் உறுப்பை காட்டிய, முஸ்லீம் இளைஞர். @alvayan
  2. இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.. சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்.. வாழ்த்துகள்..!
  3. யாழின் கருத்தாளர்கள் சிலரால் தெளிவாக கூறப்பட்ட விடயங்களை தடித்த, வண்ண எழுத்துகளால் குறித்துள்ளேன்.
  4. இதென்ன நீங்கள் அவரின் நேரஅட்டவனை தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . ........! __ காலையில் இருந்து கந்தோர் வேலை ( பெரும்பாலும் work from home தான்).......! ___ மதியம் மீன் செதில்கள் சேகரித்து சுத்தம் செய்து அருமையான வறை செய்து வைப்பார் .......! ___ மாலையில் கார் எடுத்துக் கொண்டு கழுவப்போய் விடுவார் . ......(அவரது கார் சுத்தமாய் இருந்தால், நண்பர்களின் காரை கழுவித்தாரன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு அந்த car washing center க்குப் போய் விடுவார்) . .......! இப்போது சொல்லுங்கள் அவருக்கு எங்கே நேரம் இருக்கு .......! 😂 தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . ......! இன்று நான் எஸ்கேப் ........!
  5. இந்தோ - பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும். --- ----- --------- *ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செய்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி *ரணில் - மகிந்தவை, சந்திரிகா ஆகியோரை விடவும், அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை ---- --------- ------ 2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் உள்ளிட்ட இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையாளுகின்றார் என்பதை, அவருடைய சமீபத்திய காய் நகர்த்தல்கள் காண்பிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் இந்திய - சீன அரசுகளையும் கையாளும் அணுகுமுறையானது, தமது கட்சிக் கொள்கைக்கு ஏற்பவும், சர்வதேச அரசியல் - பிராந்திய பாதுகாப்பு - வர்த்தகம் ஆகியவற்றை பேணக்கூடிய முறையிலும் அமைந்துள்ளது. இது ஒருவகையில் சர்வதேச இரட்டைக் கொள்கை என்று கூறினாலும், இந்தியா - அமெரிக்கா - பிரித்தானிய அரசுகளின் ஒத்துழைப்பும் - உதவிகளும் அவசியம் என்ற கோணத்தில், அநுர காய்நகர்த்துகிறார் எனலாம். ஜேவிபியாக அல்லாமல், தேசிய மக்கள் சக்தியாக பயணிக்க வேண்டும் என்ற அநுரவின் சற்று மாறுபட்ட கொள்கைக்கு ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைகளை அப்படியே தொடர்ந்து பின்பற்றும் ரில்வின் சில்வா அதற்கு ஒத்துழைப்பதாக இல்லை. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களில் பலரும் ரில்வின் சில்வாவுடன் இணைந்திருக்கின்றனர். இப் பின்னணியில்தான் 2025 ஆம் ஆண்டு அநுர கையாண்ட சில நுட்பமான அணுகுமுறை காரணமாக ரில்வின் சில்வா அதனை ஏற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜேவிபியின் ஆரம்பகால எதிர்ப்புகளும், இந்தியாவின் விரிவுவாதக் கொள்கைகள் மீதான அதன் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. இருப்பினும், 2025 இல் ஜேவிபி அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்திய அரசாங்கத்துடன் ஜேவிபி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. அநுரகுமார இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். 2025 ஜனவரியில், ஜேவிபியின் தலைவர்கள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். இது அநுரவின் அரசியல் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர், இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இந்திய மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். ஆட்சியைக் கைப்பற்ற முன்னரே, 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்த நிலைப்பாட்டை ஜேபிவி. குறிப்பாக அநுரகுமார கையில் எடு்த்திருக்கிறார். . இந்தியாவுடனான உறவில் 2026 ஆம் ஆண்டு மேலும் சாத்தியங்கள் அதாவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் ஜேவிபிக்கும் இடையிலான உறவுகளில் புதிய வகிபாகத்தை உருவாக்கக்கூடும். அதேவேளை-- தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை அநுர 2025 இல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார். இதன் காரண - காரியம் என்பது ரில்வின் சில்வா மற்றும் அவரை மையப்படுத்திய தேசிய சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்ற சிந்தனை என்று கூறலாம். இதனை மையமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of China – CPC) ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அநுர சென்ற ஒக்ரோபர் மாதம் கைச்சாத்திட்டிருக்கிறார். ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவிற்கு சென்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அநுர, ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவுக்கு பயணம் செய்து நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பிமல் ரத்நாயக்க சீனாவுக்குச் சென்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் சீனாவை எப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வளர்த்ததோ, அதேபோன்று ஒரு செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பிமல் ரத்நாயக்க சீனாவில் விபரித்திருக்கின்றார். ரணில், மகிந்தவை பின்பற்றி ஜேவிபியும் சீனாவுடன் அந்த உறவை பேணுவதற்கு ஏற்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என கூற முடியாது. ஏனெனில், இந்த ஒப்பந்தம் கட்சி அரசியல் மாத்திரமல்ல, புவிசார் அரசியல் - பொருளாதார நலன்கள் என்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆகவே, 2025 இல் அநுர கையாளும் அணுகுமுறை என்பது ரணில், மகிந்த போன்ற தலைவர்களைவிடவும், முற்றிலும் மாறுபட்டது. அதாவது -- புவிசார் அரசியல் விவகாரங்களில் சமாளிப்பு அரசியல் என்பதைவிடவும், இதுதான் ஜேபிவி என்பதையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தும் உத்திதான் இது. குறிப்பாக -- வோஷிங்டன் – புதுடில்லி அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை முற்றிலும் மாறுபட்ட உத்தி. ஆகவே -- அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வகிபாகம் ஜேவிபி என்பதை நிரூபித்துள்ளது என்று கூறலாம். இப் பின்புலத்தில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள் – பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளது. அநுர அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செற்படுவது பற்றி பிரித்தானிய அரசுடன் விரிவாக உரையாட, ரில்வின் சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் லண்டனுக்குச் செல்லவுள்ளார். இதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் ரில்வின் சில்வாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் கூடுதல் உறவைப் பேணும் என பலராலும் எதிர்வு கூறப்பட்ட நிலையில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியும் பிரித்தானிய ஆதரவோடும், மேற்கு நாடுகளுடன் உறவை பேணும் அணுகுமுறையை அநுரகுமார, மற்றொரு பக்கத்தால் பின்பற்றி வருகிறார் என்பது கண்கூடு. ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையோடு செயற்பட்டு வரும் ரில்வின் சில்வா, அதற்கு ஒத்துழைக்க தயங்கிய ஒரு பின்னணியிலும், ரில்வின் சில்வா எதிர்காலத்தில் இந்த நாடுகளை விமர்சிக்காமல் இருக்கும் நோக்கிலும் லண்டன் பயணத்தை அநுர ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் கூறலாம். அதேநேரம் ரில்வின் சில்வா, இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஆகவே -- அநுரகுமார, தனியே இலங்கையின் ஜனாதிபதியாக அல்லாமல், இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் வெவ்வேறுபட்ட அணுகுமுறை ஒன்றை கையாண்டு, இலங்கைத்தீவின் இறைமை என்ற விவகாரத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீன - இந்திய அரசுகள் என்பதை மிக நுட்பமாக கையாளுகிறார். இலங்கையின் தேசிய தலைமை என்ற அங்கீகாரத்தை நோக்கி அவர் பயணிக்கிறார். ஆனால் -- ஈழத்தமிழர் விவகாரம் முற்றிலும் உள்ளக விவகாரம் என்ற ஜேபிவியின் கருத்தியலை மேற்கு - ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை இந்த ஆண்டு அநுர நிரூபித்துள்ளார். அத்துடன் -- மனித உரிமை மீறல் பிரச்சினைகள் - போதைப் பொருள் பிரச்சினைகள் மற்றும் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற விவகாரங்கள் எல்லாமே கடந்த 76 வருட ஆட்சியில் பழம் பெரும் கட்சிகள் விட்ட தவறு என்றும், 2026 ஆம் ஆண்டு அவை முற்றாக ஒழிக்கப்பட்டு வடும் என்ற வாக்குறுதிகளையும் அநுர சர்வதேசத்துக்கு வழங்கியியுள்ளார். குறிப்பாக -- நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பொது நிறுவனங்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் -- ரணில், மகிந்த. கோட்டாபய, சந்திரிகா ஆகிய தலைவர்கள் வடக்குக் கிழக்கில் தங்கள் தமிழ் முகவர்களை பயன்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளை மடைமாற்ற முற்பட்டு தோல்வி கண்ட அணுகுமுறையில் இருந்து, ஜேபிவி மாறுபட்ட உத்தி ஒன்றை கையாள்வதை தமிழ்த்தரப்பு அறியாமல் இருப்பதும் வேடிக்கை. குறிப்பாக --- வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தமிழர்களை வேட்பாளர்களாக ஜேபிவி கண்டறிந்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அனுபவங்களின் பிரகாரம், வரவுள்ள மாகாண சபைத் தேர்தல் அல்லது அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலாகவும் இருக்கலாம், அதில் போட்டியிட செல்வாக்குள்ள தமிழர்கள் பலரை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் - தயாரிப்புகளில், ஜேவிபி மிக நுட்பமாக கையாளும் திறன் கொண்டது. இப் பின்னணியில் --- முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் உள்வாங்கப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் -- தமிழ்த்தேசியக் கட்சிகள் எதனையும் அறியாமல் இருக்கின்றன. அதாவது -- தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி வந்துவிட்டது என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாமல் இருக்கின்றன. புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அது பற்றி புரிந்து கொண்டதாக இல்லை. சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜேவிபியின் காய்நகர்த்தல்களை நன்கு தெரிந்து செயற்படுகின்றன என்றும் கூறலாம். அதில் உண்மை இல்லாமலில்லை. ஆகவே -- அமெரிக்க - இந்திய அரசுகள் பிரித்தானிய மற்றும் சீனா போன்ற நாடுகளை கையாளும் ஜேபிவியின் அணுகுமுறை என்பது, இலங்கைத் தேசியம் என்ற ஒற்றைக் கொள்கைக்கும், ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைக்கும் வலுவூட்டப்படுகின்ற அநுரவின் நுட்பமான காய்நகர்த்தல் என்றால் அது மிகையாகாது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  6. கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan
  7. மாமாவுக்கு ஒரு👏👏👏👏👏
  8. தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கணுமில்ல.
  9. அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.
  10. தீர்வுக்கு வழி என்னவென்றால், டில்கோவின் நாலு பெக் ஒடர் பண்ணி அடிசிட்டு படுக்கிறது மட்டும் தான். இதில் கலந்து கொண்டவர்களில் பலர் அதைத் தான் செய்திருப்பர். தீர்வு கிடைத்த மகிழ்ச்சியுடன் மாலையில் வீட்டுக்கு சென்றிருப்பர்.
  11. மன்னன் சில நேரங்களில் இப்படியும் நடந்து கொள்வான் ...........! 😂
  12. கனடாவில் அந்த அன்ரியின் மருமகனை போட்டு வாங்கு வாங்கு எண்டு வாங்கின ஆட்கள் கண்ணில் இது பட்டால் அவ்வளவுதான்🤪
  13. நான் நினைக்கிறேன் சும்முக்கு இப்போ வாழ்வில் ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் என்று. அது…. சுமந்திரன் லவ்வர்சை டிரோல் செய்வது மற்றும் டிரிகர் செய்வது 🤪
  14. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றால் இதர முஸ்லிம்கள் பெரும்பாலோர் அதை கண்டிக்க மாட்டார்கள். குண்டு வைத்த முஸ்லிம் மத வெறி குழுவை பாதுகாத்து முண்டு கொடுத்து இது வேறு சக்திகளின் சதி வேலை அல்லது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சதி என்பார்கள் . இது முதலில் நிறுத்தபட வேண்டும். முஸ்லிமாக இருந்தும் தலிபான் ஆப்கானிஸ்தான் அரசும் இந்திய ஒரு முஸ்லிம் கட்சியும் இந்த குண்டுவெடிப்பை கண்டித்தது நல்ல செயல். மற்றவர்களும் அது போன்று எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
  15. Jari Peltomäki Wildlife Photography dtSorsepno1elv60emmll7it5n0b 2268 ho7l2gr,10i3m5:12uf91m9im1 · I’m looking forward to proper winter and snowy conditions for photography! At the moment, Eurasian Jays are visiting all four of our bird feeders – and they’re eating a lot of peanuts! These colourful birds can be surprisingly photogenic, and the OM SYSTEM ProCapture feature is just perfect for freezing their fast movements like this! OM-1 + 150-400mm f4.5 (at 356 mm), 1/3200s, f7.1, ISO3200. ProCapture used. Finnature OM System Pohjoisen Luontokuvaajat ry, POLKU Suomen Ammattiluontokuvaajat......!
  16. உண்மையில் இதன் அர்த்தம் யாழில் உறுப்பினராக இணைந்து பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள் இத்திரியில் வந்து வருகையை பதிவு செய்யவேண்டும் என்பதா அண்ணை?! டாப்பு கூப்பிடும்போது பிரசன்ஸ் சேர் என்பது போல இங்க யாரும் கூப்பிடாது விட்டாலும் நாமாக{பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள்} வந்து வருகையை அறிவிக்கவேண்டும் அப்படியா?!.
  17. Farvin Ishak · Suivre rsodtnoSep1elifbumu34 29u:9rl005 7othm1,0a3tneu01v7gu85t3641 · ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான். “இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார். “ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான். “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி. நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது. Voir la traduction இந்தக் கதைக்கு இந்தப் படம் எதுக்கென்றே தெரியவில்லை . .......ஏதோ ஈயடிச்சான் கொப்பி மாதிரிப் போட்டு வைப்போம் .........! 😂
  18. இங்கையும் அதே கூத்துதான் தோழர் ..
  19. கொலை செய்யபட்ட காரணம் எங்கும் தெளிவாக இல்லை ஒரு பத்து பவுன் நகைக்கு கொலை என்பது சந்தேகமாக உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.