Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15789
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5416
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/22/25 in all areas

  1. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  2. வணக்கம் சுவி..நலமா? சென்னை MRTS railway மேம்பாலம் டிசம்பரில் திறக்க உள்ளது. துறைமுகம்-மதுரவாயில் மேம்பால வேலைகள் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்டு, வேலைகள் மந்தமாக நடக்கின்றன. சென்ற மாதம் சென்னை சென்றபோது பார்த்தேன். மக்கள் பாவனைக்கு வர இன்னும் 5 வருடங்கள் ஆக்கும்.
  3. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  4. நாமல்.... இந்தப் பதட்டம் தான், உங்களின் பொய்களை, வெளிக் கொணர வைக்கிறது, நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விரிவான விசாரணையில் இருந்து இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன, அவை நாமல் ராஜபக்ச வெறுமனே சட்டக் கல்லூரியில் சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை என்பதைக் குறிக்கின்றன. @ExaminerLK மூலம் நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விசாரணையின்படி, நாமல் ராஜபக்சவின் சட்டக் கல்வி தொடர்பான பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 🔍 வெளிவந்த முக்கிய தகவல்கள்: 1. அங்கீகரிக்கப்படாத பட்டம். நாமல் ராஜபக்சவின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், அவரது பல்கலைக் கழகமான "சிட்டி யுனிவர்சிட்டி" சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கிடைத்த தகவலின்படி, சட்டக் கல்லூரி "சிட்டி யுனிவர்சிட்டி" பட்டப் படிப்பை அங்கீகரித்தது 2009 அக்டோபர் 15 முதல் தான், இது ராஜபக்ச பதிவு செய்ததிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு ஆகும். 2. முழுமையற்ற விண்ணப்பம். சட்டப்பட்டப் படிப்பு வழியாக சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க, முழுமையான மதிப்பெண் பட்டியல் (டிரான்ஸ்கிரிப்ட்) மற்றும் பட்ட சான்றிதழ் (டிகிரி சர்ட்டிபிகேட்) ஆகிய இரண்டும் தேவை. ஆனால், சட்டக் கல்லூரியிடம் நாமல் ராஜபக்சவின் பட்ட சான்றிதழ் எப்போதும் கிடைத்ததில்லை, மதிப்பெண் பட்டியல் மட்டுமே கிடைத்துள்ளது. 2025 அக்டோபர் 3 ஆம் தேதி, நாமல் ராஜபக்ஷின் விண்ணப்பம் தொடர்பாக விடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த சட்டக் கல்லூரி, ராஜபக்சவின் கோப்பில் எந்தவொரு பட்ட சான்றிதழும் இல்லை என உறுதிப்படுத்தியது. அதற்கு பதிலாக, சட்டக் கல்லூரியிடம் 2009 இல் சிட்டி யுனிவர்சிட்டியால் ராஜபக்சக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மட்டுமே உள்ளது. அக்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருப்பது: “நீங்கள் பாடநெறியின் அனைத்து தேவைகளையும் மதிப்பீட்டு வாரியத்தில் நிறைவேற்றியுள்ளதால், பட்டம் in Law, Class Three (சட்டத்தில் இளங்கலைப் பட்டம், மூன்றாம் வகுப்பு) வழங்கப்படுகிறது என தெரிவித்து மகிழ்கிறேன்.” 1. ஒரு அசாதாரணமான பட்ட சான்றிதழ். நாமல் ராஜபக்ச இலங்கை சட்டக் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்ப்பிக்காத போதிலும், அவர் அதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (Master’s) விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்த சான்றிதழில், ராஜபக்சக்கு சிட்டி யுனிவர்சிட்டியில் இருந்து "சட்டத்தில் கௌரவம் மற்றும் மூன்றாம் வகுப்பு (Honours in Law Class Three)" பட்டம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்ட சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் முரண்பாடு உள்ளது. •அது 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. •ஆனால், கில்லீஸ் அவர்கள் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இது தொடர்பாக கில்லீஸை கேட்டபோது அவர் கூறியதாவது: “நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பிறகு எனது கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட எந்த சான்றிதழையும் பற்றி நான் அறியேன்.” அந்த நேரத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் கில்லீஸ் அல்ல, பேராசிரியர் ஜூலியஸ் வெய்ன்பெர்க் (Prof. Julius Weinberg) என்பதையும் சிட்டி யுனிவர்சிட்டி உறுதிப்படுத்தியது. (வலைத்தளச் செய்தி) Moorththy Dinu ################## ###################### சில பின்னுட்டங்கள்: Sinniah Selladurai கள்ளச் சான்றிதழ் ; கள்ள ஒப்பம்...? அடக் கேவலங் கெட்டவனே! நீயெல்லாம் ஒரு கட்சித் தலைவர்...? ஏன்டா!அவனவன் காறித் துப்புறான். அசிங்கமா ; வெக்கமா இல்லையா? ######### Reborn Visu Ranjith Guna லண்டனில் பட்டம் வாங்குவது கடையில் பொத்து வாங்குவது போல🤪 ######### Abdul Gaffoor Shihaabdeen இலங்கைல அதுவும் நாம பொறந்த மண்ணுல எடமில்லாம லண்டனுக்கு போயிருக்காரு சாரு பட்டம் உட. உடாங்கணக்குட ########## Nm Kisho Kizzo அதானே இங்கதான் கேனபயலுக என்றாலும் லண்டன்காரன் அறிவாளிதானே .. அவன் கொடுப்பானா சம்மா பட்டம்.. மாத்தி யோசிங்க மக்கா... ################ Moorththy Dinu Nm Kisho Kizzo மாதங்களை வேற மாத்தி இருக்கிறார்கள். ############ Senthurselvan Thuseeththa Ithu London kku theriyuma🤭 ########## Thambu Ramanathan இந்தச்சட்டத்தரணி எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார். ################ Krishna Kri அங்க பணம் குடுத்தாலே பட்டம் குடுத்திடுவான்கள் Moorththy Dinu Krishna Kri இதில வேடிக்கை என்னெண்டா 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. ஆனால், கில்லீஸ் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
  5. கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள் https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312
  6. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 : அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் அ. குமரேசன் புத்தகக் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் தாளில் சுற்றி வேறு ஏதோவொரு பொருள் போலக் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்படியே வேறு ஏதோவொரு பொருள் போல எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கவனத்தோடு விற்கப்பட்டது, எச்சரிக்கையாக கொண்டுசெல்லப்பட்டது ஒரு நாவல். காரணம் ஆஸ்திரேலிய நாட்டின் பல மாநிலங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, நியூஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தக விற்பனைக்குக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பொதுவான வன்முறை மன நிலையையும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடூரங்களையும் நியாயப்படுத்துகிறது, அத்தகைய வன்மங்கள் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று எதிர்மறை விமர்சனங்கள் மேலோங்கின. ஆனால், இலக்கியவாதிகளின் தொடர்ச்சியான விவாதங்கள், வாசகர்களின் வரவேற்பு உள்ளிட்ட ஆதரவுகளால் தடைகள் விலக்கப்பட்டன. இன்று, “வாசக சமூகத்தை ஈர்த்த செழுமையான படைப்பு” என்ற அடையாளத்தைப் பெற்று, உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) என்ற புத்தகம் பற்றி தகவல் தொகுப்புப் பெட்டகமாகிய விக்கிபீடியா, செயற்கை நுண்ணறிவுக் கருவியாகிய ஜெமினி இரண்டும் தருகிற தகவல்கள் கவனிக்கத் தக்கவை. தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஒரு வன்மமான நையாண்டிக்கு உட்படுத்தும் “கறுப்பு நகைச்சுவை” வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 1991இல் வெளியானது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நியூயார்க் நகர வாழ்க்கையோடு இணைந்ததாக ஒரு பணக்கார இளைஞனின் உளவியல் சிக்கல்களைக் கதையாக்கியிருக்கிறார் எல்லிஸ். குறிப்பாக பெரு முதலாளித்துவப் பங்குச் சந்தை வேட்டைக் களமான வால் ஸ்ட்ரீட், அதில் புரையோடிப் போயிருக்கும் மோசடிகள், அது கட்டமைக்கும் நுகர்வுக் கலாச்சார நிலவரங்கள், அதனால் பரவியிருக்கும் சமூகப் போலித் தனங்கள், தனி மனிதருக்கு ஏற்படும் எதிர்மறையான உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை நாவல் துணிச்சலாகப் பேசுகிறது. வால் ஸ்ட்ரீட் சந்தையின் பெரு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையால் “பேராசை பெருநன்மை” என்ற மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாவல் கடுமையாகச் சாடுகிறது. மனிதர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், புழங்குகிற பணக்கார உணவகங்கள் என்ற நிறுவன விற்பனை அடையாளப் பெயர்களில்தான் (பிராண்ட்) மதிப்பிடப்படுகிறார்கள். மனித உணர்வுகளும் உறவுகளும் அற்பமானவையாகத் தள்ளப்படுகின்றன. சமூகப் பொறுப்பைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் உலகத்தின் உள்ளீடற்ற மேலோட்டத் தன்மையை நாவல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது என்றும் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் விரிவாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படிப்பட்ட கொடுமைகள் மீது ஒரு ரசனையை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று பெண்ணுரிமைக் கருத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிமனிதர்களை சமுதாயம் கொடியவர்களாக மாற்றுவதைத்தான் எழுத்தாளர் இவ்வாறு சித்தரித்திருக்கிறார் என்று நாவலின் ஆதரவாளர்கள் விளக்கமளித்தார்கள். இன்றளவும் இந்த விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் கதையின் நாயகன் சித்தரிக்கப்படும் விதமும் விமர்சிக்கப்பட்டது. அவன் உண்மையிலேயே குற்றங்களைச் செய்கிறானா அல்லது குற்றங்களைச் செய்வது போன்ற மனதின் மாயக் கற்பனையில் மூழ்கி, அவனே அதை நம்புகிறானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நம்பகத் தன்மையில்லாத கதையாடலாகவும், உண்மை வாழ்க்கை நடப்புடன் இணையாததாகவும் நாவல் அமைந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியில்லை, முதலாளித்துவம் திணிக்கிற நுகர்வுக் கலாச்சாரம் மனிதர்களை உண்மை நடப்புச் சூழல்களிலிருந்து துண்டித்துவிடுகிறது, அதைத்தான் நாவல் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள். நாவலை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், அதன் உள்ளடக்கம் காரணமாக ஒதுங்கிக்கொண்டது. வெறொரு பதிப்பகம் வெளியிட்டது. அமெரிக்க நூலகங்கள் சங்கத்தால் 1990களில் அதிகமாகத் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. எல்லிஸ்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள் உலகப் புத்தகச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றன. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் துறுதுறுப்போடு, புத்தகப் படிகளைக் கடத்தி வரச்செய்து பல நாடுகளின் வாசகர்கள் படித்தார்கள். படிப்படியாகத் தடை நீர்த்துப்போனது. கதை என்னவெனில்… 1989 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் வணிகம் உச்சத்தில் இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பேட்மேன் ஒரு முதலீட்டு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான். அவன் பகல் நேரங்களில் வால் ஸ்ட்ரீட் உயரடுக்கு வட்டத்தில் பளபளப்பான வாழ்க்கையை வாழ்கிறான். இரவில் ஈவிரக்கமற்ற கொலைகளையும், பாலியல் அத்துமீறல்களையும், சித்திரவதைகளையும் செய்கிறான். தனது சகாக்களுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் கோகெய்ன் எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறான். நாகரிகமாக இருப்பது பற்றி ஆலோசனைகள் கூறுகிறான். நடத்தை விதிகள் குறித்துக் கேள்வி கேட்கிறான். அவனுக்கும் இன்னொரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எவலின் எனும் பெண்ணுக்கும் அவனுடைய விருப்பத்தை விசாரிக்காமலே, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள் பணக்காரப் பெற்றோர்கள். தனது சகோதரனுடனும் மறதிநோயாளியான தாயுடனும் தகராறு செய்கிறான். ஒருநாள், சக ஊழியர்களில் ஒருவனான ஓவன் என்பவனைக் கொலை செய்கிறான் பேட்மேன்.. பிறகு ஓவனுடைய வீட்டைக் கைப்பற்றி, தன்னிடம் சிக்குகிறவர்களை அங்கே அழைத்து வந்து கொல்கிறான். தனது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் பேட்மேன் முற்றிய உளவியல் சிக்கலுள்ளவனாக (சைக்கோ) மாறுகிறான். சாதாரண கத்திக் குத்துகளில் தொடங்கி, நீண்ட நேர பாலியல் வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புச் சிதைவு, கொல்லப்பட்டவர்களின் உடல் சதையை அறுத்து உண்ணுதல், சடலத்துடன் உடலுறவு என்று அவனுடைய உளவியல் நிலை கொடூரமாகச் சீர்குலைகிறது. பல சமயங்களில் தனது கொடூரச் செயல்களை வெளிப்படையாகத் தனது சக ஊழியர்களிடம் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கொலை, மரண தண்டனை என்று அவன் சொல்வதை, வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தோடு இணைந்த “நிறுவன இணைப்பு”, “கையகப்படுத்துதல்” என்ற பொருளில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள். நிலைமை முற்றிக்கொண்டே போகிறது.தெருவில் சீரில்லாமல் சுற்றுகிறவர்களைக் கொல்கிறான். அவனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். பேட்மேன் தப்பி ஓடி தனது அலுவலகத்தில் ஒளிந்துகொள்கிறான். ஹரோல்ட் கார்ன்ஸ் என்ற தனது வழக்குரைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறான். தொலைபேசியை அவர் எடுக்காத நிலையில் அதன் பதிலனுப்புக் கருவியில் தனது எல்லா குற்றங்களையும் சொல்ல்ப் பதிவு செய்கிறான். அந்தக் கொலை வீட்டுக்கு மறுபடியும் போகிறான். அங்கே அவன் ஏற்கெனவே இரண்டு பாலியல் தொழிலாளர்களைக் கொன்று சிதைத்திருந்தான். அழுகிய உடல்களை எதிர்பார்த்துச் செல்கிறவன் அந்த வீடு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான். துர்நாற்றம் வீசுமானால் அதை மாற்றுவதற்குக வாச மலர்கள் நிரப்பப்பட்டிருகின்றன. வீட்டு மனை வணிக முகவர் ஒருவர், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அந்த வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எந்த விளம்பரமும் இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் வர வேண்டாம் என்றும் அந்த முகவர் பேட்மேனிடம் கூறுகிறார். விலை மதிப்புமிக்க அந்த வீட்டின் விற்பனை வாய்ப்பு குறையாமல் இருப்பதற்காகக் கட்டட உரிமையாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு, கொலைகள் மறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. பேட்மேன் விசித்திரமான மாயத் தோற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறான். ஒரு உணவுத் துணுக்கிற்குள் தன்னை யாரோ நேர்காணல் செய்வதாக, ஒரு பூங்கா இருக்கை உயிர் பெற்று எழுந்து துரத்துவதாக, ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மனித எலும்புத்துண்டு கிடப்பதாக… இப்படியெல்லாம் மாயையான நிகழ்வுகளை அனுபவிக்கிறான். வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளும் பேட்மேன், அவருடைய தொலைபேசி இயந்திரத்தில் பதிவு செய்திருந்த வாக்குமூலம் பற்றிக் கேட்கிறான். அவரோ அதை ஒரு வேடிக்கை என்று கருதிச் சிரிக்கிறார். வழக்குரைஞர் கார்ன்ஸ் தன்னோடு இப்போது தொடர்புகொண்டிருப்பவன் உண்மையான பேட்மேன் அல்ல என்றும், அவனுக்கு இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் துணிவு கிடையாது என்றும் கூறுகிறார். பேட்மேனும் நண்பர்களும் ஒரு புதிய விடுதியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதோடு நாவல் முடிவடைகிறது. அங்கே எல்லோரும் பொருளாதார வெற்றிதான் உண்மையான மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு விழா மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. , பல்வேறு எழுத்துருக்களுடன் கூடிய ஒரு விளம்பரப் பலகையில் “இது வெளியேறும் வழியல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சூழல்களிலிருந்து அவனோ, அவன் உருவாக்கிய கொலைச் சூழல்களிலிருந்து மற்றவர்களோ தப்பித்து வெளியேறிவிட முடியாது என்று அந்த வாசகம் உணர்த்துகிறது. பெயர்க் காரணம் நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளர் எல்லிஸ்சிடம் அதன் தலைப்பு பற்றிக் கேட்டிருக்கிறார். 1980கள் வாக்கில் பல திரையரங்குகளும் கடைகளும் கொண்ட ஒரு பன்முக வளாகத்திற்குச் சென்றிருந்தாராம். ஒரு திரையரங்கப் பெயர்ப் பலகையில் பெரிய எழுத்துகளில் “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டப்பட்டிருந்ததாம். விசாரித்தபோது, “அமெரிக்கன் ஆந்த்தெம்“ (அமெரிக்க நாட்டுப்பண்), “சைக்கோ 3” (உளவியல் கொடூரன் 3) என்ற இரண்டு திரைப்படங்களின் தலைப்புகளைச் சேர்க்க முடியாததால், இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டியதாகச் சொன்னார்களாம்! “அதைப் பார்த்ததும் எனக்கு ‘பூம்!,’ என்று தோன்றியது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு அதுதான் தலைப்பு,” என்று கூறினார் எல்லிஸ். இலக்கியத் திறனாய்வளரான ஜெஃப்ரி டபிள்யூ. ஹண்டர், “பெருமளவுக்கு முதலாளித்துவத்தின் மேலோட்டத்தனமான சமூகப் பொறுப்பையும் அதன் கொடிய கூறுகளையும் பற்றிய விமர்சனமே இந்த நாவல். கதைமாந்தர்கள் பெரும்பாலும் பொருள்சார் ஆதாயங்களிலும் வெளித்தோற்றங்களிலும்தான் அக்கறை காட்டுகின்றனர். இந்தக் கூறுகள் “மேம்போக்குத்தனம்” உச்சம் பெறுகிற ஒரு பின்நவீனத்துவ உலகின் அடையாளங்களே. அதுதான் பேட்மேன் போன்றோர் மற்ற மனிதர்களையும் வெறும் பண்டங்களாக நினைக்க வைக்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார். நாவலின் ஒரு கட்டத்தில் பேட்மேன் ஒரு பெண்ணின் சதையை உண்ணும்போது, “எனது செயல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நான் உணர்ந்தாலும் இந்தப் பெண், இந்த உடல், இந்த சதை எதுவுமே ஒன்றுமில்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடுகிறான். அடையாளச் சிக்கல்கள் இளைஞர்களின் மனக்குழப்பங்கள், சமூகச் சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதக விளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்கிறார் நையாண்டி எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பிரெட் ஈஸ்டன் எல்லிஸ். 1964இல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் பிறந்தவரான எல்லிஸ் 1980களிலும் 90களிலும் மாறுபட்ட கலைப் பார்வைகளோடு முன்னணியில் இருந்த ‘இலக்கிய பிராட் பேக்’ என்ற இளம் எழுத்தாளர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார். அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருப்பதைக் கூறும் ‘லெஸ் தேன் ஜீரோ’, அதன் இரண்டாம் பாகமான ‘இம்பீரியல் பெட்ரூம்ஸ்’’ ஆகிய நாவல்களையும் சில ‘தி இன்ஃபார்மர்ஸ் என்ற சிறுகதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் பயண நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார். லெஸ் தேன் ஜீரோ, தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக் ஷன், தி இன்ஃபார்மர்ஸ், அமெரிக்கன் சைக்கோ (American Psycho) ஆகிய கதைகள் திரைப்பட வடிவமெடுத்துள்ளன. எடுத்துச் சொல்லப்படும் உண்மை நிலைமைகளாலும், அப்பட்டமான சித்தரிப்புகளாலும் வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிற போதிலும், பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் தனது சர்ச்சைக்குரிய படைப்புகளின் மூலம், ஆழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து, நவீன அமெரிக்க சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று இலக்கிய உலகினர் சான்றளிக்கின்றனர். https://bookday.in/books-beyond-obstacles-series-19-about-bret-easton-ellis-american-psycho-written-by-a-kumaresan/#google_vignette
  7. பகைவனுக்கும் அருள்வாய்! மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பணிவே உயர்வைத் தரும் பீமன் பிறக்கும் பொழுதே அதிக வலுவுடன் பிறந்தவன். அவன் வளர வளர அவனது தேகமும், தேகத்தின் வலிமையையும் பெருகியது. அதற்கேற்றாற்போல் அவனது பெருமையும் பரவத் துவங்கியது. ஒருவரது பெருமை அதிகம் பரவினால் அவருக்கு சிறிதளவாவது அகந்தை வரும். பீமனுக்கும் தனது வலிமை குறித்து அகந்தை இருந்தது. வனத்தில் வசித்து வந்த சமயத்தில், ஒருமுறை தனியாக காட்டில் சென்று கொண்டிருந்தான் பீமன். அடர்ந்த வனத்தின் குறுகிய பாதைகளில் அவன் சென்றுகொண்டிருந்த பொழுது அவனது பாதையை மறித்த வண்ணம் தனது நீந்தல் வாலை நீட்டிய வண்ணம் ஒரு வயதான குரங்கு ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. பீமன் வந்த சப்தத்தை கேட்டு விழித்த அந்தக் குரங்கு அவனை உற்றுப் பார்த்து “புகழ் பெற்ற வீரன் பீமன் அல்லவா நீ? உன்னை வணங்குகிறேன்” எனக் கூறியது. குரங்கு பேசுவதைக் கேட்டு வியந்த பீமன் “நான் யாரென நீ தெரிந்து வைத்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன். நான் யாரென தெரிந்து கொண்டாய் அல்லவா? இப்பொழுது உன் வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழி விடு. உன்னை போன்ற உயிரினத்தை தாண்டி செல்வது என்னை போன்ற வீரனுக்கு அழகல்ல” என கூறினான். “ஓ பீமா! எனக்கு வயதாகி விட்டது. மேலும், நோய் வாய்ப்பட்டுளேன். எனவே தயைக் கூர்ந்து நீயே என் வாலை நகர்த்தி விட்டு செல்வாயாக” என அவனைக் கேட்டது. பீமன், அந்த குரங்கின் வாலை தொட அசூயை பட்டு, தனது இடது கை சுண்டு விரலால் அதன் வாலை நகர்த்த முயன்றான். ஆனால், அதன் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அதைக் கண்டு வியப்படைந்தாலும், அதை மறைத்துக் கொண்டு தன் இடது கையால் அதை நகர்த்த முயன்றான். அப்பொழுதும் அதன் வால் அகல மறுத்தது. பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது. அவனது அகந்தை முற்றிலும் அழிந்த நிலையில் “பலவானே! யார் நீங்கள்? உங்களின் சுய ரூபத்தை எனக்கு காட்டுவீர்களாக! என்னை இனியும் சோதிக்க வேண்டாம்!” எனப் பணிவாக வேண்டினான். அவனின் பணிவான வேண்டுதலைக் கேட்ட குரங்கு தனது வேடத்தைக் களைந்தது. பீமனை சோதிக்க குரங்கின் வடிவில் வந்தது வாயு புத்திரனான ஹநுமானே! “பெருமையைக் கை விடு! இறைவனிடம் சரண் அடை! நீ வெற்றிப் பெறுவாய்! என்னுடைய முழு பலமும் பாண்டவர்களுக்கு கிட்டும்! அர்ஜுனன் தேர் கொடியில் நான் வீற்றிருப்பேன்!” என ஹனுமான் அவனை ஆசிர்வதித்தார். பகைவனுக்கும் அருள்வாய்! பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்த சமயத்தில் ஒரு பிராமணர், அரசன் திருதிராஷ்டிரனை பார்க்க சென்றார். வந்த பிராமணரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்த அரசன் பாண்டவர்களின் நலம் பற்றி அவரிடம் விசாரித்தான். அவரும் வனவாசத்தின் பொழுது பாண்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விவரித்து, எவ்வாறு அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான் என்பதைப் பற்றியும், வனத்தில் அவர்களுக்கு பிரச்சனை வரும் சமயங்களில் எல்லாம் எவ்வாறு பீமன் காப்பாற்றுகிறான் என்பதை பற்றியும் விவரித்தார். பாண்டவர்கள் படும் கஷ்டங்களை கேட்ட மன்னனின் மனம் தடுமாறியது. அதே நேரத்தில், கௌரவர்களும், கர்ணனும் அவர்களுக்கு கிடைத்த திவ்ய அஸ்திரங்களை பற்றி கேட்டு மனம் குமைந்தனர். பாண்டவர்களின் வனவாசம் முடிய குறுகிய காலமே இருந்ததால் அவர்களை எப்படியாவது சூழ்ச்சியில் சிக்கவைத்து மீண்டும் வனவாசத்திற்கு அனுப்புவதில் சகுனியும் மற்றவர்களும் குறியாக இருந்தனர். எனவே இந்தமுறை அவர்களே நேரில் செல்ல நினைத்து பாண்டவர்கள் அப்பொழுது தங்கி இருந்த காம்யக வனத்திற்கு அருகில் இருந்த த்வைதவனத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேராக அரசனிடம் சென்று த்வைதவனத்தில் ஆநிரைகளை கணக்கெடுக்க செல்ல அனுமதி வேண்டினர். அவர்களின் உண்மை நோக்கம் அறிந்த மன்னர் முதலில் அனுமதிக்க மறுத்தாலும், அவர்களின் தொடர் வேண்டுகோளால் வேறு வழியின்றி அனுமதித்தார். அவர் அனுமதி கிடைத்தவுடன், துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் மற்றும் தன் படைகள் சூழ த்வைதவனத்திற்கு விரைந்தான். அங்கே வந்தவுடன் ஏரிக்கு அருகே பாண்டவர்கள் முகாம் அமைந்துள்ளதாக தகவல் கிடைக்க, தங்கள் முகாமையும் அங்கேயே அமைக்க துரியோதனன் உத்தரவிட்டான். அவனது உத்தரவை ஏற்று அங்கே சென்று கூடாரங்கள் அமைக்க முயன்றனர். ஆனால் அங்கே இருந்த கந்தர்வர்களின் படை அவர்களை விரட்டி அடித்தது. தங்கள் முயற்சியில் தோற்ற வீரர்கள் திரும்ப சென்று துரியோதனனிடம் முறையிட்டனர். தன் வீரர்கள் துரத்தி அடிக்கப்பட்டதில் கோபம் கொண்ட துரியன், தன் நண்பர்களையும் படையையும் அழைத்துக் கொண்டு கந்தவர்களை எதிர்த்து சண்டையிட சென்றான். கௌரவர்களுக்கும் கந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கந்தவர்களின் தெய்வீக அஸ்திரங்களை கௌரவர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத கர்ணன் போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். துரியோதனன் எதிரிகளிடம் தனியாக சிக்கிக் கொள்ள, கந்தர்வர்கள் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து தங்கள் தலைவனிடம் கொண்டு சென்றனர். பல கௌரவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து பாண்டவர்களின் கூடாரத்திற்கு சென்று யுதிஷ்டிரனிடம் முறையிட்டனர். அதை கேட்ட பீமன், அவர்களுக்கு இது தேவைதான். இதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறினான். மற்ற அனைத்து சகோதரர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் , தர்மனின் கட்டளைப்படி , அர்ஜுனன், நகுலன், சகாதேவன் புடை சூழ கந்தவர்களை எதிர்க்க பீமன் சென்றான். இரு தரப்பினரிடையே கடுமையான யுத்தம் துவங்கியது. கந்தர்வர்கள் தங்களிடம் இருந்த அனைத்துவிதமான திவ்ய அஸ்திரங்களை கொண்டு பாண்டவர்களை எதிர்க்க, அர்ஜுனனோ அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினான். இதை கண்டு வியந்த கந்தர்வர்கள் தங்கள் தலைவனிடம் சென்று முறையிட அங்கே வந்தான் சித்ரசேனன். சித்ரசேனனை கண்டு அர்ஜுனன் வியந்தான். அர்ஜுனன் இந்திரனின் சபைக்கு சென்ற சமயத்தில் அவனது நடன குருவாக இருந்தது சித்ரசேனனே. நீண்ட நாள் கழித்து சந்தித்த இருவரும் மகிழ்ந்து நலம் விசாரித்தனர். அதற்கு சித்ரசேனன் “துரியோதனன், தனது நண்பர்களுடன் இணைந்து உங்களுக்கு தொந்தரவு தரப்போவதாக அறிந்தோம். அதனால் இந்திரன் என்னை படைகளும் இங்கே அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு தரக் கூறினார்” என தான் வந்த நோக்கத்தை விளக்கினான். பின், அவர்களிடம் இருந்து துரியனையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு தர்மரிடம் அழைத்து சென்றான் அர்ஜுனன். துரியோதனனுக்கு அறிவுரை கூறியப் பிறகு அவனை விடுவித்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினான் தர்மன். https://solvanam.com/2025/07/13/பகைவனுக்கும்-அருள்வாய்/
  8. தப்பிச்சான் சாத்தான். இதைவிட விரிவாக யாராலும் விசாரித்தறிய முடியாது. அதுதானே. "கூரை மீதேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." தன்ர நாட்டில படிச்சு பட்டம் பெற முடியாதவரெல்லாம், வெளிநாட்டில படிச்சு பட்டம் பெற்று நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள். இந்தக்குடும்பத்தால நாடே நாறுது. இதுக்குள்ள பிக்குகள் காவடி தூக்குதுகள் இவர்களுக்கு.
  9. கள்ளக் கம்பி விக்கிறவன் வேறு யாராக இருக்க முடியும்...வாங்கிறவனும் நம்ம ஆள்தான்..
  10. City of Brampton – Your Local Government · Follow 3h · This morning, a community flag raising was held in Ken Whillans Square to recognize Tamil Eelam National Flag Day. The City of Brampton recognizes November 21 as Tamil Eelam National Flag Day, honouring the collective identity of the Eelam Tamil nation and their ongoing resistance to genocide. We join Brampton’s Tamil community in recognizing this day and celebrating the many contributions of Tamil residents across our city. Learn about the City’s flag raising program: என்னைப் பொறுத்தவரை ...சரி பிழை...தேவை தேவையில்லை ..எனபதை ஆராயவிரும்பவில்லை ...ஆனால் இதனை கனடாவில் நடத்திக் காட்டியிருக்கின்றார்கள் ...அவர்களை பாராட்டலாம்...தேவையா ...தேவையில்லையா என்றும் கருத்து இங்கு வரலாம் ...அதற்கு நான் இங்கு விடைதரமாட்டென் ...அது ஒவ்வொருவர் கருத்தாக இருக்கட்டும் ...என்னை பொறுத்தவரை எதுவும் முயன்றால் முடியாத்தௌ ஒன்றில்லை ...உதாரணம் நாமல் ராஜபக்ச..
  11. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீழ்ந்தபடியால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டில் என்றாலும் பரவாயில்லை. இன்னொரு செல்வம் கொளிக்கும் நாட்டில் பழைய விமானத்தை சரிபிழை சரியாக பார்க்காமல் சாகசம் காட்டுவதா?
  12. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே ?
  13. புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன் Published By: Priyatharshan 21 Nov, 2025 | 11:36 AM கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர். இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது. உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும். இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொடி தினத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் மற்றும் ஈழத்தமிழர்கள், பிரம்டன் குடியிருப்பாளர்கள், பரந்த சமூகத்தினரிடையே பகிரப்பட்ட புரிதல், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230990
  14. ஏ.ஐ துறையில் இது நடந்தால் 'எந்த நிறுவனமும் தப்பிக்காது' - சுந்தர் பிச்சை எச்சரிக்கை கட்டுரை தகவல் ஃபைசல் இஸ்லாம் பொருளாதார ஆசிரியர் ரேச்சல் க்ளன் வணிக செய்தியாளர் 18 நவம்பர் 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவுக்காக்கான மவுசு குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பிபிசி நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார். சமீபத்திய மாதங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் இது பற்றிய அச்சங்கள் நிலவி வருகின்றன. மேலும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் இந்த தொழில்துறையில் பெரிய அளவில் செலவு செய்கின்றன. செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து கூகுள் தப்பித்துக் கொள்ளக்கூடுமா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னையை கூகுள் சமாளிக்க முடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார். ஆனால் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசினார். செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாக தீவிரமான ஆய்வு இருக்கும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images போட்டி யாருடன்? ஆல்ஃபபெட் பங்குகளின் மதிப்பு ஏழு மாதங்களில் இரட்டிப்பாகி 3.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், கூகுள் நிறுவனத்துக்கு ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI உடனான போட்டியை சமாளிக்கும் திறன் அதிகம் உள்ளது என்று சந்தையில் நம்பிக்கை இருப்பதுதான். அல்பபெட் நிறுவனம் உருவாக்கி வரும் ஏ.ஐக்கான சிறப்பு சூப்பர் சிப்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சிப்கள், சமீபத்தில் உலகில் முதல்முறையாக $5 டிரில்லியன் மதிப்பை எட்டிய, என்வீடியா நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன. மதிப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வாளர்கள் OpenAI-ஐ சுற்றியுள்ள சிக்கலான 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு OpenAI- யின் வருமானம் மிகக்குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலீட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான வருவாயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images டாட்காம் ஏற்றத்தின் போது, 2000 -ஆம் ஆண்டில் அந்த சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்பே, 1996-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் சந்தையில் நிலவிய "பகுத்தறிவற்ற உற்சாகம்" குறித்து எச்சரித்தார். அதே கருத்துக்களை எதிரொலிக்கும் தொனியில் பேசிய சுந்தர் பிச்சை, இது போன்ற முதலீட்டு சுழற்சிகளில் தொழில்துறை "மிகையாக முதலீடு செய்யக்கூடும்'' என்று கூறினார். "நாம் இப்போது இணையத்தை திரும்பிப் பார்க்கலாம். நிறைய அதிகப்படியான முதலீடு (அப்போது) இருந்தது, ஆனால் இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யாருக்கும் சந்தேகங்கள் இல்லை," என்று அவர் கூறினார். "ஏ.ஐயும் அதே மாதிரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது பகுத்தறிவு மற்றும் இது போன்ற ஒரு தருணத்தில் பகுத்தறிவற்ற கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றார். சிப் முதல் யூடியூப் தரவு, அதிநவீன அறிவியல் வரை – அனைத்தையும் சொந்தமாக கொண்டிருப்பது கூகுளின் தனித்துவம் என்றும் இதனால் செயற்கை நுண்ணறிவு சந்தை மாற்றங்களை சமாளிக்கும் நிலையில் கூகுள் இருப்பதாக பிச்சை கூறினார். சுந்தர் பிச்சையின் நிறுவனம் பிரிட்டனிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. செப்டம்பரில், ஆல்ஃபபெட் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டை உறுதி செய்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அதன் முக்கிய செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப்மைண்ட் உட்பட பிரிட்டனில் "அதிநவீன" ஆராய்ச்சிப் பணிகளை ஆல்ஃபபெட் உருவாக்கும் என்று பிச்சை கூறினார். அதிகபடியான மின்சார தேவைகள் முதல் முறையாக, கூகுள் "காலப்போக்கில்" "நமது (ஏஐ) மாதிரிகளை பயிற்றுவிக்க" ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் கூறினார். இது பிரிட்டன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஏ.ஐ "வல்லரசு" ஆக பிரிட்டனை உறுதிப்படுத்தும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் நம்புகின்றனர். "பிரிட்டனில் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் முதலீடு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பிச்சை கூறினார். இருப்பினும், சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகின் மின்சார நுகர்வில் 1.5% ஆக இருந்த செயற்கை நுண்ணறிவின் அதிகபடியான மின்சார தேவைகள் குறித்தும் அவர் எச்சரித்தார். "ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த (நெருக்கடிக்கு உள்ளாக்க) விரும்பவில்லை. அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். தனது நிறுவனத்தின் விரிவடைந்து வரும் ஏ.ஐ முயற்சிகள் காரணமாக மின்சார தேவைகள் தீவிரமாக இருப்பதால், நிறுவனத்தின் காலநிலை இலக்குகளில் சறுக்கல் இருக்கின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2030-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கை ஆல்ஃபபெட் இன்னும் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். 'மிக ஆழமான தொழில்நுட்பம்' ஏ.ஐ நாம் வேலை செய்யும் முறையையும் மாற்றும் என்று சுந்தர் பிச்சை கூறினார். இது மனிதகுலம் பணியாற்றிய "மிக ஆழமான தொழில்நுட்பம்" என்று கூறினார். "சமூக இடையூறுகளுக்கு நடுவில் நாம் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார், இது "புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றும் கூறினார். "இது சில வேலைகளை உருவாக்கி மாற்றும், மேலும் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஏ.ஐக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்கள் "சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார். "நீங்கள் ஒரு ஆசிரியராக [அல்லது] மருத்துவராக இருக்க விரும்புகிறீர்களா என்பது முக்கியமல்ல. அந்த தொழில்கள் அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த தொழில்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்படும் நபர்கள் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8749jzjxn2o
  15. வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂 "அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂
  16. பொறுமையின் சிகரமே சுவியர்தானே!
  17. வணக்கம் வன்னியரே. எப்படி இருக்கிறீர்கள்? கட்சி மாறியதுடன் ஆளையே காண முடியவில்லையே?
  18. தவறாக விதிக்கப்பட்ட சாபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் தான் யார், தனது பிறப்பு எப்படிப்பட்டது என்பது தெரியாத காரணத்தால் ஒருவன் தன் பிறப்பில் இறந்து அவமானங்களை சந்திக்கவேண்டிய நிலையை யோசித்துப் பாருங்கள்! சூரியபுத்திரனான கர்ணன், சிறு வயதில் இருந்தே இந்த ஒரு காரணத்திற்காக பல அவமானங்களை சந்தித்தான். குந்தி, தனக்கு ரிஷி துர்வாசர் கொடுத்த வரத்தை விளையாட்டுத்தனமாக பரிசோதித்து பார்க்க அதன் விளைவாக பிறந்தவன்தான் கர்ணன். பிறப்பிலேயே குந்தி அவனை பிரிந்துவிட தேரோட்டியின் மகனாக வளர்ந்தான் கர்ணன். தேரோட்டியின் மனைவியான ராதை அவனை பாசமுடன் வளர்த்ததனால் ராதேயன் என அழைக்கப்பட்டான். சத்ரியனாக பிறந்தாலும் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்த காரணத்தினால் சூத புத்திரன் எனவும் அழைக்கப்பட்டான். அனைத்து வகையான ஆயுத பிரயோகமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் குரு துரோணாச்சார்யரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். ஆனால் , அவரோ தான் குரு வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் எனவும், கர்ணன் சூத புத்திரன் என்பதால் தன்னால் அவனை சீடனாக ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் மறுத்துவிட்டார் அவர். அதனால். கர்ணன் துரோணரின் குருவும், சத்ரியர்களை வெறுத்தவருமான ஸ்ரீ பரசுராமரை அணுகினான். அவரிடம் தான் ஒரு பிராமணன் என சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு அஸ்திர பிரயோகம் கற்றுத் தரும்படி வேண்டினான். அவனது பணிவான வேண்டுகோளைக் கண்டு அவரும் அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு பயிற்சி தரத் துவங்கினார். அவனது நடவடிக்கைகளால் கவரப்பட்டு மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எனக் கருதப்பட்ட பிரம்மாஸ்திரம் மற்றும் பார்கவாஸ்திரங்களையும் அவனுக்குப் பயிற்றுவித்தார். ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு. அந்த காயத்தில் இருந்து வெளிவந்த அவனது ரத்தம் தரையில் ஓடத் துவங்கியது. அப்பொழுதும் அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான். தரையில் ஓடிய அவனது இரத்தம் பரசுராமரை நனைக்க அதனால் உறக்கம் களைந்து எழுந்தார். அங்கே கர்ணனின் தொடையில் இருந்து ரத்தம் பெருகி ஓடுவதை கண்டவர் என்ன நடந்தது என்பதை உணர்ந்துக் கொண்டார். கோபத்துடன் எழுந்த அவர் “ராதேயா! சத்ரியர்கள் மட்டுமே இத்தகைய பெரும் வலியை பொறுத்துக் கொள்ள இயலும். பிராமணர்களால் இத்தகைய வலியை எப்பொழுதும் பொறுத்துக்கொள்ள இயலாது. உண்மையை கூறு யார் நீ?” என வினவினார். ஆயுத பிரயோகம் கற்றுக் கொள்ள வேண்டியே தான் பிராமணன் என பொய் சொன்னதாகக் கூறி அவரிடம் மன்னிப்பு வேண்டி நின்றான் கர்ணன். “என்னிடம் பொய் கூறி நீ கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் உனக்கு மிக தேவையான சமயத்தில் மறந்து போகும்!” என சாபமிட்டார். அவன் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுக்கு தேவையான நேரத்தில் மறந்து போனது. துரியோதனனின் நம்பிக்கை துரியோதனன் என்னும் பெயரை கேக்கும் பொழுதும் நம் முன் பல எதிர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். துரியோதனன் என்னும் பெயரின் அர்த்தமே மோசமான வீரன் என்பதாகும். ஆனாலும், அவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்தன. தன் மரணம் வரை போரிட்ட உண்மையான சத்ரியன். மிக சிறந்த “கதை” வீரன் மற்றும் பலராமனுக்கு பிடித்த சீடனும் கூட. அதே போல், நட்பை மிகவும் மதித்து கர்ணனுக்கு வேண்டியதை செய்தவன். குரு வம்ச இளவரசர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருகுல காலம் முடியும் தருணத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை மக்கள் முன் வெளிப்படுத்தும் வண்ணம் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் தன் அஸ்திர திறமையால் மக்களை கட்டிப் போட்டிருந்தான். அந்த நேரத்தில், அவனைப் போன்றே இளமையாகவும், சிறந்த வலிமையுடனும் தோன்றிய ஒருவன் அங்கே வந்தான். அதுவரை அர்ஜுனன் செய்த அனைத்து வித்தைகளையும் இவனும் எளிதாக செய்தான். அர்ஜுனனை தன்னுடன் நேருக்கு நேர் மோதுமாறு அழைத்தான். அதே நேரத்தில் கிருபாச்சாரியார், அர்ஜுனனுடன் மோதும் முன் அவனது பிறப்பை பற்றி கூறுமாறு கேட்டார். இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் எழுந்து ” அவன் செய்த வித்தைகளை பார்த்து அவன் சத்திரியன் எனத் தெரியவில்லையா? அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்பது இங்கே முக்கியமில்லை. அவனது திறமை மட்டுமே முக்கியம். இருந்தும் அவன் இளவரசனாகவோ அல்லது அரசனாகவோ இருப்பது முக்கியம் என்றால் , இங்ஙனமே அவனை அங்க தேச அரசனாக நியமிக்கிறேன்” என்றான். பின், அவனது தந்தை மற்றும் பீஷ்மரின் அனுமதி பெற்று, அங்கேயே கர்ணனை அங்க தேச அரசனாக நியமிக்கும் சடங்குகளை துவங்கினான். அந்த சடங்குகள் முடிந்த தருணத்தில் அங்கே ஒரு வயதான தேரோட்டி பயந்து கொண்டே வந்தார். அவரைக் கண்டதும் கர்ணன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைக் கண்டா பீமன் இடி சிரிப்புடன் ” நீ தேரோட்டியின் மகனா? உன் தந்தையின் சாட்டைகளை எடுத்துக் கொள். அங்க தேசத்தை ஆள மட்டுமல்ல , அர்ஜுனனின் அம்புகளால் கொல்லப்படுவதற்குக் கூட உனக்கு தகுதியில்லை” என்றான். இதைக் கேட்ட துரியோதனன் “விருகோதரா! இத்தகைய வார்த்தைகளை நீ பேசுவது அழகல்ல. அவனது கவசத்தையும், குண்டலங்களையும் பார். இந்த உலகையே ஆளத் தகுதி வாய்ந்தவன் அவன். நதி மூலமும் ரிஷி மூலமும் பார்ப்பது தவறு” எனக் கூறினான். அதே சமயத்தில் விழா முடிய , துரியோதனன் தன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான். https://solvanam.com/2025/06/22/தவறாக-விதிக்கப்பட்ட-சாபம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.