Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88064
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2978
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10732
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    16487
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/24/25 in all areas

  1. "ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்
  2. ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1457050
  3. அத தெரண கருத்துப்படங்கள்.
  4. பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது – இது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு. அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாத், காசிம் மற்றும் கிழக்குப் பகுதியின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது. இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது. இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) எதிர்பாராத குளிர்கால மழை, தெற்காசியாவில் வரலாறு காணாத வெப்ப அலைகள், பொதுவாக வறண்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண பனிப்பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை எவ்வாறு அடையாளம் காண முடியாததாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1457130
  5. மிக பிந்திய செய்தி ஒன்று அனுர தொய் பபா… அவருக்கு மூக்கை பிடித்தால் வாயை திறக்கத்யெரியாது…. பிகு காவடியில்தான் எத்தனை எத்தனை வகைகளடா சாமி😂
  6. //மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப் பட்ட நிகழ்வில்... சிங்கள காவல்துறை கீழே தள்ளி விழுத்துகின்றது.// - இதுதான் செய்தி. - அதற்கு, "தற்குறித்தனமாக" ஓவியம் வரைந்த உங்களை நினைக்க பரிதாபமாக உள்ளது. சிலரது செயல்பாடுகள்... அவர்கள் எப்படிப்பட்ட வக்கிரபுத்தி உடையவர்கள் என்பதை... அவர்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள். உங்களுடைய சுத்துமாத்து சுமந்திரன்... இப்படியான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல், எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றார்? இதற்குள்... வட மாகாண முதலமைச்சராகும் ஆசையும் இருப்பது கேவலம்.
  7. டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்! இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்கள் நுழைவழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற வேளை ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் நு‍ழைவு என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார். இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் இரத்தம் வழிந்தது. முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முறைப்பாடு அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். https://athavannews.com/2025/1456836
  8. பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண். நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
  9. இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
  10. மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. அப்படியே வடக்கிலும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தால் புண்ணியமாக போகும்.
  12. ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கலாச்சாரம், மீளுருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவை உறுப்பினராக பதவி வகித்தார். அண்மையில் அவர் ஆலோசனை நிறுவனமான பிரசெடோவில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் யங் தவிர மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் இன்று ஸ்விண்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வில்ட்ஷயர் பொலிஸார் மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1457042
  13. வீட்டில் தாயும் இருந்திருக்கிறார். அவாவை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டுத்தான் செய்தவர் என்றால் .... ஆனாலும் மனா அழுத்தம், மன நோயின் தாக்கம் நாங்கள் விபரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றே கூறுகிறார்கள். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை /உதவி பெற்று இருக்கலாம். இறந்தவரின் சகோதரி, அந்த மகனின் மனமாற்றத்துக்கு இலங்கைக்கு கூட்டிச்செல்ல முயற்சித்தார்கள் என்ற தொனிப்படவே செய்தி சேவை ஒன்றுக்கு கூறியிருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.