Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    2162
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    32314
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88132
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19261
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/25/25 in Posts

  1. மிக்க நன்றி பிரியன் அண்ணை. மிக்க நன்றி புங்கை அண்ணை. மிக்க நன்றி சிறி அண்ணை. மிக்க நன்றி கிருபன் அண்ணை. மிக்க நன்றி உடையார் அண்ணை. மிக்க நன்றி யாயினி அக்கா. மிக்க நன்றி நந்தன் அண்ணை. மிக்க நன்றி ரசோ அண்ணை. நேற்று 24/12 எனது பிறந்தநாள், எதிர்பாரத விதமாக உறவுகள் நண்பர்கள் சிலர் வீடு வந்து வாழ்த்தினார்கள்.
  2. யேர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையை 70ஆக்கினால் என்ன என்று அரச சிந்தனைக்குழாம் சிந்திப்பதாகத் தொழிலாளர்களிடையே உரையாடல் வந்துபோகிறது. இதிலே எப்படியாம் 60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது? பிறந்த ஆண்டின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்: 1957: 65 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள். 1959: 66 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள். 1964: 67 ஆண்டுகள் (2031 இல் முழுமையடைகிறது) இந்தத் தரவுப்படி "70மேல் இளமையாக.. " என்றுதான் தலைப்பைப் போட வேண்டும் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. “60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்! 25 Dec 2025, 6:57 AM “வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்! 1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள். 2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும். 4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும். 5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல! முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்! https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/
  4. பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணிக்கை - வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், புதிய நட்சத்திரங்களின் உற்பத்தி வேகம் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நட்சத்திரங்களின் பிறப்பும் இறப்பும் தற்போதைய ஒருமித்த அறிவியல் கருத்தியலின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சிறிது காலத்திலேயே முதல் நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கின. உண்மையில், கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நமது பால்வெளி அண்டத்திலேயே 13 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று நட்சத்திரங்களைக் கண்டறிந்தது. நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப் பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. விண்வெளித் தூசு மற்றும் வாயுக்கள் நிறைந்த நெபுலா எனப்படும் பிரமாண்ட மேகக்கூட்டங்களில் இவை உருவாகின்றன. ஈர்ப்பு விசை வாயுத் திரட்சிகளை ஒன்றாக இழுக்கிறது; இது இறுதியில் வெப்பமடைந்து ஒரு 'குழந்தை நட்சத்திரமாக' அல்லது புரோட்டோஸ்டாராக மாறுகிறது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI; Processing: J DePasquale/A Pagan/A Koekemoer (STScI) படக்குறிப்பு,குழந்தை நட்சத்திரங்கள் (புரோட்டோஸ்டார்கள்) அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தரும் மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன நட்சத்திரத்தின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவுக்கு வெப்பமடையும்போது, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற, 'அணுக்கரு இணைவு' என்ற செயல்முறை நடைபெறுகிறது. இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. இப்போது நட்சத்திரம் ஒரு நிலையான 'முதன்மை வரிசை' கட்டத்தில் இருக்கும். நமது சூரியன் உள்பட முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களே பிரபஞ்சத்தின் மொத்த நட்சத்திரங்களில் 90% உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவை சூரியனின் நிறையைப் போல பத்தில் ஒரு பங்கு முதல் 200 மடங்கு வரை இருக்கின்றன. இறுதியில் இந்த நட்சத்திரங்கள் எரியூட்டும் எரிபொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும். நமது சூரியனை போன்ற குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மங்கி மறையும் செயல்முறைக்கு உள்ளாகின்றன. சூரியனைவிட குறைந்தது எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்ட நட்சத்திரங்களின் முடிவு மிகவும் வியத்தகு முறையில் இருக்கும்: அவை சூப்பர்நோவா எனப்படும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறுகின்றன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images பழைய நட்சத்திரங்களின் ஆதிக்கம் கடந்த 2013ஆம் ஆண்டு, நட்சத்திர உருவாக்கப் போக்குகளை ஆய்வு செய்த சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் குழு ஒன்று, இனி உருவாகப் போகும் மொத்த நட்சத்திரங்களில் 95% ஏற்கெனவே பிறந்துவிட்டன என்று கூறியது. "தெளிவாகப் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் அந்தக் காலகட்டத்தில் சுபாரு தொலைநோக்கி இணையதளக் கட்டுரையில் கூறியிருந்தார். பிரபஞ்சத்தின் காலவரிசையில், 'காஸ்மிக் நூன்' என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில்தான் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. "அண்டங்கள் வாயுவை நட்சத்திரங்களாக மாற்றுகின்றன, ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே அதைச் செய்கின்றன," என்கிறார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் பேராசிரியரான டக்ளஸ் ஸ்காட். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யூக்ளிட் மற்றும் ஹெர்ஷல் தொலைநோக்கிகளின் தரவுகளை ஆய்வு செய்த ஒரு புதிய ஆய்வின் இணை ஆசிரியராக பேராசிரியர் ஸ்காட் உள்ளார். பிரபஞ்சத்தின் பிரமாண்டமான 3D வரைபடத்தை உருவாக்கும் யூக்ளிட் திட்டத்தின் மூலம், அவரும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவும் ஒரே நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான அண்டங்களை ஆய்வு செய்ய முடிந்தது. பட மூலாதாரம்,Esa/Euclid/Euclid Consortium/Nasa; Processing: JC Cuillandre (CEA Paris-Saclay)/G Anselmi படக்குறிப்பு,யூக்ளிட் விண்வெளித் திட்டம், விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் பகுதியின் விவரங்களைப் படம் பிடித்துள்ளது குறிப்பாக விண்வெளித் தூசுகள் வெளியிடும் வெப்பத்தின் மீது ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். அதிக நட்சத்திர உருவாக்க விகிதத்தைக் கொண்ட அண்டங்கள், பெரிய மற்றும் வெப்பமான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதால் அதிக வெப்பமான தூசுகளைக் கொண்டிருக்கும். பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக அண்டங்களின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருவதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்காட் கூறுகிறார். "நாம் ஏற்கெனவே நட்சத்திர உருவாக்கத்தின் உச்சகட்டத்தைத் தாண்டிவிட்டோம், ஒவ்வொரு தலைமுறை நட்சத்திர உருவாக்கத்திலும் புதிய நட்சத்திரங்கள் குறைவாகவே பிறக்கும்," என்று அவர் கூறுகிறார். பிரபஞ்சம் எப்போது முடிவுக்கு வரும்? பழைய நட்சத்திரங்களின் மரணம் அதே பொருட்களைப் பயன்படுத்திப் புதிய நட்சத்திரங்கள் உருவாக வழிவகுக்கும் என்பது உண்மைதான், ஆனால் இது அவ்வளவு எளிமையானதல்ல. நமக்கு ஒரு குவியல் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். நாம் புதிய வீடு ஒன்றைக் கட்ட விரும்பினால், பழைய கட்டடத்தை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் அதிலுள்ள அனைத்துமே பயனுள்ளதாக இருக்காது. "அதாவது நாம் ஒரு சிறிய வீட்டையே கட்ட முடியும். ஒவ்வொரு முறை அதை இடிக்கும்போதும் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள் என்னால் ஒரு வீட்டைக்கூட கட்ட முடியாத நிலை வரும் அளவுக்குக் குறைந்து கொண்டே இருக்கும்," என்று பேராசிரியர் ஸ்காட் விளக்குகிறார். நட்சத்திரங்களுக்கும் இதுதான் நடக்கிறது. "ஒவ்வொரு தலைமுறை நட்சத்திரங்களுக்கும் எரியூட்டக் குறைந்த எரிபொருளே இருக்கும். இறுதியில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கக்கூடப் போதுமான எரிபொருள் இருக்காது" என்று அந்த அண்டவியலாளர் கூறுகிறார். பட மூலாதாரம்,Nasa/SDO படக்குறிப்பு,நமது சூரியன் இறுதியாக மங்கி மறைவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர் "பிரபஞ்சத்தில் பெரிய நிறை கொண்ட நட்சத்திரங்களைவிடக் குறைவான நிறை கொண்ட நட்சத்திரங்களே மிகவும் அதிகம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்." பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தத்துவங்களை முன்வைத்து வருகின்றனர். அது எப்படி, எப்போது என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று 'வெப்ப மரணம்' (heat death). 'பிக் ஃப்ரீஸ்' (Big Freeze - மகா உறைநிலை) என்றும் அழைக்கப்படும் இது, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும்போது, ஆற்றல் பரவி, இறுதியில் உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியடையும் என்று கணிக்கிறது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று விட்டு விலகி தூரமாகச் செல்லும், அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடும் மற்றும் புதிய நட்சத்திரங்கள் உருவாகாது. பேராசிரியர் ஸ்காட் அளிக்கும் விளக்கத்தின்படி, "பிரபஞ்சத்தில் கிடைக்கும் ஆற்றலின் அளவு வரையறுக்கப்பட்டது." பட மூலாதாரம்,Esa/Webb/Nasa/CSA/J Lee/PHANGS-JWST Team படக்குறிப்பு,பல அண்டங்களில் நட்சத்திர உருவாக்கம் இன்னும் மிக நீண்ட காலத்திற்குத் தொடரும் நிறைய பூஜ்ஜியங்கள் ஆனால் நீங்கள் வானத்தை ஏக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக, நட்சத்திரங்களின் அழிவு நிகழ மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிய வேண்டும். நமது சூரியன் மறைந்த பிறகும், அடுத்த 10 முதல் 100 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் என்று பேராசிரியர் ஸ்காட் மதிப்பிடுகிறார். 'பிக் ஃப்ரீஸ்' நிலையைப் பொறுத்தவரை, அது இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு சுமார் ஒரு 'குவின்விஜிண்டில்லியன்' ஆண்டுகளில் வரும் என்று மதிப்பிட்டனர். அதாவது, ஒன்றுக்குப் பின்னால் 78 பூஜ்ஜியங்களை கொண்ட ஆண்டு எண்ணிக்கை அது. எனவே, நீங்கள் தெளிவான இரவு வானத்தைப் பார்த்து, நட்சத்திரங்களை ரசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lvqjd9lxno
  5. deutsche bundesbank ஜேர்மன் நாட்டின் அரசவங்கி ஜேர்மன் நாட்டில் இன்றைய நாளில் பொருளாதாரம் என்பது மந்தமான நிலையில் தான் உள்ளது. இந்த மந்தமான நிலை ஜெர்மனியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் உள்ளது அந்த அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் அரசியல் ரீதியாக கணிக்கப்படும் பொழுது சிறிது முன்னுக்குப் பின்னாகவே இருக்கும். உலகளாவிய ரீதியில் ஜெர்மனியின் பொருளாதாரம் இனிமேல் முதன்மை நிலைக்கு வரமுடியாது. மக்கள் அரசையும் அரசு மக்களையும் காரணம் காட்டித் தப்பிக்கும் நிலையில் இன்று ஜெர்மனியின் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கின்றது சிலர் குடியேறிகளின் மீது பழியுயைச் சுமத்தும் நிலையில் சிலர் ட்ரம்பின் வரிச் சுமையைக் காரணம் காட்டுகின்றனர். என்னுடைய கணிப்பின்படி பொருளாதாரம் உலகிலேயே இன்று ஒரு போர்க் கால சூழ்நிலையில் இருக்கின்றது . ரஸ்யாவின் மேற்குலகின் மீதான போர் அச்சம் உக்கிரையேன் நாட்டில் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு நேட்டோவின் ரஷ்ய நாட்டின் மீதான பகை ஈரான் இஸ்ரேல் காசா தைவான் சீனா போர்ச் சூழல் எனப் பல வகையான காரணங்கள் உள்ளன ஆனாலும் ஒரேயடியாக அடிபட்டுப் போகும் அளவில் ஜெர்மனியின் பொருளாதாரம் விழவில்லை . உண்மையிலேயே ஜெர்மனி நாட்டவர்கள் எந்தச் சூழலிலும் இருந்து மீண்டுவரும் பண்பினைக் கொண்டவர்கள்
  6. வாசித்தேன், ரசித்தேன். தவிர்த்தலும் நிம்மதிக்கு ஒரு வழி!
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன்
  8. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஏராளன் தம்பி.🙏
  9. எல்லாம் நல்லதான் போய்கிட்டு இருந்திருக்கும், ஆன அவசரதில்ல Parking கியரை மாற்றி பிடிச்சு இழுந்திட்டா போல இருக்கு☹️
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்
  11. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  12. வீட்டிலும் ஒரு மிருதங்கம் உறைக்குள் தூசு படியாமல் இருக்கின்றது. இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லை! ஆர்வம் இல்லாதவற்றை திணிப்பது என் வழக்கம் இல்லை. இளைப்பாறும் காலத்தில் நொட்டிப் பழகலாம் என்று வைத்திருக்கின்றேன்😃
  13. விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா ; பத்து ஆண்டுகளில் நிலவில் அணுமின் நிலையம் Published By: Digital Desk 2 25 Dec, 2025 | 10:32 AM விண்வெளி ஆய்வில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா, 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து நிலவில் நிறுவவுள்ள கூட்டு ஆய்வு மையத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா உள்ளது. ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தைரஷ்யா ஒகஸ்ட் 2023 இல் ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்யாவின் அரச விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), 2036 ஆம் ஆண்டுக்குள் சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி போட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234375
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎂🎊🎈
  15. கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 / In English & Tamil அடுத்த வருடம் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கிறிஸ்துமஸ் சத்தமாக இருந்தது. பிரகாசமாக இருந்தது. மேலும் வணிக ரீதியாக இருந்தது. கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] நெருப்பிடம் [fireplace] அருகே தொங்கவிடப்பட்ட காலுரை [ஸ்டாக்கிங்ஸ் / Stockings] காணப்பட்டது. குழந்தைகள் சாண்டா கிளாஸ் [Santa Claus] புகைபோக்கியில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர். அடுத்த நாள் குழந்தைகள் எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தனர். அன்று இரவு, சாரா கேட்டாள், “சாண்டா [Santa Claus] பரிசுகளை கொண்டு வந்ததாக நீங்கள் எப்போதாவது நம்பினீர்களா?” சாமுவேல் சிரித்தான். “நான் குழந்தையாக இருந்தபோது, ஆம். ஆனால் நான் ஏன் என்று ஒருபோதும் கேட்டதில்லை.” அவன் கொஞ்சம் இடைநிறுத்தினான். அதன் பின், “நாங்கள் மரபுகளில் பிறந்தவர்கள். நாங்கள் அவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறோம். பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்புவதை ஏன் நம்புகிறார்கள் என்று கேட்பவர்கள் மிகக் குறைவு.” அப்பொழுது, தனது சாதாரண வகுப்பில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்த தனது பள்ளி ஆசிரியரை சாரா நினைவு கூர்ந்தார், ஏன் என்றால், அவர் கிரகணங்களின் போது உண்ணாவிரதம் இருந்தார். அதேவேளை, சாரா, அவனின் பதிலை சங்கடமாக உணர்ந்து, ஒரு பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அவளும் அப்படியே, ஒன்றும் ஏன் என்று கேட்பதில்லை. அது சரி சாரா, கொஞ்சம் என்னைப் பார் என்றவன் நாம், "நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்றான். மூன்றாவது கிறிஸ்துமஸ் அமைதியாக வந்தது. இந்த முறை, பைபிளைத் திறந்தது சாரா தான். அவள் லூக்கா, அத்தியாயம் 2 ஐ [Luke 2 / The Birth of Jesus] சத்தமாக, "அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று வாசித்து விட்டு, அவள் சாமுவேலைப் பார்த்து, “குளிர்காலத்தில் மேய்ப்பர்கள் அதைச் செய்வார்களா?” என்று கேட்டாள். “இல்லை,” என்று சாமுவேல் மெதுவாக பதிலளித்தான். பின், “பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். ” என்றான். அவன் அவளுக்கு மற்ற வசனங்களைக் எடுத்துக் காட்டினான்: சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] வாசித்து முடிய அவன் அவளுக்கு சொன்னான்: “பைபிளே குளிர்காலம் கடுமையாக இருந்தது என்று காட்டுகிறது, எனவே இயேசு டிசம்பரில் பிறந்திருக்க முடியாது.” என்றான். சாரா கொஞ்சம் தயக்கத்துடன் மெதுவாக பைபிளை மூடினாள். கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது - கோபத்தால் அல்ல, விசுவாசம் எடுத்தவுடன் உடைவதில்லை என்பதால். “அப்படியானால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன?” என்று அவள் கேட்டாள். சாமுவேல் அவள் கையைப் பிடித்தான். “ஒரு தேதி இல்லை,” “ஒரு மரம் இல்லை. சாண்டா அல்ல.” “இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கதை - வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் கலந்தது.” “ஆனால் இயேசு?” என்று அவள் கேட்டாள். “அவருடைய செய்தி நிலைத்திருக்கிறது,” என்று சாமுவேல் பதிலளித்தான். “உண்மை. இரக்கம். நீதி. மனிதநேயம்.” அவர்கள் அமைதியாக சாளரத்தின் ஊடாக அயலவர்கள் கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆண்டுகள் கடந்தன. அவர்களின் வீட்டில் இன்னும் மெழுகுவர்த்திகள் இருந்தன - ஆனால் குறைவான அலங்காரங்களுடன். அவர்களின் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் கதை இல்லை. ஆனால் நேர்மை இருந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அவர்கள் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்றனர். சாரா இன்னும் பிரார்த்தனை செய்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்பிக்கையை விட ஆழமான உண்மைகளைக் கற்றுக்கொண்டார்கள். ஒரு கிறிஸ்துமஸ் மாலையில், சாரா மெதுவாகச் சொன்னாள், "நான் இன்னும் நம்புகிறேன்." சாமுவேல் சிரித்தான். "நான் இன்னும் கேள்விகள் கேட்கிறேன்." அவள் அவன் மீது சாய்ந்தாள். "ஒருவேளை அது போதும்." என்றாள். சாமுவேல் தலையசைத்தான். ஏனென்றால் அவர்கள் அமைதியான உண்மையைக் கற்றுக்கொண்டார்கள்: நம்பிக்கை கேள்விகளுக்கு அஞ்சுவதில்லை. அன்பு உண்மைக்கு அஞ்சுவதில்லை. மாயையிலிருந்து விடுபட்ட கிறிஸ்துமஸ், பலவீனமாகாது—ஆனால் மனிதனாக மாறுகிறது. Brief of 'When the Candle Met the Question' / Part: 03 England and the Second Christmas They moved to England the following year. Christmas there was louder. Brighter. More commercial. Stockings hung by the fireplace. Children waited for Santa Claus to come down the chimney. One night, Sarah asked, “Did you ever believe Santa brought gifts?” Samuel smiled. “When I was a child, yes. But I never asked why.” He paused. “We are born into traditions. We accept them without questioning. Even as adults, very few people ask why they believe what they believe.” Sarah remembered her schoolteacher—who taught solar and lunar eclipses scientifically—yet fasted during eclipses. She felt uneasy. The Bible Opens The third Christmas arrived quietly. This time, it was Sarah who opened the Bible. Luke, Chapter 2. She read aloud about the shepherds guarding their flocks at night. She looked at Samuel. “Would shepherds do that in winter?” “No,” Samuel replied gently. “Historically, flocks were brought in before October 15 to protect them from cold and rain.” He showed her other verses: Song of Solomon 2:11 — “The winter is past.” Ezra 10:9,13 — People trembling in heavy winter rain, unable to stand outside. “The Bible itself shows winter was harsh,” he said. “So Jesus could not have been born in December.” Sarah closed the Bible slowly. Tears filled her eyes—not of anger, but of loss. Faith Does Not Break “Then what is Christmas?” she asked. Samuel took her hand. “Not a date,” he said. “Not a tree. "Not Santa.” “It is a story that grew over centuries—mixed with history, politics, and culture.” “But Jesus?” she asked. “His message remains,” Samuel replied. “Truth. Compassion. Justice. Humanity.” They sat silently. A Different Celebration Years passed. Their home still had candles—but fewer decorations. There was no Santa story for their children. But there was honesty. Every Christmas, they visited hospitals, orphanages, and old-age homes. Sarah still prayed. Samuel still questioned. But neither tried to convert the other. They had learned something deeper than belief. Ending One Christmas evening, Sarah said softly, “I still believe.” Samuel smiled. “And I still ask questions.” She leaned against him. “Maybe that is enough.” Samuel nodded. Because they had learned the quiet truth: Faith does not fear questions. Love does not fear truth. And Christmas, stripped of illusion, becomes not weaker—but human. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] முற்றிற்று / Ended துளி/DROP: 1954 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/32987342684247620/?
  16. ஏராளனுக்கு… உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  17. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஏராளன்…!
  18. இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை… ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்… இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது. முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது. ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும். இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது. எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர். ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.
  19. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி ஏராளனுக்கு வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  20. நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி! இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.
  21. https://www.facebook.com/reel/25453132194339109/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e யார் சொன்னது நரி தான் தந்திரமானது என்று நான் சொல்கிறேன்……..
  22. அத தெரண கருத்துப்படங்கள்.
  23. "ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்
  24. எங்களுக்கு பார்க்க அவருக்கு ஏதோ மண்டை பிரச்சனை போல உள்ளது. ஆனால், அவர் தெரிந்துகொண்டே பல விடயங்களை செய்கின்றார் என நண்பர் ஒருவர் கூறினார். முக்கியமாக சனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கருத்துக்களை இடக்கு முடக்காக சொல்கின்றாராம். இவர் யூரியூப்பில் காணொளி காண்பித்தால் அதை விரும்புவதற்கும், பாராட்டுவதற்கும் பலர் உள்ளார்கள். அர்ச்சுனாவை சுற்றியுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அர்ச்சுனா அளவுக்கு பொது அறிவு, சோசல் மீடியாவில் புகுந்து விளையாடக்கூடிய அறிவு, பரீட்சயம் இல்லாமையால் மற்றவர்களை முக்கியமாக இதர தமிழ் அரசியல்வாதிகளை அர்ச்சுனாவால் நல்லாய் வறுத்து எடுக்க முடிகின்றது. நேற்று ஒரு நண்பனுடன் நாட்டு விடயங்களை பற்றி கதைத்தபோது அர்ச்சுனா பற்றி குறிப்பிட்டு அவருடன் அழைப்பு எடுத்து கதைக்கலாமே என்று பகிடியாக சொன்னேன். ஐயையோ இவனுடன் கதைக்கபோனால் அவன் எனது போன் நம்பரை எடுத்து எல்லாரும் பார்க்கும்படி யூரியூப்பில் போட்டு விடுவான் என நண்பன் சொன்னான்.
  25. தமிழ் வின் இந்த ஆண்டின் சிறுவர் நகைச்சுவை இலக்கிய விருதை தட்டி செல்கிறது😂
  26. அத தெரண கருத்துப்படம்.
  27. கலியாண புரோக்கருக்கு கொடுக்கிற காசை விட, இந்த விளம்பரச் செலவு குறைவு. 😂
  28. இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன? பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம். பிகு இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?
  29. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால்தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்....!!!
  30. சுப்பர் சுற்றுக்கு seedings இல் முதல் இரண்டு நிலைகளிலும் இல்லாத அடுத்த இரு அணிகள் தெரிவானால் (சாத்தியம் பூச்சியம்) எப்படி அவைகளின் நிலை தெரிவாகும்?🫣 கேள்விக்கொத்து சிக்கலாக இருக்கும்.. அதற்கு வரும் பதில்கள் இடியப்பச் சிக்கலாக இருக்கும்😬

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.