Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46909
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    32794
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    10281
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    23951
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/25/26 in all areas

  1. இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
  2. வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம் Published By: Vishnu 25 Jan, 2026 | 07:38 PM வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள சுமார் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திடத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சு.முரளிதரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார பொறிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. கடந்தகால போர்சூழ்நிலை காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள், மற்றும் சரசீஜா ராமன் உள்ளிட்டோர் வழங்க முன்வந்துள்ளனர். இலங்கையில் அதிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் கிளிநொச்சி, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு, ஐந்தாவது இடத்தில் மன்னார் மற்றும் பதினொன்றாவது இடத்தில் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அறிகிறோம். அந்த வகையில் உதவித் திட்டம் முதலில் கிளிநொச்சி, இரண்டாவது முல்லைத்தீவு, அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் வழங்கப்படவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236993
  3. Wednesday, August 20, 2014 மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும் தெரிகிறது! கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப் பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா தமிழர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வரிகளைக் கையாளுகிறார்கள் !! சரி, முழுக்கவிதையும் உங்கள் பார்வைக்கு இதோ! யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. எளிமையாகத் தொடங்கினாலும் ஒவ்வொரு வரியிலும் கருத்தாழம் கூடிக்கொண்டேசெல்கிறது! நன்மை தீமைகள் பிறர் தர வரவில்லையென்றால் எப்படி வருகின்றன? நியூட்டன் விதி போல பிறர்கின்னா செய்தால் தமக்கு தானே வரும் என்பது உள்கருத்து! அதைக்கூட நம்பிக்கையின்பாற்பட்டதாகக் கொள்ளலாம்! ஆனால் துன்பப்படுத்தலும் அது தணிதலும் அதுபோலவேதான் என்ற வரி இன்னும் ஆழமானதென நினைக்கிறேன். ஒரு நிகழ்வு குறித்து துன்பப்படுவதும் துனபம் தணிவதும் பிறராலா அல்லது நாம் உள்மனத்தின் தெளிவாலா? இறப்பு புதிதில்லை, வாழ்தல் இனிதென்று கொண்டாடவுமில்லை! ஆஹா! மரணம் இயல்பானது, பாவத்தின் சம்பளமில்லை என்ற தெளிவு எத்தனை பெரியது! வாழ்வு இனிதென்று கொண்டாடாத அதே நேரத்தில் கோபம்/வெறுப்பினால் வாழ்வு இனியதல்லவென்றும் சொல்வதில்லை! அடேயப்பா! எத்தனை எதிரெதிரான கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாமால் அடுக்கிச்செல்கிறார்! ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வுசெல்லும் என்று உணர்ந்ததால் புகழில் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று முடிக்கிறார்! சிறியோரையிகழ்தல் அதனினுமிலமே என்பதை முன்னிலைப்படுத்தினால் யாவரும் கேளிர் என்பது கேலிக்குறியதாகிவிடும்! சிறியோர் என நினைத்தால் கேளிராய் நினைத்தல் எங்ஙனம்? பெரியோர் என்று மதிக்கலாம்; ஆனால் மலைத்துப்போனால் இயல்பாகப் பழக இயலாது போகலாம்! அன்பு ஒளிந்துகொள்ளும்; மாறாகப் பணிவு நாடகம் அரங்கேறும்! பெரியோராய்ப் பார்க்கப்படுபவர் நம்மைச் சிறியோராய்க் கருத நேரிடும்! கேளிராய் நினைத்தல் இயலாமல் போகும்! இது தவிர, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை"என்ற தெளிவு இருந்தால் மட்டுமே மற்ற இரண்டும் கைகூடும்! இல்லாவிடில் இது ஒரு வெற்று வேடமாகவோ அல்லது கர்வத்தின் மூலகாரணமாகவோ முடியக்கூடும். அதுமட்டுமில்லை புகழ்பெறுவதும் பெறாமற்போவதும் வெளியுலகு சார்ந்தது. புகழ்பெற்றவர் எல்லோரும் அறிவுடையவர் என்று சொல்வதற்கில்லை! அறிவில் பெரியோர் சொன்ன கருத்துக்களை உணர்ந்து தெளிந்ததால் மாட்சியின் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று கூறிய கூரிய அறிவை வியக்காமல் எப்படியிருப்பது!! அடேயப்பா, பாட்டின் ஒவ்வொரு வரியையும் கடைபிடிப்பதுடன், வள்ளுவரையும் சேர்த்துக் கடைபிடிக்கவேண்டும்! எண்ணிப்பார்க்கையில் மலைப்பாகத்தானிருக்கிறது! http://geethajustin.blogspot.com/2014/08/blog-post_20.html
  4. சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள்இ மற்றும் சரசீஜா ராமன் ஆகியோரின் இந்த முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
  5. தயவு செய்து அரசியல்வாதிகளையோ அல்லது அரசியல் சார்ந்த கருத்துக்களையோ யாரும் இதற்குள் விதைக்காமல் இருந்தால் நன்று..காரணம் இந்த அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் கஸ்ரப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்..அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களையும் மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள், வாழவும் போகிறார்கள்.ஆகவே ஏராளனுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பணிவான வேண்டுகோளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.
  6. அண்ணை, என்னால் நேர்மையாகச் செயற்பட முடியும் என்ற தற்துணிவில் தான் இந்தப் பணிகளில் ஒரு தொடர்பாளராகச் செயற்பட முன்வந்தேன். இந்தப்பணிகளுக்கு என்னை முன்மொழிந்த @குமாரசாமி அண்ணைக்கு எனது நன்றிகள். இரண்டிரண்டு மலசலகூடங்களாக கட்டிக்கொடுக்கலாம். தேவைக்கு அதிகமாக வங்கியில் நிதியை வைத்திருக்காமல் வேலை முடிய முடிய சேர்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக யாழிணைய உறவுகள் தான் நன்றிக்குரியவர்கள். பலரும் தற்போது தயக்கத்துடன் இருப்பார்கள், இனிவரும் காலங்களில் உதவுவார்கள் என நம்புகிறேன்.
  7. வாசித்து பகிர்ந்தபோது புரிந்ததை விட தற்போது அதன் ஆழம் இன்னும் அதிகமாகிறது. இயலாமையுடையவர்களை பாவிகள் என்போர் மன்னிக்கப்படட்டும். அவர்களுடைய சந்ததிகள் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழட்டும். மதிக்கப்படுவது செய்யும் நற்செயல்களால் மட்டுமே. பேராசான் @சுப.சோமசுந்தரம் ஐயாவின் விருப்பக்குறி இத்திரியை மீள வாசிக்க உதவியது. நன்றி ஐயா.
  8. ஐரோப்பாவில் புலிக்கொடியேந்தி தனிநாட்டு காணப்புறப்பட்ட தீவிர தேசியர்கள் சிலர் சூரிச்சில் பிரதமர் ஹரணியுடன் போட்டி போட்டு செல்பி எடுத்தார்களே! களவாக முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏதும் செய்தார்களோ? டம்ப பண்ணிய தமிழ் மக்களின் பணங்கள் ஈரோக்கள் இலங்கை ரூபாகளாக வெள்ளையாக சலவை செய்யப்படுகிறதோ யாரறிவார். 😂 அதை திசை திருப்பதான் சுமந்திரன் காவடி இங்கு ஆடப்படுகிறதோ?
  9. பதவி வெறி பிடித்து திரியும் சுத்துமாத்து சுமந்திரனுக்கு, தான் ஏதோ… எம். ஜி. ஆர். என்ற நினைப்பு. 😁 தங்களுக்கு பின்னால் திரியும் ஒரு சில அல்லக்கைகளைப் பார்த்து, தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முதல் அமைச்சர் கனவில் திரிகிறார். 😡 பிச்சைக்காரனுக்கு…. “செக்குருட்டி” வேலை வேணுமாம். 😂 த்தூ…. என்று காறித் துப்பி 💩, மீண்டும் 👡 செருப்படி 🩴 கொடுக்க, தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள். 🤣
  10. மதிப்புக்குரிய சுகாதார இன்ஸ்பெக்டர்மார் உந்த தேத்தண்ணி கடையள்,கூல் பார் ரொய்லட்டுக்களையும் செக் பண்ணினால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும் 😷
  11. எதையும் வெளிப்படையாக தெரிவித்தால் பலருக்கு பல சந்தேகங்கள் வராது என நான் நினைக்கின்றேன். மொட்டையாக எழுதி விட்டு கடந்து செல்வதால் பின்னடைவுகள் தான் ஏற்படும் என நான் நினைக்கின்றேன்.
  12. படித்தவர்கள் இரு வகைப்படும். ஒரு வகை படித்த படிப்பை நாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்துவர். அவர்களிடம் நான் என்ற அகங்காரம் இருக்காது.அமைதியான மனப்பான்மை உடையவர்கள்.தெரியாததை அமைதியாக விளங்கப்படுத்துவர். இரண்டாவது வகையினர் தொழிலுக்காக படிப்பவர்கள். அவர்களது நோக்கு எதை படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நோக்குடையவர்கள். அப்படியானவர்களிடம் எந்தவொரு மனித மாண்புகளையும் காணவே முடியாது. இவையெல்லாம் நான் இலங்கையில் வாழ்ந்த போது கண்ட அனுபவங்கள்.
  13. ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏
  14. ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில், பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கட்டின கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣
  15. புலவர் பாலபத்ர ஓணாண்டி இவரை ஒரு பெயர் சொல்லி அழைத்தவர் அந்த பெயர் மறந்துவிட்டது அதன் அர்த்தம் தந்திரமான கள்வர் இவர். நல்ல தந்திரமாக ஏமாற்றுவார் பிடிபடும் நிலைவந்தால் உணர்ச்சி கதைகள் பேசி பேய்காட்டடிவிடுவார். யுத்தம் முடிவடைந்ததில் இருந்து திட்டமிட்டு கோடீஸ்வரரானவர்
  16. சிறப்பான விளக்கவுரை ..........நினைத்துப் பார்த்தால் இங்கு எதுவுமே அதிசயமும் இல்லை , எதுவுமே வெறுமையானதாயும் இல்லை என்றுதான் இருக்கின்றது . .........! 😁
  17. அவரது கட்சியில் இருப்பவர்கள் அவரை விட மோசமானவர்களாக இருப்பதால் உள்ளத்திற்குள் தமிழ்த் தேசிய் பேசுகிறார் என்று அவரைத் தெரிவுசெய்கிறார்கள். இவர் அரசியலில் வந்த காலத்தில் இருந்து இப்படித்தான் வடக்கில் ஒன்று சபசுவார். தெற்கில் சம்பந்தர் சுமத்திரன் கிழிச்ச கோட்டைத் தாண்டாமல் அரசு செய்து வந்தார்.தமிழரசுக்கட்சியின்தலைவர் ஆசைவந்து சுமத்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையே பகைவந்ததில் இருந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பெரிது படுத்தப்படுகின்றன.அவர் ஒரு மதில்மேல் பூனை.கழுவுறமீனில நழுவுறமீன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.