Everything posted by Paanch
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி
சும்மாவா கவிஞன் பாடெழுதினான்………..? “ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி” 10,15 நிமிசமாய் என்றால்???????🤔😳
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
நிர்வாணம் என்றால் ஞான நிலை அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள் அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம், பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம் பால் உணர்விலிருந்து நிர்வாணம் என அனைத்து செயல்கள் அனைத்து உணர்வுகள் எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை அடைந்த நிலையாகும்.
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
உலகப் புகழ் அடையக்கூடியவர்களை முன்பே அறிந்து தன்னுள் உள்வாங்கிக்கொள்வதில் அமெரிக்காவை விடவும் வேறுநாடுகள் உலகில் இல்லை.🤔
-
"ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]
கூட்டுக்கு உப்பு, புளி, மிளகாய் வேண்டுமே! இல்லையானல் ருசிக்காது க தி வி னா அவர்களே!
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் தலைப்பைக் கவனியுங்கள் உறவுகளே! சிறித்தம்பி பலரை முட்டாள்கள் ஆக்கிவிட்டது புலப்படும், தொலைபேசி கை தவறி கீழே விழுந்தால் வயரில் தொங்கும்.🤪
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன் பேரனின் தோற்றம் மாறடொனாவை நினைவூட்டுகிறது🤔
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தமிழரசுக் கட்சியின் காலைச் சுற்றிய பாம்பு போன்றவர்தான் சுமந்திரன், கடித்துக் குதறாமல் விடாது. அதற்குப் பாலூற்ற யாழ்களத்திலும் ஆள் உண்டு.😳
-
தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா?
ஆடுகளுக்கு. ஓநாய் பாதுகாப்பு.🐐🐕
-
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
இலியாயெஃபிம்சிக் அவர்கள் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா.” என்ற பாடலால் கூறப்பட்ட உண்மையைப் பொய்யாக்கி விட்டாரே!.🤔
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
இருக்கவே இருக்கிறது பாதுகாப்புப் படைகள். அவர்கள் பாதுகாப்பில் எதுவும் செய்யலாம். ஏற்கெனவே எங்கள் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த சனி பகவான் செய்தும் காட்டியுள்ளார். பழையபடி வேதாளங்கள் எல்லாம் அரசு(ச)மரத்தில் ஏறி அமரும்.🤔
-
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்றொரு பழமொழி உள்ளது, பார்்க்கலாம்.🧐
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
அதிபர் தமிழ் வித்தியாலப் பள்ளிக்கூட அதிபர். சிவபெருமானே பிரம்படி வாங்கிச் சிவனே என்று இருப்பது தெரியாமலா அதிபரானார்!. இந்தச் சிறுவர் சிறுமிகளும் அப்படிச் சிவன்போல் இருப்பார்கள் என நினைத்து விட்டாரோ? பாவம் அதிபர்.😩
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணை ஏராளன் அவர்களே! எதற்கும் உங்களின் இந்த நண்பர்களை முன்னுக்கு நின்று எண்ணாமல் பின்னுக்கு நின்று எண்ணிப்பாருங்கள். நாலை விடுங்கள், உங்கள் ஒன்றும் இருந்த இடம்தெரியாமல் பறந்துவிடும்.🧐🤪
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
யாயினி அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கையில் கருணக் கொலைக்கான காப்புறுதி நிறுவனம் ஒன்று உருவாகும் என நம்பலாம், கவலை வேண்டாம்.😋
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
ஈழப்பிரியரே! கருணைக் கொலைக்கும் காசு தேவையா?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுத்துமாத்து சுமந்திரன் என்றுதான் எண்ணியிருந்தோம், ஜனாதிபதியாக வெற்றிபெற அவர் போட்டியிடவில்லை என்று எல்லோரும் காட்டுக்கத்தல் கத்ததினாலும் அந்தாளுக்கு காதும் கேளாது என்று இப்போதுதான் தெரிகிறது.🤨
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சுவிஸ் நபருக்கு. சுதி வந்தால்! அதன் விலை 47இலட்சம். அப்போ லண்டன், கனடா, யேர்மனி நபர்களுக்கு சுதி வந்தால்???😳😩🥱
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
அத்தியடியில் பூத்து யாழ்களத்தில் நறுமணம் வீசும் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே! ஆரோக்கியத்திற்கு. ஓய்வும் அவசியம். எடுங்கள் வேண்டியமட்டும்.🙌
-
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரலாம்.🧐
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
காதலன் இருக்கட்டும்…. உங்கள் நிலைப்பாடு என்ன வாலி அவர்களே!?????🤪
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
முன்பு ஒரு கல்லைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றால் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் வாக்குகளை அதற்குப் போடுவார்கள். இன்று பெரும் மலையைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றாலும் அதனை உரசிச் சுரண்டிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்மக்கள் வளர்ந்துவிட்டதாக யாழ்களமும் தெரியத் தருகிறது.🧐
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
kandiah57 அவர்களே! நித்திரையில் கிடப்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பவே முடியாது.🤔
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪
-
யார் வெல்வார்?
சமைப்பது, சட்டிபானை கழுவுவது, உடுப்புத் தோய்ப்பது என்று வீட்டு வேலைகளை எல்லாம் உங்கள் மனைவியைக் கொண்டே எங்களைப்போல் செய்விக்கும் துணிவும், வீரமும் உங்களுக்கும் இருந்தால்… பகலில் என்ன? காலை, மதியம், மாலையிலும் கனவுகளைக் காணலாம்.🤪