Everything posted by Paanch
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அர்ச்சுனாவையும், அண்ணாமலையையும் ஒப்பிடுவது… பெருமாளையும், பெருச்சாளியையும் ஒன்றாக ஒப்பிடுவதற்குச் சமனானது போல் தோன்றுகிறது.🤪
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
இயற்கையின் செயற்பாடுகளை நிறுத்தவோ, அழிக்கவோ இறைவனைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றவாறு அனைத்திற்கும் இறைவனைக் காரணமாக்கிவிட்டு அமைதிகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் மனித இனத்தை ஆறுதல்படுத்த இறைவனும் மனிதர்வடிவில் வருவதை மறுக்க முடியாது. சுனாமியால் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தி பெறவும், இருப்போரும் அமைதி அடையும் வகையில் இறந்த உடல்களை உரியமுறையில். அடக்கம் செய்வதற்கு, ஈழவிடுதலைப் போராளிகள் வடிவில் இலங்கையில் தோன்றியதும் உண்மை.🙏🙏🙏
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
நுனிப்புல் மேய்ந்து தலையங்கத்தை மட்டும் முதலில் வாசித்துக் கலவரத்துக்கு உள்ளானேன்.🥺 ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி “,” இடப்படுகிறது முடிவிற்கு முற்றுப்புள்ளி “.” இடப்படுகிறது. தமிழகச் செய்தியில் வந்த இந்தப் பதிவின் தலையங்கத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்🤔
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
பாதுகாப்புத்துறை அமைச்சராக கௌதம புத்தர் எப்போது நியமிக்கப்பட்டார்? 🤔
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” சத்தியமூர்த்திக்கு கொடிதூக்கவும் சிலர் இருக்கினம் போல...🙌
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
மனிதரை மனிதராக மதிக்கும் பண்பைவிட்டு வர்ணாச்சிரம முறையைப் பின்பற்றி வாழ்வோர் இலங்கை வடபகுதியில் அதிகமாக இருப்பதினால் இருக்கும் நிலையிது.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
இனக்கலவரம் என்றபோர்வையில் தமிழினப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்று தப்பிக் கண்களை மூடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று கண்விழித்துவிட்டார்கள்.😳
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
டக்ளசு அவர்களுக்கு ஞானம் பிறப்பதுபோல் தெரிகிறது, பிறக்குமா? புத்தபெருமான் ஞானம்பெற எல்லாவற்றையும் துறந்தார். இவரால் அதுவும் அடாத்தாக அபகரிக்கப்பட்ட ஒரு தியேட்டரைக்கூட துறக்கமுடியவில்யே!!🤔
-
வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு
எம்மாம் பெரிய கூட்டம் இவ்வளவையும் பாதுகாக்க 300ம் 400மே காணாது. யாரை வணங்கிப் பாதுகாப்பு கேட்கிறார்கள்? ஆண்டவனையா அநுராவையா??
-
வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு
தங்கள் குடும்பத்தினுள் யாரைப் பலிக்கடா ஆக்கலாம் என்று ஆராய்ந்து முடிவு கண்டபின்பு சம்பவம் நடக்கும் என்று குருவி சொல்லுது.🧐
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
தவறு ஐயா! குடிமக்களுக்கு என்று வரவேண்டும்….. சமத்துவம், சமத்துவம்.💃🏼🕺 😂
-
அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
அவர் இந்த முறைப்பாடு செய்தியாக முன்னமும் வந்து வாசித்த ஞாபகம் உள்ளது, அதற்கான பதிலையும் அவ்வேளையில் அருச்சுனா தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே அரசவைத்தியராகக் கடமையாற்றிய நிலை தவிர்க்கப்பட்டதாகவும், அதனையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமும் நிறுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்களையும் காட்டித் தெரிவித்தருந்தார்.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
யாழப்பாணம் பாசையூரில் இருக்கும் கோட்டல்களில் ஒன்று அதற்கு “கிரான்கோட்டல்” என்று பெயர். அங்கு மது அருந்துவதற்காகவே அதிகமானவர்கள் வருவார்கள், நானும் போயிருக்கிறேன்.🤪
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு ஒரு வேண்டுதல்……. காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எந்தத் தகுதியும் இல்லாமலே நானும் கிளறிக்கல் சேவன்ராக வேலைபார்த்த காலமும் உண்டு. அதைக் கிளற அப்போது ரணிலும் இல்லை, சஜித்தும் இல்லை. என் பேரன் இரண்டு வயதில் ஏதோ கல்லை விழுங்கிவிட்டான், அது என்ன கல் என்று பார்ப்பதற்கு அவன் கடன்களை முடித்த வேளைகளில் எல்லாம் நானும் அதனைக் கிளறிக் கல் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.🤪
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
கதைப்பார்களய்யா அதுவும் தமிழில் கிண்டலும் அடிப்பார்கள். என் மேலதிகாரி ஒரு சிங்களவர், அவரின்கீழ் வேலைபார்க்கும் ஒரு தமிழர், அவரும் ஒரு அதிகாரி, ஏதோ சந்தேகம் கேட்டார். “அதுங் நான் என் மீசை பத்துதுங் கென்று கவலைப் படுறேங் நீங்க சுருட்டுப் பத்த நெருப்புங் கேக்கிறது”.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
நான் தொழில்பார்த்த ஆலையில் பல சிங்களவர்களின் நட்புக் கிடைத்தது, “தனக்கெடா சிங்களம் தன்பிடரிக்குச் சேதம்” என்ற கூற்றை நான் அறிந்திருந்தாலும் அவர்களுடன் சிங்களம் கதைப்பதில் ஒரு ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டது உண்மை. என் கொச்சைச் சிங்களத்தை அவர்களும் ரசித்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவேண்டிய என் பதவி உயர்வுக்கு அந்தச் சிங்கள மொழி என்மீது திணிக்கப்பட்டதால் நான் இலங்கையை விட்டு நீங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.😢
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
அமெரிக்காவில் பழங்கஞ்சியில் செய்த உயிர்ச்சத்து மாத்திரைகள் அமோக விற்பனையாவதாகச் செய்தி அறிந்தேன். புதுக் கஞ்சிவடிக்க இப்போது யாழிலும் அரிசித் தட்டுப்பாடு. அதுசரி இங்கு ஏன் ஒருசிலரின் முகங்கள் கஞ்சிகுடித்து இஞ்சி தின்ற உணர்வைக் கட்டுது????
- தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இது என்கருத்தல்ல சாமியர் அவர்களே! உண்மையைப் பதிந்தேன். முன்னாளில் கருணா அம்மான் தலைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த போராளி, ஆனால் இன்று???????? வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது மக்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது, ஆனால் இன்று??????