Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. என்னையும் ஒரு விசர்நாய் கடித்தது. அதன் தாக்கத்தால் நான் எவரையும் கடிக்கப் போனதில்லை ஆகவே சாமியார், தமிழ்சிறீ உட்பட மற்றும் யாழ்உறவுகள் எவரும் என்னைக்கண்டு பயப்படத் தேவையில்லை இது நடந்தது வாழைச்சேனை ஓட்மாவடியில் எனது 24வது வயதில். நாயின் கடிக்குள்ளாகி அதன் 14 பற்கள் என் கையில் ஆழப்பதிந்திருந்தன. காயங்களுக்கு காரத்திரி வைத்து, பன்றி இறைச்சி உண்ண வைத்து, தலைக்கு அரப்புப் பிரட்டி முழுகவைத்து, மட்டக்களப்பில் மாமாவுக்குத் தெரிந்த தமிழ் வைத்தியத்தியர் ஒருவரின் வைத்தியத்திற்கு ஆளாக்கப்பட்டு தேறிவிட்டதாக எண்ணிய பின்பு……
  2. இன்றைய பல தமிழ்மக்களின் மாற்றமடைந்த நல் இதயங்களை நோக்கும்போது தமிழீழம் உதயமானால்…..ஈழம் மட்டுமல்ல இலங்கையே குபேர பூமியாக மாற்றமடையும் என்பதில் சந்தேகம் இல்லை. 🙏🙏 உதவிப்புரியும் மக்களுக்கு நன்றிகள்!!🙌
  3. வித்தியானந்த கல்லூரி அதிபரை இடம் மாற்றினால்! அவர் போகும் இடத்தில் உள்ள கல்லூரியின் நிலை என்ன.??🤔
  4. அமெரிக்கர்கள் எப்பவும் புதுமையை நாடிநிற்பவர்கள். புதுவருடம் உதயத்தில் வெடி கொளுத்தி மகிழ்வது உலகெங்கும் சாதாரண விடையம். இந்த மகிழ்வை அடைவதற்குப் புதுமையாக வாகனம் ஒன்றைக் கொளுத்திப் போட்டு மகிழ்ந்துள்ளார்கள் அங்குள்ள மக்கள் அவ்வளவுதான்.💃🏼🕺
  5. சிறைச் சாலையில் கைதிகள் மட்டுமல்ல காவலர்கள், உத்தியோகப் பணி புரிபவர்கள் எனப் பலர் உள்ளனர். இவர்கள் எப்படித் தப்புகிறார்கள்.???🤔
  6. சுவி அவர்களால் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு 9 பொட்டுக்கள் இட்டுள்ளார். இவைகளில் ஒன்றின் பொட்டை இல்லாது அழித்துவிட்டால் உண்மை புலப்படலாம். அது எந்தப் பொட்டு????, முக்கிய குறிப்பு, இதில் வயதுவந்தோர் மட்டுமே பங்குபற்றலாம்.💃🏼🕺
  7. எண்சாண் உடம்பிற்கும் தலையே பிரதானம் போல, செய்திகள், பதிவுகள் போன்ற அனைத்திற்கும் தலையங்கம் பிரதானமாக இருக்கிறது. வாசகர்களுக்கு ஓரிருவரித் தலையங்கமே முதலில் அதற்கான வரைவுகளை வாசிப்பதற்கு முன்னர் அதுபற்றிய எண்ண ஓட்டங்களை உருவாக்குகிறது. வாசித்தபின்பு அவர் எண்ண ஓட்டங்களுக்கு ஒவ்வாத நிலையில் வரைவுகள் இருந்தால் அது ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கலங்கடிக்கிறது. ஆகவே தலைப்புக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது. தலைப்பில் குறைபாடு கண்டால், அது அதன் வரைவையே நோண்டிப் பார்த்து குறைதேடும் முயற்சிக்கும் ஆதாரமாக அமைந்துவிடுகிறது.😳
  8. இப்படி ஒரு புத்திரனைப் பெற உங்கள் அப்பா அம்மா என்ன புண்ணியம் செய்தார்களோ?🙌
  9. உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் துடையமைப்பு அழகி போட்டி!
  10. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் தலையங்கத்தில் சிறிது மாற்றம் தேவை.🧐😌
  11. இடிஓசை கேட்கும்போது “அர்ச்சுனா அபயம்” என்று சொன்னால் இடி விழாதாம். அம்மா சொல்லி சிறுவயதில் கத்துவேன், இப்போ மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்.😳
  12. ஒருவரைப் பார்த்து பைத்தியம் என்று சொன்னால் தவறில்லை. ஆனால் வாய்மூடு என்று எவர் சொன்னாலும் அது மாபெரும் தவறு. இது தினக்குரல் பத்திரிகையின் கண்டுபிடிப்பு.
  13. போதாது. சாந்திமுகூர்த்தம் முடியட்டும் பார்க்கலாம்.🧐
  14. சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌
  15. அர்ச்சுனாவையும், அண்ணாமலையையும் ஒப்பிடுவது… பெருமாளையும், பெருச்சாளியையும் ஒன்றாக ஒப்பிடுவதற்குச் சமனானது போல் தோன்றுகிறது.🤪
  16. இயற்கையின் செயற்பாடுகளை நிறுத்தவோ, அழிக்கவோ இறைவனைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றவாறு அனைத்திற்கும் இறைவனைக் காரணமாக்கிவிட்டு அமைதிகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் மனித இனத்தை ஆறுதல்படுத்த இறைவனும் மனிதர்வடிவில் வருவதை மறுக்க முடியாது. சுனாமியால் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தி பெறவும், இருப்போரும் அமைதி அடையும் வகையில் இறந்த உடல்களை உரியமுறையில். அடக்கம் செய்வதற்கு, ஈழவிடுதலைப் போராளிகள் வடிவில் இலங்கையில் தோன்றியதும் உண்மை.🙏🙏🙏
  17. நுனிப்புல் மேய்ந்து தலையங்கத்தை மட்டும் முதலில் வாசித்துக் கலவரத்துக்கு உள்ளானேன்.🥺 ஒரே மாதிரியான பலவற்றை குறிப்பதற்கு ஒவ்வொன்றின் பின்னரும் காற்புள்ளி “,” இடப்படுகிறது முடிவிற்கு முற்றுப்புள்ளி “.” இடப்படுகிறது. தமிழகச் செய்தியில் வந்த இந்தப் பதிவின் தலையங்கத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி ஒருவர் கைது என்று வாசித்துத் திகைத்துவிட்டேன்🤔
  18. பாதுகாப்புத்துறை அமைச்சராக கௌதம புத்தர் எப்போது நியமிக்கப்பட்டார்? 🤔
  19. “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” சத்தியமூர்த்திக்கு கொடிதூக்கவும் சிலர் இருக்கினம் போல...🙌
  20. மனிதரை மனிதராக மதிக்கும் பண்பைவிட்டு வர்ணாச்சிரம முறையைப் பின்பற்றி வாழ்வோர் இலங்கை வடபகுதியில் அதிகமாக இருப்பதினால் இருக்கும் நிலையிது.
  21. நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂
  22. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
  23. இனக்கலவரம் என்றபோர்வையில் தமிழினப் படுகொலைகள் நடந்தபோதெல்லாம் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்று தப்பிக் கண்களை மூடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று கண்விழித்துவிட்டார்கள்.😳
  24. டக்ளசு அவர்களுக்கு ஞானம் பிறப்பதுபோல் தெரிகிறது, பிறக்குமா? புத்தபெருமான் ஞானம்பெற எல்லாவற்றையும் துறந்தார். இவரால் அதுவும் அடாத்தாக அபகரிக்கப்பட்ட ஒரு தியேட்டரைக்கூட துறக்கமுடியவில்யே!!🤔
  25. எம்மாம் பெரிய கூட்டம் இவ்வளவையும் பாதுகாக்க 300ம் 400மே காணாது. யாரை வணங்கிப் பாதுகாப்பு கேட்கிறார்கள்? ஆண்டவனையா அநுராவையா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.