Everything posted by Paanch
-
யார் வெல்வார்?
நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள். ஆனால், பகல் கனவு காண்பது ஒருவரின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும் என்று நரம்பியல் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பகல் கனவு காணும் விதம்: பகல் கனவின்போது மனித மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் கனவு காண்பது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. எப்போதும் பதற்றமாகவும் அவசரமாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகியல் வாழ்வில் பகல் கனவு மிகவும் உதவியாக இருக்கிறது. கவலை அல்லது சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை சந்திக்கும்போதும் மன அழுத்தத்தில் இருக்கும்போதும் பகல் கனவு காணத் தொடங்கலாம்.😵🤩
-
யார் வெல்வார்?
எந்த வேட்பாளர் இந்த மொட்டைப் பிக்குகளிடம் ஆசிவாங்கச் செல்லாமல் அவர்களை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு வென்று வருகிறாரோ…! அப்படியானவர் வந்தபின்பு இலங்கைத் தீவு இந்துமா கடலில் மூழ்காமல், பூத்துக்குலுங்கும் காட்சியைக் காணும் சாத்தியம் ஏற்படலாம்.💐🙏
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
அறிஞர்கள் என்று போற்றப்படும் பலரும் சொல்லிவிட்டார்கள், அரசியல் என்பது இன்று ஒரு சாக்கடை. அதிலும் சிறிலங்காவின் அரசியல் என்பது மூக்கைப் பொத்தி ஓடவைக்கும் நாற்றம் பிடித்த பெரும் சாக்கடை. அதில் மல்லிகை, முல்லை பூத்து மணம்வீசும் என்று எதிர்பார்ப்பது மடமை.🤔
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
அப்பன் குதிருக்குள் இருப்பது எனக்குச் சத்தியமாகத் தெரியாது.🤔
-
தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
நாய் நடுக்கடல் போனாலும் நக்கித்தான் குடிப்பதை மாற்ற முடியாது. அதுபோலவே மகிந்த குடும்பத்தினராலும் இனவாதம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. நாயைவிட மகிந்த குடும்பத்துக்குக் கிடைத்த பெறுபேறு, மகிந்தர் சேர்த்து வைத்திருக்கும் மில்லியன்கள். இது பணநாயக உலகம், அவர்கள் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுத்திரியவும் நாய்கள் பல உள்ளன.🐕🦮
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!🎂🤝🙌
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
படத்தில் பொன்சேகாவை உற்றுப் பாருங்கள், சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர்போல் இருக்கிறார். ஏசுநாதர் இறந்து மூன்றுநாட்களின் பின்பு உயிர்த்து எழுந்தார். பொன்சேகா உயிரோடு இருந்து தேர்த்தலின் பின்பு இறந்து விழுவார்.😞
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
எனக்கு அங்கு காணி, பூமி எதுவுமே இல்லை ஆகையால் பயப்படாமல் போய்வருவேன்.🤪
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
இது நிச்சயம் காணி அல்லது எல்லைப் பிரச்சனைதான் கொலையில் முடிந்துள்ளது.😳 பணப் பிரச்சனைகூடப் பெரிதாக அங்கு உறவுகளைக் கொலைவரை கொண்டுசெல்வதில்லை.🧐
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
மோதிரக் கையால் குட்டுவாங்கும் பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. அந்த ஒருசிலரில் நானும் ஒருவன்.😁🙏
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே! ஒரு சிறு காளாக்காயைப் போடும் அளவிற்குக் கூட இல்லாத என் அறிவுச் சிறு பையில், பெரும் பலாப்பழத்தையே நீங்கள் போடத்தந்தால் நான் என்செய்வேன்.??😩
-
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
இதற்கெல்லாம் காரணமானவர்கள், நாங்களும் எங்கள் சமூகமுமே, வைத்தியர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணாமல், கடவுள்களாகப் போற்றி வணங்கியமைதான்.😩
-
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று! மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!! குழந்தைகள்??????.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
ஆமாம் சுவி! ுஉங்கள் ஆதங்கம் வரவேற்கக் கூடியதே!! ஆனாலும் ஒரு பெட்டிக்குள் ஒன்றுதான் கொண்டுசெல்வது உலக வழக்கம்.!!!🤔
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
பால் ஊற்றுவது வழக்கம், எந்தப் பால், எதனுடைய பாலை ஊற்றினார்களோ???🤔
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
பெட்டி??🤣
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது!
வெளிவந்தது இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்: அதில் இரு தமிழர் யார் தெரியுமா? - 6 years ago local news இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES" சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா. இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள். முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்) இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்) மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்) நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்) ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்) ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்) ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்) எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்) ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்) பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் தகிடுதம் பண்ணும் ஒரு முக்கிய முஸ்லீம் அமைச்சரின் பெயரும், குதிரை பெட் கம்பனி நடாத்தும் சிங்கள அரசியல்வாதியின் பெயரும் இதில் இல்லாமை ஆச்சரியமான விடயம் தான். தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் நமது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஏமாளிகள் தான்.
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது!
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
மரணதண்டனை வேதனையெல்லாம் தண்டனை முடிந்ததும் மறைந்துவிடும். நலமடித்து வாழ்நாள் முழுவதும் அதை எண்னி ஏங்கி அலைய விடவேண்டும்.😩🥴- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
பிரபாகரன் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பல சிங்களப் படிப்பறிவற்ற சிப்பாய்களும் விடுதலையாகித் திரும்ப தங்கள் கும்பத்தினருடன் இணைந்தபோது, படிப்றிவோடு கூடவே ஆங்கில மொழியறிவும் கொண்டடிருப்பது கண்டு அந்தச் சிப்பாய்களின் குடும்பங்கள் வியந்ததுதான் வரலாறு.- கண் சத்திர சிகிச்சை விவகாரம்; கெஹலியவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரும் மூன்று நோயாளிகள்
) தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் நால்வரின் பிணை மனுவை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
சிறீலங்காவில் தமிழீழத் தமிழர்கள் விடுதலை அடைவதற்கு கனடாநாடு அளித்துவந்த பாரிய உதவிகளை எப்போ நிறுத்தியது??
Important Information
By using this site, you agree to our Terms of Use.