Everything posted by Paanch
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இது தவறு! “நான் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை” என்று மற்றவர்களையும் இழுக்காமல் வருதே உங்களுக்குச் சிறப்பாகும்.
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்!
உண்மைதான் விசுகு அவர்களே! ஆனாலும் துன்பப்படாத ஒருவரை உங்களால் உலகில் காட்ட முடியுமா? பகிடியும் அவர்களை ஆறுதல்படுத்தும். உதாரணத்திற்கு, பரிமளாக்கா பெயரைச் சொன்னதும் சாமியார் தள்ளாத வயதிலும் துள்ளிக் குதிக்கிறாரே! 🧐 சறுக்கி விழுந்து எலும்பு முறிந்த நிலையிலும், ஆசுப்பத்தரி நேசுமாரின் நினைவுதான் சிறித்தம்பியின் துன்பத்தை நீர்த்துப்போக வைக்கிறதே!!🤪 இருந்தும் ஈழப்பிரியன் போன்றோரின் துன்பங்களில் பகிடி விடுதல் நன்றன்று விசுகர் அவர்களே!!😢
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
முதலாவதில்- அரசுசெய்து வேற்று இனங்களையும் அடக்கிப் பிறர் பெயரைத் தனதாக்கி வாழும் கலையில் நேரு இருக்கிறார். மற்றதில்- உழுதுண்டு வாழாது ஆண்டவனைக் காட்டுகிறோம் என்று வாழும் கலையில் பரம்பரையாகப் பலர் உள்ளனர்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதாவது குரங்கின் கைகளில் ஏன் பூமாலை கொடுத்தீர்கள் ? என்று கேட்டிருப்பார் போல….🤔🐒
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- 'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
சீமானின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அன்றிலிருந்து அவர் தலைவர் பிபாகரனுடனும், விடுதலைப் புலி வீரர்களுடனும் இணைந்த படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்போதெல்லாம் மௌனமாக இருந்த அமரதாஸ் இப்போது ஆரவாரப்படுவதன் நோக்கம் என்ன? சந்தேகமாக இருக்கிறது.🤔- வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
சுமந்திரனுக்கு பாதுகாப்பு படை வந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியினால் அறிவிழந்திருக்கலாம்.🤔- ``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
தயிரைக் கடைந்தார்கள் அது வெண்ணையைத் தந்தது. ரோகன வியையவீராவைக் கடைந்தார்கள் அது இன்று அவர் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தது. வைத்தியர் அர்ச்சுனாவைக் கடைந்தார்கள் அது அவருக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்தது. தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் பொய்யன், கபடன், ஏமாற்றுகாரன், வாயால் வடைசுடுபவன், புளுகன். அவனை ஓரம்கட்டுவோம், ஓரம் கட்டுவதால் யாருக்கு இலாபம்?? ஓரம் கட்டிவிட்டு தமிழினத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவரைக் கொண்டுவருவோம். அவர் யார்????? தெலுங்கனா? மலையாளியா? கன்னடனா? கர்னாடகனா? யார் அவர்?? நிச்சயம் அவர் ஒரு தமிழராக இருப்பார் என்பதில் தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நம்பிக்கை இல்லை.- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
யார் கோசானா? அவர் இல்லை என்றால் பரமும் இல்லை, பரையும் இல்லை ஐயா!🧐- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கோசான் அவர்களுக்கு லைக்போடும் எல்லை முடிந்திருக்கலாம். லைக்குக்கு எல்லை போடக் கூடாது. அந்தவகையில் சாடிநிற்க நான் உங்கள் கட்சி.😌 எல்லைச் சண்டை யாழ்வாசிகளுக்கு மட்டுமே உரித்தானது. களம், யாழ் என்றாலும்! அதில் பங்குபோட முடியாது!!.🧐- சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண்
முன்பு ஒரு செய்தி படித்த ஞாபகம், அமெரிக்கர்கள் தெருவில் போகிற பாம்பைப் பிடித்து பைக்கற்றில் போட்டுவிட்டு அது கடிக்கக் குய்யோ முறையோ என்று கத்துவார்களாம்.🕺 அமெரிக்கர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? என்று அந்த உருசிய மங்கை காட்டியுள்ளார், அவ்வளவுதான்.💃🏼- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் இது தலைப்பு. இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔- அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
சாமியாரா இதைச் சொன்னார்? நம்பமுடியவில்லை!! திருவள்ளுவர் கடைச்சங்க காலத்துப் புலவர். அவர் குறள் எழுதிய காலம் கி.மு 31 என வரலாறு தெரிவிக்கிறது. அவர் எந்த ஆங்கிலேயரிடம் எழுதப்படிக்க கற்றுக்கொண்டார்? திருக்குறள் தெரிவிக்காத நாகரீகத்தையா ஆங்கிலேயர் எமக்குக் கற்றுத்தந்தார்கள்?? ஆங்கிலேயர் எங்களை ஆண்ட காலத்தில் பட்டினத்தார் பிறந்திருந்தால்… பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் என்று பாடியிருக்கமாட்டார், வெறும் கண்களாலே அந்த இடத்தைப் பார்க்கும் நாகரீக நிலையைப் பெற்றிருப்பார்.- எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳- அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
டிரம்பை பெரு நெருப்பு விளக்கேற்றி வரவேற்றது. பெரும்பனி பூத்தூவி அலங்காரம் செய்கிறது. பலகோடி செவ்விந்தியரின் ஆவிகள் சூழ்ந்துநிற்க அங்கு திருவிழா நடைபெறுகிறது, பலிபீடம் ஆடு, கோழிகளுக்குப் பதில் மனிதர்களைப் பலியெடுக்கிறது, அடுத்து என்னென்ன விழாக்கள் நடக்குமோ.? ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட இடங்கள் எல்லாமே உலகில் அல்லோலப்படுகிறது.!😳- "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
காலமாற்றம் கடுகளவும் மாறுவதில்லை அது தடம்மாறாது ஓடுகிறது. மனிதன் மாறுகிறான் அதனால் மனிதமும் மாறுகிறது. அளவற்ற ஆசையும், அகங்காரமும் இதயத்தை நஞ்சாக்குகிறது. அதன் புதிய கண்டுபிடிப்புகள் இயற்கையைச் சீண்டுகிறது. இதற்கு இறப்புத்தான் முடிவல்ல, இயற்கையோடு இணைந்து இதயத்தில் அன்பை மலரவைக்க முனைவதும் முடிவாகும்.- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புது வரவு நல்வரவாகட்டும். யாழை அபசுரம் வராது இனிமையாக மீட்டுங்கள்.🙌- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் தன்னை வளர்துக்கொள்ள என்னென்ன செய்தார் என்று நான் கேட்கவில்லை, தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்றுதான் கேட்டேன், அதற்குரிய தரமான பதில் வந்ததாகத் தெரியவில்லை. போகட்டும் தமிழர்களுக்குச் சீமான் செய்த நல்லவைகள் என்னென்ன என்பதையும் அவர்மீதுள்ள வக்கிரத்தைவிட்டு வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம். சென்னை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டபோது சீமான் செய்த உதவிகள் வீடியோவாகவும் வெளிவந்து அறியக் கிடைத்தது. அதனால் கேட்டேன்.🧐- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானை இங்கு சிலர் வறுத்தெடுக்கிறார்கள், தமிழர்களுக்குச் சீமான் செய்த துரோகங்கள் என்னென்ன என்பதையும் வறுத்துத் தந்தால் கொறித்துப் பார்க்கலாம்.🤪- ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !
சிகப்பு இந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள்தான் அமெரிக்க நாட்டின் பூர்வீகக் குடிகள். இவர்கள் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன் வட ஆசியாவிலிருந்து கால்நடையாக கனடா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சுமார் ஏழரை கோடி மக்கள் இருந்தனர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். 2000 வகை மொழிகளில் இவர்கள் பேசினார்கள் என்றும் ஆதாரங்கள் உள்ளன. இவர்களிடம் கலைகள், அரசியல், சமூகக் கட்டுமானங்கள், கணிதம், தொழில், விவசாயம், எழுதுதல் மற்றும் பலவிதமான மதநம்பிக்கைகள் பரவலாக இருந்தன. நெருப்பின் பயனை நன்கு உணர்ந்தவர்கள். ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும் குடியிருக்க இடம் உண்டாக்கிக் கொள்ளவும் தெரிந்தவர்கள். நம் இந்திய நாட்டைத் தேடி அலைந்த ஐரோப்பியர்கள் வழிதவறி அமெரிக்காவில் வந்திறங்கினார்கள். அமெரிக்காவை இந்தியா எனத் தவறாக நினைத்துக் கொண்ட அவர்கள், அங்கு வசித்து வந்த பூர்வீகக் குடிமக்களை இந்தியர்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் முகத்தில் செந்நிற சாயத்தைப் பூசியிருந்ததால் இவர்களைச் செவ்விந்தியர்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர். ஐரோப்பாவில் இருந்து தங்கம், வெள்ளி செல்வங்களைத் தேடி வந்தவர்கள் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களையும் வேட்டை நாய்களையும் கொண்டு வந்து, எதிர்ப்பு காட்டிய பூர்வீக மக்கள் மீது பிரயோகம் செய்து அழிக்க முற்பட்டனர். மேலும், பெரியம்மை, காலரா போன்ற கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்டுவந்து நோயைப் பரப்பினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பூர்விக செவ்விந்தியர்கள் பலர் மாண்டு போனார்கள். இவ்வாறு இறந்துபோன மக்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி என்று கருதப்படுகிறது. இவ்வாறு அழிந்து போனவர்கள் நீங்கலாக நாளது தேதியில் சுமார் 2,50,000 பூர்வீகக் குடிமக்கள் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பல ஆண்டுகளாக சம உரிமையும் சுதந்திரமும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கென்று தனி உரிமைகள், சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் ஏதும் கிடையாது. ஜோசப் ராஜபாதர்7 தினமணி ஆனி 22. 2012- அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
முகமறியாத மக்களையும் சந்திக்கும்போது முகமன் கூறுவது மேலைநாட்டவரின் மேலான ஒரு வழமை. அனேகமாக முகம்பார்த்தே முகமன் கூறுவார்கள், அதுவும் யேர்மனியில் இந்தவழக்கம் மிக அதிகம், ஆண்களைப் போலவே தலைமயிரை வெட்டித் தங்களை அழகுபடுத்தும் பெண்களும் அதிகம். ஆண்களும் முகத்தில் மீசை இல்லாதிருந்தால் அவர்கள் ஆணா, பெண்ணா என்று அறிவது மிகவும் கடினம். ஆகவேதான் (meine Damen und Herren) ஆண்கள் பெண்கள் என்று விழிக்காமல் பொதுவாக (Guten Tag) நல்லநாள் என்று எல்லாப் பாலினத்துக்கும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.🙏- அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்தியாவில் உள்ள கடவுளுக்கு அவர் காணும் குமரிகள் எல்லாம் பெண்டாட்டிகள். இலங்கையில் உள்ள கடவுளுக்கு பாவம் இரண்டே இரண்டுதான்.😩 - சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.