Everything posted by Paanch
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
அர்ச்சுனா சொல் அம்பலம் ஏறுமா??????🧐
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
http://vt.tiktok.com/ZSMdTCYwD/
-
தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்
புதிய கூட்டமைப்பு அதில் புதியவர்கள்! வசிக்கவே ஆகா, ஓகோ என்று புல்லரிக்கிறது. பழசுகளை என்ன செய்வது???????🤔🤔🤔🤔
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
நம்பிக்கைதான் வாழ்க்கை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இனி வரும் மாற்றம் எப்டி இருக்குமோ? யார் கண்டது!. தோன்றிய எங்கள் தலைவனிடம் மனிதம் இருந்ததினால், இன்றும் சிங்களரின் ஆட்சி தொடர்கிறது.🤔
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
பாவம் சீனா! இலங்கையில் இருந்து சென்ற குரங்குகள் அங்கு என்ன குளறுபடிகள் செய்கின்றனவோ??🐒😳
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
அந்தத் தரப்பு, கருணாதரப்பு என்று வந்த செய்தி ஒன்றை வாசித்த ஞாபகம். இறக்கும்போது துன்பம் ஏதுமின்றி அமைதியாக இறக்கக் கிடைப்பது ஒரு வரம். அந்த வரம், மகிந்தர் குடும்பத்திற்கும், அவரோடு சேர்ந்தோருக்கும் இல்லவே இல்லை.🥺
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
விகாரை இடிக்கப்படவேண்டும். அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும், இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இருந்தும் இது எங்கள் மக்களால் அது நிகழக்கூடாது, இதனை உருவாக்கிய அரச படைகளாலே விகாரை அகற்றப்படவோ, இடிக்கப்படவோ அரசினை செயற்பட வைத்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வழி ஏற்படாது. தமிழ் மக்களால் விகாரைக்கு ஏதும் நடந்தால் பௌத்த பீடங்களும், சிங்கள இனவாதிகளும் வெகுண்டெழுவார்கள் அரச படைகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதைத் தடுக்க முடியாது. இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக்குவதற்கான நடவடிக்கைகளை சிங்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இனக்கலவரம் என்ற போர்வையில் தமிழினத்தை படிப்படியாக அழித்து, எங்கள் இனம் பெருகி வளர்ச்சியடைய முடியாத வகையில் நாங்கள் அழிந்துவருவதைக் எங்கள் கண்களால் காண்கிறோம். எங்களோடு அவர்களால் கல்வியில், அறிவில், வீரத்தில் வென்றுவிட முடியாவிட்டாலும், அரசு என்ற உலக ஆதரவுடன் அவர்கள் உதவிகளையும் பெற்றுத் தங்கள் ஆயுதப் படைகளைக் கொண்டு எங்களை அழித்து மேலும் ஒடுக்கிவிடச் சந்தர்ப்பம் கொடுக்கப் போகிறோமா?? சிங்களப் படைகளுடன் போராடி வென்று எங்கள் உரிமையை நிலைநாட்ட வந்த தலைவரையும் அவர் படைகளையும் காட்டிக் கொடுத்து அழித்த இனத்துரோகிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோரும் தமிழினத்தில் நாங்களும் தமிழரென்று இன்றும் ஊடுருவி உள்ளனர்.
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’
கந்தையா57 அவர்களே! நீங்கள் கிருபன் அவர்களின் பதிவைப் பார்கவில்லையா?
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’
தமிழர்களின் அறிவியலை இந்த உலகம் பெரிதாக மதிப்பதில்லை என்பதற்கு இதுவொரு சிறந்த உதாணம். இன்று உலகெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் மிகச்சிறந்த பண்டிகையாக தைப்பொங்கல் திகழ்கிறது. இந்நிலையில் தமிழர்கள் அனைவரும் தைமாதத்தில் பொங்கல் அடுப்பு மூட்டினால் வெப்பம் அதிகரிக்குமா இல்லையா??🤔
-
கடவுச்சீட்டு விவகாரம் - யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி!
சிறீலங்காவில் அரிசி, உப்பு, தேங்காய், பால், முட்டை போன்றவற்றின் தட்டுப்பாடுகள் வெகு விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.😁
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இன்று யூ டியுப்பர்கள் பலர் பல்கிப் பெருகி இருந்தாலும் ஒரு சிலரின் நல்லதோ, கெட்டதோ வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. அதில் தமிழ் அடியானும் ஒருவர். அதற்காக எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.😁
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இடி முழங்கும்போதுதான் நான் “அருச்சுனா அபயம்” என்று அழைப்பேன். இது என்சிறுவயதில் இடி முழங்கும்போது நான் பயப்படாமல் இருக்க என் அம்மா சொல்லித்தந்த தைரிய வார்த்தை. இங்கு இத்திரி குறித்த எனது பின்னூட்டத்தில் நான் அருச்சுனாவை அழைக்கவே இல்லை ஐயா! 🤔
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
உண்மைதான். ஊழல்வாதிகளை மக்களுக்குக் காட்டுவதற்கான நெஞ்சுரம் கொண்ட எவரும் முன்னர் இல்லாததாலும் முடங்கியிருக்கும்.
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
இங்கு எங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கழுவி ஊத்துகிறோம். கழுவி ஊத்தப்படுகிறவர்களோடு எத்தனைபேர் ஒருதாய் பிள்ளைகள்போல் உண்டு, உறங்கி அவர்களை அறிந்து விமர்ச்சிக்கிறோம்?? பெரும்பாலும் ஊடகச் செய்திகள் மூலமாகத்தானே அறிந்து விமர்ச்சிக்கிறோம். ஊடகங்கள் எவருடைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறோமா? அவசரத்தில் எங்கள் அறிவைக்காட்ட, முடிவறியாது கழுவி ஊத்துகிறோம்.
- இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம்
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
யார்? அமெரிக்காமேல் நின்று ஆடும் டிரம்பைச் சொல்கிறீர்களா??😳
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன். சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார். நான்….??😳
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
ஞானப்பற்கள் 4 என்று உள்ளதே! கணக்குப் பிழைக்கிறதே?😳
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
படிப்பது, கேட்பதை விடவும் அதிகமாக, அனுபவம்தான் உண்மையை உணர்த்துகிறது. உங்களுக்கு எத்தனை பற்…….? எனது அப்பு இறைச்சி உண்ணும் ஆசையில், பொக்கைவாய்க்குள் சப்பி, பொச்சடித்து உறுஞ்சி உண்ணுவதை பிறர்வலி அறியாத சிறுவயதில் பார்த்து ரசித்துள்ளேன்.😟
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
நான் நன்றியுள்ளவனாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா???😩
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள என் உள்ளமும் மறுக்கிறது. ஏனென்றால் நான் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த திமிர்.🤪
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
மட்டக்களப்பில் ஒரு பல்வைத்தியர், பெயர் கணேசன் சிறிதும் வலிதெரியாது பல் புடுங்குவதில் நிபுணர், பல்லில் சிறு சூத்தை, வலி என்றாலும் புடுங்கிவிடுவார். எனக்கு மேல்வாய் கொடுப்புகளில் ஒருபக்கம் இரண்டு, மறுபக்கம் ஒன்று என மூன்றுபற்கள், கீழ்வாய் கொடுப்புகளில் தாலா இரண்டு, இரண்டு எல்லாமாக ஏழு பற்கள் இல்லாதுபோனது. எனது இருபது வயதிற்குள் இது நடைபெற்றது. நான் யேர்மனிக்கு வந்து பலதடவைகள் பல்கூச்சம், வலியென்று இங்குள்ள பல்வைத்தியரிடம் சென்று எந்த வலியுமின்றிச் சிகிச்சை பெற்றுள்ளேன், மிகுதி 25 பற்களும் இன்றுவரை காத்திரமாக எலும்பு கடிக்கும் உரத்துடன் உள்ளன.😁
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தவறு ஐயா! நான் யாழ்களத்தில் இணைந்த அதே ஆண்டில் நீங்களும் இணைந்துள்ளீர்கள், நாலு மாதங்கள் பிந்திவந்து.🧐
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪