Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. கோழி எச்சம் அளைந்த குரங்கு அதன் துர்நாற்றம் தாங்காது கையை தேய்த்துத் தேய்த்து இரத்தம் ஒழுகி இறுதியில் இறந்துவிடுமாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கள உறவுகள் யாராவது இதுபற்றி அறிந்துள்ளீர்களா.?????? அவதானம் அவசியம்.🤔🥴
  2. “கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.” இது தவறு. தோலுக்குள் அல்ல, காலுக்குஅடியில் வெள்ளைத் தோலே இருந்து மிதிபடுகிறது. இது இயற்கை கறுவலுக்கு தந்த வரம். அறியாமல் அடிமைப்பட்டோம்.🥴
  3. என் ஜாதகத்திலேயே சொல்லிவிட்டார்கள். என் ஆயுள்வரை சோற்றுக்குப் பஞ்சமில்லையாம்.😆🙏
  4. மன்னிக்கவும், நான் கந்தையாண்ணையோடு நேரடியாக மோதப்போவதில்லை. அவர் எனக்கு புதுப்பெண் பார்க்கும் படலத்தில் இருப்பவர், அதுவும் இளம்பெண்.😆🥰 அதிகமாக நான் அமெரிக்கர்களோடு வேலை பார்த்தவன், அனேகமாக அவர்கள் தங்கள் மனைவியை அறிமுகப்படுத்தும்போது இது இரண்டாவது இது மூன்றாவது என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள், நான் பேந்தப் பேந்த முழிப்பேன்.😳
  5. ஐயா ஓணாண்டி அவர்களே! கறுப்பன் வெயிலில் நின்றாலும் கறுப்பன்தான், நிறம் மாறாது. வெள்ளையன் நின்றால்….. ஓணான்போல் நிறம்மாறிவிடுவானே!!🤪
  6. கந்தையா57 அவர்களே! எனக்காக இளமங்கை ஒருவரைப் பெண்பார்க்கும் தெய்வமே!! எனக்கு கறுப்பும் வேண்டாம், வெள்ளையும் வேண்டாம், றோஸ்கலரில் ஒன்றைப் பாருங்கள் சாமி.🙏🌸
  7. கல்கி குமுதம் ஆனந்தவிகடன் என்று இந்திய வெளியீடுகள் என் மனைவியை இந்திய நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்ற வைத்திருந்ததை அறியமுடிந்தது. கணவன் வேலையால் வந்ததும் அவர்பாதணியைக் கழற்றி சேவைகள் செய்யவேண்டும், அவர் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் இப்படி பல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டவர். இப்போது உங்கள் சிந்தனையில் உதித்த ஊட்டத்தைப் பார்த்ததும் என்னை நோக்கி செருப்பைக் கழற்றினாலும் பரவாயில்லை இரும்பு லாடம் அடித்த தனது பழைய குதிக்கால் செருப்பை பரணில் தேடுகிறா.😳
  8. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். ஈழத் தமிழினக் கொலைகார இராணுவத்துடன் பாதீனச்செடி விதைகளையும் ஈழத்திற்கு அனுப்பி, இன்றுவரை அங்கு பயிர் செய்கைகளை அது அழிந்துவருவதற்கு காரணம் யார்.???🤔
  9. இது இப்படியே போனால் வயாக்கர மாத்திரைகள் உற்பத்தி செய்யும் கம்பனிகளை இழுத்து மூடவேண்டியதுதான்.😳😩
  10. சிறீலங்கன் பணக்கார வரிசையில் ரணில் மகிந்தாவை முந்தப்போறார், டும் டும் டும்.🏃😆🥴
  11. நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂
  12. கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩
  13. இது மும்மூர்த்திகளால் படைக்கப்பட்டது, ஆதலால் மூர்த்திகள் யாழ்களம் உள்ளவரை களமாடி உறவுகளுக்கு ஆசி வழங்கி அருள்புரிவார்கள்.😌🙌
  14. அப்படி அல்ல சுவி அவர்களே! மகிழுந்தை நானே ஓட்டினேன். ஓட்டும்போது சோம்பல் வராதிருக்க வாய்க்குள் எதையாவது போடுவது எனது வழக்கம், அது சிறீத்தம்பிக்கு நன்றாகத் தெரியும். பலகாரப்பை என் பக்கத்தில் இருந்தால்?? அதுதான்….🤔😂
  15. “இலவு காத்த கிளி” நாங்கள் தமிழர்கள். பழமையை என்றும் பழுதடைய விட்டதில்லை. பழுதடைந்த சம்பந்தரையும் சுமந்திரனையுமே பாராட்டி வந்தவர்கள், இந்தப் பழமொழியையும் பழுதடைய விடமாட்டோம்.🤫
  16. நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌
  17. கடன்படுவோம் கடன்படுவோம் அபிவிருத்தி அடைந்தாலும் கடன்படுவோம்.😌 கடனே கடவுள்.🙏
  18. இது யார்சொன்னது?? அடுத்த தீபாவளி தைப்பொங்கல் என்று சொல்லக்கூடியவரும் இன்று இல்லையே!!🤔
  19. எனக்கு அம்மாள் வருத்தம் வந்தபோது அம்மா பனங்கள்ளு ஊற்றித் தந்தவ, அக்கா குழந்தைபெற்று இருந்தபோது சாராயம் ஊற்றிக் கொடுத்தவ. மதுவை அளவுக்கு மிஞ்சாமல் அளவோடு உடல் நலத்திற்கு ஏற்ப எடுக்கவேண்டும் என டாக்டர் சொல்லவந்ததுபோல் தெரிகிறது.😌
  20. இதுவரை மனிதப் பிறவிகள் மீட்டியதால் இனிய சுரம் தந்து நொந்த மனதுக்கு மருந்திட்டது யாழ். இப்போ அல்லாததுகளும் புகுந்து மீட்ட அபசுரம் பிறந்து மனதை அலைக்கழிக்கிறதே? யாழுக்கு நெய் ஊற்றும் மட்டுறுத்தினர்கள் நித்திரையா? கூடுபத்தி எரிகிறதே தெரியவில்லையா??😳
  21. விசுகு அவர்களே! இனி நீங்கள் மீள்வது கடினம். நிற்கவும் முடியாது, ஓடவும் முடியாது.🤧
  22. அவர்களில் சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. நான் வேலைபார்த்த ஆலையில் அப்புகாமி என்ற குள்ளமான கரையோரச் சிங்களவன், ஆலையின் பிரதான இயந்திரத்தை இயக்குபவர்களின் உதவியாளன் பதவி, பள்ளிக்கூடப் படியேறி அறியாதவன், ஆனாலும் எங்கள் இரண்டாவது பெரிய சிங்கள அதிகாரியின் செல்லப் பிள்ளை ஆதலால் அவன் குறைகள் தவறுகள் கணக்கில் வருவதில்லை. அவன் எடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி அந்த அதிகாரியின் பைக்குள் போய்விடுவது அரசல் புரசலாகத் தெரியும். ஒரு அடிமையைவிடக் கேவலமாக அவருக்குத் தொண்டுகள் செய்வான். நாங்கள் அவனைப் பரிகாசம் செய்தால் பற்கள் முழுவதும் காட்டிச் சிரிப்பான் அவ்வளவுதான். பாவம் அவன் குடும்பகாரன், மனைவி ஊரில். தன்செலவு போக மிகுதிச் சம்பளத்தை அவன் அண்ணனுக்குத்தான் அனுப்புவான். ஏனெனில் அவன் ஊரில், அவர்கள் குல வழக்கப்படி கணவன் வெளியூரில் வேலை பார்த்தால் மனைவியைக் கணவனின் அண்ணன் தன் மனைவியைப்போல் பராமரிப்பாராம் என்று அறிந்தேன்.
  23. எங்களுக்கு இதெல்லாம் சரிவராது ஈழப்பிரியன் தம்பி சொன்னதுபோல்👇
  24. உலகில் உள்ள ஆறு, குளம், கடல்கரை எங்கும் பனை மரங்களை நட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாதா????.🤔 ஊரில் பனைமரத்தின் பின்னால் குந்தியிருந்த அனுபவம்…. அதை நினைத்தாலே ஆனந்தம்.😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.