ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஈழப்பிரியன்
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நீதி நியாயமாக பேசுகிறார்.பார்ப்போம்.
-
நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்.
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது. இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்த சம்பவத்தின் மூலம் சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விமானி சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணைகள் இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தாலும் மற்றொன்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாலும் நடத்தப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் அடிப்படையில் ஆசியாவின் பழமையான விமான சேவை நிறுவனமாக கருதப்படும் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் பல சிக்கல்களை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சர்வதேச விமான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையின் பின்னர் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/srilankan-airlines-important-announcement-1729300082
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நம்ம ஆட்கள் எத்தனை பேர் போகப் போகிறார்கள் பார்ப்போம்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
மாகாணசபை முழுவதுமாக இயங்கினால் சிலவேளை முழு பணமும் மாகாணசபைகளுக்கு கிடைக்கலாம். இப்போது மத்தியூடாகவே செய்யலாம். வென்றால் அனுராவுடன் கைகோர்க்க தயாராக உள்ளார்கள்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- புது வரவு.
வணக்கம் உங்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கோ.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இந்த டாக்ரர் கொரானோ காலங்களில் யாழில் நல்ல வேலைகள் செய்ததாக சொல்கிறார்கள். எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டார். யாழில் உழைத்த பல டாக்ரர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர் ஏன் போனாரோ தெரியவில்லை.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு ரொம்ப பாராட்டுக்கள். கடுமையான பரீட்சை என்றாலும் எல்லோருடனும் சேர்ந்து கலந்து கொள்வேன். யாரை? அப்போ நீங்க தான் வெற்றியாளர்.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
விடுதலையானவனின் வலி சுமக்கும் புத்தகம் அவன் கடந்து வந்த பாதைதனை திரும்பிப் பாரடா தமிழா தனி ஒருவனாக போராடும் போது தவித்ததேனடா? ஒரு வைத்தியரின் கடமை என்ன நினைத்துப் பாரடா தமிழா அதையும் தாண்டி அவன் போராட்டம் ஏழை மக்களின் விடிவுக்காகத்தான் ஊன் இன்றி உறக்கம் இன்றி உயிரைக் கையில் தாங்கிக் கொண்டு நேரம் காலம் தெரியாமல் தவிப்பதேனடா தமிழா பட்டினியைப் போக்க வேண்டும் அதுதான் அர்ச்சுணாவின் முழு மூச்சான நோக்கம் தானடா தமிழா நல்ல நோக்கம் தானடா வாக்குப் போட்டு வெல்ல வைப்போம் மருத்துவ ஊசிக்கு இலக்கம் இரண்டிற்கு👍 முகப்புத்தகம்.- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள். யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது. இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லகாலம் வாக்கு இல்லை.- ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம். எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை கெளரவப் பிரச்சனையோ? ரணில் யானையை மறந்து ரொம்ப நாளாச்சு .- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இந்தக் கட்சிக்கு முதலாளி வியாளேந்திரன்.- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நல்லது தொடர்ந்தும் போராடுங்கள்.அது உங்கள் விருப்பம். அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அதுக்காக ஜேர்மனி கள உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தீக்குளித்து விடாதீர்கள்.- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அமெரிக்க கடற்படை ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறது. அது சரியாக முடிந்தால் அனுராவுக்கு இலங்கைக்கு சுபீட்சம் வரலாம்.- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.- முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆதரவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு - சதாசிவம் வியாழேந்திரன்
இவருக்கு போனஸ் சீற் போகப் போகுதோ?- ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
புலிகளை வீழ்த்துவதற்கு இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ரசியா என்று சேர்ந்த மாதிரி.- கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
தகவல்களுக்கு நன்றி கப்பிதான்,ஏராளன்.- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம். ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன். மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.- மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம்
நல்ல கேள்வி. இதற்கு அனுரா தான் பதில் சொல்ல வேண்டும். சரி பிழைகளுக்கப்பால் ஒரே ஒருவர் தான் ஒப்புக் கொண்டுள்ளார். அடுத்தவர் அனுராவுடன் இரகசியம் பேசினார்.இப்படி போகுது. இலங்கையில் தடயங்களை அழிப்து புதிதா? ஆனாலும் இதுபற்றிய முழு விபரங்களும் வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குழுக்களில் ஒருவராகவே அனுராவும் கணிக்கப்படுவார்.- அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648 கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்! உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்! உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதோ நம்மால முடிந்தது.- மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம்
அரசியல்வாதிகள் சொத்து சுகங்கள் இப்படியான வியாபாரங்களை தங்கள் பெயரில் வைத்திருப்பதில்லை. நம்பிக்கையானவர்கள் சகோதரங்கள் சொந்தக்காரர்களின் பெயரிலேயே வைத்திருப்பார்கள். ஆனபடியால் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டம்.- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன். நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம். வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே. செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை. - புது வரவு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.