Everything posted by ஈழப்பிரியன்
-
முன்னாள் போராளி
https://www.facebook.com/share/v/JLK54Phhf1wwS4zU/?mibextid=UalRPS தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். முழுப்படத்தையும் பார்க்க கீழேயுள்ள யூடியூப் லிங்கை அமத்துங்கள்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஒரு நாட்டு முப்படைத் தலைவன் தனது எஜமான் அம்மணமாக ஓடும்போது பார்த்துக் கொண்டிருப்பானா? அமெரிக்காவின் ஒரு சொல்லுக்காக ராணுவத்தையோ பொலிசையோ களத்தில் இறக்காமல் வேடிக்கை பார்த்தார். இப்படியான தளபதிகள் நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்காக இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னுமா இவரை நம்பி பதவியில் வைத்திருக்கிறார்கள்? இன்னும் உளவாளியாக இலங்கையைப் பற்றிய முழு விபரமும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
இப்படி தலைசுற்றி விழுவதைவிட தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இப்போ யாரைக் கேட்டாலும் சொந்தக்காரராலேயே பிரச்சனை என்கிறார்கள். எத்தனை ஆயிரம் போராளிகளை வைத்திருந்த தலைவர் என்னபாடு பட்டிருப்பார்?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இது யாருடைய கட்சி.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
உண்மை தான். அத்துடன் ஆரம்பத்தில் மிகவேகமாக அளவு 5 இல் புயலின் வேகம் இருந்தது.புளோரிடா மண்ணைத் தொடும்போது இதன் அளவு 3 ஆகி குறைந்து குறைந்து அடுத்த கரையை கடந்து அற்லாற்ரிக் கடலில் இறங்கும் போது அளவு 1 ஆகிவிட்டது. தொடங்கிய வேகத்தில் அடித்திருந்தால் மிகப்பெரும் அழிவு வந்திருக்கும். பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அரசு சொன்னதற்கிணங்க வெளியேறிவிட்டார்கள். நிறைய பேருக்கு திடீரென இன்னொரு இடத்தில் போய் 2-3 நாட்களுக்கு தங்கும் வசதி இல்லை. குறைந்த நேரத்தில் கூடிய மழைப்பொழிவு.இது தான் போன புயலிலும் நடந்தது.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
என்ன தம்பி அமெரிக்காவில் குடியேறப் போறீங்களோ? ஏன் உங்களுக்கு நியூயோர்க்கைப் பிடிக்காதோ? இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். 2.5 மில்லியன் மக்கள் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.
-
முதலாளியான போராளி.
மிகவும் பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய முன்னாள் போராளி. நேரமுள்ளவர்கள் அவரின் மனவலிமை எவ்வளவு கஸ்டம் இந்தநிலைக்கு வருவதற்கு வளர்ந்த இடம் என்று பலவிதமான விடயங்களையும் தொட்டுச் செல்கிறார் கேளுங்கள்.
-
முதலாளியான போராளி.
- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
அவர் இந்தியாவுக்கு போய் வந்தாரே! அவரைக் கைது பண்ணலையே.- அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
மணல் கடத்தல் பற்றி.- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை? எனது பங்கிற்கு 1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை 2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது. கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள். விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அப்ப அமெரிக்கா கொடுக்கலையோ?- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
இவர்களை நான் எப்போது ஆதரித்தேன்? இப்போது கூட தேர்தல் மேடையில் பேசக் கிடைத்தால் இவர்களுக்கு எதிராகவே பேசுவேன். எத்தனை பேரை போட்டுத் தள்ளியவர்கள் அழியட்டும். நல்லது தொண்டனாக இருக்கட்டும். அதற்காக தலைவராக ஆக்க வேண்டுமா? ஒரு கம்பனியில் உயர்பதவி யாருக்கு கொடுக்கிறார்கள்? பைல்களை நகர்த்துபவருக்கு ஒரு உயர் பதவி கொடுத்தால் எப்படி இருக்கும். அடுத்த அடுத்த பதவிகளுக்கு போய்த் தான் முனனேறணும்.- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
எனது பதின்ம வயதிலேயே சாதிக் கொடுமைக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டவன்.எனவே சாதிக் கொடுமையைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை. எனது ஆதங்கமெல்லாம் பாராளுமன்றுக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும்.ஒரு படித்த உயர்ந்த நிலையில் உலகமே மதிக்கும் ஒரு சட்டத்தரணி சுமந்திரன் தனது கட்சியில் பல பெண் தொண்டர்கள் இருக்கும் போது அவர்கள் யாரையுமே கண்டு கொள்ளாமல் நாகரீகமில்லாமல் எதிராக களமாடிய ஒருவரை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார். இளம்பிறையன் சாதிக்காக குரல் கொடுக்கிறவர் என்றால் வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.- தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி
ஒருபக்கம் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி மறுபக்கம் மாவையில் காலில் விழுந்து ஆசீர்வாதம். இந்திய கலாசாரத்தை இங்கும் அறிமுகப்படுத்துகிறாரோ?- "விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு]
தெற்கில் வந்த மாற்றம் போல வடகிழக்கிலும் வரும் என எண்ணுகிறேன். அடுத்த 14 வரை பொறுத்திருப்போம்.- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.- அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
எல்லோரும் எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் சூறாவழியின் வேகம் குறைந்தபடியால் உயிர் உடமைகளுக்கு சிறிய சேதாரங்களுடன் புளோரிடா மக்கள் தப்பியுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். பல வீடுகள் கட்டடங்கள் கூரையைக் காணவில்லை.சில வீடுகள் முற்றாக காற்றுடன் பறக்கிறது. சிறிய சிறிய சூறாவழிகள் பல தாக்கியதால்த் தான் இப்படியான சேதங்கள். கடந்த சூறாவழியுடன் ஒப்பிடும் போது இது எதுவுமே என்ற மாதிரி இருக்கிறது. பைடன் அரசுக்கு இப்போது மிகப்பெரும் சவால் இருக்கிறது. கூடுதலான பணங்களை வசதிகளைக் கொட்டி புளோரிடா மாநிலத்தை தங்கள் பக்கம் வரவைக்க முயற்சி செய்வார்கள்.- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே. - ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.