Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை. கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன். இனிமேல் என்ன செய்வது?
  2. 13 ஐ கேட்டு தீர்வின் தரத்தை குறைக்கும், சில தமிழ்த்தேசியக் கட்சிகள் --- ---- ---- ----- தமிழரசுக் கட்சி மதில் மேல் பூனை 2017 இல் மாகாண சபைத் தேர்தலை நிறுத்தியது யார்? ஜேபிவியும் 2017 இல் இருந்து13 கைவிடலாம் என்ற நிலைப்பாட்டில் ----- ---- ----- இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி வந்தது. 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைத்தீவை பிளவுபடுத்தும் எனவும் தமிழ் ஈழம் அமையும் என்று கோசம் எழுப்பி அன்று எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மாகாண சபைகள் முறையை நன்றாக அனுபவித்து அதனைத் தங்கள் கட்சி அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டது. 2009 ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், மாகாண சபைகள் தேவையில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் இல்லை என்ற தொனியல் ஜேவிபி குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் ரில்வா ஆகியோர் அவ்வப்போது கூறியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் ஆட்சியின்போது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. ஜேவிபி, தேசிய மக்கள் சக்தியாக தன்னை மாற்றிக் கொண்டு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒருபோதும் கோரியதில்லை. அதாவது, 2017 இல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட நாள் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஜேவிபி ஒருபோதும் கேட்டதும் இல்லை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுமில்லை. ஆகவே --- 1988 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த மன நிலை தற்போதும் ஜேவிபிக்கு உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தாலும், அடிப்படையில் ஜேவிபி என்ற மன நிலை அதுவும் தமிழ் மக்கள் சார்ந்த விவகாரங்களில் அந்த மன நிலை இருப்பதையே சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. இப் பின்னணியில் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஆகியவை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோருவதுடன் கூட்டங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றன. இந்த முன்னாள் இயக்கங்கள் 1988 ஆம் ஆண்டே மாகாண சபை முறைமையை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனாலும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக போராடியதால், தமது நிலைப்பாட்டை மாற்றி மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஆனாலும் ஆரம்ப புள்ளியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பிதம் செய்தன. ஆனால் -- மிகச் சமீப நாட்களில் மாகாண சபைத் தேர்தல் முறைமை பற்றி அதிகமாக இந்த முன்னாள் இயக்கங்கள் உரையாட ஆரம்பித்துள்ளன. இந்த முன்னாள் இயக்கங்கள் --- 2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தியது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருடன் தொடர்ச்சியாக உரையாடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரி அக் கடிதத்தை அனுப்பியிருந்தன. ஆனால் -- அக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குகொள்ளவில்லை. அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். தமிழரசுக் கட்சி சில திருத்தங்களுடன் மோடிக்கு கடிதம் அனுப்பி செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தது. ஆகவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபை முறைமையையோ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் விரும்பில்லை என்பதுதான். ஏனெனில் --- 2009 இற்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை சமாளிக்க அதுவும் இந்தியாவைச் சமாளிக்க இந்த 13 என்பதையும் மாகாண சபை முறைமைகள் என்பதையும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்து சிங்கள தலைவர்கள் நடத்திக் காண்பித்திருந்தனர். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரான சூழலில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, 13 ஐ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் 13 இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவோ 2015 ஆட்சிக்கு வந்த ரணில் - மைத்திரி அரசாங்கமோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, 2013 இல் முதன் முறையாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட மாகாணங்களுக்குரிய பல அதிகாரங்களை செயற்படுத்த கொழும்பு நிர்வாகம் அனுமதித்திருக்கவிலலை. வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட அதிகாரங்கள் இல்லை என்றே குறை கூறியிருந்தார். இணைந்த வடக்கு கிழக்கில் முதன் முதலாக முதலமைச்சராக பதவி வகித்திருந்த வரதராஜப்பெருமாளும் போதிய அதிகாரங்கள் இல்லை எனவும் அதிகாரங்கள் தெளிவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். இப் பின்புலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஆயுத இயங்கள் மீண்டும் கோருகின்றன. ஆனால் --- இதுவரைக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அவசியம் இல்லை. 2009 இற்குப் பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடருகின்றது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தின் எண்ணிக்கைகளும் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும், அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாது. ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும். இப்போது கூட அவ்வாறான மன நிலையில் இருந்து கொண்டுதான் 2017 இன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ரணில், கோட்டாபய ஆகியோர் விரும்பயிருக்கவில்லை. அதனையே அநுரகுமார திஸாநாயக்கவும் பின்பற்றுகிறார். 13 ஐ அமுல்படுத்தி இருக்கின்ற அதிகாரங்கள் ஊடாக வடக்கில் கிழக்கில் எதனையும் சாதிக்க முடியும் என சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுத இயக்கங்கள், தங்கள் அரசியல் வறுமையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் -- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழரசுக் கட்சி மதில் பூனை போன்று உள்ளது. ஆகவே --- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்று கோரும் நிலையில், எதுவுமே இல்லாத மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்புடைய அரசியல் அல்ல. அதுவும் உள்ளக பொறிமுறை என ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மாகாண சபை கோரிக்கைகள் தமிழ்த்தரப்பை மேலும் பலவீனப்படுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும். ஆனால் --- தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும். 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டு தங்கள் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் உயர் தரத்தை தாங்களே தரம் தாழ்த்துவது பொருத்தமான அரசியல் உத்தி அல்ல. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/17AyiaTkxM/?mibextid=wwXIfr
  3. இந்தியாவை ரசியாவிடமிருந்து வாங்காதே என்று சொல்ல முதல் ரசியாவிடமிருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிற்பாட்டி முன்மாதிரியாக நடக்க வேண்டும்.
  4. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
  5. எமக்கு இன்னமும் இந்த நிலை வராவிட்டாலும் அடுத்து எங்கே போய் இருப்பது?யாருடன் இருப்பது? எது சாத்தியம்? இப்படி பலவற்றைப் பற்றி பேசத் தூண்டுகிறது. எமது வயதுக்காரர் காலமானாலே இப்படியான எண்ணங்கள் கூடுதலாகவே வந்து போகின்றன. சிறுகதை சிந்திக்க வைக்கிறது.
  6. வாகனம் ஓடும் போதும் மழை தூறினால் கவனமாக ஓட வேண்டும் ரோட்டு எல்லாம் எண்ணைத் தன்மையாக இருக்கும் என்பார்கள்.
  7. 1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள். @ரசோதரன் னும் தாவித் தாவி 2 ஆவதாக வந்துவிட்டார்.
  8. செவ்வந்தியும் ஊடகங்களும் --- ------------- *குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்புக் கூறுமா? *வெள்ளைத் துணியால் தலையை போர்த்தும் நடைமுறை தவிர்க்கப்பட்டது ஏன்? ---------------------- கொலை செய்த அல்லது கொலைக்கு நேரடியாக உதவி செய்ததாக நம்பப்படும், குற்றவியல் குற்றம் (Criminal Offence) புரிந்த கைதிகளை பொலிஸார் அழைத்து வரும் போது, அவர்களின் தலையை வெள்ளைத் துணியால் மூடிக் கொண்டு வருவது வழமை. ஆனால், இலங்கை குற்றப் புலனாய்வு பொலிஸார் செவ்வந்தி உள்ளிட்ட கைதிகளை, நேபாளத்தில் இருந்து ஆடம்பரமான முறையில் அழைத்து வந்திருக்கின்றனர் போல் தெரிகிறது. செவ்வந்தி விமானத்தில் இருந்து இறங்கி வரும் முறையும், விமான நிலைய ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்துக் கொண்ட முறையும், கொலைக் குற்ற சந்தேகநபர் என்ற உணர்வை மறைத்திருக்கின்றன. அத்துடன் அவர் தன்னுடைய பயணப் பொதியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போன்று கொண்டு வருகிறார். இராணுவத்தினரும் பொலிஸாரும் செவ்வந்தியை சுற்றி பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகின்றனர். சில பிரதான ஊடகங்களில் இந்த ஆடம்பரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளங்களிலும் அக் காட்சி வெளியாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்த்துமுள்ளனர். நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது வேறு. ஆனால் --- அவரை கொலை செய்வதற்கு நேரடியாக களம் இறங்கி ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்து கொண்டு வரும்போது, கைதிகளுக்கான நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? இந்த நடைமுறை செவ்வந்தி கைது விவகாரத்தில் பின்பற்றப்படவில்லையே! இங்கே குற்றவியல் பொலிஸாரும் கொழும்பில் உள்ள சில பிரதான ஊடகங்களின் சில செய்தியாளர்களும் தவறு இழைத்துள்ளனர் என்றே பொருள் கொள்ள முடியும்... சமூக ஊடகங்கள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன என்று இலகுவாக குற்றம் சுமத்த முடியும். ஆனால் -- செவ்வந்தியை அழைத்து வந்த காட்சிகளை வீடியோ எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் பிரதான ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யூடியூபர்ஸ் அங்கு செல்லவில்லை. பிரதான ஊடகங்களில் வெளியான காட்சிகளை செம்மையாக்கம் (Editing) செய்தே சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை பிரசுரித்திருந்தன. சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆடம்பரமாகவும் நகைச்சுவையாகவும் அதனை எல்லோரும் சிரித்து ரசிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தன. இது சமூகத்தில் பிழையான கற்பிதத்தை கொடுத்துள்ளது --- அதாவது --- கொலை செய்து விட்டுத் தப்பினாலும் கைது செய்யப்படும் போது, அரச மரியாதை போன்ற உணர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு தவறான புரிதலை அக் காட்சிகள் சமூகத்தில் விதைக்கின்றன. அது மாத்திரமல்ல --- கொலை என்பது மிக இலகுவான காரியம் என்ற பார்வையும், இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், செவ்வந்தியின் வயது 26. அத்தோடு ---- கொலை செய்தால் அல்லது கொலைக்கு உதவி செய்து ஓடி ஒழித்துக் கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டால், அரச மரியாதையின் தரத்துக்கு பிரதான ஊடகங்களும் தங்களை காண்பிக்கும் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் மேலோங்கியுள்ளன. அதேநேரம், யூடியுபர்ஸ் ஊடக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அல்லது அவர்களை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு கோரவும் முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில் ---- ------ சில பிரதான ஊடகங்கள் செவ்வந்தி விவகாரத்தில் பொறுப்பின்றி செயற்பட்டமை கண்டனத்துக்குரியது. பொலிஸாரிடம் தனியான ஊடகப் பிரிவு உள்ளது. அந்த ஊடகப் பிரிவினரால், செவ்வந்தியும் ஏனைய கைதிகளும் அழைத்து வரப்பட்ட காட்சிகளை பதிவு செய்து, பின்னர் பிரதான ஊடகங்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம். அல்லது வெள்ளைத் துணியால் முகத்தை மூடிக் கொண்டு வந்திருக்கிலாம். ஆனால் -- பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் இத் தவறுக்கு பொறுப்புக் கூறுமா? அதேநேரம், மக்களுக்கான அரசாங்கம் என்று மார் தட்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதற்கு பொருத்தமான பதில் தருமா? விளக்க குறிப்பு --- பல மாதங்களாக வியூகம் வகுத்து செவ்வந்தியை கைது செய்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமக்குள் பெருமைப்படக் கூடும். ஆனால் செவ்வந்தி அழைத்து வரப்பட்ட முறையானது, குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அப் பெருமைகளை மலினப்படுத்தியுள்ளது எனலாம். செவ்வந்தியின் இயற்கை அழகுக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் கைதுக்கான நோக்கத்தை தரம் குறைத்துள்ளது என்றே பொருள் கொள்ள முடியும்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZMDz5MhEf8WbyEAjBzoMhept4BnN1SFaRcLnJgsjrjkNU4ehvECDQZ1fvudjHkPel&id=1457391262
  9. அட அது மட்டுமா? களம் கறுப்பா? சிகப்பா?வெள்ளையா? இப்படி ஐயாவின் ஆராச்சி வேற லெவல்.
  10. 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் இல் விட்டதை எல்லாம் வீராங்கனைகளை வைத்து பிடிக்கிறார்.
  11. ஏன் ஐரோப்பா அமெரிக்கா எல்லாம் எந்த இடத்தில் வரும்? இந்தியா சீனா எல்லாம் பின்னால தான் வரும். நாட்டுக்கு நாடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தான் முன்னணியில் நிற்க வேண்டும்.
  12. உக்ரேன் சத்தம் ஐரோப்பாவுக்கே கூடுதலாக கேட்கும்.
  13. வெகுவிரைவில் வெனிசூலாவுக்கு சாத்துப்படி வைத்து மரீனா கொரீனா ஜனாதிபதி ஆக சந்தர்ப்பம் உள்ளது. அதுவரை உயிரோடு இருக்க வேண்டும்.
  14. டைரக்சன் தயாரிப்பு கதைவசனம் இந்தியா. முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனை தெரிவு செய்தால் சுமந்திரன் களமிறங்குவார்.
  15. சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை. சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார். இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்... ஆகவே ------ A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்? B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் ---- 13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா? இல்லையே? 1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே? 2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே? இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது. நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது... அது மாத்திரமல்ல --- ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்? அத்துடன் ---- ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இந்த மடைமாற்றங்கள் --- ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்? புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது. ஆகவே ----- ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்----- -------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?
  16. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  17. இங்கிலாந்து பாரிய தோல்வியில் இருந்து தப்பிவிட்டது.
  18. செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுக்கள்.
  19. இப்போது இலங்கை போவதற்கு விசா தேவை இல்லை. ஆனபடியால் ETA விசா.
  20. 1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.