Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. உண்மை தான் சீமானுக்கு இவ்வளவு கூட்டம் கூடாது. ஆனால் விஜேக்கு இப்படி சனம் கூடும் என எதிர்பார்த்து அதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் நடந்த கூட்ட முடிவிலும் குண்டு விழுந்த இடமாக காட்சியளித்தது.கதிரைகள் சின்னாபின்னமாக கிடந்தது. குப்பைகளை அள்ள ஆட்களைக் காணோம். போகப்போக முன்னேற்றம் காணுவார் என எண்ணினேன். இப்போ சோகத்தில் முடிந்துள்ளது.
  2. கட்சிகள் அரசியல்களைக் கடந்து ஒரு கூட்டம் வைப்பதும் முடிவில் எதுவுமே நடக்காத மாதிரி அந்த இடத்தை துப்பரவு செய்வது போக்குவரத்துக்களை கட்டுப்பாட்டில் வைத்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பதிலும் நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து சகல கட்சியினரும் பாடம் படிக்க வேண்டும். இறந்த காயம்பட்ட பொதுமக்களுக்கு அனுதாபங்கள்.
  3. Crush of large crowd at rally for Indian actor-politician Vijay leaves at least 31 dead, over 50 injured. Reuters — At least 31 people were killed and more than 50 injured on Saturday at a rally held by Tamil actor Vijay, who is campaigning for election, state officials said. “Thirty-one people died with more than 50 people now hospitalized,” said V. Selvaraj, a senior police official in the district of Karur in Tamil Nadu, where the incident occurred. Large crowds had gathered for the meeting, part of Vijay’s ongoing state tour for his political party Tamilaga Vettri Kazhagam. Vijay, who is a well-known actor and goes by only one name, launched a political party last year and began campaigning this month ahead of state elections that are to be held early next year. State lawmaker Senthil Balaji told reporters that 58 people were hospitalized after what he said was a stampede. He added that Tamil Nadu Chief Minister MK Stalin will visit the area on Sunday. “The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening,” Prime Minister Narendra Modi said in a post on X. Calls to Tamil Nadu state’s health ministry and Tamil Nadu Chief Minister MK Stalin’s office went unanswered. “The news coming from Karur is worrying,” Stalin said in an X post, adding that he had directed ministers and officials to provide urgent medical aid to those who collapsed at the Karur rally and ordered additional assistance from nearby Tiruchirappalli. https://www.cnn.com/2025/09/27/india/india-actor-politician-vijay-rally-intl
  4. அரசை விழித்தே எழுதியிருந்தேன். சீனாவின் பக்கம் கூடுதலாக சாயம் ஒவ்வொரு தடவையும் மேற்குலகத்தால் ஏதோ ஒரு விதத்தில் குடைச்சல் கொடுக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளை பயணிக்க வேண்டாம் என்று ஏதாவதொரு இலங்கைக்கே தெரியாத நொண்டி சாட்டை சொல்கிறது. ஆக ஒரு அறிக்கையிலேயே இலங்கைக்கு இப்போது வருவாயைத் தரும் சுற்றுலா துறையை வீழ்த்தலாம். இதற்காக அரசு செய்ய வேண்டியது மேற்கு சொல்வதை ஏற்று நடக்க வேண்டும். இதை நீங்கள் தவறாக எடுத்து விட்டீர்கள். பரவாயில்லை.
  5. எல்லோரையும் இலவசமாக அவுஸ் கொண்டுபோய் பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.
  6. எனக்கு மிகமிக பிடித்தமான உணவு. வெங்காயமும் நிறைய போட்டு பொரித்து பிரட்டி எடுத்து சாப்பிடுவேன்.
  7. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தலைப்பிலேயே போட வேண்டாமோ?
  8. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029Px3mQuDvgDZ9tU5tXsPqmaQpMcdpJzxMkcUwAtVFovZJb7pibpLnKMM56dnyoD3l&id=100022256463931 மிக்கர் மாமா படம் பார்க்கலையோ?
  9. பேராசிரியர் சிவத்தம்பியாக இருக்கலாம் என ஊகித்தேன். பாட புத்தகங்களில் உள்ளவை தான் வளரும் சந்ததியில் பதியும். பொதுத் தளங்களில் இருப்பதை ஒருசிலரே கவனிப்பார்கள்.
  10. பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார். இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தெருத்தெருவாக திரியும் நேரத்தில் 84 வயதுவரை வேலை செய்துள்ளார். அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.
  11. ஆமா ஏன் நீங்க விதிவிலக்கா? என்ன எழுதியிருக்கு என்று திரும்ப திரும்ப வாசியுங்கள்.
  12. மேற்குலகை அரவணைத்து நடந்தால் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவுத்துப் போட மறுத்தால் ஒரேஒரு அறிக்கையில் எவருமே போகாமல் பண்ணி விடுவார்கள்.
  13. உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிகாரிகள் பெருமளவில் பணிநீக்கம் செய்வது வரை பல கோட்பாடுகளை அவர்கள் கேள்விப்பட்டதாக ஒரு வட்டாரம் கூறியது, ஆனால் இவ்வளவு மூத்த இராணுவ அதிகாரிகள் திடீரென கூட்டப்பட்டது ஏன் என்பது மிகவும் அசாதாரணமானது. "இது பொது ஸ்க்விட் விளையாட்டுகள் என்று குறிப்பிடப்படுகிறது," என்று ஒரு அதிகாரி நகைச்சுவையாகக் கூறினார். ஒரே நேரத்தில் இவ்வளவு உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பது குறித்து சில அதிகாரிகள் பாதுகாப்பு கவலைகளையும் தெரிவித்தனர். ஹெக்ஸெத் "ஒரு பெரிய புதிய இராணுவ பிரச்சாரத்தை அல்லது இராணுவ கட்டளை கட்டமைப்பின் முழுமையான மாற்றத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தால், இதற்கு ஒரு நல்ல காரணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று காங்கிரஸ் உதவியாளர் ஒருவர் CNN இடம் கூறினார். வாஷிங்டன் போஸ்ட் முதலில் கூட்டத்தின் செய்தியை வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்டது. பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், ஹெக்ஸெத் "அடுத்த வார தொடக்கத்தில் தனது மூத்த இராணுவத் தலைவர்களை உரையாற்றுவார்" என்பதை உறுதிப்படுத்தினார். கூட்டத்தின் நோக்கம் அல்லது இந்த உத்தரவு இராணுவத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் கொடி அதிகாரிகளுக்கும் உள்ளதா என்பது குறித்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார், "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் சந்திக்க வருவது நன்றாக இல்லையா?" https://edition.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டாவது தவணையில் யாருடனாவது போர் செய்து முத்திரை பதிப்பதையே விரும்புவர். இப்போதுள்ள போர்ச் சூழலில் ரம்பின் கை முந்தப் போகிறதா?
  14. முன்னாள் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி மீது ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டியுள்ளது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளை தண்டிக்கும் முயற்சியில் அசாதாரண அதிகரிப்பு ஆகும். ஜனாதிபதியின் நீண்டகால எதிரியான கோமி, இப்போது டிரம்பின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றான 2016 ஆம் ஆண்டு அவரது முதல் ஜனாதிபதி பிரச்சாரம் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது குறித்த விசாரணையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். “அமெரிக்காவில் நீதி! இந்த நாடு இதுவரை வெளிப்படுத்திய மிக மோசமான மனிதர்களில் ஒருவர் FBI இன் முன்னாள் ஊழல் தலைவர் ஜேம்ஸ் கோமி” என்று டிரம்ப் ஒரு உண்மை சமூக பதிவில் எழுதினார். தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும், காங்கிரஸின் நடவடிக்கைகளைத் தடுத்ததாகவும் கோமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Former FBI Director James Comey has been indicted by a federal grand jury, an extraordinary escalation in President Donald Trump’s effort to prosecute his political enemies. Comey, a longtime adversary of the president, is now the first senior government official to face federal charges in one of Trump’s largest grievances: the 2016 investigation into whether his first presidential campaign colluded with Russia. “JUSTICE IN AMERICA! One of the worst human beings this Country has ever been exposed to is James Comey, the former Corrupt Head of the FBI,” Trump wrote in a Truth Social post. Comey has been charged with giving false statements and obstruction of a congressional proceeding, and he could face up to five years in prison if convicted, the Justice Department said in a statement. https://www.cnn.com/2025/09/25/politics/james-comey-justice-department-trump-bondi-perjury-virginia
  15. பதில் வழங்கமால் நழுவிய பிரதமர் ஹரிணி --------- ----- ----- ----- ---- *பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு *தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும் காரணம்! ---- ---- ----- ----- புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் சைவ சமய பாடநூல் விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை பற்றிய கேள்விக்கு பதில் வழங்கவில்லை. சைவ சமய பாடநூல் தவறுகள் உட்பட மேற்படி சில கேள்விகளை சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சிக் குழு தலைவர் என்ற முறையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வினா தொடுத்தார். ஆனால் தமிழர் வரலாறுகள் பாடநூலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன, என்ற ஒரு கேள்வியே கேட்கப்படவில்லை என்ற தொனியில் தனது ஆசனத்தில் அமர்ந்தார் ஹரிணி. தமிழ் வரலாற்று பாடநூலில் பௌத்த சமய வரலாறுகள் புகுத்தப்பட்டுள்ளமை பற்றி பல சந்தர்ப்பங்களில் என்னுடைய அரசியல் பத்தி எழுத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சிங்கள மக்கள் தங்களை போற்றுவர் என நம்பி நூல்களை எழுதிய தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும், இந்த மூடி மறைப்புகளுக்கு பிரதான காரணம். பொலன்னறுவையில் உள்ள சிவன் - பார்வதி சிலை காதலர் சின்னம் என்று வரலாற்று பாடநூலில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. இது பற்றி கொழும்பில் நடந்த பாடநூல் கூட்டம் ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்ட முற்பட்டபோது, தமிழ் வரலாற்றுத் துறையின் மூத்த பேராசிரியர், தனக்கு அருகில் இருந்த அந்த ஆசிரியரை மெல்லச் சுரண்டி ”அது பற்றி இப்ப கதைக்க வேண்டாம்” என்று கட்டைக் குரலில் கட்டளையிட்டு நிறுத்தினார். அந்தப் பேராசிரியர், தான் தமிழில் எழுதிய வரலாற்று நூலில் சிவன் - பார்வதி சிலை என்று குறிப்பிடுகிறார். ஆனால் கூட்டத்தில் இருந்த பிக்குமார் மற்றும் சிங்கள அதிகாரிகள் சங்கடப்படக் கூடாது என்ற நோக்கில் சரியானதை சுட்டிக்காட்ட விடாமல், தடுத்து நிறுத்தி, சிங்கள அதிகாரிகள் முன்னிலையில் தன்னை ஒரு பக்கச் சார்பற்ற வரலாற்று பேராசிரியராக நிறுவி பெருமைப்பட்டுள்ளார். மறுபுறம் --- தனது சொந்த இனத்துக்குத் தான் அநீதி இழைப்பதை அந்த பேராசிரியர் உணர மறுத்துவிட்டார். அந்த பேராசிரியர் தமிழ் மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் ஆங்கில மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் உண்டு. அதாவது ஆங்கிலத்தில் தான் எழுதிய வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகளை நாசூக்காக மறைத்து, சிங்கள வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் அந்த பேராசிரியர். பொலன்னறுவையில் சோழர்கள் கட்டிய பல இந்துக் கோயில்களில் நடராஜர் சிலை மற்றும் பார்வதி சிலை போன்ற இந்து சமய சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்ததாலேயே இந்துக் கோவில்களை சோழர்கள் கட்டியிருக்கின்றனர். ஆனால் சோழ மன்னர்கள் ஏதோ பிராமணர்களை தூக்கிப் பிடிப்பதற்காக கட்டியுள்ளனர் என்ற தோற்றப்பாட்டை, சில தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் மடைமாற்றி எழுதியிருக்கின்றனர். தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலரினதும், தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினதும் வரலாற்று மூடி மறைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டு, மிகச் சரியான தமிழ் வரலாறுகள் மிக விரைவில் நூலாக வெளிவரவுள்ளன. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  16. என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி. இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.
  17. இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.
  18. இப்போது ரம்பை முழு மூச்சாக எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்த்தா இவர்கள் தான் ரம் வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றவர்கள். ஆனாலும் அதிசயமாக எம்மவர்கள் சிலர் இன்மும் ரம்பை ஆதரித்தே பேசுகிறார்கள். நிதர்சனம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.