Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இதுவரை காலமும் கச்சதீவை பாவத்திற்கு இரங்கி இந்தியா கொடுத்ததாகவே எண்ணியிருந்தேன். அண்மையில் ஒரு காணொளியை பார்த்த போதே கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது. இந்தியா தம்வசப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இந்தக் காணொளி மிகவும் பிரயோசமாகவும் இருந்தது. இந்தக் காணொளியில் இன்னுமொரு நெருடல் என்னவென்றால் படித்து பல நாடுகளிலும் அமைதிக்காக வேலை செய்த ஒருவர் மீன்பிடி பிரச்சனையை இருநாட்டு மீனவர்களும் பேசி அவர்கள் இரண்டு நாட்களுக்கும் இவர்கள் இரண்டு நாட்களுக்கும் மீன் பிடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறார். எப்படியான ஒரு மாங்காய்மடையன் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை செய்திருப்பார்.
  2. புடினுக்கு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்ற அமெரிக்க அதிபரை எப்படி விளிக்கப் போகிறீர்கள்?
  3. எங்களை மாதிரியே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
  4. இந்தப் பணத்தை கொடுக்க அங்கே பாடசாலை இருக்க வேண்டும். பாடசாலை இருந்தாலும் மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.
  5. ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். மாலைதீவிலும் அப்படி. நேபாலில் நிலமை மோசமாகிறது. 70 வீதமான வாகனங்கள் சீனாவின் மின்சார வாகனங்கள். அண்மையில் 100 மின்சார பேரூந்துகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தியாவால் இப்படி கொடுக்க முடியுமா? நேரமிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
  6. இதில் இந்திய தலைவரும் இணைகிறாரே. ஏன் அவர்பற்றி எதுவும் பேசப்படவில்லை?
  7. தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில், இக் கடிதத்தின் உள்ளடகத்தை நோக்கினால், ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர்கள் சார்ந்து இவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் சிலரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் இவர்களை மாற்றியிருக்கலாம். இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிற பேரவலம். இதை, உட்கட்சிப் பூசலுக்கும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களுக்கும் உட்படுத்தி அரசியல் ஆக்க வேண்டாம் என்று எழுதி வந்துள்ளோம். இது எங்கோ சுவறியுள்ளது போல் தெரிகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களும், தமிழரசுக் கட்சியின் அரசியல் போக்கில் மாற்றத்தைத் தூண்டியிருக்கலாம். “வரவேற்க வேண்டியது“ - “குறை கூற வேண்டியது” என்ற இரண்டு விடயங்கள் கடிதத்தில் உண்டு. முதலில் வரவேற்பது என்றால்--- A) ”இன அழிப்பு” என்பதை போர்க் குற்றங்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற இரு வகைக் குற்றங்களில் இருந்தும் வேறுபடுத்திக் காண்பித்துள்ளமை என்பது, தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் புத்துணர்ச்சி. B) ஒஸ்லாப் எனப்படும் (OHCHR Sri Lanka Accountability Project - OSLAP) விசாரணைப் பொறிமுறையை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு முன்னதாக இனப் படுகொலை மற்றும் இனப் படுகொலை நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சேகரிப்பதை விரைந்து செய்ய செய்வது பற்றி ஆராயத் தலைப்பட வேண்டும் என கேட்டிருப்பது... குறைபாடுகள் - மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது---- 1) (International, Impartial and Independent Mechanism - IIIM) என்ற விசாரணைப் பொறிமுறை கோரவில்லை. 2) ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் போதும் என்ற மன நிலை... 3) புதிய யாப்பு தொடர்பான மயக்கமான விளக்கம் இம் மூன்றும் தமிழரசுக் கட்சியின் பழைய போக்கையும் ஞாபகப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்.. எவ்வாறாயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்துக்கும், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்துக்கும் “இன அழிப்பு” என்ற விடயத்தில் கணிசமான வேறுபாடு உண்டு. அதாவது, இன அழிப்புக்கான அரச பொறுப்பு சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மியான்மார் அரசுக்கு செய்ததைப் போன்று ”தீவிரமாக பரிசீலித்தல்” என்பதை கடித்தின் முதலாவது கோரிக்கையாக தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக் கோரிக்கையை 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்சிகளும் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தவில்லை. ஆனால், இம் முறை தமிழரசுக் கட்சி இதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் போரவை முதலாவது கோரிக்கையின் இறுதி வரியில், பட்டும் படாமலும் சொல்லிச் சென்றிருக்கிறது. குறிப்பாக செம்மணியை மையப்படுத்தி தமிழரசுக் கட்சி மாத்திரமே, இன அழிப்புக்கான நோக்கம் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்த் தேசிய பேரவையோ, ஒஸ்லாப் எல்லாம் போதும், தனி நபர் குற்றவியல் விசாரணையை பாதுகாப்புச் சபை ஊடாக ஐசிசிக்கு பாரப்படுத்தினால் போதும் என்று மிகவும் பலவீனமாக கடிதத்தில் கையாண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ்த் தரப்புடன் பேசிய விடயங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது கோரிக்கை மயக்கமாகவுள்ளது. அதாவது, தமிழ்த் தரப்புடன் ஏற்கனவே பேசப்பட்ட விடயங்களா? அல்லது இனிமேல்தான் தமிழ்த்தரப்புடன் பேசி முடிவெடுக்கவுள்ள விடயங்களா? என்பது குழப்பமாகவுள்ளது. அதன் ஆங்கில மூலப் பிரதி----- Continue to persuade Sri Lanka to enact a new federal constitution with extensive power sharing in the North-East on newly negotiated agreement with the Tamil People as a measure of non – recurrence. As an immediate step urge the Sri Lankan state to hold the provincial council elections without any further delay. இதற்கு தமிழரசுக் கட்சியின் செய்திகளை பிரத்தியேகமாகவும், உடனுக்குடனும் வழங்கும் ”மாலை முரசு என்ற மின் இதழில் நேற்று புதன்கிழமை வெளிவந்த தமிழாக்கம் பின்வருமாறு உள்ளது--- “மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடன் புதிதாக பேச்சு நடத்தி இணக்கம் கண்டு வடக்கு கிழக்கில் விரிவான அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்” ”உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” இங்கே பிரச்சினை என்னவென்றால்---- தமிழில் இனிமேல்தான் புதிதாக உடன்படிக்கை செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்படுகின்றது. ஆனால், ஆங்கிலத்தில் ”Power sharing in the North-East on newly negotiated agreement” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலத்தில் "on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற வினர எழுகிறது... கடிதத்தின் முகவுரையில்----- *ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்களை குறிப்பாக ஐரோப்பிய இனவத்தவர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத்தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்ததன. *தமிழர்களுக்கு தனி இராஜ்ஜியம் இருந்தது என்பதை மையப்படுத்தி தொலைந்துபோன இறைமையை (Sovereignty) தான் தமிழர்கள் மீள் உருவாக்கம் செய்வது தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற நல்ல கருத்து வெளிப்படுகிறது. அதாவது, 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்று நேரடியாக சுட்டிக்காட்டாமல், 1976 இல் இருந்து என்று அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, தமிழர்கள் தொலைந்து போன இறைமையை தேடுகிறார்கள் என்று கடிதத்தில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது--- அதேநேரம்---- இன அழிப்பு நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் கடிதம் கனதியாகக் காண்பிக்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக மாத்திரமே போக வேண்டும் என, தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அதேநேரம், ஆயர்கள் - சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதத்தில் IIIM என்ற விசாரணைப் பொறிமுறை முதன்மையாக இருந்தது. அக் கடிதத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆணையாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள முன்னோடி அறிக்கையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவில்லை. ஓகஸ்ட் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை அனுப்பிய கடிதத்துக்கு அதற்கு அடுத்த நாளே ஆணையாளர் பதில் வழங்கியிருந்தார். அவரது பதில் கடிதத்திலும் அவர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ்த் தேசியப் பேரவை இன்று வரை, அவரது பதிலுக்கு எந்தவித மறுப்போ கவலையோ தெரிவித்து பதில் கடிதம் எழுதவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது... அதேபோன்று---- தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆணையாளரின் கடிதத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஓஎம்பி (Office on Missing Persons -OMP) எனப்படும் காணாமல் போனோர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும் நிராகரித்துள்ளனர். ஆனால், ஆணையாளரின் கடிதத்தில் அந்த அலுவலக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது - இதனை தமிழரசுக் கட்சியின் கடிதமும் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஏற்பு வேடிக்கையானது. *ரோம் சாசன கையொப்பம் சாத்தியமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையும் தமிழரசுக் கட்சியின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அவ்வாறு கைச்சாத்திட்டாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற எந்தக் குற்றங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கான விசேட ஒழுங்கு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதை ஆணையாளரும் சொல்லவில்லை, தமிழரசுக் கட்சியின் கடிதமும் சொல்லவில்லை. இது கவலைக்குரியது... இந்தியா கூட இதுவரை இணையாமல் இருக்கும் ரோம் சாசனத்தில் இலங்கை இணையும் என்று எதிர்பார்க்க முடியுமா? பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிகளை பெறும் நோக்கில், சிலவேளை இலங்கை ரோம் சாசனத்தில் கைச்சாத்திடலாம். அவ்வாறு இலங்கை இணைந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியில் மனித உரிமைச் சபையும் உறுப்பு நாடுகளும் அமைதியாகிவிடும் ஆபத்தும் உண்டு... இரு கட்சிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்--- 1) ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியை குறிப்பாக கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி மேலே சென்றுள்ளது... 2) தனிநபா் பொறுப்புக் கூறலை கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி கீழே இறங்கியுள்ளது. 3) எப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து உயர்வான பணியில் ஒன்றாக ஏறி நிற்கப் போகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1JZNefTxvF/?mibextid=wwXIfr
  8. 1) பார் சிறி 2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன் 3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன் இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
  9. Here’s the current situation: Yes, Exxon Mobil is exploring a potential re-entry into Russia’s Sakhalin-1 oil and gas project, but no official deal is in place yet. These discussions are contingent on evolving geopolitical conditions and regulatory approvals. Here’s what’s happening in more detail: What’s Going On 1.Confidential Talks with Rosneft Exxon Mobil has conducted back-channel negotiations with Russia’s state oil giant Rosneft about possibly returning to the Sakhalin-1 project. These talks hinge on a potential peace process progress in Ukraine and would require approvals from both U.S. and Russian governments. 2. Legal and Political Conditions U.S. licenses from the Treasury Department allow Exxon to discuss “stranded assets” with Russian counterparts. Any formal re-entry would need U.S. government approval amid existing sanctions. 3. Russian Legal Framework On August 15, 2025, Russian President Putin signed a decree that conditionally reopens the Sakhalin-1 project to foreign investors—including Exxon—provided they: Supply foreign-made equipment, Assist in lifting Western sanctions, and Invest capital into the project. Russia also extended the deadline to 2026 for Exxon to claim its unclaimed stake in the project. 4. Strategic and Market Considerations Sanctions remain a significant obstacle, complicating any return even though Sakhalin-1 itself isn’t directly sanctioned. U.S. officials and the Trump administration have floated this as part of broader diplomatic incentives in Ukraine peace talks. On the other hand, some industry experts doubt a full-scale U.S. return, citing tremendous past losses and unstable political risks. ஆம் என்று தான் சாட் ஜிபிரியும் சொல்கிறது. இது தான் இந்தியாவின் குற்றச்சாட்டும். அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது. ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.
  10. சாதாரண இந்தியர்களை வைத்தே இஸ்ரேல் பல புலனாய்வுகளை செய்துள்ளதாக சொன்னார்கள். தவிர ஈரானில் பல யூதமக்களும் வசிக்கிறார்கள்.
  11. முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள். மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள். வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.
  12. ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு யூரோ நாணயம் வந்த போது டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள். இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய் ஆளும் இல்லை நாடும் இல்லை.
  13. உலகத்தில்அமைதி ஏற்பட்டால் அமெரிக்கா ஐரோப்பா எப்படியாம் பிழைத்துக் கொள்வது? வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் உலகத்தில் ஏதாவது யுத்தம் நடந்ததா? இல்லை என்று தான் எண்ணுகிறேன். அரபு நாடுகளை பொறுத்தவரை வாகனம் உள்ளது. ஆனால் ஓட்டத் தெரியாது.
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.
  15. வடக்கில் ஒரு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை தான். ஆனால் அதற்கு மண்டைதீவு சரியான இடமா? ஒருநாளும் அந்தப்பக்கம் போனது கிடையாது. இந்த இடம் உண்மையில் மக்கள் போவார்களா? அல்லது நாளடைவில் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடம் ஆகுமா?
  16. தனிமடல் பகுதியில் பதிலெழுத வழமையில் கீழே காணும் பெட்டியைக் காணவில்லை.
  17. இவர்களை உள்வாங்கினால் இஸ்ரேலின் எண்ணம் சுலபமாக நிறைவேறாதா? ஓரிரு நாடுகள் தமது நன்மை கருதி நண்பர்களுக்கு தோள்கொடுக்கிறோம் என்றே உதவுகின்றன. தென்னாபிரிகா இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவதற்கு அரபு நாடுகள் பின்னால் நிற்கின்றன. தாங்களால் நேரே செய்ய முடியாததை இன்னொரு நாட்டை வைத்து முயற்சி செய்கிறது.
  18. உக்ரேனுக்கு உதவுவது அயலவர்கள் அல்ல ரசியாவை குறிவைத்து நேட்டோ நாடுகள் உதவுது. இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளபடியால் அரபுநாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்.(இந்தியா உட்பட)
  19. 80 ஆண்டு காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் பற்றி விலாவாரியாக பாராளுமன்றில் பேசிய சிறிதரன் அதற்கு தீர்வாக எந்தத் திட்டத்தையும் வைக்கவில்லையே என்று கஜேந்திரகுமார் ஆதங்கம்.
  20. இவர்களுக்கு கட்டளையிட்டவர்கள் யார் என்பதை அறிய ஆவலாகவும் இருக்கலாம். தூக்கவும் சுலபமாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.