Everything posted by ஈழப்பிரியன்
-
அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
அப்புறம் என்ன உலக பொலிசே சொல்லியாச்சே. எல்லாம் போ,போ,போ மாறு,மாறு. அமெரிக்கா சொன்னாலும் ஐக்கிய நாடுகள் சபை சொன்னாலும் ஒன்று தான்.
-
நானும் ஒரு அடிவிட்டன்
கடேசி விளையாட்டைக் காட்டிட்டீங்களா? ஒரே ஓட்டம் போல.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பெரிய கட்சிகள் எல்லாமே பெட்டிபெட்டியாக பணத்தை இறக்கி வீடுவீடாக கொடுப்பதாக பத்திரிகை ஆசிரியர்களிலிருந்து சகலருமே சொல்கிறார்கள்.ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும் இவர்கள் எவருமே பிடிபடாமல் இருக்கிறார்களே?எப்படி? பணத்தை பெற்ற மக்களும் சத்தியமோ ஏதோ ஒன்றை நம்பி அந்தந்த கட்சிகளுக்கே வாக்கையும் போடுகிறார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள். பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.
-
கனடாவில் கார் களவு.
பணம் தருவார்கள். நீங்கள் அதற்கேற்ற கட்டணத்தை செலுத்தினால் நாங்க எது குறைய இருக்கிறதோ அதைத் தானே கட்டுவது. நாங்க யாருக்காவது இடித்தால் அவர்களுக்கு மட்டும் பணம் கொடுப்பார்கள். எமது திட்டங்களை விட திருடர்கள் மன்மாதிரியான திட்டங்கள் வைத்திருப்பர். அதைவிட கார் போனால் வாங்கலாம் உயிர் போனால் போனது தான். இது எல்லா வாகனங்களிலும் இருக்க வேண்டுமே? ஏன் கொண்டாவில் அதுவும் 2010 க்கு குறைவான வாகனத்தில் மட்டும். இப்போது அக்குறாவிலும் கை வைக்கிறார்கள். புத்திசாலி பையன் என்று வந்திருக்கணும்.
-
கனடாவில் கார் களவு.
பழைய சோவியத் என்று சுருக்கமா சொல்லுங்கோ. இங்கே ஒரு சுற்று சுற்றி வந்தால் உண்மையான படத்தையே போடலாம்.
-
கொஞ்சம் ரசிக்க
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.
-
கனடாவில் கார் களவு.
இதைத் தான் நானும் நினைத்தேன்.வின் நம்பரை எல்லாம் எப்படி மாற்றுகிறார்கள். கனடாவில் அண்மையில் ஒரே காரை திரம்ப திரும்ப களவெடுத்து திரும்ப திரும்ப வின் நம்பருகளை மாற்றி விற்று கடைசியில் பிடிபட்டிருக்கிறார்கள். எப்படி அதற்கு ரெஜிஸ்ரேசன் செய்கிறார்கள் என்றால் கனடாவில் தனிப்பட்டவர்களுக்கு மோட்டர் வேகிள் திணைக்கள வேலைகளை பகிர்ந்தளிக்கிறார்கள். மேற்படி 3 தடவையும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஏஜென்சியில் பத்திரங்கள் மாற்றப்பட்டு அவர்களும் பிடிபட்டுள்ளனராம். வாகன காப்பீட்டு கம்பனிகள் எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடம் சுரண்டிவிடுவார்கள்.
-
கனடாவில் கார் களவு.
நீங்கள் சொல்வது சரி. இது பரவலாக முழு அமெரிக்கா இங்கிலாந்து என்று நடக்கிறது. எல்லா கார்களிலும் அல்ல. 2010 க்க உள்பட்ட கார்களுக்கு ஏதோ சிறிய பிளாட்டினம் உள்ளே இருப்பதாக சொல்கிறார்கள். இங்கு கார்களவு ரயர் களவு என்பது நல்ல பணக்கார இடங்களில் அதிகாலை 2-4 க்கு அலுவல் நடக்குது.
-
கனடாவில் கார் களவு.
கூடுதலாக சிறுவர்களே இதில் ஈடுபடுவதாக சொன்னார்கள். நீங்கள் போட்ட புள்ளிகளை தொடுக்கும் போது தான் இதைப்பற்றிய முழு படமும் வருகிறது. முழுமையான தகவல்களுக்கு நன்றி.
-
கனடாவில் கார் களவு.
இதையே தான் மற்றவர்களும் சொல்கிறார்கள்
-
என் இந்தியப் பயணம்
முதலே 157 ரூபாக்கள் என்று ஊபர்காரன் சொல்லிப் போட்டானே. அப்புறம் எப்படி கூடுதலாக கொடுக்க மனம் வரும்? ஏழரை என்று தெளிவா எழுதுங்க.
-
கனடாவில் கார் களவு.
கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டில வடை சுட்டாலே உள்ள பேப்பருகளால சுத்தி ஏறி நின்று மிதுத்து போட்டு தான் தாறாங்கள். இது தேவையா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பார்க்க நல்லாயிருக்கு.ஆனால் எண்ணெயும் சேர்த்தல்லவா சாப்பிடணும்?
-
இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
நல்ல கேள்வி. இதை அதிகாரமுடையவனிடம் கேட்க வேண்டும். பிழையான ஆளிடம் கேட்டு விட்டீர்கள்.
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
அப்பாடா இரண்டு நாள் அவசர அலுவலாக மிசிசாகுவா போட்டு நேற்று இரவு தான் வந்தேன்.
-
என் இந்தியப் பயணம்
ஏழரைச்சனி முதலே போய் உட்காந்துட்டுதோ?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பையா ஒரு கட்சி வளரரும் போது அதை இழிவுபடுத்த பலர் வருவார்கள்.ஒவ்வொருவரிடமும் போய் காலில் விழுவது கோழைத்தனம். அதையும் தாண்டி முன்னேறணும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மரத்தை நட்டு அதன் நிழலில் உட்கார பாருங்க.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதுவும் நல்லா தான் இருக்கு. முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம். நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
என் இந்தியப் பயணம்
இலங்கைப் புத்தகமா? இங்கிலாந்துப் புத்தகமா?
-
என் இந்தியப் பயணம்
உந்த கடிக்கதை முன்னரும் கேட்ட மாதிரி இருக்கே?