ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
அண்ணா அறிவாலயம்.
மதியநேர சாப்பாட்டு பொதியுடன் பிளவுஸ் வரை போய் றோஸ் வாங்கி(10 சதம்)சாப்பிட்டிருக்கிறேன்.இன்றுவரை எப்படி ஒரு றோஸ் சாப்பிட்டதில்லை. மொக்னிடம் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன். புட்டும் ரசமும் சாப்பிட்டாலே தனிசுவை.
-
அண்ணா அறிவாலயம்.
இருவரும் என்னை பிழையான வாசிகசாலைக்கு கூட்டி செல்கிறீர்கள்.பள்ளிக்கு பேரூந்தில் வர தொடங்கிய காலத்தில் இருந்து (யாழ்-கோப்பாய் ரூட்) ஆனைப்பந்தியில் இறங்கி நாலவர்வீதி பிரவுண்வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலடி ஊடாகவே நடந்து பள்ளிக்குப் போவோம். நான் சொன்ன வாசிகசாலை கன்னாதிட்டி பக்கமாக உள்ள வாசிகசாலை.
-
அண்ணா அறிவாலயம்.
ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண். நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?
-
அண்ணா அறிவாலயம்.
1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
2015இல ராஜபக்ச ஆட்சியைப் பிடித்திருந்தால் எமக்கு சார்பாக பல விடயங்கள் நடந்திருக்கும். அதனால்த் தான் ராஜபக்ச ஆட்சி வர வேண்டுமென இங்கே சொன்னேன்.
-
அசரீரி..!
சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.
-
பாவத்தின் சம்பளம்
அக்னி இப்படி கதை எழுதும் போது பகலில் மட்டும் வாசிக்கவும் என்று முதல்லயே சொல்ல வேண்டும். இடைஇடையே பயப்புடுத்துற மாதிரி தெரியுது.
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம் தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள். சரி பரவாயில்லை. போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?
-
காற்றாய் நீயும் மாறிவிடு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
கருவாட்டுக்கு உண்மையான காவலன் பூனை.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நிர்வாகத் திறன் இல்லை என்றால் மிசேலாக இருந்தா என்ன யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் பூட்டுவிழும்.
-
மொழி ஆதிக்கம்..!
அவர்கள் நாட்டில் எந்த மொழியில் இருந்தாதான் நமக்கென்ன. தமிழ் இடங்களில் சிங்களமொழிக்கு முதலிடம் கொடுக்கும் போது தட்டிக் கேட்க வக்கில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள்.
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தலைவரின் படங்களுடன் இருக்கும் காணொளிகள் நீக்கப்பட்டிருக்கலாம்.
-
இனி இளவேனில் காலம் - நிழலி
மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.
-
சமூகமும் ஓட்டமும்
சின்னதிரைகள் வந்தபின் எல்லாமே தொடரும் தொடரும் தொடரும் விசுகு என்ன விதிவிலக்கா.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆனபடியால் விவசாயிக்கு வாக்கைப் போடுங்கள். இதில் ஒத்துப்போக முடியவில்லை. கல்லு மாதிரி இட்லி என்றால் என்ன செய்வது.
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறி இதை இங்கே இணைப்பதை விட சீமான் திரியில் இணைத்திருந்தால் பலருக்கு சுட்டிருக்கும். இணைப்புக்கு நன்றி.
-
தமிழீழ பாடல்கள்
இணைப்புக்கு நன்றி நுணா.
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
வணக்கம் தோழி. யாழின் 23வது வருட கொண்டாட்டம் நடக்குது. அதில் இந்த திரியை பதிந்தால் சிறப்பாக இருக்குமே! மட்டுறுத்துனர்களிடம் சொன்னால் மாற்றிவிடுவார்கள். https://yarl.com/forum3/forum/230-யாழ்-23-அகவை-சுய-ஆக்கங்கள்/
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள். சிலவேளை ஊரே பற்றி எரியும்.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அம்மா யாழ்இல் தான் இருந்தாவா? வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது? உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
இரண்டும் கெட்டான் கிழமை.