Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இது பல நெடுங்காலமாக நடக்கும் ஐரோப்பிய மேலாண்மைக்கான போட்டிதான். The Great Game என ஒரு காலத்தில் ரஸ்யாவும், பிரிட்டனும் இதை மத்திய ஆசியா வரை விரித்தன. ஆனால் ஐரோப்பாவை பொறுத்தவரை எப்போதும் ரஸ்யா, பிரிட்டன், பிரான்ஸ். ஜேர்மனி என்பன சமவலு நாடுகளே. இப்போதும் இதில் மாற்றமில்லை. சோவியத் காலத்தில் கூட வோர்சோ கூட்டு, நேட்டோவுக்கு இணையாகவே இருந்தது. நேட்டோவில் அமெரிக்கா இருப்பதால், சோவியத் உடைந்ததால் இந்த சமநிலை 1991 இன் பின் குழம்பி இருந்தது. அதை மீள பெறுவதே புட்டினின் வாழ்நாள் இலட்சியம். இதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக பயம் இல்லை. பிரிட்டனும், பிரான்சும் அணு ஆயுத நாடுகள். ஜேர்மனி அதே நிலைக்கு வர ஐந்து வருடம் போதும். இத்தாலி கூட மோசமில்லை. இவர்களோடு ஏலவே ரஸ்யாவுக்கு மரண பயத்தை காட்டிய பின்லாந்து, உக்ரேன் போன்ற நாடுகளும் சேர்ந்தால். ரஸ்யா வாலாட்ட முடியாது. ஆனால் - ரஸ்யா அருகே இருக்கும், போலந்து, பால்டிக் நாடுகள் பாடு சிக்கல்தான். இதனால்தான் இவை கிரீன்லாந்து விடயத்தில் அடக்கி வாசிக்கிறன. நேட்டோ உடைந்தால், இந்த நாடுகள் மீளவும் ரஸ்யா வட்டத்துள் வலுக்கட்டாயமாக இழுக்கப்படும். ஐரோப்பா மீள மேற்கு, கிழக்கு என பிரியும். 35+ வருடம் அதன் கிழக்கு எல்லை நாடுகளை தவிர வேறு எங்கும், யுத்தத்தை காணாத, பல சிறிய இனவழி தேசிய நாடுகளில் ஜனநாயகம் துளிர்விட்ட காலம் முடிவுக்கு வரும். இதைத்தான் ரஸ்யா விரும்புகிறது. காரணம்? முன்பு ஷார் மன்னரின், பின் கம்யூனிஸ்டுகளின், இப்போ புட்டின் மாபியாவின் ரஸ்யாவுக்குள்ளான அதிகாரத்தை தக்க வைக்க, ரஸ்யாவுக்கு வெளியே ஆக்கிரமிப்பை செய்வது அவசியமாகிறது.
  2. மன்னிக்கவும் நீங்கள் கேட்டதை நான் சரியாக கவனிக்கவில்லை அல்லது உள்வாங்கவில்லை. என்னை பொறுத்தவரை ஈரான், தய்வான், உக்ரேன் விடயங்கள் எதிலும் தம்பர் காத்திரமாக எதையும் செய்வார் என நான் நம்பவில்லை. உக்ரேன் போர் ஆரம்பிக்க தம்பர் வரமுன்பே காரணிகள் அமைந்து விட்டன, ஆனால் அதை தம்பர் கையாளும் முறை ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளின் கையாளும் முறைக்கு, நாம் இதுவரை அறிந்த அமெரிக்கன் நிலைப்பாட்டுக்கு 180 பாகை எதிரானது. மேற்கு கூட்டணியின் எதிரிகளை கண்டு கொள்ளாமல் விடுவது. மேற்கு கூட்டணியை உள்ளே இருந்தே பலவீனமாக்குவது. இதுதான் தம்பரின் ஒவ்வொரு நகர்வின் இலக்கும். இதை தனியே புட்டிந்தான் செய்விக்கிறாரா? இல்லை இதில் சீனாவுக்கும் பங்கு உள்ளதா என தெரியவில்லை. ஈரான், வெனிசிவேலா, கியூபா, அசாத் எல்லாரும் வெறும் உதிரிகள்.
  3. பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும். ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம். pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால். இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.
  4. உண்மைதான். பைத்தியர், ஒத்தை ரோசா, பார்சிறி, 3xஅனுரகாவடிகள் என எம்மக்கள் தெரிவு அபாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கு வங்கியை குறிவைத்துல்ளனர். பைத்தியர் - protest vote அனுரகாவடிகள் - அனுர சின்ன காவடிகள் +protest vote ஒத்தை ரோசா - இன்னும் தமிழீழ கனவில் இருக்கும் ஒத்தை ரோட்டு வாக்குவங்கி சிறி - இவர் கிட்டதட்ட தமிழ்நாட்டு பாணி. எந்த கொள்கையும் இவருக்கு வாக்கு போட காரணம் அல்ல. மாறாக கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் யாழ் எதிர்ப்புவாதம், ஊழல் கசிவு, அரசவேலை என தனக்கான இடத்தை தக்க வைக்கிறார். கட்சியில் ஏனையவை இவர் அளவுக்கு ஊழல் இல்லை எனிலும் - அவர்களின் சுத்து மாத்து வெளிச்ச அளவு இவருக்கு வெளிக்கவில்லை😂. ஆனால் ஒற்றுமைக்காக என்ன விலையும் கொடுக்க முடியுமா? சுமன், சிறி, கஜன், பைத்தியர்… இந்த தலைமுறையின் அத்தனை அழுக்குகளும் அரசியலில் இருந்து கழுவபடவேண்டியவர்கள். அப்போதுதான் ஒற்றுமை சாத்தியமாகும்.
  5. சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.
  6. எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார்.
  7. புரிந்து கொண்டேன் அண்ணா. எனது பதில் ஓம்.
  8. இன்னும் ஒரு மலசல கூடத்தை கட்டும் காசு இருப்பில் உள்ளதா? குறைந்த பட்சம் ஒவ்வொரு கூடத்துக்கான காசை சேர்த்த பின் ஆரம்பிப்போமா? இல்லாட்டில் வேலை அரைகுறையில் நிற்க வேண்டி வரலாம் - அல்லது ஏலவே பங்களித்தோர் மீள அளிக்க வேண்டி வரும், ஏராளன், ஏனையோரும் கருத்தை பகிரவும்.
  9. அது மட்டும் அல்ல. நேட்டோவுக்கு சமாந்தரமாக அமரிக்கா-டென்மார்க் பாதுகாப்பு உடன்படிக்கை இப்பவே அமெரிக்கா கிரீன்லாந்தில் என்ன வேணும் எண்டாலும் செய்யும் உரிமையை கொடுக்கிறது. பனிப்போர் காலத்தில் 17 தளங்களை அமெரிக்கா கிரீன்லாந்தில் வைத்திருத்து பின்னர் தேவை இல்லை என மூடியது. எனவே இராணுவ நலனுக்கு கிரீன்லாந்தை எடுக்க எந்த அவசியமும் இல்லை. இது தனியொருவரினால் மடைமாற்ற கூடிய விடயம் என நான் நினைக்க இல்லை. தம்பரை போல அல்லாமல், சிறுவயது முதல் வலதுசாரியாக இருக்கும் மலோனி, அமெரிக்காவின் சின்னதம்பி பிரிட்டன் என அனைவரும் ஒன்றாக எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிக்கு இது பாரிய விடயம்.
  10. ஐரோப்பாவால் இராணுவ ரீதியில் எதும் செய்ய முடியாது. ஆனால் - ரிப்பப்ளிகன் கட்சியை நெருக்குவதன் மூலம், அங்கே இருந்து டிரம்புக்கு எதிர்ப்பை உருவாக்கினால் சாதிக்கலாம். இப்போதே சில ரிபப்ளிகண்ஸ் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றம் வரி விதிப்புக்கு எதிராக தொடர்ந்த வழக்கு…அதில் என்ன தீர்ப்பு…என்பது முக்கியமானது. இது டிரம்புக்கு பாதகமானால்- கிரீன்லாந்து விடயம் கொஞ்சம் லேட்டாகும்… அதற்குள் நவம்பர் மிட்டேர்மில் டிரம்ப் கட்சி அடிவாங்கினால்…தம்பர் அடக்கி வாசிப்பார். இல்லாட்டில் குதியாட்டம்தான்😂
  11. அது மட்டும் அல்ல யாழில் நடந்த அத்தனை போட்டியின் விருதும் உங்களுக்கே😂. பிகு நல்லது செய்வதாக நினைத்து விளக்கம் இல்லாமல் நாம் அனைவரும் விசர் வேலையள் செய்வதுண்டு. உங்கள் ஆசிரியையும் அப்படித்தான் செய்தாரோ?
  12. அன்னம்மாள் பள்ளிகூட 3ம் ஆண்டு விளையாட்டு போட்டி, நொண்டிநாய் ஓட்டத்தில் முதலாம் இடத்தை வென்ற சிவானந்தன் - மரியாதை நிமித்தம் அதை கோஷானிடம் கொடுக்குமாறும் இல்லையேல் நடப்பதே வேறு எனவும் எச்சரிக்கப்படுகிறார்.
  13. நடுத்தெருவில் வைத்து அண்டர்வேரும் உருவப்படும் (#கிரீன்லாந்து) 😂. பிகு தம்பர் மூலம் அமரிக்கா தலைமையிலான மேற்கு கூட்டணியை உடைக்கும் புட்டினின் அதிவேக பந்து வீச்சுக்கு முதல் விக்கெட் கனடா. அடுத்தது ஜேர்மனி… அதற்கு முதல் இலண்டனில் சீனாவின் சூப்பர் எம்பசி அமைக்க அனுமதி கிடைக்கும். அமெரிக்கர்கள் தம்பரை 2ம் முறை தேர்வு செய்ய முன் இதை யோசித்திருக்க வேண்டும். அட்லீஸ்ட் வரும் மிட் டேர்ம் எலக்சனிலாவது தம்பருக்கு கால் கட்டு போட வேண்டும். இல்லையேல் கூடாரம் காலியாவது தடுக்க முடியாது.
  14. உரிமையாளரின் அனுமதி இன்றி பொருட்களுக்கு இலவச விளம்பரம் பண்ண கூடாது. Any propaganda is good propaganda.
  15. நன்றி, நீங்கள் சென்று மினெக்கெட வேண்டாம். மிக இறுக்கமான உங்கள் பரிவர்த்தனை முறையே நம்பிக்ககைக்குரியதும் போதுமானதும். நமது உடனடி வட்டத்துக்கு அப்பால் சென்று நிதி கோர -யாழில் படங்கள் கொஞ்சமேனும் போட்டால் -அந்த சுட்டியை பகிர்வது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என நினைக்கிறேன். எல்லாம் நல்லபடி நடந்தால் முகப்பில் கூட இடம் தரலாம் என நிர்வாகம் சொல்லியுள்ளனர்.
  16. நன்றி தம்பி. கீழ் உள்ளதை நீங்கள் ஏலவே சிந்த்தித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும்... பயனாளர்களிடம் கீழ்கண்டதை கோருவது ஏற்புடையடதாக இருக்கும் என நம்புகிறேன். நாம் மேலும் கொடையாளர் நம்பிக்கையை பெற இது மிகவும் உதவும். 5 படங்கள் எடுத்து அனுப்பல் வேண்டும். 1. வேலை ஆரம்பிக்க முன்னான நிலை (before construction) 2. வேலைக்கான பொருள்கள் ( items used in construction) 3. வேலை நடக்கும் போது (during construction) 4. வேலை பூரணமானபின் (after construction) 5. ஏதேனும் அத்தாட்சிகள் (இருப்பின்) அவை (receipts etc) *பயனாளார்கள் படம் தவிர்க்கப்பட வேண்டும். *அத்தாட்சியில் பெயர் தவிர் வேறு தனி விபரங்கள் இருப்பின் அவை மறைக்கப்படலாம். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும், யாருக்கேனும்.
  17. ஆம் முயல்வோம் -முன்னோடுவோம்-முன்னேறுவோம்
  18. பொங்கல் நாளான இன்று ஆம் என ஏராளன் சொல்வார் எனில் எமது deadline ஐயும் பூர்த்தி செய்துள்ளோம்.
  19. சின்னம் பற்றி எனக்கும் எந்த மாறுபாடும் இல்லை.
  20. ஓம். ஆனால் மஹோ-ஓமந்தை 2024 இல்தான் மீளமைத்தது. ஓமந்தை-யாழ் 2009 க்கு பின் போட்டது. ஆகவே மெயின் லைன் போல இல்லாமல் இது ஓரளவு திருத்தி விட்டு நாளுக்கு 2 ரெயில் ஓட்டுகிறார்கள். முழுதாக திருத்திய பின் 4 ரெயில் ஓடும் என நினைக்கிறேன். பஸ் மாபியா விட்டால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.