Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நீங்கள் அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து விட்டு, பத்திரிகையாளரை சந்திக்க துணிவில்லாமல் பின் கதவால் ஓடியது…. தேர்தலில் வென்றதும் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி போட்டோ முன் கை கட்டி பவ்வியமாக நின்றது…. போல இதுவும் ஒரு டகால்டி வேலைதான் ப்ரோ🤣 Zombies என செல்லமாக அழைக்கப்படும் நா.த.க தம்பிகளை அண்ணன் மெல்ல மெல்ல நாக்பூர் நோக்கி வளைக்கும் உளவியல் இது. யாழில் மேலும் சிலர் சீமானை டைவோர்ஸ் செய்யும் காலம் கனிகிறது என நினைக்கிறேன். ஆனால் இன்னும் சிலர் அப்போதும் முரட்டு முட்டு கொடுப்பார்கள்.
  2. தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர். அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.
  3. சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣. செல்வம், அரியம் ஐயா, சித்தர் இல்லாததால் மிக்சர் டன் கணக்கில் வாங்கும் செலவு இந்திய தூதரகத்துக்கு மிச்சம்🤣.
  4. ரணில் போன்றோருக்கு இனம் எவ்வளவு முக்கியமோ அதே போல் வர்க்கமும் முக்கியம். வழமையாக சிங்கள அரசியல்வாதிகள் வெளியாரிடம் ஆளை ஆள் விட்டு கொடார். மைத்திரி ரணிலை நீக்கி, மகிந்தவை பிரதமராக்கிய குழப்பநாட்களில் கூட, இதில் சீனா/இந்தியா சமனிலையை ரணில் பேணியமையை கண்டோம். இப்போ அனுரவை போட்டு கொடுப்பது போல் படுகிறது. வர்க்க நலனுக்ககா இன நலனை விட்டு கொடுக்கும் செயலா?
  5. நன்றி இவர் ஜனவரி 20 பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
  6. இதை ஒரு ஆரம்ப அறிகுறி என காட்டவே இவர்கள் விழ வைக்கப்பட்டார்கள். ஈரானில் இப்போதும் இதுதான். Theocracy என்பார்கள். என்ன ஈரான் நேரடி தியோக்ரசி, இலங்கை மறைமுக தியோக்ரசி. நல்லது. ஆனால் நம்மில் பலர் பெரும்பாலும் பெற்றார் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்பார்கள் என நினைக்கிறேன். தத்தம் பண்ணிய பின் பெற்றார் காலில் விழுந்து ஆசி பெறுவது பல காலமாக நான் கண்டுள்ளேன். ஆக இதன் பின்னால் நுண் அரசியல் இருக்கிறது.
  7. ஏன்? யாரும் எங்கேயும் அமரலாம் எனும் போது…அங்கே எதிர்கட்சி தலைவருக்குரிய கதிரை என்பதே இல்லை…. இன்னொரு விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை என கேள்விப்பட்டிருப்பீர்கள்….எம்பிக்களை சபாநாயகர் மட்டுமே ஒழுங்கு படுத்த முடியும். இந்த ஊழியர் யார் ஒரு எம்பியை ஒழுங்கு படுத்த? இதில் முழு உடன்பாடே.
  8. மிகச்சரியான கருத்து. காலில் விழுவது என்பது அவர்கள் கலாச்சாரம். பெற்றோர், தவிர ஏனையோர் காலில் விழுவது இல்லை என்பது எமது கலாச்சாரம். அதானால்தான் சசிகலா காலில் எடப்பாடி விழுந்ததையும், புலம்பெயர் நாட்டில் ஐயர் காலில் பிள்ளைகள் விழுவதையும் நாம் ஒரு இனமாக முன்பே விமர்சித்தோம். கைலாகு கொடுப்பது போல் அல்லது கையில் முத்தமிடுவது போல் அல்ல இது. இது அவர்களுக்கு சப்பை மேட்டராக இருக்கலாம் ஆனால் எமக்கு சரணாகதியின் வெளிப்பாடு. ஒரே இலங்கையர் என்ற ஈரச்சாக்கில் எம்மை போட்டு மூடுவதன் இன்னொரு அங்கமே இது. உயிர்களை அழித்தல் போல ஒரு இனத்தின் பண்பாட்டியல் கட்டுமானத்தின் கூறுகளை அழிப்பதும் கூட cultural genocide தான். இதை கேள்வி கேட்கும் திராணி கூட எந்த அமைப்புக்கோ ஊடகத்துக்கோ இல்லை என்பது வெட்கக்கேடான விடயம். இதற்கும் மேலா இதற்கு புரிந்தும், புரியாமலும் ஒத்தூத இன்னொரு கொஞ்சம் பேர். நிச்சயமாக…
  9. கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ரவீந்திரன் யார் 👆👇 @புலவர் இன்னும் கொஞ்ச காலம்தான் பொறுமையாக இருந்து விட்டு….பின்னர் கோசான் பல வருடங்கள் முன்பு சொன்னது பலித்து விட்டது என ஒத்து கொள்ளலாம். 👇
  10. ————————- 2 மணிநேரம் நடந்த சந்திப்பு.. ரஜினி வைத்த விருந்து.. சீமான் பேசியது என்ன? ரவீந்திரன் விளக்கம் Kadar KarayUpdated: Friday, November 22, 2024, 16:41 [IST] தமிழக அரசியல் வட்டாரத்தில் சீமான் நேற்று ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியதுதான் ஹாட் டாப்பிக் ஆக வலம் வர தொடங்கி இருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிக்க இருந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சித்தார் சீமான். அவர் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், எங்களை ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது. அப்படி அவர் அரசியல் கட்சி தொடங்கினால் கடுமையாக அவரை எதிர்ப்போம் என்று சீமான் பேசி இருந்தார். ரஜினி அரசியலை எதிர்த்த சீமான், நடிகர் கமல் கட்சி தொடங்கிய போது அவரை ஆதரித்தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞன் என்றும் கூறியிருந்தார். இப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சு எழுந்த நிலையில், திடீரென்று மோடி ஆதரவாளரான ரஜினியை சீமான் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஆகவே, அது பற்றிப் பல வியூகங்கள் வெளியே கசியத் தொடங்கி உள்ளன. இந்தச் சந்திப்பில் ரவீந்திரன் துரைசாமியும் உடன் இருந்துள்ளார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ரஜினி சந்திப்பின் போது சீமான் என்ன பேசினார்? அங்கே நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் மூத்த நடிகர் ரஜினியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற வேண்டும் என்பது சீமானின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது பிறந்தநாள் போது ரஜினி படப்பிடிப்பிலிருந்தார். அதேபோல் சீமான் அப்போது பயணத்திலிருந்தார். அந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காமல் போய்விட்டது. நேற்று ரஜினியும் சீமானும் சந்திப்பதற்காகக் கால அவகாசம் இருந்தது. ஆகவே, ரஜினி அழைத்தார். அதனடிப்படையில் சீமான் சந்திப்பு நடந்தது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். சுமார் இரண்டரை மணிநேரம் பேசினார்கள். அதில் பல விசயங்கள் இருந்தன. நானும் அவர்கள் கூடவே இருந்தேன். அதில் முக்கால் மணி நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர். ரஜினி முற்றாக அரசியல் வாழ்க்கையிலிருந்து 2022இல் விலகினார். அதன்பின் பலரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எந்த அணியை ஆதரிக்கவேண்டும்? என ஒரு அறிக்கை வெளியிடச் சொல்லி பலரும் ரஜினியை வற்புறுத்தினார்கள். அப்போது நான் அவரிடம், "நீங்கள் இப்போது பொதுவான மனிதர். எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவது நல்லது அல்ல" என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றார். கடந்த 2024இல் மோடியை ஆதரித்து மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுங்கள் என அவர் தாதா சாஹேப் பால்கே விருது விழா பெற வந்த போது கேட்டுக் கொண்டேன். அப்போது, '2021இல் அனைவருக்கும் பொதுவானவராக இருங்கள் என்று சொன்னீர்கள். இப்போது மோடிக்கு ஆதரவாக அறிக்கை விடச் சொல்கிறீர்கள். நான் பொதுவான நபராக இருந்து விடுகிறேன். என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்'என்றார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். சீமானின் சந்திப்பில் விஜய் அரசியல் பற்றி எதையும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வராததால், அவரது முகத்தில் ஒரு பொலிவும் தெளிவும் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அது உங்கள் முகத்தில் வெளிப்படுகிறது. அரசியலுக்கு வந்திருந்தால் தாக்குப்பிடிப்பது கஷ்டம். நாங்கள் அரசியல் களத்தில் காட்டான் போலக் கிடந்து கஷ்டப்படுகிறோம். நீங்கள் விலகியது நல்லது என்று சொல்லி ரஜினியை சீமான் பாராட்டிப் பேசினார். அதற்கு ரஜினி, 'என்னைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை. அதைப்போல் உங்களைத் தூக்கிவிட யாரும் இல்லை. அதை எல்லாம் கடந்து நீங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டீர்கள்'என்று சீமானிடம் ரஜினி சொன்னார். அப்போது வரும் 2026 தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக சீமான் சொன்னார். ரஜினி அதிகம் அரசியல் பேசவில்லை. அவர் சீமான் சொன்னதை முழுக்க அப்படியே பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். ரஜினிக்கும் சீமானுக்கு பொதுவான நண்பர்களான பாரதிராஜா, சீமான், இளையராஜா எனப் பலரைப் பற்றி பொதுவான விசயங்களை சீமான் பேசினார். ரஜினி நடிப்பில் வெளியான 'முள்ளும் மலரும்' படத்தில் தனக்குப் பிடித்த பல காட்சிகளை சீமான் இந்தச் சந்திப்பில் சொன்னார். பாட்சா படத்தில் 'உண்மையைச் சொன்னேன்' என ரஜினி பேசிய வசனத்தைச் சீமான் தனக்குப் பிடித்த வசனம் என்றும் சொன்னார். கூடவே ரஜினியின் உடல்மொழி, வசன உச்சரிப்பு எனப் பல நுட்பமான விசயங்களைச் சுட்டிக்காட்டி சீமான் ரசித்துப் பேசினார். அதை ரஜினி அவ்வளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 'வேட்டையன்' படத்தின் கான்செப்ட் தனது கொள்கைக்கு நெருக்கமானதாக இருந்ததைச் சீமான் சொன்னார். இந்தச் சந்திப்புக்கு முன்பு ரஜினி ஒரு விருந்து கொடுத்தார். அந்த உபசரிப்புக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே தொடர்ந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/the-meeting-that-lasted-2-hours-the-party-hosted-by-rajini-what-did-seeman-say-ravindran-durais-656425.html
  11. “ரஜினியை நான் சந்தித்து பேசியதும் அரசியலே!” - சீமான் விவரிப்பு. https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1340666-it-was-all-about-politics-seeman-about-rajinikanth-meeting.html
  12. அனுர அலை இல்லாவிடில் திருமலை நகரம், வவுனியா தேர்தல் தொகுதி இரெண்டும் தமிழரசு அல்லது ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு போகவே வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இந்த இடங்களில் தமிழ் மக்கள் என் பி பி க்கு போட்டு, அதில் விருப்பு வாக்கை தமிழருக்கு போட்டுள்ளனர். அத்துடன் சிங்கள, முஸ்லிம் வாக்குகளும் என் பி பிக்கு சேர - இந்த தொகுதிகளை என் பி பி வென்றுள்ளது. இங்கே பலர் திருமலை நகரம் என் பி பிக்கு என பதில் எழுதிய போது அவர்கள் தேர்தல் தொகுதியை தேர்தல் மாவட்டத்தோடு குழப்புகிறார்கள் என நினைத்தேன். அப்படியும் சிலர் போட்டு, குருட்டு லக்கில் புள்ளிகள் கிடைத்திருக்கலாம். அல்லது உண்மையாகவே அனுர அலை இந்த ஒரு தொகுதியிலும் என்ன தாக்கத்தை கொடுக்கும் என்பதை நுணுக்கமாக கணித்தும் இருக்கலாம்.
  13. 🤣…. எனக்கு இரெண்டும்…. 2xPSTSD ஏன் என்டால்… சுத்துமாத்து சுமனும்…. பார் சிறியும்….. தமிழ் தேசிய அரசியலை விட்டு அகற்றபப்படும் வரை அதுமீள வாய்ப்பே இல்லை என்பது என் நிலைப்பாடு. அத்தோடு கஜே-போபியாவும் இருக்கிறது.
  14. ஓம்…நீங்கள் இந்தியா வை சந்தேகப்பட்டீர்கள். ஆகவே கேள்வி குறி போட்டீர்கள். நான் பார் சிறியையும், அவரின் புலம்பெயர் ஈக்களையும் குற்றம் சாட்டுகிறேன் (நீங்களும் நானும் போலிக்கா விடயத்தில் இந்தியாவை குற்றம் சாட்டியது போல). பிகு ஓம் நான் ஈக்களை எப்போதும் அவதானிப்பேன். கொடிய நோய் கிருமிகளை காவும் என்பதால். உங்களுக்கு ஈக்களை தெரியுமா இல்லையா என்பது இட்டு நான் எதுவும் கேட்கவில்லை. எப்படி? சுத்துமாத்து சுமனுக்கு போன தேர்தலில் 25,000 சொச்சம் வாக்களிதார்கள். அடுத்த 4 வருடத்தில் சுமனின் சுத்துமாத்தை எழுதிய எல்லோரும் அந்த வாக்காளரை முட்டாளாக்கினார்களா?
  15. சதிக்கு ஆதாரம் கேட்கிறீர்களே ப்ரோ. போலிக்காவை இந்திய சதி என நாம் அனைவரும் எழுதினோம். அப்போ மீராவிடம் யாரும் ஆதாரம் கேட்கவில்லைத்தானே? சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தேன். மேலே சந்தர்ப்ப சாட்சியத்தை நிரல்படுத்த்தி உள்ளேன். பிகு பார் சிறி இலண்டன் வந்த போது, பவ்வியை சுற்றும் ஈ போல அவரை சுற்றிய சிலரை தெரியும்.
  16. வாங்குன காசுக்கு மேலாலயே கூவும் கொய்யா என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் இது 😀
  17. இங்கே பிரிந்த இருவருமே பாலியல் தொடர்புகள் இட்டு குறை ஏதும் சொல்லவில்லை. நாம்தான் புதியதாக எம் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை புனைகிறோம். அவர்கள் இருவரும் சொன்னது - காதல் இருந்தும் தமக்குள் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி வந்து விட்டது என்பதை மட்டுமே. இது மிக இயல்பான காரணமாக எனக்கு தெரிகிறது. 29 வருடம் என்பது நீண்ட காலம் எனிலும், ஈர்ப்பு இல்லாத போது, கிடந்து ஏன் உழலுவான் என்று நினைத்துள்ளனர் போலும். நாம் வாழும் நாடுகளில், 50 வயது தாண்டிய எத்தனை பேர் நாட்டில் 6 மாதம், புலம்பெயர் நாட்டில் 6 மாதம் என இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் புலம்பெயர் நாட்டில்தான் இருப்பார்கள். ஊரில் கூட பல உறவுகள், கணவன் முன் அறையில் தானே போட்டு சாப்பிடுவார், மனைவி வீட்டில் என்ற நிலையில் 80 களிலேயே நான் கண்டதுதான். இவையும் கூட அறிவிக்கப்படாத டிவோசுகள்தான். இப்படி சமூக ஓப்பனைக்காக இழுத்து கொண்டு போவதை விட, பிரிந்து வாழும் முடிவு அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே முடியும். பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இருவருக்கும் இனிவரும் வாழ்க்கை மனம்போல அமைய வாழ்த்துக்கள்.
  18. ஓ…நீங்கள்…சுசித்திரா தனுஷ்-கார்திகுமார் பற்றி சொன்ன கோணத்தில் இதை அணுகுகிறீர்களா🤯. நான் அப்படி நினைக்கவில்லை. தனுசுடன் வேலை பார்த்த, அமலா பால், டிடி, விஜை ஜேசுதாஸ், சுச்சி,ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என அனைவரும் வேலை செய்து முடிந்த சில மாதங்களில் டிவோர்ஸ். அதைத்தான் சொல்கிறார்கள்.
  19. இது இந்தியாவின் அல்ல - பார் சிறியின் சதி. மைத்திரி அரசு காலம் போல மட்டுபட்ட நினைவு கூறலை அனுமதிக்கும் முடிவு எப்போதோ எட்டப்பட்டு விட்டது. ஆனால் 1. முதலில் அனுர அனுஸ்டிக்க விடுவாரா? விட்டால் அவர் நல்லவர் என்ற கருத்தியலை வலிந்து உருவாக்குவது. 2. இதன் ஒரு அங்கம்தான் இப்படியான பித்தலாட்ட வேலைகள். இவற்றை பரப்புவர்கள் யார் என பார்த்தால் - சுமந்திரன் - பார் சிறி உள் மோதலில், இவர்கள் சுமந்திரனை போட்டு வாங்கிய ஆட்கள் (அப்போதும் தாம் சிறியின் அடிப்பொடிகள் என்பதை வெளிக்காட்டவில்லை). 3. அனுஸ்டிக்க விட்டதும் - அனுர நல்லவர் என்ற பிம்பத்தை உருவாக்குவது. 4. இதை பயன்படுத்தி பார் பெர்மிட், சிறியின் இதர ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை அனுர கண்டுகொள்ளாமல் விட முயற்சிப்பது. 5. இதன் ஒரு அங்கம்தான் பார் சிறியின் இன்றைய அறிக்கை.
  20. ஓம்…. இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை. அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்…… அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன். மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள். இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.
  21. 🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர் போலும் 🤣. சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார். அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣. ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம். நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ். ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன். சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம். இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன்.
  22. நீண்ட இடைவெளிக்க்கு பிறகு இந்த திரியில் எழுதுகிறேன். கிரிப்டோ உலகுக்கு வெளியே பலர் பிட்காயின் 64,000 இல் இருந்து 98,000 க்கு 46% ஆல் உயர்ந்தது பற்றி சிலாகித்து கொண்டிருக்கிறார்கள். ஆனா ஒரு மாதத்தில் XRP 0.50 இல் இருந்து 1.48 க்கு 170%ஆல் கூடியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் SEC வழக்கில் settlement க்கு போகும், SEC சேர்மன் தூக்கியடிக்கபடுவார் அல்லது விலகுவார் மற்றும் டிரம்பின் கிரிப்டோ சார்பு நிலைப்பாடு அத்துடன் ரிப்பிளின் RLUSD எனப்படும் stable coin அறிமுகம் என்பன இதன் பின்னால் உள்ள fundamental காரணிகளாக கூறப்படுகிறது. @vasee chart என்ன சொல்கிறது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.