Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எண்டால் 13 முழுமையாக காணி, பொலிஸ் அதிகாரத்துடன் அமல்படுத்த படுமா? ஏன் என்றால் அதுதான் தற்போதைய நிலை. எனக்கு டில்வின் மூலம் தமிழர்கள் என்ன நிலைப்பாடு என் நூல் விட்டு பார்க்கிறார்கள் போலத்தெரிகிறது.
  2. கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது. உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான். தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன். குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும். அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன. அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன். சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர். ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.
  3. நான் உங்களையும் செய்யுங்கள் என சொல்லவில்லை அண்ணை. தேத்தண்ணி கடை வாங்கில் எனக்கு பக்கத்தில் இருந்து கதைக்கும் இன்னொரு ஆள்தான் நீங்களும், என்பது எனக்கும் தெரியும். 2009 க்கு முன்பே நான் இப்படித்தான். சொந்த வாழ்விலேயே உலக மகா சோம்பேறியான என்னை நீங்கள் இனத்துக்கு வழி காட்ட சொன்னால் - இது நடக்கிறகாரியமா? என்னால் முடியுமானது - எழுதுவது, ஒற்றுமையாக கூட்டம் போட்டால், போராடினால் அதில் ஒரு தலையாக போய் நிற்பது, தேவை என படின் என்னால் ஆன நிதியை கொடுப்பது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை. கள்ளர்களினதும், புலனாய்வு ஏஜெண்ட்களினதும், மொக்கர்களினதும் தலைமைதுவ கேடால் - அவர்கள் விலகி போய்விட்டார்கள். இப்படியான செயல்வீரர்களுக்குத்தான் நான் எழுதும் செய்தி. யாழில் எழுதும் என்னை, உங்களை போன்ற விசைப்பலகை வீரருக்கு அல்ல. நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣.
  4. 🤣 நான் செய்வேன் என எங்கே எழுதினேன். நான் தேத்தண்ணி கடை வாங்கில் இருந்து கதைக்கும் மனிதன். ஆனால் புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்கள், நிற்பதாக காட்டி கொள்பவர்கள் இப்போ செய்வதை விட்டு விட்டு, நான் சொல்வதை செய்யலாம்.
  5. இரெண்டுமே காரணங்கள். மேலும் இரு காரணங்கள்: தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம். இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவரது personality அரசியலுக்கு சரிவராது. சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.
  6. சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன். டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு, சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ். விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.
  7. ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதி, கண்டிய சிங்கள பகுதி, எஞ்சிய சிங்கள கரையோர பகுதி என இலங்கை மூன்று சம்ஸ்டிகளாக பிரிக்கப்பட வேண்டும், ஒரு கொன்பெடரேசன் ஆக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பண்டாரநாயக்க, பின்னர் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தை ஏற்றதால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டு, தலைவரும் ஆகினார்.
  8. நீங்கள் மேலோட்டமாக தெரிவதை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இதற்கு மேல் கதைக்க ஒண்டும் இல்லத்தான். புலிகள் 1/3 ஐ பிரிக்க போராடினார்கள். ஜேவிபி 3/3 ஐயுமே பிடித்து கம்யூனிச நாடாக்க போராடியது. ஆகவே ஆபத்து ஒன்றேதான். வித்தியாசம் - ஜேவிபி பெளத்த சிங்கள மேலாண்மையை ஏற்றதும் புலிகள் ஏற்காததும்தான். புலிகள் பெளத்த சிங்களவர்களாக இருந்து தனிநாடு கோரி இருந்தாலும் ஜேவிபி போல் மீள ஏற்று கொள்ளப்டிருப்பார்கள். நான் செய்யலாம், செய்யவேண்டியது என சொல்லுவது எதுவுமே நாம் இருக்கும் நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. ஏன் உருவாக்க முடியாது - நாம் இருக்கு நாடுகளில் இருந்து ஆரம்பிக்கலாம். மேற்கில் இலங்கையின் இந்த நட்புவட்டம் ரஜீவ் கொலை, 1994 இல் கதிர்காமர் வருகையோடுதான் கட்டி எழுப்பபட்டது. ஏன் நம்மால் மட்டும் முடியாது.
  9. எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை. அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன். போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு…. ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.
  10. அட ஏன் அங்கே எல்லாம் போகிறீர்கள்…பலர் யாழில் மானசீக தேர்தலில் சைக்கிளுக்கு போட்டு விட்டு, இப்போ அனுரவுக்கு அவகாசம் கொடுக்கலாம் என எழுதுகிறனர். ஆனால் இதுவரை அழிவை தரும் தேர்வுகளை (கோட்டா 2019 நியாபகம் இருக்கலாம்) தேடி, தேடி ஆதரித்த இவர்கள், இப்போ அனுரவை தேர்தலின் பின் ஆதரிப்பது, ஒரு வழியாக சைக்கிள் கோஸ்டி டைப், கிடைக்கவே முடியாத வன் தமிழ் தேசியத்தில் இருந்து இவர்கள் விடுபடுவதற்கான அறிகுறி என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்ன வன்-தமிழ் தேசியத்தில் இருந்து நேராக இண்டர் சிட்டியை பிடித்து பிக்கு காலில் போய் விழப்பார்கிறார்கள். இடையில் ரயில நிப்பாட்டி இவர்களை மென்- தமிழ் தேசிய பஸ்சில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது யாழ்களத்தில் மட்டும் அல்ல, வெளியிலும்.
  11. உங்களை போல் சாதாரண கருத்தாளர் இல்லை சுமந்திரன். அவர் தன் மனைவியிடம் கூட ஒரு அரசியல் விடயத்தை பொதுவெளியில் வைத்து கூறினால் - அது எல்லோரு காதுக்கும் போகும். சுமந்திரன் பல பொதுவெளிகளில் இப்படியான பேய்கதைகளை கதைத்துள்ளமைக்கு போதிய ஆதராம் உள்ளது. யாழில் திரிகளே ஓடியுள்ளது. வேறொன்றும் இல்லை - சுமந்திரனுக்கு தான் ஒரு player, commentator அல்ல என்பது கடைசிவரை புரியவில்லை. கொமெண்டேட்டர் போல் வாயைவிட்டு தன் டீமுக்கு ஆப்பை செருகிகொண்டார்.
  12. இல்லை நீங்கள் யாழில் தமிழரிடையே எழுதுவதால் அதை வெளியார் காண்பார்கள் என நான் எழுதவில்லை. ஆனால் குறைந்தது 60% எமது மக்கள் புலிகளின் ஆதரவாளர்கள். புலிகளின் தவறுகளை மீள, மீள உரைப்பது அவர்களோடு நீங்கள் சேர்ந்தியங்கும் வாய்ப்பை பாதிக்கும். இது அடிப்படை மனித மனோவியல். 60% இன் உதவி இல்லாமல் தீர்வை அடைய முடியாது. இந்தவகையில் இந்த மீள, மீள, மீள உரைத்தல், இந்த இனத்தின் ஒற்றுமைக்கு, தீர்வுக்கு ஒரு இடைஞ்சல்தான். ஜெனிவாவில் புலிக்கொடியோடு போகாமல் விடலாம் என 2017 வாக்கில் நான் எழுதி, நெடுக்ஸ் தலைமையில் என்னை பலர் சேர்ந்து மொங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அப்போ என்னை மொங்கிய பலர்…இப்போ அனுர அனுதாபிகள். இவர்களை அனுரவால் தம்பக்கம் இழுக்க முடியும் எனில், எம்மாலும் முடியும். இவர்கள் உணர்ச்சி பிழம்புகள். வைத்தால் குடுமி, வழித்தால் மொட்டை அப்ரோச் எடுப்பவர்கள். இப்போ சொல்லி பாருங்கள்…ஜெனிவா போன்ற இடங்களில் தடை செய்யபட்ட விடயங்களை தூக்கி பிடியாமல் - நாம் ஒரு சிவில் அமைப்பாக இதை அணுக வேண்டும் என - அப்போ என்னை வெளுத்த பலர் இப்போ இதை ஏற்பார்கள்.
  13. ரஜனி இறப்பின் பின் உருட்டபடகூடிய கம்பி கட்டும் கதைகள்…. ஒரு முன்னோட்டம்….: முள்ளும் மலரும் படத்தை என்னை ரிமேக் பண்ண சொல்லி ரஜனி கெஞ்சினார்… பாஷா படத்தில் அவர் வேடத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் நன்றாக போயிருக்கும் என்றார்…. என்னை சந்தித்த பின்பே ரஜனியை தமிழக மக்கள் அறிந்துகொண்டனர்… ரஜனி எனக்கு ஓரங்குட்டான் ஊத்தப்பம் சுட்டு தந்தார்…. ஒரங்குட்டான் ஊத்தப்பத்தில் …நான் முடியை நீக்கி விட்டு சாப்பிட்டதை ரவிந்திரன் துரைசாமி குறிபெடுத்து ரஜனியிடம் சொன்னார். என் போயஸ்கார்டன் வீடு, பண்ணை வீடு, சகல சொத்துக்களையும் இனி நீங்கள்தான் உங்கள் சொத்து போல நிர்வகிக்க வேண்டும் என சாகும் தறுவாயில் ரஜனி எனக்கு வாய்ஸ்மெயில் வைத்தார்.
  14. இது நியாயமான விமர்சனம். தனியே ஆன்லைனில் அரசியல் செய்தால் அண்ணன் சீமான் போல் டிவிட்டரில்தான் மந்திரி சபை கூட்ட வேண்டி வரும் என்பதை விஜை உணரவேண்டும். அதிமுக விஜை விழுங்கி விடுவார் என பயப்படுகிறது. ஆனால் கூட்டணி தேவை. அதிமுக+விஜை கூட்டணி உருவானால், வாக்கை பிரித்து திமுகவுக்கு உதவாமால் அண்ணன் சீமான் போட்டியில் இருந்து விலகி, (ஆடை) நெய்தல் படையை ரஸ்யா, சீனா, அமேரிக்கன் நேவிகளுக்கு சவால் விடும் படையாக வளர்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் 🤣.
  15. ஜேவிபி நாட்டை ஒட்டு மொத்தமாக கியூபா போல், ஜனநாயகமற்ற ஒரு கம்யூனிச நாடாக்க போராடினார்கள். புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தமிழீழ குடியரசாக்க போராடினார்கள். சோசலிச ஜனநாயக இலங்கை குடியரசின் இருப்புக்கு இரெண்டு போராட்டங்களும் ஏற்படுத்திய ஆபத்து ஒரே மாதிரியானதே. ஆனால் வேறுபாடு ஒன்று பெளத்த சிங்கள மேலாண்மையை பேணும், மற்றையது நாட்டின் வட-கிழக்கில் இந்த மேலாண்மைக்கு சாவு மணி அடிக்கும். இந்த வேறுபாடுதான், இருவரையும் வேறு விதமாக கையாள அடிப்படை காரணம். புலிகளை போல, ருகுணு தனிராச்சியம் கோரி தெற்கில் ஒரு சிங்கள் குழு போராடி இருந்தால் -அதுவும் கூட ஜேவிபி போல் மன்னிக்கப்பட்டிருக்கும்.
  16. @Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை. அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள். தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம். ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது. இனியும் திருந்தவாய்ப்புள்ளது. வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.
  17. இங்கே எழுதப்படும் பிரதேசவாத பின்னூட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியன. டக்லஸ் இருந்த போது போடாத பூட்டா? இப்போ சந்திரசேகரன் பூட்டு போட்டதும் கோவம் வருகிறதா? இது வெறும் சந்திரசேகரோபோபியா🤣 இவ்வண், -முந்தநாள் அனுரவுக்கு மாறியோர் சங்கம்-
  18. புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்? இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது. புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான். எந்த வேலையும் கூடாத வேலை இல்லை? ஆனால் உங்கள் பிள்ளைகள் எவரையும் படிக்காதே, மாடு மேய் என நீங்கள் வழிநடத்தவில்லைத்தானே அண்ணை? அப்படித்தான் இதுவும்… மாடு மேய்தால் (இலங்கை தேசியம்), தினமும் சாணியோடு வாழ்க்கை போகும்🤣. படித்து ஒரு வேலை எடுத்தால் (தமிழ் தேசிய சுயநிர்ணயம்) கொஞ்சம் ரிலாக்ஸ்டா வாழலாம்.
  19. திமுக நான் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. ஆனால் இப்போ தவெக பக்கம் மனசு அலைபாய்வது உண்மை. நான் விரும்பும் சகல கொள்கை நிலைப்பாடும் அங்கே இருப்பதால்… ஒரு சின்ன ப்ரோ-மான்ஸ்.
  20. புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி. ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை. ஏன்? இனவாதம் பார்வை. ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம். ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல. ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு. இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான். 75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை. நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம். ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.
  21. ஆகவே சிந்திக்க வேண்டியது எப்படி அளுத்தம் கொடுக்கும் அரசியலாக எமது அரசியலை மாற்றுவது என்பதே. நல்லா படிச்சாத்தான் சோதனை பாஸ்பண்ணலாம் எண்டு சொன்னால், அது நம்மாள முடியாதே எண்டு விட்டு மாடு மேய்க்க போகலாம்… அல்லது முயன்று படித்து பாஸ் பண்ணலாம். நீங்கள் நாம் இனி மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என்கிறீர்கள். நான் இல்லை படிக்க இன்னும் அவகாசம் இருக்கிறது என்கிறேன். நன்மை செய்யமாட்டர் என சொல்லவில்லை. நமக்கு அதிகாரத்தை பரவலாக்க மாட்டார் என்றே சொல்கிறேன்.
  22. அவர்கள் எல்லாரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்தது உண்மை. தனிநாடே தீர்வு என நாண்டு கொண்டு நிண்டதும் உண்மை. ஆனால் இவர்கள்தான் இப்போ….பொறுப்பம்…பாப்பம் என்கிறவர்களாக அதிகம் இருக்கிறார்கள். சிலர் அடுத்த படிக்கு போய்…ஜனாதிபதி தேர்தலின் பின் என் பி பிக்கு ஆதரவு வீடியோ செய்திகள் கூட வெளியிடுகிறார்கள். நீங்கள் வேறு ஏதும் யாழ்களத்தை பார்கிறீர்களோ தெரியாது அண்ணா, நான், வாத்தியார் அண்ணா, ஓணாண்டி போல நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியம் பேசியோரே இன்று அனுரவை எதிர்கிறோம். மற்றைய பக்கம் பார்த்தீர்களானால் அனுர பிரிகேட்டில் நிற்பவர்கள் எல்லாம் 24 கரட் தமிழ் தேசியவாதிகள் என தம்மை சொல்லிகொண்டோர். இதில் விசுகு அண்ணா, புலவர் இருவர் மட்டுமே விதிவிலக்குகள். இதில் ஆக சிறந்த நகைசுவை என்னவென்றால் ….இந்த பார்ப்போம், பொறுப்போம் மறைமுக அனுர ஆதரவாளரும், நேரடியாக அனுரவை ஆதரிப்போரும் - பலர் மானசீக யாழ்கள தேர்தலில் சாத்தியமே இல்லாத ஒரு நாடு, இரு தேசத்தை கோரும் சைக்கிளுக்கு வாக்கு போட்டவர்கள். முடியை பிச்சு கொள்ளாத குறைதான்🤣. இன்னுமொரு விடயம். அவர்கள் எல்லோரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்ததை போலவே, அனுரவை எதிர்க்கும், இது அதே பழைய இனவாதம் தான் என கூறும் அனைவரையும், நீங்களும் “தமது இருப்புக்கு குந்தகம் விளைகிறது என அஞ்சும் தரப்பு” என்ற பைக்குள் போட்டு அடிக்க முனைவதாக எனக்குப்படுகிறது. நிச்சயம் இப்படி பயப்படும் சுயநலமிகள் இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோரின் அனுர மீதான சந்தேகம் - கொள்கையின் பால்பட்டதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.