Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Last visited

  • Days Won

    166

Everything posted by goshan_che

  1. இந்த இரெண்டு பிரித்தானியர்களும், இறந்த நிலையில் அவர்கள் கடவுசீட்டுடன் கண்டுபிடிக்கபட்டதாக அறியக்கிடைத்துள்ளதாம்.
  2. உவங்கள் காணாம போனது பரவாயில்லை, என்ர நாலு ஜெனரேற்றர் வாங்க கொடுத்த காசையும் கொண்டு போட்டாங்கள் பாவியள்🤣
  3. இதில் பலது ஜஸ்ரின்னுக்கானது என நினைக்கிறேன். ஆனால் என்னையும் சேர்த்து எழுதியதால் எழுதுகிறேன் (இனிமேல் ஒரு @ போட்டுவிடுங்கள் வசதியாய் இருக்கும்). என்னை பொறுத்தவரை நான் என் கண்ணில் பட்ட போதெல்லாம் தமிழரிடையே மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் எங்கு எழுந்தாலும் (யாழில் மட்டும் அல்ல) அதன் தலையில் அருகில் இருக்கும் எதையாவது தூக்கி ஒரு போடு போட்டே வந்துள்ளேன். அது பண்டத்தரிப்பு பாதிரியார், மன்னார் வளைவு, புத்தூர் மயானம் எதுவானாலும். அதே போல் வர்க, மத, சாதிய, பிரதேச அடையாளங்களை முன்னிறுத்தி தமது தவறுகளை மறைக்கப்பார்க்கும் போதும் அதை எதிர்த்துள்ளேன் (கருணா, அருண்). என்னை பொறுத்தவரை நேரடியாக இந்த வாதங்களை பேசுவோர், இந்த வாதங்களை தமது தவறை மறைக்க ஒரு ஊன்றுகோலாக பாவிப்போர் இருவருமே, கெட்ட சயனைடுகளே. உதாரணமாக சுமந்திரன் அகற்றப்பட வேண்டும் - என்பதை ஏற்கிறேன் ஆனால் அதற்கான உத்தியாக அவரின் மதத்தை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்கிறேன். தனியே என் தனிப்பட்ட தார்மீக காரணங்கள் மட்டும் அல்ல. இது ஒரு விசம். சுமந்திரன் நாளை போய்விடலாம், அல்லது நாளை மறுநாள் - ஆனால் இந்த விசப்பிரிவினையை நாம் மக்கள் மத்தியில் ஊண்டி விட்டால் அது காலத்துக்கும் நம் இனத்தை நாசம் செய்யும். முஸ்லிம்கள் தனி அலகாக உணர்ந்தபோது நாம் ஒருங்கிணைந்த, இப்போ உள்ள எல்லைகள் சேர் வட-கிழக்கு என்பதை கைவிட வேண்டி வந்தது. தமிழ் கிறிஸ்தவர்களும் அப்படி உணர்ந்தால்- நாம் ஒவ்வொரு குறிச்சிக்கும்தான் அதிகாரபரவலை கேட்க வேண்டி வரும். இங்கே யாழில் மாவீரர்களை அவமதித்தார் என்பது இலகுவாக எறியப்படும் ஒரு வசவு. என்னை பொறுத்தவரை ஒவ்வொருமுறை வினையாக, அல்லது எதிர்வினையாக இந்த வாத கருத்துக்களை நாம் எழுதும்போதும்…. இதற்கு மேல் இல்லை என்ற அளவில் அவர்களை அவமரியாதை செய்கிறோம்.
  4. பிகு நீங்கள் எந்த மதத்துக்கும் எதிர், சார்பு என நான் எங்கேயும் எழுதவில்லை.
  5. இல்லை அக்கா. நான் உங்களை கலாய்க்க இல்லை. குறிப்பாக பெண் என்பதால் போட்டுத்தாக்கலாம் என நான் நினைப்பதாக நீங்கள் கூறி இருப்பது - எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு. நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு இவர்களை பற்றி தெரியாது என்று. ஆனால் ஒருவரை அல்லது குழுவை பார்த்து மதம்மாற்ற கோஸ்டி என சொல்லுவது மிக கடுமையான குற்றச்சாட்டு. ஒருவரை பிரதேசவாதி, இனவாதி, மதவாதி என சொல்வது போன்ற ஒரு பாரிய குற்றச்சாட்டு. அதை பொதுவெளியில் வைக்கும் போது ஆதாரம் கேட்கப்படுவது இயல்பானதே. அதை நீங்கள் எழுதுவதையோ அல்லது அங்கே வயித்தெரிச்சலில், மத குரோதத்தில் எழுதப்படும் விமர்சனங்களையோ வைத்து நாம் எடை போட முடியாது. நீங்கள் இங்கே இந்த நபர்கள், குழு மதமாற்றம் செய்ததை நிறுவம் வீடியோ ஆதாரம் இருந்தால் போடுங்கள். பார்த்துவிட்டு, சரியான ஆதாரம் என்றால் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்க்கிறேன். அவ்வளவுதான். சிம்பிள். மீண்டும் சொல்கிறேன். உங்களை இங்கே குப்பையை இணைக்க சொல்லவில்லை. ஆனால் இரெண்டு குப்பை பிறந்தநாள் வீடியோவை இணைத்து விட்டு, போற போக்கில் இவர்கள் மதமாற்ற குழு என சொன்னபோதுதான் ஆதாரம் என்ன என்ற கேள்வி எழுகிறது. குற்றம்சாட்டும் நீங்கள்தான், குற்றம்சாட்டிய தளத்தில், ஆதாரத்தை கொடுக்க வேண்டும். இதை பற்றி எந்த அறிவும் இல்லாத என்னை போய் ஆராய்து பாருங்கள் என சொல்லுவது ஏற்புடையது அல்ல.
  6. உங்கள் நண்பர் சொன்னது போல் ரஸ்யாவை முழுவதுமாக அழிக்கும் முடிவு அன்றி, ரஸ்யாவின் கருங்கடல் பிரிவை அழித்தொழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா ஏலவே எச்சரித்துள்ளது என்றும், சீனாவும் அணு குண்டு பாவனை ஒரு லட்சுமண ரேகை என ரஸ்யாவுக்கு விளக்கி உள்ளதாயும் கேள்வி. இன்றுடன் 11 மாதம் 2 கிழமையில், உக்ரேன் யுத்ததுக்கு பொறுப்பான ஜெனரலை 5 தடவை மாற்றி விட்டார் புட்டின். அதுவும் இப்போ மாற்றப்பட்டவர் - சிரியாவில் இம்மை மறுமை இன்றி போர்குற்றம் புரிந்து - வெற்றிகளை அடைய கூடிய தளபதி என பெயர் வாங்கியவர். இவர் வந்த பின்னர்தான் உக்ரேனின் மின்சார வழங்கலை அடிக்கும் நகர்வு எடுக்கப்பட்டது. இவர் வந்ததும் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்தார்கள். இப்போ இவரும் போகிறார். போரில் வென்றுகொண்டிருக்கும் அணி, பொறுபாளரான ஜெனெரலை 11 மாதத்தில் 5 தடவை மாற்றாது. மாற்றுகிறது என்றால் போர் வெற்றியளிக்கவில்லை என்பதே அர்த்தம். ஆனாலும் ஒரே ஜெனரலை மாற்றி கொண்டிருக்க முடியாது, ஒரு கட்டத்தில் ஜெனரல்கள் எல்லாம் சேர்ந்து புட்டினை மாற்றும் நிலை வரலாம். கீழே ஒரு வருடத்தில் ரஸ்யாவின் யுத்த இலக்கு எப்படி சுருங்கிவிட்டது என்பதை காட்டும் படம். அப்படியா? இங்கே அப்படி ஏதும் இல்லை. இது அவுஸின் நிதி நிலமையை இட்டா அல்லது முழு உலகுக்குமா?
  7. பதிலுக்கு நன்றி அக்கா, இவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போதான் முதலில் பார்க்கிறேன். நீங்கள் அப்படி சொன்னதால் அப்படி ஏதும் இருக்குமோ என்று இந்த இரெண்டு லூசு வீடியோவையும் பார்த்து, கண் பூத்ததுதான் மிச்சம்🤣. நீங்கள் அவதானித்ததின் அடிப்படையில் ஒருவரை மதமாற்ற கும்பல் என சொல்ல உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அதை நாமும் பார்த்தால்தானே நாம் அது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். தெரியும்தானே அக்கா, 1. வசதியை காட்டி மதம் மாற்ற முயலும் பலர் எம்மக்களிடையே உண்டு அதே போல் 2. ஒரு தமிழ் கிறிஸ்தவன் ஒரு தமிழ் இந்து பிச்சைகாரன் தட்டில் 1 ரூபாய் போட்டாலும் அதை மதமாறம் என சித்தரிக்கும் போக்கும் இப்போ 2009க்கு பின் வலுவாக அதிகரிக்கிறது. ஆகவே எதையும் தீர ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.
  8. அப்படியா? இங்கே இன்னும் பிரதான ஊடகங்கள் இதை சொல்லவில்லை. இப்போதைக்கு நியமித்த 3 மாதத்தில் ஜெனரல் சூரோவிகின்னை புட்டின் இடம் மாற்றியமை பற்றியே கதை ஓடுகிறது.
  9. முந்தி எல்லாம் காக்காமார்தான் எதுக்கெடுத்தாலும் “டெத் டு அமெரிக்கா” எண்டு அதகளம் பண்ணுவார்கள். மேற்கின் கலாச்சாரத்தை இழிந்ததாக, சாத்தானின் உருவகமாக வகைப்படுத்துவார்கள். ஜும்மா முடிய கொம்பஞ்சி வீதிய வில் இருந்து கொலராடோவுக்கு கல் எறிவார்கள்🤣. இப்ப கொஞ்ச தமிழ்-தாலிபான்களும் அதே நிலையை எடுப்பதாக தெரிகிறது 🤣.
  10. ஓம் மறந்தே போனன் - புட்டின் ஐயா கிளீன் ஷேவ் எல்லே. மீசையாவது மண்ணாவது🤣. நிற்க: மிகவும் உறுதிப்படுத்த படாத தகவல் இது. கருங்கடலில் இன்று ரஸ்ய நீர்மூழ்கிகள், துருப்புகாவி தரையிறக்க கப்பல்களின் நடமாட்டம் திடிரென்று அதிகரித்துள்ளாதாம்.
  11. என்ன அண்ணை தமிழ் தடுமாறுது? மாண்புமிகு புட்டின் உக்கல் உக்ரேனுக்கு சாத்த வெளிகிட்டு, 3 நாளில் கீவை பிடிப்பேன் எண்டு சொல்லி ஒரு வருசம் ஆக போகுது.
  12. பழுதான கடிகாரமும் நாளுக்கு 2 தரம் சரியான நேரத்தை காட்டும்🤣
  13. 10 லட்சம் எல்லாம் பெரிசில்ல. அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ…. அந்த மனசுதான் கடவுள்🤣.
  14. கனிம வளங்கள், உப்பளங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் நிறைந்த, Soledar நகரை பலமாதமாக தொடர்சியா போரிட்டு தம் படைகள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையான வாக்னர் படையின் தலைவர் அதன் டெலிகிராம் குழுவில் அறிவித்துள்ளார். நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது. https://www.theguardian.com/world/live/2023/jan/11/russia-ukraine-war-live-wagner-may-make-up-quarter-of-russian-combatants-zelenskiy-strips-kremlin-allies-of-citizenship?filterKeyEvents=false&page=with:block-63be3e3c8f08a62e1a2e1e4c#block-63be3e3c8f08a62e1a2e1e4c
  15. யோகா பட்டறை முடிவில் நீங்களாகவே ஓடி போய் கிணற்றில் குதிக்கும் அளவுக்கு உங்களை தயார் பண்ணி எடுப்போம். அதுக்கு 8 நாள் தேவைப்படும்.
  16. உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்! நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது?
  17. கூட்டமைப்பில் இருந்து பெட்டிகளை கழட்டி விட்டு ரயில் எப்படி ஓடுது என பரிசோதிக்கிறார்கள். முக குப்புற விழுந்தால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமை பட வேண்டும் என்பார்கள். பரிசோதனை வெற்றி என்றால் - இதுவே தொடரும்
  18. 🤣 இதுவரைக்கும் நம்ம எப்படி? எதுவுமே செய்யல இனிமேலும் அதையே செய்துடுவோம்🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.