-
Posts
15725 -
Joined
-
Last visited
-
Days Won
177
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
வரலாறு என்றும் கறுப்பு வெள்ளையாக இல்லை. யூதர்களோ எந்த இனமுமோ 100% சுத்தமானவர்கள் இல்லை. அதே போல் ஒரு இனத்தின் மீதான நியாயமான விமர்சனம் அந்த இனத்தை வழித்து துடைக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுக்கு வரவைத்தது பிழையே. பலஸ்தீனம் என்ற பெயரை விட பழையது இஸ்ரேல் என்ற நாடு. ஆகவே இரெண்டு தேசங்கள் என்பதுதான் அங்கே நியாயமான முடிவு. அதை தீவிர சயனிஸ்டுகளும், ஹிஸ்பொல்லா, ஹமாசும் ஏற்றால் நாளைக்கே தீர்வு வரும்.
-
நன்றி கரு.
-
ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள். ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள். அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர். ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.
-
கவிதை அழகு கரு. இந்த நடை மரபிற்கு என்ன பெயர்?
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அதே. நன்றி நன்னி. 🤣. பார்த்திருக்கவே புரட்டும் நரி. யாரும் பார்க்கவில்லை என்றால் தான் பாவபட்டு காக்கைக்கு வடையை விட்டு கொடுத்தேன், காக்கா வேண்டாம் என்றது என்றும் நரி சொல்லக்கூடும். நன்றி சுவை அண்ணா. -
அருமை @suvy அண்ணா. எனக்கு கதை தேவையான அளவு இருந்ததாகவே தோன்றுகிறது. இப்படி கோர்வையாக, கனமாக, நீளமாக, ஆனால் விறுவிறுப்பு குறையாமல் எழுதுவதெல்லாம் ஒரு வரம். # தையல்கடை # தொய்வில்லாத தையல்
-
ஓம். இப்படி கனக்க இருக்கு. ஊரில் சைக்கிள் வச்சிருந்தா… போக், ப்ரிவீல், சொக்கச்சோவர் போன்ற பதங்களை கேட்டிருப்போம்….. அவை முறையே…fork, freewheel, shock absorber ஆகும். பிகு படங்களை தொடரவும்🙏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி அண்ணா. நானும் தொடர்களை இப்படித்தான் வாசிக்கிறேன். ஏனைய திரிகளில் என் பதில்கள் சுணங்கி வருவதை கண்டிருப்பீர்கள். -
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இரெண்டுமே பிரச்சனைதான் மீரா. 1. நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை. இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது. போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார். இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது. இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள். நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம். இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான். 2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர். இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும். முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣. அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣? நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும். நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣. வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள். அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது. ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣. -
👏🏾👏🏾👏🏾 அருமை அருமை கரு அவர்களே. #நிலையாமை
-
நிச்சயம் நடந்தது. ஜப்பானியர்கள் சீனாவை கைப்பற்றி அங்கே சீன இனத்தவரை சொல்லொணா கொடுமைக்கு ஆளாக்கினார்கள். குறிப்பாக comfort women என்று வகை தொகையின்றி சீன பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதே போல் பர்மாவில் இருந்து கிழக்கு நோக்கி death railway என அழைக்கப்படும் ரயில்பாதையை கட்டும் பணியில் பல போர்குற்றவாளிகளை அடிமைகளாக நடத்தி உள்ளார்கள். பலர் இறந்தனர். நான் போய் பார்த்துள்ளேன். தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற ஊரில் இன்றும் இந்த ரயில் பாதை, பாலம் எல்லாம் உள்ளது. இதில் இறந்தவர்கள் பலர் இந்தியா, சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட தமிழர்கள். தாமே உயர்ந்த இனம் - சூரிய புத்திரர்கள் என்ற இனதுவேச, இனத்தூய்மைவாதம் இன்றும் ஜப்பானியர்களிடம் உண்டு. ஜப்பானியர் வேற்று இனத்தவரை திருமணம் முடிப்பதும் குறைவு. இன்றளவும் டோக்கியோவில் கூட ஒரு கறுப்பர் நடந்து போனால் ஆச்சரியமாக பார்க்கும் சமூகம்.
-
தொடர் அருமையாக நகர்கிறது அண்ணா. தொடருங்கள். பின்லாந்து, ஜேர்மனி…அடுத்து ஜப்பானை எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. உயிராபத்து. இனவாத ஒடுக்கல். ஆமியும் கொடுமை. புலியும் ஆள்பிடிக்குது. என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம். பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு… இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம். -
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி பிரபா. உண்மையில் முதலில் அந்த முருகர்சாமி அண்ணை reference இல்லாமல்தான் எழுதினேன். ஆனால் வாசித்துப்பார்த்தால் ஒரே அழுகாச்சி காவியமாக இருந்தது. ஒரு இழையோடும் நகைச்சுவையும் வேண்டும், வாசகரை ஒரு கணம் திசை திருப்பி விட்டு மீண்டும் கதைக்கு இழுத்து வரவும் வேண்டும். என்ன செய்யலாம் என நினைத்த போது இந்த தேவையை பூர்த்தி செய்ய வாசகருக்கு பரிச்சயமான ஒரு நபரை உள்வாங்கலாம் என முடிவு செய்தேன். அப்படி உள்ளே வந்தவர்தான் முருகர்சாமி அண்ணை. -
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நல்லது அக்கா. சந்திப்போம். -
நான் இதை பணம், மனம் என பார்க்கவில்லை. நிகழ்ந்த இழப்புக்கு ஈடு அவசியம். விபத்துக்களின் பின் விழைவுகள் நீண்ட நாளின் பின்பும் தெரிவது உண்டு. அப்போ யோசித்து பயனில்லை அல்லவா? வேலையிட முகசுழிப்பு வரும் என்பது உண்மைதான். ஆனால் முதலாளியாக நான் இருந்தால், இப்படி இழப்பீடு கேட்கும் தொழிலாளியை முகம் சுழிக்கமாட்டேன். நல்லவேளை காப்புறுதி இருக்கிறது, அவர்கள் கட்டட்டும், இந்த மனிதருக்கும் போதிய ஈடு கிடைக்கட்டும் என்றே இருப்பேன். 👆🏼இதுதான் நல்ல மனம் என நினைக்கிறேன். அடுத்த வருடம் எனது பிறிமியம் கூடும்தான். ஆனால் அதுதான் தொழில் முனைவதன் ரிஸ்க்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
ஓ….அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயரும் இருக்கா🤣 -
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣. கு.சா அண்ணை நாள் பார்க்கும் மூட நம்பிக்கைகள் இல்லாதவர்🤣. -
சிறி அண்ணா, எனக்கு ஜேர்மன் சட்டம் பற்றி அறவே தெரியாது. ஆனால் ஒரு தொழில் நிறுவனத்தின் employers liability, மற்றும் உழைப்பாளர் நலன் பேணும் health and safety regulations எல்லா மேற்கு நாடுகளிலும் ஓரளவு ஒத்த மாதிரியே இருக்கும். வெளிப்பார்வைக்கு தற்செயல்/விபத்து என தெரியும் ஒரு விடயம் ஒரு நிறுவனத்தின் அல்லது மனிதரின் கவன குறைவால் அல்லது செயல் குறைபட்டால் நிகழ்ந்துள்ளது என்பதை அதை தீர விசாரிக்கும் போதுதான் புலப்படும். உதாரணமாக ஒரு வாகன விபத்து. உங்கள் வாகனத்தை இன்னொரு நிறுவன வாகனம் முட்டி விட்டது. இருவரிலும் பிழை இல்லை அல்லது இருவரிலும் 50% பிழை. ஆனால் ஆழமாக ஆராயும் போது அந்த நிறுவனம் காசை மிச்சம் பிடிக்க ரயரை மாற்றவில்லை. புதிய ரயராக இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என தெரிய வருகிறது. இப்போ விபத்துக்கான பொறுப்புகூறல் (liability) கிட்டதட்ட முழுக்க நிறுவனத்திடம் போய்விடும். இப்படி பல உதாரணங்கள். கருவிகள் ஒழுங்காக பராமரித்தல், கையாள்பவருக்கு போதிய பயிற்ச்சி, பயிற்சியின் வருடாந்த தொடர்ச்சி, ரென்சன் பார்ட்டியை இந்த தொழிலில் தொடர்ந்து வைத்திருந்தது சரியா? இப்படி பலதை ஆராய்ந்த பின்னே, இது உங்கள் நிறுவனத்தின் கவன குறைவால் நடக்கவில்லை என அறுதியாக கூறமுடியும். ஆகவே குறைந்த பட்சம் ஒரு no win no fees சட்ட ஆலோசகரையாவது அல்லது union இருந்தால் அவர்களையாவது நாடலாம் என நான் நினைக்கிறேன். இதனால் உங்களுக்கு இழப்பீடு மட்டும் அல்ல, இதே பிழை தொடர்ந்து மேலும் விபத்து வருவதும் தடுக்கப்படலாம். இப்படியான வழக்குகளுக்கு ஒரு limitation period இருக்கும். செய்வதாயின் அதற்குள் செய்ய வேண்டும். யோசிக்கவும்🙏🏾.