Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15724
  • Joined

  • Last visited

  • Days Won

    177

Everything posted by goshan_che

  1. என்னது வீட்டில் நாயா - ஒன்றில் நான் அல்லது நாய் என்பதுதான் எப்போதும் என் நிலைப்பாடு (இரெண்டும் ஒன்றுதான்🤣). மகன் பெரிய சத்யாகிரகம் எல்லாம் பண்ணினவர் - நான் மசியவில்லையே. ஆறுதல் பரிசாக ஒரு மீன் தொட்டியை அனுமதித்தேன். அதுவும் ஒரு சிலமாதங்களில் அலுப்புத்தட்டி விட்டதாம்🤣.
  2. 🤣. வாசிச்சி முடிய நீங்கள் எங்கையோ🤣 அது மட்டும் செய்யவே மாட்டமே. வேணும் எண்டால், ஏலாக்கட்டம் எண்டால் air fryer சுவிட்சை போட்டு விடலாம் 🤣. சரி பாஸ் “முடிஞ்சதும் அறிவிக்கிறன்”🤣 நன்றி நிழலி
  3. ஓம். அதை நாய் எண்டு சொன்னால் ஏன் அதுக்கு பெயர் இல்லையோ எண்டு சண்டைக்கு வேற வாறார்கள்🤣. அவ காலைல எழும்பி கக்கா போற அழகே அழகு, உச்சா போற அழகே அழகு எண்ட டார்ச்சர் வேற😩 🤣 கற்பூரப்புத்தி🙏🏾
  4. ப்ரோ…நிண்டு வாசிச்சு கருத்து சொல்லுங்கோ ப்ரோ 😂
  5. 🤣சொந்த செலவில் சூனியம் வைப்பவர்கள் எண்டும் சொல்லலாம் 🤣. அவுசிலும் டமிள்ஸ் நாய் வைத்திருப்பது பேஷனா?
  6. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  7. நன்றி அண்ணா. 🤣 அடுத்த ஆக்கத்துக்கு ஐடியா தந்தமைக்கு நன்றி. தலைப்பு கூட தயார்…. ஒரு முறிந்த பேனா முனகுகிறது🤣 மம்மி டாடி எல்லாம் லண்டனில்தானே லிவிங்ஸ்டன்🤣. மை பிரதர் மார்க் வா ஆல்சோ. இப்ப பாருங்கோ….. அடுத்த அத்தியாயத்தில் “அவன்” அசகாய சூரன் எண்டு பில்டப்ப கொடுத்து என் கெத்த காட்டுறன்🤣.
  8. கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣. நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.
  9. நல்லது. 15 மாதமா விடுப்பு கதைச்ச மனுசன் எண்டு கின்னஸில வரவில்லையா🤣. தொடருங்கள்.
  10. எனக்கு இந்த நாய்களை கண்டால் ரொம்பவே ஒவ்வாமை. அதுவும் வல்லவனின், ஜஸ்டின் அண்ணாவின் ரேபீஸ் பற்றிய பதிவுகளை பார்த்த பின் இரட்டை ஒவ்வாமை. மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் இதுகளை அடித்து துரத்திவிட முடியும்.
  11. யாவும் கற்பனை அல்ல என்றால், எதுவுமே கற்பனை அல்ல என்று அர்த்தம் எடுக்க கூடாது🤣
  12. நன்றி அண்ணா. வரவுக்கும் ஊக்கத்துக்கும்.
  13. நல்லது அக்கா. இலங்கையில் திரும்பி போய் வாழ்வது பற்றிய சுய ஆக்க திரியோடு ஒட்டி நான் பொதுப்படையாக எழுதிய பதிலுக்கு என்னை தனிப்பட்டு இழுத்து கருத்து எழுதியது யார் என்பது திரியை வாசிப்பவருக்கு புரியும். அந்த திரியிலும் உங்களுக்கு தக்க பதில் அளிக்பட்டே இருந்தது. அந்த பதிலின் வெப்பம்தான் இங்கே உங்களை என்னை இழுத்து எழுத வைத்தது என்பதும் புரிகிறது.
  14. இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம் பிகு அருமையான கான்செப்ட். மிக பொருத்தமான படங்கள் 👏🏾.
  15. சக்சஸ்! இந்த குழப்பத்தை எதிர்பார்த்தே எழுதுகிறேன். நன்றி பிரபா. நன்றி அண்ணா. ஓம்…என்ன பெயர் என்பதில் ஒரு குழப்பம்தான் எனக்கும். இது நிமிடக்கதை, சிறுகதை இல்லை. நவீனம்/ நாவலும் இல்லை. நெடுங்கதை என்றால் நாவலின் இன்னொரு பெயர்?
  16. ஓம் @Nathamuniசொல்லும் தூ. பிக்கு இவர்தான். பவித்திரா வன்னியாராச்சி பயன்படுத்தும் பலவித தந்திரங்கள், உத்திகள் பற்றி முன்னர் ஒரு முறை பிரஸ்தாபித்திருந்தார்🤣 பிகு தமிழருக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் பிக்குமாரின் நிலை வடக்குகிழக்கில் இதுதான் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு நாடகம் இது 🤣
  17. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  18. ஐ…நான் என்ன எழுதி இருக்கிறன் நீங்கள் என்ன பதில் போட்டிருக்கிறியள்🤣. நான் காணியை வாங்கி போட்டேன் எண்டு எங்கே எழுதினேன்🤣. ஓணாண்டி என்னிடம் பணம் இல்லை என்கிறார். நீங்கள் பணத்திமிர் என்கிறீர்கள்🤣. என்னை யாரும் தங்க தாம்பாளம் வைத்து அழைக்கவில்லை, எனக்கு மனதுக்கு பிடித்ததாக இருந்ததால் போய் எனக்கு ஏலவே இருந்த இடத்தில், அதன் ஏனைய பங்குதாரர் அதை வித்து தொலைப்போம் என்பதை தடுத்து, ஒரு திட்டத்தை செய்ய முனைந்தேன். அப்புறம் நான் ஒரு போதும் தனி நாடு கேட்டவன் அல்ல. யாழில் பலருடன் மோதுபட்டுள்ளேன், எனது பதினமவயதிலேயே தனிநாடு சரிவராது என நான் அறிந்து கொண்டேன் என்பதை எழுதி. சுயாட்சி இப்போ எனக்கு தேவையில்லை. ஆனால் இலங்கையில் இருக்கும் போது தேவைபட்டது. அந்த மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதால் எனக்கு தேவையில்லை எனிலும் அவர்கள் கோரிக்கையை நான் ஆதரிப்பேன். நான் இலவசகல்விக்கு நன்றி கடனுடன் இருக்க தேவையில்லை என்பதை என் நிலைகொண்டு விளக்கியுள்ளேன். அதில் திமிர் ஏதும் இல்லை. அடேங்கப்பா பியர், பிராண்டி எல்லாம் இல்லை விஸ்கி எண்டு எப்படி கண்டு பிடிச்சனிங்கள்? ஊத்தி கொடுப்பவர்களுக்குதான் இந்த விபரம் எல்லாம் நினைவில் இருக்கும். எனக்கு கல்யாணம் பல கட்டி வைத்தது போதாது என்று இதை வேறு செய்கிறீர்கள். நன்றி 🤣. பிகு சாணாக்கியனை நீங்கள் மத ரீதியில் எதிர்க்க என்ன காரணம் என்பதை இன்னொரு திரியில் புட்டு, புட்டு வைத்ததால் இனிமேல் என்னை மேற்கோள் காட்டி எழுதவேண்டாம் என்று கோபப்பட்டவர் நீங்கள். இப்போ அதற்கு அரிவரி பிள்ளையள் மாரி கணக்கு தீர்கிறீர்கள் என்பது எனக்கும் வாசிப்போருக்கும் புரியும். ஆனால் இன்னொருவரின் 25 ம் ஆண்டு திரியை நாம் சந்தை போல் ஆக்ககூடாது என்பதால் அமைகிறேன்
  19. சைக்கிளில் போகும் போது துரத்தும் சொறி நாய் என அசட்டையாக இருக்க கூடாது. பார்தீர்களா ஒரு உயிர் அநியாயமாக பலியாகியுள்ளது. இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.
  20. அடப்பாவி பொன்ஸ்….அந்தாள் 30 வருடத்துக்கும் மேலாய் தபுதாரன். காலமான அவரின் ஒரே மனைவி தமிழ்தான்.
  21. இதுவும் உண்மைதான். எதையும் நோய் என பார்க்காமல் எல்லாவற்றையும் போர்த்து மூடல் Vs தொட்டதுக்கும் நோய் சொல்லல். இரெண்டு extreme உம் கூடாது.
  22. இல்லை அவை எல்லாம் கிட்ட போகும் ஆனால் தாண்டி போவது 134 மட்டும்தான். இப்ப வன் வே வந்த பின் எப்படியோ தெரியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.