-
Posts
15634 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
அது ஏழாலை எல்லோ ?
-
போன கிழமை யாழில் ரணில் 13 ஐ அமல் செய்வேன் அன்றில் நீக்குங்கள் என காட்டம் என்ற ரீதியில் ஒரு செய்தி வந்த போது, பல கருத்தாளர் ரணில் 13 ஐ தரப்போகிறார் எனவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், யாரின் மத்தியஸ்தமும் இன்றி சிங்களவருடன் பேச வேண்டும் எனவும் எழுதினார்கள். நரி பேய்காட்டுகிறது என எழுதினேன் - யாரும் அதை சட்டை செய்யவில்லை. இன்று - ரணில் உத்தரவிட்டால் மறு நொடி பதவியை இழக்க கூடிய கிழக்கு ஆளுனர் மகாசங்கத்திடம் இப்படி கூறியுள்ளார். அப்போ இதை தூண்டி விடுபவர் யார் ? இத்தனை காலத்துக்கு பின்னும், பழுத்த தேசியவாதிகள் கூட ரணிலை/சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை.
-
இந்தியாவின் படைவலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய உக்ரேன் போர்
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதை வாசிக்க, சங்கானை சந்தியில் இரெண்டு சாறம் கட்டிய பெடியள் வச்ச கண்ணி வெடியில சிக்கி, இந்திய தாங்கி பப்பரபே… எண்டு குப்பிற கிடந்தததுதான் நியாபகம் வருகுது🤣. ஜவான்கள் மின்சார வயரில் சறுக்கீஸ் விளையாடி கொண்டிருந்தார்கள். -
அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை. இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார். பிகு ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000. பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000. ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.
-
அனுபவ ரீதியாகவா? கந்தர்மடத்தில் காதர் பாயா🤣
-
@satan@குமாரசாமி இப்போ நீங்கள் இலங்கையில் இருந்தால் யாருக்கு வாக்கு போடுவீர்கள்? உள்ளதில் ஓரளவு தமிழ் தேசிய கொள்கைகை முன் எடுப்போர் என நீங்கள் நினைக்கும், கஜேஸ், விக்கி அல்லது dTNA? சரிதானே? மக்களின் நிலையும் இப்படித்தான். தமிழ் தேசியத்தை சுமக்க ஒரு குதிரையும் இல்லை என்ற போது, அதை கழுதைகளை வைத்தாவது சுமக்ககலாமா என பார்கிறார்கள். தொடர்ந்து தமிழரசுக்கு போடுவோர் கூட ஏனைய கழுதைகளை விட அந்த கழுதைகள் பராவாயில்லை என நினைத்தே போடுவார்கள். நாளைக்கே ஒரு குதிரை வருமாயின் எல்லா கழுதைகளையும் துரத்திவிட்டு குதிரைக்கு போடுவார்கள். ஆனால் நோக்கு ஒன்றுதான் தமிழ் தேசியம் என்ற பொதியை சுமத்தல். குதிரை, கழுதைகளின் பெயர், நிறம், யாரோடு சினை பிடித்ததன என்பதெல்லாம் கருது பொருட்கள் அல்ல. இதுவரை இதுதான் எம் மக்களின் அரசியல் போக்கு. இனி மாறலாம். திரைபடம், சாதி, சமயம் என பலதில் இந்தியாவை கொப்பி அடிக்கும் மக்கள் - இனி அரசியலிலும் அதே பாணியை எடுக்கலாம்.
-
மக்கள் எதை எதிர்பார்த்து வாக்கு போட்டார்கள் என்பது வேறு சாத்ஸ். அதை இந்த கட்சிகள் நிறைவேற்றவில்லை என்பது வேறு. 77-87 கூட்டணிக்கு வாக்கு போட்டார்கள். 77 இல் மக்கள் இவர்கள் சொன்னதை செய்வார்கள் என பூராணமாக நம்பினார்கள் (சொல்வதை பார்த்து வாக்கு போடல்). 83 இல் ஜப்பான் ஜீப் ஓடியது, 87 இல் அமிர்தலிங்கம் இறப்பர் செல் அடித்ததோடு அந்த நம்பிக்கை முற்றாக போய்விட புறம் தள்ளினார்கள் (செயலை பார்த்து வாக்கு போடுவது). இதேதான் த.தே.கூ/ தமிழரசுக்கு இப்போ நடக்கிறது. மக்கள் இன்று வரைக்கும் இருக்கும் அமைபுக்களில் தமிழ் தேசிய கொள்கையை ஒப்பீட்டளவில் முன் எடுத்து செல்ல கூடியோர் யார் என பார்த்தே அவர்களை தெரிகிறார்கள். அதனால்தான் கூட்டமைப்பை நம்பாதவகள் கஜேஸ், விக்கி என தாவினார்கள்: ஆனால் தெரியப்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், தம் சுயலாப அரசியலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாற்றீடாக வருவோரும் தமக்குள் ஈகோ சண்டை பிடிக்கும், சுயநலமிகளாகவே உளர். வெறுத்து போன மக்கள் ஒரு தொகுதியினர் சிங்கள கட்சிகளுக்கு போடுகிறார்கள்.
-
பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு
goshan_che replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
இதுக்கு வாய்ப்பிருக்கு🤣 -
நடேசன் அண்ணா உண்மையான போராளி அவர் குடும்ப வரலாறை எம் மக்கள் கருதவில்லை. பாலா அண்ணை உண்மையான போராளி அவர் குடும்ப வரலாறை எம் மக்கள் கருதவில்லை. நானும் அந்த கூட்டத்தில் ஒருவந்தான். சீவி வந்த போது, குடும்பவரலாறை விட்டு விட்டு கொள்கை, செயலை மட்டும் பாருங்கள் என எழுதினேன். நீங்கள் உட்பட பலர் அவரை சிங்கள சம்பந்தி என வசை பாடினீர்கள். பின்னர் அவரின் ஆதரவாளராயும் ஆகினீர்கள் 🤣. மக்களும் என்னை போலவே குடும்ப வரலாறை புறம்தள்ளி அவரை தேர்ந்தார்கள். 77-23 இதுதான் எம்மக்களின் அணுகுமுறை. காலத்தை கணிக்கும் இயந்திரம் என்னிடம் இல்லை. ஆனால் 77-23 எம்மக்கள் கட்சி பார்த்தோ, முக வசீகரம் பார்த்தோ வேறு எதை பார்த்தோ வாக்கு போடவில்லை என்பதை நான் ஆதாரபூர்வமாக நிறுவுவேன். இப்போ, சமயம், சாதி, வர்க்கம், பிரதேசம் என எம்மக்கள் மீது பழைய கறையானகள் புற்றெடுப்பதை காணும் போது, இனி காலங்கள் முன்பை போல் கொள்கை பிடிப்பான அரசியலுக்கான காலமாக இராது என்பதை நானும் ஊகிக்கிறேன்.
-
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
பலஸ்தீனம் என்ற சொல் உருவாக முன்னமே இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டது. ஒரு நாடற்ற தமிழனாக, தம் தேசத்தை ஆயிரமாண்டுகால ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட யூதர்களின் மன நிலையை நான் பூரணமாக புரிந்து கொள்கிறேன். ஆகவே நான் எப்போதும் இஸ்ரேஸ் என்ற நாட்டினை இல்லாமல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தில்லை. ஆனால் தொடர்சியான குடியேற்றங்கள் மூலம், ஐநா பிரகடனங்களை மீறி இஸ்ரேல் நிலத்தை அபகரிப்பதை, கண்மூடிதனமாக பொதுமக்களை குறிவைப்பதை, வெறுக்கிறேன். அதே சமயம் இஸ்ரேலும், அமரிக்காவும் இல்லாவிடில், இப்போ முகமட் குமாரசாமி, அகமட் கோசானுடன் உரையாடும்படி ஆகி இருக்கும் எனவும் புரிகிறேன். ஆகவே என் நிலைப்பாடு it’s complicated 🤣. ஆனால் Camp David உடன்படிக்கை அடிப்படையில் இரு அயல் தேசங்களாக, ஒட்டுமொத்த ஜுருசலேம் ஒரு உலக நகராக இருந்தால், அமைதி வந்தால் நல்லது என்பது என் நிலைப்பாடு. பிகு ரஸ்யா-உக்ரேன் பற்றிய கேள்விகளுக்கு பதில் வராது. மன்னிகவும். -
இல்லை. தமிழரசு, கூட்டணி என்ன சொன்னது, என்ன செய்கிறது என்பதை பார்த்தே வாக்களிதார்கள். தலைவர்களின் மகன் யாரை கலியாணம் முடித்தார் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. ஏன்? யார் யாரை முடித்தாலும், மாவை, ரவிராஜ் எல்லாருமே வெல்வது கொள்கையை ஏந்தி செல்வதால் அல்லது செல்வதாக சொல்வதால். மாவையின் மகன் - தலைவரின் மகளை திருமணம் செய்திருந்தாலும் (பேச்சுக்கு சொல்கிறேன்) - போய் தமிழ் தேசிய எதிர் முகாமில் சேர்ந்தால் அவருக்கு தமிழ் தேசிய வாக்காளர் போடமாட்டாகள். ஆகவே மக்கள் கொள்கை ஒன்றுக்காக மட்டுமே வாக்களித்தனர். ஒரு 10% க்கும் குறைவானோரே சலுகைக்காக வாக்களித்தனர். அண்மைய தேர்தலில் இந்த சதவீதம் குறைகிறது.
-
பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு
goshan_che replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
மேற்கின் அணுகுமுறையை தெளிவாக சொல்லி உள்ளீர்கள். விபரணத்தை பார்தீர்களா? ஐ பிளேயரில் உள்ளது. முதல் 15 நிமிடம் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். தரவுகள் துல்லியமாக உள்ளது. ஆனால் கோட்டா போல மோடியை அசைப்பது கடினம் என நினைக்கிறேன். அடுத்த தேர்தலிலும் வெல்வார் என்பதே என் கணிப்பு. -
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
நேரடியாக பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾 -
நான் எங்கே சிங்களத்துக்கு அவகாசம் கொடுத்தேன்? நீங்கள் 80 களில் ஆரம்பத்தில் நாட்டை விட்டு விலகியவர். ஈழதமிழர் கட்சி பார்த்து வாக்கு போட்டார்கள் என சுலபமாக ஒரு அபாண்டத்தை ஒட்டு மொத்த மக்கள் மீதும் தூக்கி போட்டீர்கள். துப்பாக்கிகள் பாத்திருக்க, சாகும் தறுவாயில் கதிரையோடு தூக்கி வந்து, போகும் வழியில் நாம் வெல்லாவிட்டால் நாளை ஊருக்குள் வருவோம் என மிரட்டிய பின்னும், ஒவ்வொரு தேர்தலிலும் கொள்கை அடிப்படையில், உயிரை பணயம் வைத்து என் மக்கள் வாக்கு போட்டதை நேரில் பார்த்தவன் நான். தேர்தலை கூட கொள்கை அடிப்படையில் 1931 இல் இருந்தே புறக்கணித்தவர்களும் கூட. உங்களின் இந்த அபாண்டத்தை கேள்வி கேட்டு, கூட்டணி, ஈரோஸ் என இரு உதாரணங்களையும் காட்டி - நீங்கள் சொன்னது தவறு என நான் கூறினேன். இதில் எங்கே வருகிறது சிங்களவருக்கு அவகாசம் கொடுப்பது? அதுவும் நான்?
-
இதுதான் கள நிலவரம். திமுக அல்லாத மிகுதி எல்லா கட்சிகளையும் இணைத்து பாஜக ஒரு மெகா கூட்டணி அமைக்கும். It’s only a matter of time. காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல ஞானோதயம்தான். ஈழத்தமிழர் பிரச்சனையில், அர்ஜூன் அண்ணா, கற்பகதரு முன்னர் எடுத்த, நீங்கள் கடுமையாக எதிர்த்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள் என இன்னொரு திரியில் கண்டு கொண்டேன். இப்போ - நான் அண்மைகாலமாக யாழில் தமிழக செய்திகளை வெறும் பார்வைக்கு மட்டும் விட வேண்டும் என எழுதி வந்த நிலைக்கு கிட்ட வந்துள்ளீர்கள் (முன்பு ஆக்ரோசமாக தமிழக செய்தியில் களமாடி இருப்பினும்). இந்த விசயத்தில் உங்கள் நிலைப்பாடுதான் எனக்கும். ஆர்வகோளாறில் சில சமயம் பதிவுகளை போட்டு விடுவேன்.
-
🤣 ஈழத்தமிழர் 77 க்கு பின் கட்சியையும் பார்க்கவில்லை, தலைவர்களின் நதி மூலம், ரிசி மூலமும் பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் தமிழ் தேசிய கொள்கையை, தமது அபிலாசைகளை யார் வென்றெடுப்பார் என நினைத்தார்களோ அவர்களையே தெரிந்தார்கள். அதனால்தான் உதய சூரியனை ஒரு காலத்தில் கொண்டாடிய போதும், அதை ஆனந்தசங்கரி தலைமையில் முன் கொணர்ந்த போது - அவமானகரமான தோல்வியை கொடுத்தார்கள். இதே காரணத்தால்தான் 1988 தேர்தலில் ஒரு நாள் அவகாசத்தில் புலிகள் ஆதரிக்க சொல்லிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து, அதுவரை அறியப்படாத அரசியல்கட்சியாக இருந்த ஈரோசை பெரு வெற்றி பெற வைத்தார்கள். சும்மா, குதர்கம் பேச வேண்டும் என்பதற்காக ஈழ தமிழ் மக்களின் 75 வருட கால கொள்கை பற்றான அரசியலை, கேவலமாக எழுதுவோரை என்னவென்பது.
-
உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
என்ன அண்ணை இது சிங்களவன் செய்தது தப்பு எண்டால் - பர்மாகாரன் செய்யாததையா சிங்களவன் செய்தான் எண்ட மாரி போகுது கதை🤣. யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம். ஆனால் யூத படுகொலை மட்டும் அல்ல, ஹிட்லர் ஒன்றும் பொற்கால ஆட்சியை ஜேர்மனியிலோ, வெளியிலோ வழங்கவில்லை. மிக மோசமான வகுப்புவாத ஏற்ற தாழ்வு, ஊழல், பாலியல் லஞ்சம், குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம், அதிகார துஸ்பிரயோகம், கொள்ளை எல்லாம் மலிந்து கிடந்த ஒரு நரனின் ஆட்சிதான் ஹிட்லர் ஆட்சியும். பிகு நான் கேட்டது அதை அல்ல, ஹொலோகாஸ்டை மறுப்பதை, நாஜிகள் பற்றி நல்லவர், வல்லவர் என பொய் பிரச்சாரம் செய்வதை இன்றைய ஜேர்மன் சட்டங்கள் தடுக்கிறன. ஒரு ஜேர்மன் குடியாக நீங்கள் இப்படி எழுதுவது ஜேர்மனிக்கு செய்யும் தேசதுரோகம் இல்லையா?